காதல்..இதில்தான் எத்தனை வகைகள்? ஒருதலைக் காதல்,சொல்லாக் காதல்,செல்லாக் காதல்,காதல் மட்டுமேயான காதல்,காமம் மட்டுமேயான காதல்,காதலும் காமமும் கலந்த காதல் என நீண்டு கொண்டே போகும் பட்டியல்.
காதலிலும் எத்தனை வகை உணர்ச்சிகள்? மகிழ்ச்சி,துள்ளல்,எள்ளல்,சோகம்,பொஸஸிவ்,கண்டிப்பு,கட்டுப்பாடு,சத்தியம்,கேலி,சீண்டல்,ஊடல்,அழுகை,நிம்மதி,தோள் சாயல்,இதுவும் நீண்டு கொண்டே போகும் அவரவரைப் பொறுத்து..அல்லது அவள் அவரைப் பொறுத்து.
இதை எத்தனை விதமாக சொல்லமுடியுமோ அத்தனை விதமாகவும் ஊடகங்களும் ஏடகங்களும் சொல்லியாகிவிட்டது.என்றாலும் பச்சைப் பசேல் ஃபீலிங் இன்றும் காதல் என்ற வார்த்தைக்கு மட்டுமே.
காரணம் ? அந்த துள்ளிக்குதிக்கும் மனநிலையை அப்படியே வைத்திருக்க உதவுகிறது என்பதனால்தானோ?
எத்தனையோ படங்களில் ஹீரோக்கள், கதாநாயகியிடம் செல்லக் கொஞ்சல்கள்,நாயகியின் பெற்றோர் பார்க்காத பொழுது நாயகியிடம் கண்களால் பரிவர்த்தனை,அருகில் இருந்தால் இடுப்பில் செல்லக் கிள்ளல்.. என எத்தனை முறை எத்தனை ஃப்ரேம்களில் வந்தாலும் அலுக்காமல் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம்..“ச்சே என்ன படம்” என்று கூறிக்கொள்பவர்களும் மனதளவில் ரசிப்பது துள்ளலான காதல் காட்சிகளை என்பதை ஒப்புக்கொள்வார்கள்.
அதுவும் கபடமில்லா காதலர்களின் விளையாட்டுகள் என்றுமே பசுமை.
இல்லை இல்லை அந்தக் காலத்துல எல்லாம் இந்த மாதிரி எல்லாம் கிடையாது என்று சொன்னால் அது பொய்தான்..ஏனெனில் நம்மைவிட அற்புதமாய் துள்ளலாய் ஆனால் இன்னும் கொஞ்சம் அழகியலோடு..பல மேட்டர்களை எழுதி வைத்து விட்டுத்தான் போயிருக்கிறார்கள்.அதில் கபிலர் கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல் பார்ட்டி.
இதோ இந்தச் சூழலைப் பாருங்கள்...
விளக்கம்
மிகுந்த நாணம் கலந்த சொற்களில்,தன் காதலன் செய்த காதல்விளையாட்டை,அன்போடும் பெருமிதத்தோடும் சொல்கிறாள் காதலி..
“சிறுவயதில் மணற்பரப்பில் பந்தை வைத்து விளையாடி இருக்கிறேன் அவனோடு,என்ன செய்தான் தெரியுமா ஒரு நாள்?, நானும் என் தாயும் வீட்டிற்குள் இருந்தோம், “வீட்டில் யாரும் இல்லியா?கொஞ்சம் குடிக்க தண்ணீர் வேண்டும்”என்று சத்தம் கொடுத்தான்.உடனே என் தாயும்,தங்கக் குவளையில் தண்ணீரை எடுத்துக் கொடுத்து,“மகளே நீரைக் கொடுத்துவிட்டு வா”என்று அனுப்பினாள்.நானும் யார் எவர் என்று தெரியாமல் தண்ணீர் எடுத்துக்கொண்டு போய்ப் பார்த்தாள்..இவன் நிற்கிறான்.நான் கொடுத்த தண்ணீரை வாங்கிக்கொண்டே என் கையை வளையல்களோடு சேர்த்து அழுத்தினான். “அம்மா இங்கேபார்” என்று கத்தி விட்டேனா..அதைக் கேட்ட தாய் பயந்து அலறி என்னவென்று கேட்டுக்கொண்டே வாசலுக்கு வந்தாளா..நான் சுதாரித்து,தண்ணீர் குடித்ததும் விக்கினான் என்று சொல்லிச் சமாளித்தேன்.உடனே என் தாய் அவன் முதுகை அன்போடு நீவி விட்டு ஒன்றுமில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது, என் அன்னை பார்க்கத அந்தத் தருணத்தில் அவன் என்னைப் பார்த்து கடைக்கண்ணால் சிரிக்கிறான்,திருட்டுப்பயல்..”
