மாதக் கடைசி மதிய நேரங்கள்...

எப்படி எண்ணினாலும்
மூன்றுரூபாய் ஐம்பதுகாசு
குறைவாக இருந்தது
அளவுச் சாப்பாட்டிற்கு.
சந்தனக் கீற்று நெற்றியோடு
கல்லாக் கட்டுபவனிடம்
சொல்லிப் பார்க்கலாமென்றால்
மீசையை கிருதாவில்
முடித்திருந்தான்.
தெரிந்தவன் தெரிவானா என
உள்ளே ஊடுருவினால்
ஊகும்..
முருங்கை சாம்பார்
முட்டைக்கோஸ் பொரியல்.
வெயில் கண்ணாடியணிந்து
அதிகம் சாப்பிட்ட
கவலையில்
ஐந்து ரூபாய்க்கு
எடை பார்த்தவன்
செரிப்பதற்கு வாங்கிய
ஸ்வீட் பீடா கவரை
காரின் ஜன்னல் வழி
எறிந்து பறந்தான்
கலர் சாக்பீஸால்
மீல்ஸ் ரெடி
சாப்பாடு தயார்
தகர பலகை.

..

29 comments:

பெங்களூர் புதியவன் July 30, 2009 4:41 PM  

அம்சம்! நான் தான் பஸ்டா? எங்க வலை பக்கமும் வாங்கன்னே.

விக்னேஷ்வரி July 30, 2009 4:42 PM  

அழகு நர்சிம்.

Vidhoosh July 30, 2009 4:45 PM  

என்ன வாழ்க்கை.. ச்சே.. என்று நினைக்க வைத்தது.
சபாஷ்.
அந்த பீடா பேப்பரை எறிந்தது நீங்கள் என்றால் இனிமே குப்பை தொட்டியிலே போடுங்கள். என்ன?

--வித்யா

ஸ்ரீமதி July 30, 2009 4:57 PM  

ரொம்ப சூப்பர் அண்ணா.. :)))

நாஞ்சில் நாதம் July 30, 2009 5:09 PM  

\\\ எப்படி எண்ணினாலும்
மூன்றுரூபாய் ஐம்பதுகாசு
குறைவாக இருந்தது
அளவுச் சாப்பாட்டிற்கு. ///

அன்று தான்
அதிகமா
பசியெடுக்கும்
நிஜ உலகம்
இப்படிதான்

ஆதிமூலகிருஷ்ணன் July 30, 2009 5:10 PM  

பாரகிராப்பையெல்லாம் கவிதைன்னு சொன்னா லக்கிகிட்ட சொல்லிடுவேன். ஜாக்கிரதை.. ஹிஹி..

கவிதையாக இருந்தது.!

தராசு July 30, 2009 5:24 PM  

//வெயில் கண்ணாடியணிந்து//

அந்த பிங்க் கலர் சட்டை போட்டுட்டு, வெயில் கண்ணாடி அணிந்து, கையைக் கட்டிட்டு நின்னு, இடது பக்கம் யாரையோ பாத்திட்டுருப்பாரே, அவரா அதிகம் சாப்பிட்டது.

ஜ்யோவ்ராம் சுந்தர் July 30, 2009 5:36 PM  

இரு வேறு உலகங்களின் மோதல் நன்றாக வந்திருக்கிறது.

கார்க்கி July 30, 2009 5:39 PM  

தல, நல்லா தான் வந்திருக்கு.. ஆனா கவிதைகள் என்றால் ரெண்டு மூனா போடுங்க..

நர்சிம் விலாஸ் வர்றவங்க சாப்பாட்டுக்கு வர்றாங்க.. ஸ்னாக்ஸுக்கு அல்ல..

Truth July 30, 2009 5:41 PM  

நல்லா இருக்கு நர்சிம். முன்னொரு காலத்தில் எனக்கும் இதே நிலைமை என்பதால் எனக்கு இது பிடித்திருக்கிறது. :-)

//ஆதிமூலகிருஷ்ணன் said...
பாரகிராப்பையெல்லாம் கவிதைன்னு சொன்னா லக்கிகிட்ட சொல்லிடுவேன். ஜாக்கிரதை.. ஹிஹி..

:-))

சூரியன் July 30, 2009 5:45 PM  

/கலர் சாக்பீஸால்
மீல்ஸ் ரெடி
சாப்பாடு தயார்
தகர பலகை.//

சாப்பாடுதரத்தான் தயாரில்லை..

Cable Sankar July 30, 2009 5:46 PM  

எனக்கென்னவோ கவிதைக்கு கொஞ்சம் குறைச்சலாகவும், பாராகிராப்புக்கு கொஞ்சம் மேலாகவும் இருந்தது.. இருந்தாலும் அந்த பீடா கவ்ர் நல்லாருந்திச்சு..

நாடோடி இலக்கியன் July 30, 2009 6:31 PM  

சம்திங் மிஸ்ஸிங் நர்சிம்.

பீர் | Peer July 30, 2009 6:37 PM  

//தெரிந்தவன் தெரிவானா என
உள்ளே ஊடுருவினால்
ஊகும்..//

தெரிந்தவன் தெரிந்தால் பிரச்சனை,
தெரியாவிட்டாலும் தான்.

விரும்பி வாசித்தேன், நர்சிம்.

