“அனிருத்.. உன்னோட கோச் போன் பண்ணாரு.. நீ கவர் ட்ரைவ் சரியா பண்றதில்லையாம்.. என்ன ஆச்சு?”
“இல்ல டாடி, நல்லாத்தான் பண்றேன்.. bat க்ளோஸ் ஆக மாட்டேங்குது”
இது இன்றைய மாநகர, நகரங்களில் வசிக்கும் மிடிள் கிளாஸ் வீட்டில் நடக்கும்,அப்பாவிற்கும் 8வது படிக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் சம்பாஷனை..
அப்பாவே ஸ்கூட்டியிலோ, ஏதாவது ஒரு ப்ளஸ்ஸிலோ மகனையும்,கிரிக்கெட் கிட் bagயும் ஏற்றிக் கொண்டு கோச்சிங் கிளாஸ் வாசலில் நின்று தன் மகன் சச்சின்(இப்பொழுது டோனி) ஆகிவிட மாட்டானா என்ற கனவில் மிதப்பதை பார்க்கலாம்..பையன்களும் இந்த விளையாட்டும் ஒரு படிப்பு/வகுப்பு போல பாவித்து அந்த ஒரு மணிநேரத்தை கடத்துகிறார்கள்..
பதினைந்து,பதினெட்டு வருடங்களுக்கு முன்னர்..
ஏரியா கிரிக்கெட் என்பது ரத்தத்தில் கலந்த சமாச்சாரம்.
கைலியைக் கட்டிக் கொண்டு, வெள்ளைப் பேண்ட்டை நன்றாக நீவி,மடித்து கக்கத்தில் வைத்து, ஏதாவது ஒரு பாடப்புத்தகத்தை எடுத்து சைக்கிள் கேரியரில் சொருகி, படிக்க போவது போலவே பாவ்லா காட்டி, வீட்டில் இருந்து கிளம்புவதே ஒரு சவால்தான்.
மைதானம் நோக்கி வீரர்களை திரட்டுவதற்குள் தாவு தீர்ந்து விடும்.. பெரும்பாலும் யாரவது ஒருவருக்கோ,இருவருக்கோ மட்டுமே எல்லோரையும் ஒருங்கிணைத்து மேட்ச் போடுவது பிடிக்கும்.. மற்றவர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே..
“ கரெக்ட்டா வந்துருவேன் மாப்ள.. ஒரு சின்ன மேட்டர முடிச்சிட்டு வந்துருவேன்.. எதுக்கும் டாஸ் வின் பண்ணா பவுலிங் எடுங்க”
“ எங்க அப்பா போன எடுத்தா எதுவும் சொல்லாத மாப்ள.. போனே பண்ணாத, நான் வந்துருவேன்”
“மேலுக்குச் சொகமில்ல மாப்ள.. வந்தாலும் ஸ்பின் தான் போடுவேன்..ஓக்கேவா..”
இப்படி சுமராக விளையாடும் ஆட்டக்காரர்கள் செய்யும் அலும்பு தாங்க முடியாது.. அவர்களை கையில் காலில் விழுந்து “வந்து சேருங்கடாப்பா” என்று கிரெவுண்டிற்கு அழைத்து வருவதற்குள் ஒரு பிரளயமே நடப்பது போல் இருக்கும் ..
அடுத்த சோதனை.. எதிர் டீம் சொன்னபடி சரியான நேரத்திற்கு வரவே மாட்டார்கள்.. தெளிவாக ரெண்டு சின்னப்பையன்களை முதலில் அனுப்பி விடுவார்கள்..
“வந்துகிட்டு இருக்காங்கண்ணே..” என்று அவர்கள் வரும் வரை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்..இதற்குள் நம்ம சைடில் ஓரிருவருக்கு கோபம் வந்துவிடும்.
“ இவங்களோட மேட்ச் வேணாம்ப்பானு சொன்னா கேட்டாத்தான.. எப்பயும் இப்படித்தான் செய்யிறாங்க.. நான் போறனப்பா..”
“ இருடா.. வந்துருவாங்க.. பெரிய என்னமோத்தான்..” என்று ஆளைக் கரைத்து கொண்டிருக்கும் பொழுதே.. தூரத்தில் கலர் கலர் தொப்பி, சைக்கிள், என மொத்தமாக வருவார்கள்..
அதுவரை எப்ப வருவாங்க என்று காத்துக் கொண்டிருந்த நம்ம சைடு.. ஏண்டா வந்தாய்ங்க என்ற ரேஞ்சில் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும் நடக்கும்..
வந்தவுடன் சும்மா இருக்க மாட்டார்கள்..“கிடுங்” என்று இருக்கும் இருவர் பந்தை எடுத்து எறிந்து(பெளலிங்)ப்ராக்டிஸ் பண்ணி புளியைக் கரைப்பார்கள்..
