ஞானசேகரன் M.L.A.வேலூர்,துடிப்பான பல போராட்டங்களை முன்னின்று நடத்தும் மக்கள் தொண்டர்.இவர் சென்ற வாரம் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.அதாவது MLAக்களுக்கு “சென்னையில் இரண்டைரை கிரண்டில் இடம் ஒதுக்கித் தரவேண்டும் அரசு..வீடு கட்டிக் கொள்ள”.. அதற்கு முதல்வரும் கரகரத்த குரலில் “பரிசீலனை செய்யப்படும்..என்ன விலை என்றெல்லாம் நிறைய பரிசீலிக்கபடும்”என்றும் சொல்லி இருக்கிறார்.
இதில் என்ன பரிசீலனை? முடியாது என்பதை அங்கேயே சொல்லி இருக்கவேண்டும்.சொல்லுவார் என்று நம்புவோம்.
என்ன அடிப்படையில் இந்த கோரிக்கையை ஞானசேகரன் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. சொந்தமாக சென்னையில் இரண்டரை கிரவுண்டு சகாய விலையில் வாங்கிப் போடுவது மட்டுமே நோக்கமாகத் தெரிகிறது.சகாய என்பதை அடிமாட்டு,ஓசி போன்ற பிற சொற்களாகவும் படித்துக் கொள்க.
எம் எல் ஏ சீட் வாங்க நேர்காணலின் போது என்ன கேள்விகள் கேட்கிறார்கள் கட்சியில் இருந்து என்பது எல் கே ஜி குழந்தைகளுக்கும் தெரியும். “எவ்வளவுய்யா செலவு செய்வ,எவ்வளவுய்யா தருவ” இந்த வார்த்தைகளை நாகரீகமாக மாற்றி மாற்றி போட்டு கேட்கப்படுவதென்பது அனைவரும் அறிந்த ஒன்று.அப்படி இருக்க இரண்டரை கிரண்டு X 234 என்பதெல்லாம் ஓவராகத் தெரியவில்லையா? அதுவும் சென்னையில் எதற்கு? தங்கள் தொகுதியில் கேட்பதே தவறு என்றாலும் லாஜிக் இருக்கிறது.சென்னையில் மிக அற்புதமான MLA ஹாஸ்டல் இருக்கும் பட்சத்தில்..அதுவும் இடமாக.. ஏனெனில் வீடு அவரவர் வசதிக்கேற்ப அமர்க்களமாக கட்டிக் கொள்ளலாம்.
ஸாரி மிஸ்டர் ஞானசேகரன்..இதை எதிர்த்து அந்த கூட்டதிலேயே தன் கருத்தை தெரிவித்தவர். கம்யூனிஸ்ட் எம் எல் ஏ பாலபாரதி அவர்கள்.நன்றி மேடம்.
*************
இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்து விட்டார் தலைவி.காரணமாக ஜனநாயகம் பணநாயகம் என்பதாகிவிட்டது என்று கூறி இருக்கிறார்.பணம் இல்லாத கட்சி ஏது? பதிலுக்கு அதே பணம் கொண்டு தாக்கவேண்டியது தானே என்ற விதண்டவாதம் தேவையற்றது என்ற பொழுதிலும் தேர்தலை புறக்கணிப்பது விளையாட்டை எளிதாக்கும்,என்றாலும் தேர்தலில் நிற்பதை புறக்கணிக்கிறது அ.தி.மு.க என்பதோடு நின்று விட்டால் சரி..தேர்தலையே புறக்கணிக்கிறோம் போன்ற ஸ்டேட்மெண்ட்டுகள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்பது பு.த.மேடத்திற்கு தெரியாததல்ல...
****************
சக பதிவர் ஜோ(joeவின் இந்தப் பதிவு ...
ஆம். படிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் ஆசை. வாய்ப்புகளை தவற விடுவது அவரவர் விருப்பம்.ஆனால் வாய்ப்பே இல்லாதவர்களின் நிலைகளைப் பார்த்து வருந்துவதை விடுத்து, அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்த நமக்கு கிடைத்த வாய்ப்பே ஜோவின் இந்தப் பதிவு.
