நீங்கள்...??

1. லிஃப்டிலோ அலுவலகத்திலோ ஆளூயர கண்ணாடி தட்டுப்பட்டால், பக்க வாட்டில் திரும்பி "தம்"பிடித்து வயிறை உள் இழுத்துப்பார்த்து பின் உதடைப் பிதுக்கிக் கொள்கிறீர்களா?

2. முன்பொல்லாம் தங்கமணி ஊருக்குப் போனால்.. நண்பர்கள் அனைவரையும் அழைத்து..சமையலறையை போர்க்களமாக்கி..கட்டிங்..ஃபுல் வரை செல்லும் நீங்கள்.. இப்பொழுதொல்லாம் தங்கமணி ஊருக்கு செல்லவதை யாரிடமும் சொல்லாமல், ஒரு பீர்,பிடித்த புத்தகம்,ஹால்,டிவி என்று ஐக்கியமாகிவிடுக்றீர்களா?..

3. உள்ளாடை துவைக்காமல் இருந்தாலோ.. தட்டுப்படவில்லை என்றாலோ.. ஒரு நாள் தானே என்று "அண்ணாத்த ஆடுறார்" என்று கிளம்பி விடுகிறீர்களா?..

4. கடையில் பார்த்தவுடன் பிடித்துப்போன T-சர்ட்டை வாங்கிவந்து போட்டதும் "குய்யோ முறியோ" என்று கத்தி, மனைவி வந்து கலட்டுவதற்கு உதவும் படி "டைட்டாக" உள்ளதா?..

5. நண்பர் வீட்டுக்குச் சென்றால் உங்கள் வாகனத்தை எரிச்சல் வரும்படி அவரின் மகன் நோண்டுகிறானா?..

6. ரோட்டில் பள்ளி மாணவனும் மாணவியும் நெருக்கமாக பேசிக்கொண்டு போனால்.."இவங்கள வீட்ல படிக்க அனுப்பிச்சா..ஹும்" என்று நினைக்கிறீர்களா..?

7. "அவன் கிடக்கான்".. என்று அப்பாவை நண்பர்களிடம் பேசி வந்த நீங்கள் இப்பொழுதொல்லாம் "எங்க அப்பா இதத்தான் அப்பவே சென்னாரு" என்று கூறத்தொடங்கிவிட்டீர்களா..?

8. அழகான பெண் கிராஸ் செய்தால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு முழுப்பார்வை பார்த்து பின் சிறுபெரு மூச்சை விடிகிறீர்களா?..

9. குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தால் ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு செல்கிறீர்களா..?..
10. உங்கள் வயது என்ன என்ற கேள்விக்கு .. "ஆக்சுவலா.. சர்ட்டிபிகேட் படி பார்த்தீங்கன்னா".. என்று நீட்டி முழக்குகிறீர்களா?...

அப்படின்னா..அங்கிள் நீங்க 35 வயச‌ கடந்து 40 பக்கத்துல போய்ட்டீங்க...



(அனுபவ‌மானு கேட்கறவங்களுக்கு.. நம்ம எப்பவும் 10 வருஷம் முன்னோக்கித்தான் யோசிக்கிறது..ஹி ஹி..)

14 comments:

வெண்பூ September 2, 2008 at 10:29 AM  

இது எத பத்தினது? எனக்கெல்லாம் இன்னும் 20 வருசம் ஆகும் போல...:)...ஹி..ஹி...

முரளிகண்ணன் September 2, 2008 at 10:57 AM  

அப்பாடி எனக்கின்னும் வயசாவல


\\ஒரு நாள் தானே என்று "அண்ணாத்த ஆடுறார்" என்று கிளம்பி விடுகிறீர்களா?..\\

ha ha ha ha ha ha ha

Tamil Paiyan September 2, 2008 at 11:05 AM  

உங்கள் பதிவுகள் மேலும் பலரை சென்றடைய Tamilish.com -ல் பகிரவும்

ஜ்யோவ்ராம் சுந்தர் September 2, 2008 at 11:35 AM  

இதுல இருக்கும் பல விஷயங்களைச் செய்யறதில்லை (சில விஷயங்களைத் தலைகீழாகச் செய்வதுண்டு!). ஆனாலும் பாருங்க, எனக்கு 35 வயசுக்குமேல ஆகி, 40ஐ நெருங்குது :(

narsim September 2, 2008 at 11:48 AM  

நன்றி வெண்பூ, முரளிகண்ணன்,தமிழ் பையன்..

