(திரு.கோவி கண்ணன், பரிசலார்,லக்கிலுக்,புருனோ,டிபிசிடி,அதிஷா...இன்னும்...)
இந்த பதிவு சுவாரஸ்யமாய் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் விசயம் சீரியசானது..
எனது முந்தைய பதிவில் ரவி என்பவர் "30 வருடமாக இந்த அரசியல்வாதிகள் என்னத்தை கிழித்தார்கள்" என்ற ரீதியில் கேட்ட பின்னூட்டத்திற்கு..
//நீங்களும் நானும் அரசியலைப் பார்த்து கோபப்படுகிறோம்..பிறகு.. "தோனி"யின் 50 ரன்களில் திருப்திப்பட்டு தூங்கிப்போகிறோமே..? //
என்று பதில் எழுதியிருந்தேன்...உண்மையும் அதுதானே!
நான் தலைப்பில் குறிப்பிட்டுள்ள பதிவர்கள் மற்றும் விடுபட்ட சில பதிவர்களின் கையில் இருக்கும் ஆயுதம் மிகக் கூர்மையானது...
எழுத்து.. எல்லோரும் எழுதலாம்.மிகச்சிலரின் எழுத்தே ரசிக்கப்படும்,அங்கீகரிக்கப்படும்,வாசகர் வட்டம் இருக்கும்..
கோவிகண்ணன், இடஒதுக்கீடாகட்டும்,மதச்சார்பாகட்டும் அதை இவர் கையாளும் பாங்கு நேர்த்தியானது..ஆழமாகவும் தெளிவாகவும் ஈர்ப்பாகவும் எழுதிவருபவர்.
பரிசலார், மூன்றே மாதத்தில் தன் முத்திரையை ஆழமாய் பதிந்தவர். அனுபவத்தையும் கருத்தையும் சுவையான நடையில் எழுதிச்செல்பவர்.. இவரின் பெயர்காரணமே..சமூகசேவை செய்ய ஆரம்பித்த குழுவின் பெயர்(பரிசல்) எனத் தெரிய வரும் போது இவரின் சமூக ஆர்வம் புரிகிறது.
லக்கிலுக்.. ஜாலியாய் ஆரம்பித்து சீரியஸாக மேட்டரை உணர்த்தும் லக்கிலுக் பதிவர்களின் பிரியமான தோழர்..
டிபிசிடி.. இவருக்கு புரியவில்லை என்று இவர் சொல்லிக்கொண்டாலும் இவர் எழுதுவது எல்லோருக்கும் புரியம்.. கிழித்து எழுதி வருபவர்(எழுதி கிழிப்பதை விட தவறுகளை கிழிப்பது கடினம்)
அதிஷா: நிகழ்வுகளை உணர்வாய் மாற்றி எழுதி வருபவர்.. இப்படி இன்னும் பல பதிவர்கள் மிக சுவாரஸ்யமாய் எழுதிகொண்டிருப்பவர்கள்.
புருனோ..மருத்துவத்துறையில் இருக்கும் இவரிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அந்தத்துறையின் அவலங்களைப் பற்றி கோபமாக பேசினார்..அவரின் எழுத்திலும் இதன் தாக்கம் பார்கலாம்..
இப்படி ஒரு களம் இருக்கிறது நம்மிடம்..
இரவுப்பேருந்தில் பயணத்தின் போது ஒருவர் மட்டும் ஓட்டுநரிடம் சண்டை போட்டு சிறுநீர் கழிக்க இறங்குவார். அதுவரை அவரை புழுபோல் பார்த்துக் கொண்டிர்ந்தவர்களும் கீழே இறங்கி அதையே செய்து முடிப்பார்கள்.. யாராவது ஒருவர் ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்து இருப்பார்கள்.. துயரம் என்னவென்றால் அனைவரும் அதையே நினைப்பதுதான்.
