நெற்றியில் இட்ட முத்தம் நெஞ்சுவரை இனித்திருக்கும் கெளசல்யாவுக்கு. புதுப்பொண்டாட்டியின் வாசனையில் அலுவலகம் போகமறுத்து ஒற்றைக்காலில் நின்ற ஆனந்தை தள்ளி விட்டால், விழுந்து விடுவானோ எனத் தள்ளாமல் விட்டாள். மீண்டும் ஒரு முத்தம். கன்னக்கதுப்புகள் ஜிவ்வென்று சிகப்பாக மாறத்தொடங்கியது.
“கிளம்புங்க.. டைம் ஆச்சு”
“ நிஜமாவே கிளம்பவா?”
“கிளம்புங்க.. ஈவ்னிங் சீக்கிரம் வந்துருங்க”
கிள்ளினான்.துள்ளினாள்.சிரித்தான்.வெடித்தாள். பீப் பீப் என ரிவர்ஸ் கியர் சத்தம் முடிந்தவுடன் வ்வ்ர்ரூம்க்கு வாகாக வாட்ச்மேனின் சல்யூட்டும் சில நொடிகளில் கேட் மூடப்படும் சத்தமும் கேட்டு சமையலறைக்கு நடந்தாள்.
ஆனந்த்.. தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க இளம் தொழிலதிபன்( ‘ர்’ க்கு இன்னும் 10 வருடங்கள் இருக்கிறது) சாதாரண அழகு.அசாதாரண பணம். வேகம் வேகம் எதிலும் வேகம்.அப்பா பணத்தை கரியாக்கி காசு பார்ப்பவன். வெடி பிஸினஸ். மொத்தமாக வாங்கி தென் ஆப்பிரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஏற்றுமதி. மொத்த வியாபாரத்தில் மொத்தமாக சில்லரை பார்ப்பவன். தம்பியுடனும், சித்தப்பாவுடனும் கூட்டாக செய்துவந்தவன் தம்பியின் போக்கு பிடிக்காமல் பிரிந்து விட்டான்.
தொழிலில் முதல் எதிரியும் சொந்தத்தில் முதல் நண்பனும் அவன் தம்பி ரவிதான்.அண்ணன் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பவன். அழகன். திறமையானவன்.ஆனால் வாழ்க்கை வாழ்வதற்கே என்று நினைப்பவன். லாகிரிவஸ்துக்கள் அதிகம். அவ்வப்பொழுது பாங்காங்கில் இருக்கும் பட்டயாவுக்கு போய்வருபவன். அங்குள்ள மஸாஜ்பார்லர்கள் போல் தமிழ்நாட்டில் கொண்டுவரும் தலைவருக்குத்தான் தனது ஓட்டு என்று கூறுபவன்.
சித்தப்பா இன்னமும் ரவியுடம் தொழில் செய்து வருகிறார்.பாசமானவர். ஒரே மகள். நிறைய அனுபவம் உள்ளவர். ரவி மீதும் ஆனந்த் மீதும் அன்பு வைத்திருக்கும் சித்தப்பா. அண்ணன் மறைவிற்குப் பிறகு குடும்பத்தையும் அண்ணன் மகன்களையும் வழிப்படுத்தியவர் என்பதால் அவர் மீது எப்பொழுதும் ஆனந்திற்கு மரியாதை உண்டு.
கெளசல்யாவை மணமுடித்தது ஆனந்தைப் பொறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டவசமானது. அவளது குழந்தைத்தனமான முகமும், தங்க நிற அங்கமும் அவனை அவள் வசம் கட்டிப்போட்டது.இந்த தேன்நிலவு நாட்களில் அதிகம் லயித்து வாழ்வை சுகித்துக்கொண்டிருந்தான்.
அலுவலகம் அடைந்தவுடன் தொலைபேசியை தன்பக்கமாக இழுத்து வழக்கம் போல் வீட்டிற்கு அழைத்தான். வழக்கம் போல் சிங்கிள் ரிங்கில் ரிங்கியது. கட் செய்துவிட்டு மீண்டும் அழைத்தான். இப்பொழுதும் சிங்கிள் ரிங் என்றாலும் உடனே ஸ்வாப் செய்தாள்..
“ஹலோ..”
“ ஹலோ கெள.. இப்பவும் உங்க அம்மாகிட்டத்தான் பேசிட்டு இருந்தயா?”
“ஆ..ஆமங்க.. i'm missing home"
"ம்.கூல் அண்ட் ரிலாக்ஸ்.. கொஞ்ச நேரம் கழிச்சு போன் பண்றேன்.. ஓக்கேயா?”
