"அதுவும் இதுவும் போல" என்று கல்யாண வீட்டு மைக்கில் அரசியல்வாதிகள் உவமைகளாக முழங்குவது போன்ற உவமைகள் எதுவும் சொல்லாமலே.. தமிழ் சினிமாவும் பாடல்களும் எவ்வளவு நெருங்கிய தொடர்புடையவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று..
முன்பெல்லாம் 40 பக்க நோட்டு சைஸில் வந்த பாட்டு புத்தகங்களும், சிங்கமே கொல்ல வந்தாலும் அதைப் பாடிப்பாடியே சாம்பலாக்கும் காட்சிகளும்,பாடல்களுக்கு ஊடே சில வார்த்தைகள் வசனங்களாக (விளம்பர இடைவெளிகளுக்கிடையில்,இந்திய தொலைக்காட்சியில் முதல்முறை பார்க்கும் படங்கள் போல) இருந்த தமிழ் சினிமாக்கள் தொடங்கி நாளை வரப்போகும் படங்கள் வரை பாடல்களின் பங்கு மிக முக்கியமானவை..
பாடல்கள் தமிழ் இலக்கணத்தை மையமாக கொண்டிருப்பதாகவே படுகிறது
மெலடி பாடல்கள் பெரும்பாலும் மெல்லினமான "ஞஙண நமன " எழுத்துக்களை எதுகையாக கொண்டதாகத்தான் இருக்கும்.. "எங்கேயும்".. "அஞ்சும் கெஞ்சும்".. "செந்தமிழ் தேன்".."என்னவளே".. "குங்கும பொட்டில் மங்களம்".. "தங்கத்தாமரை".."தங்க மகன் இங்கு" "ஓம் சாந்தி ஓம்".. வரை..
வீரமான/ஆக்ரோசமான பாடல்கள் பெரும்பாலும் வல்லினமான "கசட தபற".. "அச்சம் என்பது".. "படைகள் எழுகவே.." "சத்தம் இல்லாத தனிமை"
ஆலங்குடி சோமு,கு.மா.பாலசுப்ரமணியம்,மருத காசி, கா.மூ செரீப்..>(ஏரிக்கரை .. பாடலை மறக்க முடியுமா?) என்ற ஜாம்பவான்கள் பாடல்களாக எழுதித்தள்ளிக்கொண்டிருந்த காலகட்டத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் என்ட்ரி மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது.. பிறகு சிறிது காலம் பட்டுக்கோட்டையாரின் ஜனரஞ்சக வார்த்தைகளின் ஊடே கருத்துக்களை பரப்பும் கொள்கைப்பாடல்கள் வெகுவாக மக்களால் ரசிக்கப்பட்டது.. திருடாதே என்ற பாட்டா.. திருட்டை பற்றி மட்டுமே எழுதுவார்.. தூங்காதே தம்பியா.. தூக்கத்தை பற்றி மட்டுமே இருக்கும்.. (கண்ணதாசனின் தத்துவபாடல்களில் கூட சரணத்தில் காதலுக்கு சென்று பின் தத்துவத்திற்கு திரும்பும்)இது பட்டுக்கோட்டையாரின் ஸ்பெஷாலிட்டி..
பாகப்பிரிவினையின் முதல் பாடலை எழுதி முடித்த கையோடு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இறந்துவிட்டதால்.. அதை ஈடு செய்யும் பொருட்டு, மிகுந்த மெனக்கெடலின் முடிவில்.. அனைத்து பாடல்களிலும் தன் பெயரை உச்சரிக்க வைத்த கண்ணதாசன் தன் கடைசி மூச்சு வரை கவியரசராக தனி ராஜ்ஜியம் நடத்தியது அனைவரும் அறிந்ததே.."அத்திக்காய் காய்" பாடலில் இவர் கையாண்ட இலக்கிய விளையாட்டு இன்றளவும் பிரசித்தம்.