“ டாஸ் போட்ரலாம பாஸ்”
“ ஒரு ரெண்டு நிமிசம் பாஸ்”
அந்த இரண்டு நிமிடம் ஏன் எனில்.. “பால் காசு”.. அதாவது.. 11 வீரர்களும் ஆளுக்கு இவ்வளவு என கொடுக்க வேண்டும்.. வீராப்பாக எதிர் அணியிடம் பந்தை வாங்கி வரச் சொல்லிவிடுவது.. பாதி காசை தரவேண்டும்.. மானப்பிரச்சனை..
“போன வாரம் கூடக் கொடுத்தேண்டா நானு”
“எனக்கு குமார் தருவான்”போன்ற அக்கப்போருகளுக்கு அப்புறம் ஒருவழியாக தேத்தி சில்லறை சில்லறையாக எண்ணி கொடுத்து விட்டு..
டாஸைப் போட்டு..திரும்பி நடந்து வரும் ஸ்டைலிலேயே கண்டுபிடித்துவிடுவார்கள்,டாஸ் வின்னா, போச்சா என்று...
டாஸ் ஜெயித்தால் பேட்டிங் தான்..“ மாப்ள பேட்-அப் பண்ணு.. பார்த்து விளையாடுரா..”
ஒரே ஒரு pad.. பஞ்சு ஆங்காங்கே வெளியே தெரியும்.. கீழே இருக்கும் பக்கிலில் கைலியை மடித்து மேக்கப் செய்து கட்டி ஒரு வழியாக களம் இறங்கிவிடுவார்கள்..
எதிர் அணியில் இருந்து “ ஜி, கீப்பிங்க் கிளவுஸ் மட்டும் கொடுங்க.. நம்ம பேடு வேணா எடுத்துக்கோங்க”
இன்னொரு பேட் கிடைத்த மகிழ்ச்சியில் கிளவுஸை கொடுத்துவிட்டு..ஸ்கோர் எழுத ஒரு ஆளைத் தேடும் படலம் ஆரம்பமாகும்.. அவன் பண்ணும் பிகுவும் ஓவராக இருக்கும்.. அவர்கள் டீமிலிருந்து ஒரு ஆள் ஸ்கோரர் பக்கத்தில் அமர்ந்துகொள்வான்.. “ஏத்த மாட்டம் ஜி”
அடுத்த பிரச்சனை அம்பயரிங்.. பேட்டிங் சைடில் இருந்து இருவர் போக வேண்டும்.. ம்கூம்.. ஒருத்தனும் போகமாட்டான்.. போனால் ஒண்டவுன் பேட்டிங் இறங்க முடியாதல்லவா.. மெயின் அப்பயரிங் கூட ஓக்கே.. இந்த லெக் அம்பயரிங்.. இருப்பதிலேயே லொத்தையாக இருக்கும் ஒருவனை “அடுத்த மேச்சுல ஓப்பனிங் நீதாண்டா” என மட்டைய கட்டி நிக்க விடவேண்டும்..
“ஆல் ரியல் பர்ஸ்ட் பால்..” என்று சொல்லும் அம்பயர் மனதிற்குள்.. ரைட் ஆர்ம் ஓவர்னு சொல்லலை.. நோ பால் கொடுத்துவிடவேண்டும் என சந்தோசமாய் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது.. ஓடி வருவதை நிறுத்தி.. “ரைட் ஆர்ம்.. அரவுண்டு பாஸ்” என்று சிரித்துக் கொண்டே மறுபடியும் பவுலிங் போட வருவான்.. அதில் அவனுக்கு ஒரு திருப்தி..
புது பால் சர்ர்ர்.. என்று போவதை வேடிக்கை பார்த்து, அதுவாக பேட்டில் பட்டு இரண்டொரு ரன்கள் எடுத்து க்ளீன் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பியதும் மறக்காமல் சொல்லும் முதல் வார்த்தை..
“உருட்டிட்டான் தாயளி.. அடி பிண்ணலாம்னு நெனைச்சேன்.. நான் அவுட் ஆனதும் ஸ்பின்ன கொண்டு வர்றாங்க பாரு..”
சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே எவனாது “ஹுக்கும்” என்று ஒரு சவுண்டு விடுவான்.. நாலைந்து கொட்ட வார்த்தைகள் சிதறும்..
அடுத்து அவுட் ஆகி வருபவன்.. “பால்ல ஒண்ணுமே இல்ல மாப்ள.. கல்லுல பட்டு திரும்பிருச்சு”
அவ்வளவுதான் அதுவரை பேட்டிங் பேட்டிங் என்று இருந்தவர்கள் அவுட் ஆனதும் பெளலிங் பக்கம் செவ்வனே திசை திரும்புவார்கள்..
“விடு மாப்ள.. சொருகிறுவோம்.. கீப்பிங் மட்டும் ஸ்ட்ராங்கா இருந்தா போதும்..”
என்று தனக்கு பெளலிங் தரவேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தல் ஆரம்பமாகும்..
