அந்தப் பெண்ணிற்கு 24 வயது. பார்க்க நன்றாக இருப்பாள். என்ன காரணத்தினாலோ, கல்யாணம் என்று பேச்சை எடுத்தாலே கத்தத் துவங்கி விடுவாள். மற்ற நேரங்களில்,ஆரம்பக் கால நதியா ரேஞ்சுக்கு வாழ்க்கையை துள்ளலாக வாழ்பவள். காரணம்?
இன்னொரு பெண். மிகுந்த ஆசையுடனும் கனவுகளுடனும் திருமணம் செய்து கொண்டவள் கணவன் அருகாமை என்ற நினைப்பு வந்ததுமே மயங்கிவிடுகிறாள். காரணம்?
அந்த பள்ளிக் கூட சிறுமி வழக்கத்திற்கு மாறாக மாலை எல்லாம் தனியாகவே அமர்ந்திருந்திருக்கிறாள் வீட்டில். மறுநாள் பள்ளிக்குச் சொல்ல முடியாது எனக் கதறி இருக்கிறாள். காரணம்?
இது போன்ற ஆயிரமாயிரம் பிரச்சனைகள்.. காரணம் என்று பார்த்தால் கூடுமானவரை ஒரே திசையில் தான் அந்தக் காரணம் பயணிக்கிறது.
“இளமையில் கலவி” கல்வி அல்ல கலவி தான்.அதுவும் ஒன்றுமறியாத,அல்லது ஒன்றிரண்டு மட்டுமே அறிந்த சிறுமிகளை காமக் கொடூரன்கள் (என்ற வார்த்தை மிகச் சரியே) ஏதாவது ஒரு விதத்தில் சிதைக்கிறார்கள். அந்த ஐந்து நிமிட அற்பத்திற்காக ஒரு சிறுமியின் எதிர்கால சிந்தனைகளைச் சிதைத்துவிடுகிறார்கள். மேலே சொன்ன நதியாத்தன பட்டாம்பூச்சிகள் செக்ஸ் என்ற வார்த்தையை அருவருப்பாக பார்க்கக் காரணமும் இதுவாகத்தான் இருக்கிறது பெரும்பாலும்
உலகம் இயங்கும் மட்டும் செக்ஸ் இருக்கும்.. செக்ஸ் இருக்கும் மட்டும் இச்சை இருக்கும்.இச்சை இருக்கும் மட்டும் இந்த இமைசகள் இருக்கும்.
ஆக, நம் வீட்டுச் சிறுமிகளை/சிறுவர்கள நாம்தான் காக்க வேண்டும் என்ற அடிப்படையின் அடுத்த கட்டம் சிறுமிகள்/சிறுவர்கள் அவர்களை அவர்களாகவே காத்துக் கொள்ள நாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே.
அதற்கான ஒரு சிறு முயற்சி, வருகின்ற மே மாதம் 10ம் தேதி நடக்க இருக்கும் கருத்தரங்கம்.
டாக்டர் ஷாலினியும் டாக்டர் ருத்ரனும் கலந்து கொள்ளும் இந்த கருத்தரங்கிற்கு பெற்றோர்கள் வந்து தங்கள் ஐயங்களையும், எவ்வாறு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற வழிமுறைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
ஏனெனில், சும்மா இருக்கும் குழந்தைகளை குட் டச் பேட் டச் என்று ஏதாவது சொல்லித்தரத் தெரியாமல் சொல்லிக் கொ(கெ)டுத்துவிடக்கூடாது என்பது மிக முக்கியம்.
இன்னுமொரு முக்கிய மேட்டர் : இதில் பங்குபெறவிரும்புவோர்... கீழே உள்ள மெயில் ஐடிக்கு ஒரு மடல் எழுதி வருகை தருவதை உறுதிப் படுத்தினால், ஏற்பாடுகள் செய்ய (இருக்கை,டீ,ஸ்நாக்ஸ்!) ஏதுவாக இருக்கும்.
weshoulddosomething@googlemail.com
இதை ஆரம்பித்து வைத்த சிதறல்கள் தீபாவிற்கும், கருத்தரங்கமாக நடத்தலாமே என்று அடுத்த அடி எடுத்து வைத்த அமிர்தவர்ஷினி அம்மாவிற்கும், மிக முக்கியமாக, எல்லாவிதமான ஏற்பாடுகளையும் மிகுந்த அக்கறையோடு செய்து வரும் sk வுக்கும் நன்றி.
