வக்கிரம்

05/மார்ச்/2009. மாலை 5 மணி,15 நிமிடம்:
டெலிபோன் மணி அடித்தவுடன்,அவசரமாகவும்,பதட்டமாகவும் ரிஸீவரை எடுத்தான் ப்ரேம்ப்ரகாஷ்.

சற்று முன், மாலை 3 மணி 20 நிமிடம்:

ப்ரேம்ப்ரகாஷ் அழுது வீங்கிய கண்களுடனும்,களைத்துப் போன கால்களுடனும்,என்னவானதோ,ஏதானதோ என்று எண்ணி எண்ணி துவண்டுபோன மனதுடனும் அந்த மலைப் பாதையின் மைல்கல்லில் அமர்ந்திருந்தான்.

கொடைக்கானலின் லேக்வியூ ஏரியா முடியும் இடம் அது. யூகலிப்டஸ் மரங்களில் இருந்து வந்த வாசனையும்,இதமான குளிரும்,இருக்கமாய் கைகளைக் கோர்த்தப் படி நடந்து கொண்டிருக்கும் தேனிலவுத் தம்பதிகளும் என ரம்மியாமாய் இருந்த சூழல் எதையும் ரசிக்க முடியாதவனாய்,கிட்டத்தட்ட பாதி உயிர் போனவனாய் அமர்திருந்தான் ப்ரேம்ப்ரகாஷ்.

அவனுக்கு அருகில் நின்றிருந்த அழகிரிராஜாவும் முனியனும் மப்ளரையும் ஸ்வெட்டரையும் மீறி உள்செல்லும் குளிரை அடக்க கிங்ஸை உள்ளிழுத்து வெளியூதிக்கொண்டிருந்தார்கள்.அவர்களும் களைத்து, கசங்கிப் போயிருந்தார்கள்.

“கொஞ்சம் தைரியமா இருங்க ஸார்.. வாங்க”


என்ற அழகிரி ராஜாவை மேலும் கீழும் பார்த்த ப்ரேம்ப்ரகாஷ் கதறத் துவங்கினான்.. “அய்யோ..இனி நான் என்ன பண்ணப் போறேன்..அய்யோ..எவ்வளவு ஆசையாசையா வந்தோம்.. அய்யோ..”

ஒரு நாள் முன்பு:04/மார்ச்/2009:நேரம் காலை 5:45

நவீன வோல்வோ சொகுசுப் பேருந்தில் இருந்து இறங்கிய கூட்டத்தில் பளிச்சென தெரிந்தான் ப்ரேம்ப்ரகாஷ்.அவன் தோளைத் தொங்கியபடி புதுமனைவி லதா. புதுமனைவி என்றால்..புதுசு கண்ணா புதுசு.. திருமணமாகி நான்கே நாட்கள் தான் ஆகின்றன.

அதிகாலை என்றாலே குளிரும்.அதுவும் கொடைக்கானலின் அதிகாலை?குளிருக்கு இதமாக மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கும் ப்ரேம்ப்ரகாஷ் ஒரு இளம் தொழிலதிபர். கார்மெண்ட்ஸ் பிஸினஸ். மெருன் நிற டி சர்ட்டும் லீ ஜீனும் போட்டு,பம்பாய் பட அரவிந்த் சாமி போல இருப்பவன். தொழில் தவிர அவன் பொழுது போக்கு..வாசிப்பு. நிறைய படிப்பான்.இலக்கியமும்..அது அல்லாததும்.

லதா.அவனுக்காகவே செய்யப்பட்ட தங்கச் சிலைப் போல இருந்தாள். இந்தப் பெண்கள் எந்தப் பருவத்தில் மிகுந்த அழகு? பதின்ம பருவத்தின் வாசலில் பட்டாம்பூச்சிகள் போலப் பறப்பார்களே, அப்பொழுதா?, திருமண செய்தி கேட்டு, கனுக்கால் முதல் காதுமடல்கள் வரை வெட்க நரம்புகள் சிவ்வ்விட வளையவருவார்களே, அப்பொழுதா?, திருமணமான புதிதில் தேனில் அமிழ்ந்த நிலவு போல,தேன்நிலவு தேவதைத் தருணங்களிலா?,அல்லது, நிறைமாதக் கர்பிணியாக,காதுகள் பெருத்து,கண்களில் வெட்கமும் பெருமையும் பொங்க நிதான நடை நடக்கும் பொழுதுகளிலா?

என்ற கேள்விக்கு விடை சொல்லும் விதமாக,அத்தனை அழகாகத் தெரிந்தாள் லதா.

குளிர் தன் வேலையை காதுநுனிகளிலும் கைவிரல்களிலும் காட்டத்துவங்கி இருந்தது.

‘கொடை வில்லா’ என்ற அந்த தங்கும் விடுதி, மழை பெய்து முடிந்ததும் தென்படும் நெடுஞ்சாலைத் தார்ரோடு போல பளிச்சென இருந்தது.
அந்தக் காலை வேளையிலும்,ரிசப்ஷன் சிட்டு, குருவி போல ‘பரபற’த்தாள்.

“மிஸ்டர் ப்ரேம்ப்ரகாஷ் ஃப்ரெம் சென்னை.. ?”

