நீர் கீழே வீழ்வதை அருவி என்றும் ‘நீர்வீழ்ச்சி’ என்றும் சொல்கிறோம். அதே நீர்தான் மேலே இருந்துதான் விழுகிறது, என்றாலும் ‘மழை’ என்றும் அழைக்கிறோம். ஏன் என்று எப்பொழுதாவது யோசித்ததுண்டா தம்பிகளே? அது போலத்தான் சில நிகழ்வுகள் அதனதன் அளவில் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது.வரும். தேர்வும், அதில் தோல்வி என்று சொல்லப்படும் வார்த்தைகளும் அந்த அளவே...
மெக்காலே கல்வித்திட்டத்தின் மிச்ச எச்சமே இந்த எழவெடுத்த தேர்வுமுறை. வெற்றி பெற்றவர்கள் மட்டுமே கொண்டாடப்படுவதால் தோல்வியின் வலி தோற்றவனுக்குள் புதைந்து போகிறது. போகட்டும். தோல்வி என்று ஒன்றுமே இல்லை.. தள்ளிப்போடப்பட்ட வெற்றி தான் அது.
தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகளும் வெற்றியும் கொண்டாப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வுலகில் அதற்கு முன் அவர் தோற்ற அத்தனை முயற்சிகளையும் மறந்துவிட்டே இருக்கிறது.அல்லது அந்த தோல்விகளைப் பற்றி நினைத்துப் பார்ப்பது கூட இல்லை.
தாமதிக்கப்பட்ட ஒவ்வொரு வெற்றியும் தோல்வியாகத்தான் சித்தரிக்கப்படுகிறது. பரவாயில்லை.
“இனி வாழ்வே இருண்டுவிட்டது. அவ்வளவுதான்” என்று யாராவது சொன்னால் ஒரு மெல்லிய புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுங்கள். ஆனால் இரும்பு இதயத்தோடு. ஏனெனில் இங்கு தேர்வின் தோல்விக்கும் வாழ்வின் வெற்றிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. நீங்கள் தோல்வியை சரியாக எதிர்கொள்ளும் பட்சத்தில்.
குற்றவுணர்வில் குறுகிப் போய்விடாதீர்கள். வாழ்வில் இஃது ஒரு நிகழ்வு. விழுந்தால் எழத்தான் வேண்டுமேயன்றி அழ அல்ல.
உலகம் எவ்வளவு பெரியது என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவு இருக்கிறது. ஒரு மெடிக்கல்ஷாப் ஓனரின் உலகம் அந்த 20க்கு 20 கடையளவுதான்.ஆனால் அங்கு வந்துபோகும் வாடிக்கையாளர்களின் உலகத்தின் அளவு மொத்தமும் அவரின் உலக அளவில் அடங்கும்.
உங்களைப் பொருத்தவரை இன்று இந்த தோல்வி மட்டுமே கண்முன் இருக்கும் உலகம்.உண்மை அதுவல்ல. அதன் பின் இருக்கும் மிகப் பெரிய வெற்றிகள் தான் உண்மையான உலகம். அதைப் பார்ப்பதற்கான பாஸ்போர்ட்தான்/பயணச்சீட்டுதான் இந்த தோல்வி என்று கூறப்படும் தாமதிக்கப் பட்ட வெற்றி.
எனக்குத் தெரிஞ்ச ஒருவர்... +2 ல சுமாரான மார்க் வாங்குனதால பி.இ. சேர முடியாம பிஎஸ்சி சேந்தாரு. அத முடிச்சுட்டு ஐஐஎம் இல் போய் எம்பிஏ படிச்சாரு. +2 வுல சுமார் மார்க் வாங்குன அவரு சில வருட இடைவெளியில் தன் முயற்சியால அகமதாபாத் ஐஐஎம்லேயே சீட் வாங்குனாரு.அவரோட என்ட்ரன்ஸ் எழுதுன எத்தினியோ பி.இ. படிச்சவுங்களுக்கு ஐஐஎம் இல் இடம் கிடைக்கல. வாழ்க்கை யாருக்கு எப்ப மாறும்னு சொல்ல முடியாது. ஆக தொடர் முயற்சி மட்டுமே பலன் தரும்.
இன்னும் நீங்கள் பெரிதும் விரும்பும் திரைத்துறையில் எத்தனை வித பாடங்கள்.. தோல்விகள்.. அதிலிருந்து மீண்ட வெற்றிகள்..
முன்னனி இதழ் ஒன்று விஜயின் முகத்தைப் பற்றி அப்பட்டமாக கேலிசெய்து எழுதியது. இன்று அதே இதழ் மாதமிருமுறை விஜயின் அட்டைப் படம் தாங்கி வருகிறது.விஜயின் விடா முயற்சியும் உழைப்பும் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்..
அஜித்.. எத்தனை வித தோல்விகள். முதல் பட முடிவிலேயே முதுகுத் தண்டில் ஆப்பரேஷன்கள். இனி அவ்வளவுதான் என்று அனைவரும் நினைத்திருந்த வேளையில் நிமிர்ந்தெழுந்தவர் அஜித். இன்று முக்கிய நாயகர்களில் அவரும் ஒருவர். இடர்களை இடறியதால்தான் இது சாத்தியமாயிற்று.
