கள் 1
கள் 2
கள் 3
ஆட்டோகிராஃப் படத்தில் சேரன்,ஸ்நேகாவிடம் பேசுவாரே..
“சக்கர டப்பா எங்கடா திவ்யா..
அப்படில்லாம் இல்லப்பா..”
அதுபோல அநியாயத்துக்கு நெகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர் அவ்வப்பொழுது பேச வைக்கும் பருவம் இறுதி வருடம்.
எதிர்காலம் பற்றிய பயமும், ஏதாவது செய்துவிடவேண்டும் என்ற துடிப்பும் சற்று மேலெழும் வருடம்.
‘குரூப் ஸ்டெடி’.. என்ற ஒன்றை எவன் கண்டுபிடித்தானோ அவன் வாழ்க. செட்டில் எவனாவது ஒருவன் வீட்டில் இரவு கூடுவது. ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை பஸ்ஸ்டாண்டிற்கோ, பாய் கடைக்கோ டீ சாப்பிட.. அதில், நல்லா சாப்பிடக்கூடிய கோஷ்டி மீந்து போன பூரி,வடை என எதுவாக இருந்தாலும் எடுத்து ‘அட்டியலை’போடுவார்கள்.
அக்கம் பக்கத்தில் ஏதாவது ஒருவீட்டில் திடீரென லைட் எறிந்து அணைந்தால் பசங்க முகம் பிரகாசமாகி,புருவ உயர்த்துதல்கள்,புன்முறுவல்கள் நடக்கும்.
இப்படி, ஒருமணிக்கொரு டீ, பெண்களைப் பற்றிய பேச்சு என எல்லாம் நடக்கும் குரூப்பாக.. படிப்பதைத் தவிர..
மறுநாள் காலையில் பரபரப்பாக வீட்டிற்கு கிளம்பும் போது, “மாப்ள இந்நிக்கி எப்படியும் நைட்டு, பேசாம முடிக்கப் பார்க்கணும்டா” என சொல்லிவிட்டு கிளம்புவார்கள்... தினமும்.
அதுவரை ‘அப்பன்’ என்றும் ‘பெரிசு’ என்று அழைக்கப்பட்டவர் ‘அப்பா பாவம்டா’ என்ற ஃபீலிங் வர எத்தனிக்கும் தருணங்களில் புத்தகங்கள் கைஏறும்..
தினமும் ஏதாவது பொய் சொல்லி அம்மாவிடம் காசு வாங்கி வந்த நாட்களுக்கு பிராயச்சித்தமாக, ‘எப்படியும் வேலைக்குப் போய் சம்பாதிச்சுக் கொட்டணும் மாப்ள’ என்ற வெறி,வேலைக்குச் செல்லவேண்டிய திரி கிள்ளும்.
‘எப்பொழுதும்’ சேர்ந்தே இருந்த நட்பு வட்டம் இனி ‘எப்பொழுதோ’ தான் கூடும் என்ற எண்ணம் வரும்.. அப்பொழுது தெரியாது ‘எப்பொழுதுமே’ இனி இது போல கூடப்போவதில்லை என்பது.
இப்படி அத்தனை விதமான சேரன் மேட்டர்கள் நடந்தாலும் அதை எல்லாம் தாண்டி,சீனியர் என்ற கித்தாப்பில் வேறு டிப்பார்ட்மெண்ட்களுடன் சண்டையும்,சத்தாய்ப்புகளும் நடந்துகொண்டுதான் இருக்கும்.
WELCOME PARTY.. அதாவது முதல்வருட பசங்களுக்கு மூன்றாம் வருட மாணவர்கள் வைக்க வேண்டும்..
இது ‘பாலையா’ ஒரு படத்தில் ‘வரகுணா’என்று சொல்வாரே.. அதாவது ஏதாவது ஒன்று வேண்டும் என்றால் அதற்கு முன் போடப்படும் பிட்.. இந்த வெல்கம் பார்ட்டி ‘வரகுணா’, வேறெதற்கும் அல்ல.. நல்ல செழுமையான ஃபேர்வெல் பார்ட்டிக்கு.. அதை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நடத்த வேண்டும்..
கூத்தும் ஊத்தும் தான்.. 52வது தடவையாக “ஹம் ஆப்க்கே ஹெய்ன் ஹெளன்” படத்திற்கு.. அத்தனை பாடல்களுக்கும் ஆல்கஹால் விசில் பறக்கும்..
