இது வீரம் அல்ல முத்துக்குமாரா...

இது வீரம் அல்ல முத்துக்குமாரா...

என்ன எழுதுவது?

நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று எழுதினால் நான் கோழை.. ஏனெனில் நான் நெகிழும் நிகழ்வில் உடன்கட்டை ஏறியிருக்க வேண்டும்

மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்றால்.. நான் ஒரு சாடிஸ்ட்.. உன் முடிவில் என்ன மகிழ்ச்சி?

புத்தக கண்காட்சியில் உன்னை பார்த்தபொழுது நீ சிரித்தபடி சொன்ன வார்த்தைகள்(எப்பிடிண்ணே இருக்கீங்க??) இன்னும் ஞாபகம் இருக்கிறது..

14 பக்க கடிதம் எழுதும் அளவு அவகாசம் இருந்த உனக்கு ஒரு நிமிடம் சிந்திக்க கிடைக்காததை எண்ணித்தான் வருத்தமாக இருக்கிறது.

யார் யாது சொன்னாலும் இது வீரம் அல்ல முத்துக்குமார்..

இதுதான் தீர்வு என்றால் எத்தனையோ அரசியல் தலைவர்கள் இந்நேரம் இதை செய்திருப்பார்களே? இதுவல்ல தீர்வு என்று அவர்களுக்குக் கூட தெரியும்.

உன் மரணச்செய்திகள் இன்னும் 3 நாட்களுக்கு உன் உடலை எரித்த தீயை விட பலமடங்கு எரியும்..அதற்கு பிறகு உன் அஸ்தியை போல இந்த நிகழ்வும் கரைந்து மறைந்து மறந்து போகும். என்ன பலன்??

இனி ஒரு சாவு இப்படி விழாதிருக்க, இதை அரசியல் ஆக்காமல் இருக்க வேண்டும். உன் உணர்வுகள் உன் உடலைப் போல எரிந்து நொடியில் சாம்பலாகிப் போனதே..

இதற்கு பதில் நெஞ்சில் கனன்ற நெருப்பை ஊதி ஊதி நெருப்புத்தலைவனாக ஆகியிருக்கலாமே நண்பா..உன் போன்ற உணர்வை மதிக்கும் தலைவர்களைத்தான் என் போன்ற உண்மையை விரும்பும் தொண்டர்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்.. தோள் கொடுத்திருப்போமே..

உன் குடும்பத்தை உன் இடத்தில் இருந்து காக்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது.. செய்வோம்..

வீர வணக்கம் செய்ய மனது தடுக்கிறது நண்பா.. என் வீரவணக்கத்திற்காக இன்னுமொரு முத்துக்குமாரோ,கேசவனோ.. செத்துப் போவதை விரும்பாததால்..

மரணத்திற்கு முன் முத்துக்குமார் எழுதிய‌ கனல் தெறிக்கும் அறிக்கையை படிக்க இங்கே செல்லவும்

..

33 comments:

ரமேஷ் வைத்யா January 30, 2009 12:33 PM  

பெரும்பாலானோரின் எண்ணங்கள். தெளிவான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறீர்கள். (உங்கள் தொலைபேசியின் இரண்டாம் இலக்கம் ப்ளீஸ்)

முரளிகண்ணன் January 30, 2009 12:36 PM  

நர்சிம், என் மனதில் எழுந்த என் எண்ணங்களை வெளிப்படுத்த வார்த்தை இன்றி குமைந்து கொண்டிருந்தேன். இந்த பதிவில் உள்ள கருத்துக்களோடு முழுதும் ஒத்துப்போகிறேன்.

\\வீர வணக்கம் செய்ய மனது தடுக்கிறது நண்பா.. என் வீரவணக்கத்திற்காக இன்னுமொரு முத்துக்குமாரோ,கேசவனோ.. செத்துப் போவதை விரும்பாததால்\\

இந்த காரணமே கைகளை கட்டிப் போட்டிருக்கிறது

ராம்சுரேஷ் January 30, 2009 12:38 PM  

நானும் என்ன செய்வது என்று தெரியாமல் கையறு சூழ்நிலையில் உள்ளேன். மனம் கனமாக இருக்கிறது.

