சுப்ரமணியபுரம் சசிக்குமார்.. பருத்தித் தமிழ் வீரன் அமீர், எழுத்து வீரன் சாரு...

சசிக்குமார்.. ஒரே படத்தின் மூலம் தமிழ்நாட்டின் முக்கிய இயக்குனர் ஆகிவிட்ட இவரின் வெற்றிக்குப் பின் இருக்கும் உழைப்பை அறிந்தவர்கள் ஆச்சர்யப்படமாட்டார்கள்..

சமீபத்திய வருடங்களில் தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்த அல்லது புரட்டிப் போட்ட படங்கள் என்று குறிப்பிட்டுப் பார்த்தால்.. சேது, நந்தா, பிதாமகன், ராம், பருத்தி வீரன் இந்த படங்கள் அந்த லிஸ்ட்டில் இடம்பெறும்.. இந்த எல்லா படங்களிலும் துணை மற்றும் இணை இயக்குனராக பணியாற்றியவர்தான் சசிக்குமார்.. தன் இருப்பையும் பொறுப்பையும் மிகச்சுத்தமாகவும் சத்தமாகவும் சுப்ரமணியபுரம் படம் மூலம் முரசறைந்தவர் சசிக்குமார்..

அமீர் : ஈழப் பிரச்சனை குறித்த தம் குரலை ஆழமாக பதிந்தவர்..ராம் மூலம் கவனம் ஈர்த்தவர்.. என்பதை எல்லாம் தாண்டி.. மண்ணின் மனத்தையும் ரத்தத்தின் நிறத்தையும் அந்த பிசுபிசுப்போடு பருத்திவீரன் மூலம் உலகிற்கு உணர்த்தியவர்.. தமிழ் சினிமா அதிகம் எதிர்பார்க்கும் இயக்குனர்..

இவர்கள் இருவரும் பங்கேற்கும் நிகழ்ச்சி நாளை (7 1 09 புதன்கிழமை..) மாலை 6 மணியளவில் சென்னை புக் பாயிண்ட் அரங்கத்தில் நடைபெறுகிறது..

என்ன நிகழ்ச்சி??

எழுத்து வீரன்.. தமிழில் அதிகம் விமர்சிக்கப்படும் எழுத்தாளர் சாரு..ஏனெனின் அதிகம் வாசிக்கப்படுபவர் என்பதால்.. பிடித்தவர்கள் பிடித்ததற்காக வாசிக்கிறார்கள்.. பிடிக்காதவர்கள் விமர்சனத்திற்காக வாசிக்கிறார்கள்.. ஆக.. விமர்சனங்களும் விமர்சகைளும் பெற்றுக் கொண்டிருக்கும்.. தமிழ் எழுத்தில் தனக்கென ஒரு கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டுவரும்,கொண்டவருமான சாருநிவேதிதாவின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி..

இவர்கள் தவிர .. திரு மதன், திரு இந்திரா பார்த்தசாரதி,திரு பிரபஞ்சன்,திரு ந.முத்துச்சாமி திருமதி சிவகாமி, திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் ,திரு அழகிய பெரியவன், திரு சுதேசமித்திரன்..
என அவரவர் துறையின் ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு பதிவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது..

இடம் : புக் பாயிண்ட் அரங்கம்..(ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில்) சென்னை..
நாள் : 7 1 2009 புதன்கிழமை
நேரம் : மாலை 6 மணி

அதைத்தொடர்ந்து கலாச்சார (சரக்கு கலந்த) கலந்துரையாடல் வித் சாரு @ country club.. RA PURAM.
மேலும் விபரங்களுக்கு..

முரளி கண்ணன் : 9444884964

அனைவரும் வருக..

..

26 comments:

Cable Sankar January 6, 2009 10:16 AM  

சரக்கு கலந்த உரையாடல் இருப்பதால் நான் வேண்டாம், வேண்டாம் என்று சொன்னாலும் நீங்கள் விடமாட்டீர்கள் என்பதாலும், உங்கள் மனது புண்படக்கூடாது என்பதாலும், மேலும்பல காரணங்கள் இருப்பதாலும், கண்டிப்பாய் வருகிறேன் நர்சிம்..