எவ்வளவு அருமையான நிகழ்வு? அந்தக் காதலிக்குத்தான் எவ்வளவு ஆனந்தம்..காதல்.
ஹும்..
அந்தப் பாடல்...பாடலின் நீளம் பார்த்து வாசிக்காமல் விட்டு விடாதீர்கள்..மிக அருமையான சொற்களைக் கொண்ட அற்புதமான பாடல்...
“சுடர்த் தொடீஇ, கேளாய்-தெருவில் நாம் ஆடும்
மணற்சிற்றில் காலிற் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து,வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யும் சிறுபட்டி,மேலோர் நாள்,
அன்னையும் யானும் இருந்தோமா, “இல்லீரே
உண்ணுநீர் வேட்டேன்” என வந்தாற்கு,அன்னை
‘அடர்பொன் சிரகத்தால் வாங்கிச் சுடர் இழாய்,
உண்ணுநீர் ஊட்டிவா’என்றாள்;என,யானும்
தன்னை அறியாது சென்றேன்,மாற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,
‘அன்னாய்,இவன் ஒருவன் செய்தது காண்’ என்றேனா,
அன்னை அலறிப் படர்தரத், தன்னை யான்
‘உண்ணுநீர் விக்கினான்’என்றேனா,அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ, மாற்று என்னைக் கடைக்காணல்
கொல்வான்போல் நோக்கி,நகைக்கூட்டம்
செய்தான்,அக் கள்வன் மகன்”
கபிலர்..“கபிலவ்வர்’..
..
கபிலர்...காதலில் ஒரு ஸ்வீட் கபி‘லவ்வ’ர்..
Posted by
நர்சிம்
Friday, July 31, 2009
Labels: சங்க இலக்கியம்
36 comments:
இது உங்கள் களம். வழக்கம் போல் அடித்து ஆடியிருக்கிறீர்கள். இந்த முறை தலைப்பும் சிக்ஸர் அடித்திருக்கிறது.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
சூப்பர்
தலைப்பும் சூப்பர்
பதிவை விட தலைப்பு ரொம்ப உங்க்க டச்சிங்!!!!!!!
யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.
இந்தக் குறுந்தொகை பாடலுக்கும் உங்கள் interpretation சொல்லுங்க பாக்கலாம்.
--வித்யா
நன்றி பைத்தியக்காரண்ணா..
நன்றி மருத்துவரே.
நன்றி அபி அப்பா..
நன்றி விதூஷ்..அந்தப் பாட்டப் பத்தி ரொம்பநாளைக்கு முன்னாலயே எழுதி பெரிய பஞ்சாயத்து எல்லாம் ஆச்சு.. குறுந்தொகைன்னு லேபிள்ல இருக்கும் பாருங்க..நன்றி
//narsim said...
// Naresh Kumar said...
