மேனேஜ்மெண்ட்டில் ஒரு வாசகம் சொல்வார்கள்...
“Don't re invent a wheel again"
அதாவது “நேரத்தை வீணடித்து,மீண்டும் சக்கரத்தை கண்டுபிடித்துக் கொண்டிருக்காதே”(புரியாதவர்களுக்கு: சக்கரம் தான் முதல் விஞ்ஞான கண்டுபிடிப்பு)
அது போலத்தான் இப்பொழுது இருக்கும் சூழலும் மனநிலையும்.
இந்திய வரைபடத்தின் அடியில் இருக்கும் தமிழ்மக்களின் கண்ணீர்த்துளிகள் மொத்தமாக உறைந்து தேங்கி நிற்பது போன்ற இலங்கை வரைபடம் இருப்பது இயற்கையின் சதியாகத்தான் இருக்க வேண்டும்.
தமிழ், தமிழ், தனித் தமிழ்நாடு என்ற முழக்கங்கள் 60 களில் வீரத்தின் அடையாளமாகவும் பின்னர் அதுவே ஆட்சிக்கான அடிப்படை முழக்கமாகவும் மாறிப்போனதென்பது செய்தி.
‘ கனியிடை ஏறிய சுளையும் முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் தென்னை
நல்கிய குளிர் இள நீரும்
இனியம் என்பேன் எனினும் தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்’
என்ற பாரதிதாசனுக்கு அன்றே தெரிந்திருக்கிறது.. தமிழைத்தான் என்னுயிர் என்று சொல்லவேண்டும் என்றும், தமிழனை என்னுயிர் என்று சொல்லி, அதை தனக்குப் பின் வரும் சந்ததியினர் பின்பற்றமாட்டார்கள் என்பதும்.
‘ நீயோ கருமான் செய் படையின் வீடு
நான் அங்கோர் மறவன் கன்னல்
பொருள் தரும் தமிழே நீ ஓர்
பூக்காடு நான் ஒரு தும்பி..’
என்று சொன்னாயே பாரதி தாசா... பூக்காடெல்லாம் சாக்காடாகி அச் சுடுகாட்டின் சூடு தனிய இன்னுமோர் நூற்றாண்டு ஆகும் என்பதுனக்கு தெரியப்போவதில்லை. வேதிவினை குண்டுகளின் சத்தம் சில சில்லறை புரண்ட சத்தத்தில் யாருக்கும் கேட்கவில்லை.கேட்கப்போவதில்லை. கேட்டாலும் அதைப் பற்றி கேட்கப் போவதில்லை.
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எவ்வளவு உறுதியும் தீரமும் காட்டுகிறார் கலைஞர்? கிடைக்கவேண்டிய மந்திரி பதவிகள் கிடைக்கவில்லை என்றால் ஆதரவை வெளியில் இருந்து தரப்போவதாக உடனே சொல்கிறார், வீட்டில் இருக்கும் சிறுபிள்ளைகள் மிட்டாய் தரவில்லை என்றால் கோவித்துக் கொண்டு கொல்லைப் பக்கம் போய் அமர்ந்துவிடுவது போல பதவியேற்பு விழாவை புறக்கணித்து விமானமேறிவிட்டார்.
இந்தத் தீரத்தில் ஒரு சதவீதம் ஆரம்பத்தில் ஈழமக்கள் மீது காட்டி இருந்தால் உயிர்கள் காக்கப் பட்டிருக்கும். என்ன செய்ய? திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிராகரன் தானே..அவர் என்ன திருக்குவளை கருணாநிதி பிராபகரனா? ஒரு வேளை உங்கள் வாரிசாக இருந்திருந்தால்,எப்படி அழகிரிஅண்ணனுக்கு(!) மந்திரிப் பதவிக்காக சண்டைபோடுகிறீர்களோ அது போல ஈழத்திற்கு ஏதாவது செய்திருப்பீர்களோ என்ற நப்பாசையின் நா அசைவுதான் மேற்சொன்ன தி,க,பி.
இனி செல்வி ஜெயலலிதா மேடத்தை ஒன்றும் சொல்ல முடியாது. கேட்டால் “அதான் ஜெயிக்க வைக்கவில்லையே.. இல்லை என்றால் இத்தனை நேரம் தனிஈழம் அமைத்தே தந்திருப்பேன்.. இனி தேர்தல் வரை No Comments ”என்ற நுனிநாக்கு ஆங்கிலத்தோடு(அண்ணாவிற்குப் பிறகு ஆங்கிலம் பேசும் முதல்வர்!) முடித்துக் கொண்டு, கொடநாடோ கொடைக்கானலோ.. .