முரளிகண்ணன் January 30, 2009 12:41 PM  

ஈழம் பற்றி நீங்கள் எழுதிய பழைய பதிவை நான் உங்களுக்கு நினைவு படுத்த நினைக்கிறேன்.





\\இந்திய அரசுக்கு...

ஈழத்தில் இருந்து...
இன்னும் தலையில் குண்டு இறங்காத/இறங்கப்போகும் இளைஞன் எழுதிக்கொள்வது...

செய்தித்தாள்கள் எல்லாம் எம் மக்களின் குருதி படிந்த செந்நிறத்தில் அச்சிடப்படுகிறதே.. ஈழ தேசத்து மரண‌ ஓலம் வையம் எல்லாம் கேட்கிறதே.. ஒரு இனம் வேரோடு பிடுங்கப்படுகிறதே..இவை எல்லாம் உங்களுக்கும் தெரியும் தானே... எரியும் பிணங்களின் வாடைதான் அங்கு வரை வந்திருக்குமே..!

கரன்ட்டாக இருந்தாலும் சரி, காஷ்மீராக இருந்தாலும் சரி, காவேரியாக இருந்தாலும் சரி இப்படி எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணத் துப்பில்லாத உங்களை உதவி செய்யச் சொல்லி ஒன்றும் நாங்கள் அழைக்க வில்லை..
அவர்களுக்கு மறைமுக உதவி செய்யாதீர்கள் என்றே இம்மடல்..

பிறந்த குழந்தையா.. சுடு.. பிறக்கப் போகும் குழந்தை வயிற்றிலா.. உதைத்துக் கலை. கன்னியா? பிறப்புறுப்பையே அழி..

எதற்காக இந்த வெறி என்று சிங்கள அரசிடம் கேட்டுப்ப்பாருங்கள். அந்த குழந்தைகளில் இன்னும் எத்தனை போராளிகளோ என்ற அச்சம்தான் என்பதே பதிலாய் இருக்கும்..

இந்திய வரைபடத்தின் கீழ் முற்றுப்புள்ளியென இருக்கும் ஒரு சிறு நாட்டின் சர்வாதிகார போக்கை தட்டி கேட்க இந்திய அரசு நினைத்தாலே போதும்.. நிறுத்தி விடலாம் போரை.. ஆனால் அதை நினைப்பதை எது நிறுத்துகிறது.

எல்லா பிரச்சனைக்கும் காலம்தான் தீர்வு என்ற போக்கை கடைபிடிக்கும் இந்திய அரசே.. இந்த பிரச்சனையில் காலத்தின் முன் காலன் தீர்த்துவிடுவானே என்ற எண்ணம் எப்போது ஏற்படும் உங்களுக்கு?

இரத்தம், வெடிகுண்டு, இறப்பு எல்லாம் பார்த்து பழகிவிட்டது.. இன்று துரோகம் பழகும் துணிவும் வந்துவிட்டது உங்களால். நன்றி..

முடிக்கும் முன்...

இன்னொரு கார்கிலோ இல்லை வேறு ஏதாவது யுத்தமோ வந்தால் சொல்லி அனுப்புங்கள்.. உயிரோடு இருந்தால் வந்து போரிடுகிறோம்..

உங்களுக்காக அல்ல..

உங்களை நம்பி அங்கிருக்கும் எம் சகோதரர்களுக்காக..

இன்னும் உயிருடன் இருக்கும் ஓர்
ஈழத்தமிழன்..

\\


அதுபோல் கோபத்தை காட்டிய நீங்கள் இன்று எடுத்திருக்கும் நிலை இன்னொரு இழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே என உணர்கிறேன்.
என் மனதில் உள்ளதை வார்த்தைகளில் வடித்ததற்க்கு நன்றி

கார்க்கி January 30, 2009 1:01 PM  

முத்துக்குமாரின் முடிவு சரியோ தவறோ.. ஆனால் அவரின் உண்ர்வு!!!.. அவன் மூத்திரத்த பிடிச்சு குடிக்கனும் இங்க இருக்கிற ம க பி க எ க சொ க வின் பொறம்போக்கு நாய்கள்..

KaveriGanesh January 30, 2009 1:42 PM  

நர்சிம்,

நேற்றைய தொலைகாட்சியில் இந்த நிகழ்வை பார்த்தபொழுது என் மனம் என்ன நினைத்ததோ அதை உங்களின்

எழுத்தாய், உணர்வாய்
பிரதிபலிக்கிறது.

