இண்ட்ரவல் பிளாக்கில் க்ளைமாக்ஸ், க்ளைமாக்ஸில் ஒரு தொடக்கம் என நுணுக்கமான ஸ்கிரிப்டுக்காக சமுத்திரக்கனிக்கு ஒரு சபாஷ்.
தார் ரோட்டை மட்டும் காட்டி,அதில் கேமராவை மெதுவாக நகர்த்தி பின் வேகமெடுக்க வெறும் ரோடு அதிரவைக்கும் வேகத்தில் நகரும் பின்னனியில் டைட்டில் கார்டு ஓடுகிறது... நாடோடிகள் என்ற வார்த்தையின் அடுத்த வார்த்தையாக நமக்கு வருவது ரோடு ரோடா திரியறவங்க என்பதன் குறியீடோ என்று நினைத்துக் கொண்டாலும் அது தவிர, படம் முழுக்க நடக்கும் ச்சேஸிங்கின் குறியீடும் கூட என்பதை அதே தார் ரோடு பேக்ரவுண்ட் எண்ட் கார்டு உறுதி படுத்துகிறது.
‘கண்ணெதிரே தோன்றினாள்’ என்ற பிராசந்த் படத்தின் ஒரு வரி கதை “நண்பனின் தங்கையை காதலித்தால் என்னாகும்” என்பதே..அதை நீட்டி இரண்டரை நேரப்படமாக சொன்ன மேட்டரை அரை நிமிடத்தில்,அதாவது சசிக்குமாரின் தங்கையை காதலிக்கும் நண்பனிடன் சசி “எனக்கு தெரியும் மூடிட்டு படுங்கடா வெண்ணைகளா” என ஜாலியாக சசி சொல்வதில் தொடங்கும் பொழுதே எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கிவிடுகிறது.
மூன்று நண்பர்கள்... ஒவ்வொரு குடும்பத்தின் பின்னனியும் வெவ்வேறு..ஆனாலும் ஒரு மெல்லிய நூல்..அப்பா கேரக்ட்டர்கள்.. சசிக்குமாரின் அப்பா அப்பர்மிடிள்கிளாஸ் மெண்ட்டாலிட்டி,மகனைப் புரிந்தவர் என்றாலும் BA வரலாறு படித்து என்னத்தச் செய்ய என்ற எதார்த்தம் தெரிந்தவர். விஜயின் தந்தை எக்ஸ்-மிலிட்டிரி மேன், மகனை நண்பனாக பாவித்து நடத்தும், பிஸினஸ் செய்ய வேண்டும் என மோட்டிவ் செய்யும் தந்தை, காதலுக்குக் கூட துணை நிற்கும் ஜாலியான அப்பா. அடுத்து, பரணி, பவர்லூம் வைத்து சத்தத்துடன், இரண்டாவது மனைவியுடன் வாழ்க்கை நடத்தும் லோயர்மிடிள்கிளாஸ் தந்தை. மகன் மீது பாசம் இருந்தாலும் இரண்டாவது மனைவிக்காக மகனை எப்பொழுதும் அவன் காது வலிக்கத் திட்டும் கேரக்ட்டர்.
சமுத்திரக்கனி பாலச்சந்தர் ஸ்கூலில் இருந்து வந்தது ஆங்காங்கே தெரிவதற்கான அடையாளங்கள்... விஜயும் அவன் தந்தையும் பேசிக்கொள்ளும் பொழுது லோ ஆங்கிளில் அப்பாவும் மகனும் லேசாக காலை ஆட்டிக் கொண்டே நிற்கும் மேனரிசத்தை ஆடியன்ஸுக்கு காட்டுவது. ஏனென்றால் பிறகு வரும் காட்சியில் மகன் காலை இழக்கும் பொழுது ஏற்றப்படும் வலிக்கு ஆதாரமாய் அந்தக் லோ ஆங்கிள் ஷாட்டில் கால் ஆட்டல்.
பரணியின் பாத்திரம் மிகுந்த சத்தத்துடன், பவர்லூம்,அப்பாவின் காட்டுக்கத்தல் போன்றவைகளுக்கூடே வாழ்வது, பின்னாளில் அவன் காது கேட்காமல் போகும் பொழுது நமக்கு ஏற்படுத்தும் வலிக்காக.