முதலில் சொன்ன அந்த சக்கர கண்டுபிடிப்பு தான்... தமிழ், தமிழன், வரலாறு, இலங்கை என்று மீண்டும் பேசிக் கொண்டுதான் இருக்க வேண்டி இருக்கிறது. ஏனெனில் அதிகாரம் கையில் இல்லாமல் என்ன பேசி என்னவாகப் போகிறது?
உலகமே அதிகாரத்தின் கையில் தான் இயங்குகிறது என்றார் ஃபூக்கோ.. அந்த அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்பதில் தான் இயக்கங்களின் இயக்கம் இருக்கிறது என்கிறேன் நான். இத்தாலி நாட்டு அதிகார செம்மையில் ஓர் இனப் படுகொலைக்கு சாட்சியாகிப் போன சமகால மக்களாகிவிட்டோமே என்ற கவலை அரிக்கிறது. ஹிட்லர் கொன்ற கொலைகளை படித்துவிட்டு விட்டு விட்டோம். ராஜபக்ஷேவின் கொடூரங்களை பார்த்துவிட்டு விட்டு விட்டோம்.
அசோகர் மரம் நட்டார், ஹிட்லர் சர்வாதிகாரி, அக்பர் தீன் இலாஹி உருவாக்கினார் என்ற வரலாற்று வரிசையில் ராஜபக்ஷே இனப்படுகொலை செய்தார் என்பதும் இணைந்து விடும். ஒரே ஒரு வித்தியாசம், கடைசியாகச் சொன்ன விசயத்திற்கு சாட்சிகளாகிப் போனோம்.
தமிழுக்கு அமுதென்று பெயர்.. தமிழ்நாட்டுத் தமிழனுக்கு? அமிலம்?
ப்ச்.
..
தமிழுக்கு அமுதென்று பெயர்... தமிழனுக்கு?
Posted by
நர்சிம்
Friday, May 22, 2009
Labels: ஈழம்
45 comments:
//இந்தத் தீரத்தில் ஒரு சதவீதம் ஆரம்பத்தில் ஈழமக்கள் மீது காட்டி இருந்தால் உயிர்கள் காக்கப் பட்டிருக்கும். என்ன செய்ய? //
என்னங்க செய்றது சுயநலவாதிகளின் உலகத்திலே...
அருமை தலைவரே. மனக்குமுறல் மனக்குமுறலாகவே இருந்து விடும் போலிருக்கிறது
\\தமிழுக்கு அமுதென்று பெயர்.. தமிழ்நாட்டுத் தமிழனுக்கு? அமிலம்?
ப்ச்.\\
சலித்துக்கொள்ள மட்டும் தான் முடிகிறது. வேறென்ன செய்ய?
ப்ச்.
சக்கரம் செஞ்சு முடிச்சாச்சா?
OK. ;-)
உணர்ச்சிமிகுதியிலும் தெளிவான வார்த்தைகளால் ஒரு பதிவெழுத முடியுமென்பதற்கு இந்தப் பதிவே சாட்சி.
உணர்வுகளுக்கு நன்றி நர்சிம்!
என்ன பேரு வச்சினாலும் கூப்பிடலாம்.
"துடைப்ப கட்டை"க்கு கூட "பட்டுகுஞ்சம்"னு பேரு வைக்கிறவங்க தானே நாம.
நர்சிம்,
நடந்ததை குறித்து அழுது புலம்புவதிலோ, கையறு நிலையில் அமருவதிலோ பயனில்லை.
கடந்தகால தவறுகளை களைந்து இனி நடக்க வேண்டியதில் முழு ஆற்றலையும் செலவிடுவதே இப்போதைய தேவை.
நண்பர் சுந்தரவடிவேலுவின் வலைத்தளத்தை பாருங்கள். அதிலுள்ள கையெழுத்து இயக்கம் தொடர்பான பதிவை நண்பர் ஜ்யோராம் சுந்தர் தன் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் கையெழுத்து இடுமாறு உங்கள் நண்பர்களிடம் பரிந்துரை செய்யுங்கள்.