வாய்ப்புகள் சரிவர அமையாததால் பெட்டியை கட்டி பலசரக்கு கடைக்கே திரும்பி விடலாம் என்ற எண்ணத்துடன் போய்க்கொண்டிருக்கும் பொழுது,மயக்கமா கலக்கமா என்ற பாடல்வரிகளைக் கேட்டு புத்துணர்ச்சியுடன் தன் மனதை மாற்றிக்கொண்டு முயன்று.. இன்று வரை பல தலைமுறை கடந்து வென்று வரும் வாலியின் பங்களிப்பு மிக முக்கியமானது..
தெய்வத்தாய் படத்தின் போது எம்ஜியாருக்கும் கண்ணதாசனுக்கும் ஏற்பட்ட சிறுகருத்து வேறுபாட்டால் வேறு யாராவது ஒரு கவிஞரை எழுதச் செய்ய வேண்டும் என்று ஆரெம் வீரப்பனிடம் எம்ஜியார் கூறிவிட்டதால்.. வாலியை அவருக்கு அறிமுகப்படுத்தினார்களாம்.. எதிர்பார்ப்பு ஏதும் இல்லாத காரணத்தால் அதிக கவனம் செலுத்தாமல் வேறு வேலையை பார்த்துக்கொண்டே வரிகளை கேட்டுக்கொண்டிருந்தாராம் எம்ஜியார்.. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.." என்ற வரிகளை வாலி சொன்னதும் புருவம் உயர்த்திய எம்ஜியார்(எம்ஜியாரின் வாழ்க்கையில் 3 எழுத்துக்கள் பெரும்பங்கு வகித்திருப்பது தெரிந்த விஷயம்)அதன் பிறகு வாலியின் வார்த்தைகளை கொள்கைப்பாடல்களாக பயன்படுத்தி ஆட்சியில் அமர்ந்தது வரை வாலியின் வரிகள் வலிமை மிக்கதாக பேசப்பட்டது..
தனக்கு பிடித்தமானதை
பிடித்துத் தருவான் என்று
தனக்கு பிடித்த மான் அதை
கேட்டாள்
என்று ராமாயணத்தை ஒருவரியில் எழுதுவதாகட்டும்,
இவர்கள் கண்மூடிப்போனதல்
மண்மூடிப்போக வில்லை..
மண்மூடிப்போனதால்
கண்மூடிப் போனவர்கள்..
(குஜராத் பூகம்பம் குறித்த கவிதையில்)
என்று வார்த்தை விளையாடும் இவர் இன்று வரை யூத் குத்து குத்துவதிலும் வல்லவர் என்பதால் வாலிபக் கவிஞர் வாலி என்று அழைக்கப்படுகிறார்.. சென்ற வாரம் பிறந்த நாள் கொண்டாடிய வாலி.. நீ நீடுழி வாழி..
பாரதிராஜாவின் வருகைக்குப் பின் தமிழ்த் திரை உலகம் சந்தித்த தித்திக்கும் மாற்றங்களில் ஒன்று வைரமுத்துவின் வருகை.. பொன்மாலைப் பொழுதாக தொடங்கி இவர் எழுதிய அத்தனை பாடல்களிலும் இவர் பெயரையும் எழுதாமலே எழுதியவர்.. நல்ல வார்த்தைகளை யார் எழுதினாலும் வைரமுத்துவாக இருக்குமோ என்று நம்ப வைத்தவர்..வைத்துக்கொண்டிருப்பவர்..
ஒன்று சுதந்திரத்தின்
வானம் இல்லை
மரணத்தின் பள்ளம்..
என வார்த்தைஜாலம்,விஞ்ஞானம்,இலக்கியம் என்று கலக்குவதால் கவிப்பேரரசராக திகழ்பவர்..கண்ணதாசனுக்கு இணையாக வைரமுத்துவும் இலைமறைகாயாக காமத்தைச் சொல்வதில் வல்லவர் என்பதற்கு நல்லவனுக்கு நல்லவன் படத்தில் வரும் என்னைத்தானே பாடலின் இடையில் வரும் வரிகளே சாட்சி
மலரின் கதவொன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக சிரிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
...