“k. சீக்கிரம் வாங்க”
“வில் ட்ரை. பை”
ரிசீவரை வைத்துவிட்டு டேபிள் மேல் இருக்கும் முக்கிய வேலைகளின் பட்டியலைப் பார்த்தான். அதற்குப் பக்கத்தில் ஒரு கவர். நான்கு மூலையிலும் கறுப்பு மை தடவி சற்று வித்தியாச கவனம் பெற்றது.
வெள்ளைக்கவர். யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை. எடுத்தான்.
"ராஜ்”
“ஸார்”
“இந்தக் கவர்”?
“ஸார். ஒருத்தர் வந்து உங்க கிட்ட கொடுக்கச்சொல்லிட்டு போனார் ஸார். யாருன்னு கேட்டதுக்கு உள்ள விவரம் இருக்குன்னு சொல்லிட்டாரு ஸார்”
“ஓக்கே”
என்று உதடுகள் சொன்னாலும் மனதின் ஓரத்தில் ஒரு இனம்புரியாத கனம் சேர்ந்தது அந்த லேசான கவரைப்பார்த்து.
கிலியோடு கிழித்தான்.
நல்ல ஃபாண்ட் சைஸில் வார்த்தைகள் ஓடியது.
.....
அன்புள்ள ஆனந்த்.
வணக்கம். நான் யார், எதற்கு இந்த கடிதம் என்று யோசித்து கொண்டிருப்பதை விட்டு மேலே படிக்கவும்.
நீ உத்தமி என்று நினைத்து கொண்டிருக்கும் உன் ஆசை மனைவி ஒன்றும் உத்தமி அல்ல. உன் சொத்திற்காக நடத்தபடும் நாடகத்தின் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்துகொண்டிருக்கும் ஒரு மானங்கெட்டவள்.சதா போனில் திட்டங்கள் தீட்ட படுகிறது.இன்னும் ஒரு வாரத்திற்குள் உன் கதை முடிக்க படும் என்பதால் பாதுகாப்பாக இருக்கவும்.
இப்படிக்கு
உன் நலம் விரும்பி
.....
27வது தடவையாக படித்தான். 27 தடவையும் தண்ணீர் குடித்திருந்தான்.
போனை இழுத்தான். மனமின்றி வைத்து விட்டான். மீண்டும் இழுத்தான். அழுத்தினான். சிங்கிள் ரிங்.
மறுபடியும் அழைத்தான். ஸ்வாப்பிங்கிள் வந்தாள் கெளசல்யா.
“சொல்லுங்க”
“ஹ.. ஹலோ.. கெள”
“சொல்லுங்க”
“ இல்ல.. யார் லைன்ல இருந்தா?”
“இப்பத்தான் சமையல் முடிஞ்சது.அம்மாகிட்ட பேசலாம்னு கூப்பிட்டேன்.. நடுவுல உங்க போன் வந்தது.. அதான் அப்புறம் கூப்புடுறேன்ன்னு சொல்லிட்டு இருக்கும் போதே மறுபடியும் கூப்பிட்டீங்க. சொல்லுங்க”
“ஜஸ்ட் லைக் தட் கூப்பிட்டேன்.இரு இன்னொரு கால் வருது. அப்புறம் கூப்புடுறேன்”
“ஓக்கேகே”
என உற்சாகமாக வைத்தாள். நன்றாகத்தானே பேசுகிறாள். ஆனாலும் எப்பொழுது அழைத்தாலும் எங்கேஜ்டாகத்தான் இருக்கிறது. அந்த முகம் தப்பு செய்யக்கூடிய முகமா?
வேர்த்தது. ஏசியின் அளவை மாற்றினான். சிவக்குமார்.அவனது நண்பன்.இன்ஸ்பெக்டர். ஒரு ஹலோவில் அவனை வரவழைத்தான்.
“ம்.. இதெல்லாம் சகஜம் ஆனந்த். உன்னோட தொழில் எதிரிங்களுக்கு உன்மேல இருக்குற பொறாமைல இதுமாதிரி செய்வாங்க.. ஸோ ரிலாக்ஸ்”
“எனக்கும் அப்படித்தான் தெரியுது. இருந்தாலும்..”
“விடு.. let me have a look in this" நீ ஜாலியா ஹனுமூன் டேஸ என் ஜாய் பண்ணு”
கடிதத்தை ஒரு நகல் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
கெளசல்யாவின் அம்மா வீட்டிற்கு போன் பண்ணலாம என நினைத்தவன் செயல்படுத்தினான். எங்கேஜ்டு டோன் வந்தது. நிம்மதியாய் வேலையைப் பார்க்கத்தொடங்கினான்.