உடுக்க உடையின்றி, அணிந்த ஒற்றை ஆடையுடன் உயிர் பிழைத்து வந்திருக்கும் ஈழ மக்களுக்கான முகாமில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக எப்படி குரல் கொடுப்பது என குறைந்தபட்ச வரையறையை வகுக்க முயல்வோம்.
மடமடவென ஈழப் பகுதியில் சிங்கள குடியேற்றம் நடைபெற்று வருகிறது. இதை உடனடியாக தடுத்தாக வேண்டும்.
ஊடகங்களுக்கு எதிராகவும், ஊடகங்களின் பின்னால் இருக்கும் பன்னாட்டு மூலதனங்களுக்கு எதிராகவும் போராடுவதுடன், சிங்கள - இந்திய அரசு அபகரித்துள்ள ஈழத்தமிழர்களின் நிலத்தையும் மீட்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்குமே இருக்கிறது. அது குறித்த உரையாடலும், செயல்திட்டமுமே இப்போதைய தேவை என நினைக்கிறேன்.
ப்ளீஸ், முதலில் ஒப்பாரியை நிறுத்துவோமே? அதுவே தாய்நாட்டை பறிகொடுத்து நிற்கும் ஈழத்தமிழர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
தோழர் பைத்தியகாரன் சொன்னதை தான் நான் சுருக்கமாக சொல்லியிருக்கிறேன் என்று நம்புகிறேன்!
ஒரே ஒரு வித்தியாசம், கடைசியாகச் சொன்ன விசயத்திற்கு சாட்சிகளாகிப் போனோம்.
சாட்சி இல்லை, மவுன சாட்சியாய் இருந்து விட்டோம்.
இது ஒப்பாரி இல்லை..சாடல். அடுத்து என்ன என்பதன் தேவையை உணர்த்த இந்த சாடல் தேவை.கையெழுத்து இயக்கம் பற்றி மடல்கள் பறந்த வண்ணம் இருக்கின்றன.. செய்வோம்.. முடிந்ததை..
@ வால்பையன்.. ராணுவ சல்யூட் பாஸ் உங்களுக்கு
தமிழுக்கு அமுதென்று பெயர்.. தமிழ்நாட்டுத் தமிழனுக்கு? அமிலம்?
தமிழ்நாட்டு அரசியல்வாதிக்கு என்ன பெயர்?
மந்திரிப்பதவிகளை போராடிப்பெறுவதும்,வெளிநாட்டுப்பிரச்சினையிலே ஈடுபடுவதும் ஒரே அளவிலான விசயங்கள் என்று நீங்கள் கருதுவதில் மாறுபடுகிறேன்.கலைஞர் நினைத்தால் வெளியுறவு அமைச்சர் பதவியை எளிடில் வாங்கலாம் என்று தமிழவன், உயிரோசை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.ரயில்வே துறையைக் கேட்டுவாங்குவதற்கே கலைஞர் தலைகீழாய் நின்று போராடுவதை இப்போது பார்க்கத்தானே செய்கிறோம்.இலங்கையின் புனரமைப்பு பணிகளில் கலைஞரின் பங்கு கணிசமாக இருக்கும் என்று நம்புவோம்.
கையெழுத்திட்டும் ஒன்னும் ஆகப் போவதில்லை. நம்ம மனசுக்கு சின்ன ஆறுதல் அவ்வளவுதான்னு எனக்கு தோனுது..
இறுதி நாட்களில் முடிந்தவரை தன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்கிறார் கலைஞர்
கலைஞரால் என்ன செய்திருக்க முடியும்?-னு யாராவது தெளிவா ஒரு பதிவு போடமுடியுமா?
இந்தப் பின்னூட்டம் கலைஞருக்கு வக்காலத்து எல்லாம் இல்லை. அவரு மனிதச்சங்கிலி, பேரணி, உன்ணாவிரதம் நடத்தியதெல்லாம் வேஸ்ட்டுன்னு எனக்கும் தெரியும்!
/*சாலிசம்பர் said...
மந்திரிப்பதவிகளை போராடிப்பெறுவதும்,வெளிநாட்டுப்பிரச்சினையிலே ஈடுபடுவதும் ஒரே அளவிலான விசயங்கள் என்று நீங்கள் கருதுவதில் மாறுபடுகிறேன்.கலைஞர் நினைத்தால் வெளியுறவு அமைச்சர் பதவியை எளிடில் வாங்கலாம் என்று தமிழவன், உயிரோசை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.ரயில்வே துறையைக் கேட்டுவாங்குவதற்கே கலைஞர் தலைகீழாய் நின்று போராடுவதை இப்போது பார்க்கத்தானே செய்கிறோம்.இலங்கையின் புனரமைப்பு பணிகளில் கலைஞரின் பங்கு கணிசமாக இருக்கும் என்று நம்புவோம்.*/
எச்சூஸ் மீ...
