பெண்..காமம்..அளவு??..குறுந்தொகை..

செக்ஸில் அதீதமான (இதனால்தானோ ஜ்யோவ்ராம் சுந்தரின் கதைநாயகன் பெயர் அதீதன்??)ஈடுபாடு உள்ள ஆண்களை.. செக்ஸில் வீக்கானவர் என்றோ.. கில்லாடி என்றோ.. அவர் க(ந)டந்து செல்லும் பொழுது ஒரு நமட்டு கண்சிமிட்டலின் மூலமோ பகிர்கிறோம்.. சம்பதப்பட்ட ஆண்களும் இதற்காக பெருமைபட்டுத்தான் கொள்கிறார்கள்..( நெருங்கிய நண்பர்களிடமாவது..)

ஆனால் ஆண்டாண்டு காலமாய்.. இந்த மேட்டரில் பெண்களின் நிலைப்பாடு பற்றி பொதுவில் கருத்து கூறுவது இல்லை.. இல்லை என்பதை விட கடினம் என்பதால்தான் "இல்லை" என்றே தோன்றுகிறது..அல்லது ஒற்றை வார்த்தையில் வேசி பட்டம் கட்டி விடுகிறது..

பெண்ணின் மனது கடலை விட ஆழம்.. வானை விட உயரம் என்று உயர்வுநவிர்ச்சி அணியில் ஏதாவது சொல்லிவிட்டு, விட்டு விடுகிறோம்..

எவ்வளவு பெரிய மாவீரனையும்.. ஒரு பெண்ணின் "அவ்வளவுதானா" என்ற ஒற்றை வார்த்தை சாய்க்கவல்லது..(புரியாதவர்கள் "மொழிவிளையாட்டை" அணுகவும்)

80 சதவீத பெண்களின் காம வாழ்க்கை எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பார்த்தபடி அமைவதில்லை என்று பல ஆய்வுகள் உறுதிபடுத்துகிறது.. காரணம் கணவனுக்கு தேவை என்றால் தேவை.. வேண்டாம் என்றால் எதிர்பாலினம் வலுக்கட்டாயப்படுத்துவதில்லை.. படுத்தினால், கணவன் சந்தேகத்தில் படுத்திவிடுவான் என்ற அச்சமும் மடமும் நாணமும் காரணமாய் இருக்குமோ??

பெண்களின் இயல்பான தோற்றம் மென்மையானதால் அவர்களின் இந்த நிலைப்பாட்டை கண்டுபிடிக்க முடியவில்லையோ என்ற எனக்கு ஏற்பட்ட ஐயம்.. இந்த குறுந்தொகை பாடலைப் பார்த்த பொழுது இன்னும் அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும்..

விளக்கம்:

பெரிய பெரிய பலா மரங்களுக்கு நேர்த்தியாக மூங்கிலால் வேலியிட்ட தலைவா.. அந்த பலா பழங்கள் எப்படி இருக்கிறது என்று பார்.. எவ்வளவு சிறிய காம்பு போன்ற கிளையில் அவ்வளவு பெரிய ப(ழ‌)லத்தை தாங்கி கொண்டிருக்கிறது .. அது போலத்தான் இந்த சின்ன உயிரைத் தாங்கிய இவள் உடலின் காமம் மிகப் பெரியது.. யார் அறிவார் இதை??

பாடல்:

வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார் அஃது அறிந்திசினோரே சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே

குறிஞ்சி திணையில் தோழி கூற்றாக அமைந்த இந்த அருமையான பாடலை எழுதியவர் தானைத் தலைவர் கபிலர்..

..

28 comments:

அத்திரி December 19, 2008 at 11:23 AM  

முடியல சகா எங்கியோ போய்ட்டீங்க...............