"யாரவது" செய்வார்களா என ஒரு சாரரும், "ஏன் செய்யவேண்டும் என ஒரு சாரரும் இருந்து விடுவதால்..அடுத்த தலைமுறையில் ரவி போன்றவர்களால் என்ன செய்தீர்கள் என்ற நியாமான கேள்வி எழுப்பப்படும்
இந்த வலைப்பதிவு என்ற களம் இப்பொழுது வெகுவாக கவனிக்கப்படுகிறது..விவாதிக்கப்படுகிறது..விகடன் போன்ற சக்திவாய்ந்த ஊடகங்களின் பார்வை படுகிறது..
எனவே.. இங்கு நீங்கள் எழுதப்போகும் அல்லது குறிப்பிடப்போகும் ஒரு திட்டம் எதிர்காலத்தில் யாராலாவது கவனிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு அதன் மூலம் ஒருவர்..ஒரே ஒருவர் பயன் பெற்றாலும் அது சாதனையே..
தயவுசெய்து இதை ஒரு போட்டியாக எடுத்துக் கொண்டு ஒரு திட்டத்தை பின்னூட்டமாகவோ தனிப்பதிவாகவோ இடுங்கள்..
அதாவது.. ஒவ்வொருவரும் ஒருத்துறை அமைச்சராக இருக்கும் பட்சத்தில் என்ன மாதிரியான திட்டம் அல்லது மேம்பாடு அல்லது வழிகாட்டல் செய்வீர்கள்..நீங்களே துறையை தேர்ந்தெடுத்து.. திட்டத்தை தெரிவியுங்கள்..
நான் விளையாட்டுத்துறையில் இருந்தால்...
மொத்த தமிழகத்திற்கும் ஒரே ஒரு தொலைபேசி எண்ணை ஏற்படுத்தி இப்பொழுது ஒலிம்பிக்கில் சாதனைகளாக கருதப்படும் புள்ளிகளில் 70 சதவீதத்திற்கு நெருக்கமாக யார் ஓடுவதிலோ, நீந்துவதிலோ..பிற தடகளத்திலோ திறமை இருப்பவர்கள் 1 ரூபாயில் அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினால் தகுந்த சோதனைகள் செய்து தகுதியானவராய் இருக்கும் பட்சத்தில் அரசோ தனியார் நிறுவனமோ தத்துஎடுத்து பயிற்சிக்கு வழி செய்யப்படும்..
எத்தனை அழைப்புகள் வந்தாலும் மானிட்டர் செய்யப்படும்..
இப்படி செய்தால் ஏதாவது ஒரு கிராமத்தில் ஒரு வேளை கஞ்சியை வயிறின் ஓரத்திலும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியை வயிறு முழுவதும் தீயாய் கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் பயணம் ஒலிம்பிக் வரை சென்றாலே வெற்றிதான்..(என்னோடு கிரிக்கெட் ஆடிய குமார் என்பவன் அடிக்கும் சிக்ஸர்கள் அபரிதமான உயரத்தை தாண்டி செல்லும்.. இப்பொழுது ஊருக்கு போனால்.".மாப்ள நம்ம கடையில இட்லி நல்லா இருக்கும் சாப்டுறியா?" என்கிறான்)
இப்படி ஏதாவது ஒரு திட்டம்.. மேலே சொன்ன பதிவர்கள் தவிர...இந்த பதிவை வாசிக்கும் எவரும்..
ஏனென்றால் "ஏதாவது செய்யனும் பாஸ்"...
உங்கள் எழுத்தின் மீது நம்பிக்கை வைத்து..
நர்சிம்...
சீரியஸான போட்டி...
Labels: ஏதாவது செய்யணும் பாஸ்
போட்டி...

அதாவது.. ஒவ்வொருவரும் ஒருத்துறை அமைச்சராக இருக்கும் பட்சத்தில் என்ன மாதிரியான திட்டம் அல்லது மேம்பாடு அல்லது வழிகாட்டல் செய்வீர்கள்..
நீங்களே துறையை தேர்ந்தெடுத்து.. திட்டத்தை தெரிவியுங்கள்..
நான் விளையாட்டுத்துறையில் இருந்தால்...