ஒரு வழியாக தேத்தி, 15 ஓவருக்கு 65ஓ 85ஓ எடுத்து.. அதை அவர்கள் இரண்டே விக்கெட்டில் அடி வெளுத்து விடுவார்கள்..
தோல்வி உறுதியானதும்.. 12வது ஓவரிலேயே தளரத் தொடங்கி.. பந்தை குனிந்து எடுக்காமல் கேப்டனை அழுக விட்டு.. தோற்றவுடன் எழும் முதல் வார்த்தை..“ஜி.. அடுத்த வாரம் இன்னொரு மேட்ச் போட்டுறலாம்..” என்று பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்குவது ஆரம்பமாகும்..
உடனே அவர்கள்.. “ இல்ல பாஸ் விருதுநகர்ல ஒரு டோர்னமட் இருக்கு.. அதுக்கு போறோம்..” என்று பிகு பண்ணுவார்கள் ஜெயித்த திமிரில்..
பேசிக்கொண்டே பேண்ட்டைக் கழட்டி, மடித்து, கைலிக்கு மாறி, சைக்கிளை எடுத்துக் கொண்டு.. “சரி விடுங்கடா.. அடுத்த மேட்ச்சுல ஒரு கை பார்த்துருவோம்.. ஆனா.. இந்த பவுலங்லாம் பத்தாது.. பேசாம நான் பார்ஸ்ட்டுக்கு மாறலாம்னு இருக்கேன்” என பவுலர்ஸை வெறுப்பேத்தி விட்டு... பசி வயிற்றை கிள்ள.. வீட்டுக்கு அழுத்தி..நிம்மதியாக சாப்பிடலாம் என்று நினைத்தால்..
ஒவ்வொரு முறையும் சூடு பிடித்துக் கொள்ளும்.. படாத பாடு பட்டு.. வேறு வழியில்லாம் அம்மாவிடம் உண்மையை சொல்லி.. சுண்ணாம்பை கால் கட்டை விரலில் நெயில் பாலிஸ் போல தடவிக்கொண்டு.. “ ஊர்ல இருக்குற வெயில்லாம் உந்தலைல தான்..இரு அப்பா வரட்டும்” போன்ற திட்டுக்களை சட்டை செய்யாமல் சாப்பிட்டு ஒரு தூக்கம் போட்டால்....
அது கிரிக்கெட்....
..
கிரிக்கெட்.. எனும் சொர்க்கம்...
Posted by
narsim
Saturday, February 28, 2009
Labels: கிரிக்கெட்
69 comments:
சூப்பர்
ஏதாவது புது வார்த்தை சொல்லிக் கொடுங்களேன்.. எல்லா பாராட்டு வார்த்தையும் சொல்லியாச்சு இவருக்கு.. வழக்.. விட..கலக்
//“ கரெக்ட்டா வந்துருவேன் மாப்ள.. ஒரு சின்ன மேட்டர முடிச்சிட்டு வந்துருவேன்.. எதுக்கும் டாஸ் வின் பண்ணா பவுலிங் எடுங்க//
ஆள் லேட்டா வந்தா பேட்டிங் இல்ல எடுக்கனும்?
கிரிக்கெட்னா முதல்ல வந்துடுவோம் தல.. வானவில் கார்த்திக் ஒன்ன மாதிரி எங்களுக்கெல்லாம் cricket is more sexier than girls.
நன்றி KVR..
சகா.. அவரு ஓப்பனிங் பேட்ஸ்மேனாம்.. அதனால் பவுலிங் எடுக்க சொல்லுவாரு.. சப்டிடிடூட் போடணும்.. பேட்டிங்க மட்டும் விடமாட்டங்க இல்ல..
வருகைக்கு நன்றி சகா..
அசத்திடீங்க அண்ணாச்சி, அப்படியே ஒரு பழைய மேட்ச் ஆடின போல இருந்திச்சு.
//“மேலுக்குச் சொகமில்ல மாப்ள.. வந்தாலும் ஸ்பின் தான் போடுவேன்..ஓக்கேவா..”
// அப்பிடி போடு.
//எதிர் டீம் சொன்னபடி சரியான நேரத்திற்கு வரவே மாட்டார்கள்.. தெளிவாக ரெண்டு சின்னப்பையன்களை முதலில் அனுப்பி விடுவார்கள்..
//
எல்லா ஊர்லயும் எதிர் டீம் இதயேத் தான் பண்றானுகளா! :)
//அடுத்த பிரச்சனை அம்பயரிங்.. பேட்டிங் சைடில் இருந்து இருவர் போக வேண்டும்.. ம்கூம்.. ஒருத்தனும் போகமாட்டான்..
//
மாட்டினவன் எசகு பிசகா அவுட் குடுத்தான்... அவ்ளோ தான் அன்னைக்கு அவன்.