இப்படி இன்னும் இன்னும் எத்தனையோ தோல்விகள் வெற்றிகளாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மொழிபெயர்க்க வேண்டியவர்கள் நீங்கள் தான்.
இது முடிவல்ல.. இறுதியும் அல்ல. ஆனால் முடிவெடுக்க வேண்டிய இடம். ஆம்.. இனி எல்லாம் வெற்றி மட்டுமே என்ற உறுதியுடன் மீண்டும் உழைக்க வேண்டிய தருணம்.
ஏதோ ஒரு காரணத்தினால் இப்படியான நிகழ்வு. மிக நன்றாகப் படித்திருந்தும் தொண்டைவரை இருந்த வார்த்தைகளை பேனாவின் முனையில் இறக்கமுடியாமல் போயிருக்கக்கூடும். வீட்டின் அன்றாடப் பிரச்சனைகளில் தொலைந்து போயிருக்கக்கூடும். தேர்வன்று மட்டுமே படிக்கவேண்டிய கடைசி நிமிட ஞானம் கைகொடுக்காமல் போயிருக்கக் கூடும்.. எதுவாயினும்..இன்று நடந்த நிகழ்வை ஒரு சிறு தோள்குலுக்கலில் தட்டி விடுங்கள்.ஏனெனில் இந்த மிகப் பெரிய உலகம் உங்களின் விரல் சொடுக்கிற்காக காத்திருக்கிறது.
மீண்டும் உழையுங்கள்.. மீண்டு வாருங்கள்.. நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது நீங்கள்.காத்திருக்கிறோம்.
இது முடிவு என்று முடிவெடுத்துவிடாதீர்கள். ஆரம்பம்...
முயற்சியை விடாதீர்கள்.. விடாமுயற்சிதான் மனவலிகளை போக்கும் வழி.
..
+2 தேர்வில் தோற்ற மாணவர்களுக்கு...
Posted by
நர்சிம்
Friday, May 15, 2009
101 comments:
தேவையான் பதிவு.. இந்த ஆறுதலை அவர்கள் உடன் இருப்பவர்கள் தர வேண்டும்..
மொக்கை சிஸ்டம் தல இது.. மாவட்டத்தில் முதலாவதாக வந்த பெண் பேப்பரில் வந்த பிழையான முடிவைக் கண்டு தற்கொலை செய்து கொண்டாளாம். தப்பு நடக்க வாய்ப்புண்டு என்று கூட யோசிக்க முடியாத பெண் எப்படி முதலாவது வந்தாள்?
எபப்டியோ.. தோல்விகள் தள்ளிப் போடப்பட்ட வெற்றி என்பதை ஏற்றுக் கொள்கிறேன்..
வாருங்கள்.. உங்கள் அடுத்த வெற்றி எல்லாத் தோல்விகளையும் அழித்துவிடும்..
///இவ்வளவு சொல்லிட்டு அவர் யாருன்னு சொல்லல பாருங்க....
அவர் அண்ணன் நர்சிம் :)///
அப்படிப்போடு
=பதிவை விட பின்னூட்டம் சுவாரசியம்.
மிக உரத்த குரலில் ஆமோதிக்கிறேன்.
இந்தப் பதிவு விகடன் போன்ற பெரும் பத்திரிகைகளில் வந்தால் மிக உபயோகமாக இருக்கும். தோல்வியின் ரணங்களை அப்படி வருடிக் கொடுக்கிறது இந்தப் பதிவு.
அப்துல் எழுதியது எனக்குப் புதுத் தகவல். Way to go Narsim.
அனுஜன்யா
The best.. :))
சூழலுக்குத் தேவையான பதிவு.. அருமை நரசிம்.. இளைய தலைமுறையினர் புரிந்து கொண்டால் சரி.. உங்களைப் பற்றிய தகவல்கள் சுவாரசியம்..
அவசியமான பதிவு.
IIMஆஆஆஆஆஆஆஆஆஆ..
சூப்பர் தல
நன்றி தல :-)
நான் இன்றுவரை +2 பாஸ் செய்ததே இல்லை :-(
//அனுஜன்யா said...
இந்தப் பதிவு விகடன் போன்ற பெரும் பத்திரிகைகளில் வந்தால் மிக உபயோகமாக இருக்கும். தோல்வியின் ரணங்களை அப்படி வருடிக் கொடுக்கிறது இந்தப் பதிவு.
அப்துல் எழுதியது எனக்குப் புதுத் தகவல். Way to go Narsim. //
ஆமாங்க.. தேர்வில் தோற்ற எத்தனை பேர் பதிவுகளை படிக்கறாங்க? இதை வெகு ஜன பத்திரிக்கைகளில் வெளியிட முயற்ச்சித்து பாருங்களேன்.