மொத்த தமிழகத்திற்கும் ஒரே ஒரு தொலைபேசி எண்ணை ஏற்படுத்தி இப்பொழுது ஒலிம்பிக்கில் சாதனைகளாக கருதப்படும் புள்ளிகளில் 70 சதவீதத்திற்கு நெருக்கமாக யார் ஓடுவதிலோ, நீந்துவதிலோ..பிற தடகளத்திலோ திறமை இருப்பவர்கள் 1 ரூபாயில் அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினால் தகுந்த சோதனைகள் செய்து தகுதியானவராய் இருக்கும் பட்சத்தில் அரசோ தனியார் நிறுவனமோ தத்துஎடுத்து பயிற்சிக்கு வழி செய்யப்படும்..
எத்தனை அழைப்புகள் வந்தாலும் மானிட்டர் செய்யப்படும்..
இப்படி செய்தால் ஏதாவது ஒரு கிராமத்தில் ஒரு வேளை கஞ்சியை வயிறின் ஓரத்திலும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியை வயிறு முழுவதும் தீயாய் கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் பயணம் ஒலிம்பிக் வரை சென்றாலே வெற்றிதான்..(என்னோடு கிரிக்கெட் ஆடிய குமார் என்பவன் அடிக்கும் சிக்ஸர்கள் அபரிதமான உயரத்தை தாண்டி செல்லும்.. இப்பொழுது ஊருக்கு போனால்.".மாப்ள நம்ம கடையில இட்லி நல்லா இருக்கும் சாப்டுறியா?" என்கிறான்)
இப்படி ஏதாவது ஒரு திட்டம்.. மேலே சொன்ன பதிவர்கள் தவிர...இந்த பதிவை வாசிக்கும் எவரும்..
ஏனென்றால் "ஏதாவது செய்யனும் பாஸ்"...
உங்கள் எழுத்தின் மீது நம்பிக்கை வைத்து..
நர்சிம்...
Labels: ஏதாவது செய்யணும் பாஸ்
பிரவாகத் தமிழும்.. திராவிட கழகங்களும்.. இன்று???
"பேஷா" பண்ணிடலாம், "ஷரத்து" வாபஸ், மெட்ராஸ் மாகணம்...என்று இருந்த ஆட்சிமொழியையும் மக்களையும்.. தங்கள் பிராவகத் தமிழால்,துள்ளல் மொழியால்,இலக்கியத்தால்,எதுகை மோனையால் தன்பால் வசீகரித்து திருப்பிக் கொண்டது அன்றைய பேச்சாற்றல்.ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தது அவர்களின் தமிழ். அந்தத் துள்ளல் தமிழில் அவர்களின் கொள்கை முழக்கங்கள் மக்களை எளிதாக சென்றடைந்தது. தந்தை பெரியார் விதைத்த விதை வேர்விட்டு பெருமரமாகி உருமாறியிருக்கிறது..
அறிஞர் அண்ணா : "மாதமோ சித்திரை,
மணியோ பத்தரை,உங்கள்
விழிகளைத்தழுவுவதோ நித்திரை..
மறக்காமல் இடுங்கள்
எங்களுக்கு முத்திரை.."
இந்த எதுகை மோனை அந்த பொதுக்கூட்ட தாமத்தையும் மறக்கடித்து மக்களையும் கிரங்கடித்தது... தமிழ் நாட்டின் பெர்னாட் ஷா என வர்ணிக்கப்பட்ட அண்ணாவின் தமிழ் பேச்சில் மயங்காதார் யாரும் இல்லை..
கலைஞர் கருணாநிதி : எம்ஜியார் முதலைமைச்சராக இருந்த பொழுது சட்டசபை விவாதத்தில் கூச்சல் எழுந்தவுடன் "உங்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்" என்று எம்ஜியார் சொன்ன மறு நிமிடம் எதிர்கட்சி தலைவராய் இருந்த கலைஞர் எழுந்து.."இதற்கு முன் தமிழ் நாட்டை "ஆண்டவன்" என்று என்னை சொல்வாதல்.. நான் இருக்கிறேன் காப்பாற்ற" என்று கூறியதை கேட்டு மொத்த சபையும் ரசித்தது..