அன்று ஹாஸ்டல் மாணவர்கள் அலப்பறை இன்னும் அதிகமாக இருக்கும்.. வண்டி வைத்திருக்கும் மாணவர்கள் அங்குதான் டேரா.. கடை கன்னிக்கு போய் ஹெல்ப் பண்ணுவார்கள்.. நாக்கை தொங்கப்போட்டு...
“கோழி என்ன விலைண்ணே..”
அவர் என்ன விலை சொன்னாலும் ஜூனியர் மாணவன் முன்னர் தம் பெருமையை நிலைநாட்ட.. “ என்னண்ணே கோழிய கேட்டா யானைய சொல்ற.. செரி செரி..பார்த்து அறுத்து வை.. காலைல மட்டன் ஃப்ரெஷ்ஷா இருக்கணும் ஆமா”
இங்கிலீஷ் தவ்வும்..நம்மாளுக்கு செத்தா எல்லாமே ‘மட்டன்’ தான்..
பார்ட்டி நடக்கும் இரவு.. போதையின் உச்சத்தில்.. மூன்று வருடம் வாங்கிய திட்டுக்கள் மொத்தமும் திரட்டி,அறிவுறையாக மாற்றி.. அகப்பட்ட ஜூனியர்களிடம்.. அரிஸ்டாட்டில் ரேஞ்சில்.. அவில்த்து விடுவார்கள்..
“என்னா.. அண்ணே சொல்றது புரிஞ்சிச்சா... எதுனாலும் நம்ம காலேஜ்தான்..
எதுன்னாலும்...”
“......”
“சொல்லுங்கடா.. எதுன்னாலும்..”
“ நம்ம காலேஜ்தாண்ணே”
“ஜாரிகள பார்த்தமா, சைன போட்டமா,டைவா குடுத்தமான்னு இருக்கணும்..லவ் பண்ணி அசிங்கப்படுத்தக்கூடாது.. லவ் ப..ண்..ணி..”
“அசிங்கப் படுத்துக் கூடாது..”
“அதேதான்.. எதாவது உங்களுக்கு பிரச்சனைன்னு வெய்யி.. ஒரு குரல்..ஒரே குரல்தான் அண்ணே எங்க இருந்தாலும் வருவேன் உங்களுக்கு.. டேய் பிடிங்கடா..பிடிங்கடா..” என போதையில் வீரவசனம் பேசிக்கொண்டே விழுந்து விடுவார்கள் அண்ணன்கள்..
இரண்டாம் வருட ஜூனியர்களும் மூன்றாம் வருடம் அடி எடுத்து வைக்கப்போகும் எண்ணத்தில் மிகவும் அன்பாக இருப்பது போல் பொறுத்துக்கொள்வார்கள்..
அவ்வளவுதான் அந்த பார்ட்டி முடிந்துவிட்டதுமே பிரிவு எண்ணமும் அதற்கு அடுத்த கட்டங்களும்.. தானாக நடந்தேறிவிடும்.. கொஞ்சம் அதிக பொறுப்பும் அதிர்ஷ்டமும் உள்ள மாணவர்கள் பாஸாகி, போன ஜென்மத்தில் பாவம் செய்திருந்தால் உயர்கல்விக்கும் அதிக பாவம் செய்திருந்தால் வேலைக்கும்,பாவம் மட்டுமே செய்திருந்தால் திருமணமும்..இப்படி ஏதாவது ஒன்றில் ஐக்கியமாகி,
மூன்று வருடங்கள் எப்பொழுதும் கூடவே இருந்த நண்பனை எப்பொழுதாவது எங்காவது பார்க்க நேர்ந்தால்.. “அடையாளமே தெரியலைங்களே.. வெயிட் போட்டீங்க.. ” என்ற ரீதியில்..
ச்சே..அட போங்கப்பா..
..
Monday, March 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
45 comments:
\\அதுபோல அநியாயத்துக்கு நெகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர் அவ்வப்பொழுது பேச வைக்கும் பருவம் இறுதி வருடம்.\\
இப்பவும் நான் அப்படித்தான் பேசுறேன்னு நிறைய பேர் சொல்றாங்க
பொசுக் என்று முடிந்தது போல் இருக்கிறது. என்ன குறைகிறது என்று பாருங்கள்.
இறுதி பார்ட் பிரமாதம் நரசிம்.
கடைசி வாக்கியம் கண்ணில் நீர்.
\\இது ‘பாலையா’ ஒரு படத்தில் ‘வரகுணா’என்று சொல்வாரே\\
\\பூரி,வடை என எதுவாக இருந்தாலும் எடுத்து ‘அட்டியலை’போடுவார்கள்\\
\\அத்தனை பாடல்களுக்கும் ஆல்கஹால் விசில் பறக்கும்..