நீங்க சொல்லுறதை பார்க்கும்போது... உதய கீதம் படத்திலே தேங்காய் விலைய கொறைவா கேட்டதுக்கு மிஸ்டர். கவுண்டர் கிட்டே சொன்னதை தான் நான் உங்களுக்கு சொல்ல வேண்டி இருக்கு...
" நீங்க இவ்ளோ நாளும் உள்ளே இருந்துட்டு வாரீங்களா? இல்லை புளூட்டோ கிரகத்திலே இருந்து வாரீங்களா?"
ஒரு கண்பூசனா இருக்கு
நைனா,கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.
நீங்க சொல்ல வந்ததை கொஞ்சம் தெளிவா சொல்லுங்க எனக்கு இங்கே ஒரே கண்பிசனா இருக்கு.
நானும் மற்றவர்களும் புரிந்து கொள்கிறோம். தேவை எனில் தொடர்ந்து பேசுவோம்.
அண்ணே...
சாலிசம்பர்...
அண்ணே,
உங்களை கூப்பிட்டு தான் அண்ணே மேலே உள்ள கமண்டு போட்டு இருக்கேன்.
\\ நர்சிம் said...
.. செய்வோம்.. முடிந்ததை..
\\
தல
நீங்கள் சொல்லியிருக்கும் அதே வார்த்தைகளை தான் இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் சொல்லிக்கிட்டு இருக்காங்கன்னு எனக்கு தோணுது.
தமிழுக்கு அமுதென்று பெயர்.. தமிழ்நாட்டுத் தமிழனுக்கு
அடிமை என்று பெயர்
நீங்க எல்லாரும் மத அடிப்படையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அட்டுழியம் பண்ணுறத ஆமோதிகிறீங்க?
ம்ம்ம்
//இந்திய வரைபடத்தின் அடியில் இருக்கும் தமிழ்மக்களின் கண்ணீர்த்துளிகள் மொத்தமாக உறைந்து தேங்கி நிற்பது போன்ற இலங்கை வரைபடம் இருப்பது இயற்கையின் சதியாகத்தான் இருக்க வேண்டும்.//
உண்மைதான் நர்சிம்.
தமிழன் இன்று தன் இனத்திற்கே விஷமாகிப் போனது பிரபாகரன் ஏற்றிய இன உணர்வினால் அல்ல, அரசியல் கட்சியும், அதிகார வர்க்கமும் ஏற்படுத்திய அச்ச உணர்வினால் சாதாரண மனிதன் கூட தன் இனம் அழிந்தால் எனக்கென்ன, தனக்கொன்றும் ஆகாதவரை ‘ஆகட்டும் பார்க்கலாம்‘ என்றே வாழப்பழகிக் கொண்டார்கள்.
ஒருவர் இறந்தால் மரணம், ஓராயிரம் பேர் இறந்தால் செய்தி.
தலைவலியும், வயிற்றுவலியும் தனக்கு வராதவரை ஒன்றுமில்லை என்ற மனோபாவம் மிகவும் ஆபத்தானது.
// லக்கிலுக் said...
கலைஞரால் என்ன செய்திருக்க முடியும்?-னு யாராவது தெளிவா ஒரு பதிவு போடமுடியுமா?