நான் எப்போதும் சிந்திப்பேன். இப்படி ஒரு பதிவை போட வேண்டும் என்று. இப்பதிவை சரியான சந்தர்ப்பத்தில் இட்ட தங்களுக்கு மிக்க நன்றிகள்.
இது தமிழகத்துக்கு மட்டுமல்ல.. முழு உலகுக்கும் பொருந்தும். முதலாளித்துவ போட்டி அடிப்படையிலான மனித சமூகக் கட்டமைப்பு மனிதனிடத்தில் திணித்திருக்கும் பாதகமான விளைவுகளில் இதுவும் ஒன்று.
தேர்வு என்பது வாழ்வின் முடிவல்ல. அதில் தோல்வி என்பது வாழ்வின் அத்தியாயம் கூட அல்ல. ஒரு சாதாரண நிகழ்வு. அதை மனதில் இருத்தாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து சென்றால் முயன்றால் வெற்றிகள் பலப் பல வரும்.
தேர்வில் தோற்றதற்காய் வாழ்வே தொலைந்ததாக இந்த உலகத்தில் பொய்யான பிம்பங்களை ஊடகங்களும் வெற்றி பெற்றவர்களும் அவர்களின் பின்னால் உள்ளவர்களும் காட்டவே செய்வர். ஆனால் அவர்கள் குறித்த நிகழ்வில் பங்குபெற்றி அதை நிறைவாக்கினர். அவ்வளவே.
தேர்வில் வென்ற பலர் வாழ்க்கையில் தோற்றதும்.. தேர்வில் தோற்ற பலர் வாழ்க்கையில் வென்றதும் வரலாறாக எம்முன் இருக்கும் காலத்தில் நாம் வாழ்கின்ற போது.. தேர்வின் தோல்வியை சாதாரணமாக எடுத்துக் கொள்வதே நன்று. அடுத்த வெற்றிக்கான முதற்படி அதுவே..!
எல்லோருக்கும் நன்றி..
அப்துல்லா அண்ணன் மன்னித்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவரின் கமெண்டை டெலிட் செய்து,அவர் எழுதிய முக்கிய வரிகளை பதிவில் சேர்த்து விட்டேன்.. அதுபோக இன்னும் சில திரைத்துறை உதாரணங்களும் இணைக்கப்பட்டுள்ளது..
ஏன் டெலிட் செய்தேன் என்றால்.. பதிவின் நோக்கம் வேறு.. என்னைப்பற்றிய தகவலின் ஆச்சர்யத்தில் பதிவின் நோக்கம் சிதறிவிடக்கூடாது என்பதற்காக.
ஒன்பதாவது பெயிலானவங்களுக்கும் இதே அட்வைஸ் தானா!
இல்ல வேற இருக்கா?
நல்ல பதிவு நர்சிம்.
நான் கூட இன்னும் +2 பாஸ் பண்ணவே இல்லை :-)
வால்பையன்.. “நீங்க மட்டும் 4 ரொட்டின்னு சொல்லியிருந்தா ஒரு சூப்பர் ஜோக் சொல்லி இருப்பேன்” சர்தார்ஜி நினைவுக்கு வருகிறார் உங்கள் பின்னூட்டத்தை பார்த்து :-))
சரியான நேரத்தில் வந்துள்ள தேவையான பதிவு !!!!!
மிக மிக தேவையான பதிவு நர்சிம்.... ஆனாலும் +2 மற்றும் அதற்குக் கீழே உள்ள வயதினர்களில் பதிவு வாசிப்பவர்கள் மிகக் குறைவே என்று நினைக்கிறேன்.
இப்போது தோன்றுகிறது... இதை ஒரு சின்ன நோட்டிஸ் போல அச்சடித்து முடிவுகள் வந்த அன்று பள்ளிக்கூட வாசல்களில் வினியோகம் செய்திருக்கப்பட வேண்டுமோ என்று... அடுத்த ஆண்டு செய்ய்து விடுவோமா?
நீங்கள் எந்த வருடத்திய ஐ.ஐ.எம் பேட்ச்? எந்த ஊர்?
மிக நல்ல பதிவு.
ப்ளாகர்கள் ஒன்று கூடி ப்ளஸ் ௨ தேறிய மாணவர்கட்க்கு (அதுவும், ஏழை) உதவ ஒரு த்ரெட் போடுங்க. கரக்டான கோர்ஸ் போன்றவை. எங்கே டொனேசன் குறைவு அப்படின்னு... இப்படிபல..
//இடறுகளை இடறியதால்தான்//
இடர்களை இடறியதால்தான்... சரியா??
(கம்பருக்கே க்ளாசா??? ஆஆஆ.... )
இந்த பதிவை பிரிண்ட் அவுட் எடுத்து +2 பெயிலானவங்களுக்கு கொடுங்க!
அடி விழுந்தா கம்பெனி பொறுப்பல்ல!
நல்ல பதிவு..
=பதிவை விட பின்னூட்டம் சுவாரசியம்.
தாறுமாறாக வழிமொழிகிறேன்...