“லாரி மோதி இளம் தொழிலதிபர் அகால மரணம்”
என்ற செய்தி ஆனந்தின் மரணத்தைப்பற்றியது தான். அழுது அழுது வீங்கிய முகத்துடன் இருந்த கெளசல்யா எதுவும் பேச முடியாத அளவு பலஹீனமாக இருந்தாள்.
ரவி,ஆனந்தின் மாலைப் போட்ட படத்தை வெறித்திப் பார்த்துக்கொண்டிருந்தான். சித்தப்பா அழுத அழுகை அந்தத தெரு முழுதும் கேட்டது.
இன்ஸ்பெக்டர் என்பதையும் மீறி சிவா தன் நண்பனை காக்க முடியாமல் போனதை எண்ணி துக்கம் தொண்டை அடைக்க நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.
வந்த கூட்டம் அதிகம். கெளசல்யாவின் பெற்றோர் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆறுதலாக அவளை அரவணைத்து அமர்ந்திருந்தாள் கெளசல்யாவின் அம்மா.
ரவியிடம் துவங்கினான் சிவா..
“சொல்லுங்க சிவா.. இனி அண்ணனத் தேடி நீங்க வரமுடியாது..” சொல்லிவிட்டு வெடித்து அழுதான்.
“ரவி.. ஒரு விசயம்.. இது ஆக்ஸிடெண்ட்னு நினைக்கிறீங்க.. இதுல ஒரு விசாரணை பண்ண வேண்டிய அவசியம் இருக்கு”
ஆச்சர்யமாகப் பார்த்த ரவி.. “என்ன விசாரணை சிவா?”
ஒரு வாரத்திற்கு முன் நடந்த நிகழ்வைச் சொன்ன இன்ஸ்பெக்டர்..
“ஸாரி ரவி.. உன்னையுமே நான் சந்தேகப்பட வேண்டிய நிலை.. அதனால”
“அதனால..”
“கொஞ்ச நாளைக்கு முன்னால ஏதாவது வாக்குவாதம் மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் ஆனந்தோட உங்களுக்கு இருந்ததா.. வேற யார்கூடயாவது இருந்தது தெரியவந்ததா?”
“ச்சான்ஸே இல்ல சிவா..”
“ அண்ணியப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?”
"she is a gem..பாவம் அவங்க.. அண்ணன நம்பி வந்தாங்க..ச்சே”
“அங்க நிக்கிற சிகப்புக் கலர் சட்டை யாரு?”
“சித்தப்பாவோட பி.ஏ. ராகவ்”
“கூப்புடுங்க”
“ராகவ்”
“எஸ் ஸார்”
“ எத்தன வருஷமா வொர்க் பண்றீங்க?”
“5 வருஷமா ஸார்”
“ஆனந்த் ஸார் பத்தி சொல்லுங்க”
“என்ன சொல்ல ஸார்? ரொம்ப நல்லவர். அநியாயமா செத்து போயிட்டாரு”
“ஓக்கே, வேற ஏதாவது?”
“ரொம்ப திறமையானவர். எனக்கு அவர ரொம்ப பிடிக்கும் ஸார். ”
“ரைட்..”
வெளியே வந்து ஒரு கிங்ஸை பற்ற வைத்தான் சிவா.
“ கண்ணீர் அஞ்சலி”
ஆனந்த் கம்பெனி ஓனர் மறைவிற்கு அஞ்சலி
தமிழ் நாட்டின் முக்கிய தொழிலதிபரான எங்கள் முதலாளியின் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக செலுத்துகிறோம்”
போஸ்டரைப் பார்த்துக் கொண்டிருந்த சிவா சிகரெட்டை பாதியில் அணைத்துவிட்டு உள்ளேப் போய் ரவியிடம் கேட்டான்
“ரவி.. இவ்வளவு சீக்கிரமா போஸ்ட்டர் எப்படி அடிச்சு வந்தது?”
“ எல்லாம் ராகவ் பார்த்துகிட்டாரு”
...
சொல்லுங்க ராகவ் உங்களுக்குத் தெரியும் யார் குற்றவாளின்னு.. உண்மைய நீங்களாச் சொல்றீங்களா?
---
எப்படி ராகவைச் சரியாகக் கேட்டார் சிவா.
..
