கண்கள் வழி
கரு நாகங்கள்
நெளிந்து விழுந்தன
நாசித்துவாரங்களில்
இரு பூரான்கள்
உள்வெளியாடின
இடக்கையின்
ஆட்காட்டிவிரலில்
அரணையும்
வலக்கையின் விரலிடுக்குகளில்
தேள்கள் நான்கும்
சிரம் தூக்கி மெல்லப்
புறம் பார்த்தன
வெண் பாதங்களில்
விஷ வண்டுகள்
சுருண்டுருண்டன
உதடுகளுக்கிடையில்
மட்டும்
மென் இதழ்கள்
முட்களே இன்றி...
..
நன்றி உயிரோசை
..
முக நக...
Posted by
நர்சிம்
Monday, September 21, 2009
Labels: கவிதை
30 comments:
sir இது மாதிரி புரியாமலே எழுதுறது தங்களை போன்றோர்க்கு வரமாக அமைந்திருக்கிறது...
அது புரியாமலே இருப்பது என்னைப்போன்றோர்க்கு சாபமாக அமைந்திருக்கிறது...
நல்ல கவிதை நர்சிம்.
ஒஹ் வெறும் புன்னகை மட்டும் நட்புக்கு அர்த்தமில்லைன்னு சொல்றீங்களா?
இன்னும் மூணுவாட்டி படிச்சாத்தான் புரியும் போல
என்ன சொல்லி இருக்கீங்கன்னு புரியலை நண்பரே...
ஒருவேளை புரியாம இருக்கறதுக்குத்தான் எழுதி இருக்கீங்களா...
:))))
தல,
சூப்பர்.இதை கொஞ்சம் காட்சியாக உள் வாங்கினால் ”அகநக”த்தின் கோர ஆக்டோபஸ் வால்
கொடுக்குகள் ஒரு மாதிரி deadlyயா இருக்கு.
//முட்களே இன்றி...//
இது தேவையில்லை.இவற்றுக்கு நடுவே மென் இதழ்கள் என்று ஏற்கனவே வெளிப்படும்(contrast) போது இது தேவையில்லை என்பது என் கருத்து.
என்னாச்சி நல்லா தானே இருந்தீங்க. ஜ்யோவோட எல்லாம் சேராதிங்கன்னு சொன்னேன் கேட்டிங்களா.
//உதடுகளுக்கிடையில்
மட்டும்
மென் இதழ்கள்
முட்களே இன்றி...//
மிகவும் அற்புதமான வரிகள்...
நல்ல கவிதை நர்சிம்....
பிரபாகர்.
சிறுகதைப் பட்டறைக்குத்தானே போனீங்க??? !!!
கலக்கிட்டீங்க கவிஞர் நர்சிம்.. :)பாராட்டுகள்...
//Mahesh said...
சிறுகதைப் பட்டறைக்குத்தானே போனீங்க??? !!!
//
அட ஆமா...இந்த இன்பிட்வீன் கேப்புல எப்ப கவிதைப் பட்டறை நடந்துச்சி ???
Kavithai z awesome narsim sir !!
nice ... but could not understand
'முக நக' - லக லக லக னு சிரிப்பவரா?
நல்லா இருக்கு நர்சிம்
அனுஜன்யா
நல்லா இருக்கு..அற்புத வரிகள்
சார் உங்க ஜிப்பா சூப்பர்!.....
தூரத்திலேர்ந்தே கவனிச்சேன் உங்க ஜிப்பா சூப்பர்!.....
அய்யோ கண்லயே நிக்குதே!....
இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html
அடப்பாவி,
இருந்த ஒரு நல்ல ஃப்ரெண்டையும் இப்படி ஆக்கிப்புட்டாங்களே...
கவிதை ரொமபப் பிடித்திருக்கிறது.
கவிதை!!!
முக சரி. நல்லக்கண்ணு கூடவா இப்படி??????ஹிஹிஹிஹி
அருமையா இருக்கு நர்சிம்!
ரசித்தேன் ... வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்.”உயிரோசை”யில் இந்த கவிதைப் படித்தேன்.
romba nalla iruku sir
சூப்பர்.
கவிதையை படிக்கும் போது பயமாக இருக்கிறது,.,.ஜாக்கிரதையாக இருக்க தோணுகிறது..
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வசந்த்.அதே பிரியமுடன் நர்சிம்.
நன்றி வெயிலான்
அறிவன்..அப்படியா?
தல..நன்றி நன்றி..உயிரோசை மேட்டரைச் சொன்னதிற்கும் மிக்க நன்றி தல.மகிழ்வாய் உணர்கிறேன்.
நன்றி அசோக்,
நன்றி பிரபாகர்
நன்றி மகேஷ்
நன்றி வெண்பூ
நன்றி செய்யது
நன்றி மனோ..
அனுஜன்யா.. மோதிப்பார்த்துறுவோம்..உயிரோசைல வேற உசுப்பேத்திட்டாங்க..கேர் ஃபுல்..என்னச் சொன்னேன்.
நன்றி டிவிஆர் ஸார்
நேசன்..தாடி தெரியுதா? மரக்கட்டைப் பேனா?
வருத்தம் சாமுண்டி..இரங்கல்.
நன்றி பரிசல்
யாத்ரா..நன்றி.
நன்றி வித்யா
நன்றி சகான்னு சொலச்சொல்றியா சகா அந்த கமெண்ட்டுக்கு? ஹிஹிஹி
நன்றி ராஜாராம் ஸார்
நன்றி நுந்தா
நன்றி மண்குதிரை
நன்றி ம.சி.
நன்றி
வாழ்த்துக்கள்
நன்றி அமுதா கிருஷ்ணா
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா.
சில நேரங்களில் இப்படியும் வாழ வேண்டியிருக்கிறது. நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவரே சொன்னாரே 'நட்பது நட்பன்று'. எனவே நட்பு அப்படி இருந்தால்தால்தான் குறை. என் அதிகாரியிடம் சில- மன்னிக்க பல- நேரம் நான் அப்படிதான் இருக்கிறேன்.
That's a good poem..
I have added it to the படித்தது / பிடித்தது series in my site.
http://www.writercsk.com/2009/10/71.html
Post a Comment