இந்தப் பின்னூட்டம் கலைஞருக்கு வக்காலத்து எல்லாம் இல்லை. அவரு மனிதச்சங்கிலி, பேரணி, உன்ணாவிரதம் நடத்தியதெல்லாம் வேஸ்ட்டுன்னு எனக்கும் தெரியும்!//
லக்கியின் வெளிப்படையான இந்த கருத்தை நான் வரவேற்கிறேன்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இயலாமையும், குற்றவுணர்ச்சியும் நமக்கு மட்டுமல்ல. கலைஞருக்கும் நிச்சயம் இருக்குமென்று நம்புகிறேன்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
எவ்வளவு உறுதியும் தீரமும் காட்டுகிறார் கலைஞர்? கிடைக்கவேண்டிய மந்திரி பதவிகள் கிடைக்கவில்லை என்றால் ஆதரவை வெளியில் இருந்து தரப்போவதாக உடனே சொல்கிறார், வீட்டில் இருக்கும் சிறுபிள்ளைகள் மிட்டாய் தரவில்லை என்றால் கோவித்துக் கொண்டு கொல்லைப் பக்கம் போய் அமர்ந்துவிடுவது போல பதவியேற்பு விழாவை புறக்கணித்து விமானமேறிவிட்டார்.எப்படி மனது செயல்படுகிறது "நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்" பாரதி நீ இல்லாது போனாயே - நன்றி நரசிம்
தமிழுக்கு அமுதென்று பேர் என்று நாம்தான் சொல்கிறோம். தமிழனக்கும் சொல்லிவிட்டு போக வேண்டியதுதான்,..
அடி வயிற்றில் எப்போதும் அரை அவுன்ஸ் வைத்து கொண்டிருக்கிறோமே..அதுதான்..
தகுதிக்கு மீறியே எல்லாம் அவருக்கு கிடைத்தது.அதனால் அவர் அப்படித்தான்..(இலங்கை பற்றி அவர்கள் வாயே திறப்பதில்லை).ஒரு கண்ணிர்.கவிதை ??
அன்பின் நர்சிம்
தவிக்கும் வாய்க்கு தண்ணீர் தர மறுப்போம் அனால் செத்த பிறகு பால் கொடுப்போம்
அது போல தான் இந்த 500 கோடி ரூபாய் நிதி
500 கோடியில் ஐநூறில் ஒரு பங்கான ஒரு கோடியை ஈழ தமிழர்களிடம் கொடுங்கள் அவர்கள் விரும்பும் நாட்டுக்கு செல்வார்கள்
சிங்களனிடம் கொடுத்தால் அவன் அதிலே உண்டு , குடித்து ,துடைத்து தன்னிலை மறக்கும் பொழுது சிங்கள நாய் பெண்களுக்காக தமிழ் குடியை தேடி வரும் நக்க
வேலி இருக்கும் பொழுதே ஆடு போல் மேய்ந்தார்கள்
இன்று வேலி இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை இன்னும் ஈழ தமிழர்கள் அங்கு இருந்தால் சோள காட்டுக்குள் நுழைந்த யானை போல துவம்சம் செய்வார்கள்
அதற்கு உதாரணம் பிரபாகரன் இறந்த செய்தி கேட்டு நடந்த வெற்றி களிப்பில்
தமிழ் பெண்களிடம் சில்மிஷம் செய்ய பட்டது ,கடை சூரையாடப்பட்டது எங்கே
தலைநகர் கொழும்புவில்
அடிமைகளாக அவர்கள் இருப்பதை விட அவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களாக
இருக்கலாம் மானத்தோடு
இதற்கு நாம் முயற்சி செய்வோம்
மன்னித்து விடுங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை
என்று சொல்லும் பொழுது அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் .
ஏற்க படாத மன்னிப்பு மரணத்தை விட கொடுமையானது .
தனி ஈழம் வேண்டாம் வரும் அகதிகளுக்கு ஒரு தனி கிராமம் அமைப்போம் .
இங்கே நிறைய இடம் உள்ளது நம் மனதில் தான் இடம் இல்லை .
தயவு செய்து எல்லா பதிவர்களும் அனானி ஆப்சனை எடுத்து விடுங்கள்
கேபிள் சங்கர் பதிவிலும் , அண்ணன் பைத்தியக்காரன் பதிவிலும் அனானி
எழுதிய பின்னுட்டங்கள் மிக கேவலமாக ஒரு போராளியை சித்தரித்தது .
கேவலமாக பின்னுட்டங்கள் எழுதிய
பெயர் இல்லாத அனானியும் , காட்டி கொடுத்த கருணாவும் ஒன்றே
Good Story...please read also this...
http://election.rediff.com/column/2009/may/22/loksabhapoll-a-ganesh-nadar-on-karunanidhi.htm
தேவையில்லாத நேரத்தில் எல்லோரும் தலைவனாகி அடுத்தவன் காலை வாருவார்கள். தேவையான நேரத்தில் எல்லோரும் தலைவனைத் தேடுவர்கள்!
தமிழர்கள் உங்களில் எத்தனைப் பேருக்குச் சுடத்(.) தெரியும்?