வால்பையன் January 6, 2009 10:22 AM  

//தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்த அல்லது புரட்டிப் போட்ட படங்கள் என்று குறிப்பிட்டுப் பார்த்தால்.. சேது, நந்தா, பிதாமகன், ராம், பருத்தி வீரன் இந்த படங்கள் அந்த லிஸ்ட்டில் இடம்பெறும்.//

நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை படங்களும் எதாவது ஒரு வகையில் வன்முறையை கையாண்டது தான், இதற்காக நாம் வெட்க படவேண்டும்.

வால்பையன் January 6, 2009 10:23 AM  

//இந்த எல்லா படங்களிலும் துணை மற்றும் இணை இயக்குனராக பணியாற்றியவர்தான் சசிக்குமார்.//

அதனால் தான் அவர் படத்திலும், துரோகமும், ரத்தமும் நிரம்பி வழிகிறதோ

வால்பையன் January 6, 2009 10:33 AM  

அமிரின் படம் போல் உலகில் நிறைய படங்கள் வந்துவிட்டது, பருத்திவீரனில் வந்த மண்வாசனையை கண்டிப்பாக பாராட்டலாம், ஆனால் கதை தினை விதைத்தவன் தினை அறுப்பான் பாணி.
ஸ்டேன்லி குபிக்கின் clock work orange
பாருங்கள்

வால்பையன் January 6, 2009 10:35 AM  

//எழுத்து வீரன்//

:)
உண்மைதான் இவர் போடும் சண்டையை போல் வேறு யார் போட்டும் நான் பார்த்ததில்லை, சரியான பட்டம் தான்

Anonymous January 6, 2009 10:38 AM  

'தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்த அல்லது புரட்டிப் போட்ட படங்கள் என்று குறிப்பிட்டுப் பார்த்தால்.. சேது, நந்தா, பிதாமகன், ராம், பருத்தி வீரன் இந்த படங்கள் அந்த லிஸ்ட்டில் இடம்பெறும்'


சாரு போல் புளுகுகிறீர்கள்.

narsim January 6, 2009 11:02 AM  

வாங்க கேபிள்..

நன்றி வால்ப்பையன்..

நிறைய விசயங்கள் தெரிந்தவர் நீங்கள் என்பதால் உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன்..

நன்றி அனானி.. நான் சமீத்திய வருடங்களில் என்ற வார்த்தையை எழுதியிருந்தேன்.. அந்த வார்த்தைகளை விட்டுவிட்டீர்கள்.. சமீபத்திய நல்ல என்ற வார்த்தையையும் நான் சேர்க்கவில்லை.. திரும்பி பார்க்கவைத்த என்பதில் என்ன தவறு என புரியவில்லை.. சமீபத்திய திரும்பி பார்க்க வைத்த படங்கள் லிஸ்ட்டை கொடுங்கள்.. மீண்டும் என் வார்த்தைகளை பாருங்கள்.. இந்த படங்களும் அந்த லிஸ்ட்டில் இருக்கும் என்று தான் குறிப்பிட்டேனே தவிர.. இந்த படங்கள் மட்டுமே இருக்கும் என்று கூறவில்லை..

நன்றி

அனுஜன்யா January 6, 2009 11:05 AM  

நல்லா கலக்குங்க (!) நர்சிம். வால்பையனை என்ன செய்தீர்கள்? இவ்வளவு கோபமாக இருக்கிறார்! :)

அனுஜன்யா

வால்பையன் January 6, 2009 11:05 AM  

//நன்றி வால்ப்பையன்..

நிறைய விசயங்கள் தெரிந்தவர் நீங்கள் என்பதால் உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன்..//

முடியல அழுதுருவேன்

வால்பையன் January 6, 2009 11:12 AM  

//அனுஜன்யா said...

நல்லா கலக்குங்க (!) நர்சிம். வால்பையனை என்ன செய்தீர்கள்? இவ்வளவு கோபமாக இருக்கிறார்! :)//

நீங்க வேற எண்ணையை ஊத்திகிட்டு போறிங்களே!

வன்முறை அதிகம் இருந்த படங்களாஇ குறிப்பிட்டு இருந்ததால் சுட்டி காட்டியுள்ளேன்.

புருத்திவீரன் கடைசி பத்து நிமிட காட்சிகள் இல்லாமல் இருந்தால் சிறந்த காமெடி படமாக இருந்திருக்கும்

தாமிரா January 6, 2009 12:13 PM  

திரு மதன், திரு இந்திரா பார்த்தசாரதி,திரு பிரபஞ்சன்,திரு ந.முத்துச்சாமி திருமதி சிவகாமி, திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் ,திரு அழகிய பெரியவன், திரு சுதேசமித்திரன்..