“யூ ஆர் ரைட்” என்றவன் அவள் நீட்டிய இடத்தில் ஒப்பமிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு சிப்பந்தி அவர்களது உடமைகளை எடுத்துக் கொண்டு, “kv130" என்ற சாவியுடன் வழிகாட்டத் துவங்கினான்.

“சார்..ரிமோட் இங்க இருக்கு, வெந்நீருக்கு கெய்ஸர்..” என்று ஏதோ சொல்ல வந்தவனிடத்தில் நூறுரூபாய் நோட்டை கொடுத்து, நெட்டித் தள்ளி, கதவையடைத்தான்.

கதவைத் திறக்கும் பொழுது மணி பிற்பகல் 1:45.

ரெஸ்ட்டாரண்ட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இருவரின் கண்களும் தூக்கத்திற்காக கெஞ்சின. இதுவரை இருவரும் உறக்கத்தின் மீது இரக்கமே காட்டவில்லை.அவர்களைப் பொறுத்தவரை அன்று ‘தேன்சூரியன்’.

சாப்பிட்டு முடித்ததும் லேக்வியூ ஏரியாவில் நடந்தார்கள்..

“லத்து, ஹவ் டு யூ ஃபீல் ?”

“என்ன சொல்றதுன்னே தெரியல ப்ரேம்..I'm very Lucky..ஃபீலிங் வெரி ஹாப்பி”

“ம்ம்.. ஆமா, ஹாபில்லாம் என்ன உனக்கு?”

“மியூசிக்.. நெட்.. அப்பப்ப ஏதாவது படிப்பேன்.. பாலகுமாரன், ராஜேஷ்குமார்,ரமணிச் சந்திரன்..”


“கல்கி..?”


“ம்..எப்பவாவது..வாட் அபெளட் யூ ப்ரேம்?”

“நீ சொன்ன புக்ஸ்ஸெல்லாம் ஆரம்பத்துல படிச்சுட்டு இருந்தேன்.இப்பெல்லாம் ஜெயகாந்தன், எஸ்ரா,தி.ஜ,சுஜாதா,பசுவய்யா இப்படி ஆகிப்போச்சு..ஆனாலும் நீ சொன்ன புக்ஸ்லாம் ரொம்பப் பிடிக்கும்”

“ஹே.. என்ன கேலி பண்றீங்க”..என்றவள் ஒரு இளைஞன் இவள் நடந்துவரும் அழகை வெறித்துப் பார்ப்பதை கவனித்தாள்.. “லுக் அட் ஹிம்.. என்ன எப்படிப் பார்க்குறான் பாரு..வக்கிரம் பிடிச்சவன்..ராஸ்கல்”

“எது வக்கிரம்? இவ்வளவு அழகா இருக்குற ஒரு பொண்ண பார்க்காம இருக்குறது தான் வக்கிரம்.

“வாட் டு யூ மீன் ப்ரேம்?”

“ஐ மீன்.. ம்.. இயல்பா இருக்குற ஒன்னுல இருந்து வலுக்கட்டாயமா மாறுபடுறமாதிரி நடந்துக்குற எல்லாமே வக்கிரம்னு சொல்றேன்”

“புரியல ப்ரேம்..குழப்பாதீங்க ப்ளீஸ்..”

“அப்பா செத்தும் அழாம இருக்குறது வக்கிரம்,சிம்ப்பிளா..இப்ப ஒருத்தன் ஃபுல்லா தண்ணி அடுச்சுட்டு, போதை ஏறினாலும், நான் ஸ்டடியாத்தான் இருக்கேன்னு காட்டிக்கிறதுக்காக அந்தச் சூழலை என் ஜாய் பண்ணாம ஜாக்கிரதையா இருக்குறதும் வக்கிரம்தான்.நல்ல ஜோக்க கேட்டு வேணும்னே சிரிக்காம இருக்குறது...இப்பிடி சொல்லிட்டேப் போகலாம்”

“சொல்லிட்டே போங்க..சென்னை வந்துரும்.. வாய்யா என் அறிவாளிப் புருஷா..அறைஎண் 130ல் கடவுள் காத்திருக்கிறார்...”

“கமான்..காமன் வெயிட்டிங்னு சொல்ற?.. கமான்..கமான்”

04/மார்ச்/2009: மாலை 5 மணி.
“ப்ரேம்..ப்ரேம்” அசந்து தூங்கிக் கொண்டிருந்தவனை அசைத்துப் பார்த்தாள்.. பாதிக் கண்களை மூடியபடி கேட்டான்.. “மணி என்ன லத்து?”

“இட்ஸ் ஃபைவ்..”

“ஹும்..இன்னும் 10 நிமிஷம் தூங்கறேனே..” என்று சொன்னவன் செய்துவிட்டான். இனி எழுப்பிப் பயனில்லை என்று நினைத்த லதா.. அறையைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்..குளிர் காற்றும் கூடவே.

04/மார்ச்/2009,மாலை 5:15.

“லதா..லத்து.. லதா..” படுக்கையை விட்டு எழுந்தவன் கூப்பிட்டுப் பார்த்தான். கத்திப் பார்த்தான்.வெளியில் வந்து பார்த்தான். அவள் மொபைலும் டேபிளில் தான் இருக்கிறது. சற்று நேரம் தேடியவன்.. நிலமையின் தீவிரத்தை உணர்ந்தான்.. லதாவைக் காணவில்லை.

