“என்ன ரமேசு, தலைக்குப் பின்னால ஒளிவட்டம் தெரியுதே...”
“ஏண்டா நக்கலா.. நானே எக்ஸாம் வந்துருச்சேன்னு பம்மிக்கிட்டு இருக்கேன்”
“உனக்கு என்னடா பயம்.. இந்த தடவ நீ நிச்சயம் ஐ.ஏ.எஸ் தாண்டா..”
“இல்ல பங்காளி.. ஜி.கே கரைச்சு குடிச்சாலும் பயமாத்தான் இருக்கு”
“என்னடா இப்பிடி சொல்ற..நீ தான் எல்லா கேள்விக்கும் டாண் டாண்னு பதில் சொல்றியேடா..அங்கோர் வாட்டுன்ற(உயரமான கோபுரம்), டெல்லின்ற(தலைநகர்) பெங்கால் கெஸட்னு(முதல் செய்தித் தாள்) எல்லா கேள்விக்கு பதில் சொல்ற அறிவு ஜீவிடா நீ”
“ஆமா..படிச்சுட்டே தான் இருக்கேன். அறிவாளின்னு நீ சொல்றத கேட்கும் போதே சந்தோஷமா இருக்கு பங்காளி”
“அதெல்லாம் சரி.. உன் லவ்வருக்கும் உனக்கும் என்னா பிரச்சனை?”
“ஒரு SMS பண்ணா, புரியல, அதான் பதில் அனுப்பல.”
“ச...ரி..”
“அப்புறம் நேர்ல பார்க்கும் போதும்.. என் கண்ண பார்த்தா என்ன தெரியுது..ன்னு என்ன என்னமோ கேட்டா..”
“பார்ரா.. பொண்ணு ஆர்வமாத்தான் இருக்கு.. ம்.. நீ என்ன சொன்ன?”
“மெட்றாஸ் ஐ யா இருக்குமோன்னு கேட்டேன்..கோவிச்சிட்டு போய்ட்டா”
“வெறுமா கோவிச்சுட்டுத்தான் போனாலா, இல்ல த்தூன்னு துப்புனாளா?”
“என்ன பங்காளி நீயே இப்பிடி சொல்ற?”
“அப்புறம் என்னடா.. IASக்கு ரெடியாகுறது எல்லாம் இருக்கட்டும்.கொஞ்சமாவது ரொமான்ஸ் பக்கம் தெரிஞ்சிருக்கலேன்னா என்னாதான் நீ அறிவாளில்லானும் முட்டாப்பய கூட்டத்துல தாண்டா சேர்த்தி..”
“என்னடா சொல்ற?”
“IASக்கு,இலக்கியம், குறுந்தொகை எல்லாம் படிக்க மாட்டியா? மேல சொன்னத நான் சொல்லப்பா.. நக்கீரரே சொல்லி இருக்காரு..அதே நெற்றிக்கண் பார்ட்டி தான்.. ஒழுங்கா அதையும் படி.. அதாவது பாட்டையும், அப்பிடியே ரொமான்ஸையும்”
விளக்கம்:
தூய வெண்மையான அருவி மலையில் விழுவது, முரசறைவது போல காட்சிதரும் வளம்மிக்க நாட்டின் தலைவனே... கொஞ்சம் காமமும்(காதலும்) தெரிந்து வைத்திருக்காகதவரையும் அறிவில்லாதவர்கள் என்றே சொல்வார்கள்.அதைப் பற்றி(காமம்/காதல்) தெரியாததும் பேதமையே.
பாடலின் சிறப்பு:
அருவி விழுவதை முரசிற்கு ஒப்பிட்ட வரிகள். யோசித்துப் பாருங்கள். இந்த சிந்தனை நமக்கு அவ்வளவு எளிதாக வந்திருக்குமா இதுவரை எத்தனையோ முறை அருவியையும் மலையையும் பார்த்திருக்கிறோம்.ஆனால் முரசு போல எனும் போது காட்சி விரிகிறது.
பாடல்:
பெருவரை மிசையாது நெடுவெள் ளருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச்
சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப
நோதக் கன்றே காமம் யாவதும்
நன்றென உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே
பாங்கன் கூற்றாக குறிஞ்சித்திணையில் நக்கீரர் எழுதிய பாடல்.
..
”கொஞ்சமாவது காதல் தெரிய வேண்டும்”-’நக்கீரர்’
Posted by
நர்சிம்
Saturday, July 11, 2009
Labels: குறுந்தொகை
39 comments:
ஏம்ப்பா..இந்தப் பதிவுக்குமா நெகட்டிவ் ஓட்டு???? ரைட்டு.நடத்துங்கப்பா..