இரவுகள் இதமானதே..
இந்தப் பாடலை மிக நுட்பமாய் கேட்டால்தான் மேலே சொன்ன சங்கதி தட்டுப்படும்.
வெயிலோடு நாம் விளையாடியதை வார்த்தைகளில் வடித்த நா.முத்துக்குமார்..
பெண்களின் கண்ணோட்டத்தில் காதலை ஆழமான அழகான வார்த்தைகளில் சொல்லிக்கொண்டிருக்கும் தாமரை,
உடைந்த நிலாவென கவிதைவடிவானாலும் சரி.. ஒவ்வொரு பூக்களுமே(பூ?) என்ற விருதுக்கான வரிகளாகட்டும் சரிவிகிதமாக எழுதிவரும் விஜய்,
இன்னும் பல இன்றைய தலைமுறை பாடலாசிரியர்கள் தமிழ் சினிமாவில் பாடல்களின் பங்களிப்பை உறுதி செய்து கொண்டி(டே)ருக்கிறார்கள்..
பாடல்களை ஸ்ருதி சுத்தமாகவோ இல்லை வெறும் சத்தமாகவோ.. முணுமுணுத்துக் கொண்டே நாம் ரசிக்கும் இந்த பாடல்கள் நம்மில் ஒரு அங்கமாகவே தான் இருக்கிறது.. இருக்கும்..
..
Wednesday, September 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
அதே..தான்.மீ.ப.
இந்த வல்லின, மெல்லின மேட்டர் அருமை. இதை மாற்ற வேண்டியே முத்துக்குமார் கஜினியில் வரும் சுட்டும் விழி சுடரே வை எழுதினாராம்.
அடுத்த வைரமுத்து நா.மு தான் என்பதை நான் அடிக்கடி பதிவு செய்கிறேன். தாண்டி செல்லவும் முத்துவால் முடியும். சினிமா பாடல்களோடு இலக்கியத்த்ற்கும் அவர் நேரம் ஒதுக்க வேண்டும்.
தல, அபப்டியே முத்துலிங்கத்தையும் இதில் சேர்த்திருக்க வேண்டும்..
”நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணையென வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகமெனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பானால் அதைத் தீர்க்கும்
ஒரு ஜீவநதி அருகினில் இருக்கு”
//அதே..தான்.மீ.ப.//
இருந்தா என்ன நல்லாதான் இருக்கு,
//"செந்தமிழ் தேன்".." "குங்கும பொட்டில் மங்களம்".. அச்சம் என்பது"
ஏரிக்கரை .. .."அத்திக்காய் காய்" etc //
உங்க பதிவ படிச்ச அப்பறம் எல்லா பாட்டையும் உடனே கேக்கணும் போல இருக்கு, எல்லாமே எனக்கு பிடித்தவை, உங்கள் பதிவிற்கு நன்றி
ஆமா சகா.முத்துலிங்கத்தை எல்லோரும் மறந்ததைப் போல நானும் மறந்துவிட்டேன்.மன்னிப்பாராக.மிக அருமையான கவிஞர்.
தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து பாடல் அவர் எழுதியதுதான்.
நினைக்க இனிக்க
கொடுத்து மயங்கு
முத்தாரமே...என்று பின்னி இருப்பார்.
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ என எதிர் இயற்கை எழுதியவர்.
\\வெயிலோடு நாம் விளையாடியாதை வார்த்தைகளில் வடித்த நா.முத்துக்குமார்.. \\
?!?!?!?!
எல்லோரும் மறந்ததைப் போல!!!! உண்மை சகா.. என்ன காரணம் ? எனக்கு பிடித்த சில பாடல்கள்..
மாஞ்சோலை கிளிதானோ
மணியோசை கேட்டு எழுந்து
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூ விழியே
ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியும் அவரால் ஏன் ரசிகர்கள் மனதில் ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க முடியவில்லையென தெரியவில்லை சகா
I like Vaali.