இதைப் பற்றி பேசியவுடனே முகம் மலர்ந்து, நிச்சயம் நல்லா செய்வோம் என்று தோள்கொடுத்த லக்கிக்கும், Always welcome என்று சொன்ன கிழக்குப் பதிப்பகம் பத்ரிக்கும் நன்றிகள்.
இடம் : கிழக்குப் பதிப்பகம் மொட்டைமாடி,
எல்டாம்ஸ் ரோடு,சென்னை.
நாள் : 10/மே/2009.
நேரம் : மாலை 4:30 - 7.00.
அனைவரும் வரலாம் என்ற போதிலும், பெற்றோர்களும்,சமூகத்தில் இது போன்ற கொடுமைகள் நடக்காமல் தடுக்கவேண்டும் என்பதில் முனைப்பும் உள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ளவேண்டும்.ஏனெனில் இங்கு பரிமாறப்படும் கருத்துகள் உங்கள் மூலம் உங்களைச் சார்ந்தோரை சென்றடைய வேண்டும்.
இறுதியாக, தங்களின் பிஸியான நேரத்திலும், இதற்கு வருகை தர இசைந்த இருபெரும் உள்ளங்களுக்கு நன்றி.
ஆம்
டாக்டர் ஷாலினி மற்றும் டாக்டர் ருத்ரன் இவர்களுக்கு ‘நன்றி’ என்ற ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டாலும் அதைத் தவிர தமிழில் வேறு வார்த்தைகள் இந்தப் பதிவை எழுதும் இந்தத் தருணத்தில் தோன்றவில்லை.
தொடர்புக்கு
லக்கிலுக் : 9841354308(இவரை அழைக்கும்போது விகடனில் வந்த இவரது கதைக்கு வாழ்த்துச் சொல்லிவிடுங்கள்)
நர்சிம் : 9940666868
அதிஷா : 9884881824(கிழக்குப் பதிப்பகம் எங்கே இருக்கிறது என்று கேட்டால் கூட்டிக் கொண்டுபோய் விட்டுவிடுவார் போனிலேயே)
மெயில் அனுப்ப மறந்துவிடாதீர்கள் : weshoulddosomething@googlemail.com
..
டாக்டர் ருத்ரன்,டாக்டர் ஷாலினி.. மே 10.
Posted by
narsim
Saturday, May 2, 2009
Labels: ஏதாவது செய்யணும் பாஸ்
31 comments:
சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் தலைவரே..!
இது குறித்து எனது நோட்டீஸ் போர்டில் போட அனுமதி கிடைக்குமா பாஸ்?
மிகச்சிறப்பான முயற்சி.. வாழ்த்துக்கள்!!
பேசப்படும், பகிரப்படும் கருத்துக்களை அப்படியே வலையில் ஏற்றும் முயற்சி கலந்து கொள்ள இயலாத மற்றவர்களுக்கும் மிக பயனுள்ளதாக அமையும்.
நன்றி டக்ளஸ்..
பரிசல்.. தயவுசெய்து இதை உங்கள் நோட்டீஸ் போர்டில் போடுங்கள்(இது குறித்து பேசினேன் உங்களிடம்).. பதிவாகவும் போடவேண்டுகிறேன்
மிக நல்ல முயற்சி!!
கலந்துகொள்ள இசைந்த ருத்ரன், ஷாலினி இருவருக்கும் என் நன்றியை சொல்லவும்!! கருத்தரங்கு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்!!
சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்
முயற்சி வெற்றியாக முடிய வாழ்த்துக்கள். வருங்காலங்களில் மேலும் சிறப்பு பெற பிரார்த்தனைகள்.
நல்ல முயற்சி, இந்த காலத்திற்கு தேவையான உருப்படியான முயற்சி
நிச்சயம் கலந்துக்கொள்ளவேண்டும்
நர்சிம், நிச்சயம் கேட்கப்பட்ட கேள்வி/பதில் ஒரு பதிவாக போடும்படி கேட்டுக்கொள்கிரேன், இது கலந்துக்கொள்ள முடியாத மக்களுக்கு போய் சேர ஏதுவாக அமையும் என்பது என் கருத்து.
இந்த ஏற்பாட்டை செய்யும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
இத்தகைய ஏற்பாட்டை செய்யமுன்வந்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். நிகழ்ச்சி அதன் நோக்கத்தில் வெற்றிபெற வாழ்த்துகள்!