\\
எங்கள் செட்டில் திக்தனா திக்தனா பாட்டிற்க்கு எல்லோரும் திரைக்கு முன்னால் போய் ஆடி, பின் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இரண்டாம் முறை அந்தப் பாடல் ரிப்பீட் செய்யப்பட்டது.
\\அக்கம் பக்கத்தில் ஏதாவது ஒருவீட்டில் திடீரென லைட் எறிந்து அணைந்தால் பசங்க முகம் பிரகாசமாகி,புருவ உயர்த்துதல்கள்,புன்முறுவல்கள் நடக்கும்\\
:-)))))))))))))))))))))
//‘எப்பொழுதும்’ சேர்ந்தே இருந்த நட்பு வட்டம் இனி ‘எப்பொழுதோ’ தான் கூடும் என்ற எண்ணம் வரும்.. அப்பொழுது தெரியாது ‘எப்பொழுதுமே’ இனி இது போல கூடப்போவதில்லை என்பது.//
வாழ்க்கையில் மறக்க நினைத்தாலும் முடியாத அழகிய நினைவுகளின் சுவாரசியமான பதிவுகள்...
இப்பத்தான் காலேஜ் முடிஞ்சு வந்த மாதிரி இருக்கு !!
...............
.................
.................
..................
...................
(மப்புல எல்லாமே புள்ளி புள்ளியா தெரியுமே)
அட்டகாசம்.
படிக்கும்போதே கஷ்டமா இருக்குங்க. யோசிக்கவே பிடிக்கலை. அப்ப பார்த்துக்கலாம்.
\\மாப்ள இந்நிக்கி எப்படியும் நைட்டு, பேசாம முடிக்கப் பார்க்கணும்டா”\\
தெளிவா சொல்லிட்டீங்களே!
\\“அடையாளமே தெரியலைங்களே.. வெயிட் போட்டீங்க.. ” என்ற ரீதியில்..
ச்சே..அட போங்கப்பா..\\
கலக்ஸ் தல...
கள்ளூறி நினைவுகள் simply superb.
இறுதிவரை படிக்க முடியவில்லை....
நினைவலைகளின் நீர் கண்ணில் தெறித்து, இறுதி பாராக்கள் சற்று மங்கலாகவே தெரிந்தது.
//ஒருமணிக்கொரு டீ, பெண்களைப் பற்றிய பேச்சு என எல்லாம் நடக்கும் குரூப்பாக..//
இதாங்க மெயின் மேட்டரே குரூப் ஸ்டடில..
// “அடையாளமே தெரியலைங்களே.. வெயிட் போட்டீங்க.. ” என்ற ரீதியில்..//
அருமை நர்சிம்....
:((Autograph.. :((
பிரமாதம்
கோழி-மட்டன்...
போதையிலா இல்லை பிழையா... நர்சிம் அண்ணே...?
ரமேஷ் சொல்வது போல் திடீர்னு முடியுரமாதிரி பீலிங். யோசித்தால், மொத்த காலேஜ் வாழ்க்கையே அப்படித்தானே. You have captured it well. Nostalgic. நான்கு பதிவுகளும் சேர்த்து, நிச்சயம் போட்டியில் ஒரு கலக்கு கலக்கும். அதை விட முக்கியமாக, வாசகர்களுக்கு ஒரு அருமையான கல்லூரி flash back கிடைத்திருக்கிறது. பாராட்டுகள் நர்சிம்.
ஆமா, எப்போ நர்சிம்மாயணம்?
அனுஜன்யா
வாங்க ஜமால்ண்ணே..
ரமேஷ்ண்ணா..முடிந்தவரை எழுதிவிட்டேன்..முடிந்துவிட்டது..முடித்துவிட்டேன்..
நன்றி மணிகண்டன்
நன்றி முரளிகண்ணன்..
நன்றி புதியவன்..அதுஒரு காலம்..ஹும்
நன்றி மகேஷ்.. நன்றி சுரேஷ்..(புள்ளியா வெள்ளையாத்தானே தெரியுது..புள்ளி இருக்கா என்ன?)
நன்றி ச்சின்னப்பையன்,கார்த்திக்,ஜமால்,ராஜா
நைனா..உங்களயே சீரியஸா பின்னூட்டம் போட வெச்சுட்டேனே..வெற்றி வெற்றி..
நன்றி செய்யது, நன்றி செய்யது, நன்றி ஸ்ரீமதி, ராதாகிருஷ்ணன் ஸார்
//டக்ளஸ்....... said...