//“ஆல் ரியல் பர்ஸ்ட் பால்..” என்று சொல்லும் அம்பயர் மனதிற்குள்.. ரைட் ஆர்ம் ஓவர்னு சொல்லலை..
//
இப்பிடியெல்லாம் சொல்லி எத்தன நாளாச்சு... ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :(
//“பால்ல ஒண்ணுமே இல்ல மாப்ள.. கல்லுல பட்டு திரும்பிருச்சு”
//
:)) அப்பிடி சொல்லிட்டு திரும்ப முன்னாடி... ஒரு கூட்டம் பேட்ட தூக்கிட்டு நிப்பாய்ங்க அடிக்கிறதுக்கு.
//இரு அப்பா வரட்டும்” போன்ற திட்டுக்களை சட்டை செய்யாமல் சாப்பிட்டு ஒரு தூக்கம் போட்டால்....
அது கிரிக்கெட்....//
அது தான் நம்ம ஏரியா கிரிக்கெட்... கலக்கல் பாஸூ
ரொம்ப வருஷம் பின்னாடி போன மாதிரி இருந்தது.
வரிக்கு வரி repeattu போடலாம்,அவ்வளவு விஷயமும் நடந்திருக்கிறது.
kits வாங்க வீடு வீடாக போய் collection செய்திருக்கிறீர்களா??
நல்லா அடிச்சு ஆடுங்கப்பு!!
நன்றாக இருக்கிறது அண்ணா...
15 வருடங்களுக்கு முன்னாடி போன் அவ்வளவாக இல்லை என்று நினைக்கிறேன்..
ஆனால் எங்களது ஊரில் இன்றும் ஞாயிற்றுக்கிழமை என்றால் ஆளை சேர்க்கும்முன் பெரும்பாடு ஆகிவிடுகிறது. என்ன இருந்தாலும் அது ஒரு தனி சுகம்தான்!!!!!!!!
கிளிஞ்ச கிளவ்ஸ், கர்ச்சீப்பால் கட்டிய பேட், சணல் கயிறு சுத்தி பிடிக்குமிடத்தில் இறுக்கம் உருவாக்கிய மட்டை, ரன்னர் நிற்குமிடத்தில் ஒரே ஒரு ஸ்டம்ப், எது பவுண்டரினே தெரியாத மைதானம், முக்கியமா பந்தை அடித்து விட்டு ஓடும் போதெல்லாம் துருத்திக்கொண்டு உடலின் அதிமுக்கியமான பாகத்தில் உராய்ந்து, சமயத்தில் கழண்டு விழுந்து அழிச்சாட்டியம் பண்ணும் "அந்தக்" கவசம், பேட்டிங் பண்றவனுக்கு மட்டும் கொடுக்கப்படும் தொப்பி, நேத்து அவனோட ஃபிகரைப் ப்த்தி கமெண்ட் அடிச்சதுனால காண்டுல இன்னைக்கு ஆட்டத்துல எங்கியோ பட்ட பந்துக்கெல்லாம் LBW கொடுக்கும் அம்பயர்,
இந்த மாதிரி சுவாரசியங்கள் எல்லாம் இல்லாம விளையாண்டா, அதுவும் ஒரு கிரிக்கெட்டா?
\\\உடனே அவர்கள்.. “ இல்ல பாஸ் விருதுநகர்ல ஒரு டோர்னமட் இருக்கு.. அதுக்கு போறோம்..” என்று பிகு பண்ணுவார்கள் ஜெயித்த திமிரில்..\\\
எனக்கும் விருதுநகர் பக்கத்தில் தான் ஊர் அண்ணா
மலரும் நினைவுகளா? சூப்பர்... நாங்கள்லாம் ஹாக்கி பேட்லயே கிரிக்கெட் மேட்ச் போட்டுப் பொளந்துருவோம்... பேட் பாலுக்கு காசு வராது... சோடா கலர் ஒயிட்ரோஸுக்கு கரெக்டா காசு தேத்திடுவோம்.எதிராளி எதாச்சும் பேத்து மாத்து பண்ணினான்னு சும்மாவாச்சும் கோள் மூட்டி சண்டை போட்டு ஜெயிச்சதுக்கு காசு குடுக்காமயே தொரத்திடுவோம். :)
அதே தொரத்தல்தான் எங்களுக்கும் கிடைக்கும்... அதையும் சொல்லணுமில்ல....
//சுண்ணாம்பை கால் கட்டை விரலில் நெயில் பாலிஸ் போல தடவிக்கொண்டு.. “ ஊர்ல இருக்குற வெயில்லாம் உந்தலைல தான்..இரு அப்பா வரட்டும்” போன்ற திட்டுக்களை சட்டை செய்யாமல் சாப்பிட்டு ஒரு தூக்கம் போட்டால்....
அது கிரிக்கெட்....
//
சரியா அனுபவிச்சிருக்கீங்க.. நல்ல, இனிமையான பதிவு நண்பா..
