Wednesday, November 4, 2009

பிடித்த பதிவர்..பிடிக்காத பதிவர்.

பரிசல் இதைத் தொடரச் சொல்லி அழைத்தார்.முடியாது என்று பின்னூட்டம் இட்டேன்.துண்டைப் போட்டு தாண்டி விட்டதாகவும் மிக நல்ல குளியல் போட்டதாகவும் சொன்னார்.சரி என்று சொல்லி போனை வைத்துவிட்டு குளித்ததை எல்லாம் ஏன் சொல்கிறார் என்று யோசித்துப் பார்த்தேன்.அய்யயோ முழுக்கு என்ற அர்த்தமோ என்று அழைத்துக் கேட்டால் ஆமோதித்தார்.

ரைட்டு...

காதலுக்கு நண்பனை
தூது விட்ட நாட்கள்..
பின்
நண்பனுக்காக அந்த
காதலையே
தூக்கி எறிந்த நாட்கள்

என்று கல்லூரி நாட்களில் எழுதிய கவிதை கண்முன் வந்தது.

பரிசல்..என்ற நண்பனுக்காக..இந்தத் தொடர் பதிவு...

இந்தப் பதிவோட விதிகள்:(பரிசல் குரலில்)

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

என் பங்குக்கு எக்ஸ்ட்ரா ஒரு விதிமுறை: இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும். இல்லீன்னா பாரதிக்கப்புறம் கவிஞரே இல்லை, காமராஜருக்கப்புறம் தலைவரே இல்லைங்கற உண்மைகள் தொடர்ந்துட்டே இருக்கும். இருக்கறவங்கள்ல பெஸ்ட், வொர்ஸ்டைச் சொல்லுவோமே! (எப்படி மாட்டிவிட்டேன் பார்த்தீங்களா!)

*****
இனி

1.அரசியல் தலைவர் :

பிடித்தவர் : ஜெயலலிதா(ஆளுமை.)
பிடிக்காதவர்: மு.க.அழகிரி(தோழர் லீலாவதி கொலையை பார்த்ததில் இருந்து)

2.எழுத்தாளர்
பிடித்தவர் : எப்பொழுதும் சுஜாதா..இப்பொழுது, எழுதும் அனைவரும்
பிடிக்காதவர் : எல்லோருடைய எழுத்திலும் ஏதாவது ஒன்று கற்றுக் கொள்ள இருக்கத்தான் செய்கிறது.அட்லீஸ்ட் எப்படி எழுதக் கூடாது என்று தெரிந்து கொள்ளவாவது.

3.கவிஞர்
பிடித்தவர் : வைரமுத்து
பிடிக்காதவர் : விவேகா(உன் இடுப்பு ஒன்னு!)

4.இயக்குனர்
பிடித்தவர் : பாலா
பிடிக்காதவர் : கே.பாலச்சந்தர்

5.நடிகர்
பிடித்தவர் : சத்யராஜ்(ரெங்காராவைப் பிடிக்கும்.இவர் அவரின் மாற்று)
பிடிக்காதவர் : ஜெயம் ரவி(யின் குரல்)

6.நடிகை
பிடித்தவர் : த்ரிஷா(தோழி என்பதாலும்)
பிடிக்காதவர் : ஜெனிலியா(சந்தோஷ்சுப்ரமணியம் பார்த்ததில் இருந்து நிறையப் பெண்கள் ஏ..ன்ன்..அப்ப்ப்.டி பார்..க்க்க்.குறே..என்று பேசிக்கொண்டிருந்தது கூடுதல் எரிச்சல்)

7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : எம்.எஸ் விஸ்வநாதன்
பிடிக்காதவர் : தேவிஸ்ரீ பிரசாத்

8. தொழிலதிபர்

பிடித்தவர் : சரத்பாபு(சாதாரண குடும்பத்தில் பிறந்து, படித்து,அந்த படிப்பிற்கான வரவேற்பு அதிகம் இருந்தும் தனக்கான தொழிலைத் தொடங்கி அதில் சாதித்துக் கொண்டிருக்கும் நபர்)

பிடிக்காதவர் :கலைஞர்(என்னைப் பொருத்தவரை அவர் தொழில் அதிபர் தான்)

9.பிடித்த பதிவர் :இதில் பிடித்த பதிவு என்று இருக்க வேண்டும்.சமீபத்தில் டாக்டர் தேவன்மயம் எழுதிய விரிவான கட்டுரை பிடித்திருந்தது.

பிடிக்காத பதிவர் :இதில் கள் விகுதி இருக்க வேண்டும்- நேர்மையற்றவர்கள்(அனானி/வேறுபெயர் என.).அரைவேக்காடுகள் என நிறைய.(ஒரு விசயம் குறித்தான அடிப்படை தேடலோ உழைப்போ இல்லாமல் ஹிட் அண்ட் ரன் மாதிரி எழுதிப் போவது சங்கடமாக இருக்கிறது)
நானும் இந்தக் கூட்டத்தில் ஒருவன். எனவே எழுத்திற்கான அடிப்படை உழைப்பை செலுத்தி எழுதுவதென்பதே தற்பொழுதைய முடிவு.