இப்படி சிலேடை பேச்சானாலும் சரி,இலக்கியமானாலும் சரி தமிழ் தங்குதடையில்லாமல் தங்கிய இடம் கலைஞரின் நாக்கு.. இன்றுவரை மேடைப்பேச்சில் கோலேட்சும் இவரின் அன்றைய தமிழ் மேடைப் பேச்சு இளைஞர்களின் மூச்சாகவே இருந்தது..இவரின் பேச்சால் திமுக விலும் இவரின் தமிழ் வசனம் கேட்டு திரைத்துறைக்கும் வந்தவர்கள் ஏராளம்.
காளிமுத்து : "மயிலுக்கு தோகை கனக்கிறது என்று குயிலுக்கு என்ன கவலை?" என்று இவர் தமிழ் பேச ஆரம்பித்தால் அக்கம் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் இருந்ததெல்லாம் கூட்டம் சேர்ந்துவிடும்..
உலகத்தமிழ் மாநாட்டில் இவர் மூச்சுவிடாமல் பேசிய பேச்சைக் கேட்டு மூர்ச்சையாய்போய் நின்றது மாநாடு. இந்தியாவில் பேசப்படும் மொழிகளை இவர் பட்டியல் இட்டதை பார்த்து நெடுநேரம் தட்டிக்கொண்டிருந்தது முதல்வர் எம்ஜிஆரின் கரங்கள்.. "கருவாடு மீனாகாது,கறந்த பால் மடி புகாது" இன்றும் வழக்கில் உள்ள இவரது வார்த்தைகள்.
நாவலர் : எதைப்பற்றி பேசினாலும் அதன் முழு விபரத்தையும் கொடுக்கும் பாங்கு நாவலரின் தமிழ். நிதானமாக ஆனால் அழுத்தமாக இவர் பதிந்த பேச்சுக்கள் இவரை " நாவலர்" ஆக்கியது.
வைகோ : "ஏதென்ஸ் வீதியிலே... என்று ஆரம்பித்து.. பின் கர்ணனின் நட்பைத்தொட்டு,கலைஞரின் தலைமை பற்றி..என்று இவரின் தமிழ், தமிழ் நாட்டையே வசப்படுத்தி இருந்தது ஒரு காலம்.
இவரின் ஆவேசப் பேச்சினால் உணர்ச்சிவயப்படாதவர் மிகக் குறைவு என்றே சொல்லலாம்.. ஆழ்ந்த இலக்கிய அறிவும்,வரலாற்று செய்திகளையும் இணைத்து இவர் முழங்கினால் மணிக்கணக்கில் கூட்டம் அசையாமல் கேட்டுக் கொண்டிருக்கும்.
மேலும் அன்றைய வட்ட,மாவட்ட, நகர பதவிகளில் இருந்தவர்களின் மேடைப்பேச்சும் கட்டிப் போட்டது..ஏனெனில் அவர்கள் தங்களின் தலைவர்களை பின்பற்றி பேசியதால்...
ஆனால் இன்று...
மாணவரணியையோ..இளைஞரணியையோ தங்களின் தமிழால் கட்டிப்போட இன்று அடுத்த கட்ட தலைவர்கள் யாரும் இல்லை என்பதே உண்மை...
ஸ்டாலின் : ஓரளவு பேசினாலும் பெரிய ஈர்ப்பு இல்லை.. வரலாற்று குறிப்புகளில் தவறுகள் தென்படும்
கனிமொழி : இவரின் எழுத்தில் இருக்கும் ஆழம் பேச்சில் இல்லை..
தயாநிதி: இவர் தமிழ் பேசினால் அஜித் ஐஸ் விற்பது போல் இருக்கிறது..
விஜயகாந்த் : தமிள் அல்லது தமில் பேசுகிறார்.
T.ராஜேந்தர் : இவர் தமிழ்.. விடுங்க..உங்களுக்குத்தான் தெரியுமே..
இப்படி தமிழ் பேச்சு ஆறாகத் தொடங்கி இன்று வாய்க்கால் அளவு கூட இல்லை..
ஏன்?
இன்றும் திருச்சி சிவா,கம்பம் செல்வேந்திரன் போன்ற நல்ல பேச்சாளர்கள் கழகத்தில் இருக்கிறார்கள்.. தமிழச்சி தங்கபாண்டியனின் தமிழும் அவையைக் கட்டிப்போடும் திறன் கொண்டதே... ஆனால் கயல் விழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இவர்களுக்கு கிடைப்பதில்லை..