அப்படியே கிரிக்கெட் பார்த்தமாதிரி!!! கலக்கல்ங்க...
எனது ஓட்டு!!! உங்களுக்கே!!
ஆஹா வரிக்கு வரி அட்டகாசம்
அதனால்
\\
பதிவு
\\
கலக்கல்.
ஒன்னை சொல்ல விட்டுட்டீங்க நர்சிம்...கைகளில் வந்து விழும் கேட்சை கொட்டைவிட்டுட்டு..இல்ல..மச்சி..பேட்டுக்கிட்ட பிச்சாயிட்டுத்தான் வந்துதுன்னு அழிச்சாட்டியம் பண்ணும் சுப்புணிகள்
அனுபவிச்சு எழுதி இருக்கீங்க :)
நான் முதல் முறை கிரிக்கெட் விளையாடப் போந்தது டெல்லியில். அதிசயமாக சாலா மதராஸியைச் சேர்த்துக்கொண்டார்கள். என் முறை வந்தது. பேட் கொடுத்தார்கள். தூக்க முடியவில்லை. அதுதான் கடைசி முறையும் கூட.
கலக்கல்.. அப்படியே கொஞ்சக் காலம் முன்னாள் நாங்கள் ஆடிய (சத்தியமா ஓரிரு வருடங்களுக்கு முன் வரை) வின்னர்ஸ் கழக ஆட்டங்களையும்,பாடசாலைக் கழக ஆட்டங்களையும் கண் முன்னாள் கொண்டு வந்தது..
இலங்கை என்றால் என்ன இந்தியா என்றால் என்ன சாட்டுக்கள்,அழிச்சாட்டியங்கள் எல்ல்லாம் ஒன்னே தான்.. ;)
பதிவர் எல்லாம் சேர்ந்து கூட்டம் தான் போடலாமா? கிரிக்கெட் போட்டி ஒன்று போட்டால் என்ன? ;)
கும்மி போட தேடி வந்துராதேங்கைய்யா. சும்மா ஒரு ஐடியா ;)
Super
Neriya Gnabagam varuthu
Ball Match
Rs 10 match
Groundla Appa kita Batala Adi
Bat owner than Team Captain
Boss ippa Ground enga irruku, plot pottu vithutanga.
ஆஹா, சூப்பர்ப்ப் போஸ்டுங்க..!
கிரிக்கெட் பத்தி முழு பதிவு இப்பதான் படிக்கிறேன். செம கலக்கல்ஸ்..!
:))
//கார்க்கி said...
வானவில் கார்த்திக் ஒன்ன மாதிரி எங்களுக்கெல்லாம் cricket is more sexier than girls.
ஹை..! தேங்க்ஸ் கார்க்கி..!
:))
me the 99th..!
:)
(i mean the followers)
அதுதான் கிரிக்கெட்!
சூப்பர்.
//அவரு ஓப்பனிங் பேட்ஸ்மேனாம்.. அதனால் பவுலிங் எடுக்க சொல்லுவாரு.. சப்டிடிடூட் போடணும்.. பேட்டிங்க மட்டும் விடமாட்டங்க இல்ல..//
nice idea.
அடடா... கொசுவத்திய கொளுத்தி போட்டுட்டீங்க.
ஹ்ம்ம்... அதெல்லாம் கோல்டன் டேஸ்.
இன்னைக்கு நம்ம பசங்க எல்லாம் இந்த சந்தோஷங்களை அனுபவிக்க வாய்ப்பில்லாமல் இருப்பது ஒரு மிகப் பெரிய சோகம்.
//
அடுத்த பிரச்சனை அம்பயரிங்.. பேட்டிங் சைடில் இருந்து இருவர் போக வேண்டும்.. ம்கூம்.. ஒருத்தனும் போகமாட்டான்.. போனால் ஒண்டவுன் பேட்டிங் இறங்க முடியாதல்லவா.. மெயின் அப்பயரிங் கூட ஓக்கே.. இந்த லெக் அம்பயரிங்.. இருப்பதிலேயே லொத்தையாக இருக்கும் ஒருவனை “அடுத்த மேச்சுல ஓப்பனிங் நீதாண்டா” என மட்டைய கட்டி நிக்க விடவேண்டும்..//
ஆகா,
ரசிச்சு எழுதியிருக்கீங்க
//ஆள் லேட்டா வந்தா பேட்டிங் இல்ல எடுக்கனும்?//
இவர் ரொம்ப லேட்டாவருவார். பீல்டீங் பண்ண மாட்டார். பேட்டிங் மட்டும் தான்
//நேத்து அவனோட ஃபிகரைப் ப்த்தி கமெண்ட் அடிச்சதுனால காண்டுல இன்னைக்கு ஆட்டத்துல எங்கியோ பட்ட பந்துக்கெல்லாம் LBW கொடுக்கும் அம்பயர், //
ஹி ஹி ஹி :) :) :)
ஓன் பிட்ச் கிரிக்கெட்
ஓன் சைட் கிரிக்கெட்
என்ற பல ஐட்டங்களும் உண்டே
அட்டகாசமான பதிவுங்க...
