Monday, April 6, 2009

யாரறிவார்?

“ஹலோ ஸார் ici bank ல இருந்து பேசறேன்”

“ ”
“ஹலோ.. ஸார் பேசுங்க ஸார்”

“ஹலோ சொல்லுங்க”

“என்னத்தச் ஸார் சொல்லச் சொல்றீங்க, போன் பண்ணா எடுக்க மாட்டீங்கறீங்க,எடுத்தா பேச மாட்டீங்கறீங்க, எப்ப ஸார் செட்டில் பண்ணப்போறீங்க?”

“பாஸ்,நான் தான் சொல்லிட்டேன்ல நேத்தே, ரெண்டு நாள் டைம் குடுங்க செட்டில் பண்றேன்னு”

“ ரெண்டு நாள் ரெண்டு நாள்னு எத்தன தபா சொல்வீங்க ஸார்,எனக்குத் தெரியாது, நாளாண்னிக்கு செட்டில் பண்ணலேண்ணா நடக்குறதே வேற”

“யாருங்க போன்ல,கிரடிட் கார்டு கடன்காரன் தானே?”

கேட்ட மனைவியை பச்சாதாபம்,சுயவிரக்கம்,என அத்தனை உணர்ச்சிகளையும் சேர்த்துப் பார்த்தான் மூர்த்தி.
அவனும்தான் என்ன செய்வான், வீட்டுக்கடன்,குழந்தை, அம்மா, தம்பி என உறவுக் குதறல்களால் சிலவுச் சிதறல்கள்.

வழக்கமாக,இருபதாம் தேதிக்கு பிறகு பார்ப்பவர்களிடம் கேட்டு,கொடுப்பவர்களிடம் வாங்கி என ஒப்பேத்திவிடுவான். அந்த கால கட்டங்களில் தான் வந்தது இந்தச் சனியன். இன்று போல் உள்ளது அந்த நாள்,

“ஸார், மூர்த்திங்கிறது ?”

“ நீங்க?”

“ப்ளூ டார்ட் கொரியர்ல இருந்து வர்றேன் ஸார், உங்களுக்கு கிரெடிட் கார்ட் வந்துருக்கு, உங்க ஐடி கார்டு ஏதாவது இருந்தா காமிங்க”

அதற்குப் பிறகு அவன் பேசிய எதுவும் காதில் விழவில்லை. அந்த பிளாஸ்டிக் கார்டில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட்ட தன் பெயரை தடவி தடவிப் பார்த்துக் கொண்டே பறந்தான். ‘ந்’ ரொம்ப தூரம்.

அங்கு ‘ந்’தத் தொடங்கியவன் தான். மனைவி லேசான கோபமாக இருந்தாலும், “வாம்மா, சேல கேட்டியே” என்று வாங்கித் தரத் துவங்கியவன் துவண்டுவிட்டான்.

லப்பர் செருப்பில் இருந்து லெதருக்கு என மாறத்தொடங்கினான். “சுரண்டினால் போச்சு” என்ற வார்த்தை சர்வசாதாரணமாகிப் போனது அவனுக்கு.

இப்பொழுது அதை நினைத்துப் பார்த்து எந்தவித பிரயோஜனமும் இல்லை. இது போக தனிநபர் லோன் emi வேறு இருக்கிறது ஒரு 2 மாத பாக்கி, என்ன செய்வது.

நண்பர்கள் எல்லாம் ந அளவிலேயே இருக்கிறார்கள் அல்லது நா அளவிலேயே.

ம்ஹூம்.அதுதான் ஒரே வழி.

முடிவெடுத்தான். ஒரு முறை ஆசையாய் மனைவி,குழந்தையைப் பார்த்தான். தூங்கிக்கொண்டிருந்த தாயை வணங்கினான். தயங்கித் தயங்கி வெளியே வந்தவன் மெடிக்கல் ஷாப்பில் அம்மாவிற்கு என்று சொல்லி, வாங்கியே விட்டான்.இனி விடுதலை,விடுதலை என்று நினைத்துக் கொண்டான்.

திட்டமிட்டபடி, எல்லா மாத்திரைகளையும் விழுங்கியவன், அமைதியாய், ஆனந்தமாய் நினைத்தப் படியே செத்துப் போனான்.




ஹலோ மூர்த்தியா? நான் ‘ici டெட் டிவிஷன்ல’ இருந்து பேசறேன். செத்து நாளு நாள் ஆச்சு போல.. எப்ப செட்டில் செய்யப் போறீங்க?”

------
..

38 comments:

நட்புடன் ஜமால் said...

\\கேட்ட மனைவியை பச்சாதாபம்,சுயவிரக்கம்,என அத்தனை உணர்ச்சிகளையும் சேர்த்துப் பார்த்தான் மூர்த்தி.\\

ஹா ஹா

சிரிப்பும் வருது.

Ramesh said...