அத்திரி December 19, 2008 at 11:24 AM  

அய் நாந்தான் முதல்ல

மின்னல் December 19, 2008 at 11:43 AM  

எங்கே குறுந்தொகையை காண‌வில்லை என்று கேட்கும் முன் ப‌திந்து விட்டீர்க‌ள். அருமையான‌ பாட‌ல். க‌த்தி மேல் ந‌ட‌ப்ப‌து போல‌ சிக்க‌லான‌ விச‌ய‌த்தை அருமையாக‌ ப‌திந்து இருக்கின்றீர்க‌ள் ந‌ர்சிம். ம்ம் எப்ப‌டி பாராட்டுவ‌தென்றே தெரிய‌வில்லை.

//பெண்ணின் மனது கடலை விட ஆழம்.. வானை விட உயரம் என்று உயர்வுநவிர்ச்சி அணியில் ஏதாவது சொல்லிவிட்டு, விட்டு விடுகிறோம்..//

இப்ப‌டி தான் எஸ்கேப் ஆகாறாங்க‌.


//பெண்களின் இயல்பான தோற்றம் மென்மையானதால் அவர்களின் இந்த நிலைப்பாட்டை கண்டுபிடிக்க முடியவில்லையோ என்ற எனக்கு ஏற்பட்ட ஐயம்.. இந்த குறுந்தொகை பாடலைப் பார்த்த பொழுது இன்னும் அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும்..//


ஐய‌மெங்கே இந்த‌ பாட்டில் அவ‌ள் காம‌ம் பெரிய‌தென்ற‌ல்ல‌வா சொல்லி இருக்கு.//ஒற்றை வார்த்தையில் வேசி பட்டம் கட்டி விடுகிறது..//


ந‌டைமுறை இப்ப‌டிதான் என்றாலும் பாவ‌ம் பெண்க‌ள்

ஜ்யோவ்ராம் சுந்தர் December 19, 2008 at 12:00 PM  

மிக முக்கியமான பதிவு இது நர்சிம். நன்றி!

கார்க்கி December 19, 2008 at 12:34 PM  

அடல்ட்ஸ் ஒன்லி பதிவா இருக்கே.. நான் உள்ளே வரலாமா தல?

Mahesh December 19, 2008 at 1:04 PM  

//முடியல சகா எங்கியோ போய்ட்டீங்க...............//

ரிப்பீட்டு...........

பரிசல்காரன் December 19, 2008 at 1:41 PM  

//தானைத் தலைவர் கபிலர்..//

Repeatteeeeeeeeyyyyyyyyy!!!

கார்க்கி December 19, 2008 at 2:08 PM  

//அத்திரி said...
முடியல சகா எங்கியோ போய்ட்டீங்க.......//

இது எனக்கில்லையே?

வடகரை வேலன் December 19, 2008 at 2:08 PM  

ஆமா நர்சிம், ஆண்களுக்கு அது ஒரு வீரம் போலவும், பெண்களுக்கு அது ஒழுக்கக்குறைவு போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

இரு வருடங்களுக்குமுன் வீக் பத்திரிக்கை, have you had your orgasms? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். அதற்கு வந்த எதிர்ப்பெல்லாம் போலிக் கலாச்சாரக் காவலர்களிடமிருந்தேதான்.

அந்தக் கட்டுரை எழுப்பியிருந்த ஆதாரக் கேள்விக்கு எவரும் பதில் சொல்லவில்லை.

கத்தி மேல் நடப்பது போன்ற விஷயத்தை உங்கள் மெச்சுரிட்டியால் சரியான விதத்தில் சொல்லியிருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்.

வால்பையன் December 19, 2008 at 3:54 PM  

நீங்கள் சொல்வது போல் பெண்களின் உணர்வுகளை மதிக்காத இரண்டு பேர் இதுக்கு நெகடிவ் ஓட்டு குத்தி இருப்பார்களோ!

ரமேஷ் வைத்யா December 19, 2008 at 4:38 PM  

கார்க்கி,
நம்மளை மாதிரிப் பசங்க எல்லாம் இந்தப் பக்கம் எட்டிப்பார்க்கக் கூடாது. புரிஞ்சுதா? (நானும் யூத்துதான்.)