ரொம்பவுமே வலிக்கிறது முத்துக்குமாரின் மரணம்.

வித்யா January 30, 2009 1:57 PM  

நான் எழுத பயந்ததை தைரியமாக நீங்க எழுதிட்ட்டீங்க. யார் என்ன சொன்னாலும் முத்துக்குமாரின் முடிவு தவறான ஒன்று. தன் உயிரை மாய்த்துக்கொள்வதனால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்பதைக்கூடவா உணரமுடியவில்லை அவரால். முத்துக்குமரன் யாருக்கும் முன்மாதிரியாக இருந்துவிடக்கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

வடகரை வேலன் January 30, 2009 1:57 PM  

நோக்கம் சரியானதுதானெனினும், இது எந்தவிதமான தாக்கத்தையும் அரசியல்வாதிகள் மனதிலேற்படுத்துமென எனக்கு நம்பிக்கையில்லை.

பழியை அடுத்தவன் மேல் சாட்டும் பழக்கம்தான் புழக்கத்திலிருக்கிறது.

தோல் தடித்துவிட்டது நமக்கு. இல்லையெனில் தோழரும் தோழியரும் சாகும்பொழுதும் கிரிக்கெட் மேட்ச் பார்த்து மகிழ்ந்திருக்கச் சம்மதிப்போமா நாம்?

பேய்கள் அரசாட்சி செய்யின் பிணந்தின்னும் சாத்திரங்கள்.

Mahesh January 30, 2009 2:43 PM  

வீரமோ உணர்வோ... இது நிச்சயம் சரியான முடிவு அல்ல..

அவரின் முடிவிற்குப் பின் என்ன வியாபாரம் நடந்ததோ என்று கூட மக்கள் பேசக் கேட்கிறேன். அப்படியிருந்தால் அது இன்னும் பெரிய சோகம்.... :((

vj January 30, 2009 3:16 PM  

ஏன் இப்படி செய்தாய்?

கடற்கரை மணலில் விழுந்த குண்டுசியாய் உன் மறைவும் மறித்து போகும் உன்னை போல,

தமிழையும், ஈழத்தையும் பணம் பண்ணும் பிசாசுகள் உன் பிணத்தை கண்டா மாறிவிடுவார்கள்?

நான், எனது, என் குடும்பம் என்று இருப்பவர்கள் உன் குடும்பத்தை பற்றியா நினைக்க போகிறார்கள்.

உன் முடிவுக்கு நீ காட்டிய காரணம் சில, நீ உயிர் வாழ்வதற்கு இருக்கின்ற கடமைகளோ பல... உன் கடமையை செய்ய மறந்து நீ மறித்து போனது சரியா?

Anonymous January 30, 2009 3:17 PM  

இதுதான் தீர்வு என்றால் எத்தனையோ அரசியல் தலைவர்கள் இந்நேரம் இதை செய்திருப்பார்களே//

இது சரியான தீர்வு இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இது சரியான தீர்வெனில்

அரசியல் வாதிகள் இதனைச் செய்திருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள்...

சாரி. அவங்களால சூடா டீ குடிக்கவே முடியாது..

அக்னி பார்வை January 30, 2009 4:02 PM  

நன்றி நர்சிம்..

சரியா போச்சு, தினம் மரணமடையும் மக்களை பார்த்தே மாறாதவர்கள் இன்று இறந்த நம் சகோதரர் முத்துகுமாரின் மரணத்திற்க்காகவ மாறா போகிறார்கள்.முத்துகுமார் அவசரபடவில்லை, அவருக்கு பிணங்களின் நடுவே வாழ விருப்பமில்லை.

rooto January 30, 2009 4:11 PM  

உண்மை ஒரு உயிரின் மதிப்பு உச்சம், அதைவிட முத்துகுமர் உயிருடன் இருந்திருந்தால் இன்னும் பல சாதித்திருக்கமுடியும் நம் மக்களுக்கும்,புலிகளிற்கும். நானும் ஒரு ஈழத்தவன் என்ற வகையில் வெட்கபடுகிறேன், முத்துகுமாரினுடைய உயிரா என்னை தட்டிவிட நான் கொடுக்கும் விலை?? தெனிந்திய தமிழர்களில் பலரது உதவியும்,ஒத்தாசையும் இருந்தலும், இந்தியாவே தமிழர் அழிப்பிற்கு ஆயுத, இராணுவ, ஆட் பலங்களை அள்ளி வழங்கி வருகிறது. அதையாவது இது தடுத்து நிறுத்தினால் அவனது ஆத்மாவிற்கு சிறிதேனும் குளிர்ச்சி ஏற்படும்!!