சூப்பரான விளக்கம். நண்பர்கள் உரையாடல் கலக்கல்.
நான் +ve வாக்கு போட்டுட்டேன். முதல்முறையா வோட்டு போடறேன். ஏதோ பாத்து போட்டு கொடுங்க.
இந்த ஓட்டு மேட்டர் நமக்கு தெரியாதே தல.
சரி சரி, நக்கீரர் நல்லா கீரார்.
/ஏம்ப்பா..இந்தப் பதிவுக்குமா நெகட்டிவ் ஓட்டு???? ரைட்டு.நடத்துங்கப்பா..
July 11, 2009 1:44 PM//
என்னய்யா??சண்டையை சீக்கிரம் முடிச்சிட்டிங்கன்னு கோவத்துல எவனோ குத்திட்டான் போல தலைவா...
மத்தபடி கதை...நா நல்லாயிருக்குன்னு தனியா சொல்லனுமா என்ன?
(சிரிப்பு திரும்பிடுச்சா?)
நான் இதுவரை ஓட்டு மேட்டரைப் பற்றி கவலையே பட்டதில்லை.நான் யாருக்கும் ஓட்டும் போட்டதில்லை. ஆனால் கடந்த இரண்டு தினங்களாக நான் ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்தாலே, பதிவு இடுவதற்கு முன்னரே -ve ஓட்டை என் மண்டையில் போடுவது போல ஒரு உணர்வு..அதனால்தான். ஓட்டு மேட்டர விட்டுருங்கப்பா சாமீகளா...
நன்றி தண்டோரா.. நீங்கள் அன்று இட்ட பின்னூட்டமும்,நான் உங்களை அழைத்த நொடியுமே சிரிப்பு மறுபடியும் வந்துருச்சு..நன்றி நண்பா.
நேத்து என் பக்கம் வந்திருக்க மாட்டீங்க..
இன்னைக்கு வரலாமே?
(இன்னைக்குத்தான் முதல் முறையா ஓட்டு போட்டேன்..)
உங்க பக்கம் வந்தா திண்டிவனம் பக்கம் கூட்டிப் போய்ட்டீங்களே தண்டோரா..கலக்கல்.
நன்றி மணிகண்டன்..ஏதாவது பாத்து போட்டா? உங்களத்தான் தேடிகிட்டு இருக்கேன்.. பார்க்குற அன்னிக்கு இருக்கு... பார்ட்டிதான் தலைவா..
வாங்க தராசு..நன்றி
//கொஞ்சமாவது ரொமான்ஸ் பக்கம் தெரிஞ்சிருக்கலேன்னா என்னாதான் நீ அறிவாளில்லானும் முட்டாப்பய கூட்டத்துல தாண்டா சேர்த்தி..”
//
சரிதேன்....
nice to see u again in ur form
regards
anita
இலக்கிய மேட்டர கூட IAS, GK கூட லிங்க் பண்ணி... கலக்கல் தல...
பிரபாகர்
இந்த மாதிரி ஒரு பதிவை பாத்து impress ஆகித்தான் உங்க வலைப்பக்கத்துக்கு வர ஆரம்பிச்சேன். மறுபடியும் அதே மாதிரி பதிவு படிக்க ரொம்ப சந்தோசமா இருக்கு...
//ஏம்ப்பா..இந்தப் பதிவுக்குமா நெகட்டிவ் ஓட்டு???? ரைட்டு.நடத்துங்கப்பா..//
இதென்னங்க சின்னப்புள்ளதனமா இருக்கு. விடுங்க-ஜி பிரச்சனையும் காழ்ப்புணர்ச்சியும் சுமக்கறவங்களுக்குத்தான் வலி. நீங்க எழுத்துல கலக்குங்க..
நான் முதமுறையா ஓட்டு போடறேன்..
(+ ஓட்டுத்தாங்க) :)
.கொஞ்சமாவது ரொமான்ஸ் பக்கம் தெரிஞ்சிருக்கலேன்னா என்னாதான் நீ அறிவாளில்லானும் முட்டாப்பய கூட்டத்துல தாண்டா சேர்த்தி..”\\
நக்கீரர்! தீர்ப்பு அருமை ...
ஏனுங்க , ஓட்டுன்ன என்ன ? நெஜமாவே எனக்கு தெரியாது... அதனால் நோ ஓட்டு. பதிவு ரொம்ப நல்ல இருக்கு. தொடர்ந்து இதுபோல எழுதுங்கள்.
