இன்பவெள்ளம்...இசை எனும்...

ஆ...ஆ..ஆ..என இளையராஜாவின் குரல் எடுக்க ஆரம்பித்து,‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது’..என்ற வரிகள் வரும் முன்னே நம் மனது ஒரு நிலைப்பாட்டிற்கு வந்து அந்தப் பாட்டை முழுதும் கேட்டுவிடவேண்டிய நிர்பந்தத்தை நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம்.அது ‘ஹிந்தோளம்’என்று தெரிந்திருக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை.இசை.அவ்வளவே.

சற்று பின்னோக்கிப் பார்த்தால், காட்டில் வசித்த நம் ஆதிமனித முன்னோர்களின் மன எச்சங்கள் இன்னும் மிச்சமிருப்பது சில செய்கைகள் மூலம் அறியப்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.திடீரென உயரமான இடத்தில் இருந்து செங்குத்தாக விழுவது போன்ற கனவுகள் வருவதன் காரணம் முன்னோர்கள் மரங்களில் தூங்கியதன் தாக்கம் என்பது போன்ற கருத்துகள்(எப்பொழுதோ படித்தது.ஆதாரம் கேட்டு சட்டையைப் பிடிக்காதீர்கள்)

அதுபோலத்தான் இசையும் என்றே எனக்குப் படுகிறது. பறவை,விலங்கு,வண்டு என ரீங்கார சிங்காரங்களுக்கு இடையே வாழ்ந்ததன் மிச்சப்பட்ட உணர்வுதான், ஒரு வயது குழந்தை கூட இசையை தொடை தட்டி ரசிக்க வைக்கிறதோ என்ற எண்ணம் (எனக்கு) ஏற்படுவதுண்டு.கருத்து ஏற்புடையாதா என்பது தெரியவில்லை.

அதை திரைப்படத்துறை மிக அற்புதமாக கையாண்டுகொண்டது,கொண்டிருக்கிறது.க்கும்.

அவள் செந்தமிழ் தேன் மொழியாள் என்ற என்றும் பசுமையான பாடலை முழுதுமாக கம்போஸ் செய்து முடித்துவிட்டு,ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிறதே என்று உதடுசுழித்ததன் விளைவே... அந்தப் பாடலின் முன்னர் வரும் ‘சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே’ என்ற வசனகவிதை.. அதுதான் அந்தப்பாடலின் முத்தாய்ப்பு,அல்லது ச்செர்ரி.

இப்படி இசைக்கு இத்தனை முக்கியத்துவம் எதனால் கொடுக்கப்பட்டுக்கொண்டே வருகிறது? திரைப்படங்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது ஏனெனில் நாட்டுப் புற பாடல்களில் இன்றும் திரைப்பட சாயல்கள் இல்லை. ஆகா வாழ்வின் ஒரு அம்சம் இசை.


அதன்பிறகு மகாதேவன்களில் இருந்து விஸ்வநாதன்களுக்கு திரைத்துறை தாவியதும் ஒரு இன்ப அனுபவமே ரசிகர்களுக்கு.அதுவரை சங்கீதம் சாஸ்த்திரம் என்று மேல்தட்டுச் சொற்கள் உடைக்கப்பட்டு இசையை பொதுவில் வைக்கத் துவங்கிய காலம்.

கவியரசு கண்ணதாசனும் விஸ்வநாதனும் ரசிகர்களுக்கு திகட்டத் திகட்ட இசையை கொடுத்தார்கள் என்றே சொல்லவேண்டும்.

ஒரு மாலையில் “என்னய்யா பெரிய்ய மெட்டு? என்னய்யா பெரிய வரிகள்?” என இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டிருக்கையில் இவர் மெட்டுச் சொல்ல அவர் வரிகள்சொல்ல என அரங்கேறியது தான் தையனத்தத்தன தான நன்னன..சிப்பி இருக்குது முத்தும் இருக்குது..பாடல்.