எம்.எம்.அப்துல்லா January 30, 2009 4:28 PM  

நான் இதை எழுதுகிறேன் என்று சொன்னபோது, இல்லை!இல்லை! நானே எழுதுகிறேன் என்று சொன்னீர்கள். நீங்கள் எழுதி இருப்பதைப் போல இவ்வளவு தெளிவாக என்னால் எழுதி இருக்க முடியாது அண்ணே

:((((

பரிசல்காரன் January 30, 2009 5:10 PM  

//சாரி. அவங்களால சூடா டீ குடிக்கவே முடியாது..//

அந்த வியாதிக்காரர்கள் இதைப் பார்த்தால் நாக்கைப் பிடுங்காமலே சாகலாம்!

malar January 30, 2009 6:56 PM  

“ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க வேண்டி மாணவர்கள் உண்ணாவிரதம் போன்ற அறப்போர்களில் ஈடுபட்டதைத் தாண்டி, இன்று சென்னை சாஸ்திரி பவன் முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்குத்தானே தீக்குளித்து இறந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனைக்குரியது; ஆழ்ந்த துன்பத்தைத் தருவது.
இந்தியப் பேரரசு இதுபோன்ற கொடுமைகள் நடக்காவண்ணம் மேலும் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்த முன்வாருங்கள்.”
இது தான் உண்மை .தீ குளிப்பது செல்லாது .குமரேசன் ஒரு கனம் யோசித்து இருபறேயானால் இன்று உயிருடன் இருந்திருப்பார்

இது நேற்று ஒரு தலைப்புக்கு நான் பதில் எழுதியது

\\வீர வணக்கம் செய்ய மனது தடுக்கிறது நண்பா.. என் வீரவணக்கத்திற்காக இன்னுமொரு முத்துக்குமாரோ,கேசவனோ.. செத்துப் போவதை விரும்பாததால்\\

இந்த காரணமே என்னை computer இன்று.திறக்க தடுத்தது.

உங்கள் பதிவு ரொம்ப அருமையாக இருந்தது.

ஈழைப்பிரச்சனைக்கு உடனே முடிவு எட்டிவிடுமா? இதை முத்துக்குமரன் யோசிக்க வேண்டாமா ?

malar January 30, 2009 6:56 PM  

“ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க வேண்டி மாணவர்கள் உண்ணாவிரதம் போன்ற அறப்போர்களில் ஈடுபட்டதைத் தாண்டி, இன்று சென்னை சாஸ்திரி பவன் முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்குத்தானே தீக்குளித்து இறந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனைக்குரியது; ஆழ்ந்த துன்பத்தைத் தருவது.
இந்தியப் பேரரசு இதுபோன்ற கொடுமைகள் நடக்காவண்ணம் மேலும் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்த முன்வாருங்கள்.”
இது தான் உண்மை .தீ குளிப்பது செல்லாது .குமரேசன் ஒரு கனம் யோசித்து இருபறேயானால் இன்று உயிருடன் இருந்திருப்பார்

இது நேற்று ஒரு தலைப்புக்கு நான் பதில் எழுதியது

\\வீர வணக்கம் செய்ய மனது தடுக்கிறது நண்பா.. என் வீரவணக்கத்திற்காக இன்னுமொரு முத்துக்குமாரோ,கேசவனோ.. செத்துப் போவதை விரும்பாததால்\\

இந்த காரணமே என்னை computer இன்று.திறக்க தடுத்தது.

உங்கள் பதிவு ரொம்ப அருமையாக இருந்தது.

ஈழைப்பிரச்சனைக்கு உடனே முடிவு எட்டிவிடுமா? இதை முத்துக்குமரன் யோசிக்க வேண்டாமா ?