//நர்சிம், நிச்சயம் கேட்கப்பட்ட கேள்வி/பதில் ஒரு பதிவாக போடும்படி கேட்டுக்கொள்கிரேன், //
முடிந்தால் ஒலிப்பதிவு செய்து MP3 கோப்பை வலை ஏற்றலாம்.
ப்ரெசண்ட் சார்!
அப்படியே சைட் டெம்ப்ளேட்டிலும் 10ஆம் தேதி வரை பர்மணெண்டாக ஒரு நோட்டீஸ் போர்டு போட்டு விடவும். நான், அதிஷா உள்ளிட்ட பல பேர் போட்டிருக்கிறோம் :-)
உள்ளேன் ஐயா.
பதிவர்கள் முகாம்களில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்த இருப்பது நல்ல விசயம்.வாழ்த்துக்கள்.
இதுபோன்ற நல்ல நிகழ்வுகள் நிறைய நடைபெறும் என்ற நம்பிக்கையுடன்.
காவேரி கணேஷ்
நல்ல முயற்சி....
நிச்சயம் கேட்கப்பட்ட கேள்வி/பதில் ஒரு பதிவாக போடும்படி கேட்டுக்கொள்கிரேன்
உள்ளேன் சகா
நிகழ்ச்சி சிறப்புறவும், அர்த்தமுள்ளதாகவும் என் வாழ்த்துக்கள்.
ஏற்பாடு செய்கிற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் பாராட்டுக்கள்.
நல்ல முயற்சி...
கருத்தரங்கு வெற்றிபெற வாழ்த்துகள் நண்பரே...
இன்று காலை எழுத்தாளர் பாஸ்கர் சக்தியிடம் பேசிக்கொண்டிருந்தேன். பதிவர்கள் ஒரு பெரிய சக்தியாக உருவாகிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது என்றார். நலிந்த எழுத்தாளர்களுக்கு உதவுவது, ஈழப்போராட்டங்களில் பங்களிப்பது, புத்தகங்களை சொந்தக் காசில் வாங்கியோ, அச்சடித்தோ இலவசமாகக் கொடுப்பது, கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வல்லுனர்களை பேச வைப்பது போன்ற செயல்பாடுகளின் மூலம் சென்னைப் பதிவர்கள் எப்போதும் எங்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறீர்கள். இதுபோன்ற பணிகளைக் கொங்குமண்டலத்திலும் நடத்தும் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
முதலடி வைத்த உள்ளங்களுக்கு நன்றி..
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்... இதற்கு முயற்சி எடுக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அருமை நர்சிம்.
ஒரே ஒரு வேண்டுகோளும், முடிந்த வரை கேள்விகள் இருப்பின் கொஞ்சம் யோசித்து தெளிவாக தயார் செய்தும் வந்தால் மிக அருமையாக இருக்கும்.
இது ஒரு நல்ல அனுபவமாக அமையும். பல நல்ல விடயங்களுக்கு நல்ல ஒரு தொடக்கமுமாக அமையும் என்று நம்புவோம்.
சிறந்த முயற்சி.! செல்வாவின் பின்னூட்டம் ஊக்கம் தருவதாக இருக்கிறது. களப்பணியில் இருக்கும் தோழர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துகளும்..
(நானும் அறிவிப்புப்பலகை வைத்துவிட்டேன்)
மிகவும் நல்ல முயற்சி.
உள்ளேன் ஐயா. மின்னஞ்சலும் அனுப்பியாயிற்று.
நன்றி மக்களே...
SK in வேண்டுகோளுக்கு இசைந்த இதை மேற்கொண்ட உங்களுக்கு நன்றி.
மிகச்சரியான முன் மொழிதலை கொண்ட பதிவு.
//ஏனெனில், சும்மா இருக்கும் குழந்தைகளை குட் டச் பேட் டச் என்று ஏதாவது சொல்லித்தரத் தெரியாமல் சொல்லிக் கொ(கெ)டுத்துவிடக்கூடாது என்பது மிக முக்கியம்.//
Agreed!
பொண்ண பெத்த எனக்கு கண்டிப்பா தேவைப்படும்ணே!
மறக்காம விளக்கமா பதிவு எழுதிருங்க!
http://www.tulir.org/
http://www.woman-ch.ac.psiweb.com/children/2-laureates.asp
i am glad such initiatives are being taken.Often times one wonders the naivity in our people. How could people trust everyone to look after their children?
sexual abuse is also seen for boys as well.
the above website has been working with kids who have been traumatised.
i am sure all these good work wil help the community very much. good luck.
wonderful informations seetha.
Thanks
Post a Comment