இதுவரை பொடி நடையாக யாத்திரையில் இருந்த யாத்ரா நாளை முதல் வாழ்க்கைப் பயணத்தை விறுவிறு என தொடங்க இருக்கிறார். நாளைக்கு நிச்சயதார்த்தம் (லாக்..வெட் லாக்..லாக்கே தான்). வாழ்த்துக்கள் கவிஞர் யாத்ரா. இனி தான் பயணமே.
*******
‘எல்லா சாலைகளும் ரோமை நோக்கி’ என்ற வாசகம் போல அடுத்த மாதம் (டிசம்பர்) 30ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடக்கும் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகம் நோக்கியே சென்னை வாசி(ப்பாளி)களின் கால்கள்/சக்கரங்கள் போகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த முறை சில அல்லது பல சுவாரஸ்யங்கள் இருக்கப் போவது போலத்தான் பட்ஷிகள் சொல்கின்றன.
கிழக்கு பதிப்பகம் 100 புத்தகங்களுக்கு மேல் வெளியிட இருக்கிறது என்பது ஒரு செய்தி என்றால்,
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக இதுவரை சொல்லப்படாத, இந்திய பியூரோக்சியின் இன்னொரு முகத்தை, இன்னும் பல திடுக் தகவல்களுடன், முதன்மை புலனாய்வு அதிகாரியாக இருந்த ரகோத்தமன் எழுதியிருக்கும் புத்தகம் ஹைலைட்டாக அமையும் என்கிறது பட்ஷி.
சுப்ரமணியபுரம், நாடோடிகள் படங்களின் திரைக்கதையையும் புத்தகமாக வெளியிடுகிறது கிழக்கு..வெளுக்கும்.
உயிர்மையும் 100 புத்தகங்கள் வெளியிடுகிறது. சாரு, எஸ்ரா,ஜெமோ என வியூகம் பலமாக இருக்கிறது.
பறக்கும் முன் பட்ஷி சொன்ன இன்னொரு தகவல்.. பதிவர்களின் சிலரின் தொகுப்புகளும் வருகிறதாம்..ரைட்ட்ட்டு.
**********
ரமேஷ் வைத்யாவிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, நூல் விமர்சனம், இலக்கிய விசாரங்கள்(அப்படித்தான் சொல்லனுமாம்) என நடந்த பேச்சில், அவர் சொன்ன ஒரு தகவல் இன்னமும் என்னில் இருந்து அகலவில்லை.
அசோகமித்ரன் ஏதோ ஒரு எழுத்தாளரின் தொகுப்பைப் பற்றிய விமர்சனம் ஒன்றில், அந்த தொகுப்பின் இலக்கிய சிலாகிப்புகளைச் சொல்லிக்கொண்டே வரும் பொழுது,
விகடனில் இவருடைய கதைகள் வெளிவந்திருக்கின்றன!
என்ற வரிகளையும் எழுதி இருந்தாராம். அந்த மொத்த மதிப்புரையிலும் இந்த ஒரு வாக்கியத்தில் மட்டுமே ஆச்சர்யக் குறி பயன்படுத்தி இருந்தது தான் மேட்டரே. அந்த ஒற்றைக் குறியில் விகடனின் தேர்ந்தெடுப்பு, அல்லது வெகுஜன இதழில் இதுபோன்ற விசயங்கள் வருவது போன்ற என்னென்ன ஆச்சர்யங்கள் இருக்கிறதோ அத்தனையும் ஒற்றைக் குறியில் சொல்லிவிட்டுப் போவது என்பது எவ்வளவு பெரிய !.
இது எப்பொழுது சாத்தியமாகும் என்று யோசித்துப் பார்த்தால், அது போன்ற குறிகளை சகட்டுமேனிக்கு பயன்படுத்தாமல் எங்கு தேவையோ அங்கே மட்டும் பயன்படுத்தத் தொடங்கினால் மட்டுமே இப்படியான குறிப்பால் உணர்த்தமுடியும் என்ற முடிவுக்கு வரவைத்துவிட்டது. !மாக இருக்கிறதா?
********
இன்று வெளியான விகடன் இதழின் 20ம்பக்கத்தில் நம் புதுகைப்புயல் அப்துல்லாவின் பரண் கவிதை வந்திருக்கிறது.அன்னாருக்கு, ஸாரி,அண்ணாருக்கு வாழ்த்துக்கள்.
போலவே, ஜெனோவா என்ற பதிவரின் கவிதையும் படத்துடன் வந்திருக்கிறது. வாழ்த்துகள் ஜெனோவா.
நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
**********
பூஜ்ஜியங்களின் மதிப்பு, மைல்கல்களைத் தொடும்பொழுது தான் தெரிகிறது. ஆயிரம் பதிவுகள் என்று சொல்லும் பொழுதே கண்ணைக் கட்டுகிறது.. கண்ணனைக் கட்டவில்லை..ஆம் கோவி கண்ணன்... நான் பதிவெழுத ஆரம்பித்த புதிதில் இந்தப் பெயர் எப்படி பதிவுலகில் புயலாக இருந்ததோ இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறது. 1000 பதிவுகள் என்பது சாதாரண உழைப்பு அல்ல. வாழ்த்துக்கள் கோவிகண்ணன். சக பதிவராக 1000 பதிவுகள் என்பது எவ்வளவு கடினமான எண்ணிக்கை என்பதன் அர்த்தம் அறிந்து வாழ்த்துகிறேன்.. வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய எழுதுங்கள் பாஸ்.
************
உரையாடல் அமைப்பு ஆரம்பித்து விட்டது மீண்டும் தன் வேலையை. ஆம்.
உரையாடல் அமைப்பு நடத்தப் போகும் இந்த கவிதைப் போட்டி நிச்சயம் பதிவுலகின் இன்னுமொரு மிக முக்கிய நிகழ்வாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
ஜ்யோவ்.சுந்தர்ஜியும் சிவராமனும் தங்களின் பதிவுலக வாழ்வில் செய்யும் மகத்தான பணியாகத் தான் இதைப் பார்க்கிறேன். சிறுகதைப் பட்டறை மூலம் மிக நல்ல பயன் பெற்ற பதிவுலகம் இப்பொழுது கவிதை குறித்தான போட்டியும் அதன் பிறகு,வரும் கவிதைகளைப் பார்த்து “இப்பிடி எல்லாம் எழுதக்கூடாது(டா)ப்பா” என்ற அர்த்தத்தில் பட்டறையும் நடத்தப் போவதும் நிச்சயம்.
கிட்டத்தட்ட எல்லாக் கவிஞர்களுமே பேனா சகிதம் வானம் பார்க்க ஆரம்பித்திருப்பார்கள். அனைவருக்குமே வாழ்த்துக்கள்.
நன்றி ஜ்யோவ்ஜி & சிவராமன்.
*********
வானம்பாடிகள் என்ற இவரின் பதிவுகள் அதி சுவாரஸ்யம்.வயது 52 என்று போட்டிருக்கிறார். ம்ஹூம்..கவிதைகளைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. எனக்கு மிகப் பிடித்திருந்தது இவரின் தளம்..ஏற்கனவே பதிவுலகில் இவர் மிகப் பிரபலம் என்றாலும் இவரை சரியாக வாசிக்காமல் விட்டது தவறாகப் பட்டது எனக்கு. சிங்கையில் இருந்து பதிவர் பிராபகர் ஒருமுறை இவர் குறித்து பேசியபொழுது படித்துப் பார்த்தேன். பிடித்துப் போனது.
**********
நன்றி.
Thursday, November 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
பட்சி... சொன்னது...
பட்சி சொல்கிறது...
என்று சொல்கிறீர்களே...
அது என்ன பட்சி?
எனக்கு தெரிஞ்சது எல்லாமே
கடலை மாவு பஜ்ஜி தான்.
(இந்த கவிதையை(!) யாரும் வெளி இடமாட்டார்கள், ஆவ்வ்வ்வ்...
அதனாலே இங்கேயே வெளியாகிறது... ஆ...வ்வ்வ்வ்வ்)
கலந்து கட்டி அடிச்சது நல்லாவே இருக்கு தல
எண்ணங்கள் அருமை. நல்ல எண்ணங்களே நம்மை வளர்க்கின்றன என்பதை உங்கள் எழுத்துக்கள் மறுபடியும் நிரூபிக்கின்றன.
1000 கண்ட கோவியாருக்கு வாழ்த்துகள்.
வானம்பாடிகள் பற்றி நீங்க சொன்னது 100க்கு 100 சரிங்க.
கொடுத்து வைத்தவங்க, புத்தக கண்காட்சிக்கு போவாங்க..
(W)riteu..
நல்ல தொகுப்பு :)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
"வானம்பாடிகள் என்ற இவரின் பதிவுகள் அதி சுவாரஸ்யம்.வயது 52 என்று போட்டிருக்கிறார். ம்ஹூம்..கவிதைகளைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை"
எனக்கு இதில் உடன்பாடு இல்லை ........ நீங்க இப்புடி எழுதிருக்க கூடாது ... வேறு மாதிரி எழுதி இருக்கலாம்.
பதிவு நன்று .... நானும் இந்த தடவை புத்தக கண்காட்சியில் நன்றாக அறுவடை செய்யலாம் என்று இருக்கிறேன்
nice!
எண்ணங்களும், அதை எழுத்தாக்கிய விதமும் ரசிக்கவைக்கிறது. யாத்ரா, அப்துல்லா, ஜெனோவா, கோவிக்கண்ணன் இவர்களுக்கு முறையே எனது வாழ்த்துக்கள்.