ஈழச்சோழன் January 30, 2009 8:30 PM  

தமிழீழ கவிஞர் புதுவை ரத்தினதுரையின் அஞ்சலிகவிதை…

முத்துக்குமரா!
முகம் தெரியாப்போதினிலும்
செத்துக்கிடக்கின்றாய் எமக்காக,
எனவறிந்து
தேகம் பதறுகிறதே திருமகனே!
உந்தனது,
ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே
நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ
உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி
நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில்
அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள்.
உன் மேனியில் மூண்ட நெருப்பு
உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார்
நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்.
சின்ன அக்கினிக்குஞ்சே!
உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய்
அந்தச்சோதிப்பெருவெளிச்சம்
எமக்குச்சக்தி தரும்
வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும்.
உன் இறுதி மூச்சு
புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும்.
எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி
உனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது.

தம்பி!
வாய்நிறைய உன் நாமம் உரைத்து அழைக்கின்றேன்.
நீ எங்களுக்கு வெறும் முத்துக்குமார் அல்ல
எமக்குப்பலம் நல்கும் சக்திக்குமார்
இங்கிருந்து உன் முகத்தைக்காண்கிறேன்.
உன் குரலைக் கேட்கிறேன்.
உன் மூச்சை உள் வாங்குகிறேன்.
இடையில் கடல்கடந்தும் வருகின்றது.
உன் சிரிப்பின் ஓசை.
எமக்காக எரிந்தவனை எரிக்கவா போகின்றீர்?
கடலிலே அனுப்பி வையுங்கள்
அவன் பொன்மேனியை ஒருதரம் தழுவ,
ஈழத்தமிழரை சுமந்த இதயத்தை பார்க்க,
கண்மூடிக்கிடந்தாலும் அவன் காதோடு பேச.

மகனே!
நெருப்பெரியும் தேசத்தை எண்ணி
நெருப்பில் எரிந்தவனே !
உன்நெஞ்;சின் உணர்வுகளை வாங்கி
இங்கே உயிர்கள் பிறக்கும்
உன் இறுதி மூச்சை உள்வாங்கி
உயிர்கள் சுவாசிக்கும்
நாளை உயிர் தரித்திருப்போம் என்பதற்கு
எந்த உத்தரவாதமும் அற்று வாழ்கின்றனர் ஈழத்தமிழர்
உயிர் அரியும் வலியில் ஈழம் துடிக்கின்றது
ஆயினும் பகைக்கு பணிவிடை செய்யோம் என்றபடி
நிமிர்ந்துள்ளோம் நாங்கள்.
முத்துக்குமார்,
நீ செத்துக்கிடக்கின்றாயாமே எமக்காக
யாராவது அவனின் புனித உடலை
எமக்கு பொதிசெய்து அனுப்பமாட்டீர்களா?
இந்த வீரமண்ணில் விதைப்பதற்காக
அந்த வித்துடல் வேர் பிடித்து
புதிய தலைமுறை ஒன்றைப் பிரசவிப்பதற்காக.

தம்பி!
வார்த்தை ஏதும் வரவில்லையே
உன்னை வனப்புச்செய்து வாசலில் வைப்பதற்காக
தமிழீழம் உனக்காக விழியுடைத்துப் பெருகிறது
உன் கடைசிக்கடிதத்தின் பொருள் உணர்ந்து
நெஞ்சுருகி உன்னைப்பாடுகின்றது தமிழீத்தமிழ்.

நண்பனே!
முகம் தெரியாத எம்முத்துக்குமார்
உன்னை நெஞ்சில் வைத்து சத்தியம் செய்கின்றோம்.
நீ மூட்டிய சோதி நெருப்பு சும்மா அவியாது
விண் தொட எழும் - அந்த வெளிச்சத்தில்
நாங்கள் ஒளி பெறுவோம் .
என் பிரிய உறவே!
சென்று வருக
திரும்பி வராவிட்டாலும்
நன்றியென்ற ஓருணர்வை
நாம் சுமந்து நிற்கின்றோம்.
பிரிய தோழனே உனக்கு தமிழீழத்தின் வீரவணக்கம்

தமிழீழத்திலிருந்து புதுவை இரத்தினதுரை

வால்பையன் January 30, 2009 9:13 PM  

சரியான பார்வை
உங்கள் பதிவை படித்த பின்னரே எனக்கு பதிவெழத தோன்றியது!