விளையாட்டு

பிடித்தது : கிரிக்கெட்(ஒரு நொடியில் ஒருவர் ஒரு சிறு தவறு செய்தாலும் 10 பேரின் உழைப்பும் வீண்.)

பிடிக்காதது : கோல்ஃப். (இதை என்ன எழவிற்கு விளையாடுகிறார்கள் என்று இதுவரை தெரியாது.ஒரு பந்தை அடிப்பார்களாம்..பொதி மூட்டையை தூக்கிக்கொண்டு ஒருவர் கூடவே லொங்கட்டி லொங்கட்டி என்று நடந்து வருவாராம். பந்தை அடைந்ததும் மீண்டும் ஒரு தட்டு.. மீண்டும் லொங்கட்டி..ம்ஹூம்..புதிர்.)

..

தொடர அழைப்பது

ஜெனோவா
அன்புடன் மணிகண்டன்
முரளி கண்ணன்
பின்னோக்கி
அதிஷா(எங்கய்யா போனீரு?)

71 comments:

அப்பாவி முரு said...

விதிப்படி(உங்கள் மனதுக்கு பிடிக்காதவர்கள்) நேர்மையான பதில்கள்...

ஸ்ரீமதி said...

அருமையான பதில்கள். :))

ஸ்ரீமதி said...

நாங்க கூப்பிட்டால்லாம் பதிவு போட மாட்டீங்களா?? :)

அப்பாவி முரு said...

கோல்ஃப்.,

நமக்குதான் லொங்கடி லொங்கடி.

சிங்கையில் சிறு, குறு தொழிலதிபர்கள் வியாபாரம் பேசும் இடம் அதுதான்.

பிரியமுடன்...வசந்த் said...

//பிடிக்காத பதிவர் :இதில் கள் விகுதி இருக்க வேண்டும்- நேர்மையற்றவர்கள்(அனானி/வேறுபெயர் என.).அரைவேக்காடுகள் என நிறைய.(ஒரு விசயம் குறித்தான அடிப்படை தேடலோ உழைப்போ இல்லாமல் ஹிட் அண்ட் ரன் மாதிரி எழுதிப் போவது சங்கடமாக இருக்கிறது)
நானும் இந்தக் கூட்டத்தில் ஒருவன். எனவே எழுத்திற்கான அடிப்படை உழைப்பை செலுத்தி எழுதுவதென்பதே தற்பொழுதைய முடிவு.//

இதுக்காகவே உங்களுக்கு முதல் முறையா ஒரு மைனஸ் ஓட்டு போட்ருக்கேன்..

நீங்க சொல்ற மாதிரி எழுதணும்னா பதிவர்கள் எல்லாம் பிஹச்டி முடிச்சுட்டு வந்து எழுதணும் போல...

அரை வேக்காடுன்னு நீங்க எப்பிடி சொல்லலாம்?

பதிவெழுதுறதே எழுத்தை வளர்த்துகிடுறதுக்குத்தான் கொஞ்சம் கொஞ்சமாத்தான் வளரும் வளர்க்கப்படும்..

அப்படி சிறப்பா எழுதினாமட்டும்...

போங்கய்யா நீங்களும் உங்கள் அரைவேக்காட்டுத்தனமும்....

எதுனாலும் தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுக்கங்கண்ணே...

பட்டிக்காட்டான்.. said...

//.. த்ரிஷா(தோழி என்பதாலும்) ..//

அப்படியா.. சொல்லவே இல்ல.. :-)

//.. தொழிலதிபர் பிடித்தவர் : சரத்பாபு ..//

தேர்தல்ல நின்னாரே அவருங்களா..?

கோவி.கண்ணன் said...

//பிடிக்காதவர் :கலைஞர்(என்னைப் பொருத்தவரை அவர் தொழில் அதிபர் தான்)
//

பிடிச்சிருக்கு !
:)

நர்சிம் said...

//அடிப்படை// என்ற வார்த்தையை சொல்லி இருக்கிறேன் வசந்த். Phd என்பதற்கும் L.k.g என்பதற்கும் அந்த அடிப்டை என்ற வார்த்தை வேறுபடுத்துகிறது.

அடிப்படையில் மிகத் தவறான அல்லது அது குறித்த சரியான கருத்தைத் தெரியாமல் ஆனால் மிக முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்து எழுதுவது..என்பது ..

இது என் கருத்து மட்டுமே.

சஹானா beautiful raga said...