Vs

பதிவர்கள்..

கொலைக்குத்து நடந்துதுன்னா, அதுக்கு நீங்கதான் பொறுப்பு.!

முரளிகண்ணன் January 6, 2009 12:35 PM  

வால்பையன் மற்றும் அனானி

இந்திய அளவில் சிறந்த இயக்குனராக கருதப்படுகிறவர்களே பாராட்டிய படங்கள் இவை. பாத்திரங்களின் படைப்பிலும், காட்சி அமைப்பிலும் புது எல்லையை தொட்டவை இந்த படங்கள். விக்ரம்,சூர்யா,கார்த்தி,ராம்,ஜெய் என நல்ல நடிகர்களை தமிழுக்கு தந்த படங்கள் இவை.

நம்முடைய இயல்பே சமகால சாதனையாளர்களை உற்சாகப் படுத்தாமல் பின்னாளில் அவர்களை புகழ்வதுதான்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வார்கள். தாமதிக்கப் பட்ட பாராட்டும் மறுக்கப்பட்ட பாராட்டே

லக்கிலுக் January 6, 2009 1:00 PM  

தலைவரே! ஆஜர்.

அத்திரி January 6, 2009 1:05 PM  

/சரக்கு கலந்த உரையாடல் இருப்பதால் நான் வேண்டாம், வேண்டாம் என்று சொன்னாலும் நீங்கள் விடமாட்டீர்கள் என்பதாலும், உங்கள் மனது புண்படக்கூடாது என்பதாலும், மேலும்பல காரணங்கள் இருப்பதாலும், கண்டிப்பாய் வருகிறேன் நர்சிம்..//

ஆனாலும் கேபிள் சார் ரொம்ப உஷாரு

அத்திரி January 6, 2009 1:19 PM  

என்னால் கலந்து கொள்ள இயலாது என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...
( தங்கமணி சூறாவளி மையம் கொண்டிருப்பதால் )

பரிசல்காரன் January 6, 2009 5:06 PM  

மிஸ் பண்றேன் தோழரே!

ஆனாலும் அடுத்ததாக இதேபோல யுவகிருஷ்ணா ஒரு பத்து புத்தகம் வெளியிடும்போதும், நீங்களும் நானும் எழுதிய புத்தகம் வெளிவரும்போதும் சாருவை அழைத்து பீராட்டி.. ச்சே.. பாராட்டி பார்ட்டி வைப்போம்!

SUREஷ் January 6, 2009 5:14 PM  

//நான் சமீத்திய வருடங்களில் என்ற வார்த்தையை எழுதியிருந்தேன்.. அந்த வார்த்தைகளை விட்டுவிட்டீர்கள்.. சமீபத்திய நல்ல என்ற வார்த்தையையும் நான் சேர்க்கவில்லை..//


யப்பா.. பயங்கரமாய் யோசித்து எழுதுகிறீர்கள் போலிருக்கே

புதுகை.அப்துல்லா January 6, 2009 5:43 PM  

முரளிகண்ணன் said...
வால்பையன் மற்றும் அனானி

இந்திய அளவில் சிறந்த இயக்குனராக கருதப்படுகிறவர்களே பாராட்டிய படங்கள் இவை. பாத்திரங்களின் படைப்பிலும், காட்சி அமைப்பிலும் புது எல்லையை தொட்டவை இந்த படங்கள். விக்ரம்,சூர்யா,கார்த்தி,ராம்,ஜெய் என நல்ல நடிகர்களை தமிழுக்கு தந்த படங்கள் இவை.

நம்முடைய இயல்பே சமகால சாதனையாளர்களை உற்சாகப் படுத்தாமல் பின்னாளில் அவர்களை புகழ்வதுதான்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வார்கள். தாமதிக்கப் பட்ட பாராட்டும் மறுக்கப்பட்ட பாராட்டே

//

நம்ப வலையுலக பிலிம் நியூஸ் ஆனந்தனே சொல்லிட்டாரே. இதுக்கு ஏது அப்பீல்??