நல்ல,பழைய புத்தகங்கள் இல்லாதவர்கள் பதிவெழுத முடியாது.வாசிப்பின் அடுத்த கட்டமே எழுத்து என்பதை அதிகம் நம்புபவன் நான்.உண்மை என்பதால்.வாசிக்காதவர்களின் எழுத்து ஒரு கட்டத்தில் சுற்ற ஆரம்பித்து விடும்.வாசிப்பும் மீள் வாசிப்பும் எழுதுபவர்களுக்கு சுவாசிப்பு.எத்தனையோ புத்தகங்கள்உங்கள் கண்பார்வைக்கு மட்டுமே என்று இருக்கும் நிலையில் இருந்தால் அந்தப் பதிவை படித்து,தொடர்பு கொண்டு முடிந்த அளவு புத்தகங்களை கொடுங்கள். ஒரு நூலகம் அமைப்பது கோயில் கட்டுவதை விட அவசியமான ஒன்று.சிலருக்கு நூலகங்கள் பொழுது போக்கு.பலருக்கு வாழ்வின் இருளை அகற்றும் இடம்.உதவுங்கள்.
****************
பிறந்த நாள் வாழ்த்தை பதிவு செய்த நண்பர் பரிசலுக்கும்,கேவிஆர் பக்கங்கள் ராஜாவிற்கும்,கேபிள் சங்கருக்கும்,பதிவுகளிலும்,தொலைபேசியிலும்,தொலை நாட்டுப் பேசியிலும் அன்பைத் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்.மிக நெகிழ்வாய் உணரவைத்தமைக்கு நன்றிகள்.
************
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று பலரும் பின்னூட்டங்களிலும் பதிவுகளிலும் எழுதுவதை பார்க்கிறோம். இந்த வார்த்தையை நடிகர் வடிவேலு ஆரம்பித்ததாக தெரிந்தாலும்...தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ரேஞ்சில் தோண்டிப்பார்த்தால்...
அவ்வெனும் எழுத்தினால் அகண்டுயேழு மானதும்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றதும்
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வுமுவ்வு மவ்வுமாய் அமர்ந்ததோ சிவாயமே
என்று சித்தர் பாட்டில் உள்ளது.விளக்கம் சொல்லாமலே விளங்குகிறது...சம்போ..சிவ சம்போ...
********
ஆம்.இதுவும் அவியல்,கொத்துப்பரோட்டா வகையே.என் எண்ணங்கள்..
..
என்’ணங்கள்...
Posted by
நர்சிம்
Monday, July 27, 2009
Labels: என்’ணங்கள்
30 comments:
'என்'ணங்கள், நல் வரவாகுக :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
ஞானசேகரன் - பேராசையின் உச்சம்
அம்மா - நோ கமெண்ட்ஸ்
ஜோவின் நூலக முயற்சி அறிமுகம் - மிக்க மகிழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி
பிறந்தநாளா உங்களுக்கு? - belated birthday wishes.
அவ்வ் ---- ஆவ்வ்!!!!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் - ஆஹா
தலைப்பை ரசித்தேன்..அது போலவே இடுகையையும்...:-))))
ஞானசேகரன் -
நாலு தடவை ஜெயிச்சார்
இல்லையா...!
அதனால் , அந்த (_____)
எதாவது செய்யனுமே ....
ஜெயலலிதா - அதிமுக மீண்டும் தோற்றால் , மக்களிடம் அதன் மதிப்பு குறையும்(?) என அவர் எண்ணி , பொது தேர்தலில்
நேரடியாக (!?) மோதி பார்க்கலாம் என்று எண்ணுகிறார்
இந்த அரசியல் நம்மை முன்னேற்றாது என்று மற்றும் தெரிகிறது...
//'என்'ணங்கள், நல் வரவாகுக :-)//
repeateyyy
உன் ‘ணங்கள்... சூப்பர்.
எண்ணங்கள் தொடரட்டும்
அவ் புரியல சார்
தலைப்பு அருமை... உள்ளே உள்ள விஷயங்களும் சுவாரசியம் :)
உங்களுடைய எண்ணங்களை தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூறியுள்ளீர்கள் !!
//அவ்வெனும் எழுத்தினால்...// மட்டும் புரியவில்லை :-)
தொடர்ந்து உங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் !!
நன்றி & வாழ்த்துக்கள் !!
எண்ணங்கள் நன்றானால் எல்லாமும் நன்றாகும்.
நல்லா வந்திருக்கு நர்சிம். வாழ்த்துகள்.