ragu January 30, 2009 9:21 PM  

நாங்கள் ஒரு பத்திரிகையாளனை இழந்துவிட்டோம்
ஒரு தன்னலமில்லா தமிழனை இழந்துவிட்டோம்
ஒரு பேச்சாளனாக புரட்சி தூண்டும் எழுத்தாளனாக வரவேண்டிய சகோதரனை இழந்துவிட்டோம்

ஒரு வருங்கால தலைவனை இழந்து நிற்கிறோம்

ஆம் முத்துகுமரா நீ ஒரு தன்னலமில்லாத் தலைவனாக உருவாகி இருக்க முடியும் அதற்குள் அவசரப் பட்டுவிட்டாய்.

உன் குடும்பம் மட்டும் அல்ல ஒரு தமிழினமே ஒரு தன்னலமில்லா தலை மகனை இழந்து விட்டது. உனக்கு எனது வீர வணக்கம்

ரகுநாதன்

தேனீ January 30, 2009 9:34 PM  

// உன் குடும்பத்தை உன் இடத்தில் இருந்து காக்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது.. செய்வோம்.. //

மிக‌ச் சரியா சொல்லி இருக்கீங்க‌, எங்க‌ளையும் சேர்த்துக் கொள்ளுங்க‌ள்...

eelavan January 30, 2009 9:54 PM  

yes u r right, y did u die mutu,u should be a leader, un athma santhiadaya pray pannuvom,unakku nangal thalai vanankikiram

RAMASUBRAMANIA SHARMA January 30, 2009 10:03 PM  

நீச்சயமாக நாம் தீ குளித்த வீரனின் குடும்பத்திற்கு நீச்சயமாக நம் உணர்வுகள் எந்த வகையிலாவது உணர்த்த வேன்டும்...at any cost...

Anonymous January 30, 2009 10:46 PM  

முத்துகுமாரின் இறுதி அறிக்கை இங்கே ஆங்கிலத்தில் மொழி பெயர்கபடுளது. இதையும் ஒரு பதிவாக இடுங்களேன்.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=28208

நன்றி

Itsdifferent January 30, 2009 10:48 PM  

சரியான பதிவு. நன்றி.
பதிலட்ட சிலருக்கு ஒரு கேள்வி. முத்து ஒரு தன்னலமற்ற தலைவனாய் ஆகி இருப்பான் என்று சொல்கிறீர்களே, அவர்களுக்கு இந்த கேள்வி.
சென்ற தேர்தலில் சில IIT மாணவர்கள் சேர்ந்து ஒரு கட்சி தொடங்கி போட்டியிட்டார்கள்!!! உங்களில் எத்தனை பேருக்கு அது தெரியும்? எத்தனை பேர் அவர்களுக்கு ஆதரவு அளித்தீர்கள்? எத்தனை பேர் அவர்களுக்கு வாக்களித்தீர்கள்? இத்தகைய நண்பர்கள், நல்லாட்சி செய்ய நாம் ஒரு துரும்பை கூட எடுத்து போட தயாரில்லை. keyboard-ல் type செய்வது எளிது. ஏதாவது செய்யுங்கள். அது தான் நல்லது. "Better late than never". அதனால், இன்னும் ஒன்றும் குடி முழுகிப் போய் விடவில்லை, சிந்தியுங்கள், உங்களால் முடிந்த எந்த உதவியையும் இந்த சமூகத்துக்கு தேவை. Do something!!!

ஜோசப் பால்ராஜ் January 30, 2009 10:49 PM  

அண்ணே,
என் மனதிலிருப்பதைச் சொல்லியுள்ளீர்கள். எனக்கு மிகுதியாய் ஏற்பட்ட கோபம், மற்றும் ஒன்னுமே செய்யமுடியலையேங்கிற கையாலகாத தனம் எல்லாம் சேர்ந்து இப்டி கோர்வையா எழுத முடியாம போயிடுச்சு.

முரளிக்கண்ணன் சுட்டிக்காட்டுன உங்க பழையப் பதிவு இருக்கே
/இன்னொரு கார்கிலோ இல்லை வேறு ஏதாவது யுத்தமோ வந்தால் சொல்லி அனுப்புங்கள்.. உயிரோடு இருந்தால் வந்து போரிடுகிறோம்..