(ஒரு சின்ன டவுட், சொந்த கதையா... இல்ல மலரும் நினைவுகள், யாரும் இதுமாதிரி உங்களுக்கு ஆறுதல் சொல்லலையா...அஆவ்வ்வ்வ்வ்வ்வ் )
நல்ல பதிவு அவசியமான நேரத்தில்!
அருமையிலும் அருமை..அவசியமான பதிவு..
இந்நேரத்தில் அவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு ஆறுதல் போல் இல்லாமல் நம்பிக்கை ஏற்ப்படுத்த உடன் ஒரு ஆள் இருந்தாலே போதும் தல..
மிக மிக அருமையான பதிவு.
பாராட்டுக்கள்.
FAILURE IS THE STEPPING STONE FOR SUCCESS
கீழே விழுந்ததே இல்லை என்று சொல்வதை விட விழுந்து எழுந்து சாதிப்பதே சிறப்பு.
ப்ளாகர்கள் ஒன்று கூடி ப்ளஸ் ௨ தேறிய மாணவர்கட்க்கு (அதுவும், ஏழை) உதவ ஒரு த்ரெட் போடுங்க. கரக்டான கோர்ஸ் போன்றவை. எங்கே டொனேசன் குறைவு அப்படின்னு... இப்படிபல..//
அருமையான ஐடியா,
இதை பேரண்ட்ஸ் கிளப்பில் போடும்படி எங்கள் உறுப்பினர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
பர்மிஷன் கேட்டுட்டு இந்த பதிவை எடுத்து பேரண்ட்ஸ் கிளப்பில் போடலாம்னுதான் ஃப்ரெண்ட் நினைச்சேன்.
உங்க மொபைல் ச்விச்சுடு ஆஃப்னு வந்துச்சு. கோவிக்க மாட்டீங்கன்னுதான் இந்த பதிவுக்கான லிங்கை பேரண்ட்ஸ் கிளப்பில் சேத்திருக்கேன்.
மன்னிக்கவும், நன்றி
சரியான ஆட்களை தேர்வு செய்ய பிளாக்கர் நண்பர்கள் உதுவுவார்கள் என்றால்.. இதை உடனே செய்ய வேண்டும். என்னால் ஆன அனைத்து விதமான உதவிகளும் செய்கிறேன். நண்பர்களும் இணைவார்கள் என்று நம்புகிறோம்.
நரசிம்,
இதை எடுத்துக்கலாமா. ??
Thalai, call panna oru appointment kodunga. want to talk to you ??
@எஸ்.கே,
நிச்ச்யம் பன்னுவோம். தல ஃப்ரீயா ஆயிட்ட உடனே அடுத்த கட்டம் ஆரம்பம்..
அருமையான பதிவு.
நான் +௨ வில் மார்க் குறைவாக எடுத்து (பாஸ் பண்ணிட்டேன்) சீரளிந்தவன்.
ungalai போல ஒருவர் ஆறுதல் கூறியிருந்தால் ஒருவேளை இன்று இன்னும் நல்ல நிலைமைக்கு வந்திருப்பேன்
ஆனாலும் நான் +௨ முடித்து ௧௫ வருடம் ஆனாலும் இந்த பதிவு எனக்காக எழுதின மாதிரி இருக்கு. இந்த பதிவு மற்றும் அக்கா பற்றி எனுதின பதிவு
இந்த இரண்டையும் படித்த பொது என்னை அறியாமல் என்ன கண்களில் கண்ணேர் வருகிறது.( எனக்கு சகோதரிகள் கிடையாது. நான் +௨ பாஸ்)
அருமை நரசிம்
கூடிய விரைவில் நீங்கள் இதை விகொடன் வெளியல்டவும்.
இதை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து என்னோட ஊரில் இருக்கும் ஒரு டுடோரிழலில் இன்று மாலை ஓட்ட போகிறேன்.
//ungalai போல ஒருவர் ஆறுதல் கூறியிருந்தால் ஒருவேளை இன்று இன்னும் நல்ல நிலைமைக்கு வந்திருப்பேன்/
இந்த புருடா தான வேண்டாங்கிறது!
அப்பவே அட்வைஸ் பண்ண எல்லோரையும் பூச்சிய பாக்குற மாதிரி பார்த்துட்டு, இப்போ புதுசா கதை அளக்குறியே தல!
//இதை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து என்னோட ஊரில் இருக்கும் ஒரு டுடோரிழலில் இன்று மாலை ஓட்ட போகிறேன். //
ஏற்கனவே சொல்லிட்டேன்!
செமத்தியா கொடுத்தா கம்பெனி பொறுப்பல்ல!
நர்சிம்
இந்த பதிவின் லிங்கை உறவினருக்கு அனுப்பி படிக்க சொன்னேன். மகள் கம்மியா மார்க் எடுத்துட்டதா புலம்பியதால். மகளுக்குப் பிரிண்ட் எடுத்துட்டுப் போனதோடு போன் வேற பண்ணி நன்றி சொன்னா. நண்பர்களும் தெரிந்தவர்களுக்கு அனுப்புங்கள். பலன் தெரிகிறது.