கொலையாளியைக் கண்டுபிடியுங்கள்..
Posted by
narsim
Monday, March 30, 2009
Labels: க்ரைம்-புனைவு
65 comments:
super :))
தல
ஆரம்பமே அசத்தல்
santhip pizai
//நெற்றியில் இட்ட முத்தம் நெஞ்சுவரை இனித்தது கெளசல்யாவுக்கு. புதுப்பொண்டாட்டியின் வாசனையில் அலுவலகம் போகமறுத்து ஒற்றைக்காலில் நின்ற ஆனந்தை தள்ளி விட்டால், விழுந்து விடுவானோ எனத் தள்ளாமல் விட்டாள். மீண்டும் ஒரு முத்தம். கன்னக்கதுப்புகள் ஜிவ்வென்று சிகப்பாக மாறத்தொடங்கியது.//
இருங்க. இதையே இன்னும் சில தடவ படிச்சிட்டு வறேன்..
கல்யான ஆசை மறுபடியும் வருதோ? உஷார்டா கார்க்கி
'சந்தி'ல சிந்து பாடிட்டீங்க... :) ஆமா, இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கா?
வாராவாரம் இப்படியொரு விளையாட்டை ஆடலாம்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
ம்ம்ம்.. நல்ல சஸ்பென்ஸ்....
அது போட்டும்.... என்னண்ணே நம்ம கடைப்பக்கம் எட்டிப்பாக்கறதுக்கு டைம் இல்லை போல.... :))
தெரியலீங்கோவ்...
இதுல என்னோட பெயரை டேமேஜ் செய்ததில் எதுவும் உள்குத்து இருக்காது என்று நம்பி அவ்வ்வ்வ்வ் கொலையாளியை சொல்கிறேன்.
நர்சிம்.
அஞ்சு தடவ படிச்சுட்டேன்.. ஒண்ணும் சாலிடா க்ளூ கிடைக்கிலியே...
போஸ்டர்ல யூஸ் பண்ணிண ஃபாண்டும் லெட்டர்ல இருந்த ஃபாண்ட்டும் சேமா இருந்துதோ?
போட்டிக்கு நான் வரல.. கடைசி பத்தி படிக்கும் போது லெட்டர் கூட நினைவில்லை தல.. வழுக்கிக் கொண்டே செல்லும் நடை.. பாதிக்கதையில் நிறுத்தி பாங்காக் போய்விட்டு வந்தேன்.. கெளசல்ய்யாவை இன்னும் கொஞ்சம் வர்ணித்திருக்கலாம்..
// கன்னக்கதுப்புகள் ஜிவ்வென்று சிகப்பாக மாறத்தொடங்கியது//
எனக்கும்.. :)))
நிறைய எழுத்துப் பிழை இருக்கே தல.கரெக்ட் பண்ணுங்க :))
//கிள்ளினான்.துள்ளினாள்.சிரித்தான்.வெடித்தாள்.//
அருமை..
சேம் பாண்ட்..?
அடடா என் கமெண்ட் பப்ளிஷ் ஆயிடுச்சே...அப்போ அது கிடையாதா..
(போன தடவ மாதிரி ஆன்ஸர் சொன்னா பீர் கிடையாதா?)
நான்கு மூலையிலும் கறுப்பு மை. சரியா?
நல்ல சஸ்பென்ஸ். எனக்கு ரெண்டு காரணங்கள் தோணுது.
1. ஏற்கனவே அறிவிலி சொன்ன font காரணமாக இருக்கலாம்.
2. சீக்கிரமே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ரெடியாருக்குன்னா அப்போ ராகவ்க்கு விஷயம் ஏற்கனவே தெரிஞ்சிருக்கும் தானே?
பதில சொல்லுங்க ஸ்ரீமதி..
ஜமால்,கார்க்கி ஆரம்பத்துலயே இருக்கீங்களா கடைசிவரைக்கும்?
வாங்க மகேஷ்..வர்றேன்.. நம்ம கடையவே இப்பத்தான் திறந்தேன்..அங்க தான் வர்றேன்,அவரு வந்தாரா உங்க கடைப் பக்கம்?
வெண்பூ.. உங்களால முடியலயையா??
வாங்க தல,ழ, வாழ்க்கையை என் ஜாய் பண்றவர்னு சொன்னது டேமஜா தலைவா? என்னா இண்ட்டோ ரவிக்கு.. படிச்சீங்களா இல்லையா?
அறிவிலி.. இன்னொரு முறை படிங்க..ஈஸி
கொஞ்சம் விளக்கெண்ணை ஊற்றி படித்தும் ஒன்றும் புரியல தல.
