குறுந்தொகை... பேரின்பம்..

"ஊரில் உள்ளவர்கள் கண்டபடி பேசும் அவதூறுக்கு பயந்தால் காதலும் காமமும் வெளிக்காட்ட முடியாமல் குறைந்து பின் மறைந்துவிடும். அதற்காக எவன் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று கர்மமே(காமமே) கண்ணாக இருந்தால் அனைவர் முன்னிலையில் வெட்கித்தலைகுனியும் நிலையும் ஏற்பட்டுவிடும்.. எப்படி பெரிய யானை தன் தும்பிக்கை கொண்டு முரித்த மரக்கிளை நிலத்திலும் விழுந்து தொலையாது, மரத்திலும் ஒட்டாது ஊசலாடுமோ.. அப்படித்தான் அவர் நினைவால் வாடும் என் உடம்பும் உள்ளது தோழி..!


காதலையும் காமத்தையும் மறக்கவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல் போன தன் நிலையை தோழிக்கு கூறுவதாக அமைந்த இந்த வரிகள்...

ஆலந்தூர் கிழார் என்ற புலவரால் எழுதப்பட்ட குறுந்தொகைப் பாடல்...

கெளவை அஞ்சின் காமம் எய்க்கும்
எள் அற விடினே உள்ளது நாணே
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின், தோழி! அவர் உண்ட என் நலனே
.

(டிஸ்கி 1: இந்த பதிவிற்கு வரும் வரவேற்பைப்(?)பொறுத்து.., இன்னும் மனதின் ஓரத்தில் மனப்பாடத்தில் உள்ள குறுந்தொகை, புற,அக நானூற்றுப்பாடல்கள் பதியப்படும்..)

டிஸ்கி 2 : தமிழாய்ந்த பெரியோர்களே.. பாடலுக்கான‌ எனதுவிளக்கத்தில் ஏதாவது தவறு இருந்தால் "பொருத்தருளாமல்" உடனே பின்னூட்டத்தில் சொல்லிவிடுங்கள்.. ஏனெனில் ம‌க்கள் இதை படிக்காமல் கூட இருக்கலாம்.. ஆனால் தவறாக படிக்கக்கூடாது..

32 comments:

புருனோ Bruno September 29, 2008 at 7:44 PM  

வரவேற்கிறேன்

புருனோ Bruno September 29, 2008 at 7:50 PM  

நான் கூட இப்படி ஆரம்பித்தேன்

தமிழ் இலக்கியங்களில் !! மருத்துவம் - பகுதி 1

வெண்பூ September 29, 2008 at 7:58 PM  

அடா.. அடா.. எப்படியெல்லாம் எழுதியிருக்கானுங்க.. அந்த காலத்துலயே ரூம் போட்டு யோசிச்சிருக்கானுங்க :)

அதிஷா September 29, 2008 at 8:07 PM  

நர்சிம் ஏன் இந்த கொலைவெறி

உங்களுக்கு யாரோ சூனியம் வச்சிருக்காங்க யாருனு தெரியல,...

கார்க்கி September 29, 2008 at 8:22 PM  

// இந்த பதிவிற்கு வரும் வரவேற்பைப்(?)பொறுத்து.., இன்னும் மனதின் ஓரத்தில் மனப்பாடத்தில் உள்ள குறுந்தொகை, புற,அக நானூற்றுப்பாடல்கள் பதியப்படும்..)/

பாடல் வேண்டாம்.. விளக்கம் மட்டும் போதும்..


ச்சும்மா சகா, தொடர்ந்து போடுங்க..

புதுகை.அப்துல்லா September 29, 2008 at 10:17 PM  

இந்த பதிவிற்கு வரும் வரவேற்பைப்(?)பொறுத்து..,

//

ஆஹா இன்னாமாகீது இத்தப்போயி வர்வேற்பு வர்மானு ரோசன பண்றீயேப்பா. தொய்ந்து எல்து இன்னா!!!!

narsim September 30, 2008 at 11:23 AM  

நன்றி புருனோ

உங்கள் பதிவு கலக்கல்

நர்சிம்

narsim September 30, 2008 at 11:26 AM  

நன்றி வெண்பூ,

ஆம்.. இதைவிட பலமான யோசிப்பு எல்லாம் இருக்கு..

நர்சிம்

narsim September 30, 2008 at 11:28 AM  

அதிஷா,

ரிலாக்ஸ்.. கூல்..

பாடல படிக்காம விளக்கம் மட்டும் படிங்க..

நர்சிம்

narsim September 30, 2008 at 11:30 AM  

//பாடல் வேண்டாம்.. விளக்கம் மட்டும் போதும்..//

வாங்க கார்க்கி..

முதலில் அப்படித்தான் நினைத்தேன்.. மனசு கேட்கல..

நர்சிம்

narsim September 30, 2008 at 11:32 AM  

வாங்க அப்துல்லா..

அப்டீன்ரியாபா.. வுடு.. பூந்துருவோம்

வருகைக்கு நன்றி நைனா..

நர்சிம்

இராஜராஜன் September 30, 2008 at 11:34 AM  

வணக்கம்
தொடர்ந்து எழுதுங்கள்
என்னைப்போன்ற அதிக அறிமுகம் இல்லாதவனுக்கு பயன்படும்

பாடலும் வேண்டும் விளக்கமும் வேண்டும்

அடிச்சு ஆடுங்க

நன்றி

புருனோ Bruno September 30, 2008 at 11:46 AM  

பாடலும் வேண்டும் !! விளக்கமும் வேண்டும் !!