நல்லப் பதிவு தான். ஆனால் தொடர்ச்சியான பின்னூட்டங்களை பார்க்கும்போது மரியாதை படம் பார்ப்பது மாதிரி இருக்கிறது!
இதை இன்னொரு extremeக்கு இழுத்துச் சென்று +2வில் தோல்வி அடைவதுதான் சிறப்பு என்பதுபோல் யாராவது புரிந்து கொள்ளப் போகிறார்களே எனப் பயமாய் இருக்கிறது!
நல்லா டானிக் பதிவு. தேர்வில் தோல்வி என்பதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. நானெல்லாம் தோற்காத பரீட்சையே இல்லை.. :)) அந்தத் தோல்விகளால் பெரிய வெற்றிகளைப் பெறவில்லை எனினும் கூட வாழ்க்கையில் எந்தவித தோல்வியும் எனக்கில்லை.. ஃப்ரீயா விடுங்க பசங்களா.. எல்லாருக்கும் தேவைக்கு அதிகமாவே வாய்ப்பிருக்கு.. வெரும் தேர்வுகளை மட்டுமே நினைச்சிட்டு இருக்காதிங்க. :)
// ஜ்யோவ்ராம் சுந்தர் said...
இதை இன்னொரு extremeக்கு இழுத்துச் சென்று +2வில் தோல்வி அடைவதுதான் சிறப்பு என்பதுபோல் யாராவது புரிந்து கொள்ளப் போகிறார்களே எனப் பயமாய் இருக்கிறது!//
அதனாலத்தான் நான் நெகட்டிவ் பின்னூட்டங்களா போட்டுகிட்டு இருக்கேன்!
இப்பெல்லாம் ஒழுங்கா படிக்காதவங்க சொல்றது
ரஜினி படிச்சிருக்காரா?
சச்சின் படிச்சிருக்காரா?
பசங்க தெளிவா தான் இருக்காங்க!
நாமா தான் தெளிவா குழம்பியிருக்கோம்!
தேவையான நேரத்தில் தேவையான பதிவு...
மிக நல்ல அவசியமான பதிவு.
//தேவையான நேரத்தில் தேவையான பதிவு... //
//மிக நல்ல அவசியமான பதிவு. //
இந்த ரெண்டு பின்னூட்டத்துக்கும் உள்ள அர்த்த வித்தியாசத்தை கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு அடுத்த வருட +2 வினாத்தாள் இப்போதே கொடுக்கப்படும்!
ithu athukkku :)
அருமையான அவசியமான பதிவு.
வாழ்த்துகள்.
எல்லோருக்கும் நன்றி..
//ஏன் டெலிட் செய்தேன் என்றால்.. பதிவின் நோக்கம் வேறு.. என்னைப்பற்றிய தகவலின் ஆச்சர்யத்தில் பதிவின் நோக்கம் சிதறிவிடக்கூடாது என்பதற்காக.//
என் பையன் கிஷோரகுமாரும் அடுத்த வருசம் +2 நல்லதொரு அனுபவபூர்வமான யோசனை மிடில்க்ளாஸ் பெற்றோர்களூக்கு மிகவும் உதவும். இதை ப்ரிண்ட் எடுக்க அனுமதி கொடுப்பீர்களா?
http://parentsclub08.blogspot.com/2009/05/blog-post_15.html
இந்தப் பதிவையும் படிக்க வேண்டுகிறேன்.
தேவையான் பதிவு..
நெஞ்சைத் தொட்டப் பதிவு :-)
அவ்.. வட போச்சே.. இத மாதிரி ஒண்ணு இந்த நேரத்துல போடணும்னு யோசிச்சு வச்சிருந்தேன். மறந்துபோச்சு. ஒரு நண்பர் கூட இதுகுறித்து எழுதுங்கன்னு மெயில்ல கேட்டிருந்தார். பிரமாதம்.. (நீங்கள் எழுதியது இன்னும் சிறப்பு என்பதில் சந்தேகமென்ன?)
மீ த 50.!
அப்படியே எனக்குத் தெரிந்த ஒருத்தரும் பிளஸ் டூ சுமாராககூட பாஸ் பண்ணவில்லை, கோட் அடித்துவிட்டார்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... (ஆனா அவுரு இப்போ சம்பளம் வாங்குறாருன்னு சொல்லமாட்டேன்)
முந்தைய பின்னூட்டத்தில் (ஆனா அவுரு இப்போ சம்பளம் வாங்குறாருன்னு சொல்லமாட்டேன்)//
அது '..என்ன சம்பளம்..' என்று வந்திருக்க வேண்டும். ஹிஹி..
என்னாத்த சொல்ல எதை சொன்னாலும் நம்ம வாலுண்ணே வந்து கும்மிடுவாரு போல கீது ;))
வீழ்வது குற்றமல்ல !!!!
வீழ்ந்து கிடப்பது தான் குற்றம் !!!
அருமையா சொன்னீங்கன்னே !!