நர்சிம்,
இங்கு திருட்டுப் பயல் என்பது அவனை அன்பாக கூப்பிடுவதா இல்லை உண்மையாகக் கூப்பிடுவதா
//
அன்பாகத்தான் கூப்பிடுவதாகப்படுகிறது நரேஷ். ஏனெனில் மிக அருமையான ஒரு பாடல் உள்ளது.. அதிலும் தலைவனை செல்லமாக கள்வன்,முரடன் என்று கூறுவதாக இருக்கிறது.. தாய் தலைவியிடம் தண்ணீர் கொண்டுவரச்சொல்லி தலைவனிடம் கொடுக்கச் சொல்லுவாள்.. தாய் பார்க்காத நேரம் தலைவன் அவள் கைகளைப்பற்றுவது போன்ற சேட்டைகளை சொல்லும் விதமாக இருக்கும் அந்தப்பாடல்..
ஆக, கள்வன் என்று குறிப்பிடுவது அன்பாகத்தான் (என்று நினைக்கிறேன்..)
//
நரேஷ் குமார்..பலபதிவுகளுக்கு முன்னர் உங்களுக்கு நான் குறிப்பிட்ட பாடல் தான் இன்றைய பதிவு.
விளக்கம் படித்துவிட்டு பாடலை படிப்பதுதான் சுகம்!
இல்லைனா சொன்ன மாதிரியே ஸ்கிப் பண்ணிருப்போம்.
சூப்பர்.
நல்லாயிருக்கு பாஸ் :))))))
எல்லா கமெண்ட்டுக்கும் பெரிய்ய்ய ரிப்பீட்டேய்...
வழக்கம் போல ....
திரும்பவும் காதிலிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் :)
//திரும்பவும் காதிலிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் :)//
உங்களால் முடியும் சுந்தர். கமான், உடனே களத்துல இறங்குங்க :-) தூது போகணும்னா, என்னை கூப்பிடுங்க.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
//பைத்தியக்காரன் said...
//திரும்பவும் காதிலிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் :)//
உங்களால் முடியும் சுந்தர். கமான், உடனே களத்துல இறங்குங்க :-) தூது போகணும்னா, என்னை கூப்பிடுங்க.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
//
சுந்தர்ஜி : சரிங்க..(பெண் விவரம் கொடுக்கிறார்)தூது போங்க..
அந்தப் பெண்ணிடம் பை.காரன் :.. கைய கொடுங்க மேடம்..வாழ்த்துக்கள்..
பெண்: ????####
பை : இந்த உரையாடல் உங்களுக்கு புரியாமல் போகலாம்..புரிந்தும் இருக்கலாம்.புரிந்தும் புரியாமல் போனாலும் அதிகாரம் அற்ற உரையாடல் எனபதை மட்டும் சொல்லிகொண்டு..
பெண்:########
பை.காரன் : ஆம்.உங்கள் பார்வை புரிகிறது.ஏன் நாம் எல்லோருமே பார்வைகளின் பால் கொண்ட விசுவாசத்தின் அடிப்படையில் தானே உரையாடவே வருகிறோம்.அப்படி இருக்க ஃபூக்கோவும் நீட்சேயும் காலங்காலமாக கட்டுடைத்த சில கருத்துக்களை உரையாடிப் போகலாம் என்றாலும் லத்தீன் அமெரிக்க சித்தாந்தங்கள் சில வற்றின் மீது ஏற்பட்ட கட்டுடைப்புகளின் தீரமான
பெண் கொஞ்சம் வேகமாக நடக்க ஆரம்பிக்கிறார்..
பை..மேடம்..உரையாடலை நான் இன்னமும் ஆரம்பிக்கவே இல்லை..சுந்தர் தூது..
பெண்: தூ....து..
சுந்தர்ஜி..நான் என்ன ஐயா பாவம் பண்ணேன் உங்களுக்கு????
*********
:-) :-) :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
எப்பிடி தல, இப்பிடி தலைப்பு, சும்மா அள்ளித் தெளிக்கறீங்களே!!!!!
ரூம் போட்டு யோசிப்பீங்களா?????
அந்த அறிமுக வரிகளான காதல் வகைகளை அதிகம் ரசித்தேன்.
யெய்யா..யெய்யா...எப்புடி ராசா எப்புடி.. நல்லாருக்கு
மிகவும் ரசித்து படித்தேன்- முன் பகுதி வரை....