முரளிகண்ணன் September 30, 2008 at 12:03 PM  

சிற்றின்பத்தின் மூலமே பேரின்பத்தை அடிய முடியும் என்பதால் இந்த சிற்றின்ப பாடலுக்கு பேரின்பம் என்ற தலைப்பா?

அட்டகாசம்

narsim September 30, 2008 at 12:11 PM  

ஓகே மருத்துவரே.. இரண்டும் இடம்பெறும்

நர்சிம்

narsim September 30, 2008 at 12:12 PM  

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராஜராஜன்..
தொடர்ந்து வாருங்கள்

நர்சிம்

narsim September 30, 2008 at 12:14 PM  

வாங்க முரளி கண்ணன்.. கரெக்ட்டா சொன்னீங்க..

நன்றி

நர்சிம்

நந்தா September 30, 2008 at 12:29 PM  

// இந்த பதிவிற்கு வரும் வரவேற்பைப்(?)பொறுத்து.., இன்னும் மனதின் ஓரத்தில் மனப்பாடத்தில் உள்ள குறுந்தொகை, புற,அக நானூற்றுப்பாடல்கள் பதியப்படும்..)//

நர்சிம் அருமையான முயற்சி. என்னைக் கேட்டால் தயவு செய்து வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ, இது போன்ற முயற்சிகளைத் தொடருங்கள்.

ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள் படித்திருக்கிறீர்களா?? அனேகமாய் படித்திருக்கலாம். உங்கள் பதிவின் வீச்சை அதிகரிக்க உபயோகமாய் இருக்கும்.

narsim September 30, 2008 at 12:34 PM  

நந்தா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஆம் படித்திருக்கிறேன்.. இங்கே.. என் மனதில் உள்ள விளக்கங்களையும் பாடல்களையும் பதிகிறேன்.. எனக்கு அமைந்தவர் மிக நல்ல தமிழாசிரியர் என்பது இன்னமும் மனதில் பதிந்துள்ள அவரின் விளக்கங்களே சான்று..


நர்சிம்

அறிவன்#11802717200764379909 September 30, 2008 at 12:55 PM  

>>"பொருத்தருளாமல்">>

வேண்டுமென்றே செய்யப்பட்ட பிழையா என்ன?

மற்றபடி,வி.சி.பே'களை விட இவை நன்றாக இருக்கின்றன..

தொடருங்கள்..

:)

narsim September 30, 2008 at 1:00 PM  

//வேண்டுமென்றே செய்யப்பட்ட பிழையா என்ன?

மற்றபடி,வி.சி.பே'களை விட இவை நன்றாக இருக்கின்றன//

ஆம்..

வி சி பே.. கொஞ்ச நேரம் யேசிச்சத்துக்கப்புறம் தான் அதைப்பத்தினு தெரிஞ்சது,,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அறிவன்..

நர்சிம்

ஜ்யோவ்ராம் சுந்தர் September 30, 2008 at 1:23 PM  

இது நல்ல முயற்சி நர்சிம். தொடருங்கள்.

நித்யகுமாரன் September 30, 2008 at 1:53 PM  

இவை போன்ற முயற்சிகளை வலையில் தேடித்தான் படிக்க வேண்டியுள்ளது. இந்த முயற்சியை வரவேற்கிறேன்.

நிச்சயம் தொடர்ந்து எழுதுங்கள்.

இலக்கியத்தின் சுவையை வேறெதன் சுவையும் தர இயலாது.

அன்பு நித்யகுமாரன்.

Balachander September 30, 2008 at 2:35 PM  

supper...! please continue..

narsim September 30, 2008 at 4:27 PM  

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
இது நல்ல முயற்சி நர்சிம். தொடருங்கள்.
//

மிக்க நன்றி குருவே..


நர்சிம்

narsim September 30, 2008 at 4:29 PM  

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நித்ய குமாரன்..

நன்றி பாலச்சந்தர்..

நர்சிம்

சங்கணேசன் September 30, 2008 at 5:15 PM  

இந்த வரவேற்பு போதுமா? இன்னும் வேண்டுமா?..நீங்கள் இத்போல் தொடர்ந்து எழுத...

தமிழன்... September 30, 2008 at 7:56 PM  

தொடரலாம்...

narsim October 2, 2008 at 11:09 AM  

வருகைக்கும் கருத்துகும் மிக்க நன்றி சங்கணேசன், தமிழன்.
நர்சிம்

பாபு October 3, 2008 at 11:59 AM  

நீங்கள் செப்டம்பர் ஒன்றாம் தேதி எழுதிய பதிவு (தலைப்பு---நீங்கள் 35 to 40 வயது )ஒன்று, இந்த வார குமுதத்தில் மணிவண்ணன் என்பவர் பெயரில் வெளிவந்துள்ளது,கவனித்தீர்களா?

Mahesh October 10, 2008 at 12:10 PM  

அட அட அட எங்கியோ போயிட்டீங்க... இதெல்லாம் மனப்பாடம்னு வேற சொல்றீங்க... தமிழாய்ந்தவங்க, ஓய்ந்தவங்க எல்லாம் சொல்றபோது சொல்லட்டும்... நீங்க எழுதுங்க...

ஒரு விண்ணப்பம் : அப்பிடியே இந்த அப்துல்லா அண்ணனோட பின்னூட்ட்ங்களுக்கும் ஒரு பொழிப்புரை, பதவுரை போட்டுருங்க :)

இளங்கோ July 4, 2009 at 12:19 PM  

நர்சிம்,

"கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது"

முயலெய்ய இங்கு பலபேர் உண்டு. நீங்கள் வேலேந்துங்கள்...யாமிருக்க பயமேன் ;)

இளங்கோ