04/மார்ச்/2009,மாலை 7:10.

சோர்ந்து,சிவந்து போன கண்களுடன், தேடித் தேடி தொலைந்து போயிருந்தான் ப்ரேம்ப்ரகாஷ். ஏதேதோ எண்ணங்கள்.. தேன்நிலவுக்கு வந்த மனைவி,காதலனுடன் இணைந்து கணவனைக் கொன்றாளே ஒருத்தி..அது நினைவிற்கு வந்தது.. லதா காதலித்திருப்பாளா? அய்யோ.. அவ்வளவு அன்பைக் கொட்டினாலே.. ‘ச்சே இருக்காது’ என்று மனம் நினைத்தாலும் அடுத்த நொடி அவள் அந்த முகம் தெரியாக் காதலனுடன் இவனோடு இருந்த அத்தனை செய்கைகளும் செய்துகொண்டிருக்கும் காட்சிகள் சட் சட் என வந்து போயின.. அய்யோ கடவுளே என்று வாய் விட்டு கத்தினான்..கதறினான்.

04/மார்ச்/2009,இரவு 9 மணி

“ஸார் என் பேரு அழகிரி ராஜா.. இந்த ஊருல நாந்தான் சார் எல்லாம்.. நம்மள மீறி ஒன்னும் நடக்காது..ஹோட்டல் மேனேஜர் சொன்னாரு.. வாங்க.. நான் இருக்கேன்..ஆள் கெடச்சதும் நம்மளுக்கு நல்ல அமெளண்ட்ட கரெக்ட் பண்ணிருங்க..” பேசிக் கொண்டே போன அவன் ஆரம்ப ஐம்பதுகளில் இருந்தான்.. தொப்பை அதை உறுதி செய்தது.

“இதான் ஸார் குணா குகை.. போன வருஷம் இங்க தான் ஒரு பொண்ண ஏழு பேரு சேர்ந்து கதறக் கதற கற்பழிச்சு கொன்னு போட்டுப் போயிட்டாங்க..”

வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே, ப்ரேம் ஆயிரம் அடிப் பள்ளத்தாக்கில் செங்குத்தாய் விழுபவன் போல உணர்ந்தான். அழகிரி ராஜாவின் குரல் மெல்லிதாய்த் தான் கேட்டது.

“ஆ..மெதுவா ப்ரேம்..ஏதேதோ எழுத்தாளர் எல்லாம் படிச்சேன்னு சொன்னீங்க.. வள்ளுவர் சொன்ன ‘மலரினும் மெல்லிது’ படிச்சது இல்லையா..”

காலையில் லதா சொன்னது நினைவிற்கு வந்தது. அய்யோ அவளையா அத்தனை பேர் சேர்ந்து.. என்ன செய்வேன்.. என்ன பாடுபடுகிறாளோ..அய்யோ..”
அங்கேயே மண்டியிட்டுக் கத்தினான்.அதன் எதிரொலி தவிர ஒன்றுமில்லை.

நடு இரவு 1 மணி: காவல் நிலையம்.கொடைக்கானல்

மிஸ்டர் ப்ரேம்ப்ரகாஷ்..அந்தப் பேருதான சொன்னீங்க?.. இதே ரோதனையாப் போச்சு சார் இங்க.. பெத்தவங்கள எதிர்க்க தெம்பில்லாம கழுத்த நீட்டித் தொலைக்கிறது.. அப்புறம் இங்க வந்து சூசைடுபாயிண்ட்ல குதிச்சு எங்க தாலிய அறுக்குறது.. ஏட்டு..முனியன் வந்துட்டானாய்யா?”

வந்து நின்றான் முனியன்.

“எவ்வளவு அடிவாரத்துல,எந்த பொந்துக்குள்ள பாடி ஒதுங்குனாலும் தேடிக் கண்டுபிடிச்சுடுவான்.. போங்க.. டேய்..பாடிய எடுத்துக் கொடுத்துரு.. ஸார் செலவாகும். ஏட்டு சொல்ற பணத்த கொடுத்துருங்க.. ஏட்டு..கூடப் போய்யா..”

ஏட்டின் பூட்ஸ் ஒலியும் முனியனின் ரப்பர் செருப்பொலியும் கேட்டது. ப்ரேமின் காலடி ஓசை கேட்கும்படி நடக்குமளவிற்கு அவனுக்குத் த்ராணி இல்லை.அழகிரி ராஜா ப்ரேமைப் பிடித்துக் கொண்டு நடந்தான்.


05/மார்ச்/2009:காலை 10 மணி. சூசைட் பாயிண்ட்..

“ஸார்..என் சர்வீச வச்சு சொல்றேன்.. உங்க பொண்டாட்டி சாகல.. எந்த முடுக்குல பாடி ஒதுங்கி இருந்தாலும் இந்த முனியன்கிட்ட இருந்து தப்ப முடியாது. இங்க இல்லை.. ராத்திரி பூரா தேடிட்டோம்ல..ஊருக்கு என்னமும் போயிருப்பாங்க”

“அந்த நொடியில் முனியன் 100 அடிக்கு விஸ்வரூபம் எடுத்து தெய்வமாகத் தெரிந்தான். ஆனால் ஒரு நொடிதான்..அடுத்து அவன் சொன்ன வார்த்தைகள்..