உங்களுக்காக அல்ல..

உங்களை நம்பி அங்கிருக்கும் எம் சகோதரர்களுக்காக..//

இது 100% நிஜம். ஆனா இன்னைக்கு நம்ம நாரயணணும், சிவசங்கர மேனனும், மற்றும் ஒட்டுமொத்த மத்திய அரசும் ஓங்கித் தாங்கிப் புடிச்சு உதவி செய்யிறாங்களே அந்த சிங்கள அரசாங்கம் இந்திய சீனப் போருல சீனாவ ஆதரிச்சுது, இந்திய பாகிஸ்தான் போருல பாகிஸ்தான ஆதரிச்சது.
ஆனா இந்த கேடு கெட்ட மரமண்டையனுங்களுக்கு ஒரு ம*** புரியாது. அடுத்து நாம மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்காக பாகிஸ்தான் மேல போர் தொடுத்தா கூட அப்பவும் இந்த இலங்கை காரன் நம்மளலயா ஆதரிப்பான்? பாகிஸ்தானுக்கு தான் ஆதரவு குடுப்பான். என்ன செய்யிறது நம்ம தலையெழுத்து.

raam January 30, 2009 11:15 PM  

இந்தக் கொடுமையைப் பாருங்கள்...மனம் அதிர்கிறது...

http://in.youtube.com/watch?v=RzUV9GHZGgw&feature=related

raam January 30, 2009 11:21 PM  

வார்த்தைகளில்லை என்னிடம்...

http://in.youtube.com/watch?v=eyfXwUlOCn0&feature=

LOSHAN January 30, 2009 11:22 PM  

ஒவ்வொரு தமிழனின் உயிரும் முக்கியமே..
எமக்காக அநியாயமாக மாயாதீர்..
திருந்தாத அரசியல் ஜென்மங்கள்-இரங்காத தலைமைகள்
உங்கள் இறப்பினாலும் திருந்தாது..

முத்துக்குமரனின் ஆன்மா சாந்தி அடையட்டும்


நாளை தமிழன் விடிவுக்காக
இன்று உங்கள் குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வருவதா?

வேண்டாம் தற்கொலைகள்.. தீக்குளிப்புக்கள்..

பல மரணம் பார்த்துவிட்டோம் இங்கே..
அங்கேயும் வேண்டாம் உயிர்ப் பலிகள்..

* நானும் பதிவிட்டுள்ளேன்.. எம்மால் முடிந்த ஒரு சிறு அஞ்சலி;நன்றி;மரியாதை;காணிக்கை.

கிரி January 31, 2009 10:53 AM  

சரியாக கூறி உள்ள்ளீர்கள் நர்சிம்

ஊர் சுற்றி January 31, 2009 11:32 PM  

இது சம்பந்தமாக வந்த இடுகைகளில்
என்னை மிகவும் கவர்ந்த இடுகை நர்சிம். 100% உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.

TamilBloggersUnit February 1, 2009 4:56 PM  

நல்ல விஸயத்தை கூறீயிருக்கிறீர்கள்

நரேஷ் February 2, 2009 10:40 AM  

உண்மையான கருத்துக்கள் நர்சிம்...

முத்துக்குமரனின் முடிவு ஏற்கத்தக்கதல்ல என்றாலும், அவருடைய உணர்வுக்கு மதிப்பளித்தும், சரியோ, தவறோ அவருடைய மரணம் மக்கள் மனதில் (அரசியல்வாதிகளின் மனதில் எதுவும் ஏறாது என்று எனக்கு தெரியும்...) எந்தவிதமான எழுச்சியை ஏற்படுத்தும் என்பதை அறிய விரும்பியதால் அவருடைய இறுதி அஞ்சலிக்கு சென்றிருந்தேன்...

எப்படியாகினும் முத்துக்குமரனின் மரணம் ஒரு அதிர்வலையை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது என்பது திண்ணம், அது அந்த ஊர்வலத்தை கண்டவர்களுக்கு தெரிந்திருக்கும்...

ஆனால் இந்த 'தீ' நீண்டகாலமாக நீடிக்குமா என்றுதான் தெரியவில்லை...

எப்படியாகினும் மரணம் என்கிற முடிவு? :(