கோழி-மட்டன்...
போதையிலா இல்லை பிழையா... நர்சிம் அண்ணே...?
//
வாங்க டக்ளஸ்ண்ணே.. அடுத்த வரிய பார்க்கலயா??
//இங்கிலீஷ் தவ்வும்..நம்மாளுக்கு செத்தா எல்லாமே ‘மட்டன்’ தான்..//
வாங்க அனுஜன்யூத்யா.. உஙக் நிலாமுற்றம் ஆரம்பித்தபிறகுதான் நம்ம ’யணம்’..
உங்களோட எபிசோடு முடிஞசது கொஞ்சம் வருத்தம், அப்படியே கல்லூரி வாழ்க்கையில் ஒரு ரவுண்ட் வந்தாமாதிரி இருந்தது
குரூப் ஸ்டெடி கலக்கல்
இறுதி பார்ட்டி ரொம்பவே கலக்கல்
பஸ் டே, ட்ரைன் டே இதைப்பற்றி சொல்ல மறந்திட்டீங்களே
//தினமும் ஏதாவது பொய் சொல்லி அம்மாவிடம் காசு வாங்கி வந்த நாட்களுக்கு பிராயச்சித்தமாக, ‘எப்படியும் வேலைக்குப் போய் சம்பாதிச்சுக் கொட்டணும் மாப்ள’ என்ற வெறி,வேலைக்குச் செல்லவேண்டிய திரி கிள்ளும்//
உண்மையான வரிகள்
//மூன்று வருடங்கள் எப்பொழுதும் கூடவே இருந்த நண்பனை எப்பொழுதாவது எங்காவது பார்க்க நேர்ந்தால்.. “அடையாளமே தெரியலைங்களே.. வெயிட் போட்டீங்க.. ” என்ற ரீதியில்..
ச்சே..அட போங்கப்பா..
//
யதார்தம் இதுதான்
கலக்கல் தல
//ரமேஷ் வைத்யா said...
பொசுக் என்று முடிந்தது போல் இருக்கிறது. என்ன குறைகிறது என்று பாருங்கள்.
//
எத்தனை எபிசோட் போட்டாலும் இதுலே முழு திருப்தி கிடைக்காதுங்க
\\பூரி,வடை என எதுவாக இருந்தாலும் எடுத்து ‘அட்டியலை’போடுவார்கள்\\
அட்டியல்
இந்த வார்த்தையே மறந்து ரொம்ப நாளாச்சு தல!
இது மாதிரி சின்னச்சின்ன விசயங்களில் தான் எங்கேயோ போயிடறீங்க.
குரூப் ஸ்டெடி மேட்டரில் இருந்து பல மேட்டர்கள் சேம் பிளட்:)
கலக்கல்
எல்லோருக்கும் இந்த அனுபவங்கள் இருக்கும் ஆனால் இதைப்போல் எழுத அனைவருக்கும் வராது! மிகவும் ரசித்தேன்!
கொஞ்சம் அதிக பொறுப்பும் அதிர்ஷ்டமும் உள்ள மாணவர்கள் பாஸாகி, போன ஜென்மத்தில் பாவம் செய்திருந்தால் உயர்கல்விக்கும் அதிக பாவம் செய்திருந்தால் வேலைக்கும்,பாவம் மட்டுமே செய்திருந்தால் திருமணமும்..இப்படி ஏதாவது ஒன்றில் ஐக்கியமாகி..//
அட்டகாசமான கிளைமாக்ஸ் இந்தத் தொடருக்கு.! பலரும் ஃபீல் பண்ணியதைப்போல கொஞ்சம் டச்சிங்காக வேறு இருந்தது..
உங்க பாடு பரவாயில்லை, குவாடர் அடிச்சே பீலிங்க்ஸ் சொல்லலாம்,
நாங்க, ??? ரொம்ப கஷ்டம். கடைசீ நாள் அழுது தலை வலியே வந்துரும், அப்பறம் எப்பவாவது யாரோட கல்யாணத்தில் பார்த்து பேசரதுகுள், கூட வரும் புருசனுக்கும், புள்ளைங்களையும் பார்த்தே வெறுத்து போய்டும். பத்து வருஷம் கழிச்சு பேர் கூட நினைவு இருகாது.
எல்லாப் பாகங்களுமே ரசிக்கும்படியாக இருந்தன. இன்னும் கூட எழுதி இருக்கலாம்.
