சராசரிக்கும் சற்று குறைவான உயரம்.சராசரிக்கும் சற்று கூடுதலான நிறம்.ஒல்லியான தேகம்.காந்தி கண்ணாடி.மொழுக் சவர முகம்.இளங்கலை கணிதம். நான் வேதியியல்.முக்கியமாய் நானும் அவனும் ஒரே தெரு.
எந்த வட்டாரமொழி பேசுபவராக இருந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவதுஒருபாணிஇருக்கும்.."வந்தான்"என்பதை...
"வந்தாப்ள,வந்தாப்டி,வந்தா,வந்தான் பாஸு,வந்தான்,வந்துச்சு,வந்தான்ப்பா,வந்தான் மச்சான்.." இதில் முஸ்தஃபாவின் வழக்கு ப்பா..அநியாயத்திற்கு எல்லா வார்த்தைக்கும் "அப்பா" சேர்த்துதான் பேசுவான்.அப் பாவி.
அது ஏதோ ஒரு செமெஸ்டர் மாத காலை. சரியாக 9 மணிக்கு சைக்கிளை துடைத்துக் கொண்டிருந்தான். எதிர்த்த வீட்டு குமார் கையில் இருக்கும் நாளிதழை(படிக்கவே மாட்டான்..விரித்து வைத்துக் கொண்டு தெருவில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக்கொண்டிருப்பான்)
"என்ன முஸ்தஃபா..எக்ஸாம் மத்தியானம் ரெண்டு மணிக்குனு சொன்ன..இப்பவே கிளம்பிட்ட?"
"ஆமாம்ப்பா.. எப்பவுமே ரொம்ப முன்னாடியே போய் கொஞ்சம் ரிவிசன் பண்ணீட்டு,ரிலாக்ஸா எழுதாம்ப்பா..அதான்.."
"அதுக்குனு இப்பவேவா போவாங்க.. சரி சரி ஆள் த பெஸ்ட்"
தாங்க்ஸ்ப்பா..இந்த ஒரு அரியர கிளியர் பண்ணிட்டா போதும்ப்பா.."
என்றவாரே சைக்கிளை ஸ்டைலாக தள்ளிக்கொண்டு ஓடி இரண்டு காலையும் தூக்கி நேரடியாக சீட்டில் தாவி அமர்ந்து போனான்..அவனைப் பொறுத்தவரை அது சாகசம்.
போனவன் 11 மணிவாக்கில் திரும்பி வந்து விட்டான்.. வாசலில் நின்றிருந்த நான்
"என்ன மாப்ள.. ஏதாவது மறந்துட்டியா?"
"இல்லப்பா..எக்ஸாம் நேத்தாம்.."
இதுதான் முஸ்தஃபா.. அதற்காக அவனை குறைத்தும் மதிப்பிட முடியாது. ஏதோ ஒரு புதன்கிழமை சித்ரமாலாவில் கடைசியாக ஒரே ஒரு தமிழ் பாட்டு போடுவதை பார்ப்பதற்காக காத்திருந்தபொழுது காக்காத்தோப்பு ஏரியாவில் இருந்து நான்கைந்து பேர் வந்து
" இங்க யார்டா முஸ்தஃபா?"
"என்ன விசயம் பாஸ்.. ஆள் இல்லயே.."
"ஏண்டா இப்பிடியா போட்டு அடிப்பான்..இங்க பார்ர்ரா.." என்று கூறிக்கொண்டே ஒரு ஆளை நெட்டித் தள்ளினான்..அவன் மண்டை பிளந்திருந்ததால் கட்டு போட்டிருந்தான்..
"என்னாச்சுண்ணே.. ?"
"என்னா நொண்ணாச்சுண்ணே.. சைக்கிள் ஸ்டாண்டுல ஏதோ பிரச்சனை.. கல்ல எடுத்து மண்டய திறந்திட்டானாம்..சொல்லி வைய்யி..கொண்டேபுடுவம்"
என்று கத்திவிட்டு போனார்கள்..
பம்மி வந்தவனை பார்த்து ஆச்சர்யபட்டு கேட்டோம்..
"என்னடா என்ன பஞ்சாயத்து?"
"இல்லப்பா..சும்மா சும்மா வம்பிழுத்தான்..போட்டேம்ப்பா.."
ஒருமுறை வைகை எக்ஸ்பிரசில் சென்னை வர நானும் அவனும் இன்னும் சில நண்பர்களும். S4 ஐ அடைந்தோம்.
" நல்ல வேள மாப்ள.. தீ ஃபிகரு.. ஒரு ஆன்ட்டி வேற..பொழுது போயிரும்" இது சிவக்குமார்
"ஆமாடா.. நீ வெறிக்காத..கொஞ்சம் கொஞ்சமா பிட்ட போடுவோம்.." இது நான்..