“என்னா..ஓநாய் எதுவும் இழுத்துப் போயிருந்தாலும் சிக்கல் தான்..”

“அய்யோ..தங்கச் சிலையை இப்படி தொலைத்தேனே.. எவன் கூடப் போனாளோ? அல்லது எத்தனை பேர் சேர்ந்து எத்தனை முறை அவளை சீரழித்தார்களோ? அய்யோ..” என்று புலம்பிக் கொண்டே தேடத் துவங்கினான் அவர்களோடு.


05/மார்ச்/2009:மாலை 3 மணி 24 நிமிடம்.

அழுது வீங்கிய கண்களுடன் அந்த மைல்கல்லில் அமர்திருந்த ப்ரேம்ப்ரகாசை, சிகரெட்டைத் தூக்கிப் போட்டு விட்டு முனியனும் அழகிரி ராஜாவும் ஹோட்டலுக்கு கைத் தாங்கலாக அழைத்துப் போனார்கள்.

05/மார்ச்/2009:மாலை 5 மணி 15 நிமிடம் 4 நொடி:
பதட்டமாக ரிஸீவரை எடுத்த ப்ரேம்ப்ரகாஷ் “ஹலோ..ஹலோ”


“ஸார் ரிசப்ஷன்ல இருந்து பேசறேன்.. உங்கள இன்ஸ்பெக்டர் உடனே ஸ்டேஷனுக்கு வரச்சொன்னார்.”

***

'(உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

..

65 comments:

அனுஜன்யா June 1, 2009 10:56 AM  

All the best. Me the ..?

நர்சிம் June 1, 2009 11:02 AM  

அனுஜன்யா..yes sir.படிச்சிட்டு வாங்க..

முரளிகண்ணன் June 1, 2009 11:04 AM  

ஒரு ஸ்லாட் முடிஞ்சிடுச்சு.

\\என்ற கேள்விக்கு விடை சொல்லும் விதமாக\\

\\தேன்சூரியன்\\

\\கமான்..காமன் வெயிட்டிங்னு \\


\\மலரினும் மெல்லிது’ \\

எல்லாமே நர்சிம் டச்.

சொல்லாமல் சொல்லுவது என்பது
இதுதானா?

இராம்/Raam June 1, 2009 11:19 AM  

சேட்'ண்ணே,

கதை சூப்பரு.....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. :)

மாதவராஜ் June 1, 2009 11:20 AM  

நர்சிம்!
நல்ல flow....

வா(வ)ரம் June 1, 2009 11:28 AM  

யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.

யாருடைய பின்னூட்டமும் தேவையில்லை.

படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

“வாரம்” இணைய இதழ் (லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!

வித்யா June 1, 2009 11:45 AM  

அருமையான ப்ளோ. ப்ரேமின் பதற்றம் படிப்பவரையும் தொற்றிக்கொள்கிறது.
வெற்றிபெற வாழ்த்துகள்.

கார்த்திகைப் பாண்டியன் June 1, 2009 11:49 AM  

அருமை நண்பா.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.. முடிவை வாசகனின் கையில் கொடுத்த பைனல் டச் தூள்..

சென்ஷி June 1, 2009 11:50 AM  

தலைப்புக்கேற்ற கதை. நிகழ்வு நடந்தது தெரியாமல் அப்படி நடந்திருக்குமோ என்று யோசித்தல் கூட வக்கிரபுத்திதான்.

வாழ்த்துக்கள் நர்சிம். பரிசுக்கேற்ற கதை :)

சென்ஷி June 1, 2009 11:58 AM  

//சென்ஷி said...

தலைப்புக்கேற்ற கதை. நிகழ்வு நடந்தது தெரியாமல் அப்படி நடந்திருக்குமோ என்று யோசித்தல் கூட வக்கிரபுத்திதான்.//

அதனாலேயே நான் இதன் முடிவை யோசித்தலை என்னிலிருந்து தடை செய்து கொள்கிறேன் அல்லது சுப முடிவுக்காக உங்களின் அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் :)

aravind June 1, 2009 12:42 PM  

பத்துல ஒரு வட போச்சா ?

இது செல்லாது செல்லாது

நீங்கள் இந்த போட்டிக்கு நடுவர் என்று நான் கேள்விப்பட்டேன்

கதை சூப்பர் தல முதல் வட உங்களுக்குத்தான்

தயவு செய்து முடிவு சொல்லுங்க

வக்கிர புத்தி ஏடாகூடமா வேலை செய்யுது

மின்னல் June 1, 2009 12:47 PM  

//எது வக்கிரம்? இவ்வளவு அழகா இருக்குற ஒரு பொண்ண பார்க்காம இருக்குறது தான் வக்கிரம்//

ம்ம்ம் இதுக்கு இப்ப‌டி வேற‌ விள‌க்க‌மா?

ரொம்ப‌ நல்லா இருக்கு ந‌ர்சிம் க‌தையின் முடிவை சொல்லீட்டீங்க‌ன்னா நாங்க‌ ப‌த‌றாம‌ இருப்போம்

லக்கிலுக் June 1, 2009 1:03 PM  

சூப்பர் கதை நரசிம் :-)

வெற்றிபெற வாழ்த்துகள்!