இப்பொழுதும் அந்தப் பாடலைக் கேளுங்கள் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் அர்த்தம் எல்லாம் பெரிதாக இருக்காது.ஆனால் மெட்டில் மீட்டர் தட்டாமல் உட்காரும் வார்த்தைகள் உடனுக்குடன்.இதை யாரோ கே.பியிடம் சொல்லப் போய் அதையே சீனாக வைத்தார் என்றும் சொல்வார்கள்.


படித்த படிப்பும் செய்யும் தொழிலும் ஒரே புள்ளியில் பயணப்படும்பொழுது பயன்கள் நன்றாக வெளிப்படும்.அதுவே கலைத்துறையாக இருக்கும் பட்சத்தில் இன்னும் அதிகம்.அப்படித்தான் ஏ.எம் ராஜா.. இசைத்துறை பட்டதாரியான இவரின் வார்த்தை வெளிப்பாட்டின் வசீகரம் (பாட்டுப் பாடவா பாடம் சொல்லவா)மெட்டையும் மென்மையும் கலந்து கொடுக்க உதவியது.

இது பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலுக்கும் பொருந்தும்.இவர்களின் குரல்களின் குழைவும் இசையும் மட்டுமே பாட்டை நிறுத்தி விட்டுப் போய்விடும்.வார்த்தைகள் எப்படி இருந்தாலும்..(பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை)

இந்த இடத்தில் நீட்சி என்ற வார்த்தை உபயோகித்துக்கொள்கிறேன். இந்தக் குரல்களின் நீட்சியாகத்தான் ஏசுதாஸ்,ஹரிஹரன் போன்ற குரல்கள் அவர்களை நம் மனதில் ரீப்ளேஸ் செய்து கொண்டிருக்கிறது.ஜாம்பவான் டி.எம்.செளந்திர ராஜனை எஸ்.பி.பாலசுப்ரமணியம் ரீப்ளேஸ் செய்தது போல..

யோசித்துப் பாருங்கள்..எவ்வளவு ஒற்றுமைகள்.. TMS கதாநாயகர்களுக்கு ஏற்ப குரலை மாற்றிப் பாடுவார். எம்ஜியார் பாட்டா சிவாஜி பாட்டா என்று கேட்டதும் கண்டுபிடித்துவிடலாம்.அதே கதைதான் SPBயிடமும், கமலா ரஜினியா..அவர்களுக்கு ஏற்ப குரலை மாற்றி அல்லது அட்ஜஸ்ட் செய்து பாடுவார்.. பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள என்ற காக்கிச் சட்டைப் பாட்டாகட்டும், வனிதா மணி வனமோகினி என விக்ரம் பட பாடலாகட்டும் கமலின் குரலோடு நூறுசதவீதம் ஒத்துப் போகும்..இடையிடியே சிரித்துத் தொலைப்பதில் தான் எஸ்பி பி வெளிப்படுவார்.

அதுமாதிரிதான் பி.பி.ஸ்ரீனிவாஸ் ஜேசுதாஸ் ஒப்பீடு.இவர்களுக்கு யார் கதாநாயகன் என்பது முக்கியமில்லை.ஒரே குரல்தான் அனைவருக்கும்.என்றாலும் அந்த வெண்கலக் குரல் தான் இனிக்க இனிக்க இவர்களை கேட்க வைத்துக் கொண்டே இருக்கிறது.

சிட்ச்சோர் என்ற அந்தக் கால ஹிந்திப் படத்தில் ஜோசுதாஸ் பாடிய “கோரி தெரா காவு படா ப்யாரா மேத்தோ கயா மாரா.. என்ற பாடல் பரவலாக எல்லோர் மனதிலும் இருப்பதற்கு காரணம் மொழியையும் தாண்டி அந்தக் குரல்தான்.


மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி காலம் கொஞ்சம் மங்கி இளையராஜாவின் ராஜ்ஜியம் ஆரம்பித்த நாட்களில் அவரின் ரசிகர்கள் விஸ்வநாதனுக்கு தபேலாவைத் தவிர வேறெதுவும் தெரியாது என்ற வார்த்தைகள் சிதறப்பட்டவுடன்,தபேலாவைத் தவிர(அல்லது மிகக் கொஞ்சமாய் தபேலா) எல்லா கருவிகளையும் கொண்டு அடிக்கப்பட்ட பாடல்கள் தான் இன்றும் ‘எங்கேயும் எப்போதும்’ என்று நிறைந்து இருக்கும் இன்னமும் ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல்கள்.

அதன் பிறகு இளையராஜாவின் ராஜ்ஜியம் திரைஉலகில் மிகப் பெரிய விருந்து ரசிகர்களுக்கு. இசையின் பல பரிமாணங்களை ரசிகர்களுக்கு செய்து காட்டினார். எதிர்பாரா இடத்தில் மெளனத்தை பேச விட்ட ரீ ரிக்கார்டிங் இவரின் உத்தி.அது போக அடுத்த சீனில் வரும் காட்சிக்கு முன்னரே முந்தைய சீனின் ஃபீலை ரீ ரிக்கார்டிங்கில் ஏற்றி விடுவது வெகுவாக ரசிக்கப்பட்ட ஒன்று.

ஒரு கால கட்டத்தில் வரிகளும் இசையும் சங்கமித்து மிக அற்புதமான இசை கொடுத்ததில் இளையராஜாவின் பங்கு என்றுமே வரலாறாக எழுதப்படவேண்டிய ஒன்று.

கண்மணி நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்... இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள்..ஒரு இடத்தில் கூட அதிக அல்லது தேவையில்லாத சத்தம் இருக்காது.அந்தப் பாடலுக்கு அதுதான் தேவை.

ஆனால்.. மனச்சோர்வு நிறைந்த ஒரு பொழுதில்.. ‘கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே’(தென்றலே என்னைத் தொடு) என்ற பாடலையோ,பழமுதிர்ச் சோலை எனக்காகத் தான்(வருஷம் 16) பாடலையோ கேட்டுப் பாருங்கள்..மனம் உற்சாகத்தில் துள்ளும்.அப்படி தபேலாவை மன அசைவிற்கு ஒத்து உருட்டி இருப்பார்.

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ.. இந்தப் பாடலின் மென்மை அதற்கு முந்தைய பாடலான “பூமாலை ஒரு பாவை யாகுமா?”விற்கு நேர் எதிராக இருக்கும்.இரண்டுமே மிக அற்புதமான பாடல்கள்.ஃபீலை மாற்றி அல்லது ரசிகர் மனதில் ஏற்றுவதில் வல்லமை இருந்தால் தான் இது சாத்தியம்.

இதில் மிகப்பெரிய வரவாக பெண் பாடகர்களின் தேன்குரல்கள்.பானுமதி காலங்களுக்குப் பின் வந்த பி.சுசீலாவின் அனைத்துப் பாடல்களுமே சிறப்பு என்றால் வயதானபிறகும் அவர் பாடிய முத்துமணி மால..அந்த ‘ல’ வில் அவர் குழைத்த தேன் தான் அந்தப் பாடலின் ஜீவன்.

ஜானகியின் அனைத்துப் பாடல்களுமே இந்த வகை என்றாலும் நெஞ்சினிலே என்ற பாடல் எல்லா சிறப்புகளையும் தள்ளி விட்டு ஜானகியின் குரல் மட்டுமே நின்றுவிட்ட பாடல் என்று சொன்னால் மிகையாகாது.

எப்பொழுது பார்த்தாலும் ஸ்டிரியோ டைப் படங்கள் பாடல்கள் என அலுத்துக் கொண்ட ரசிகர்களை நோக்கி பாலுமகேந்திரா மிகுந்த கோபத்துடன் இதோ இதைத்தானே நீங்கள் கேட்டீர்கள் என்று வீசிய படம்தான் “நீங்கள் கேட்டவை”.அதில் தெரித்த பாடல்தான் இன்றும் ரசிக்கப்படும் “அடியேய்.. மனம் நில்லுன்ன்னா நிக்காதடி..” உற்சாகம் குன்றினால் கேட்கப்படவேண்டிய மற்றுமொரு பாடல்.

