“என்ன பாஸ் டல்லா இருக்கீங்க?”
“ சும்மா வீட்டு நினைப்புதான்..”
“ஏதாவது விக்ரமன் படம் பார்த்தீங்களா?லாலா லல்லானு”
“ஏன்யா நீ வேற..”
“சும்மா ஜாலிக்கு சொன்னேன்..என்னாச்சு?”
“இல்ல.. இங்க வெளிநாட்டுல வேலைக்கு வந்துட்டோம்..அவங்களும் நம்ம கூடயே வந்தா நல்லாத்தான் இருக்கும்,ஆனா..வராம இருக்குறதே நல்லதுதான்”
“என்னப்பா.. வரும்..ஆனா வராது.. மாதிரி நல்லாத்தான் இருக்கும் ஆனா நல்லா இருக்காதுன்னு சொல்ற”
“ஆமாப்பா..நம்ம கூடவே அவங்களையும் இங்க கூட்டிட்டு வந்தா கொஞ்சம் மைண்ட் ரிலாக்ஸா இருக்கும்.சேர்ந்து இருக்குற சுகம் நல்லாத்தான் இருக்கும்.ஆனா..இங்க பாஷை,கல்ச்சர் எல்லாமே அடியோட வேற..சொந்த பந்தமும் இல்லாம வெறிச்சு பார்த்துட்டு இருக்கணும் பாவம்.ஹும்”
“நீ சொல்ற பாயிண்ட் கரெக்ட்டா தப்பான்னு உங்க வீட்ல தான் டிஸைட் பண்ணனும்.ஆனா... உன் ஃபீலிங் மாதிரியே, அவங்க கூட இருந்தா நல்லாத்தான் இருக்கும்,ஆனாலும் அவங்க வந்து கஷ்டபடுறதுக்கு வராம இருக்குறதே மேலுன்ற அர்த்தத்துல, அந்தக்காலத்துல “சிறைக்குடி ஆந்தையார்”ன்ற புலவர் நீ பாவமா ‘உச்’ கொட்டுறதவிட இன்னும் சூப்பரா சொல்லி இருக்காரு..”
“அப்பிடியா?”
விளக்கம்:
பாலை நிலத்தில் வேட்டையாடித் திரியும் செந் நாய்,மணலைக்கிளறி தண்ணீர் குடித்து விட்டு போன அந்த மிச்ச நீரில்,காட்டுப் பூக்கள் விழுந்து அழுகி இருக்கும் அந்த கொஞ்ச நீரை அழகிய வளைக் கைகள் கொண்ட, என் நெஞ்சத்தில் அமர்ந்து இருப்பவள், என்னோடு குடிக்க நேரிடும்..(அல்லது குடிக்க வேண்டும்) பாவம்.
சிறப்பு :
நேரடியாக கூறாமல் அளியளோ அளியள் என்று தொடர்ச் சொல்லில் அவள் மீதிருக்கும் பாசத்தை உணர்த்தி,உடன் வந்திருந்தால் ஏற்படும் அவல நிலையை குறிக்கும் பாடல்.வேட்டச் செந்நாய் போன்ற வார்த்தைகளினால் காட்சி கண்முன் விரிவதும் சிறப்பே.
பாடல் :
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்
வருகதில் அம்ம தானே
அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே.
பாலைத் திணையில் தலைவன் கூற்றாக புலவர் சிறைக்குடி ஆந்தையார் பாடிய பாடல்.
இதை தற்கால கவிதையாக எழுதவேண்டும் எனில்..
நான் போகும் பாதை
சுடுமணல் நீண்ட பாலை
வேட்டைச் செந்நாய்
பறித்த பள்ளத்தின்
எச்ச நீரைப் பருகுவேன்
நான்-அழகியே..
அழுகிய காட்டுப்பூக்கள்
மிதக்கும் அந்
நீரைப் பருகலாமா நீ?
என்
நெஞ்சத்தின் பாதியே
வரவேண்டாம் என்னோடு..
பாலை பயணப் பாவம்
போகட்டும் என்னோடு.
..
Tuesday, August 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
41 comments:
ஹோ, எங்கூரு டாப்பிக்கு. ஆனா நாங்க அவங்க அப்பப்போ ஊருக்குப் போய்ட்டு வரட்டும்ன்னு நினைக்கிறதுக்கு காரணமே வேற. ஏதோ நாம கொஞ்ச நாளு ஜாலியா சுதந்திரமா இருக்கலாமேன்னு தான் ;-)
உங்க ஏரியா. ஒண்ணும் சொல்ல முடியாது. புதுசா 'தற்காலக் கவிதை'னு மத்தவங்க பொழப்புல மண்ணைப் போடுவது ......
Good post Narsim
அனுஜன்யா
வித்தியாசமான சிந்தனையுடன் பாடல் இணைத்த விதம் அருமை.
'உடனிருக்கும்போது அருமை தெரியாது'என்பதைச் சொல்லும் பாடல் எங்கேனும் இருக்கிறதா?
வழக்கம் போல் கலக்கல்.