//என்னாத்த சொல்ல எதை சொன்னாலும் நம்ம வாலுண்ணே வந்து கும்மிடுவாரு போல கீது ;)) //
எதும் சொல்லாம போனமட்டும் விட்டுறுவோமா!
+2ல எத்தனையில கோட்டு?
//வீழ்வது குற்றமல்ல !!!!
வீழ்ந்து கிடப்பது தான் குற்றம் !!!//
வெல்வது வீரமல்ல
கொல்வதே வீரம்னா
ஒத்துக்குவிங்களா?
//புதுகைத் தென்றல் said...
மிக மிக அருமையான பதிவு.
பாராட்டுக்கள்.
FAILURE IS THE STEPPING STONE FOR SUCCESS
கீழே விழுந்ததே இல்லை என்று சொல்வதை விட விழுந்து எழுந்து சாதிப்பதே சிறப்பு.
//
அட வாத்தியாரக்காவே பாராட்டிருச்சு :)
வால்பையனோட பிளாக்க யாராவது ஹேக் செஞ்சுட்டாங்களா? ஏன்னா வால்பையன் இந்த மாதிரி குத்த மாட்டேரே?
//ஏன்னா வால்பையன் இந்த மாதிரி குத்த மாட்டேரே? //
தவறான கணிப்பு!
நாளைக்கு லீவுன்னு இன்னைக்கு ஃபுல்லா ஏத்திகிட்டதால இன்னைக்கு மாட்டியது நீங்க தான்!
இந்த பாழாய் போன மெக்காலே குடும்பத்தினர் விட்டு போன pub களில்
வேஸ்ட் ஆகி விட்டது வாழ்க்கை.
உங்கள் பதிவு ஊக்கம் அளிக்கிறது.
இந்த தடவை பாஸ் செய்து விடுவேன்.இப்போதே படிக்க ஆரம்பித்து விட்டேன்.Good touch.
Just Superb!! Need of the hour!!பிடிங்க பூங்கொத்து!!!
அன்புடன் அருணா
//இந்த பாழாய் போன மெக்காலே குடும்பத்தினர் விட்டு போன pub களில்
வேஸ்ட் ஆகி விட்டது வாழ்க்கை.//
பல கல்வி விற்பனை முதலைகள் இதை வைத்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!
எதையும் பாஸிடிவ்வா அப்ரோச் செய்யனும் பாஸ்!
அருமை Narsim. ;-)
சொந்த அனுபவம், என் மாமனார் என் மனைவியிடம், நான் அரசாங்க வேலை விடபோவதை சொன்ன போது, சொல்லியது. " அரசாங்கத்திலேயே குப்பை கொட்டினவர், சொந்த தொழிலே கண்டிப்பாக பெறேடுப்பர்! ". இதுடானிக்.
//அரசாங்கத்திலேயே குப்பை கொட்டினவர், சொந்த தொழிலே கண்டிப்பாக பெறேடுப்பர்! ". இதுடானிக். //
ஆனா ப்ராக்டிக்கலா அது முடியாதென்னு சொல்றாங்களே!
தேவையான பதிவு
Yet another eye opening post narsim. and this needs to be published in the leading magazines and should also be circulated among current year aspirants.
good job.
இது முடிவல்ல.. இறுதியும் அல்ல. ஆனால் முடிவெடுக்க வேண்டிய இடம். ஆம்.. இனி எல்லாம் வெற்றி மட்டுமே என்ற உறுதியுடன் மீண்டும் உழைக்க வேண்டிய தருணம்.
அருமை
//தேவையான பதிவு //
தேவையா இந்த பதிவுன்னு கேக்குற மாதிரி இருக்கு!
//Yet another eye opening post narsim. and this needs to be published in the leading magazines and should also be circulated among current year aspirants.//
தமிழ்ல போட்டா கும்முவேன்னு பீட்டர் வுட்டு போறார் பாருங்க!
வாங்க சகா மொழிபெயர்க்க!
//இது முடிவல்ல.. இறுதியும் அல்ல.//
ரெண்டுக்கும், எத்தனை கிலோமீட்டர் வித்தியாசம்!
///தோல்வி என்று ஒன்றுமே இல்லை.. தள்ளிப்போடப்பட்ட வெற்றி தான் அது.
//
இதை விட சிறப்பாக உற்சாகம் அளிக்க முடியது நர்சிம்
//இதை விட சிறப்பாக உற்சாகம் அளிக்க முடியது நர்சிம் //
பூஸ்ட், காம்ப்ளானுக்கு பதிலா நர்சிம்ம பேச சொல்லி ஒரு கேசட் வாங்கி வச்சிக்குவோமா?
மருத்துவம் பொறியியலேயன்றிப் பிறிதில்லை என்ற பிரமைக்குப் பலியானோன் அடியேனும்...
உங்க பதிவைப் படிச்சதும் தான் புரிந்தது... நாமெல்லாம் அஜித் விஜய் ஆயிருக்க வேண்டியவங்கண்ணு !! jus miss...நீங்க கொஞ்சம் முன்னாடியே எழுதியிருந்தா தமிழ் நாட்டுக்கு இன்னொரு ஸ்டார் கெடைச்சிருப்பார் !!!!