" ஏம்ப்பா.. பாவம்ப்பா.. அப்பிடில்லாம் பேசாதீங்கப்பா.." இது யார் என்று தெரிந்திருக்கும்..
வண்டி எடுக்க இன்னும் சில நிமிடங்கள் இருந்தது..
அந்த ஆன்ட்டியின் குழந்தை(வயது நான்கோ ஐந்தோ இருக்கும்) மிக்கி மெளஸ் வடிவ காலி வாட்டர் பாட்டிலை வைத்துக்கொண்டு அம்மாவை(ஆன்ட்டியை) அணத்திக்கொண்டிருந்தது.
"சொன்னா கேட்கணும் ச்செல்லம்.. வண்டி கிளம்பப்போகுது.."
"ஆஆஆஆஆஆ.. எனக்கு இப்பவே வேணும்.."
"அடிதான்.."
"என்ன வேணுமாங்க.. என்ன வேணும் பாப்பா?"
பதில் சொல்லவில்லை.. கேட்ட முஸ்தஃபாவை நான் முறைத்தேன்..
அவன் என்னை சட்டை செய்யவில்லை.. மீண்டும் ஒரு முறை
" என்ன வேணுமாம்ங்க..?"
"இதுல தண்ணி வேணுமாம்.. வீட்ல இருந்து வர்றதுக்குள்ள கொட்டியாச்சு..வண்டி கிளம்பிடும்னு சொன்னா கேட்கமாட்டீங்கறா.. "
"இங்க குடுங்க.. நான் பிடிச்சுட்டு வர்றேன்.."
"வேண்டாங்க வண்டி இப்ப மூவ் ஆகிடும்.."
"சும்மா கொடுங்க.. இங்கதான் இருக்கு குழாய்.."
"டேய் சிவா.. இப்பிடி தொங்கிட்டானேடா.. இனி நம்மகிட்ட பேசாது.."
என்று வெறுப்பில் நாங்கள் அங்காலாய்த்துக் கொண்டிருக்கும் பொழுதே வண்டி லேசாக மூவ் ஆனது.. அதுவரை ப்ளாட்பாரத்தில் நின்றிருந்தவர்கள் பரபரப்பாக தொத்தி ஏறத்தொடங்கினார்கள்..அவர்களுக்கு இடைஞ்சலாக அதுவரை உள்ளே பயணம் செய்பவர்கள் போல அமர்ந்திருந்த "ஏத்திவிட வந்தவர்கள்" முண்டி அடித்து இறங்கி கொண்டிருந்தார்கள்..
"அம்மா..தண்ணி.."
"எங்கடா ஆள காணோம்.." என்று சொல்லி முடிக்கும் முன் வந்தான்..
"இல்லப்பா.. வண்டி மூவ் ஆயிடுச்சா.. அதான் அவசரமா ஏறிட்டேம்ப்பா.."
" "
"ஏறும் போது வாட்டர் பாட்டில் கீழ விழுந்துடுச்சுப்பா.."
"அறிவிருக்காங்க.. இப்ப குழந்தக்கு என்ன சொல்றது..அது அவ ஆசையா வச்சிருந்த மிக்கிமெளஸ் பாட்டில்..ச்சே.. நான் கேட்டேனா..?"
இதற்குள் நிலவரம் அறிந்த குழந்தை கத்த தொடங்கி இருந்தது..
நானும் சிவாவும் S5 ஐ நோக்கி போய்விட்டோம்..
இதோ இந்த வாரம் ஊருக்குப் போகிறேன்..
தெரிந்ததும் வீட்டிற்கு வந்துவிடுவான்..
"என்னப்பா..எப்ப வந்தப்பா.."
அதுதான் முஸ்தஃபா...
..
முஸ்தஃபா...
Posted by
narsim
Thursday, January 29, 2009
Labels: புனைவு
29 comments:
me the first
சூப்பர்பா...
இந்த பதிவை முஸ்தஃபா படிச்சாராப்பா?
Nice
தலை,.
புனைவு தான் ஆனாலும் வைகை எக்ஸ்பிரஸ்ஸை மிஞ்சிய வேகம்.