மேலே உள்ள வரிகளில் clue இருக்கோ? அதாவது சந்திப் பிழை?
குட் திரில்லர்.
அனுஜன்யா
//narsim said...
பதில சொல்லுங்க ஸ்ரீமதி..//
தெரிஞ்சா நான் ஏன் வெறும் சூப்பர்ன்னு மட்டும் சொல்றேன் அண்ணா?? :(((
//போஸ்டர்ல யூஸ் பண்ணிண ஃபாண்டும் லெட்டர்ல இருந்த ஃபாண்ட்டும் சேமா இருந்துதோ?//
இது தான் எனக்கும் தோணித்து... இல்ல போலிருக்கே.. :((
சந்திப்பிழை தானே க்ளூ
அசத்த்லான நடை தலைவரே. கடைசி வரி வரைக்கும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்துல ஓடினமாதிரி விறு விறுப்பா இருந்தது.
உங்களின் பாணியாக மாறிக்கொண்டிருக்கும் வார்த்தை விளையாட்டுக்களை மிகவும் ரசித்தேன்.
லெட்டரில் க்,ப் எல்லாம் யூஸ் பண்ணாம இருக்கே.. போஸ்டரிலும் அப்படியேதானோ...
ஆனந்திற்கு வந்த கடிதத்தில் ஓடிய ஃபாண்ட் சைஸ், அப்புறம் நாலு பக்கம் மை தடவி இதில் ஏதாவது ஒரு அம்சம் ராகவ் அடித்த அந்த போஸ்டரில் இருந்திருக்க வேண்டும்.
சரியா>............
.
தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க இளம் தொழிலதிபன்( ‘ர்’ க்கு இன்னும் 10 வருடங்கள் இருக்கிறது)...
:)-எழுத்து நடை வழமை போல அருமை
//எனக்கு அவர ரொம்ப பிடிக்கும் ஸார். //
Ippadi sonnadhanaalaa??
கரெக்ட் அறிவிலி ஸார்.
நன்றி வித்யா, முரளிகண்ணன்
அறிவிலி.. இன்னொரு முறை படிங்க..ஈஸி//
அவரு என்ன தப்பு செஞ்சாரு இம்போசிசன் கொடுக்குறீங்க!!!!
*********************
ஏன்னா போஸ்டரில் போட்டு இருந்த தேதி வேற இவர் இறந்து போன தேதி வேற!!!
அய்யா... நான் கரெக்ட்டு...
//குசும்பன் said...
அறிவிலி.. இன்னொரு முறை படிங்க..ஈஸி//
அவரு என்ன தப்பு செஞ்சாரு இம்போசிசன் கொடுக்குறீங்க!!!!
//
இம்போசிசன் குடுத்து ஆன்ஸர் வாங்கிட்டாரே....
முரளி,அனுஜன்யா,பைத்தியக்காரன் கரெக்ட்
வீட்டில் மனைவி அதிக நேரம் பேசுகிறாள் என்பது கணவனுக்கும், அவன் சித்தப்பா, தம்பிக்கு மட்டும் தெரியும். சித்தப்பா பி.ஏ. ராகவ்க்கு ஆனந்த்தைப் பிடிக்கும்.
ஸோ, சித்தப்பா லெட்டர் அனுப்பி பிளாக்மெயில் அனுப்பி கொல்றதுக்கு பிளான் பண்ணதுக்கு பி.ஏ.க்கு தெரிஞ்சிருக்கும்னு வச்சிக்கிட்டாலும் அவரால அவர் முதலாளிய தட்டிக் கேட்கமுடியாது. சித்தப்பா ஆனந்தை ஃபுல்லா தீர்த்துக் கட்டின பிறகு கொண்டாடிக்கிட்டு இருக்கும்போது, பி.ஏ. ராகவ் சோகம் தாங்க முடியாம முதல்வேலையா போஸ்டர் அடிக்க போய் இருக்கலாம்.
ஸோ, சித்தப்பா தான் கொலையாளி..
மூணு வாட்டி படிச்சிட்டேன்..
இன்னும் பிடிபடல..
நறுக் :)
//narsim said...
முரளி,அனுஜன்யா,பைத்தியக்காரன் கரெக்//
ஆமாங்க. முரளியும், அனுஜன்யாவும் பைத்தியக்காரங்கதான்.. கரெக்ட்
அந்த மிரட்டல் கடிதமும், போஸ்டரும் சந்திப்பிழைகளோடு இருக்கின்றன. எனவே ராகவ்வே குற்றவாளி.