கார்க்கி December 19, 2008 at 5:00 PM  

/ரமேஷ் வைத்யா said...
கார்க்கி,
நம்மளை மாதிரிப் பசங்க எல்லாம் இந்தப் பக்கம் எட்டிப்பார்க்கக் கூடாது. புரிஞ்சுதா? (நானும் யூத்துதான்.)
//

தல உங்கள மாதிரி,பரிசல் மாதிரி யூத் எல்லாம் வரலாம். ஆனா என்ன மாதிரி ஸ்டூடன்ட்ஸ் வரலாமான்னு கேட்டேன்..

வால்பையன் December 19, 2008 at 5:03 PM  

//தல உங்கள மாதிரி,பரிசல் மாதிரி யூத் எல்லாம் வரலாம். ஆனா என்ன மாதிரி ஸ்டூடன்ட்ஸ் வரலாமான்னு கேட்டேன்.. //

ஆமாங்க நானும் அதை தான் யோசிக்கிறேன்.
இப்ப எனக்கு அரையாண்டு பரிச்சை வேற நடக்குது

இராகவன், நைஜிரியா December 19, 2008 at 10:16 PM  

வால்பையன் said...
//தல உங்கள மாதிரி,பரிசல் மாதிரி யூத் எல்லாம் வரலாம். ஆனா என்ன மாதிரி ஸ்டூடன்ட்ஸ் வரலாமான்னு கேட்டேன்.. //

ஆமாங்க நானும் அதை தான் யோசிக்கிறேன்.
இப்ப எனக்கு அரையாண்டு பரிச்சை வேற நடக்குது //

பரீட்சை நன்றாக எழுத வாழ்த்துக்கள்.

Anonymous December 20, 2008 at 9:27 AM  

Hi guys! please notice 55-70 age group mans who visit to net cafe,100% sure they are watching nude photoes!!but in society they kate teenagers!! I don't know why??

Anonymous December 20, 2008 at 10:54 AM  

அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டி

RAMASUBRAMANIA SHARMA December 20, 2008 at 9:59 PM  

migavum nalla villangamana pathivu...comments reserved...!!!

Anonymous December 21, 2008 at 1:56 AM  

I do not understand what is so unique or surprising about this post. Whether it be a man or a woman, all of us have fear, love, hatred, sentiments and like wise desire or otherwise for sex.

Just like how some men have abundant love or romantic feeling, and some may have hatred or revolutionary feeling, there are men who have more sexual feeling.

Woman is also born as a normal creation, she is not a creature with 2 horns to have different biological emotions. (leaving alone she is different anatomically)

Hence, just how some woman have more sympathy or love, and some have jealousy or hatred, there are some women whose sexual need is more or there may be women whose need would be less.

It is funny, to bring this as a topic of discussion at all?!?! and invite unwanted replies ?

As usual, I am almost sure no woman would have guts to comment on this post, for the fear that probably if she did, she would be labelled.

narsim December 21, 2008 at 12:04 PM  

hi anonymous.. thanks for your view and comment..

this post is to explain the "குறுந்தொகை" to all the tamil readers who is thinking these kind of litrs are too tough to understand.. so trying to make the things with the current event comparision..

When i was writing about this particuler post.. i knew that i am taking a much much sensitive issue.. still.. i have written what was there in my mind..

And. as you mentioned its not a post which is asking for a reply for these.. its more to do with the OLD TAMIL LIT..

no other reason.. please do gothrough the other poems also..


//As usual, I am almost sure no woman would have guts to comment on this post, //

how they will comment.. as you yourself never mentioned your name for your comment.. in fact its a very good comment and view..

once again thanks a lot for the view

நாடோடி இலக்கியன் December 21, 2008 at 1:02 PM  

நல்ல பதிவு நர்சிம்.
இந்த பாட்டெல்லாம் எப்போதோ படித்த ஞாபகம்,இப்போது நீங்கள் கொடுக்கும் அறிமுகம் நல்ல யுத்தி.தொடரட்டும்.

