புத்தாண்டு வாழ்த்துகள்..(க் இல்லையாம்ப்பா)
இன்னும் ஒரு வருஷம் கடந்து விட்டது என்பதை விட நொண்டி நொண்டி தாண்டிவிட்டோம் என்றே தோன்றுகிறது.. பொருளாதார நெருக்கடி உலகத்தை ஆண்டியாக்கியது இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வு.. மேலே பறந்து பறந்து பிஸினஸ் டெவலப் செய்கிறேன் என்ற பீட்ஸா, கோக் கோஷ்டிகளை சுவரில் சாய்த்து தங்கள் முழங்காலை அவர்களின் நெஞ்சில் வைத்து செலவைக் குறைக்கச் சொல்லிவிட்டது - வெள்ளைக்கார "வள்"
முடியும் என்று நமது உதயமூர்த்தி சொன்னதை உட்டாலக்கடி செய்து ஒபாமா உலகின் கவனத்தை கவர்ந்த வைபவமும் இந்த ஆண்டில் நடந்தேறியது. எங்கு திரும்பினாலும் அவர்தான். சரவணபவன் சர்வர் அடையை வைத்துவிட்டு "ஒபாமா வந்துட்டாரே இனி எல்லாம் சரியாகிவிடுமா சார்" என்று கேட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. புஷ்க்கு இவர் தேவலாம்தான்..கடவுள் சிரிக்கிறார் கதைதான் நினைவிற்கு வருகிறது.. கதை தெரியாதவர்கள் ஒரு போஸ்ட் கார்டில் உங்கள் விலாசம் எழுதி உங்களுக்கே போஸ்ட் செய்து தெரிந்து கொள்ளுங்கள்..
சில தமிழ்படங்கள் ஆச்சர்யத்தையும் பல படங்கள் ஆயாசத்தையும் வழக்கம் போல் ஏற்படுத்தின.குறிப்பிட்டு சொல்லும்படியான படங்களில் என்னைக் கவர்ந்தது அஞ்சாதேயும் சு புரமும். வாரணம் ஆயிரம் விளக்கெண்ணெய் வளவள.
அதே அரசியல்.. ஷீலா தீட்சித் ஆச்சர்யம்.
மிகவும் பாதித்தது என்று யோசித்துப் பார்க்கையில் என்று எழுதக்கூட வேலை வைக்காமல் தோசை சுட்டது போல் தீவிரவாதிகள் சுட்ட சம்பவம்.. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் தோசை.. இந்த சம்பவத்திற்கு பிறகு சென்னை முடுக்குச் சந்து ஏழாவது மாடி பால்கனியில் நிற்கக் கூட பயமாக இருப்பதால் பம்மிப் போய் ஹாலில் அமந்து விடுகிறேன்.. நல்ல திடமான ஒரு பெண் டி வில் "ஹாய் மச்சான்ஸ்" என்று கூறுவதைப் பார்த்து பயந்து போன எனக்கு குடிக்க நீர் கொடுத்த நிஜ சுஜாதாவின் கைங்கர்யத்தால் அந்த மாதுவின் பெயர் தெரிந்து கொண்டேன்.. நமிதாவாம்.. நல்ல வளம்..குரலில்.
அந்த சட்டக்கல்லூரி மாணவர்களைப் பற்றி மேல்தகவல்கள் ஏதும் கிடைக்காததால், எதிர்காலத்தில் நல்ல உடற்கட்டுடன், நல்லபடி அவர்கள் சட்டத்தைக் காத்துவிடுவார்கள் என்று ரங்கனைப் ப்ராத்திக்கிறேன்.
இந்த வருட சுஜாதா அவார்ட்ஸ்..
எல்லா வருடத்தையும் நம்பிக்கையாய் ஏற்றுக்கொள்ளும் மிஸ்டர் பொதுஜனத்திற்கு..
தயவு செய்து நான் கேட்காமல் எனக்கு டைரி அனுப்பாதீர்கள் என்று இந்த வருடமும் ஆயிரத்து ஐம்பதாவது தடவை சொல்லியும் தவறாமல் அனுப்பிய அனைவருக்கும் நிறைய கவிதைகள் எழுதும் பிள்ளைகள் பிறக்க வேண்டுகிறேன்.