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....
தமிழ்செய்திகளை வாசிக்க
(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்
தமிழ்செய்திகளை இணைக்க
ஆங்கில செய்திகளை வாசிக்க
வலைப்பூ தரவரிசை
சினிமா புக்மார்க்குகள்
சினிமா புகைப்படங்கள்
வாலிக்கு ஒரு துரதிருஷ்டம் உண்டு.கஷ்டப்பட்டு அவர் எழுதிய பாடல்கள் இன்னும் கண்ணதாசன் லேபிளிலேயே ஓடுகிறது.
அதே மாதிரி”தண்ணிலவு தேனிரைக்க தாழைமரம்”(ப.ம.போதுமா)”மலரும் வான் நிலவும் எல்லாம்”(மகா கவி காளிதாஸ்)”முல்லை மலர் மேலே”(உ.புத்திரன்)கண்ணதாசன் பின்னிட்டாண்டா என்று ரொம்ப நாள் சொல்லிக்கொண்டிருந்தோம் ஆனால் பின்னியது முறையே மாயவநாதன்
/கு.மா.பா/மருதகாசி.
அதே மாதிரி “பொன்னெழில் பூத்தது புது வானில்”(சூப்பர் பாட்டு/வரிகள்) பஞ்சு அருணாசலம் எழுதியது.
மனப்பழக்கத்தால் கண்ணதாசன் லேபிளில் பல வருடம் ஓடியது.
சில சமயங்களில் வைரமுத்து,
”தண்ணீரில் முழுகாது
காற்றுள்ள பந்து
என்னோடுநீ பாடி வா சிந்து” மெட்டுக்காக ஓயிட் சிமெண்டை ஓட்டையில் அடைப்பது போல் அடைத்துப் படுத்துவார்.
வழமை...பழமை.... புதுமை...அருமை...!!!
அருமை... :)
பாட்டுன்னு வந்தாலே ஒரு வரியிலாவது கம்பர் எட்டிபார்த்துர்ராரு. நல்லாயிருக்கு தல.
வாலியின்..மதுரையில் பிறந்த மீன் கொடியை...பாட்டு கேட்டிருக்கிறீர்களா? நர்சிம்..
பதிவை அப்புறமா படிக்கறேன். மீண்டும் திரட்டிகளில் உங்கள் பதிவு. நன்றி. !!!
கண் தானத்துக்கான உங்கள் லிங்கும் சூப்பர். Guess What ?
thaarumaaru :))))))))
சிறப்பு.!
ரொம்ப நல்லா கோத்திருக்கீங்க. தனிமடல் அனுப்புறேன். தமிழ்ப்பாடல்கள் பற்றி பேசினால் கூட நான் கேட்டுக்கொண்டே இருப்பேன். வாலி ரொம்ப அண்டர்-ரேட்டட் கவிஞர். கண்ணதாசனும் வைரமுத்துவும் ஆண்டுகொண்டிருந்த போது, அவர்களது சாயலையே பின்பற்றி பிரபலமானவர், சரக்கில்லாதவர் போன்ற விமர்சனங்கள் எரிச்சலூட்டுகின்றன.
//விழியும் விழியும் கலந்து
விழிப்புணர்ச்சி//
என்று எழுத யாரால் ஆகும்?
//மலரின் கதவோன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேர தவிக்கின்றதா
பெண்மை புதிதாக சிரிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
...//
You mean the வடுமாங்காய்-தயிர்சாதம் Phenomenon? ரைட்டு.
நா.முத்துக்குமார் (காஞ்சிபுரத்துக்காரர்!) மட்டுமின்றி தாமரையை இன்றைக்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்த ஆளுமை ஆளுமைன்றாங்களே.. அதேதான்.
மிகவும் நன்றாக எடை போட்டு பார்த்துள்ளிர்கள் பாராட்டுகள்
அருமையான இடுகை நர்சிம். கவிஞர்கள் கோர்வை சிறப்பா இருக்கு.