வணக்கம் நர்சிம்
ரோம்ப அருமையா இருக்கு உங்கள் பதிவு, நியாயமாகவும் தான்
ஆனா
நமக்குள்ளும் ஈரமும் வீரமும் இருக்கு, இருக்கனும், இலங்கையின் இரத்தகண்ணீருக்கு தமிழன் மட்டும் சலித்துக்கொள்ள கூடாது, முழு இந்தியாவையும் சலித்துக்கொள்ள வைக்கனும்
நாம் சாட்சிகளாகிப் போனாலும் நீதி கிடைக்க வைக்க வேண்டும்
இராஜராஜன்
இங்கிருந்து நாம் என்ன செய்ய முடியும்; என்ன செய்யவேண்டும் என்பது தெரியாமல்தான் பெரும்பான்மை தமிழகமே உள்ளது. அதை முதலில் தெரிந்தவர்கள் கூறுங்கள்.
//ஓர் இனப் படுகொலைக்கு சாட்சியாகிப் போன சமகால மக்களாகிவிட்டோமே என்ற கவலை அரிக்கிறது. ஹிட்லர் கொன்ற கொலைகளை படித்துவிட்டு விட்டு விட்டோம். ராஜபக்ஷேவின் கொடூரங்களை பார்த்துவிட்டு விட்டு விட்டோம்//
பேசிப் பயனில்லை நாம் பாவிகளாகிவிட்டோம்
நேரத்திக்கேற்ற பதிவுதான்
பேசிப்பேசி, எழுதி எழுதி மனக்குமுறலை ஆற்றிக்கொள்ளலாம்.ஆனால் செயல்பாடுகள் எங்கே எப்படி எவ்வாறு?.
இப்போ அரசியல்வாதிகள் பங்கு பிரிச்சுக்கற நேரம், நாம அவங்கள டிஸ்டர்ப் செய்ய முடியாது...
இப்ப என்ன செய்ய???????????
மில்லியன் டாலர் கேள்வி - ஏறக்குறைய எல்லாத் தமிழர்களின் மனநிலையும் இஃதே...
நச்
நர்சிம் முதற்கண் இந்த ஈழம் மற்றும் அரசியல் பதிவுகள் எதற்கும் எங்கும் பதில் அளித்தது இல்லை. ஆனால் இந்த பதிவின் தீரம் அதிகம்.
//இந்திய வரைபடத்தின் அடியில் இருக்கும் தமிழ்மக்களின் கண்ணீர்த்துளிகள் மொத்தமாக உறைந்து தேங்கி நிற்பது போன்ற இலங்கை வரைபடம் இருப்பது இயற்கையின் சதியாகத்தான் இருக்க வேண்டும்//
கவித்துவமான சிந்தனை என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.
//தமிழே நீ ஓர்
பூக்காடு நான் ஒரு தும்பி//
பாரதி தாசன் பாரதி தாசன்ப்பா. எடுத்து போட்டமைக்கு நன்றி.
//பூக்காடு சாக்காடு சுடுகாடு//
வார்த்தைகள் விளையாடி இருக்கின்றது நர்சிம். மெச்சாமல் இருக்க முடியவில்லை
தமிழ் மேல் இருக்கும் பற்று தமிழன் மேல் இல்லை என்பது உண்மை உண்மை முற்றுலும் உண்மை. எங்கே அடித்தாலும் அடி வாங்கி பழகிட்டோம் என்ன செய்ய?
ஆயினும் பிரகாரன் செய்த சில தவறுகளால் எதிர்வாதம் கூட சில இடங்களில் செய்ய இயலாமல் இருக்கின்றோம்.
சரி என்ன இருந்தாலும் இலங்கையில் தவிக்கும் தமிழ் இனத்துக்கு எந்த ரூபத்திலாவது நன்மை நடந்தே தீர வேண்டும்.
கருணாநிதி, ஜெயலலிதா யாருமே கைபர் கனவாய் வழி வந்த கயவர்கள் அல்ல. மரதமிழர்கள் தானே.(பிறப்பால் வருவதில்லை தமிழன் என்ற பட்டம் தமிழுக்கும் தமிழனுக்கும் சேவை செய்வதால் வரும் அந்த பட்டம்) ஏதானும் செய்வார்கள். அப்படி செய்யவில்லை என்ற அவர்கள் தமிழர்கள் அல்லவென்று நான் அறிவிப்போம் பதிவுலகில். பார்ப்போம். போர் தான் முடிந்து விட்டதே இனி பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.