[[[[பிடிக்காதவர்: மு.க.அழகிரி(தோழர் லீலாவதி கொலையை பார்த்ததில் இருந்து)

பிடிக்காதவர் : ஜெனிலியா(சந்தோஷ்சுப்ரமணியம் பார்த்ததில் இருந்து நிறையப் பெண்கள் ஏ..ன்ன்..அப்ப்ப்.டி பார்..க்க்க்.குறே..என்று பேசிக்கொண்டிருந்தது கூடுதல் எரிச்சல்)

பிடிக்காதவர் :கலைஞர்(என்னைப் பொருத்தவரை அவர் தொழில் அதிபர் தான்)]]]]]


இது மூணும் ரொம்ப சரி

[[பிடித்தவர் : த்ரிஷா(தோழி என்பதாலும்)]]

சொல்லவே இல்ல

பிடிக்காதவர் : கே.பாலச்சந்தர்

yyyyy

இரும்புத்திரை அரவிந்த் said...

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு மாதிரி ஒன்பதாவது பதில் தான் பிடித்து இருக்கிறது...

இதுக்கு எனக்கு மைனஸ் ஓட்டு விழுமா(என்ன பின்னூட்டத்துக்கு ஓட்டு கிடையாதா..)

சின்ன அம்மிணி said...

நிறைய பேர் பிடிச்ச பதிவர், பிடிக்காத பதிவர்களை தவிர்த்துட்டாங்க போலிருக்கு. :)

KVR said...

//இதுக்காகவே உங்களுக்கு முதல் முறையா ஒரு மைனஸ் ஓட்டு போட்ருக்கேன்..
//

வசந்த், தப்பா சொல்ல வர்றேன்னா மன்னிச்சிடுங்க (எல்லாம் பேசிட்டு மன்னிப்புக் கேக்குறதுக்கு இது மேல்), கொஞ்சம் அதீதமாக உணர்ச்சிவசப்படுறிங்களோன்னு தோணுது. அடிப்படை முனைப்பு என்ற வார்த்தையை கொஞ்சம் கவனிங்க. பதிவெழுத வரும்போதே அரைவேக்காட்டுத்தனமா இருக்குன்னு யாரும் சொல்ல மாட்டாங்க, அதே சமயம் பதிவெழுத வந்து ரெண்டு மூணு வருஷம் ஆனாலும் அதே மொக்கையை உருட்டிக்கிட்டு இருந்தா அது அரைவேக்காட்டுத்தனம் தான் (ரசிக்கும்படியான மொக்கைகள் வரவேற்கப்படுகின்றன). தன்முனைப்பு இல்லாமை தான் காரணம். அவங்க இஷ்டம் அவங்க இடம் என்ன வேணாம்னாலும் எழுதிட்டுப் போறாங்கன்னு நீங்க சொல்லலாம். அதே மாதிரி அந்தப் பதிவுகள் பிடிக்கலைன்னு சொல்றதுக்கும் ஒருத்தருக்கு உரிமை இருக்கில்லையா? பதிவெழுத வந்து மூணு நாலு வருஷம் ஆகியும் ஹிட்ஸ்க்காக மட்டும் பதிவெழுதுற, குறைந்தபட்சம் தமிழைத் தவறில்லாம எழுதப் பழகுற தன்முனைப்பு கூட இல்லாத நிறைய பதிவர்கள் இருக்காங்க தலைவா (என்னையும் சேர்த்து தான் சொல்றேன்). எனக்கென்னமோ ஒரு மைனஸ் ஓட்டை வேஸ்ட் பண்ணிட்டிங்கன்னு தோணுது :-)

இளவட்டம் said...

///அடிப்படையில் மிகத் தவறான அல்லது அது குறித்த சரியான கருத்தைத் தெரியாமல் ஆனால் மிக முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்து எழுதுவது..என்பது ..

இது என் கருத்து மட்டுமே///

உண்மையான கருத்தும் கூட.

///கலைஞர்(என்னைப் பொருத்தவரை அவர் தொழில் அதிபர் தான்)///

ஆட்டோ வரப்போகுது சார் பாத்து.

K.R.அதியமான் said...

////பிடிக்காதவர் :கலைஞர்(என்னைப் பொருத்தவரை அவர் தொழில் அதிபர் தான்////

மிகவும் சரி !

///பிடிக்காதது : கோல்ஃப். (இதை என்ன எழவிற்கு விளையாடுகிறார்கள் என்று இதுவரை தெரியாது.ஒரு பந்தை அடிப்பார்களாம்..பொதி மூட்டையை தூக்கிக்கொண்டு ஒருவர் கூடவே லொங்கட்டி லொங்கட்டி என்று நடந்து வருவாராம். பந்தை அடைந்தது மீண்டும் ஒரு தட்டு.. மீண்டும் லொங்கட்டி..ம்ஹூம்..புதிர்.)///

வெய்யிலில் காயவும், நடை மூலம் உடற்பயிற்ச்சிக்காகவும் வெள்ளையர் கண்டுபிடித்த விளையாட்டு இது. (கிரிக்கெட்டும் தான்). வெய்யல் அதிகம் உள்ள நாடுகளுக்கானது அல்ல. எலெக்ட்ரிக் கார்களில் பயணித்து கால்ஃப் விளையாடுவது முரண் நகை.