மனோ(ஏ எம் ராஜா ரீப்ப்ளேஸ்?ஏனெனில் அவர் டிஎம்எஸ்ஸின் அடுத்த கட்டம் என்றால் இவர் எஸ்பிபியின் அடுத்த அல்லது அதே போன்ற குரல்)மனோவின் வரவு ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தியது. ராஜாதி ராஜா காலகட்டங்களில் எல்லா ரஜினிப்பாடல்களையும் இசையோடு அசைந்து ரஜினியின் குரலிலேயே பாடி ஹிட் கொடுத்தவர்.மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா பாடல்(இதில் நடுவில் குரல் உயர்த்தி பாடும் இடங்கள் அருமை)மானின் இரு கண்கள் கொண்ட மானே ஆகட்டும்.. இன்று வரை ரசிக்கப்படும் இசைக்குரல்.

வந்தார் ஏ.ஆர்.ரகுமான்.

“காத்திருக்கும் வரை நம் பெயர் காற்று என்றே இருக்கட்டும்...புறப்பட்டு விட்டால் புயல் என்று புரிய வைப்போம்”- மு.மேத்தா.

இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஏ.ஆர்.ரகுமானுக்குப் பொருந்தும். தென்றல் காற்றாய் டிவி விளம்பரங்களில் வலம்வந்தவர் புறப்பட்டதே புயலாகத்தான்.

எல்லா திசைகளையும் தன் இசையால் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

சின்ன சின்ன ஆசை .. இந்தப் பாடலில் முதல் வரிகள் திரும்பத் திரும்ப வரும்.ஆனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பின்னனி இசையில்.இவருடைய இசைக் கோப்புகளை ஜீரணிக்க சற்றே நேரம்பிடித்தது ரசிகர்களுக்கு.அவ்வளவு வேகம் என்றே சொல்லலாம்.

ஷாகுல் ஹமீது,ஹரிஹரன் என புதிய குரல்களை இசையில் இசைய விட்டு மாற்றத்தை எதிர் நோக்கி இருந்த ரசிகர்களுக்கு மாற்றத்தாலயே விருந்து கொடுத்தவர்.

சக்கர இனிக்கிற சக்கர என்ற நியூ படப்பாடல் ஹிட் ஆனதும் அவர் அளித்த ரேடியோ பேட்டியில் சிரிப்பினூடே இப்படிச் சொன்னார். “ஒரு காலத்தில் எஸ்பிபி குரலில் கட்டுண்ட ரசிகர்களை வெவ்வேறுகுரல்களின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தேன்..பின் எல்லா இசையமைப்பாளர்களும் வெவ்வேறு குரல்களை தேடிக்கொண்டே இருந்தார்கள்.எனவே நான் சிம்ம்பிளாக எஸ்பிபியை பாட வைத்த்தேன்..ஹிட்..”என்றார்.

இந்தப் பயணம் தொடந்து கொண்டே இருக்கும்.

தென்றல்,புயல்,சூறவளி,மீண்டும் தென்றல் என மாறி மாறி பயணப்பட்டுக் கொண்டே இருக்கும் இசை.நம் அழுக்கேறிய சுவாசத்தை சுத்தப்படுத்த இசையால் மட்டுமே முடியும்.

வாழ்க இசை கலைஞர்கள்.நாம் ஆனந்தமாய் வாழ.



..

31 comments:

முரளிகண்ணன் July 16, 2009 12:55 PM  

\\அதுபோலத்தான் இசையும் என்றே எனக்குப் படுகிறது. பறவை,விலங்கு,வண்டு என ரீங்கார சிங்காரங்களுக்கு இடையே வாழ்ந்ததன் மிச்சப்பட்ட உணர்வுதான், ஒரு வயது குழந்தை கூட இசையை தொடை தட்டி ரசிக்க வைக்கிறதோ என்ற எண்ணம் (எனக்கு) ஏற்படுவதுண்டு\\


\\படித்த படிப்பும் செய்யும் தொழிலும் ஒரே புள்ளியில் பயணப்படும்பொழுது பயன்கள் நன்றாக வெளிப்படும்\\

அசத்தல்.

