ஸ்க்ரிப்ட் ஓப்பனிங்: பொதுவாக ஸ்க்ரிப்ட்டை மூன்று விதமாக ஆரம்பிப்பார்கள்.
1.கதாநாயகன் அறிமுகம்,அருமை பெருமை இன்னொரு கதாபத்திரத்தின் மூலம் (ரஜினி படங்கள்)
2.கதை சம்பதப்பட்டவர்களைப் பற்றி வாய்ஸ் ஓவரில்-மாந்தோப்புக் கிளியே,குஷி,..
3.சஸ்பென்ஸ் ஓப்பனிங்: கடைசிவரை முதல் காட்சி சஸ்பென்ஸை பிசகாமல் திரைக்கதையின் ஓட்டத்தில் க்ளைமாக்ஸ்ல் உடைப்பது.(புரியாத புதிர்,தர்மம் தலைகாக்கும்..)
இதில் சுப்ரமணியபுரம் 3வது வகை.
ஜெயிலில் இருந்து விடுதலை ஆகி வரும் ஒருவனை முகம் தெரியாத ஒருவன் கொலை செய்ய முயற்சிக்கிறான்... யார் இவர்கள்..ஏன்??..
1980க்கு பின்னோக்கி செல்கிறது திரைக்கதை.
காசியின்(கஞ்சா கருப்பு)நீண்ட நடையில் அவர்கள் வாழும் களம் அறிமுகமாகிறது நமக்கு... நேராக Xகவுன்சிலரின் வீட்டிற்கு சென்று நண்பர்களை போலிஸ் பிடியில் இருந்து விடுவிக்க உதவி கேட்கிறான். முன்னால் கவுன்சிலரும் உதவுகிறார்.மேலே வ்.உ.சி போட்டோவில் சிரிக்கிறார்.
பரமன்(சசி),அழகர்(ஜெய்) சித்தன் சவுண்ட் சர்வீஸில் பொழுதைக் கழித்து கொண்டும்,வேலை இல்லாததிற்காக வீட்டில் வசவுச் சொற்களை தாங்கிக்கொண்டும்(சத்யா?)ஆனாலும் திருவிழா,சினிமா என சந்தோஷமாய் நாட்களை நகர்திக்கொண்டிருக்கிறார்கள்.
துளசி(ஸ்வாதி)x கவுன்சிலரின் மகள்-அழகர் கண்கள் இரண்டால்/நான்கால் மனதை கொள்ளையடிக்கிறார்கள்.
இந்த சாதாரண சூழலை 1980 என்ற பின்னனியில் சொல்வதால் நம் கண்களும் மூலையும் 80லின் ஒப்பீட்டில் ஈடுபட்டு ஆனந்த கூத்தாடுகிறது.
இதற்கு காரணம் "ரெம்போன்" - கலை இயக்குனர். கலை இயக்கத்தின் நாளைய சூப்பர் ஸ்டார்..
1.சிறு பொன்மனி..பாடலின் அடர்த்தியில் இவர்களின் மன நெருக்கம் புரிந்துவிடுகிறது.
2.ஸ்டியரிங் வைத்த மூனுகால் சைக்கிள்,விறகு வண்டி,பாண்டியன் பஸ்,ரேடியோவில் முதல்வர் எம்ஜியாரின் திட்ட அறிவிப்புகள்,கிராதி வீடுகள்,காளிமார்க் சோடா,சைபால்,லிமோ டெய்லர்ஸ்,சாலிடர் டி.வி விளம்பரங்கள்,முக்கியமாய் சட்டை காலர்கள்,கலர்கள் என 80 மயம்-(இந்த பின்னனி இல்லை என்றால் ஒரு ஏழை ரவுடி,பணக்கார பெண் காதல் என்ற சராசரியாகத்தானிருந்திருக்கும்).