மணிகண்டன் said...

எல்லாமே நல்ல பதில் நரசிம் :)- தொழிலதிபரா கலைஞர் பிடிக்காம போக காரணம் !!! (காரணங்கள் எழுத அவசியமில்லைன்னு ஒரு விதி சேர்க்கணும் )

மணிகண்டன் said...

கோல்ஃப் கூட நல்ல விளையாட்டு தான். நிச்சயமா விளையாடினா/ பார்த்தா உங்களுக்கு பிடிக்கும் !

அ.மு.செய்யது said...

//.(ஒரு விசயம் குறித்தான அடிப்படை தேடலோ உழைப்போ இல்லாமல் ஹிட் அண்ட் ரன் மாதிரி எழுதிப் போவது சங்கடமாக இருக்கிறது)
//

வ‌ழிமொழிகிறேன்...!!! ச‌ங்க‌ட‌மாக‌ இருப்ப‌து ஒருபுற‌மிருக்க‌ட்டும்.அடுத்த‌வ‌ர்
ம‌ன‌தை புண்படுத்தும் எழுத்துக்க‌ள்.

சுசி said...

நல்ல பதில்கள்.

கோல்ஃப் பத்தி எழுதின விதம் ஹாஹாஹா....

ஜெனோவா said...

ஜி ,
பதில்கள் அருமை , கீழிருப்பது குறிப்பாக ரொம்ப பிடித்துப்போன பதில்
//பிடிக்காதவர் :கலைஞர்(என்னைப் பொருத்தவரை அவர் தொழில் அதிபர் தான்)//

நம்பளையும் ஒரு மனுசனா மதிச்சி கூப்டிடீங்க , அழைப்பிற்கு ரொம்ப நன்றி ..
எழுதிட்டு சுட்டி தாரேன் ...

வாழ்த்துக்கள்

பீர் | Peer said...

//மணிகண்டன் said...
எல்லாமே நல்ல பதில் நரசிம் :)- தொழிலதிபரா கலைஞர் பிடிக்காம போக காரணம் !!! //

அவர் தேர்ந்தெடுத்திருக்கும் தொழில். (இல்லையா நர்சிம்)

பீர் | Peer said...

நர்சிம், இனி தொடர் பதிவு எழுத முடியாதுன்னு சொல்வீங்களா?

//எனவே எழுத்திற்கான அடிப்படை உழைப்பை செலுத்தி எழுதுவதென்பதே தற்பொழுதைய முடிவு.//

இந்த மாதிரி தொடர் பதிவுகளுக்கு உழைப்பு வேணாம்ல.. :)

பின்னோக்கி said...

அட ஜாலியா உங்கள் பதில் எல்லாம் படிச்சுட்டு..கடைசியில பார்த்தா என் பேர் இருக்கு...

//கருணாநிதி - தொழில் அதிபர்

நல்லாயிருந்துச்சு.

தண்டோரா ...... said...

நர்சிம்..ஆனாலும் உங்களுக்கு நக்கல் ஜாஸ்திதான்

கார்க்கி said...

வண்டில ஏறியாச்சா சகா?

ஸ்ரீமதி கமெண்ட்டுக்கு பதில் என்னப்பா?

ஹிஹிஹிஹி

கணேஷ் said...

வழக்கம் போல் கலக்கல்!

By
-ஓர் அரைவேக்காடு

தீப்பெட்டி said...

//அரைவேக்காடுகள் என நிறைய.(ஒரு விசயம் குறித்தான அடிப்படை தேடலோ உழைப்போ இல்லாமல் ஹிட் அண்ட் ரன் மாதிரி எழுதிப் போவது சங்கடமாக இருக்கிறது)
நானும் இந்தக் கூட்டத்தில் ஒருவன்//

கூட்டத்திற்கு தலைமை பொறுப்பேற்க அழைக்கிறோம்..
:)

பி.கு: நான் பிளஸ் ஓட்டு போட்டிருக்கிறேன்..

செ.சரவணக்குமார் said...

உங்களின் நேர்மையான பதில்கள் மிக அருமை நண்பரே.

நர்சிம் said...

//சின்ன அம்மிணி said...
நிறைய பேர் பிடிச்ச பதிவர், பிடிக்காத பதிவர்களை தவிர்த்துட்டாங்க போலிருக்கு. :)

//

கரெக்ட்ங்க.

எதுனாலன்னு புரிஞ்சதா இப்போ...