சசியின் பாசமான அப்பா, சசியுடன் ஒத்துப் போகும் சசி எது செய்தாலும் புரிந்து கொள்ளும் கேரக்ட்டர்.ஏனெனில் மிக முக்கியமான முடிவான சசியின் காதலை, அப்பாவிற்காக விட்டுவிடு எனும் சொல்லும் போது சசி விட்டுக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என நமக்கே தோன்றும்படி செய்ய வேண்டும் என்பதற்கான பாத்திரப்படைப்பு.
இப்படி முதலிலேயே ஆங்காங்கே பிறகு நடக்கப் போகும் காட்சிகளுக்காக சப்போர்ட்டிங் அண்ட்ர்லைன் காட்சிகளை சமுத்திரக்கனி நன்றாகவே செய்திருக்கிறார்.
ஆனால் அவ்வப்பொழுது பேக்ரவுண்டில் “முகநக நட்பது..” குறளை ஏதோ ஒரு அறிவிப்புப் பலகையில் காட்டியும் காட்டாமல் விடுவது போன்ற ஃபிரேம்கள் லேசான(எரிச்சல்வரும்) பாலச்சந்தர்தனமே தான்.
ஜாலியான பேச்சுலர் நண்பர்கள் சசி வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கிக்கொண்டிருக்கும் காட்சியில் இருந்து, ஒரு பக்கம் TNPSC Examக்கு படிக்கும் புத்தகம், செருப்பு,அதில் சொருகி வைக்கப் பட்டிருக்கும் சிகரெட் பாக்கெட் என டாப் ஆங்கிளில் காட்டும் காட்சியில், சசியின் தங்கை துணி உலர்த்த வரும்பொழுது, மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருக்க, விஜயுடனான காதல் பார்வை,அதை இன்னுமொரு நண்பனான பரணி பார்த்துவிட, மெதுவான குரலில் சசிக்கு ‘தெரிந்தால் என்ன ஆகும் எனத் தெரியுமா’ எனக் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது சசியின் முதுகை கேமிரா காட்டிக்கொண்டிருக்க, ஒரு ஆக்ஷன் சீன் என எதிர்பார்த்தால், எனக்கு எல்லாம் தெரியும் படுங்கடா என சசி சிரித்துக் கொண்டெ சொல்லுவதில் தெளிவாக சொல்லப்படுகிறது “இது நட்பைப் போற்றும் படம்”.
கிணற்றில் குளித்து ஜாலியாக இருந்து கொண்டிருக்கும் மூவரின் வாழ்வில், சசிக்கு மட்டுமே நண்பனாக எண்ட்ரி ஆகும் சரவணன்,Exமினிஸ்டரின் மகன், கேரக்டெர் திடீரென தற்கொலைக்கு முயல, அங்கு ஆரம்பிக்கிறது தடதட.. காரணம் காதல் தோல்வி என்றவுடன் சசி சேர்த்து வைக்கக் கிளம்ப, சசியின் நண்பன் தங்கள் நண்பன் என்ற ஒரே காரணத்திற்காக மற்ற இருவரும் சேர்ந்து கொள்ள, சரவணின் காதலியும்,நாமக்கலின் முக்கியப்புள்ளியின் மகளுமான அந்தப் பெண்ணைத் தேடி நாமக்கல் பயணம்.. விறுவிறுப்பு,த்ரில்லிங் என அதகளமான, டெம்ப்போ ஏற்றும் சம்போ பாடலுக்கிடையின் காதலர்களை கடத்தி வேறு ஊருக்கு அனுப்பி வைக்கிறது மூவர் கூட்டணி.. At what cost? சசிக்கு மிக முக்கியமாக அரசு வேலைக்கு சேரவேண்டும் அப்பொழுதுதான் அத்தைமகளை கல்யாணம் செய்ய முடியும்.அது நடக்காது. போலிஸ் கேஸாகிவிடுவதால். கால் ஆட்டிக்கொண்டு தந்தையுடன் ஜாலியாக இருந்த விஜய் ஒரு காலை இழக்க நேரிடுகிறது ச்சேஸிங்கில்.சத்தங்களூடான வாழ்விற்கு முற்றுப் புள்ளி வைக்கபடும் விதமாக பரணியின் காது பஞ்சராக்கப் படுகிறது.