MISS YOU SUJATHA..
..
55 comments:
present sir
//சில தமிழ்படங்கள் ஆச்சர்யத்தையும் பல படங்கள் ஆயாசத்தையும் வழக்கம் போல் ஏற்படுத்தின.//
:)
அத்தனை டைரியை வச்சு நீங்க கஸ்ட படாதீங்கோ....
என்னோட முகவரி தாரேன் அனுப்பிச்சிருங்கோ...
இது தான் உலகம்....
வேண்டாம் வேண்டாம் என்று சொல்ற ஆளுக்கு நெறைய கொடுக்கும்....
வேணும் என்றோ சொல்ற ஆளுக்கு போஸ்டர்லே, படமா கூட கிடைக்காது.
நான் சத்தியமா டைரியை பற்றி சொல்ல வில்லை.... நமிதாவை பற்றி தான் சொன்னேன்
yes.really miss him
உங்க பேர்ல இருக்குற sim prepaid simஆ இல்ல postpaid simஆ?
dont get offended just joking
ஒரு 60 சதம் அவர் எழுதியது மாதிரி இருக்கோ?
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கலக்கல் நர்சிம்...
அப்படியே சுஜாதா நடை... கிண்டல்.... கற்றதும் பெற்றதும் சைன்ஆஃப் மெசேஜ்.. சூப்பர்...
Nalla Irundhathu Unga Pathivu !!
:) :)
அவரோட writing style உங்களுக்கும் நல்லாவே வருது.
சுஜாதா சார்,
எனக்கே நான் இமெயிலிக்கொண்டால், கடவுள் சிரித்த கதை தெரியவருமா?
//தயவு செய்து நான் கேட்காமல் எனக்கு டைரி அனுப்பாதீர்கள் என்று இந்த வருடமும் ஆயிரத்து ஐம்பதாவது தடவை சொல்லியும் தவறாமல் அனுப்பிய அனைவருக்கும் நிறைய கவிதைகள் எழுதும் பிள்ளைகள் பிறக்க வேண்டுகிறேன்.
எக்ஸலன்ட். (நர்சிம்மை கவனிக்கச் சொல்லுங்கள்: எக்ஸலன்ட்டுக்டு அப்புறம் இருப்பது ! அல்ல முற்றுப்புள்ளி.)
நாங்கள் எல்லாம் உங்களை மிஸ் பண்ணுகிறோம். நீங்கள் நிஜ சுஜாதாவை மிஸ் பண்ணுகிறீர்கள் போலும். : -(
அதான் அடுத்த சுஜாதா வந்தாச்சே.
வழக்கம் போல நல்ல பதிவு. வாழ்த்துகள்
இப்படித்தான் எழுதியிருப்பார் நர்சிம். அப்படியே வாத்தியார் ஸ்டைல்.
"வெள்ளைக்கார "வள்" ",
"கதை தெரியாதவர்கள் ஒரு போஸ்ட் கார்டில் உங்கள் விலாசம் எழுதி உங்களுக்கே போஸ்ட் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.."
"நல்ல வளம்..குரலில்."
"நிறைய கவிதைகள் எழுதும் பிள்ளைகள் பிறக்க வேண்டுகிறேன்."
இங்கெல்லாம் சுஜாதா தெரிகிறார். கவிஞர்கள் என்றால் அவ்வளவு இளப்பம். ஹ்ம்ம் இருக்கட்டும்.
நல்லா இருக்கு நர்சிம்.
அனுஜன்யா
வாழ்த்துகள் இரண்டாம் சுஜாதா அவர்களே !!
(Not satiristic)
உண்மையிலேயே அவர் எழுதியிருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது
சரவண பவன்
ரங்கன்
டைரி அனுப்புதல்
என அதே அடி
அதிரடி என்றால்
\\ஒரு போஸ்ட் கார்டில் உங்கள் விலாசம் எழுதி உங்களுக்கே போஸ்ட் செய்து தெரிந்து கொள்ளுங்கள்..
\\
:-))))))))))))))
நல்ல அவதானிப்பு நர்சிம்.
//நிறைய கவிதைகள் எழுதும் பிள்ளைகள் பிறக்க வேண்டுகிறேன்.//
:))
சுஜாதா -இல்லாத குறை தீர்த்தமைக்கு மிக்க நன்றி...