*********

நன்றி கணேஷ்..நீங்கள் ‘ஓர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதில் இருந்தே நீங்கள் அரைவேக்காடு அல்ல என்பதை தெரிந்துகொண்டேன்.(அ-ஒள வரையிலான ஆரம்ப எழுத்து வார்த்தைகளுக்கு ஓர் போட வேண்டும் என்பதே வெந்த நிலைதான் தலைவா)

by
ஒரு வேகத்துடிக்கும் அரை வேக்காடு.

@ தீப்பெட்டி
நான் கடைக்கோடி தொண்டன் தலைவா.

நர்சிம் said...

@ சஹானா

//பிடிக்காதவர் : கே.பாலச்சந்தர்

yyyyy//

Becoz...

மேனரிஸம் என்ற பெயரில் சும்மா சும்மா கண்களை சிமிட்டிக் கொண்டு பேசும் பெண்கள்,ஒரு வார்த்தையை திருப்பி திருப்பிச் சொல்ல வைப்பது..பொம்மையக் காட்டுவது அதை ஆட்டுவது என..நிறையச் சொல்லலாம்.சினிமாவை கடைசிவரை நாடகமாகவே எடுத்தவர்.
புரட்சிகளை செய்தவர் என்றாலும்

கையேடு said...

//நானும் இந்தக் கூட்டத்தில் ஒருவன். எனவே எழுத்திற்கான அடிப்படை உழைப்பை செலுத்தி எழுதுவதென்பதே தற்பொழுதைய முடிவு.//

உழைப்பின் அளவையும், புரிதலின் அளவையும் (உங்களது அடிப்படையில்) எப்படி அளவிடுகிறீர்கள்? எப்போது நிறைவை உணர்கிறீர்கள்?.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பிடிக்காதது : கோல்ஃப். (இதை என்ன எழவிற்கு விளையாடுகிறார்கள் என்று இதுவரை தெரியாது.ஒரு பந்தை அடிப்பார்களாம்..பொதி மூட்டையை தூக்கிக்கொண்டு ஒருவர் கூடவே லொங்கட்டி லொங்கட்டி என்று நடந்து வருவாராம். பந்தை அடைந்ததும் மீண்டும் ஒரு தட்டு.. மீண்டும் லொங்கட்டி..ம்ஹூம்..புதிர்.)


:)))))))))))))))

வெண்பூ said...

//
அய்யயோ முழுக்கு என்ற அர்த்தமோ என்று அழைத்துக் கேட்டால் ஆமோதித்தார்
//

உடனே குஷியாகி இருப்பீங்களே.. சந்தோசம் உங்க எழுத்துலயே தெரியுது.. இப்படி ஒரு சான்ஸ் எங்களுக்கெல்லாம் கிடைக்க மாட்டேங்குதே.. :)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி கணேஷ்..நீங்கள் ‘ஓர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதில் இருந்தே நீங்கள் அரைவேக்காடு அல்ல என்பதை தெரிந்துகொண்டேன்.(அ-ஒள வரையிலான ஆரம்ப எழுத்து வார்த்தைகளுக்கு ஓர் போட வேண்டும் என்பதே வெந்த நிலைதான் தலைவா)


ஓஹோ........ பின்னூட்டத்த படிச்சாலே நெறைய கத்துக்கலாம் போல.

D.R.Ashok said...

நண்பர்கள் இருவரும் ஸ்மார்ட், பதில்களும்.

1.//மு.க.அழகிரி(//(அதிர்ச்சி, எனக்கு தெரியாத விஷயம், யாராவது பதிவிட்டால் நன்று.

2.கே.பி.(பெண்கள உயர்த்தறேன்னு அதிகம் லூசா காட்டுனவர், ஆனால் சிறு வயதில் என்னை போன்றோருக்கு அவர்தான் ‘உலக சினிமா’ என்றாலும் மிகையில்லை. அப்போல்லாம் டிவியே சில பேர் வீட்ல தான் இருக்கும்.)

3.த்ரிஷா(தோழி என்பதாலும்)
(இங்க ஒரு காண்டு வந்து போச்சு :)...ம்ஹும்...)
(வால் கவனிக்கவும்)

4. கலைஞர்(என்னைப் பொருத்தவரை அவர் தொழில் அதிபர் தான்)
உங்க நக்கலு ரொ.பி.


மொத்தத்ல நேர்மை, துனிவு & சுவை.

D.R.Ashok said...

//அ-ஒள வரையிலான ஆரம்ப எழுத்து வார்த்தைகளுக்கு ஓர் போட வேண்டும் என்பதே வெந்த நிலைதான் தலைவா//

ஹிஹிஹி நானும் இப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன்

கபிலன் said...

பாலச்சந்தரை பிடிக்காதுன்னு சொல்லிருக்கீங்களே? ஏன்?

SanjaiGandhi™ said...
This post has been removed by the author.
SanjaiGandhi™ said...
This post has been removed by the author.
நர்சிம் said...