இவ்வளவு பரபரப்பாக ஒரு இடைவேளை இதுவரை வந்ததில்லை அல்லது சமீபத்தில் வந்ததில்லை.
இனி என்ன இருக்கிறது. அதுதான் சேர்த்துவைத்துவிட்டார்களே என நினைக்க வைக்கும் ஸ்க்ரிப்ட்.
இந்த இடத்தில் கேமராவைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். பரணியின் காதில் ஒருவன் கட்டையைக் கொண்டு அடிக்கும் ஷாட்டில் நம் காது பிளப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும் ஆங்கிள். அந்த இடத்தில் எடிட்டிங்கும் சவுண்ட் எஃபெக்ட்டும் மிகக் கச்சிதம். டைட்டில் கார்டில் இருந்து எண்ட் கார்டு வரை கேமரா ரோடுகளை விழுங்கி நம்மையும் அதே வேகத்தில் பயணிக்கச் செய்கிறது.
இடைவேளைக்குப் பிறகு?
படம் பாருங்கள்.
சில சிறப்புகள்.
1.வசனம். “முள்ளப் பிடிச்சாலும் முழுசாப் பிடிக்கணும்டா” ஒரு எ.கா.
2.கேமரா & எடிட்டிங். சேஸிங் காட்சிகள் அனைத்திலுமே அதிருகிறது.
3.பாத்திரத் தேர்வு.. அதுவும் அந்த லோக்கல் MLA(ஃபிளக்ஸ் போர்டு புகழ்) பாத்திரம் முதல் பாட்டி வரை.
கவனம் செலுத்தி இருக்கவேண்டியவை...
1.ஹீரோயின் மேனரிசம்.. மற்ற எல்லோரும் அந்தப் பெண்ணின் ரியாக்ஷன்கள் நன்றாக,ஜோதிகா போல இருப்பதாக எழுதி இருந்தார்கள். எனக்கு அந்தப் பெண்ணின் ரியாக்ஷன்கள் செயற்கையாகவும் எரிச்சலையுமே தந்தன.
2.பாடல்கள்,வரிகள்.. சம்போ தவிர மற்ற பாடல்கள் அவ்வளவாக,அல்லது அறவே நன்றாக இல்லை.சம்போ பாடலுமே விறுவிறு காட்சிகளினால்தான் நன்றாக இருந்தது.
***
..
நாடோடிகள்... என் பார்வையில்
Posted by
நர்சிம்
Wednesday, July 1, 2009
Labels: சினிமா விமர்சனம்
41 comments:
//படம் பாருங்கள்//
பார்த்தாச்சு,
படத்தைப் பற்றிய வித்யாசமான பார்வை.நுணுக்கமாக கவனிச்சிருக்கீங்க.
என்னோட பார்வையையும் எழுதியிருக்கிறேன்,பார்த்தீங்களா நண்பா?
நர்சிம்,
இதுவரை 'நாடோடிகள்' பார்க்கவில்லை. ஆனால், தொடர்ந்து அனைத்து நண்பர்களும் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லும்போது, பார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகரிக்கிறது.
திரைப்படம் குறித்த உங்கள் பார்வை, உங்கள் பாணியில் இருக்கிறது.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
நல்ல விமர்சனம். ஏற்கனவே சுப்ரமணியபுரம் படம் பார்க்க முடியாமல் போனதற்கு இன்னும் வருந்துகிறேன். இதை சீக்கிரமே பார்த்திடலாம்.
Really a fantastic performance by the team.
A nice review by you.
அடப்பாவி தொடர்ந்து படிக்கலாம் என்று கொஞ்சம் சாஞ்சு இருந்து படிக்கலாம் என்றால் அதுக்குள்ள முடிச்சுட்டீங்களே.... சரி வேற வழி இல்லை படத்த பார்க்கிறேன்.......
ம்ம்.. இந்த வாரம் பார்க்க வேண்டும் தல
பார்த்துடலாம்.