தலைவர்களும் அடுத்த கட்ட தலைமுறையில் இலக்கிய பிராவக மேடைப்பேச்சிற்கு முக்கியதுவம் கொடுத்து வாய்ப்பளிக்கவில்லை..
நல்ல தமிழையும் இலக்கியத்தமிழையும்,எதுகைமோனையை கேட்பதற்கும் ரசிப்பதற்கும் மக்கள் காத்திருக்கிறார்கள்.. ஏனெனில்
"கல் தோன்றி மண்தோன்றா காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த மொழி"
எம் தமிழ் மொழி...
Labels: தமிழ்
சாரு நிவேதிதா...நீங்கள் எழுதுவதை நிறுத்தி விடுங்களேன்..ப்ளீஸ்."...
சாரு ஆன் லைனில் வந்த எனது கடிதம்.. நன்றி சாரு..
www.charuonline.com
டியர் சாரு,
"நீங்கள் எழுதுவதை நிறுத்தி விடுங்களேன்..ப்ளீஸ்."...
எட்டாக் கனியாக இருந்த ராஸ லீலா கையில் கிடைத்தவுடன்..ஆசை தீர முதலில் புத்தக வாசனையை முகர்ந்து பார்த்தேன்.. ஒரு 20 தடவை போன் செஞ்சிரிப்பீங்களா சார் என்று உயிர்மை பதிப்பக பணிப்பெண் கேட்டதை சட்டை செய்யாமல் காரை அந்த முட்டுச்சந்தில் இருந்து மெயின் ரோட்டிற்கு ஓட்டிவரும் வரை அடக்கி கொண்டு, ரோடு வந்தவுடன் புத்தகத்தை மடியில் பிரித்து வைத்து ஓட்டிக் கொண்டே படிக்கத் துவங்கிவிட்டேன்...
வீட்டில் படித்துக் கொண்டே சாப்பிடும் பழக்கம் இருப்பதால் பிரச்சனை ஏதும் இல்லாமல் புத்தகப் பயணம் தொடர்ந்தது.. பிறகு "பார்யாளின்" கேள்விகளும் தொலைக்காட்சி "கோ(ஓ)லங்கலும்" இடைஞ்சலாக இருந்ததால் எப்பொழுதும் போல் பாத்ரூமில் தஞ்சமடைந்தேன்.
"ராஸ லீலா எக்ஸ்பிரஸ்..சென்னை புரசைவாக்கத்தில் இருந்து தடதடக்க ஆரம்பித்து..டில்லி ஜி பி ரோடு , வேலூர் ப்ருந்தாவன் வித்தவுட்.. சென்னை என்று தடதடதட என்று வேகம் வேகம் வேகத்தில் நெஞ்சாங்கூடு அதிரத்துவங்கியது..
அரசு ஊழியர்களின் அன்றாடம், ப்ருந்தா,சுஷ்மா,காயத்ரி,வித்தவுட் ராஜகோபால் என சட்சட் என்று மாறும் பிம்பங்கள்...வித்தவுட்டிலே சென்றாலும் அலுமினிய முக்காலியில் செல்லும் ஜன்மம்..போஸ்ட்டாபிஸ் புண்யாத்மாக்கள்..அங்கு..அங்கு மட்டிமே கிடைக்கும் கோந்து..என...
"தட் தட் தட்.. பாத்ரூம் கதவு அதிரத் தொடங்கியவுடன்.."சே"..நிம்மதியா வெளிக்கி கூட இருக்க விடமாட்டிங்களா என கத்திக் கொண்டே கதவைத்திறந்தால்..வெளியே வீட்டில் உள்ள எல்லோரும் என்னமோ ஏதோ என பயந்துபோய் நின்று கொண்டிருந்தார்கள்.. , பின்னே...மணி இரவு 2..(கோலங்கள் 9 மணிக்கு..11 மணிவரை நாடங்கள்..யாரும் கவலைப்படவில்லை)..பின் எங்கேயோ போயிருப்பேன் என்று நினைத்து..நடு இரவு ஆனவுடன் மொபைலில் அழைத்தால்..பாத்ரூமில் இருந்து சவுண்டு.. இதில் 4 மிஸ்டுகால்கள் வேறு..எதையும் கவனிக்க வில்லை..அல்லது கவனிக்க விடவில்லை ராஸலீலா..