Even after death? Nice joke....

கனவு கலைந்தது, எழுந்தான். " சே இது வெறும் கனவா? ".... கையில் அவனுக்கு நேற்று வந்திருந்த புது கிரெடிட் கார்ட் இறுக்கி பிடித்திருந்தான்.

Reword it please, if you like.

D.R.Ashok said...

hahahaha

SK said...

:( நிதர்சனம்

அறிவிலி said...

நீங்க ஏதாவது சொல்ல வந்து, எனக்குத்தான் புரியலியோ, என்னமோ...

இறந்த பிறகும் துரத்துகிறார்கள் என்பதைதான் குறிப்பிட வந்தீர்களோ...

இப்படி இரண்டு மாத பாக்கிக்காக தற்கொலை செய்து கொள்பவர்களை பார்த்தால் எரிச்சல்தான் வரும்.

டக்ளஸ்....... said...

நானும் அப்ளை பண்ணனும்...

அறிவிலி said...

//டக்ளஸ்....... said...
நானும் அப்ளை பண்ணனும்...//

உங்க செல் நம்பர அப்படியே பின்னூட்டத்துல குடுத்தீங்கன்னா நாளைக்குள்ள 10 கால் வந்துரும்.

mayil said...

இதே போல் என் நண்பன் ஒருத்தனுக்கு ஆச்சு, அந்த குடும்பம் பட்ட கஷ்டம் சொல்ல முடியாது. நல்ல முடிவா பண்ணுங்க.
,

Mahesh said...

நண்பர்கள் 'ந' அளவில் அல்லது 'நா' அளவில்...

அருமை !!

ஆ.ஞானசேகரன் said...

//“ஹலோ மூர்த்தியா? நான் ‘ici டெட் டிவிஷன்ல’ இருந்து பேசறேன். செத்து நாளு நாள் ஆச்சு போல.. எப்ப செட்டில் செய்யப் போறீங்க?”//

என்னசார் இப்படியெல்லாம்...

ஆ.ஞானசேகரன் said...

//நண்பர்கள் எல்லாம் ந அளவிலேயே இருக்கிறார்கள் அல்லது நா அளவிலேயே.//

ஏதோ ஒரு அனுபவ வார்த்தை போல இருக்கு

நையாண்டி நைனா said...

அண்ணே பழைய நரசிம் மாதிரி இல்லை... இப்போ போட்டோலே இருக்கிற மாதிரி ________ இருக்கிறது.

இப்போ இருக்கிற போட்டோலே நீங்க யூத்தா இல்லண்ணே.

கார்க்கி said...

:)))

"கருவெளி" ராச.மகேந்திரன் [R.Mahendran] said...

நம்ம பக்க நியாயமெல்லாம் சரிதான்... ஞாயிற்றுகிழமைகளில் கூட போன் செய்து ஏதாவது ஆபர்[ஆப்பு] இருக்குன்னு சொல்லிக்கிட்டுத்தான் இருக்காங்க...

அது ஒரு பக்கம் இருந்தாலும்.. நமக்கெங்க போச்சு கொஞ்சமா, இருக்கிறதா, நம்பிக்கிட்டு இருக்க... அறிவு?

[சிவாஜியில... கடைசியில காட்டுவாங்கலே... எல்லாருக்கும் கார்டு... ] அப்படி வந்த சரிபடுமா?

அண்ணே... கணக்கில இல்லாம நிறைய காசு பொலங்குதுணே... நாட்டுக்குள்ள...

கருப்பு பணத்தின் மதிப்பு = வெள்ளை பணம் + 50% வெள்ளை பணத்த தாண்டுமாம் நம்ம நாட்டுல மட்டும்...

[சமீபத்திய கணக்கெடுப்புகள் சொல்லுது...]

SUREஷ் said...

//‘ici டெட் டிவிஷன்ல’ //

ச்சின்னப் பையன் said...

ஹா ஹா

வித்யா said...

தேச்சு தேச்சே தேஞ்சு போனவங்க லிஸ்டில் மூர்த்தியும்.

ராஜா said...

//“ஹலோ மூர்த்தியா? நான் ‘ici டெட் டிவிஷன்ல’ இருந்து பேசறேன். செத்து நாளு நாள் ஆச்சு போல.. எப்ப செட்டில் செய்யப் போறீங்க?”//

செத்தாலும் விட மாட்டாங்க போல :-). நல்ல புனைவு.

//நண்பர்கள் எல்லாம் ந அளவிலேயே இருக்கிறார்கள் அல்லது நா அளவிலேயே.//

தமிழ் விளையாடுது. நீங்க தான் லூயி பிலீப் போட்ட கம்பரா :-)?

Singam said...

Nalla irukku thala.

//Arun

அபுஅஃப்ஸர் said...

கொடுமைதான்.. ஆசை யாரைவிட்டது

தற்கொலை என்பது கோழைத்தனம்.....