நர்சிம்

narsim September 2, 2008 at 11:49 AM  

//இதுல இருக்கும் பல விஷயங்களைச் செய்யறதில்லை (சில விஷயங்களைத் தலைகீழாகச் செய்வதுண்டு!). ஆனாலும் பாருங்க, எனக்கு 35 வயசுக்குமேல ஆகி, 40ஐ நெருங்குது :(//

பாயிண்ட் நம்பர் 8?.. காமக்கதைகள்..

வாங்க சுந்தர்..

நர்சிம்

செந்தழல் ரவி September 2, 2008 at 12:36 PM  

பாய்ண்ட் 3 எக்ஸலண்ட் !!!!!!!

கலக்கல் !!!

narsim September 2, 2008 at 12:56 PM  

வருகைக்கு நன்றி செந்தழல்...

நர்சிம்

பரிசல்காரன் September 2, 2008 at 1:09 PM  

//1. அந்த அளவு வயிறு இல்லை. ஆனாலும் டிரஸ்சிங் எப்படி இருக்கு? என்று பார்த்துக் கொள்வேன்..

2. நான் எப்போதுமே ஒரு பீர்,பிடித்த புத்தகம்,ஹால்,டிவி என்று ஐக்கியமாகி விடுகிறேன். திருப்பூரில் என் ரசனைக்கொத்த நண்பர்கள் மிகக் குறைவு. இருக்கும் நண்பர்களும் குடும்பத்தோடுதான் என்பதால் தொந்தரவு செய்வதில்லை!

3. ஹி..ஹி.. ஆமா.

4. இல்லை.

5. இல்லை.

6. அவ்வளவாக இல்லை. ரசித்து விட்டு போகிறேன். ஆனால் சினிமா தியேட்டரில் பார்த்தால் இப்படி நினைப்பதுண்டு!

7. அவன் கிடக்கான் என்று சொன்னதில்லை. ரெண்டாவது நீங்க சொல்லீருக்கறதை அப்பப்ப நெனைக்கறதுண்டு. அவர் மறைவுக்கப்புறம் அடிக்கடி கூட..

8. அது எப்பவுமே உண்டு.

9. இதுவும் எப்பவுமே உண்டு!

10. இல்லை. எப்பவுமே ஸ்ட்ரெய்ட் பதில்தான்.//

தலைவா.. வேறொரு ஃபைல் ஓப்பன் பண்ணி வெச்சுகிட்டு ஒவ்வொண்ணுக்கா பதில் சொல்லிகிட்டே வந்ததுதான் மேல இருக்கறது. முழுசா படிச்சுட்டா அதுக்கு தகுந்த மாதிரி சொல்லீடுவேனோன்னு பயந்து கீழ பார்க்காம பதில் சொன்னேன்.

உங்க கணிப்பு சரியா இருக்கான்னு சொல்லுங்க.

என் வயசு 34.3

அதிஷா September 2, 2008 at 1:50 PM  

எனக்கு வயசாகிடுச்சோ...

அதிகமான கேள்விக்கு ஆமானுதான் பதில் வருது

;-(((

narsim September 2, 2008 at 4:36 PM  

@பரிசலார்...

"இல்லை"க்கெல்லாம் "ஆம்"னு சொல்ல இன்னும் 6 வருஷம் இருக்குனு சொல்லுங்க..

வருகைக்கு நன்றி..

ந‌ர்சிம்

narsim September 2, 2008 at 4:39 PM  

வாங்க அதிஷா..

(நீங்க பிஞ்சுலயே...)

நன்றி!

நர்சிம்

Bruno October 2, 2008 at 8:08 PM  

I register my condemnation against Mr.Maa.Manivannan for copying this article Verbatim and publishing in Kumudam 08.10.2008 pages 48, 49

டக்ளஸ்....... April 11, 2009 at 2:51 PM  

அப்பாடா...
நான் யூத்து....!
நான் யூத்து....!
நான் யூத்து....!
நான் யூத்து....!
நான் யூத்து....!
நான் யூத்து....!
நான் யூத்து....!
நான் யூத்து....!

மணிவண்ணனையும் குமுதத்தையும் வன்மையாக உண்மையாக கண்டிக்கிறேன்...