பதிவில் அனல்..
பெஸ்ட் ஆஃப் நர்சிம் இந்த பதிவு !!!!
தமிழனுக்கு... பல பேர்கள் உண்டு... வாழை மட்டை, சோற்றாலடித்த பிண்டம்.... இன்னும் என்னென்னவோ..
ஈழப் ப்ரச்னையைக் கூட அயல்நாட்டு இறையாண்மை அது இதுன்னு சொல்றதை 1% ஒத்துக்கிட்டாக் கூட... உள்ளூர் ப்ரச்னையையாவது முன்னிறுத்தி மந்திரி பேரம் பேசலாமே... ஹொகெனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், காவிரி நீர் பங்கீடு, முல்லைப் பெரியாறு... ப்ரச்னைகளுக்கா பஞ்சம்?
60% வாக்குப்பதிவை வெச்சுக்கிட்டு நமக்குக் கேக்க வாயிருக்கான்னு தெரியல :(
அழுத்தமான பதிவு, நரசிம்.
//
"தமிழுக்கு அமுதென்று பெயர்... தமிழனுக்கு?"
//
உணர்ச்சியற்ற ஜடமென்று பேர்!
http://joeanand.blogspot.com/2009/05/blog-post_20.html
மனக்குமுறலை பதிவின்மூலம்தான் வெளிப்படுத்தமுடியும் நர்சிம்
தனக்கு தனக்கு என்றால் மனசு படக்கு படக்கு என்று அடிக்குமாம்
இதுதான் இப்போதைக்கு நியாபகம் வருது
இதற்கு முழு பொறுப்பு கழக ஆட்சிகளின் 30 ஆண்டுகள் ஆட்சியே. உணர்வுகளை மழுங்கடித்து தனி நபர் துதிபாட்டை வளர்த்தது.
முழுப்பெருமையும் கருணாநிதிக்கே..
தனிநபர்கள் ஒவ்வொருவரும் குடும்ப்பம் சார்ந்தவர்களாக இருப்பதால் வேறு என்றும் செய்ய முடியாதவர்களாய் இருப்பது கையறு நிலை. அதனால் தான் தலைவர்களை தேர்ந்தெடுக்கிறோம். ஆனால தலைவர்க்ளே குடும்பம் மட்டுமே இலக்காய் இருக்க எவன் செத்தால் எனக்கென்ன...?? மகனுக்கு மகளுக்கும் மந்திரி பத்வி கிடைத்தால் போதும் என்றும் மன நிலையில் உள்ளது போது தனி நபர் வெறும் புலம்ப மட்டுமே முடியும்.
சாடல் என்றும் மன வேதனையென்றும் சொல்லி தீர்த்து கொள்ள மட்டும்.....
அதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களே ... வாழ்த்துகள் நர்சிம்.
இந்த ஈழப்படுகொலை நடந்த போதும் 6 கோடி தமிழர்களை ஆண்டு கொண்டிருந்தவர் தான் தமிழினத்தலைவர்..
வெட்கம்... வரலாறு மன்னிக்காது..
இன்னும் இந்த மக்கள் இந்த அரசியல் வியாதி பிடித்தவர்களை நம்பி கொண்டு இருக்கிறதே.....
பாவமாய் இருக்கிறது....
ஆஸ்திரேலியா பழம்குடி மக்களை போல், மாயன் சமூகத்து மக்களை போல் இலங்கை வாழ ஈழ தமிழர்களும் ஒரு சரித்திரமாய் போவார்கள்......
அப்பொழுதும் இந்த மாதிரி தான் அரசியல் நிலை இருக்கும்......
1957 முதல் யாரும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கண்டதில்லை
:(((
கலைஞர் கடைசியாக இருந்த உண்ணாவிரத்தை முன்பே செய்திருக்கலாம் லக்கி. அதன் மூலமாவது பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.
ஈழதமிழர்களுக்கு எதிராக போகும்போக்கை நிறுத்தும் வரை காங்கிரஸோடு கூட்டணி இல்லை என்றும் தனித்தும் நிற்கிறோம் என்றும் சொல்லி இருக்கலாம்!
நர்சிம்,
ஜூனியர் விகடன் கருத்துரைப் பற்றிய பக்கம் உங்கள் தளத்தில் இல்லையே? எங்கே சென்றது?
Post a Comment