நன்றாக இருந்தது விமர்சனம்..
I have put some comments for your picture which was taken on bloggers meet at Natesan Park. It is published in my blog. If time permits please make a visit.
எதிர்பார்ப்பை எகிறவைத்து விட்டீர்கள்.
Nice
பலரும் சொல்றாங்க நல்ல இருக்குன்னு. வாரக் கடைசில பாத்துட வேண்டியது தான்
எல்லாரும் நல்லா இருக்குனு சொல்றீங்க கண்டிப்பா இந்த் வாரகடைசி போகனும் ..
யாராவது பாத்துட்டு பதிவு போட்டத்தான் உண்டு. :(((
அருமையான விமர்சனம்.. :-)
நர்சிம்,
இருவாரங்களுக்குப் பிறகு வந்து சர்ச்சையான பதிவுகளை பார்த்து சோர்ந்து உங்கள் பதிவு சற்றே ஆறுதலாக இருக்கிறது. நாடோடிகள் இன்னும் பார்க்கவில்லை. நிறைய பேர் விமர்சனம் எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்தேன். உங்களுடையதுதான் முதலில் படித்தேன். இன்னும் மற்றவர்களையும் படிக்க வேண்டும்.வழக்கம்போலவே சரளமான விவரணை நடையில் சிலாகித்து நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
படம் வெளிவந்த அன்றே ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் சென்றோம். நீங்கள் சொன்னதுபோல், ஆரம்பம் முதல் இறுதி வரை தியேட்டரில் கைதட்டல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. பல சீன்களில் பரணிதான் எல்லோரையும் கவர்கிறார்.
எங்களின் போதாத காலம் எங்களுக்கு கிடைத்த row S.. எஸ் எஸ் ஆர் பங்கஜத்தில்.. இந்த ரோதான் பர்ஸ்ட் ரோ.. சரி மச்சான் படம் நல்லாயில்லேனா கெளம்பிரலாம் திரைக்கு முன்னால் உட்கார்ந்து படம் பார்க்கமுடியாது என்றுதான் அமர்ந்தோம்.. இறுதிவரை ரசித்துப் பார்த்துவிட்டுதான் வந்தோம்
நன்றி இலக்கியன் படித்தேன் அருமை.
நன்றி பைத்தியக்காரன் ஸார்.படம் பாருங்க.
நன்றி விக்னேஸ்வரி,நைனா,இவன்,கார்க்கி,வித்யா,தீப்பெட்டி,நைனா பார்த்தேன் கலக்கல்,முரளிகண்ணன்,அசோக்,ட்ரூத்,சூரியன்,புதுகை தென்றல்,ராகவேந்திரன்,அகநாழிகை,உழவன்.. மிக்க நன்றி.
//சரவணின் காதலியும்,மினிஸ்டரின் மகளுமான அந்தப் பெண்ணைத் தேடி//
அன்பில் நர்சிம்,
தகவல் பிழை. சரி செய்யவும்
நன்றி சங்கிமங்கி.மாற்றிவிட்டேன்.
இது விமர்சனமல்ல!
திரைக்கதை நுண்ணரசியல்!
நான் இருக்கும் இடத்தில் தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆவதில்லை.
பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டதால் டிவிடி அனுப்புவதும் உங்கள் பொறுப்பே.
தியேட்டர் பிரிண்ட் ஆ இருந்தாலும் ஓக்கே..
நர்சிம்,
பதிவுலகின் எனது முதல் கமெண்ட் அது
அதற்கு அளித்த மரியாதைக்கு நன்றி
சங்கிமங்கி
சசிகுமார் எதற்கு டி.ராஜேந்தர் மாதிரி ஒவ்வொரு படத்திலும் நடிக்கிறார்!
சுப்ரமணிபுரத்திலேயே தெரிந்துவிட்டது, அவர் நடிக்க வந்து டைரக்டரானவர் என்று!
மிகச் சரியாக கண்டுபிடித்துவிட்டீர்களே வினிதா.. அருமை.