ரொம்ப நாள் ஆச்சு இப்படியோரு அற்புதமான பதிவு படிச்சு.. நீங்க இன்னொரு ‘சென்னை 600028' படம் எடுக்கல்லாம்.. அவ்வளவு விஷயம் இருக்கு..
கலக்கல்ஸ்...
இன்னொரு சென்னை 28 பார்த்த உணர்வு. கலக்கல் பாஸ்:)
இவ்ளோ நல்ல பதிவ லீவு நாள்ல ஏன் போட்டீங்கன்னு திட்டணும்னு பார்த்தா.. கிழ 30க்கும் மேல கமெண்ட்!
சூப்பரா இருந்தா என்ன கிழமையும் ஹிட் ஆகும் போல!!!
ஆனா... நிச்சயமா இந்தப் பதிவ புக்மார்க் பண்ணி வெச்சுக்கங்க.. கொஞ்ச நாள் கழிச்சு வீக் டேஸ்ல மீள் பதிவாப் போடுங்க..
சூப்பர்!
//ஆனா... நிச்சயமா இந்தப் பதிவ புக்மார்க் பண்ணி வெச்சுக்கங்க.. கொஞ்ச நாள் கழிச்சு வீக் டேஸ்ல மீள் பதிவாப் போடுங்க..
சூப்பர்!//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.................................
நர்சிம், எங்கள கொசுவத்தி சுத்த வைக்கிறதே உங்களுக்கு பொழப்பா போச்சு.
ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நான் எழுதுனது. ஆனா இது பக்கா பட்டிகாட்டு கிரிக்கட். டைம் இருந்தா படிச்சுபாருங்க
http://nandhu1.blogspot.com/2007/11/blog-post_17.html
வர்ற ஞாயிறு ஒரு மட்ச் போட்டுரலாம் வாறிங்களா...:)
அப்பிடியே ஊரில மட்ச் விளையாடினா மாதிரி இருக்கு...!
சூப்பர்..அருமை..அட்டகாசம்..
கலக்கிட்டிங்க...தூள்..இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்....
ஆனா ஒன்னு கொசுவத்தி சுத்த வச்சிட்டிங்களே!!!!அவ்வ்வ்வ்வ்வ்
;))
//ஒவ்வொரு முறையும் சூடு பிடித்துக் கொள்ளும்.. படாத பாடு பட்டு.. வேறு வழியில்லாம் அம்மாவிடம் உண்மையை சொல்லி.. சுண்ணாம்பை கால் கட்டை விரலில் நெயில் பாலிஸ் போல தடவிக்கொண்டு.. “//
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்............. அருமை சகா.......... அதெல்லாம் ஒரு காலம்
அட்டகாசமான பதிவு.
இங்க, San Francisco Bay areaல, நம்ம மக்கள் ஒரேயடியா ஆக்கிரமிச்சுட்டதால எக்கச்சக்க teams இருக்கு (டென்னிஸ் பால் & லெதர் பால்), & இங்கயும் டீம் ரெடி பண்ணுறதுக்குள்ள நாக்கு தள்ளிடும் :). ஒரே ஒரு வித்தியாசம் - அம்மா கிட்ட திட்டு வாங்கறதுக்கு பதில் வீட்டுக்காரம்மா கிட்ட திட்டு வாங்கணும், அவ்ளோ தான்.
எனக்கு அப்போதிருந்தே கிரிக்கெட் பிடிப்பதில்லை, விளையாடியதுமில்லை.. எனினும் இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் பல சந்தர்ப்பங்களில் சாட்சியாக இருந்திருக்கிறேன். கச்சிதமாக வந்திருக்கிறது கட்டுரை.. கருத்திலும், நடையிலும்.!
கைலியைக் கட்டிக் கொண்டு, வெள்ளைப் பேண்ட்டை நன்றாக நீவி,மடித்து கக்கத்தில் வைத்து
அதோட கைலிக்குள்ள பால ஓளிச்சு வச்சுகிட்டு நெனச்சாலே சிரிப்பு வருது.
எங்க அப்பா போன எடுத்தா எதுவும் சொல்லாத மாப்ள.. போனே பண்ணாத, நான் வந்துருவேன்”
மாப்ளே வீட்டுப்பக்கம் மட்டும் வந்திராதே கரெக்டா வந்துருவேன்.
வந்தவுடன் சும்மா இருக்க மாட்டார்கள்..“கிடுங்” என்று இருக்கும் இருவர் பந்தை எடுத்து எறிந்து(பெளலிங்)ப்ராக்டிஸ் பண்ணி புளியைக் கரைப்பார்கள்..
புளிய மட்டுமா,அதுல யாராவது குண்டா, உயரமா, பாஸ்ட் பவுலரா இருந்தா மொத்த வயிருமே கலங்கிரும்.