இந்த இரண்டு வாரங்களாக விகடன் படிக்கும் போதெல்லாம் இந்த வருடம் விருது வழங்க சுஜாதா இல்லையே என்ற ஏக்கத்துடன் கவலையுடனேதான் படித்தேன்.
ஆனா உங்கள் பதிவை படித்தவுடன் திரும்ப சுஜாதா வந்து விட்டார் என்றே தோன்றியது.
//தயவு செய்து நான் கேட்காமல் எனக்கு டைரி அனுப்பாதீர்கள் என்று இந்த வருடமும் ஆயிரத்து ஐம்பதாவது தடவை சொல்லியும் தவறாமல் அனுப்பிய அனைவருக்கும் நிறைய கவிதைகள் எழுதும் பிள்ளைகள் பிறக்க வேண்டுகிறேன்//
அதுவும் இந்த வரிகள் அப்படியே சுஜாதா சார்தான்.
நன்றிகள் நர்சிம்
I really miss Sujatha's writing. As a blessing your writing skills very well imitate his. Sorry for not writing my comments in tamil.
அப்படியே சுஜாதா தான்
//நல்ல திடமான ஒரு பெண் டி வில் "ஹாய் மச்சான்ஸ்" என்று கூறுவதைப் பார்த்து //
நெஜமா பயந்தீங்களா பாஸ்...
அப்படியே அவரின் நடைதான்.. பாராட்டுகள், ஆனால் இது அவரின் நடை.!
நன்றாக இருக்கிறது. புத்தாண்டு வாழ்த்துகள்
//அனுஜன்யா said...
இப்படித்தான் எழுதியிருப்பார் நர்சிம். அப்படியே வாத்தியார் ஸ்டைல்.
"வெள்ளைக்கார "வள்" ",
"கதை தெரியாதவர்கள் ஒரு போஸ்ட் கார்டில் உங்கள் விலாசம் எழுதி உங்களுக்கே போஸ்ட் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.."
"நல்ல வளம்..குரலில்."
"நிறைய கவிதைகள் எழுதும் பிள்ளைகள் பிறக்க வேண்டுகிறேன்."
இங்கெல்லாம் சுஜாதா தெரிகிறார்.
//
Even I feel the same :(
MISS YOU SUJATHA..
m Too
But i think your writing fulfilling that.........
nice, keep writing in (t)his style...
படிக்கும் போது சத்தம் போட்டு சிரித்ததால் என் மனைவி என்ன சுஜாதாவின் பழைய கட்டுரையை திரும்ப படிக்கிறிங்களா என்று கேட்டாங்க. நல்ல கற்பனை வளம்.
ரேகா ராகவன்
படிக்கும் போது சத்தம் போட்டு சிரித்ததால் என் மனைவி என்ன சுஜாதாவின் பழைய கட்டுரையை திரும்ப படிக்கிறிங்களா என்று கேட்டாங்க. நல்ல கற்பனை வளம்.
ரேகா ராகவன்
Super! இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
2008 முதல் பத்து தமிழ் சினிமா - தொடர்
நல்ல வந்து இருக்கு நரசிம்.பல இடங்கள் சுஜாதாவை நியாபகபடுத்தின..:-))
//
அப்படியே அவரின் நடைதான்.. பாராட்டுகள்
//
ரிப்ப்பிட்டு
முதலில் சுஜாதா எழுதியதை நீங்கள் சில இடங்களில் மாற்றி போட்டு எழுதியிருப்பீர்கள் என கற்பனை செய்து கொண்டு படித்தேன்,
முடித்தவுடன் கற்பனை சந்தேகமாகி விட்டது
:)
Superb Article...by Sujatha(Narsim)....The style of Writing, almost matches in all aspects of Sujatha's(Namma Vaathiyar) style. I understand, how much amount of intensified reading and memory power, one should have....to write in the same style...Great....I am not exaggerating...Hope, every body...sent their comments...also felt in the same way...Fine article...with fine tuning...Keep writing sir...
சூப்பர்.. தல.. நம்ம தல எழுத சொல்லி ஏற்கனவே கொடுத்து விட்டிச்சோ..?
க்ரேட் யா!