@ சஞ்சய் காந்தி

‘வேறுபெயர்’ என்பதை நீங்கள் எடுத்துக் கொண்டவிதத்தைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை..அல்லது

உங்கள் அளவிற்கு நான் எழுதத் தெரியாது என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும் .

//விடுங்க பாஸ்.. வச்சிக்கிட்டா வஞ்சனைப் பண்றோம். புதியதாக ஒருவர் ஒரு விஷயம் பற்றி எழுத ஆரம்பிக்கும் போது, அதில் நிபுணத்துவம் பெற்றிருப்பவர்களுக்கு நிச்சயம் அந்த புதியவரின் முயற்சி குறையாகத்தான் தோன்றும். அதுக்காக அரைவேக்காடெல்லாம் டூ மச் பாஸ்.//

மிக அற்புதமாக எனக்கு விளக்கியதற்கு மிக்க நன்றி சஞ்செய்காந்தி..

SanjaiGandhi™ said...

மன்னிக்கவும் நர்சிம்.

Vidhoosh said...

//நாங்க கூப்பிட்டால்லாம் பதிவு போட மாட்டீங்களா?? :)// repeating... :X
-vidhya

நாடோடி இலக்கியன் said...

பளிச் பதில்கள்.

//அ-ஒள வரையிலான ஆரம்ப எழுத்து வார்த்தைகளுக்கு ஓர் போட வேண்டும்//

நினைவூட்டியதற்கு நன்றி நண்பா.

நர்சிம் said...

சஞ்சய்

என்ன ஆனது பாஸ்? நீங்கள் சொன்னீர்கள் நான் பதில் சொன்னேன்.வேறு பெயர் என்பதை நான் other option ல் இஷ்டத்திற்கு வந்து சொல்வதை தவறாக எழுதுவதை ஆபாசமாக எழுதுவதைச் சொன்னேன் என்று எல்லோருக்கும் புரியும் விதத்தில் எழுதவில்லை என்பதைத் தான் சொன்னேன்.

*****

அரைவேக்காடு என்று பொத்தாம் பொதுவாகச் சொல்ல வில்லை..பதிவரையும் சொல்லவில்லை..குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி எழுதும் பொழுது ‘அடிப்படை’என்பதை விட்டு எழுதும் பொழுது..??

******

கபிலன் ..சொல்லி இருக்கிறேன்..

*******

கையேடு..

லாடம் அடிப்பது எப்படி என்பது ஓரளவு தெரிந்திருப்பது அடிப்படை.அதற்கு எவ்வளவு வாங்குவார்கள் என்பது தெரியாது.எனவே அது குறிதான விவரங்களை தெரிந்தவர்களிடம் கேட்டு,மீண்டும் அதை உறுதிப் படுத்திக் கொள்வது அந்த தகவலுக்கான உழைப்பு.

பதிவுலகில் லாடம் பற்றி என்ன தெரியும் போடு ஒரு 500 ரூவாயை என்று எழுதுவது தவறு.

முடிந்த அளவு விளக்கி இருக்கிறேன்.

********

இந்தப் பதிவின் மூலம் நான் என்னமோ படுமோசமாக விமர்சித்துவிட்டேன் என்று நினைத்தால்..

அப்படி நினைக்காதீர்கள் என்று சொல்லிக் கொள்கிறேன்.

******

@ பரிசல்: எக்ஸ்கியூஸ் மீன்னு சொன்னாக் கேட்டாத்தானேய்யா..

*******

கையேடு said...

எளிமையான(ஆழமான) விளக்கத்திற்கு நன்றிங்க..

அன்புடன்-மணிகண்டன் said...

என்னைத் தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு நன்றிகள் நர்சிம்!!!
இதோ எனது பதில்கள்...

http://anbudan-mani.blogspot.com/2009/11/1010.html

அன்புடன் மணிகண்டன்

பாபு said...

///கலைஞர்(என்னைப் பொருத்தவரை அவர் தொழில் அதிபர் தான்)///

100% correct

பின்னோக்கி said...

அழைப்புக்கு நன்றி.

http://pinnokki.blogspot.com/2009/11/blog-post_04.html

இதோ பதிவு போட்டாச்சு.

கிராம said...

//பிடித்தவர் : ஜெயலலிதா

பிடிக்காதவர் :கலைஞர்//

ரய்ட்டு

தேவன் மாயம் said...

வந்த இடத்தில் இன்ப அதிர்ச்சி!!! மிகுந்த மகிழ்ச்சிங்க!!

கும்க்கி said...

பரிசலுக்கு நன்றி...

(ஹி...ஹி....சும்மாத்தான்...தாம்பரம் காரர் சார்பாக)

ஜெனோவா said...