கோபித்துக் கொள்ளாதீர்கள் தோழரே...
இதே கபிலர் பாட்டுக்ககான விளக்கத்தை - முனைவர் குணசீலனும், முனைவர் கல்பனா அவர்களும் அடுத்தடுத்து இடுகையிட்டுவிட்டார்கள்.
தூது பார்ட்டை ரொம்ப இரசித்தேன்.
ஹா ஹா ///
--வித்யா
நர்சிம்,
வழக்கம் போல பாடலைவிட உங்கள் முன்னுரை
சிற்ப்பாக வந்திருக்கிறது...
வாழ்த்துக்கள் !
நட்புடன்,
மறத்தமிழன்.
//குடந்தை அன்புமணி said...
மிகவும் ரசித்து படித்தேன்- முன் பகுதி வரை....
கோபித்துக் கொள்ளாதீர்கள் தோழரே...
இதே கபிலர் பாட்டுக்ககான விளக்கத்தை - முனைவர் குணசீலனும், முனைவர் கல்பனா அவர்களும் அடுத்தடுத்து இடுகையிட்டுவிட்டார்கள்.
//
கோபம் எதற்கு வரப்போகிறது தலைவரே..அப்படியா..Sun musicல் கேட்ட பாடலை அடுத்து இசையருவியில் கேட்பது போலத்தான்..
என்றாலும் முனைவர்களின் விளக்கம் பார்க்க போய்க்கொண்டு இருக்கிறேன்.நன்றி
நர்சிம்,
சத்தியமா நானே மறந்துட்டேன்.... ஞாபகம் வெச்சு போட்டிருக்கீங்க, அருமை...
தலைப்பு முதல் பாடல் முடிவு வரை நர்சிம் டச்சிங் இருந்ததெல்லாம் போய், பின்னூட்டத்துலியுமா???
வாழ்த்துக்கள் நர்சிம்....
அ
ரு
மை
Interesting read narsim!
//Arun
என்ன வார்த்தை சொல்வேன்..நர்சிம்....
அருமை....தமிழில் பாராட்டு வார்த்தைகளைத் தேடுகிறேன்
நரசிம்,
அருமையான விளக்கம்! உங்க பதிவுகளை படித்து நானெல்லாம் தமிழையும், தமிழின் அருமை, பெருமைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொள்கிறேன். நன்றி! வாழ்த்துகள்!
நல்ல பாடல் கார்போரேட் கபிலரே. வாழ்க நிம் பணி.
கபிலரின் காதலை ரசிச்சிட்டு பின்னூட்டம் போடலாம்ன்னு வந்தால் பைத்தியக்காரரின் காதல் தூது அதை விட சூப்பரா இருக்கே!!! ஏழு வருஷம் முன்னாலே பைத்தியக்காரன் இந்த உதவியை எனக்கு ஆஃபர் பண்ணிருக்கலாம் ;-)
கபிலர் கபி‘லவ்வ’ர் மிகச்சிறப்பான தலைப்பு ஆழ்ந்த விளக்கம் அருமை மதுரை மொழியில் சொன்னால் அண்ணே கலக்குங்க
http://naditamilpoems.blogspot.com
நல்ல ஜாலி நர்சிம்...அதிலும் "தூது"...மிக அருமை...
நல்ல அறிமுகம் நர்சிம். இப்பாடலில் வரும் ‘கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்’ என்ற வரி, படிக்கும் போதெல்லாம் புன்னகைக்க வைக்கும்.
Happy Friendship Day!
கலக்கல் நர்சிம்..
கபிலர் பாடல் மட்டுமல்லாது, வரலாறும் கொடுக்கலாமே..?(எனக்கு தெரியலைனு இப்படியும் சொல்லலாம் தானே..??!!)
புன்னகைக்க வைக்கிறது. நல்ல பதிவு
-ப்ரியமுடன்
சேரல்
சுவையான பதிவு
Post a Comment