விழுந்த திட்டை எல்லாம் ஒரு படத்தில் கவுண்டமனி ஃபெயில் ஆனதற்கு எல்லோரும் திட்டும் பொழுது வாயே திறக்காமல் உட்காந்திருப்பாரே...அதே போல் வாங்கிக் கொண்டேன்...
அதனால் எழுதுவதை நிறுத்துங்களேன்.. ஏனெனில் நிறுத்தாமல் படிக்கத் தோன்றுவதால்..வீட்டில் அடி விழுகிறது..
அன்புடன்
நர்சிம்
சின்மயா நகர்.
Labels: கடிதம்
ஜூனியர் விகடனில் பரிசலாரின் படைப்பு..
இன்று வந்த ஜூவி பக்கம் 39 ல் நமது பரிசல்காரனின்(ரின்) உணர்ச்சிக்குவியலானபடைப்பு வெளியாகி உள்ளது..(உமாவுக்கு..)
ஆக.. தரமான படைப்புகள் தானாகவே அதன் அங்கீகாரத்தை பெற்று விடும் என்பதற்கு மற்றுமோர் சான்று..
எழுத்தை தவமாய் மேற்கொண்டு எழுதுபவர்களின் வரங்கள் தானே இந்த அங்கீகாரங்கள்...
வலைப்பதிவுகளில் எழுதுபவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால்..மொத்த தமிழினமும் திரும்பிப்பார்கும் படியான படைப்புகள் இன்னும் குவிந்து கிடக்கிறது..அதில் ஒன்றே இஃது..
பரிசலாரின் பயணம் கப்பல் போல் கடல் கடந்து பயணிக்கட்டும்..எழுத்துக்கேது எல்லை?
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்("க்ளிஷே" லாம் இல்லை.. நெஜமாகவே சின்னப் பையன் தான்..)
நர்சிம்
Labels: ஜூனியர் விகடனில்
காமத்தின் நெருப்பில்...
"அரவமற்ற பெருவெளியில்
காமத்தின் நெருப்பில்
சர்ப்பத்தின் கடியில்
சாவின் பிடியில்
பிரஞ்ஞையற்று
பின் சூழும்
ஞானத்தில்
தக்கை ஙயம..."
என்று எழுதிக்கொண்டிருந்த
இலக்கிய வேந்தனின்
காலை தெரியாமல்
இடரியவுடன்..
"ங்கோத்....தே..மவனே..
பார்த்துப் போடா"..என்றார்...
Labels: கவிதை(??)
"சுப்ரமணியபுரம்" திரு சசிக்குமாருடன் சந்திப்பு...
நான் வசிப்பதும் அங்குதான் என்பதால் 11 மணிக்கு சென்று வரவேற்பறையில் அமர்ந்து உதவி இயக்குநர் உதய குமாரிடம் பேசிக் கொண்டே சுவரில் மாட்டியிருந்த சுப்ரமணியபுரம் லேமினேட் போஸ்டர்களை பார்த்துக் கொண்டிருந்தேன்..உள்ளே யாருடனே பேசிக்கொண்டிருப்பதாக உதயகுமார் தெரிவித்தார்.
குறும்பட விழாவிற்கான அழைப்பிதல் மேஜைமேல் இருந்தது..சற்று நேரத்தில் உள்ளே வரச்சொல்லி அழைப்பு வந்தது..
மிக எளிமையான..ஆனால் சுத்தமும் நேர்த்தியுமான அலுவலகம்..நம்மை முழுவதும் உள்வாங்கிக்கொள்ளும் உயர்தர இருக்கைகள்.. நடுவில் தமிழ் நாட்டையே தன்பால் திரும்பிப் பார்க்க வைத்த சசிக்குமார்..துளி கூட கர்வமோ..சாதித்துவிட்டோம் என்ற எண்ணமோ இல்லாமல் நன்றாக பேசினார். படக்காட்சிகளைப் பற்றியும் பழைய படங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம்..தவறு..அவர் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தேன்..வலைப்பதிவுகளில் வந்த விமர்சனங்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அவருக்கு தொடர்ந்து அலைபேசியில் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தால்..நன்றி சொல்லி திரும்பினேன்..