சரியான நேரத்தில் வானம்பாடிகளை அடையாளம் கண்டிருக்கிறீர்கள்.
ஆயிரம் பதிவா...
நமக்கு இப்போவே கண்ண கட்டுதே...
கோவி சாருக்கு வாழ்த்துக்கள்
பறக்கும் முன் பட்ஷி சொன்ன இன்னொரு தகவல்.. பதிவர்களின் சிலரின் தொகுப்புகளும் வருகிறதாம்..ரைட்ட்ட்டு.
யாருன்னு எனக்கு தெரியும்,சொல்லவா , வேண்டாமா?
சரி, நம்ம மக்களுக்காக ஒரு க்ளு.
அழகின் நாயகன், கம்பனின் பேரன், என்ணங்களின் கதா நாயகன்.
வானம்பாடி...நல்ல படைப்பாளியை அடையாளம் கண்டதில் மகிழ்ச்சி..
அவருடைய மொக்கைகளை வாசித்துப் பாருங்கள்... வயிற்றி வலி உறுதி
வாழ்த்துக்கள் ;)
யாத்ரா, அப்துல்லா, கவிதைப்போட்டி எல்லாம் டிட்டோவா நானும் எழுதி வெச்சிருக்கேன்.?
இப்ப நான் என்ன பண்ண.?
புத்தகக் கண்காட்சி, கவிதைப் போட்டி தகவலுக்கு நன்றி. கோவி சாரின் சாதனையோடு என்னையும் சுட்டியமைக்கு மிக்க நன்றி நர்சிம். ‘என்’ணங்கள் அருமை.
இது என்ன கவிதை ஸ்பெஷலா தல?
கவிதை போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.. ம்ம்.. நமக்கு தான் வர மாட்டேங்குது..:(
அங்கங்கே நகைச்சுவையோடு நல்ல ‘என்’ணங்கள்.
புத்தக கண்காட்சி பற்றிய தகவலுக்கு நன்றி. கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் வாழ்த்துகள்.
பகிர்விற்கு நன்றி நர்சிம்..
வழக்கம்போல் என்ணங்களின் தொகுப்பு சுவையாக இருப்பதில் ! X
எக்ஸ்பிரஸ் வேகம்! வழக்கம் போல, சுவாரசியமான பதிவே.
இந்த முறை புத்தகக் கண்காட்சிக்கு, பதிவர்கள் எல்லாம் ஏன் ஒரே நாளில் செல்லக்கூடாது?
புத்தக கண்காட்சியா .. சித்திரை பொருட்காட்சியா ..?.
//இந்த முறை புத்தகக் கண்காட்சிக்கு, பதிவர்கள் எல்லாம் ஏன் ஒரே நாளில் செல்லக்கூடாது
//
இந்த கொரங்கு இருக்குல்ல கொரங்கு...அது கள்ளையும் குடுச்சு அப்புறம் அதை தேளும் கொட்டினா என்னவாகுமோ அப்படி ஆயிரும் :)
kavidhai ellam romba kastama irukku purinjikrathuku.. so andha matter ku naan varala..
/*(டிசம்பர்) 30ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை */
indha vaati yen dates ellam munnadi thalli pottutanga... eppavume pongal vidumuraiyoda sethu thaana vaipanga... makkal kootam kuraiyum nu nenaikeren...
மாப்பிள்ளைக் கவி யாத்ராவுக்கும் அசால்ட்டுக்கவி அப்துல்லாவுக்கும் வாழ்த்துக்கள் !!!
//பறக்கும் முன் பட்ஷி சொன்ன இன்னொரு தகவல்.. பதிவர்களின் சிலரின் தொகுப்புகளும் வருகிறதாம்..ரைட்ட்ட்டு.//
ஆமா உங்க புக் கூட வருதுன்னு எனக்கு ஒரு பட்ஷி சொல்லிச்சுங்க..மெய்யாலுமா ???
யாத்ரா, அப்துல்லா , கவிதைப் போட்டி -- வாழ்த்துக்கள்
வானம்பாடிகள் பதிவு - இன்று இரவு படிக்க வேண்டும்
அப்புறம் புத்தக கண்காட்சியுடன் ஒரு முக்கிய புள்ளியின் சிறுகதை தொகுப்பும் வருகிறதாமே ;-))
நன்றி தல .
"என்”ணங்கள் ஃபைன்.
//அந்த ஒற்றைக் குறியில் விகடனின் தேர்ந்தெடுப்பு, அல்லது வெகுஜன இதழில் இதுபோன்ற விசயங்கள் வருவது போன்ற என்னென்ன ஆச்சர்யங்கள் இருக்கிறதோ அத்தனையும் ஒற்றைக் குறியில் சொல்லிவிட்டுப் போவது என்பது எவ்வளவு பெரிய !.//
!யமாகதான் உள்ளது.
vikatan la erndu peroda kavithaiyaiyum padithen... arumaiya irukku
ஜூப்பரு ~!!!