\\வந்தாப்ள,வந்தாப்டி,வந்தா,வந்தான் பாஸு,வந்தான்,வந்துச்சு,வந்தான்ப்பா,வந்தான் மச்சான்\\
\\இல்லப்பா..சும்மா சும்மா வம்பிழுத்தான்..போட்டேம்ப்பா\\
அப்படியே சித்திரகாரத் தெருவில தொடங்கி தெற்கு வாசல் வழியா வில்லாபுரம் போன மாதிரி இருக்குது
\\ தீ ஃபிகரு\\
ஆஹா பழச ஞாபகப்படுத்திட்டீங்களே தல
முஸ்தாப்பா முஸ்தாப்பா. நல்லா இருக்கு. அடப்பாவிகளா, ஆண்ட்டிகளைக்கூட விடுவதில்லையா :))
அனுஜன்யா
முஸ்தஃபா,முஸ்தஃபா, dont worry முஸ்தஃபா,
நரசிம் இதோ வந்துட்டாரு பா :))
அதாம்ப்பா.. சூப்பர்ப்பா..
//போசுபவராக //
மாத்திடுங்கப்பா
ஆமாம்பா, நிஜம்தாம்பா,
இந்த மாதிரி ஆளுகெல்லாம் உண்மையிலேயே நல்லவங்கப்பா!
அட நம்புங்கப்பா!
புனைவுதானே... நிசமோன்னு நினைச்சேன்...
இந்த முஸ்தப்பா. ப்பா முடியலை
மாறவர்மன் எங்கப்பா?
ஹை நல்லாருக்குப்பா ;))
நல்லாருக்குப்பா..
//முரளிகண்ணன் said...
\\ தீ ஃபிகரு\\
ஆஹா பழச ஞாபகப்படுத்திட்டீங்களே தல//
ரிப்பீட்டேய்...
என் காலேஜ் தீயை கெளப்பிவிட்டீங்க தல :(
அப்பப்பா முஸ்தபா ரொம்ப நல்லவன்ப்பா..
புனைவாப்பா. நான் நிஜமோன்னு நினைச்சேன்பா. சில சமயங்களில் இப்படி பேசுவது கொஞ்சம் எரிச்சலா இருக்கும். அதுவும் சேரன் படத்தில் ஹீரோயின்களை டா போட்டு பேசும்போது:<
//போனவன் 11 மணிவாக்கில் திரும்பி வந்து விட்டான்.. வாசலில் நின்றிருந்த நான்
"என்ன மாப்ள.. ஏதாவது மறந்துட்டியா?"
"இல்லப்பா..எக்ஸாம் நேத்தாம்.."
இதுதான் முஸ்தஃபா.. அதற்காக அவனை குறைத்தும் மதிப்பிட முடியாது.//
கலக்குது style of writing .
ஆனாலும் பாருங்க ஒரு பிழை இருக்கு
//"அதுக்குனு இப்பவேவா போவாங்க.. சரி சரி ஆள் த பெஸ்ட்"//
எந்த ஆள் பெஸ்ட் னு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை .ஏன் இப்பிடி? :)
இதே மாதிரி ஒரு கேரக்ட்டர் நமக்கும் இருக்கான் பங்காளி, அவன் பேரு (கிளி) ஆனந்த் :))
அப்படியே சித்திரகாரத் தெருவில தொடங்கி தெற்கு வாசல் வழியா வில்லாபுரம் போன மாதிரி இருக்குது.
முரளி,
இன்னைக்கு மதுரை வந்து பாருங்க, ஊரெ களை கட்டியிருக்கு, எங்க பாத்தாலும் பிளக்ஸ் போர்டும்,
வாழை தோரணமும், சீரியல் லைட்டும் எல்லாம் அண்ணன் பிறந்த நாளைக்கு தான்.
குமுதம் டைப் ரேட்டிங்.
அபத்தம்/சுமார்/ஓகே/நன்று/சூப்பர்
என் தேர்வு “சுமார்”
நல்ல பதிவு....இத்தன பேர் மதுர காரவுகளாப்பா....ரொம்ப சந்தோஷம்பா...
அனுப்புங்கப்பா....
அருமையான் பதிவு.
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
http://www.newspaanai.com/easylink.php
ஆரம்பித்த வேகம் சற்றும் குறையாமல் முடித்திருக்கிறீர்கள்.
அப்பப்பா முஸ்தஃபா
ஆமாம்ப்பா நல்லாருக்குப்பா... :)
கலக்கல்.. இப்ப எல்லாம் உங்க, முரளிகண்ணன் பதிவை படிச்சதும் முதல்ல லேபிளை செக் பண்ண வேண்டி இருக்கு.. அருமையான புனைவு நர்சிம்..
சபாபதி (பழைய) படத்தில் வரும் வேலைக்காரர் (காளிமுத்து) இப்படித்தான் பேசுவார். அதை நியாகப்படுத்தியது உங்கள் முஸ்தபா. அருமையான பதிவு..
nice.
Post a Comment