அவர் சார்ந்த துறைக்கு சம்பந்தமே இல்லாத, மிகச்சாதாரணமான என்னிடம் கூட அவர் காட்டிய அந்த எளிமையும் எதார்த்தமும் தானோ "சுப்ரமணியபுரம்" எதார்த்த காட்சிகளின் ரகசியம்??
Labels: சுப்ரமணியபுரம்
முன்னாள் காதலிக்கு...
முன்னாள் காதலிக்கு இன்னாளும் அவளைக்காதலிக்கும் ஒருவனின் புலம்பல்கள்...
என் தோல்விகளைச்
சொல்லி அழும் போதெல்லாம்-சாய
தோள் கொடுப்பாயே..இன்று
உன்னையே தோற்றுவிட்டேனே..
என்ன தருவாய் நீ எனக்கு?
நீ
தின்று கொடுத்த
ஐஸ் குச்சிகள்
இன்றும் உள்ளன..ஆனால்
தீக்குச்சிகளாய்..!
இருவரும் நடைபயின்ற
இதே கடற்கரை மணல்..
இன்று
பாலைவனமாய்...!
உன்னோடு தினம்
பயணித்த ரயில்கள்
அதே தடத்தில்-நீமட்டும்
தடம் மாறிவிட்டாய்!
பரவாயில்லை..
பழங்களுடன்
சத்தாண உணவாய்ச் சாப்பிடு..
சுகப்பிரசவத்திற்கு
வாழ்த்துக்கள்...
முடிந்தால்...
இன்னுமோர் புலம்பல்
இல்லாமல் போக..
ஆண் குழந்தை
பெற்றிடு!!
Labels: கவிதை(??)
நீங்களே சொல்லுங்கள்.. இது சிறுகதை இல்லையா சார்???
இந்த சிறுகதையும் பிரசுரம் ஆகவில்லை என்றால் இனி எழுதுவதையே நிறுத்திவடுவது என்ற எண்ணத்தோடு எழுத ஆரம்பித்தேன்...
எதை கருவாக கொண்டு எழுதுவது??
8-ஆம் வகுப்பு "பி"பிரிவில் படிக்கும் போது "சி" பிரிவு அமுதாவை காதலித்ததை(?) பற்றியா?,10ம் வகுப்பு தேர்வு விடுமுறையில் தட்டச்சு பயிலும் போது a s d f க்கு பதில் L o v e பயின்றதையா?
கிரிக்கெட் விளையாட வீட்டில் இருந்து கைலியுடன் (பேன்ட்டை மடித்து புத்தகத்தோடு வைத்துக்கொண்டு) போனதைப் பற்றியா?
திரும்பிப் பார்க்கும் பெண்கள் எல்லாம் நம்மை காதலிப்பதாகவும்,சிரித்துவிட்டால் கல்யாணத்திற்கே ரெடியாவது போல் திறி(ரி)ந்த கல்லூரி வாழ்க்கையை எழுதுவதா?
காதலுக்காக உதவிய நண்பர்கள் பற்றி எழுதுவதா? அல்லது அந்த நண்பர்களுக்காக காதலையே தூக்கி எறிந்த நாட்களைப் பற்றி எழுதுவதா?
கட்டிய புடவையுடன் நம்பி வந்தவளை கார்,பங்களா என வசதியான வாழ்க்கையில் திக்குமுக்காட வைத்ததையா?
பிறந்த குழந்தை மலர்ந்து சிரித்ததை தொலைபேசியில் பகிர்வதற்குள் இடியென அந்த மொட்டின் மரணச் செய்தி சுமந்த நிமிடம் பற்றி எழுதுவதா? அதைவிட கொடுமை, மனைவிக்குத் தெரியாமல் அதை மண்ணோடிட்ட தருணத்தை எழுதுவதா?