தலைப்பால் தப்பித்துக் கொண்டீர்கள். இல்லையென்றால் சுஜாதாவைக் காப்பி அடித்தீர்கள் என்ற பழி நேர்ந்திருக்கும்!
நான் பிப்ரவரி 26ஐ இப்பொழுதே ரிசர்வ் செய்துவைக்கிறேன்!
//This blog does not allow anonymous comments.//
ஓக்கே!!
//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//
சொல்லவேல்ல!! ஏன் பாஸூ!?!!
சுஜாதாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.அந்த ஜீனியஸ்ஸின் சாயல்
கொஞசமேனும் உங்கள் பதிவில் இருதது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.வாழ்த்துகள்....
நல்ல எகலைவ முயற்சி நர்சிம். வெற்றியடைந்திருகிறீர்கள். வாழ்த்துக்கள்.
வருகையும் கருத்தும் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி.. மகிழ்ச்சி..
பரிசலாரே.. இந்த பதிவிற்கு மட்டும் தான் கமெண்ட் மாடரெஷன்.. சுஜாதா என்ற பெயருக்கு வரும் கண்டனங்கள் இங்கே வரவேண்டாம் என்பதால்தான்..
மீண்டும் அனைவருக்கும் மிக்க நன்றி..
//சுஜாதா என்ற பெயருக்கு வரும் கண்டனங்கள் இங்கே வரவேண்டாம் என்பதால்தான்.. //
இங்க மாத்திரம் இன்னாத்துக்கு எஸ்கேப் ஆகுறீங்கோ, பாராட்டு மட்டும் வேணும், திட்டு வேணாவா, நல்லாக்குதுபா டகுள்பாஜி,
அதெல்லாம் சரி, நல்லாதான் எழுதிக்குரீங்கோ,
இன்னும் நெறய எழுதிகினே இருங்கோ.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
We will all miss Sujatha terribly!
ada pongappaa, poi vera ezhuththaalargaloda kadhaigalai padinga-nu avar sirichittu melerundhu sollittiruppaar!
நாங்க மிஸ் பண்ணல நர்சிம் அதான் நீங்க அந்த குறைய நிவர்த்தி பண்ணிட்டீங்களே...:)
//அப்படியே சுஜாதா தான்//
--diitto--
தல உடம்பு சரியில்லையா?
தல உடம்பு கிடம்பு ஏதும் சரியில்லையா..?
:)))
Yes
We miss sujatha..(:
Nice writings. :)
JJ, Cbe
அருமையா எழுதி இருக்கீங்க.அங்கங்க அவரோட நடை ரொம்பவும் ஒத்து போகுது.
சுஜாதாவை ரொம்பவும் மிஸ் பண்ண போறோம்.
அருமையா எழுதி இருக்கீங்க.அங்கங்க அவரோட நடை ரொம்பவும் ஒத்து போகுது.
சுஜாதாவை ரொம்பவும் மிஸ் பண்ண போறோம்.
அப்படியே சுஜாதாவை வாசிப்பது போல் உள்ளது! நன்றி!
narsim, got your website from Charuonline....literally I cried for a minute after reading this for sujatha....Very nice one...after a long time I read My dear sujatha.... Keep trying....
ரங்கனைப் பிரார்த்திக்கிறேன்
என்கிற வார்த்தையில்
சுஜாதா நினைவுக்கு வருகிறார் ...
achu asal adhe madhiri i like it
believe it or not., the first death that which one is give lot of sadness ever in my life.
நண்பருக்கு ,பதிவுலகத்திற்கு புதியவன் நான் எந்த பதிவை படித்தாலும் அவர்கள் சுஜாதா என்ற லேபிளின் கீழே என்ன எழுதிஇருக்கிறார்கள் என பார்க்க தூண்டுகிறது
நல்ல ஒரு நினைவஞ்சலி தொடர்க ...
நண்பருக்கு ,பதிவுலகத்திற்கு புதியவன் நான் எந்த பதிவை படித்தாலும் அவர்கள் சுஜாதா என்ற லேபிளின் கீழே என்ன எழுதிஇருக்கிறார்கள் என பார்க்க தூண்டுகிறது
நல்ல ஒரு நினைவஞ்சலி தொடர்க ...
Post a Comment