Anonymous December 21, 2008 at 1:48 PM  

//And. as you mentioned its not a post which is asking for a reply for these.. its more to do with the OLD TAMIL LIT..

no other reason.. please do gothrough the other poems also..//

ok. I'm sorry dude. I might not have seen past ur post.

Hasty spill of words from my side.

//how they will comment.. as you yourself never mentioned your name for your comment.. in fact its a very good comment and view.. //

:)

I thought It wasn't so clearly categorical!

கும்க்கி December 22, 2008 at 11:04 AM  

:--))))

முரளிகண்ணன் December 23, 2008 at 11:15 PM  

\\மிக முக்கியமான பதிவு இது நர்சிம். நன்றி\\

சுந்தர் சார் கருத்தை வழிமொழிகிறேன்.

இம்மாதிரி பதிவுகள் பல சிக்கலான பிரச்சினைகளுக்கு விடையளிக்க கூடியவை

தமிழ்நெஞ்சம் December 25, 2008 at 11:23 AM  

உங்கள் அளவுக்கு எனக்குப் பழந்தமிழில் பரிச்சயமில்லை.

அடிக்கடி உங்கள் பதிவுகளைப் படித்தால் நானும் பழந்தமிழில் ஒன்றிவிடுவேன் என எண்ணுகிறேன்.

நன்றி

Sugumar (சுகுமார்) March 25, 2009 at 5:38 PM  

சங்ககால இலக்கியம் நிகழ்காலத்தைவிட மிக எதார்த்தமும் வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கவும் செய்ததோ என்று ஒரு என்னம் எனக்கு பல சமையம் வரும்.

நல்ல பதிவு! Anonymous கருத்துக்கு நீங்கள் பதிலலித்தத விதம்... உங்களை மேலும் மதிக்க வைக்கிறது.

பெண்களின் கற்றுக்கொடுக்கப்பட்ட அல்லது ஊர்ஜிதம் செய்துகொள்ளபடுகிற பண்புகள் பின்னாலில் அவர்களோடு பழக்கமோ, எதார்த்த பேச்சுக்களின் போதோ பல சமையம் உடைந்துதான் போகிறது. ஆனாலும் வெளிப்படையாக பார்க்க பழக அந்த typical 'பெண்மை' தான் பிடிக்கிறது.

கொற்றவை January 4, 2010 at 9:16 AM  

நன்று...மேட்டர் போன்ற வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். காமம் என்பது வெறும் உடல் தேவை மட்டும் அல்ல..உளவியல் சார்ந்ததுமென்று நான் கூறவேண்டியதில்லை...இதில் யார் காமம் பெரியது என்று கணக்கிடுவதை விட, காமத்தை சரியாக புரிந்து கொள்வது அவசியம்...சில பெண்களுக்கு எவ்வளுவுதான் செய்தாலும் ஏற்படாத உச்சம் (orgasm), வெறும் விரல்கள் உரசுவதால் கூட கிட்டிவிடும்...அல்லது கனிவான பேச்சினால் கூட கிட்டிவிடும்..அவளுக்கு முதலில் தன் மூளையை (மனதை) திருப்தி படுத்துதல் அவசியம்.. அதைகூட அறியும் அவகாசம் எடுத்துக்கொள்ளாமல்...நுழைப்பதிலேயே குறியாக இருக்கும் ஆண்மகனைப்பர்த்து ஒரு பெண் இப்படி பாடியிருக்கக் கூடும்... (பிரிவுத்துயரில் பாடியிருந்தால்கூட)

குறுந்தொகை பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி...

நர்சிம் January 4, 2010 at 12:42 PM  

மிக்க நன்றி கொற்றவை. இனி அது போன்ற வார்த்தைகள் தவிர்க்கப்படும்.

நல்ல கருத்து. போலவே உங்கள் கவிதைகள் மிக பிடித்திருந்தது.

kuthu May 6, 2010 at 3:36 AM  

இந்த பாடலில் காமம் என்பது நுழைப்பதை பற்றி அல்ல என்று நினைக்கிறேன்..