:))

நான் ஆதவன் January 6, 2009 8:04 PM  

//எழுத்து வீரன்//

:-)

மின்னல் January 6, 2009 8:24 PM  

சென்னை பதிவர்களுக்கு மட்டும் தான் அழைப்பா நர்சிம்

KaveriGanesh January 6, 2009 8:33 PM  

தம்பி நர்சிம் , திருமங்கலம் இடைத்தேர்தலில் பிசியாக இருப்பதால் என்னால் வரமுடியவில்லை, நம் மதுர இயக்குனர்களின் கலந்த்துரையாடலை பதிவாக போடுங்கள்.


என் வாழ்த்துக்களை சசியிடமும், அமீரடமும், எழுத்து வீரனிடமும்(சும்மா சாரு அண்ணணை உசுப்பேத்தாதீங்க பா) தெரிவியுங்கள்.


அன்புட‌ன்

காவேரி க‌ணேஷ்

கும்க்கி January 7, 2009 8:47 AM  

:-))
நல்ல வேளை...ரஜினி கோந்துக்கு அழைப்பில்லை.

கும்க்கி January 7, 2009 8:57 AM  

புருத்திவீரன் கடைசி பத்து நிமிட காட்சிகள் இல்லாமல் இருந்தால் சிறந்த காமெடி படமாக இருந்திருக்கும்

வால் இது என்ன கலாட்டா....
உங்க ஊர் மண்ணிற்க்கே ஆன தனி வீரம் அது.ப்ரெம் பை ப்ரேம் அனைவராலும் ரசிக்கப்பட்ட படம்.கிளைமேக்ஸ் யதார்த்தமாக இல்லை என்பது உண்மைதான்....எந்த லாரிக்காரர்களும் இவ்வளவு வன்புணர்ச்சியாளர்களாக இருக்ககூடிய சாத்தியம் இல்லை.
அதை தவிர்த்து எங்கும் குறை சொல்ல வாய்ப்பே இல்லாத சினிமாவை கொண்டாடுவதை விடுத்து ஒரே செகண்டில் ஸ்விட்சர்லாந்திலும் ஸ்டுடியோவிலும் மாறி மாறி பொன்னுங்க பின்னாடி நூற்றாண்டு கணக்கா ஆட வச்சி சமுதாயத்தையே குட்டிசுவர் பண்னிக்கிட்டிருக்கற வேற எந்த கருமத்த நொல்ல சினிமா என்று ஏற்றுக்கொள்வீர்கள்..?

அளவில்லா வருத்தத்துடன்...
கும்க்கி.

வால்பையன் January 7, 2009 9:16 AM  

//எந்த கருமத்த நொல்ல சினிமா என்று ஏற்றுக்கொள்வீர்கள்..?//

ஏன் நீங்க நொல்ல சினிமா பார்க்கிறதே இல்லையா?

வன்முறை துளியும் இல்லாத மொழி, தவமாய் தவமிருந்து, சிறிது வன்முறையுடன்(அதுவும் தெவையில்லாதது தான்) சென்னை 600028

R. பெஞ்சமின் பொன்னையா January 7, 2009 9:46 AM  

வால் பையனுடன் முழுதும் ஒத்துப்போகிறேன்.

///வால் பையன் @

//தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்த அல்லது புரட்டிப் போட்ட படங்கள் என்று குறிப்பிட்டுப் பார்த்தால்.. சேது, நந்தா, பிதாமகன், ராம், பருத்தி வீரன் இந்த படங்கள் அந்த லிஸ்ட்டில் இடம்பெறும்.//

நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை படங்களும் எதாவது ஒரு வகையில் வன்முறையை கையாண்டது தான், இதற்காக நாம் வெட்க படவேண்டும்.///

உண்மை, வன்முறை எதற்கும் ஒரு தீர்வு அல்ல.

ஆனா கடைசியில நம்ம நர்சிம் அண்ணனும் அவரோட ஒத்துப்போறதா சொல்லீட்டாரு.

கும்க்கி அண்ணே, நல்லா சொன்னேள் போங்கோ.

இந்த இரண்டு படங்களைக்குறித்த என்னுடைய குமுறலை இங்கு காணவும்.

http://benjaminponnaih.blogspot.com/2008/11/blog-post_3842.html

Anonymous January 7, 2009 11:33 PM  

உருப்படியா எதாவது பண்ணுங்கப்பா, எப்பவும் சினிமா தானா?
ஏன் இந்த மாதிரி ஊடகங்களை வீணடிக்கிறீர்கள்?