ஆமாம், மற்றது எப்படியோ கடைசி வரி நிச்சயம் புனைவு இல்லை என்று நினைக்கிறேன்! :-)
அருமையா கொண்டுபோய் அழகா முடிச்சிருக்கீங்க நர்சிம். இரசித்து வாசித்தேன்.
ரசித்தேன்.. கல்லூரி நினைவுகளோடு!
//அதுவரை ‘அப்பன்’ என்றும் ‘பெரிசு’ என்று அழைக்கப்பட்டவர் ‘அப்பா பாவம்டா’ என்ற ஃபீலிங் வர எத்தனிக்கும் தருணங்களில் புத்தகங்கள் கைஏறும்..
//
//‘எப்பொழுதும்’ சேர்ந்தே இருந்த நட்பு வட்டம் இனி ‘எப்பொழுதோ’ தான் கூடும் என்ற எண்ணம் வரும்.. அப்பொழுது தெரியாது ‘எப்பொழுதுமே’ இனி இது போல கூடப்போவதில்லை என்பது.
//
//மூன்று வருடங்கள் எப்பொழுதும் கூடவே இருந்த நண்பனை எப்பொழுதாவது எங்காவது பார்க்க நேர்ந்தால்.. “அடையாளமே தெரியலைங்களே.. வெயிட் போட்டீங்க.. ” என்ற ரீதியில்..
//
நிதர்சனம்.. நர்சிம்.. நெகிழ்ச்சியான பதிவு..
//மூன்று வருடங்கள் எப்பொழுதும் கூடவே இருந்த நண்பனை எப்பொழுதாவது எங்காவது பார்க்க நேர்ந்தால்.. “அடையாளமே தெரியலைங்களே.. வெயிட் போட்டீங்க.. ” என்ற ரீதியில்..
ச்சே..அட போங்கப்பா.. //
அட்டகாசம்!
பால்ய சிநேகிதர்களையே பல பேர் ஒரே ஊரில் வாழ்ந்தால் கூட வருடம் ஒரு முறை கூட சந்திப்பதையோ, தொலைபேசியில் அழைப்பதையோ தவிர்க்கும் இந்த காலத்தில், மூன்று வருடம் ஒன்றாய் படித்த நண்பர்களை எங்கோ நினைவில் வைத்திருப்பார்கள்?
நன்றி அபு,வெயிலான்,குசும்பன்,ஆதி,மயில்,தீபா,ஊர்சுற்றி,மாதவராஜ்,கேபிள்சங்கர்,joe..
நன்றி!
கூத்தும் ஊத்தும் தான்.. 52வது தடவையாக “ஹம் ஆப்க்கே ஹெய்ன் ஹெளன்” படத்திற்கு.. அத்தனை பாடல்களுக்கும் ஆல்கஹால் விசில் பறக்கும்..
போன ஜென்மத்தில் பாவம் செய்திருந்தால் உயர்கல்விக்கும் அதிக பாவம் செய்திருந்தால் வேலைக்கும்,பாவம் மட்டுமே செய்திருந்தால் திருமணமும்..இப்படி ஏதாவது ஒன்றில் ஐக்கியமாகி,
ரசிக்கத்தக்கதாய் பதிவு முழுக்க வார்த்தைகள் இருந்தாலும், அதிகம் ரசித்தது மேற்சொன்னவையே....
இன்னமும் நீட்டிக்கப்பட்டிருக்கலாம் இந்தத் தொடர் என்பது எனது தாழ்மையான கருத்து.
Super sir...Masterpiece!! :-)
//இங்கிலீஷ் தவ்வும்..நம்மாளுக்கு செத்தா எல்லாமே ‘மட்டன்’ தான்..//
அப்ப இல்லையா!
என்ன இது புது புரளியா இருக்கே!
//பாவம் மட்டுமே செய்திருந்தால் திருமணமும்..இப்படி ஏதாவது ஒன்றில் ஐக்கியமாகி,//
அடி பலமோ!
ரொம்ப டச்சிங்கா முடிச்சிருக்கீங்க. கலக்கல் பாஸ். அப்புறம் அந்த சேரன் டயலாக்ஸ். அது ஒன்னு மட்டும் எங்க செட்ல யாருக்குமே பிடிக்காது:)
//போன ஜென்மத்தில் பாவம் செய்திருந்தால் உயர்கல்விக்கும் ***அதிக பாவம் செய்திருந்தால் வேலைக்கும்***,பாவம் மட்டுமே செய்திருந்தால் திருமணமும்..//
நான் ஏற்கனவே இந்த அனுபவத்தை கண்டுகொண்டு இருக்கிறன்...
Post a Comment