அப்துல்லாண்ணே கரெக்ட்ண்ணே..
//ஆமாங்க. முரளியும், அனுஜன்யாவும் பைத்தியக்காரங்கதான்.. கரெக்ட்//
கார்க்கி, ஏன் இந்த கொல வெறி...
அவங்களை பார்த்தா பாவமா இல்லையா?
:(
பைத்தியக்காரன்
அதுவாவது பரவாயில்ல கார்க்கி. எதோ முரளியப் பாத்து 'அனுஜன்யா பைத்தியக்காரன்' னு சொன்ன மாதிரி இருந்தது. இப்போ கீழ்பாக்கத்தில் கம்பெனி கொடுக்க முரளியாவது சிக்குவாரே :)
அனுஜன்யா
//ஆமாங்க. முரளியும், அனுஜன்யாவும் பைத்தியக்காரங்கதான்.. கரெக்ட் //
அவங்க மட்டுமா?? நீயும் நானும் கூடத்தான் :)
லெட்டர்ல ஒரு வாரம் டைம் கெடு கொடுத்திருக்காஙக. ஸோ.. அப்பவே போஸ்டர் அடிச்சி ரெடியா வச்சிருக்கலாம்.. செத்தவுடனே, ஒட்டியிருக்கலாம்..
மறுபடியும் கணேஷ்?
பின்னூட்டத்தை சொன்னேன். நீங்க என்ன நினைசீங்க? :))
அனுஜன்யா
\\அதுவாவது பரவாயில்ல கார்க்கி. எதோ முரளியப் பாத்து 'அனுஜன்யா பைத்தியக்காரன்' னு சொன்ன மாதிரி இருந்தது. இப்போ கீழ்பாக்கத்தில் கம்பெனி கொடுக்க முரளியாவது சிக்குவாரே :)\\
:-)))))))))))))))))
அனுஜன் யா
//எங்கள் முதலாளியின் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக //
ராகவும், சித்தப்பா, ரவியும் வேற கம்பெனி.. ஸோ, அப்படி இருக்கும்போது எப்படி அவங்க "எங்கள் முதலாளி"ன்னு போடுவாங்க..
மொத்தத்தில், இந்த கொலையை செய்தது ஆனந்த்தின் மனைவி கௌ..
நல்ல சஸ்பென்ஸ்
கணேஷ், இன்னும் ஒரு தடவ படிச்சீங்கன்னா பிடிச்சுருவீங்க..
கணேஷ திரும்ப திரும்பப் படிக்க வைக்கிறீங்க. அப்ப அவரு நிறைய பின்னூட்டம் போடத்தானே செய்வாரு! You must have consistency Narsim :)
அனுஜன்யா
கணேஷ், தப்பா நினைச்சுக்காதீங்க, அனுஜன்யா சொல்றது கணேஷ்னு ஒருத்தரு போட்ட பின்னூட்டபயங்கரத்தை சொல்றாரு.
அனுஜன்யா உங்க கட பக்கம் வரலையா அவரு?
//கணேஷ திரும்ப திரும்பப் படிக்க வைக்கிறீங்க. அப்ப அவரு நிறைய பின்னூட்டம் போடத்தானே செய்வாரு! You must have consistency Narsim :)
அனுஜன்யா//
அனு,
இப்படி பின்னூட்டம் மூலமா, கணேஷுக்கு க்ளு கொடுக்கக்கூடாது. சரியா நர்சிம்? :)
டோட்டலி லாஸ்ட் தல.. எனக்கு மட்டும் தனியா மெயில் அனுப்பி ஆன்ஸர சொல்லிடுங்க.. தல வெடிச்சிடும் ப்ளீஸ்! (இனிமே நான் கமெண்ட் போட மாட்டேன்..)
நண்பர்களே, நான் அவன் இல்லை. ப்ளீஸ் நம்புங்க... (கொஞ்ச நாள் பேரை மாத்தி வச்சா கூட நல்லா இருக்கும்)
பத்த வெச்சுட்டியே பரட்ட! அவர் பிரபலங்களை மட்டுமே குறிவைக்கிறார். ராபின் ஹூட் கோபம் ராஜாக்களின் மேல் மட்டுமே. ஒன்றுமறியா வழிப்போக்கர்களுக்கு ஒரு அபாயமும் இல்லை :)
அனுஜன்யா
கணேஷ்..மெயில் பண்ணியாச்சுத் தல..
//அனுஜன்யா said...