ஒவ்வொரு முறையும் சூடு பிடித்துக் கொள்ளும்.. படாத பாடு பட்டு.. வேறு வழியில்லாம் அம்மாவிடம் உண்மையை சொல்லி.. சுண்ணாம்பை கால் கட்டை விரலில் நெயில் பாலிஸ் போல தடவிக்கொண்டு.. “
நாமெல்லாம் வெளக்கெண்ணை தான் பாஸ்.
அப்படியே அவனியாபுரம் கிரவுண்டுல வெளயாடியது போல இருந்தது நர்சிம்.வாழ்த்துக்கள்
அன்புடன்
காவேரி கணேஷ்
கலக்கல் தல
பழைய நினைவுகள் அப்படியே கண்முன்
//அப்பாவே ஸ்கூட்டியிலோ, ஏதாவது ஒரு ப்ளஸ்ஸிலோ மகனையும்,கிரிக்கெட் கிட் bagயும் ஏற்றிக் கொண்டு கோச்சிங் கிளாஸ் வாசலில் நின்று தன் மகன் சச்சின்(இப்பொழுது டோனி) ஆகிவிட மாட்டானா என்ற கனவில் மிதப்பதை பார்க்கலாம்..பையன்களும் இந்த விளையாட்டும் ஒரு படிப்பு/வகுப்பு போல பாவித்து அந்த ஒரு மணிநேரத்தை கடத்துகிறார்கள்..
//
சராசரி பெற்றோருக்கே உள்ள கனவுங்க அது, தான் சாதிக்காததை தன் மகன் மூலமா சாதிக்கலாம்னுதான்
// எங்க அப்பா போன எடுத்தா எதுவும் சொல்லாத மாப்ள.. போனே பண்ணாத, நான் வந்துருவேன்”
//
ஹா ஹா சிறுவயதிற்கே உள்ள குசும்பு, ஆமா அந்த காலத்துலே உங்க வீட்டுலே போனெல்லாம் இருந்ததா?
//கைலியைக் கட்டிக் கொண்டு, வெள்ளைப் பேண்ட்டை நன்றாக நீவி,மடித்து கக்கத்தில் வைத்து, ஏதாவது ஒரு பாடப்புத்தகத்தை எடுத்து சைக்கிள் கேரியரில் சொருகி, படிக்க போவது போலவே பாவ்லா காட்டி, வீட்டில் இருந்து கிளம்புவதே ஒரு சவால்தான்.
///
எதையோ சாதிச்சது மாதிரியான கிக்ங்க அது
//“மேலுக்குச் சொகமில்ல மாப்ள.. வந்தாலும் ஸ்பின் தான் போடுவேன்..ஓக்கேவா..”
//
நம்மளை விட்டா ஆளுஇல்லேன்ற திமிரு தெனாவட்டு
//இவங்களோட மேட்ச் வேணாம்ப்பானு சொன்னா கேட்டாத்தான.. எப்பயும் இப்படித்தான் செய்யிறாங்க.. நான் போறனப்பா..”//
ஹா ஹா பந்தா
//வந்தவுடன் சும்மா இருக்க மாட்டார்கள்..“கிடுங்” என்று இருக்கும் இருவர் பந்தை எடுத்து எறிந்து(பெளலிங்)ப்ராக்டிஸ் பண்ணி புளியைக் கரைப்பார்கள்..
//
ஆமாம் பார்த்தவுடன் வாயைப்பிளக்க வைக்கும் முயற்சி
//“உருட்டிட்டான் தாயளி.. அடி பிண்ணலாம்னு நெனைச்சேன்.. நான் அவுட் ஆனதும் ஸ்பின்ன கொண்டு வர்றாங்க பாரு..”
/
ஹா ஹா இது இப்போதும் நடக்கிற ஒன்றுதான்
//“ ஊர்ல இருக்குற வெயில்லாம் உந்தலைல தான்..இரு அப்பா வரட்டும்” போன்ற திட்டுக்களை சட்டை செய்யாமல் சாப்பிட்டு ஒரு தூக்கம் போட்டால்....
//
அதை சமாளிப்பதுதாங்க உண்மைலேயே மாட்ச் ஜெயிச்சாமாதிரி
வாழ்த்துக்கள் தல
ரொம்ப அருமையா நினைவுகளை பகிர்ந்திருக்கீங்க
ஆஹா 50 போட்ட சந்தோஷம்
கலக்கல் வர்ணனை நர்சிம்.. கலக்குறீங்க..
//
சூடு பிடித்துக் கொள்ளும்.. படாத பாடு பட்டு..
//
அதை ஏன் ஞாபகப்படுத்துறீங்க.. சுண்ணாம்பு, டப்பால தண்ணி (சமயத்துல தண்ணி தொட்டி), விளக்கெண்ணெய், மோர், இளநி, பி காம்ப்ளெக்ஸ் மாத்திரைன்னு எத்தனை எத்தனை மருத்துவம். எவ்ளோ பாடு பட்டாலும், மறுபடியும் வெயில்ல போய் விளையாடமயா இருந்திருக்கோம்!!!