அனுஜன்யா
நீங்களும் ஆரம்பிச்சாச்சா?:)
//.விளக்கம் சொல்லாமலே விளங்குகிறது.// அது உங்களுக்கு, எங்களுக்கு ஒரு கதையோடு விளக்கம் சொல்லனும் அப்பதான் புரியும்!
உங்கள் நல் என்'ணங்களுக்கு வாழ்த்துகள்
'என்'ணங்கள், நல்வரவாகுக
அந்த காங்கிரசுகாரர்தானே இவர்???
அவரு இப்படி கேக்காட்டிதான் அதிசியம்... அதுக்காக கலைஞர் அதை மறுத்துருக்கனும்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்...
இந்தியாவிலேயே பங்களாவாக இல்லாமல் சாதாரண வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் இவர்தான்னு போன வாரம் அறிக்கை படிச்சீங்களா இல்லியா??? வீடில்லாததன் கஷ்டம் அவருக்குதாங்க நல்லா தெரியும், அதுனாலதான் பெருந்தன்மையா இப்படிச் சொல்லியிருக்காரு, இதை உங்களால புரிஞ்சுக்க முடியலியா??? வாட் நர்சிம்!!!
ஹலோ... இது நம்'ணங்கள் !! கலக்கல்....
கம்யூனிஸ்ட் எம் எல் ஏ பாலபாரதி அவர்கள்.நன்றி மேடம்
/\*/\
பேரு பார்த்தாலே புரியுது
நிறைய்ய எண்ணுங்கள் எண்ணிக்கை இல்லாமல்!.......
இந்த வீட்டு மனை மேட்டர் அநியாய கொள்ளை.. அவர்கள் என்ன நிரந்தர எம்.எல்.ஏ வாக இருந்துவிட போகிறார்களா..? இல்ல குவார்ட்டர்ஸ் போல ஆட்சிகாலம் வரை இருக்க போகிறார்களா..? இருக்கிற கொளளையில இது மகா கொள்ளைக்கான அடிநாதம்
தேர்தல் புறக்கணிப்பு வெறும் நாடகம்....
என்’ணங்கள் அருமை...
"என்'ணங்கள்"
you too Thala......
அருமை.
நன்றி நர்சிம்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஏன் யாருமே புத்தக நிலையம் பற்றி பேசவில்லை???
ஜி என்'ண்ணங்கள் சூடு பறக்குது, தொடருங்க, எல்லா விசயங்களயும் தொடுங்க....
//என்று சித்தர் பாட்டில் உள்ளது.விளக்கம் சொல்லாமலே விளங்குகிறது...சம்போ..சிவ சம்போ...//
அவ்வ்வ்வ்வ்வ்வ் :)
Nice one narsim.
Belated Wishes தோழர்...
என்’ணங்கள் நல்லா இருக்கு நர்சிம். தொடருங்க.
//.தேர்தலையே புறக்கணிக்கிறோம் போன்ற ஸ்டேட்மெண்ட்டுகள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்பது பு.த.மேடத்திற்கு தெரியாததல்ல...//
புறக்கணிப்பது மட்டுமல்ல, ஓட்டுப் போடாதீர்கள் என்று மக்களைக் கேட்டுக்கொள்வோம்ன்னு கட்சிக்காரங்க அறிக்கை விடுறாங்க. வாழ்க ஜனநாயகம்.
//ஒரு நூலகம் அமைப்பது கோயில் கட்டுவதை விட அவசியமான ஒன்று.சிலருக்கு நூலகங்கள் பொழுது போக்கு.பலருக்கு வாழ்வின் இருளை அகற்றும் இடம்.உதவுங்கள்//
Good initiative
சிறப்பான துவக்கம். நல்லதொரு தலைப்பு (நமக்குதான் ஒண்ணுமே சிக்கமாடேங்குது.. ஹிஹி)
//'என்'ணங்கள், நல் வரவாகுக :-)//
வழிமொழிகிறேன்
//சென்னையில் மிக அற்புதமான MLA ஹாஸ்டல் இருக்கும் பட்சத்தில்//
ஹிஹி.. பார்த்திருக்கிங்களா நர்சிம்? அப்டியே முடிஞ்சா கர்நாடகா சமவு ஹாஸ்டலைப் பார்க்கவும். :))
ஆனாலும் ஞானசேகரன் கோரிக்கை மிகப் பெரும் தவறு.
Post a Comment