பத்த வெச்சுட்டியே பரட்ட! அவர் பிரபலங்களை மட்டுமே குறிவைக்கிறார். ராபின் ஹூட் கோபம் ராஜாக்களின் மேல் மட்டுமே. ஒன்றுமறியா வழிப்போக்கர்களுக்கு ஒரு அபாயமும் இல்லை :)
//
லாஜிக் கரெக்ட்டா இருந்தா, எனக்கும் எதுக்கு வருது?
இது எப்பிடி இருக்கு..
// அனுஜன்யா said...
அதுவாவது பரவாயில்ல கார்க்கி. எதோ முரளியப் பாத்து 'அனுஜன்யா பைத்தியக்காரன்' னு சொன்ன மாதிரி இருந்தது. இப்போ கீழ்பாக்கத்தில் கம்பெனி கொடுக்க முரளியாவது சிக்//
நீங்களே அவர அப்படி சொன்னா, வேலைக்காவது தல. எங்கல மாதிரி நல்ல மனநிலைல இருக்கிறவங்க சொல்லனும்..
@பைத்தியக்காரன்,(நோ நோ உஙக்ள இல்ல முரளி)
அவங்க மேல கொலவெறி இல்ல தல.. அவர் கவிதை மேலதான்.. :))
ராகவ் போஸ்டரில் எங்க முதலாளினு அடிச்சாரே, அதனாலயா?
விடையை ஃபோனில் சொல்லி ப்ரைஸ் வாங்கியாச்சு.
தேங்க்ஸு!!!
கொலையாளி சித்தப்பா மற்றும் கெளசல்யாவாக இருக்கலாம்...
சித்தப்பாவின் பிஏ வாக இருக்கும் ராகவ், எங்கள் முதலாளி என்று எப்படி போஸ்டர் அடிக்க முடியும். அதனாலேயே சந்தேகம் வந்திருக்கலாம்...
தவிர இது பற்றி தெரிந்திருந்தால்தான் விரைவில் போஸ்டர் அடிக்க முடிந்திருக்கும் (அதிர்ச்சியையும் மீறி)...
ஏதோ தோணிச்சு சொன்னேன், கரெக்ட்டான்னு தெரியலை! ஆனால் தெளிவான க்ளூ இல்லையோன்னு தோணுது, ஒருவேளை விடை சொன்னதுக்கப்புறம் உரைக்கலாம் !!!
கிரைமுக்கும் நம்க்கும் ரொம்ப தூரம். சோ. ஆன்சர நீங்களே சொல்லுங்க.
//நின்ற ஆனந்தை தள்ளி விட்டால், விழுந்து விடுவானோ எனத் தள்ளாமல் விட்டாள்.//
ரசித்தேன் சகா...கதை நல்லா இருக்கு... பதிலை எனக்கு மட்டும் சொல்லுங்களேன்.............
//27வது தடவையாக படித்தான். 27 தடவையும் தண்ணீர் குடித்திருந்தான்.//
ஒரு வேளை இது கூட காரணமாக இருக்குமோ ??
ஒரு அளவுக்கு மேல தண்ணி போடக்கூடாதுங்களே...
ஹி ஹி ஹி :))
சித்தப்பாவும்..கெளசல்யாவும் தான் கொலையாளிகள்.
“எங்கள் முதலாளி”என்ற வாசகமும்,
“ரவி.. இவ்வளவு சீக்கிரமா போஸ்ட்டர் எப்படி அடிச்சு வந்தது?”
“ எல்லாம் ராகவ் பார்த்துகிட்டாரு”
இதுவும் சிவா கண்டுபிடிக்க காரணங்களாக இருந்திருக்கலாம்.
ராகவ் குற்றவாளி இல்ல. அஞ்சலின்னு யாரோ குற்றவாளி. போஸ்டர் செய்தியில் அந்த வார்த்தை தேவைக்கு அதிகமாக முன்று த்டவை வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்!
ஈஸின்னு சொன்னதால ட்ரை பண்ணிப் பார்த்தேன். கரெக்டா?
கடிதத்தில் இருந்த நலம் விரும்பி வாசகம் மற்றும் Raaghav தனக்கு ஆனந்தை ரொம்ப பிடிக்கும் என்று கூறியது. ஆனந்தின் முதல் தொழில் எதிரியாக ரவி இருப்பது. ரவியும் சித்தப்பாவும் ஒன்றாக business செய்து கொண்டிருப்பது. சித்தப்பாவின் PA- வாக இருக்கும் raaghv-ற்கு, ரவி மற்றும் சித்தப்பாவின் நிழல் வேலைகள் தெரிந்து, ஆனந்திற்கு மொட்டை கடுதாசி எழுதியிருக்கலாம் போன்ற சில நிகழ்வுகளை இன்ஸ்பெக்டர் முடிச்சு போட்டு பார்த்திருப்பார்.