Naresh Kumar June 1, 2009 1:06 PM  

நர்சிம்,

மிக அருமை....

வாழ்த்துக்கள்

//“சொல்லிட்டே போங்க..சென்னை வந்துரும்.. வாய்யா என் அறிவாளிப் புருஷா..அறைஎண் 130ல் கடவுள் காத்திருக்கிறார்...”//

கடவுளை அடையும் வழியில் என் பேர் எழுதியிருக்கு...........

Vijay June 1, 2009 1:16 PM  

கதை நல்லா இருக்குங்க நர்சிம்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கேள்விகள்,
லதாவுக்கு என்ன ஆச்சு? கொலை/தற்கொலை/"விடு ஜூட்?"
கல்யாணம் பத்தின பேக்க்ரவுன்ட் என்ன?

--
Regards
விஜயஷங்கர்
பெங்களூரு

"அகநாழிகை" June 1, 2009 1:17 PM  

நர்சிம்,
வழக்கம் போலவே சரளமான, வேகமான விவரணை நடை.
விறுவிறுப்பாக செல்கிறது கதை.

வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

நாடோடி இலக்கியன் June 1, 2009 1:28 PM  

செம்ம விறுவிறுப்பு....
வெற்றி பெற வாழ்த்துகள் நர்சிம்.
(முடிவையும் நீங்களே சொல்லியிருக்கலாம்,வக்கிரபுத்தி ஏதேதோ யோசிக்குது).

பட்டாம்பூச்சி June 1, 2009 1:50 PM  

//“மியூசிக்.. நெட்.. அப்பப்ப ஏதாவது படிப்பேன்.. பாலகுமாரன், ராஜேஷ்குமார்,ரமணிச் சந்திரன்..”//

இல்லையே ...லிஸ்டு முழுசா இல்லையே...அங்க நர்சிம் என்றும் வந்திருக்க வேண்டுமே...
புலவரே...உங்கள் கதையில் சொற்பிழை இருக்கிறது :))))

வெண்பூ June 1, 2009 1:56 PM  

அருமையான கதை, முடிவே சொல்லாத முடிவு கொஞ்சம் வக்கிரமாத்தான் யோசிக்க வெக்குது நர்சிம்.. கலக்கல்.. ஒரு துண்டு போட்டுட்டீங்க, ய‌ப்பா, இனிமே போட்டி மீதி இருக்குற‌ 19 இட‌த்துக்குதான்.. பாத்துகோங்க‌..

தராசு June 1, 2009 2:15 PM  

நல்லா சொல்லிகிட்டே வர்றீங்க, ஆனா முடிவு??????????

அபுஅஃப்ஸர் June 1, 2009 2:39 PM  

எழுத்தோட்டம் சூப்பர்

படிக்க படிக்க விறுவிறுப்பு குறையவில்லை

Bleachingpowder June 1, 2009 2:44 PM  

கதை சூப்பர்...முடிவை எங்களிடம் விட்டதற்கு பதில் நீங்களே முடிச்சிருக்கலாம்.
//‘கொடை வில்லா’ என்ற அந்த தங்கும் விடுதி//

வேற பேரே கிடைக்கலையா...ஸ்பீடா படிக்கும் போது, தப்பா படிச்சு தொலச்சுட்டேன்

SUREஷ் (பழனியிலிருந்து) June 1, 2009 2:55 PM  

ஓ. கே..,

ஓ. கே..,

அமிர்தவர்ஷினி அம்மா June 1, 2009 3:11 PM  

வக்கிரம் நு தலைப்ப பார்த்தவுடனே ஏதோ வில்லங்கமிருக்குது நினைச்சேன், நினைச்சா மாதிரி முடிவுல....... ம்

அசத்திட்டீங்க

வெற்றி பெற வாழ்த்துக்கள்

Cable Sankar June 1, 2009 3:57 PM  

அருமை.. நர்சிம்.. முடிவு சொல்லாம நிறுத்தினீங்க பாருங்க்.. அங்கதான் உங்க வக்கிரம் ....? ஜெயிக்குது..

Cable Sankar June 1, 2009 3:57 PM  

அருமை.. நர்சிம்.. முடிவு சொல்லாம நிறுத்தினீங்க பாருங்க்.. அங்கதான் உங்க வக்கிரம் ....? ஜெயிக்குது..

Rajkumar June 1, 2009 5:04 PM  
This comment has been removed by the author.
Rajkumar June 1, 2009 5:10 PM  

அவனுக்கு அருகில் நின்றிருந்த அழகிரிராஜாவும் முனியனும் மப்ளரையும் ஸ்வெட்டரையும் மீறி உள்செல்லும் குளிரை அடக்க கிங்ஸை உள்ளிழுத்து வெளியூதிக்கொண்டிருந்தார்கள்.அவர்களும் கலைத்துப் போயிருந்தார்கள்.

//கலைத்துப் //

களைத்துப் போய் விட்டீர்களா என்ன?
ஆட்டத்தையே கலைக்க பார்த்தீர்களே?

நல்ல வேளை. போட்டி ஆரம்பித்தார்கள். உங்கள் இடுகைகள் இல்லாமல் காய்ந்து போய் கிடந்தேன்.