பதிவு நல்லாயிருந்தது, ஒரு பாடம் என்று கூட சொல்லலாம்

கலக்கல் தல‌

பரிசல்காரன் said...

அசத்தல்!

Cable Sankar said...

:):)

அத்திரி said...

நமக்கும் அந்த கார்டுக்கும் ரொம்ப தூரம்....... என்ன சகா அடிக்கடி போட்டொ மாத்துறீங்க? இன்னா மேட்டர்

Suresh said...

:-) ha ha arumai

enga blog pakkaum vanthu parunga

கும்க்கி said...

மனம் கனக்கும் உண்மைகள்தான்..
எந்த கட்டுப்பாடுகளும் இன்றி இந்த உயிர் வாங்கும் நிதி நிறுவனங்கள் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன.
எல்லாப் புகழும்....இருவருக்கே.
எந்த தயக்கமும் இன்றி கோக்குமாக்கு வங்கி பெயர் குறிப்பிட்ட உங்களுக்கு எனது கரவொலி பாஸ்.

பித்தன் said...

"கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கைவேந்தன்" அப்படின்னு சும்மாவா சொன்னாக....

கடன் என்பது... மறைமுகமாக சுயமரியாதையை அடகுவைக்கும் சமாசாரம்... திருப்பி செலுத்தாத பொழுது அல்லது தாமதமாக செலுத்தும் போது அது போய்விடுகிறது....

//“ஹலோ மூர்த்தியா? நான் ‘ici டெட் டிவிஷன்ல’ இருந்து பேசறேன். செத்து நாளு நாள் ஆச்சு போல.. எப்ப செட்டில் செய்யப் போறீங்க?”//

சிவலோகதிலும் கடன் வாங்கியவனுக்கு நிம்மதி இல்லை போலும் :)

எம்.எம்.அப்துல்லா said...

//நீங்க தான் லூயி பிலீப் போட்ட கம்பரா :-)?

//

அட இப்படி ஒரு கமெண்ட்டு நம்ம மரமண்டையில தோணாமப் போச்சே..

புருனோ Bruno said...

என்ன தலைவரே கதை இருக்கு பாட்டு மிஸ்ஸிங்

விடம் கொண்ட மீனைப்போல், வெந்தழல் மெழுகு போல் பாடலை விட்டு விட்டீர்கள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஓகே.!

அ.மு.செய்யது said...

கிரெடிட் கார்டா ??

மீத எஸ்கேப்பு .

விழிப்புண‌ர்வு சிறுக‌தை ந‌ர்சிம் !!!!!

Deepa said...

நல்ல கதை. சுருக்கமாக ஆனால் அழுத்தமாக இருந்தது. வாழ்த்துக்கள்.


(ஏனோ கிரெடிட் கார்டு என்றாலே வெறுப்பு தான். ஒரு கார்டு கூட எங்களிடம் இல்லை. )

அமிர்தவர்ஷினி அம்மா said...

பதிக்கப்பட்ட தன் பெயரை தடவி தடவிப் பார்த்துக் கொண்டே பறந்தான். ‘ந்’ ரொம்ப தூரம்.
அங்கு ‘ந்’தத் தொடங்கியவன் தான்.

நண்பர்கள் எல்லாம் ந அளவிலேயே இருக்கிறார்கள் அல்லது நா அளவிலேயே.

ரசிப்புக்குட்பட்டவையாய்.

ம், என்னத்த சொல்ல. கிரெடிட் கார்டு.
நிறைய மூர்த்திகள் இருக்காங்க............

ஸ்ரீமதி said...

:)))

narsim said...

தற்கொலை தீர்வு அல்ல என்பதே நோக்கம்.

மேலும், அங்கே போயும் இது தொடர்ந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை. யோசித்துப் பாருங்கள். மரணத்திற்குப் பிறகு என்ன என்று தெரியாத நிலையில் இதுவும் இருக்கலாமா இல்லையா?

வால்பையன் said...

செத்தாலும் கேட்பானுங்க!
அதானால சாவாதிங்கன்னு சொல்ல வர்றிங்களா?

Raju said...

செத்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும் (குறள்)

அப்போ இசி வங்கி மேன் மக்களா?

narsim said...

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்ன்கிறது தானே பழமொழி ராஜு?

Raju said...

அது கிண்டலுக்கு. புது குறள்.

சயனைடு தற்கொலை எல்லாம் தீர்வல்ல. பிச்சை எடுத்தாவது வாழனும்.

வேறே கமண்ட்ஸ் பார்த்தேன்.

மேஸெஜ் கொடுக்கிற கதையா, ரமேஷ் மாத்தியிருக்கார்!

அப்புறம் குறைந்த் விலை புத்தகங்கள் (தமிழ்) நீங்கள் அறிமுகப்படுத்தலாம் அல்லவா?