//இன்னும் நீங்கள் பெரிதும் விரும்பும் திரைத்துறையில் எத்தனை வித பாடங்கள்.. தோல்விகள்.. அதிலிருந்து மீண்ட வெற்றிகள்//
எல்லா கருத்துகள் சொல்லும்போதும்..
திரைத்துறையினரை உவமை வச்சி சொன்னாதான்,
ஏத்துக்கிறானுங்க பயபுள்ளய்யோ...
baasu...
youthful vikatan- la standingu !!
அருமையான..அசத்தலான பதிவு..நர்சிம்
தேவையான் பதிவு...
ஆனா தலைப்பை "மாணவ மாணவிகளுக்கு" அப்படி போட்ட்ருக்கலாம்..
என்ன வால் அண்ணே...இன்னைக்கி உங்க சொந்த ஐடில வந்து குமிக்கிட்டு இருக்கீங்க??? நோ..நோ..ரொம்ப தப்பு :))
//என்ன வால் அண்ணே...இன்னைக்கி உங்க சொந்த ஐடில வந்து குமிக்கிட்டு இருக்கீங்க??? நோ..நோ..ரொம்ப தப்பு :))//
என்ன செய்ய அந்நியன்(ப்ளீச்சிங்) ஆகனும்னா இன்னும் எதாவது பெருசா தப்பு நடக்கனும்!
இங்கே நம்ம ஐடியே போதுமானது!
என்னைப்பற்றிய தகவலின் ஆச்சர்யத்தில் பதிவின் நோக்கம் சிதறிவிடக்கூடாது என்பதற்காக.
தனி மடலிலாவது சொல்லி விடுங்கள். தலை வெடித்துவிடும் போலிருக்கிறது.
லக்கி பன்னிரெண்டாம் வகுப்பா அதான் ஆணவத்தில் ஆடுகிறார்:) அடியேன் பத்தாங் கிளாஸ்!
//அடியேன் பத்தாங் கிளாஸ்! //
நான் ஒன்பதாங்கிளாஸ்,
அப்ப என்னைவிட உங்களுக்கு ஆணவம் அதிகம் தானே!
அருமையான பதிவு தலைவரே.
ரொம்ப லேட்டா பதிவப் படிக்கறேன் பாஸூ!
18 வருஷம் லேட்டா..!
சூப்பர்ர்!!
இந்த புருடா தான வேண்டாங்கிறது!
அப்பவே அட்வைஸ் பண்ண எல்லோரையும் பூச்சிய பாக்குற மாதிரி பார்த்துட்டு, இப்போ புதுசா கதை அளக்குறியே தல!
அப்படி எல்லாம் கிடையாது.
நான் வணிகவியல் படிக்க ஆசை பட்டேன். ஆனா கணக்கு படிக்க வச்னாக வீட்ல.
அது தான் காரணம்,
பய் புள்ளங்க பாடமே படிக்காத போது பிளாக் எங்க அண்ணே படிக்க போது..
பேசமா இந்த நல்ல கருத்தை விகடனில் போடுங்க.. அவங்க அப்பா அம்மா வாது படிச்சு அவங்கள புரிஞ்சிகிட்டும்..
நான் கல்லூரி படிக்கும் போது இது வந்து இருக்க கூடாதா ;)
சரியான நேரத்தில் மிக அவசியமான பதிவு.
//விழுந்தால் எழத்தான் வேண்டுமேயன்றி அழ அல்ல//
:-) க்ளாஸ்!
நல்லப் பதிவு. அதே போல் ஜ்யோவரம் சுந்தர் சொன்னது போல் கூட எடுத்துக் கொள்ளகூடுமோ என்கிற ஐயம் எழுகிறது..
என்னை பொறுத்தவரை முயற்சியிருந்தால் முடியாதது எதுவுமில்லை என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு நர்சிம்.. எனக்கு நானே உதாரணம்.
//நீர் கீழே வீழ்வதை அருவி என்றும் ‘நீர்வீழ்ச்சி’ என்றும் சொல்கிறோம். //
"நெஞ்சு படபடக்கிறது
அருவியை
நீர்விழ்ச்சி என்றால்"
ஒரு பிரம்மாண்டத்தையே வீழ்ச்சின்னு சொல்லும் இடம் இது அதனால் தோல்வி என்பது நீங்கள் சொன்னபடி தாமதமான வெற்றியே.
//விழுந்தால் எழத்தான் வேண்டுமேயன்றி அழ அல்ல//
மிக சரியாக சொன்னீர்கள். இது நம் எல்லோருக்குமே பொருந்தும்.
//அவரு சில வருட இடைவெளியில் தன் முயற்சியால அகமதாபாத் ஐஐஎம்லேயே சீட் வாங்குனாரு.அவரோட என்ட்ரன்ஸ் எழுதுன எத்தினியோ பி.இ. படிச்சவுங்களுக்கு ஐஐஎம் இல் இடம் கிடைக்கல. //
முக்கிய எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளபட வேண்டியவர்.