பாடல் தொடங்கும் முன் வரும் இசைஞானியின் பிஜியெம்மை போல இனிமை.

தராசு July 16, 2009 1:04 PM  

தலைவரே,

உண்மைய சொல்லுங்க, கார்க்கியும் பரிசலும் ஒருதடவை காக்டெய்லையும், அவியலையும் மாற்றி, மாற்றி போட்டுட்டு கலாய்ச்சாங்களெ, அந்த மாதிரி முரளிகண்ணன் பதிவுக்கு பதிலா நீங்க பதிவிடறீங்களா,

அதுக்கு முரளி அண்ணன் உடனே பின்னூட்டம் வேற.

கார்க்கி July 16, 2009 1:15 PM  

ஒரு முழுமையான அலசல். ஒவ்வொருவரைப் பற்றியும் தனிப் பதிவே இடலாம் என்றாலும், சுருக்கமாக அவரக்ளின் பலத்தை (அ) வெற்றியின் ரகசியத்தை உடைத்தது நச்.

இசைத் தெரிய தேவையில்லை என்று சொன்னாலும், ஆழந்த அவதானிப்பு ஆச்சரியத்தை தருகிறது. அறிவை விட ஆர்வமே முக்கியம் என்பாரக்ளே..

இசை, பாடல், இதோடு உங்கள் சொல் விளையாட்டு.. அற்புதமான பதிவு சகா..

அதுவும் இசை என்பதே நம் முன்னோர்களின் மன எச்சங்கள் என்றது டாப்..

ஆதாரம் கேட்டு சட்டையை பிடிக்க மாட்டோம். சும்மாவே பிடிப்போம்.. :))

குடந்தை அன்புமணி July 16, 2009 1:28 PM  

படிக்கும்போதே நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் எல்லாம் எங்கள் காதுகளில் வந்து மோதுகின்றன. நல்ல நினைவலைகள்.

பாபு July 16, 2009 1:28 PM  

“கோரி தெரா காவு படா ப்யாரா மேத்தோ கயா மாரா


enakkum pidikkum

வெண்பூ July 16, 2009 1:30 PM  

1950களில் இருந்து இப்போது வரைக்குமான திரை இசையில் ஒரு எக்ஸ்பிரஸ் பயணம் போன மாதிரி இருந்தது நர்சிம்.. நடுநடுவே சின்ன சின்ன நியூ(ஸ்) பிட்ஸ் கலக்கல்..

HVL July 16, 2009 1:45 PM  

//1950களில் இருந்து இப்போது வரைக்குமான திரை இசையில் ஒரு எக்ஸ்பிரஸ் பயணம் போன மாதிரி இருந்தது நர்சிம்.. //

எனக்கும் அப்படியே!
நல்ல பதிவு!

பி.கு:
என் பதிவில் பின்னூட்டமிட்டதற்கு
நன்றி.

கணேஷ் July 16, 2009 1:59 PM  

அருமை!

கையேடு July 16, 2009 2:32 PM  

அருமையான் இடுகை.
தலைப்பும் அருமை.

புதுகைத் தென்றல் July 16, 2009 3:00 PM  

ரொம்ப ஃப்ரீயா இருந்தீங்களா??? பதிவு வழக்கத்தை விட ரொம்ப பெருசா இருக்கவும் கேட்டேன்.

இசை இது எல்லோரையும் இணைப்பது. அருமையா சொல்லியிருக்கீங்க.