அனுஜன்யா எப்போதுமே என்னை முந்தி கொண்டுவிடுகிறார்.நான் சொல்ல நினைப்பதையே சொல்லிவிட்டு போய்விடுகிறார்.
:)
ஆஹா.. கலக்கல்...
இனிமே தற்கால கவிதையும் கண்டிப்பா போடணும்றதுதான் நேயர்கள் விருப்பம்!!!
//நெஞ்சத்தின் பாதியே
வரவேண்டாம் என்னோடு..
பாலை பயணப் பாவம்
போகட்டும் என்னோடு.//
கவிதையில் ஆரம்பித்து பாடலாக முடித்துவிட்டீர்கள்.:)
பிரிவு.... :(
தற்காலக் கவிதை அருமை. தொடரவும்.
அதே வார்த்தைகள் இல்லாமல் அதற்கேற்ற தற்கால வார்த்தைகள் இருந்தால் இன்னும் இனிக்கும்.
சகா, ராவா அடிக்க முடியாதவஙக்ளுக்கு இதுவரை தண்ணி கலந்து கொடுத்திங்க.. இப்ப பெப்ஸியா? கலக்குங்க..
அனுஜன்யாவின் பயம் தேவையில்லாதது. இந்த கவிதை புரிகிறது.
அசத்தல்.
வழக்கம் போல்...
:)
ரைட்டு!
:)
ப்ரெசென்ட் சார்..
அருமையான விளக்க பதிவு.
கவிதையும் விளக்கமும் நேர்த்தி.
பாலை மணலில் தினம் புதையும் எங்களுக்கான் பதிவு.
எப்டி நர்சிம், கல்ஃப்ல வேலை செஞ்சீங்களா?
நர்சிம்,
ஒரு அருமையான விஷயத்தை, பிரிந்திருத்தலை அழகான முறையில் பழம் கவிதையோடு ஒப்பிட்டு விளக்கிய விதம் கலக்கல். அனுபவித்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன், அருமையிலும் அருமை...
பிரபாகர்.
பாலையில் பழங்கயிறு உவமை கூறி துன்புற்று, கடமை உணர்வால் திரும்பவும் வர முடியாத தலைவனின் பரிதாப நிலையம் ஏனோ ஞாபகத்தில் தோன்றியது.
அழகான விளக்கம்.
நல்ல பதிவு நர்சிம்.
//செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சின்னீர் //
அருமை. பகிர்விற்கு நன்றி.
நல்லாயிருந்தது நர்சிம்.
//அனுஜன்யாவின் பயம் தேவையில்லாதது. இந்த கவிதை புரிகிறது.//
:))
நல்ல பகிர்வும் பதிவும் நர்சிம்.அழகு கவிதையும்.
Very good post.
I wish all of your posts of this kind to be collected and published as a book. You really deserve a lot more recognition dear friend.
அனுஜன்யா said...
உங்க ஏரியா. ஒண்ணும் சொல்ல முடியாது. புதுசா 'தற்காலக் கவிதை'னு மத்தவங்க பொழப்புல மண்ணைப் போடுவது ...//
ரிபீட்டு.!
மீ த 25.!
/
'தற்காலக் கவிதை'
/
நல்லா இருக்கு!
தற்கால கவிதை நல்லா இருக்கு
மாறவர்மன் என்ன ஆச்சு சார்
Supppppppppppeeeeeeeeeerrrr... :))))
me the 30 :))
அக்கால பாடலுக்கு விளக்கம் தந்துவந்ததே அருமையாக இருந்தது. இப்போது தற்கால கவிதையுமா... கலக்குங்க பாஸ்!
சேட்’ண்ணே,
அருமை.. :)
கலக்கல்...
kalakkal boss
//தற்காலக் கவிதை அருமை. தொடரவும்.// repeattu..
nalla pathivu... vaalthukkal..
appuram ,
//அளியளோ அளியளெந்//
itharkku arttham enna , vilakkam pls?
அனைவருக்கும் மிக்க நன்றி..
////அளியளோ அளியளெந்//
itharkku arttham enna , vilakkam pls?//
அளியள் :இரங்கத்தக்கவள்..
அளியளோ அளியள்..மிகுதியை உணர்த்த..அதாவது பாவம்..அய்யோ பாவம் என்ற சொற்றொடர் போல..
நன்றி ..அனைவருக்கும்
Excellent post... Superb linking between present day and sanga ilakkiyam... :)
//அளியள் :இரங்கத்தக்கவள்..
அளியளோ அளியள்..மிகுதியை உணர்த்த..அதாவது பாவம்..அய்யோ பாவம் என்ற சொற்றொடர் போல..//
Nandri Narsim ;-)
அருமை..
//.. ச்சின்னப் பையன் said...
இனிமே தற்கால கவிதையும் கண்டிப்பா போடணும்றதுதான் நேயர்கள் விருப்பம்!!! ..//
அதேதான்..!
சூப்பர் பாஸ் :)))
மிக நல்ல பதிவு ! கலக்குங்க நர்சிம் !
Post a Comment