நானும் +12வில் குறைவான மதிப்பெண் எடுத்து பின் எம்.எஸ்.ஸி படித்து திருமணம் ஆன பின்னும் விடா முயற்சியால் இந்தியாவில் மிக சிறந்த கல்வி நிறுவனத்தில் என்னுடைய எம்.டெக் படித்தி நான் கனவு கண்ட கணனித்துறையில் இணைந்தேன். இன்று லிட் இன்ஜினியர். நாளைய இந்தியாவின் தொலைத்தொடர்பில் வர இருக்கும் பெரும் மறுதலில் எங்கள் நிறுவனத்தின் பங்கும் அதில் ஒரு துளி எனதும் கூட.... இந்த நிலை எனக்கு ஏழு வருடம் தாமத்தில் கிடைத்தது. ஆயினும் என்ன குறை? ஏழு வருடம் தானே?
உங்கள் அறிவுரை ஒவ்வொன்றும் மிக முத்தானவை மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை.
இனி உங்களை வரும்கால முதல்வர் என்றே அழைக்க இருக்கின்றேன்.
நல்லது செய்யுங்கள் காத்திருக்கின்றோம்.
வாழ்க வரும்கால முதல்வர் அவர்களே.
என்ன ப்ராக்டிக்கல் வால்பையன்? நான் பதிமூன்று வருடம் அரசாங்க சம்பளமாக வாங்கியது, வேலை விட்ட பிறகு பதிமூன்று மாதத்திற்குள் "நியாயமாக" சம்பாரித்துவிட்டேன். இப்போ வெற்றி தானே?
இப்போ நாற்பது தாண்டிவிட்ட பிறகு, கிட்டத்தட்ட ரிடயார்டு லைப். அது தான் கதை கட்டுரை பதிவுகள் என்று பொழுது போகிறது, ரியல் எஸ்டேட் பிசினஸ் தவிர. என்னால், ஒரு நூறு குடும்பங்கள் வாழனும்... அது தான் ஆசை.
இதுவும் ஒரு தலித்தாக பிறந்து, இப்போ பெற்றது. ( தன்னடக்கம் எல்லாம் இல்லை, சூழ்நிலை... உயர் ஜாதியினர் எப்படி தள்ளி விடுவார்கள் என்று தெரியுமா? அரசியல்வாதிகளால் போடா ச... என்றே திட்டபட்டுள்ளேன்...)
மிக மிக உபயோகமான பதிவு. Hats off ji.
அனைவருக்கும் நன்றி
//வாழ்க வரும்கால முதல்வர் அவர்களே.//
வடிவேலு வசனம் : “ நான் ஏண்டா 12 மணிக்கு சுடுகாட்டு போகப் போறேன்” தான் ஞாபகம் வருது..
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..
வடிவேலுவும் 12 பத்தி தான் பேசி இருக்காரா. ஓ நல்ல டைமிங்
எப்போதும் ஒருவர் வெற்றி பெற்றதும் மிக எளிதாக எல்லாம் அதிர்ஷ்ட்டம்ப்பா என சொல்லி விடுவார்கள்!...ஆனால் உங்கள் முயற்சி தான் அந்த அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கிறது என்பதை மறந்து விடுவார்கள் அல்லது தெரியாது! மிக நல்ல,மிக அவசியமான பதிவு!...
எல்லாமே உண்மைதான்.படிப்புக்கும் வாழ்க்கைக்குமான தொடர்பு வெகு குறைவு. நானும் +2 தோல்விதான் அப்புறம் 10 வகுப்பு மார்க்கை வைத்து டிப்ளமோ அப்புறம் டிப்ளமோ வைத்து எஞ்சினியரிங் இப்போ வெளிநாடு.ஆனால் இன்னும் +2 பாஸ் ஆகல.
வாழ்த்துகள்..!
வெற்றிக்கு வாழ்த்துகள்
தமிழ்மண விருது வெற்றிக்கு வாழ்த்துகள் நர்சிம்..
தமிழ்மணம் விருதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அருமையான பகிர்வு. காலம் தாழ்த்தி படித்தாலும் மகிழ்ச்சி. அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. தமிழ்மணம் விருது கிடைத்துள்ளமைக்கு வாழ்த்துக்கள். மதுரை வந்த போன் செய்யவும்.
அருமையான பகிர்வு. காலம் தாழ்த்தி படித்தாலும் மகிழ்ச்சி. அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. தமிழ்மணம் விருது கிடைத்துள்ளமைக்கு வாழ்த்துக்கள். மதுரை வந்த போன் செய்யவும்.
அருமையான பகிர்வு. காலம் தாழ்த்தி படித்தாலும் மகிழ்ச்சி. அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. தமிழ்மணம் விருது கிடைத்துள்ளமைக்கு வாழ்த்துக்கள். மதுரை வந்த போன் செய்யவும்.
தேவையான் பதிவு...
Post a Comment