இந்த லிஸ்டில் உள்ளவர்களின் வரிகளையும் சேர்த்திருந்திருக்கலாம்.
நல்ல பகிர்வு. உண்மைதான். தமிழ் சினிமாவும் பாடல்களும் ஒன்றாய்ப் பிணைத்தவை தான்.
பட்டுக்கோட்டையாரின் பாடல்களில் எனக்கு பிடித்தது, "சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா"(அரசிளங்குமரி)
கே.டி.சந்தானம் நினைவிருக்கிறதா. "சிந்தனை செய் மனமே"(அம்பிகாபதி) அவருடையதுதான்.
இந்த பாட்டு யாருடையது, சொல்லுங்கள். படத்தின் வசனகார்த்தா தானாம்
"பொருளே இல்லார்க்கு தொல்லையா
புது வாழ்வே இல்லையா, இருள்
நீங்கும் மார்க்கம் இல்லையா
இறைவா நீ சொல்லையா"
சகாதேவன்
ஏங்க..
”கல்யாணத் தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா”
“சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சே” (ஆகா, என்னா அர்த்தம்) எழுதின ஆளையும் விட்டுட்டீங்களே...
அந்தாள் multi talented... அதனாலேயே நாசமாயும் போனார்ங்கறது வேற கதை
//பெண்களின் கண்ணோட்டத்தில் காதலை ஆழமான அழகான வார்த்தைகளில் சொல்லிக்கொண்டிருக்கும் தாமரை//
காக்க காக்க திரைப்படத்தில் வரும் என்னை கொஞ்சம் மாற்றி பாடல் ஒரு சிறந்த உதாரணம்
மி.ப என்றாலும் சி.ப. நர்சிம்
2 லட்சம் ஹிட்ஸூக்கு வாழ்த்துகள் சகா...
நன்றி ghost,கேட்டிங்களா இல்லியா?
நன்றி ராஜு, யா’வுக்கு தானா இத்தன கேள்வி?!
நன்றி நைனா.
மிக்ஸ் நன்றி
கலக்கல் பின்னூட்டத்திற்கு நன்றி ரவிஷங்கர் தலைவா.
நன்றி மகேஷ்.
நன்றி அக்கிலீஸ்
ஆமா நாதம்..அதுதானே அடிநாதம்.
நன்றி ராதாகிருஷ்ணன் ஸார்.சூப்பர் பாட்டு அது..சேலத்து மாம்பலத்தை...செவ்விதழோடு ஒப்பிட்டு..கடைசியில் ‘உன்னை தமிழம் என்றேனே’ன்னு சொல்லிடுவாரு..வாலி..
நன்றி செந்தழல் ரவி(Guess what மேட்டர் புரியல தல.)
நன்றி கமல்,
நன்றி ஆதி.
நன்றி வெங்கிராஜா..ஆம்..
நன்றி தியாவின் பேனா
நன்றி நாடோடி இலக்கியன்.அருமை.
நன்றி செந்தில் வேலன்
பகிர்விற்கு நன்றி சகாதேவன்
நன்றி கிருத்திகன்..ஆம்..அருமையான பாடல்கள்.கல்யாணத் தேன் நிலா வாலி எழுதிய பாடல் பாஸ்.
நன்றி பாரதி.
ந.கே.ச.
அட ஆமா சகா.நன்றி.
எத்தனை பாடல்களை நினைவுகூற வைத்துவிட்டீர்கள் நர்சிம்! நன்றி!
நல்ல கலெக்ஷன். அருமையான பதிவு. வைரமுத்துவின் "அந்தி மழை பொழிகிறது" கலக்கலாக இருக்கும்:)
அருமை... :))
அதான், எல்லாத்தையும் எல்லாரும் சொல்லீட்டாங்களே, இனி நான் என்னத்தை தனியா சொல்றது,
வழக்கம் போல.................. உள்ளேன் ஐயா
//ர்..கண்ணதாசனுக்கு இணையாக வைரமுத்துவும் இலைமறைகாயாக காமத்தைச் சொல்வதில் வல்லவர் என்பதற்கு நல்லவனுக்கு நல்லவன் படத்தில் வரும் என்னைத்தானே பாடலின் இடையில் வரும் வரிகளே சாட்சி
மலரின் கதவொன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக சிரிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
...