எல்லாரும் சொன்னதுதாங்க. சித்தப்பாவுக்கு பி.ஏ. எப்படி எங்க முதலாளி என்று சொல்லமுடியும்?
அப்புறம் அந்த பயபுள்ளய இப்படி அநியாயமா கொன்னுபுட்டீங்களே நர்சிம்.
இந்த மறுபிறவி.. அப்படி ஏதாவது உண்டா?!!!
மெயின் சந்தேகங்கள்:
1.துக்கம் அன்று ஏன்(ராகவ்) சிவப்பு சட்டை?
2.”செத்து போயிட்டாரு “((ராகவ்)”
அநாகரிக condolence ஆனால் போஸ்டரில் நாகரிகமான வார்த்தைகள்
3.கவரில் தடவிய மை stains ராகவ்
கைகளில்
ரவிதான் கொலையாளி?
ஸைடு சந்தேகங்கள்:-
//ஒற்றைக்காலில் நின்ற ஆனந்தை தள்ளி விட்டால்//
கெளசல்யா ரவியின் பழைய காதலி.
”நொண்டிய(ஒற்றைக்காலில்) கல்யாணம் பண்ணினா சொத்து உனக்குதான்.அவன் கதய முடிச்சிடுடலாம்.அப்பறம் நாம ரெண்டுபேரும் பாங்காக்..ஹா..ஹா.”
என்று modern theatre படத்தில் S.A.Ramdoss(வாயில் சிக்ரெட் கடித்துக்கொண்டு) பேசும் வசனம்”
அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட கடிதத்தில் ஒரு வாரத்தில் ஆனந்தின் கதை முடிக்கப்படும் என எழுதி இருந்தது.அதை எதிர்ப்பார்த்து முன்னதாக போஸ்டர் அடிக்கப்பட்டதால் ராகவிற்கு கொலையாளி தெரியும்
அண்ணே தாவூ தீருது நீங்களே கொலையாளி யார்ன்னு சொல்லிறுங்க!
நடை மற்றும் உள்ளடக்கம் பற்றி:-
//பார்க்கத்தொடங்கினான்// லிருந்து
திடீர் என்று கதை ஹை ஜம்ப் அடித்து
கிழ் வரிக்கு வருகிறது.
“லாரி மோதி இளம் தொழிலதிபர் அகால மரணம்”
அடுத்து ஆனந்த் “போன் எங்கேஜ்டு”
பற்றி சொல்லாமல் இருப்பது.சிவாவும்
அதைப் பத்தி கேட்காமல்இருப்பது.
கடிதத்தை கொடுக்கும் நபர் யார்?(அங்க அடையாளங்கள்)ராஜ்ஜிடம் விசாரணை இல்லை.
”சினிமா முட்டிக்கு முட்டி”தட்டும் வெ.ஆ.மூர்த்தி போலீஸ் மாதிரி ஒண்ணே ஒன்ணு கண்ணே கண்ணு கோணத்தில் விசாரிப்பது.
தல,
நீங்கள் வைத்த முடிவு ரொம்ப சிக்கலான் கோணம்.எப்படி?
பக்கத்து விட்டில் இன்று வெங்காய சாம்பர். எப்படி கண்டுபிடித்தீர்கள்:-
நாங்கள்;
1.வாசனை 2.வெங்காய சருகுகள் குப்பையில் 3.மார்கெட்டில்
”சாம்பர்”என்று கேட்டு வாங்கின தகவல்.4.ரெண்டாவது ஞாயிறு வெ.சா உண்டு.5.etc., etc.,
இன்ஸ்பெக்டர் சிவா:
சாம்பர் வீட்டு எதிர் மாமியை விசாரிக்கிறார்.அடுத்த நான்காவது நிமிடத்தில் கண்டுபிடித்து விடுகிறார்.
எப்படி? சா.வீட்டு மாமி எதிர் வீட்டு
மாமியிடம் பேசும் போது சா.வீட்டு மாமியின் கண் கலங்கியிருகிறது.
ஏன்.வெங்காயம் உரித்ததால்.இதுதான்
க்ளூ.இதை வைத்து சிவா கண்டு பிடித்து விட்டார். வெங்காயம்!
Post a Comment