அதிஷா June 1, 2009 6:07 PM  

சரியான வக்கிரம் புடிச்ச எழுத்தாளனய்யா நீரு..

மற்றபடி இப்போதைக்கு போட்டிக்கு வந்த கதைகளில் இது ரெண்டாவது பெஸ்ட்..

வாழவந்தான் June 1, 2009 6:10 PM  

நல்லாயிருக்கு
போட்டிக்கு வாழ்த்துக்கள்.
என்ன நடந்துதுனு தெரியாம கண்டதயும் யோசிச்சாலும் வக்கிரம்தானே

ராஜா | KVR June 1, 2009 6:12 PM  

//‘பரபற’த்தாள்//

நர்சிம் டச் :-) [மற்ற டச்செல்லாம் முரளிகண்ணன் முந்திக்கொண்டார்]

வெற்றி பெற வாழ்த்துகளெல்லாம் சொல்ல மாட்டேன். முடிவுகள் அறிவித்த பிறகு வெற்றி பெற்றதற்கு பாராட்டுகளைச் சொல்ல வர்றேன்.

BooksForLife June 1, 2009 6:13 PM  

Sorry to sound a discordant note here, but I sensed a condescending note in the following dialogue.

"நான் உன்னோட அளவுக்கொல்லாம் படிக்கறதில்லைம்மா.. ஏதோ ஜெயகாந்தன், எஸ்ரா,தி.ஜ,சுஜாதா,பசுவய்யா இப்படி ரொம்ப சாதாரணமா.."

Maybe it's just the manner in which the character speaks, but I got the feeling that it's looking down on people who read other sort of books (elitism here?). In any case most of us would have graduated from the books that is mentioned by the wife to the ones mentioned by the husband. In a way it would have been even better if the husband had criticized his wife directly on her reading habits. At least it would have been direct.

I am be totally wrong and going of on a tangent on a issue which is actually not present. Anyway this thought struck me immediately when I read your post and that's why this long comment!!! Don't want to offend you in any way, especially seeing that I seem to the only one who seems to have a negative take on your post.

T.V.Radhakrishnan June 1, 2009 6:37 PM  

வாழ்த்துக்கள் நர்சிம். பரிசுக்கேற்ற கதை

aravind June 1, 2009 7:19 PM  

// அதிஷா said...
சரியான வக்கிரம் புடிச்ச எழுத்தாளனய்யா நீரு..

மற்றபடி இப்போதைக்கு போட்டிக்கு வந்த கதைகளில் இது ரெண்டாவது பெஸ்ட்..

தல அப்ப நீங்க தான் நடுவரா ?

நிலாரசிகன் June 1, 2009 7:50 PM  

நர்சிம்..

கதைநாயகனின் பதற்றம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.
என்ன இருந்தாலும் "செம்பட்ட" போட்டிக்கு வந்திருக்கலாம் :)

அ.மு.செய்யது June 1, 2009 8:48 PM  

ஹாலிவுட் ரேஞ்சுக்கு கதை நகருது..

ஆயிரம் பொற்காசுகள் பார்சல்........

( ஆல் தி பெஸ்ட் அண்ணே )

தஞ்சாவூரான் June 2, 2009 12:35 AM  

Nice flow, Narsim. All the best!!

வெட்டிப்பயல் June 2, 2009 4:44 AM  

// முரளிகண்ணன் said...
ஒரு ஸ்லாட் முடிஞ்சிடுச்சு.

\\என்ற கேள்விக்கு விடை சொல்லும் விதமாக\\

\\தேன்சூரியன்\\

\\கமான்..காமன் வெயிட்டிங்னு \\


\\மலரினும் மெல்லிது’ \\

எல்லாமே நர்சிம் டச்.

சொல்லாமல் சொல்லுவது என்பது
இதுதானா?//

ரிப்பீட்டே!!!

KaveriGanesh June 2, 2009 8:25 AM  

முடிவு என்னப்பா?

புருனோ Bruno June 2, 2009 9:03 AM  

//தேன்சூரியன்//

சூப்பர்

புருனோ Bruno June 2, 2009 9:07 AM  

என்ன தல நீங்க

ஏதோ ஸ்கூல் பசங்க விளையாடும் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் (வலைப்பதிவர் சிறுகதை போட்டி) பிராட்மேன் இன்னிங்க்ஸ் ஆடுறீங்க

இது உங்களுக்கே நல்லா யிருக்கா :) :) :) :)

நர்சிம் June 2, 2009 11:27 AM  

//Maybe it's just the manner in which the character speaks, but I got the feeling that it's looking down on people who read other sort of books (elitism here?). In any case most of us would have graduated from the books that is mentioned by the wife to the ones mentioned by the husband. In a way it would have been even better if the husband had criticized his wife directly on her reading habits. At least it would have been direct.
//

dear Booksforlife..

Thanks for your comment. I have changed the lines as those lines are not the key words of the story..so i have changed those lines to //“நீ சொன்ன புக்ஸ்ஸெல்லாம் ஆரம்பத்துல படிச்சுட்டு இருந்தேன்.இப்பெல்லாம் ஜெயகாந்தன், எஸ்ரா,தி.ஜ,சுஜாதா,பசுவய்யா இப்படி ஆகிப்போச்சு..ஆனாலும் நீ சொன்ன புக்ஸ்லாம் ரொம்பப் பிடிக்கும்”
//

hope these lines are ok now.