3.கவுன்சிலரின் தம்பி கனகுவின்(சமுத்திரக்கனி)குரல் ஏற்ற இர(ற)க்கம்..லாட்ஜில் அழகர் பரமனிடம் பேசிப் பேசியே கொலை செய்ய தூண்டும் வார்த்தைகள்-(ஆணியில் இரண்டு சட்டைகள் மாட்டப்பட்டிருக்கும்-இரண்டு நாட்களாக அங்கேயே இருப்பதால்)
4.கொலை செய்துவிட்டு தப்பி ஓடும் காட்சி-ஃப்ரேமின் ஒரு பக்கதில் இருந்து மறுபக்கம் இடம்பெயர்வது-வாழ்க்கை தடம் மாறும் குறியீடு
5.வட்டார மொழி.. டும்க்கான்,தோப்பன்,கஞ்சாகருப்பு,சசி,சோமு,சமுத்திரக்கனி,அத்தாட்சி("இதத்தான சொல்லு"வில் அள்ளுகிறார்)
6.பாத்திரத்தேர்வு:கவுன்சிலரின் அண்ணன்,அசல் அரசு ஊழியரை கண்முன் நிறுத்துகிறார்.
7.ஆட்டோ கொலை: கனகுவின் துரோகத்தை ரசிகர்களின் மனதை பாதிக்கும் அளவிற்கு படைத்ததன் வெற்றி, அந்த கதாபத்திரத்தின் கழுத்தை அறுக்கும் பொழுது அரங்கில் எழும் கரவொலியே சாட்சி.
8.கஞ்சாகருப்பு: படம் முழுக்க சிரிப்பு நடை நடந்து... பின் கடைசிக் காட்சியில்..ஒரே ஸாட்டில் துரோக நடை,பய நடை..பாவ நடை..பின் ஆசுவாச நடை என அதிர்ச்சி நடை கொடுத்திருக்கும் கஞ்சாகருப்பின் பங்கு/பாங்கு.
9. கடைசி வரை முதல் காட்சியில் குத்தப்படுவது யாராக இருக்கும் என யூகிக்கமுடியாத திரைக்கதை..
10. ஆரம்பம் முதல் கடைசி வரை இழையோடும் நகைச்சுவை... "கிழியுது"
இப்படி ரசிகர்களின் புத்திசாலித்தனத்தின் மீது நம்பிக்கை வைத்து புத்திசாலித்தனமான ஸாட்களை வைத்தது தான் வெற்றியின் முக்கிய காரணம்.
சுப்ரமணியபுரம்:வெற்றிக்காண காரணங்கள்
Labels: சுப்ரமணியபுரம்
பெட்ரோல்... நல்லா நடத்துறாங்கையா நாடகத்தை...
அரசும்,பெட்ரோல் விற்பனை அதிபர்களும் கைகோர்த்துக்கொண்டு கடந்த இரண்டு நாட்களாக நடத்தி வரும் நாடகம் அருமையாக அவர்கள் நினைக்கும் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
அரசின் ஆதரவு இல்லாமல் இது நடக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால் இதுவரை நடந்த பெட்ரோல் நிலைய வேலைநிறுத்தம் எல்லாமே ஒன்று கடைசி நேரம் கைவிடப்பட்டுள்ளது அல்லது அதிகபட்சமாக 4 மணி நேரமே நடந்துள்ளது.
எல்லா பெட்ரோல் நிலையங்களும் ஸ்டாக் இல்லாமல் இருப்பது டிமான்ட் ஆகி,நகரம் ஸ்தம்பித்த நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளது.
இப்பொழுது, 80 ரூபாய் கொடுக்கவும் மக்கள் மனதளவிலும் பேச்சளவிலும் தயாராகி வருகிறார்கள்/வந்து விட்டார்கள். ஏனொனில் இயக்கம் இன்றியமையாதாகிவிட்ட நிலையில்,ஓர் இடத்திற்கு குறித்த நேரத்தில் போகாவிட்டால் ஏற்படும் இழப்பின் வலி பெரிதாக இருப்பதாலும் நடுத்தட்டு மக்கள் இந்த மன மாற்றத்த்திற்கு உட்படுகிறார்கள்.
கூட்டத்தின் பெரும்பாலேரின் முனுமுனுப்பு "சிதம்பரம் வந்தாலே இப்படித்தான்யா" வாகவே இருக்கிறது.
ஆக, 55 ரூபாயாக விலை ஏற்றத்தை மறக்கடிக்க நடத்தப்படும் நாடகம் அருமையான வசூலை அள்ளித்தரும் என்பதில் ஐயமில்லை.
நடுத்தர மக்களின் ஓட்டு தான் அரசின் தலைஎழுத்தை நிர்ணையிக்கிறது. ஆனால் பாவம் நடுத்தர மக்களின் தலை எழுத்தைத் தான் யாராலும் எப்பொழுதும் மாற்ற முடியாமல் இருக்கிறது.
Labels: பத்தி