நல்ல பதிவு நர்சிம்..
அட்டகாசம் நரசிம். வாத்தியார் கிரிக்கெட் பற்றி எழுதியது ஞாபகம் வருகிறது. பதிவு முழுதும் சரளமான சர வெடிகள். நிறைய பேர் பல வரிகளைச் சொல்லி விட்டார்கள் எனக்குப் பிடித்தது:
//“ஆல் ரியல் பர்ஸ்ட் பால்..” என்று சொல்லும் அம்பயர் மனதிற்குள்.. ரைட் ஆர்ம் ஓவர்னு சொல்லலை.. நோ பால் கொடுத்துவிடவேண்டும் என சந்தோசமாய் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது.. ஓடி வருவதை நிறுத்தி.. “ரைட் ஆர்ம்.. அரவுண்டு பாஸ்” என்று சிரித்துக் கொண்டே மறுபடியும் பவுலிங் போட வருவான்.. அதில் அவனுக்கு ஒரு திருப்தி..//
கிரிக்கெட் போட்டியின் பல்வேறு நுண்ணரசியல்களில் இதுவும் ஒன்று.
One of your best posts.
அனுஜன்யா
அருமை அட்டகாசம் !
கலக்கல்!
// உடனே அவர்கள்.. “ இல்ல பாஸ் விருதுநகர்ல ஒரு டோர்னமட் இருக்கு.. அதுக்கு போறோம்..” என்று பிகு பண்ணுவார்கள் ஜெயித்த திமிரில்.. //
நமக்கும் விருதுநகர் தான் தல.
நன்றி!! நன்றி..அனைவருக்கும் நன்றி..!
எத்தனைவித கிரிக்கெட் அனுபவங்கள்.. எத்தனை வித நினைவுக் பகிர்வுகள்.. நன்றி!!
விஷயம் தெரியாத என்னைப்போன்றவர்களுக்கு கூட நீங்கள் எழுதிய விதம் புரிய வைத்து விடும்.
அருமை.
பத்து வருடம் அப்படியே பின்னோக்கி போய் விட்டேன்.
இப்பவும் கிரிகெட் விளையாட ஆசை தான்,
ஆனால் பாருங்க நான் கிரவுண்டு பக்கம் போனா மட்டும் பசங்க தெரிச்சி ஓடுறானுங்க!
:)))
me the 60 :):)
Nice thala. Still playing cricket. Experienced all the facts that are written here. Keep going.
Thanks,
Arun
நோ பால் சொல்ல விரும்பும் அம்பயர், ஸ்கோர் ஏத்த மாட்டோம்ஜி எனச் சொல்லும் ஸ்கோரர் என அசத்தல்...
சரி, ஒரு டோர்னமெண்ட் ஆர்கனைஸ் பண்றீங்களா?
//உருட்டிட்டான் தாயளி.. அடி பிண்ணலாம்னு நெனைச்சேன்.. நான் அவுட் ஆனதும் ஸ்பின்ன கொண்டு வர்றாங்க பாரு..//
அவ்வ்வ்வ் சேம் பிளட்!
நல்ல் கொசுவர்த்தி நர்சிம். அப்படியே ஒரு 30 வருடம் பின்ன்னோக்கிப் போக வச்சுட்டீங்க.
அட்டகாசமான பதிவு...கலக்கல் :))).
பழைய நினைவுகளை மீட்டிருக்கிறது பதிவு...
மறக்கவேமுடியாத அந்த கிரிக்கெட் நாட்களாஇ கண் முன் கொண்டுவந்துவிட்டீர்கள். நன்றி
ஒவ்வொரு முறையும் சூடு பிடித்துக் கொள்ளும்.. படாத பாடு பட்டு.. வேறு வழியில்லாம் அம்மாவிடம் உண்மையை சொல்லி.. சுண்ணாம்பை கால் கட்டை விரலில் நெயில் பாலிஸ் போல தடவிக்கொண்டு.. “ ஊர்ல இருக்குற வெயில்லாம் உந்தலைல தான்..இரு அப்பா வரட்டும்” போன்ற திட்டுக்களை சட்டை செய்யாமல் சாப்பிட்டு ஒரு தூக்கம் போட்டால்....
அது கிரிக்கெட்....
/....
அண்ணே அப்படியே நான் எழுதியது போல உணர்கிறேன்
//“ கரெக்ட்டா வந்துருவேன் மாப்ள.. ஒரு சின்ன மேட்டர முடிச்சிட்டு வந்துருவேன்.. எதுக்கும் டாஸ் வின் பண்ணா பவுலிங் எடுங்க//
ஆள் லேட்டா வந்தா பேட்டிங் இல்ல எடுக்கனும்?
Post a Comment