அந்த பெயர்களும்,இலக்கிய வாசிப்பிற்கும் காரணம், ப்ரேம் வக்கிரம் பற்றி கூறும் விளக்கம்.. மிகுந்த வாசிப்புகளின் மூலம் பார்வைகளும் கோணங்களும் மாறும் என்பதை குறிப்பால் உணர்த்த நினைத்ததன் விளைவுதான் அது. மற்றபடி குறைத்து மதிப்பிடும் எண்ணம் இல்லவே இல்லை.

நர்சிம் June 2, 2009 11:31 AM  

வருகை தந்து பாராட்டிய,பரிசுக்காக வாழ்த்திய அத்தனை பேருக்கும் நன்றி நன்றி நன்றி..

முடிவு என்ன என்று கேட்டவர்களுக்கு..

கார்த்திகை பாண்டியன்,சென்ஷி,நாடோடி இலக்கியன்,அரவிந்த்,அமிர்தவர்ஷினி அம்மா போன்ற பலரும் சரியாக சொன்ன பதில்தான்..

அப்படி நடந்திருக்குமோ இப்படி நடந்திருக்குமோ என்ற எண்ணங்களே வக்கிரத்தின் வெளிப்பாடுதானே.. மேலும் கதையின் ஓட்டத்தில் நிறைய இடங்களில் இதை குறிப்பாலும் உணர்த்த முயன்றிருக்கிறேன்..

கடைசியாக.. இவ்வளவு நீளமான(827 வார்த்தைகள்) கொண்ட கதையை படிக்க வைத்து.. முடிவை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் என முடித்ததும்.. எனது மிகப்பெரிய வக்கிரம் தானே???

நன்றி...

கார்க்கி June 2, 2009 12:12 PM  

pulp fiction படம் பார்த்திருக்கிங்களா தல?

சரியான தேர்வுன்னு நினைக்கிறேன். இந்த தளத்தில் வேறு படைப்பு போட்டிக்கு வராது..

சொல்ல வேண்டியதை எல்லோரும் சொல்லிட்டாங்க..

ஆல் தி பெஸ்ட்..

ஒரு சின்ன சஜெஷன்... இதை குறும்ப்டமா எடுக்க முடியுமா? கேபிள்ஜி கிட்ட கேட்போம்..

அனுஜன்யா June 2, 2009 3:11 PM  

உடனே பின்னூட்டம் வேண்டாம்னு, ஒரு நாள் கழித்துப் போடுறேன் நரசிம். கதை முழுதும் உங்க டச். ஆனால், எனக்குக் கொஞ்சம் கூட ஆச்சரியம் இல்ல. உண்மையைச் சொல்லப் போனால் 'செம்பட்ட' கதை தந்த ஆச்சரியங்கள் இன்னும் அதிகம்.

ஆனால், முடிவு.... முதலில் கொஞ்சம் ஏமாற்றம். அப்புறம் யோசிக்க யோசிக்க இதை ஒரு தரமான ராஜேஷ் குமார் கதையிலிருந்து இன்னும் மேலே மேலே கொண்டு சென்றது அது தான். Absolutely brilliant. Your master stroke.

இன்னும் கொஞ்சம் சொல்ல இருந்தாலும், அதை வெற்றி விழாவில் வைத்துக் கொள்ளலாம் :)

அனுஜன்யா

aravind June 2, 2009 3:19 PM  

//கார்க்கி said...
ஒரு சின்ன சஜெஷன்... இதை குறும்ப்டமா எடுக்க முடியுமா? கேபிள்ஜி கிட்ட கேட்போம்..//

ஹீரோ சான்ஸ் கேட்டு அடம் பிடிக்க கூடாது

செல்வராஜ் June 2, 2009 3:28 PM  

எல்லோரும் கொஞ்சமடக்கி வாசிச்சால், ஓவரா புகழாமல் இருந்தால் நர்சிம் அடுத்த முறை இன்னும் நல்லா எழுதுவார்! ;-)

வாழ்த்துக்கள். (புரியலேங்க)

ஆதிமூலகிருஷ்ணன் June 2, 2009 6:57 PM  

கதை முழுதும் உங்களின் சுவாரசியமான எழுத்து என்னைத்தொற்றிக்கொண்டது. உணர்வுகளை அழகாக பில்ட் செய்கிறீர்கள். முதலில் முடிவில்லாத தன்மை ஏமாற்றம் தந்தது. ஆனால் யோசிக்கையில் இதுபோன்ற கதைகளில் எந்த முடிவைத்தந்திருந்தாலும் அது ஒரு சாதாரண கதையாகவே போயிருக்கும். தலைப்பு பொருத்தமானது...

இருப்பினும் முடிவற்ற முடிவைத்தந்து சிந்தனையை கிளறும் அளவில் இந்தக்கதைக்களம் வீரியத்தோடு இல்லை என்றுதான் நான் உணர்கிறேன். என்னைப்பொருத்த வரையில் இதைவிடவும் செம்பட்டைக்கே அதிக வாக்குகளைத்தருவேன்.