ஆறு நாளுக்கு முந்தியே ரிசர்வ் பண்ணிட்டேன். பல இடங்களில் எரிச்சலூட்டினாலும் (அப்ளாஸ் வாங்குவதற்காகவே ஏகப்பட்ட நட்பு போற்றும் வசனம் மாதிரி) இப்படி ஒரு எண்டர்டெய்னரை தந்ததற்கு நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்கள் இயக்குனரும் தயாரிப்பாளரும்.
நர்சிம்,
இந்த படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்தவருக்கு காது கேட்கும் திறன் இல்லை அதனால் பேசவும் முடியாது
விமர்சனம் சிறப்பு.
தொடர்ந்து எழுதுங்கள்.... வாழ்த்துக்கள் அண்ணா.....
என்னோட வலைக்குள்ளும் கொஞ்சம் வந்து போங்க......
படமும், பார்வையும் அருமை தல!
சிறந்த படத்துக்கு சிறந்த விமர்ச்சனம்
நல்லதொரு திரைப்படத்துக்கு நல்லதொரு விமர்சனம் நண்பா
நீண்ட நாட்களுக்கு பின் விமர்சனம் எழுதியுள்ளீர்கள்:)
அருமை தோழர். உங்கள் விமர்சனம் படித்த பின் கண்டிப்பாக இந்த வாரம் படத்தை பார்க்க முடிவு செய்துவிட்டேன்...
நன்றி வெங்கிராஜா,அரவிந்த்,முத்துராமலிங்கம்,சப்ராஸ்,வெயிலான்,வசந்த்,மதுரைமல்லி(நம்ம ஊரு..),மிஸ்டர் அ.
என்னதான் படத்தை கவனித்தாலும் எப்படி இவ்வளவு நுணுக்கமாக எழுத முடிகிறது?
அதிஷாவின் 'நாடோடிகள்' விமர்சனம் படித்தீர்களா?
இந்த வாரம் பார்க்க வேண்டும் :)
இப்படி முதலிலேயே ஆங்காங்கே பிறகு நடக்கப் போகும் காட்சிகளுக்காக சப்போர்ட்டிங் அண்ட்ர்லைன் காட்சிகளை சமுத்திரக்கனி நன்றாகவே செய்திருக்கிறார்.
//
இவ்ளோ கவனிச்சா எழுதணும்..
அடக் கடவுளே..
நான் கூட ரெண்டு மூனு படத்த விமர்சனம் பண்ணிட்டேனே...
//இண்ட்ரவல் பிளாக்கில் க்ளைமாக்ஸ், க்ளைமாக்ஸில் ஒரு தொடக்கம் என நுணுக்கமான ஸ்கிரிப்டுக்காக சமுத்திரக்கனிக்கு ஒரு சபாஷ்.
தார் ரோட்டை மட்டும் காட்டி,அதில் கேமராவை மெதுவாக நகர்த்தி பின் வேகமெடுக்க வெறும் ரோடு அதிரவைக்கும் வேகத்தில் நகரும் பின்னனியில் டைட்டில் கார்டு ஓடுகிறது...//
விமர்சனத்தின் ஆரம்பமே அசத்தல்.
//நடக்கப் போகும் காட்சிகளுக்காக சப்போர்ட்டிங் அண்ட்ர்லைன் காட்சிகளை சமுத்திரக்கனி நன்றாகவே செய்திருக்கிறார்.//
என்னவோ டெக்னிகலாக பேசி இருக்கீங்க. சீக்கிரம் சினிமா எடுக்க போறீங்களோ.
சிறப்பனவை, கவனம் செலுத்தி இருக்க வேண்டியவை என்று நேர்த்தியாக விமர்ச்சித்து இருக்கின்றீர்கள். வாழ்த்துகள்.
ஆனா படம் பார்க்காத காரணத்தால் இதைப் பற்றி அதிகம் பேச முடியவில்லை.
எல்லோரும் சொல்றத படிச்சா ஒரே கன்புசனா இருக்கு.
செமை.. நல்ல படங்கள் வரும் போது மகிழ்ச்சிதான் நமக்கு. நாளை பார்த்துவிட வேண்டியதுதான்.!
நல்ல கவனத்துடன் கூடிய விமர்சனம்.
Post a Comment