சமகால நிகழ்வுகள். ஆனால் இந்த நேரத்தில் இது தேவையில்லை. ஹும்...புரியவா போகுது ? நான் நெகட்டிவ் ஓட்டு போடப்போறேன்...
அதானே! I.A.S படிச்சா என்ன I.P.S. படிச்சா என்ன கொஞ்சமாவது ரொமான்ஸ் தெரிஞ்சிக்கலைன்னா என்ன அவன் மனுஷன்... தூள் தல...
நர்சிம்னா நர்சிம்தான்...அருமை
+1 !!!!!!
;))
அருமையான பதிவு.. நக்கீரரின் பாடலை IASக்குள் புகுத்திய விதம் அழகு.
நல்லாயிருக்கு நர்சிம்.
//“ஒரு SMS பண்ணா, புரியல, அதான் பதில் அனுப்பல.”//
குறுந்தொகையோட இணைச்சு எழுதினாலும்,
குறுஞ்செய்தின்னாலே குடைச்சல்தான் போல.
சும்மா,நகைச்சுவைக்கு.
நல்லா எழுதியிருக்கீங்க.
//தூய வெண்மையான அருவி மலையில் விழுவது, முரசறைவது போல//
அருமையான உவமை.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
நர்சிம்,
கார்போரேட் கபிலரே வாழ்த்துகள்.
//அருவி விழுவதை முரசிற்கு ஒப்பிட்ட வரிகள்.//
அது தான் அதே தான்.
நல்ல பாடல், நல்ல பதிவு.
//“மெட்றாஸ் ஐ யா இருக்குமோன்னு கேட்டேன்.. கோவிச்சிட்டு போய்ட்டா”//
சிரித்தேன். :)
கலக்கல் !
இதுதான் உங்கள் பாதை சகா, இதையே தொடருங்கள்.
உங்களுக்கு என் முதல் ஓட்டும் இரண்டாவது பின்னூட்டமும் இது.
ஃபார்முக்கு வாங்க !!!!
@செந்தழல் ரவி.. இதை எழுதி 4 நாட்கள் ஆகிவிட்டது.draftல் இருந்தது.
தயவுசெய்து நேற்றைய நிகழ்வுகளை யாருமே குறிப்பிடாதீர்கள் இனி.என் எந்த எழுத்திலும் அதைப் பற்றி குறிப்பாக எழுதும் ஆள் நான் இல்லை ரவி.
என்றாலும் சுட்டியமைக்கு நன்றி.கவனமாயிருப்பேன் இனி.
//“ச...ரி..”//
ரசித்தேன் நர்சிம்.
நல்லா எழுதியிருக்கீங்க...
நல்லாயிருக்கு நண்பா..
இதுவே தொடரட்டும்..
:) :)
//குறுந்தொகையோட இணைச்சு எழுதினாலும், குறுஞ்செய்தின்னாலே குடைச்சல்தான் போல.//
ஹி ஹி ஹி :) :) :)
குசும்பு சார் உங்களுக்கு
சூப்பர் (வழக்கம் போலவே)
நெற்றிக் கண்ணை காட்டினாலும் குற்றம் குற்றமேன்னு அவரோட பஞ்ச் டயலாக் தான் எனக்கெல்லாம் தெரியும்....பார்டி இப்பிடி ரொமான்ஸுலயும் பூந்து வெளாடிருக்காரா??
கலக்கல் தலைவரே.
\\“பார்ரா.. பொண்ணு ஆர்வமாத்தான் இருக்கு.. ம்.. நீ என்ன சொன்ன?”
“மெட்றாஸ் ஐ யா இருக்குமோன்னு கேட்டேன்..கோவிச்சிட்டு போய்ட்டா\\
:-)))
கஞலல்
நல்லாயிருக்கு நர்சிம்.
நல்லாயிருக்கு நர்சிம்.
கலக்கல் கதைங்க.. பாட்டு விளக்கமும் சூப்பர்.. !!
நல்லாயிருக்கு :)
அண்ணே.... இதுக்கு ஒரு உட்டாலக்கடி போடட்டுமா....?
//நையாண்டி நைனா said...
அண்ணே.... இதுக்கு ஒரு உட்டாலக்கடி போடட்டுமா....?
//
இன்னுமா போடல? கேட்கணுமா தலைவா இதெல்லாம்?
வழக்.. கலக்..
காமெடினாலும் கருத்து இருக்குல்ல.. வடிவேலு காமெடிய நெனச்சி சிரிப்பு வந்தது :-)
Post a Comment