இரவுகள் இதமானதே..
இந்தப் பாடலை மிக நுட்பமாய் கேட்டால்தான் மேலே சொன்ன சங்கதி தட்டுப்படும்.//
உயிரே படப்பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா - முக்கியமாக காதலின் நிலைகள்
--
அதே போல் இளமை எனும் பூங்காற்று
வணக்கம் நர்சிம்,
எத்தனை பாடல்கள்,
முத்துலிங்கத்தை நாம் கொணடாட மறந்து விட்டோம்
நல்ல நினைவுகள் நர்சிம்! நன்றி!
ரொம்ப கடுமையான பணிசூழல்ல இந்த பதிவை வாசித்து விட்டு தூத்துக்குடி போனபடி இருக்கிறேன். ஜன்னல் வழியாய் வாகனத்தை மோதும் காற்றைக் கிழித்த படி பாடிக் கொண்டு செல்கிறேன்..
அதுவே இந்தப் பதிவின் வெற்றி..நன்றி தோழரே
ரொம்ப கடுமையான பணிசூழல்ல இந்த பதிவை வாசித்து விட்டு தூத்துக்குடி போனபடி இருக்கிறேன். ஜன்னல் வழியாய் வாகனத்தை மோதும் காற்றைக் கிழித்த படி பாடிக் கொண்டு செல்கிறேன்..
அதுவே இந்தப் பதிவின் வெற்றி..நன்றி தோழரே
பதிவு படிக்கும்போதே மனசுக்குள்ளே பல பாடல்களும் வந்து போகுது.
கார்க்கி குறிப்பிட்ட முத்துலிங்கத்தின் வரிகள் - சூப்பர்...
தல, இந்த வரிசையிலே நம்ம டி.ஆருக்கு இடமுண்டா?
//சில சமயங்களில் வைரமுத்து,
”தண்ணீரில் முழுகாது
காற்றுள்ள பந்து
என்னோடுநீ பாடி வா சிந்து” மெட்டுக்காக ஓயிட் சிமெண்டை ஓட்டையில் அடைப்பது போல் அடைத்துப் படுத்துவார்.//
ரவிசங்கர் சரியா சொன்னீங்க.
அறிவுமதியின் பாடல்களையும் விட்டுவிட்டீர்கள்.
ரிதம் படத்திலும் தீம்..தனனா பாட்டு
வைரமுத்து எழுதியது நல்லவனுக்கு நல்லவன் படப்பாடல் போலவே..
hiyo......remba pidichurukunga intha pathivu.
yella kavingarkalume arumaiyaanavarkal..
namakkaana varangal..
vairamuthu than peyarai use seivathillai..
than manaiviyin peyarai (PONMANI)marappatheyillai.
than muthal paadalil
kooda"PONmaalai pozhuthu"nuthaaan thodangiyiruppaar..
guna paadalil kooda"appo kanmani yai..ponmani-nu maathi"nu sollum pothu vairamuthuvin kaathal ahu nu thonum
"moham"....
anthimazhai pozhikirathu..
aayiram thamarai mottukkale..ithellam marakkave mudiyaatha paadalkal
rajapaarvai padathileye..,
azhagil azhzge--nu oru evergreen song kannathaasan thaan yezhuthinathu..
aanaal,anthimazhai--yum hothit
sindu biravi
kadalora kavithaikal
muthal mariyaathai...hiyo
vaali paadal kal marakkave mudiyaathavai...,
ipadi kodi visayangal..
thamizh paadalkali irukkirathu.
naamellaam koduththuvaiththavarkal..:)
[ingu pesamarantha pira padalkalidam naan manippuk kettuk kolkiren]
Post a Comment