T.V.Radhakrishnan July 16, 2009 3:23 PM  

//தராசு said...
தலைவரே,

உண்மைய சொல்லுங்க, கார்க்கியும் பரிசலும் ஒருதடவை காக்டெய்லையும், அவியலையும் மாற்றி, மாற்றி போட்டுட்டு கலாய்ச்சாங்களெ, அந்த மாதிரி முரளிகண்ணன் பதிவுக்கு பதிலா நீங்க பதிவிடறீங்களா,

அதுக்கு முரளி அண்ணன் உடனே பின்னூட்டம் வேற.//

repeateyyyyyy

பாலா July 16, 2009 3:30 PM  

ஆ...ஆ..ஆ..என இளையராஜாவின் குரல் எடுக்க ஆரம்பித்து,‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது’..என்ற வரிகள் வரும் முன்னே நம் மனது ஒரு நிலைப்பாட்டிற்கு வந்து அந்தப் பாட்டை முழுதும் கேட்டுவிடவேண்டிய நிர்பந்தத்தை நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம்

நூறு சதம் உண்மை

பாலா July 16, 2009 3:30 PM  

(அசத்தல்) பெருக்கல் குறி ( ஆயிரம் )

இப்படி இருக்கு !!!!!!!!!!!!!!!!!!!!

பரிசல்காரன் July 16, 2009 3:31 PM  

நர்சிம்..

பின்னீட்டிங்க போங்க!

எவ்வளவோ நாள் நான் எழுதணும்னு நினைச்சிட்டிருந்த மேட்டர் இது! ஜஸ்ட் லைக் தட் எழுதி கலக்கீட்டீங்க பாஸு!

க்ரேட்!

ghost July 16, 2009 3:35 PM  

romba nalla iruku

ஸ்ரீ.... July 16, 2009 4:14 PM  

நல்ல இசைக்கட்டுரை. (”மானின் இரு கண்கள் கொண்ட “) எஸ்.பி.பி. மனோ இல்லை.

ஸ்ரீ....

D.R.Ashok July 16, 2009 4:15 PM  

same feelings.... :)
nice one narsim
U have always good memory to entering into nostaligia on vast extent.

எம்.எம்.அப்துல்லா July 16, 2009 5:01 PM  

இசைத்துறை பட்டதாரியான இவரின்

//


ஏ.எம்.ராஜா பட்டதாரி. பச்சையப்பன் கல்லூரி மாணவர்.ஆனால் இசைத் துறைப் பட்டம் அல்ல. நானறிந்த வரை இசைத்துறையில் பட்டம் பெற்று பாட வந்தவர் திருமதி.அனுராதா ஸ்ரீராம் மட்டுமே.

எம்.எம்.அப்துல்லா July 16, 2009 5:02 PM  

//தலைவரே,

உண்மைய சொல்லுங்க, கார்க்கியும் பரிசலும் ஒருதடவை காக்டெய்லையும், அவியலையும் மாற்றி, மாற்றி போட்டுட்டு கலாய்ச்சாங்களெ, அந்த மாதிரி முரளிகண்ணன் பதிவுக்கு பதிலா நீங்க பதிவிடறீங்களா,

அதுக்கு முரளி அண்ணன் உடனே பின்னூட்டம் வேற.

//

இது நான் எழுதுன பதிவு மாதிரியே இருக்கேன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன் :))))

எம்.எம்.அப்துல்லா July 16, 2009 5:05 PM  

நர்சிம் அண்ணே, நீங்க ஓன்னாப்பு படிக்கையில வந்த மீன்கொடி தேரில் மன்மதராஜன் பாட்டையோ அல்லது என்னடி மீனாட்சி பாட்டையோ அல்லது மாம்பூவே சிறு மைனாவே பாட்டையோ மனசுல நினைச்சுப்பாருங்க. மூக்கொழுக டவுசரோட நின்னுக்கிட்டு இருப்பீங்க :)

//வாழ்க இசை கலைஞர்கள்.நாம் ஆனந்தமாய் வாழ.

//

எங்களை வாழ்த்திய உங்களை வாழ்த்துகிறேன்.

நாடோடி இலக்கியன் July 16, 2009 5:08 PM  

அருமை நர்சிம்,
எப்படிய்யா எந்த டாப்பிக் எடுத்தாலும் இப்படி ஊடு கட்டி அடிக்கிற.பின்றீங்க போங்க.