ஜி , அழைப்பிற்கு மிக்க நன்றி !
பிடித்து , பிடிக்காத பதிவு போட்டாச்சு ...

http://joemanoj.blogspot.com/2009/11/blog-post_04.html

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

3.கவிஞர்
பிடித்தவர் : வைரமுத்து
பிடிக்காதவர் : விவேகா(உன் இடுப்பு ஒன்னு!)//

கவிஞர் விவேகாவின் கவிதைத் தொகுப்பொன்று அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. அது அவரைப் பற்றி அறிந்துகொள்ள உதவியது.

கவிஞர் வைரமுத்து அவர்களை வெறும் கவிஞனாக மட்டும் எனக்குப் பிடிக்கும். வேறொன்றும் சொல்வதற்கில்லை.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

6.நடிகை
பிடித்தவர் : த்ரிஷா(தோழி என்பதாலும்)//

அப்படியா!?

அது ஒரு கனாக் காலம் said...

அந்த கால்ப் (Golf) விளையாட்டை பற்றி ....

அதன் தளம் நல்ல மரங்களும், செடிகளும், புல்லும் நிறைந்த இடம், நீங்கள் மற்றும் உங்கள் கூட விளையாடுபவர்களும் மட்டுமே , மற்ற படி வேறு நபர்களை பார்க்க முடியாது, சுத்தமான காத்து, பறவைகளின் சத்தம் , ..... வேறு என்ன வேண்டும். அதை விளையாடுவது மிகவும் கடினம், ஆனால் கொஞ்சம் விளையாடவந்த்வுடன், இந்த மாதிரி ஒரு சூழ் நிலையில், சில shots நன்றாக போகும், பலது மோசமாக இருக்கும். அந்த சில shots உங்கள் இதயத்தை வருடி / தாலாட்டி சபாஷ் சொல்லிவிட்டு போகும் ...முடிந்தால் விளையாடி பாருங்க

பதிவு நன்றாக இருந்தது... உண்மை உங்களிடம் உரையாடுகிறது ( விளையாடுகிறது)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பிடிக்காதவர் :கலைஞர்(என்னைப் பொருத்தவரை அவர் தொழில் அதிபர் தான்)
//

அவர் வேலையை சரியாத்தான் செய்யுறார்னு தோனுது.

நல்ல தொழில் அதிபர்கள் தங்கள் குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பார்கள்.

தர்மம் பண்ணுவாங்க. இவரும் அரிசி, டிவி எல்லாம் கொடுத்து தர்மம் பண்ணலையா!?

அப்ப நல்ல தொழில் அதிபர்தானே!?

:)

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...
This post has been removed by the author.
பாலாஜி.ச.இமலாதித்தன் said...

வணக்கம்
அத்திவெட்டி ஜோதிபாரதி,

//அவர் வேலையை சரியாத்தான் செய்யுறார்னு தோனுது.
நல்ல தொழில் அதிபர்கள் தங்கள் குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பார்கள்.தர்மம் பண்ணுவாங்க. இவரும் அரிசி, டிவி எல்லாம் கொடுத்து தர்மம் பண்ணலையா!?
அப்ப நல்ல தொழில் அதிபர்தானே!?//

தர்மம்ங்கறது தன சொந்த உழைப்பின் மூலம் வந்த காசுல கொடுக்க வேண்டியது.கோவில் உண்டியலை உடைச்சிட்டு அந்த சாமிக்கே ஒரு ரூபாய் தட்சிணை போட்டுட்டு போறது எல்லாம் தர்மம் இல்லை...

தலைவர்கள் தொண்டனை உருவாக்காமல் தலைவர்களை உருவாக்குவார்கள்..
அதுபோல் தொழிலதிபர் கருணாநிதியும் பல தொழிலதிபர்களை தன் குடும்பத்திற்குள்ளேயே உருவாக்கி விட்டுவிட்டார்...

நாட்டுல இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி..(கவுண்டமணி ஸ்டைல் )

வாழ்க தொழிலதிபர் கருணாநிதி!

நாய்க்குட்டி மனசு said...

//நல்ல குளியல் போட்டதாகவும் சொன்னார்.சரி என்று சொல்லி போனை வைத்துவிட்டு குளித்ததை எல்லாம் ஏன் சொல்கிறார் என்று யோசித்துப் பார்த்தேன்//

எங்க வீட்ல உள்ளவங்க கொஞ்சம் வித்தியாசமா என்னை பார்கிறாங்க.
பின்ன தனியா உட்கார்ந்து சிரிச்சிகிட்டு இருந்தா ?
கே பாலசந்தர் பற்றிய உங்கள் கருத்தை I object ur honour.
கே பி பிடிக்லைன்னு சொல்லுங்க ஓகே. அதுக்கு சொன்ன காரணம் சரியில்லை.

நேசன்..., said...

த்ரிஷா உங்க ஃப்ரெண்ட்,நீங்க என் ஃப்ரெண்ட் அப்போ நானும் த்ரிஷாவும் ஃப்ரெண்ட் தானே!......

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...