$anjaiGandh! June 2, 2009 9:35 PM  

வெற்றிபெற வாழ்த்துகள் நர்சிம்..!

கோபிநாத் June 3, 2009 9:10 AM  

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தல ;)

கோபிநாத் June 3, 2009 9:11 AM  

ஆகா 50வது நானா! ;)

51ம் வச்சுக்கோங்க ;)

நர்சிம் June 3, 2009 10:46 AM  

நன்றி அனுஜன்யா.கார்க்கிசகா, அரவிந்த்,


நன்றி செல்வராஜ்..எது புரியலைனு சொன்னீங்கன்னா விளக்கலாமே தல..

நன்றி ஆதிமூலகிருஷ்ணன், சஞ்செய்

நன்றி கோபிநாத்.

Gowripriya June 3, 2009 11:18 AM  

all the best....

கதை நல்லா வந்திருக்கு..

இனியவன் June 3, 2009 1:41 PM  

நல்லா எழுதியிருக்கீங்க நர்சிம்.

பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.

குகன் June 3, 2009 2:18 PM  

வக்கிரத்திற்கு ப்ரேம்ப்ரகாஷ் சொல்லும் விளக்கம் நன்றாக உள்ளது.

கதை தான் கடைசி பக்கம் கிலிந்தது போல் முடிக்காமல் இருப்பது போல் ஒர் உணர்வு ஏற்படுகிறது.

வெற்றி பெற வாழ்த்துக்கள் :)

தமிழ்ப்பறவை June 3, 2009 11:14 PM  

வக்கிரம்- நைஸ் ஃப்ளோ...
வாழ்த்துக்கள்...
//
“சொல்லிட்டே போங்க..சென்னை வந்துரும்.. வாய்யா என் அறிவாளிப் புருஷா..அறைஎண் 130ல் கடவுள் காத்திருக்கிறார்...”
//
நர்சிம் ‘நச்’...
கொஞ்சம் ராஜேஸ்குமார் படித்த ஃபீலிங்க்...அனுஜன்யா சொன்னது போல்... ஆனால் பெட்டர் வெர்ஷன். கிளைமேக்ஸ் சூப்பர்...

டக்ளஸ்....... June 4, 2009 11:54 AM  

என்ன ஒரு வக்கிரம்..!
வாழ்த்துக்கள் தலைவரே.

விக்னேஷ்வரி June 4, 2009 5:48 PM  

பெண்கள் எந்தப் பருவத்தில் மிகுந்த அழகு? பதின்ம பருவத்தின் வாசலில் பட்டாம்பூச்சிகள் போலப் பறப்பார்களே, அப்பொழுதா?, திருமண செய்தி கேட்டு, கனுக்கால் முதல் காதுமடல்கள் வரை வெட்க நரம்புகள் சிவ்வ்விட வளையவருவார்களே, அப்பொழுதா?, திருமணமான புதிதில் தேனில் அமிழ்ந்த நிலவு போல,தேன்நிலவு தேவதைத் தருணங்களிலா?,அல்லது, நிறைமாதக் கர்பிணியாக,காதுகள் பெருத்து,கண்களில் வெட்கமும் பெருமையும் பொங்க நிதான நடை நடக்கும் பொழுதுகளிலா? ///

ரொம்ப அனுபவிச்சு எழுதிருக்கீங்க நர்சிம் அண்ணா.


ஐயோ செம ஸ்டோரிங்க. ஒரு வித படபடப்போடவே படிச்சேன்.

அது சரி June 5, 2009 3:13 AM  

கதை சும்மா "பரபற"ன்னு இருக்கு தல...

வெற்றி உங்களுடையதாக!

KAVINGAN June 5, 2009 12:02 PM  

அண்னே!! முடிவச்சொல்லிட்டுப்போங்க.
பதட்டமா இருக்குதுள்ள..?!!??

KAVINGAN June 5, 2009 12:02 PM  

அண்னே!! முடிவச்சொல்லிட்டுப்போங்க.
பதட்டமா இருக்குதுள்ள..?!!??

சங்கணேசன் June 5, 2009 12:35 PM  

கதையின்
தன்மையில் - ராஜேஷ்குமார்
நடையில் - நர்சிம்
முடிவில் - சுஜாதா
....
நினைவில் 'வக்கிரம்'

சங்கணேசன் June 5, 2009 1:13 PM  

உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்களை சொல்லாமலேயே போயிட்டேனே..அப்பவே ‘வக்கிரம்' ஜெயிக்கிறது நண்பா..

jaiselvam June 15, 2009 6:16 PM  

Story is very intresting..

All the best..

Mahesh June 18, 2009 7:43 AM  

வக்கிரம் - இதுக்கு "முழுமையற்ற"ன்னு ஒரு அர்த்தமும் இருக்கு... அப்பிடிப் பாத்தாலும் கதைக்கு fitting title.

சே.. எம்புருசனும் கச்சேரிக்குப் போராருன்னு நானும் கதை எழுதினேனே :( இரும்படிக்கற எடத்துல ஈ போயிருக்கக் கூடாதோ??

ஆனா தல...ஒன்ணு நோட் பண்ணீங்களா? நாம் ரெண்டு பேருமே டயரி டைப் கதை எழுதியிருக்கோம். அது ஏன்?