நல்ல எண்ணக் கலவை நர்சிம்..
Cable Said
’’கவிதை போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.. ம்ம்.. நமக்கு தான் வர மாட்டேங்குது..:(’’ - தெரிஞ்சா சரி யூத்து,, இதே மாதிரி செந்தழலுக்கும் கதை பத்தி புரிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
முதல்ல 400 பின் தொடர்பவர்கள் அடைந்தமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா...
இதுக்கு ஊர் வந்தா ட்ர்ரீட் கொடுக்கணும் சரியா?
பதிவர்கள் அப்துல்லா,ஜெனோவா,கோவிக்கண்ணன்ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகளும்,வாழ்த்துக்களும்..
எங்க நைனாவ இத்தனை நாளா உங்களுக்கு தெரியாதா?
பதிவுலக இளைய சூப்பர்ஸ்டார் வானம்பாடிகள் பாலாக்கு என் வாழ்த்துக்கள்...நைனா நீயும் ட்ரீட் குடுக்கணும் சரியா..?
நல்ல எண்ணங்கள் நர்சிம்.
thanks narsim for the info. just wrote a comment in sivaraman's blog.
கலவையான(கவிதையான) என்ணங்கள்..
//.. எம்.எம்.அப்துல்லா said...
//இந்த முறை புத்தகக் கண்காட்சிக்கு, பதிவர்கள் எல்லாம் ஏன் ஒரே நாளில் செல்லக்கூடாது //
இந்த கொரங்கு இருக்குல்ல கொரங்கு...அது கள்ளையும் குடுச்சு அப்புறம் அதை தேளும் கொட்டினா என்னவாகுமோ அப்படி ஆயிரும் :) ..//
அண்ணே, முடியலண்ணே..
வானம்பாடிகள் என்ற இவரின் பதிவுகள் அதி சுவாரஸ்யம்.வயது 52 என்று போட்டிருக்கிறார். //
இன்னொரு யூத் லிஸ்டில் சேர்கிறாரா? சரிதான்.
//(இந்த கவிதையை(!) யாரும் வெளி இடமாட்டார்கள், ஆவ்வ்வ்வ்...
அதனாலே இங்கேயே வெளியாகிறது... ஆ...வ்வ்வ்வ்வ்)
//
இந்த ஸ்டைல் வேறொரு பிரபல பதிவரை ஞாபகப்படுத்துகிறதே
நீங்க தான் அவரா :) :) :)
அனைவருக்கும் மிக்க நன்றி.
@ வசந்த்..நிச்சயமாக ட்ரீட் இருக்கு பாஸ்.. ஊருக்கு வரும்பொழுது போன் பண்ணுங்க.
அன்பின் நர்சிம், உங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்துகள் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது, மிக்க நன்றி ( லாக் தானா :) )
இங்கு உங்கள் பதிவிலும் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
உங்கள் என் ணங்கள் ல் இடம் பெற்றிருக்கும் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
உரையாடல் களம் ஏற்படுத்தும் வாய்ப்புகள் பதிவர்களுக்கு மிக முக்கியமானவையாகும். தொடர்ந்து அனைத்து பதிவர்களும் முயற்சிக்க வேண்டும்.
நர்சிம்,
எனது 1000 பதிவுகள் பற்றி உங்கள் என்' ணங்களில் பகிர்ந்து கொண்டு பாராட்டி வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.
இங்கு பின்னூட்டங்களிலும் பாராட்டு வாழ்த்து தெரிவித்த பதிவர் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி !
வாவ்.. புத்தகக்கண்காட்சி. மகிழ்ச்சியுடன் செல்லக் கூடிய, வருங்காலத்தின் நம்பிக்கையை அதிகப்படுத்தக் கூடிய இடம்.
இந்த தடவை முன்பே நடத்துவது நல்லது. பொங்கலுடன் மிக்ஸ் பண்ணி கொஞ்சம் கஷ்டமா இருந்தது. தேதி கன்பார்ம் தானா ?
--
உங்களுக்கு எப்படிங்க படிக்க நேரமிருக்கு. அந்த ரகசியத்த சொல்லுங்க. புத்தகத்த எடுத்த என் பையன், அவன் படிக்கனும்னு வாங்கிக்கிறான் :)
---
கோவி.கண்ணன் - 1000 , வானம்பாடி அய்யா வாழ்த்துக்கள்.
புது புத்தகம்...
விகடன்ல கவிதை..
கலக்கறீங்க நர்சிம்..
வாழ்த்துக்கள் :)
Post a Comment