" உழவன் " " Uzhavan " July 16, 2009 5:52 PM  

//நம் அழுக்கேறிய சுவாசத்தை சுத்தப்படுத்த இசையால் மட்டுமே முடியும்//
 
உண்மை.

சரவணகுமரன் July 16, 2009 7:21 PM  

அருமை!
அசத்தல்!
கலக்கல்!
க்ரேட்!

உயிரோடை July 16, 2009 8:57 PM  

அருமையாக எழுதி இருக்கின்றீர்கள். வாழ்த்துகள் நர்சிம்.

//திடீரென உயரமான இடத்தில் இருந்து செங்குத்தாக விழுவது போன்ற கனவுகள் வருவதன் காரணம் முன்னோர்கள் மரங்களில் தூங்கியதன் தாக்கம் என்பது போன்ற கருத்துகள்//

ம்ம்ம்ம் :)

//எல்லா கருவிகளையும் கொண்டு அடிக்கப்பட்ட பாடல்கள் தான் இன்றும் ‘எங்கேயும் எப்போதும்’ என்று நிறைந்து இருக்கும் இன்னமும் ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல்கள்.//

அருமை

//“காத்திருக்கும் வரை நம் பெயர் காற்று என்றே இருக்கட்டும்...புறப்பட்டு விட்டால் புயல் என்று புரிய வைப்போம்”- மு.மேத்தா.//

இடையில் கவிதை வரிகள் வேறு. ம்ம்ம்ம்

நல்ல பதிவு நர்சிம்

ஜோ/Joe July 17, 2009 10:38 AM  

அட்டகாசமான பதிவு.

புருனோ Bruno July 17, 2009 5:29 PM  

//இப்பொழுதும் அந்தப் பாடலைக் கேளுங்கள் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் அர்த்தம் எல்லாம் பெரிதாக இருக்காது//

இல்ல தல

காதலை மிக அருமையாக வெளிப்படுத்தும் வரிகள் உள்ளன

திறந்து பார்க்க நேரம் இல்லை

சந்தங்கள் நீயானால், சங்கீதம் நானாவேன்

கொடுத்த சந்தங்களில் என் மனதை நீ அறிய நான் உரைத்தேன்

புருனோ Bruno July 17, 2009 5:30 PM  

//வனிதா மணி வனமோகினி என விக்ரம் பட பாடலாகட்டும் கமலின் குரலோடு நூறுசதவீதம் ஒத்துப் போகும்..//

வளையோசை (சத்யா படம்) பாடலை யார் பாடியது என்று இன்று வரை பலரும் விவாதிக்கிறார்களே

நர்சிம் July 17, 2009 5:32 PM  

@புருனோ..

தலைவரே..வார்த்தைகளில் அர்த்தம் நிறைய இருக்கும்.ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் அதாவது கோர்வை எல்லாம் இருக்காது என்று சொன்னேன்.

சிப்பியில் இருந்து சந்தங்கள்,கவிதை பாடும் அழகில் ஆடும் கண்கள் என ஆங்காங்கே பறக்கும் என்றாலும் கலக்கலாக இருக்கும்

புருனோ Bruno July 17, 2009 5:32 PM  

//படிக்கும்போதே நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் எல்லாம் எங்கள் காதுகளில் வந்து மோதுகின்றன. நல்ல நினைவலைகள்.//

//1950களில் இருந்து இப்போது வரைக்குமான திரை இசையில் ஒரு எக்ஸ்பிரஸ் பயணம் போன மாதிரி இருந்தது நர்சிம்.. நடுநடுவே சின்ன சின்ன நியூ(ஸ்) பிட்ஸ் கலக்கல்..//

வழிமொழிகிறேன்

புருனோ Bruno July 17, 2009 5:35 PM  

நெஞ்சில் நின்று நெருங்கி வந்து

மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ

!!

ஆதிமூலகிருஷ்ணன் July 18, 2009 10:57 PM  

மொத்த பதிவுக்கும் ஒரு பெரிய.. ரிப்பீட்ட்ட்ட்ட்டு.!