உலகே இவன்தான் என்றாகிப்போன இப்பொழுது பிறந்த குழந்தைப் பற்றி எழுதுவதா?
இப்படி எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தம்பியிடம் இருந்து அலைபேசியில் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என தகவல் வந்தது.
நான் செய்த தவறுகளெல்லாம் பொறுத்து,அறிவுரைகளையும் அனுபவத்தையும் ஊட்டும் அப்பாவைப் பற்றி எழுதலாம் என முடிவெடுத்து... எழுதினால் ஒரு 600 பக்கம் வந்துவிட்டது..
நீங்களே சொல்லுங்கள்...600 பக்கம் இருந்தால் அது சிறுகதை இல்லையாசார்??
Labels: புனைவு
இந்திய இரவுகள்...
இன்று உள்ள கல்வித்தரமும் கலாச்சார மாற்றமும் இளைய தலைமுறையை அடுத்த தளத்திற்கு இட்டுச் செல்கிறது. இன்னும் "அந்த காலத்தில் நாங்கள்ளாம்" என்ற பல்லவியை விடுத்து இத்தலைமுறை மேம்பட தலைப்பட வேண்டும்.இரண்டு தவறுகளை மூத்த தலைமுறை செய்கிறது.
1. வழி நடத்த தவறுகிறது.
2. தவறான வழியில் நடத்துகிறது.
முதல் தவறு செய்பவர்கள் வருத்தப்பட வேண்டும். இரண்டாவதோ திருத்தப்பட வேண்டும்.
இன்றைய இளைஞர்களின் அறிவு முதிர்ச்சியும் அணுகுமுறையும் அதனால் ஈட்டும் பொருளாதார நிலையும் நிச்சயமாக சென்ற தலைமுறையுடன் ஒப்பிட முடியாத அளவு உள்ளது. புள்ளியல் விவரப்படி இன்றய வீட்டுக்கடன் வாங்குவோர் சராசரி வயது 23-32. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இது 45-56 ஆக இருந்தது.இவர்களுக்குத் தேவை நல்ல வழிகாட்டுதலே. இன்று இவர்களில் எத்தனை பேர் சமூகம் பற்றியும் அரசியல் பற்றியும் கவலைப் படுகிறார்கள்? இரு தலைமுறைகளுக்கு முன்பிருந்தவர்கள் தான் இன்றும் அரசியலில் இளைஞர் அணியில் இருக்கிறார்கள்.
அறிவும் திறமையும் வெறியும் நிரம்பிய இளைஞர் கூட்டம் ஜெமினி பாலத்தின் கீழ் விசாவிற்கு நிற்கிறது.அல்லது இந்திய இரவுகளை அமெரிக்கப் பகல்கலுடன் கணிப்பொறி கைகுலுக்குகிறது.
"அக்கினி குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்.
வெந்து தணிந்தது காடு.தழல் வீரத்தில்
குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?..
தத்தரிகிட தத்தரிகிட தித்தித்தோம்"
என்றான் பாரதி. ஆனால் இன்றய அக்கினிக் குஞ்சுகளெள்லாம் பொந்துகளுக்குள் வெதுவெதுப்பான சுக வாழ்ககையை வாழ்ந்து கொண்டிருக்கிறது.இவர்களுக்குத் தேவை தன் நலமற்ற வழிகாட்டுதல்.
சீனாவின் பலம் தொழில் வளர்ச்சி என்றால் அதன் பலவீனம் அதன் மக்கள் தொகையின் சராசரி வயது.(40-45). இந்தியாவின் மிகப்பெரிய பலமே அதன் சராசரி வயது(25-30). இதை வைத்து என்ன என்னவே சாதிக்கலாம்.ஊடகங்களும் ஏடகங்களும்முனைப்பட வேண்டும்.வழிநடத்த முனைவோர்களின் எழுத்துக்களும் கருத்துக்களும் சென்றடய வழி செய்ய வேண்டும். இல்லை என்றால் 2020ம் ஆண்டில் நாம் 2040ல் இந்தியா வல்லரசாகும் என்று சொல்லிக் கொண்டிருப்போம்! சொல்லிக்கொண்டே இருப்போம்..
Labels: பத்தி
.jpg)