கதிர் - ஈரோடு July 30, 2009 6:45 PM  

பசிக்கிறது நர்சிம்

நையாண்டி நைனா July 30, 2009 7:03 PM  

எனக்கு இப்படி எல்லாம் இருந்தது இல்லை...
நான் மெட்ராசிலே தேடி அலையும் போது எண்ணி பார்க்குறதுக்கே சில்லறை கிடையாது.

T.V.Radhakrishnan July 30, 2009 7:16 PM  

சாப்பிட்டுவிட்டு மாவாட்டலாம்
என்றாலோ..அதற்கும் இயந்திரம்
மனிதன் வேலை இனி
வாய் திறப்பது மட்டுமே


நர்சிம் ..என்னுடைய பின்னூட்டமும் கவிதையா

clayhorse July 30, 2009 8:49 PM  

எனக்கும் ஒரு பத்து வருஷம் இப்படி ஒரு நிலைமை இருந்ததால் படித்து ரசித்தேன்.

பா.ராஜாராம் July 30, 2009 9:46 PM  

நல்ல கவிதை நர்சிம்..

ஆ.முத்துராமலிங்கம் July 30, 2009 10:13 PM  

நகரம் இப்படிதானே எதிரெதிர் திசைகளில் இயங்க வைக்கின்றது.
கவிதை அசல்!

மங்களூர் சிவா July 30, 2009 11:24 PM  

nice!

/
Vidhoosh said...

அந்த பீடா பேப்பரை எறிந்தது நீங்கள் என்றால் இனிமே குப்பை தொட்டியிலே போடுங்கள். என்ன?
/

haa haa
:)))

வண்ணத்துபூச்சியார் July 31, 2009 12:24 AM  

இந்த வாரம்.. கவிதை வாரமா..??


லக்கியின் பின்னூட்டம் எங்கே..??

இன்னும் வரவில்லையா..??

பார்த்து.. பதிவா வரப்போகுது..

பிரியமுடன்.........வசந்த் July 31, 2009 9:53 AM  

ரிச்.....ரீச்ட்

ghost July 31, 2009 11:01 AM  

வெயில் கண்ணாடியணிந்து
அதிகம் சாப்பிட்ட
கவலையில்
ஐந்து ரூபாய்க்கு
எடை பார்த்தவன்
செரிப்பதற்கு வாங்கிய
ஸ்வீட் பீடா கவரை
காரின் ஜன்னல் வழி
எறிந்து பறந்தான்
கலர் சாக்பீஸால்
மீல்ஸ் ரெடி
சாப்பாடு தயார்
தகர பலகை.

அருமையான வரிகள்

நர்சிம் July 31, 2009 12:41 PM  

நன்றி புதியவன்..வந்தேன்..தோள்தட்டினேன் உங்கள் பதிவில்.

நன்றி விக்னேஷ்வரி..கவிதையா?

நன்றி விதூஷ்..ரைட்டு.

நன்றி ஸ்ரீமதி.

நாஞ்சில் நாதம் நேற்றுமழைபெய்ததன் காரணம் நீங்கள் ஸ்மைலி மட்டும் போடாமல் கருத்தும் சொன்னதிற்கா தலைவா?

நன்றி ஆ.மூ.கி.

நன்றி தராசு தலைவரே,ஏன் ஏன்?

நன்றி குருஜி.

நன்றிசகா..அடுத்து அடிப்போம்.

நன்றி ட்ரூத்..

நன்றி சூரியன்

நன்றி கேபிள்..ம்..அடுத்ததுல கவனம் செலுத்தணும் நன்றி.

நன்றி நாடோடி இலக்கியன்..அப்படியா..கரெக்ட் பண்ணுகிறேன் அடுத்து..நன்றி தலைவா.

நன்றி பீர்,

நன்றி கதிர்..வாங்க சாப்பிடலாம்..ஸ்வீட் பீடா உண்டு.

வாங்க நைனா.நன்றி.

நன்றி டி.வி.ஆர் ஸார்..என்னதே கவிதைன்னும் போது உங்களது டபுள் கவிதை ஸார்..நன்றி.

நன்றி clayhorse..

நன்றி ராஜாராம் ஸார்.

நன்றி முத்துராமலிங்கம்

நன்றி ம.சிவா.நன்றி

நன்றி வண்ணத்துப்பூச்சியாரே..ஏன் மறந்து இருக்குற ஆள கூப்புடுறீங்க..?

நன்றி வசந்த்.

நன்றி ghost(வேற பேரே கிடைக்கலயாங்க?):). நன்றி.

Arunkumar Selvam July 31, 2009 5:30 PM  

Good one narsim!

Thanks,
Arun

Thalapathy August 1, 2009 10:12 AM  

very nice

பாசகி August 1, 2009 12:56 PM  

பிரமாதம்-ஜி. வேறென்ன சொல்ல... எவ்ளோ நுணுக்கமா ஏழ்மையை பதிவு செஞ்சிருக்கீங்க க்ரேட் க்ரேட்...

" உழவன் " " Uzhavan " August 7, 2009 3:29 PM  

பேருந்தில் நடத்துனர் தராத 25பைசாகூட, என் பட்ஜெட்டை இடித்த அந்த மாதக் கடைசிகளை எண்ணிப்பார்க்கிறேன்......