எனது முந்தய பின்னூட்டம் தனிநபரை குறிப்பிட்டு வந்துவிட்டதாம் அதனால் நீக்கிவிடுகிறேன்...

நாஞ்சில் பிரதாப் said...

பிடிக்காதவர் :கலைஞர்(என்னைப் பொருத்தவரை அவர் தொழில் அதிபர் தான்)//

செம பஞ்ச்

ஆதிமூலகிருஷ்ணன் said...

பொத்தாம் பொதுவா சொல்லிட்டு எஸ்கேப்பாகிறலாம்னு நினைச்சீங்களா? எப்பிடி பத்தியெரிஞ்சுது பாத்தீங்கள்ல.. ஹிஹி..

Kirukkan said...

பிடித்த பிடிக்காத பட்டியல் பதிவை
படிக்க படிக்க பிடித்தது.

மற்றுமோர் அரைவேக்காடு,

கிறுக்கன்.

vanila said...

அன்பின் நரசிம் ..

பிடித்த தோழர் / தோழி : சரத்பாபு;
பிடிக்காத தோழர் / தோழி : தீபா வெங்கட்..

பிடித்த (பிடிக்காத) நடிகர் : பிரஷாந்த், ஷாம், அப்பாஸ், ஜெயம் ரவி, (புதிய)ஸ்ரீகாந்த், விஷால், பரத், சிம்பு, (பிடிக்காத-பாதி)தனுஷ், தவிர மற்றவர்கள் எல்லோரையும்..

ஜீ .. Golf மட்டும் இல்லையின்னா என்ன எல்லாம் நடந்திருக்காது என்று பார்த்தால்.. அபூர்வ சகோதரர்கள் படம் முடிஞ்சிருக்காது.. ( நாசர் இறந்திருக்க மாட்டார்.. )

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்துருக்காது.. நண்பரே.. நண்பரே..

ரெண்டு தடவை.. பாட்ட கேட்டுருக்க முடியாது.. (என்னம்மா கண்ணு சௌக்யமா?.. சத்யராஜ ரொம்ப பிடிக்குமாமே.. பரிசல் ஊர்க்காரர் என்பதாலா?) இதுக்கு இலக்கியத்துல என்ன பேருங்க? 3 in 1 குத்துக்கு..?

நன்றி நரசிம்.. சும்மா ஜாலிக்கு.. (நன்றி சீரியஸாக).

பரிசல்காரன் said...

இவ்ளோதானா? இன்னும் ரொம்ப எதிர்பார்த்தேனே...

(பதிவு சூப்பர். நான் பின்னூட்டத் தாக்குதல்களைச் சொல்றேன்!)


நாலு விஷயம் உங்க பதிவுல ரொம்ப பிடிச்சது பாஸு..

நம்பர் ஒன்: //பரிசல்..என்ற நண்பனுக்காக.// - இந்த வரி

டூ: த்ரிஷா(தோழி என்பதாலும்)// - இது

நண்பனின் தோழி எனக்கும் தோழி!

த்ரீ: கருணாநிதி மேட்டர்

ஃபோர்: அந்த ‘லொங்கட்டி’. பின்றியே பாஸு! அந்தப் பாராவைப் படிக்கறப்போ ஈஸிஆர் ரிசார்ட்ல உங்களை அடிச்சேன்ல அதுமாதிரி அடிக்கணும்போல இருந்தது! தூள்!

" உழவன் " " Uzhavan " said...

கற்றுக் கொள்ள சில இருந்தன. நன்றி

Sunday Thoughts said...

Dear Narsim,
ஆளுமை என்றால் என்ன? do you mean by leadership and management skills? do you think JJ has it now? she let her party disintegrated in front of her own eyes and the party in so pathetic state that even the booth agents of ADMK can be bought. உங்களை மாதிரி நடுநிலையாளர்களுக்கு JJவை எதாவது ஒரு விதத்தில் ( it may bold, leadership etc) பிடிக்கிறது but MKவை எந்தவித்திலும் பிடிக்காது. I really don't understand this hypocrisy.
Thanks,
K.Tharanipathi.

Karur King said...

hi bloggers,
iam the regular reader most of the blogger.. last week i have come to naigeria for 3 months project.. is there any blogger in naigeria , whos is staying near the moi avaneue ..... will meet ....( iam arul working in Oracle)...iam from karur living in bangalore....................

Karur King said...

this is my mobile no..Kenya...@+254 771644800....... if any of the bloggers know please give ur contact number in nairobi....

நட்புடன் ஜமால் said...

இது உங்க கருத்துகள் ...

ரைட்டு

-----------------

நாமெல்லாம் என்னா சொன்னாலும் அதுக்கு நீங்க எல்லாம் ...

தஞ்சாவூரான் said...

பிடிக்காத
- தொழிலதிபர்
- அரசியல்வாதி
- கவிஞர்
- இசையமைப்பாளர்

உங்களோடு உடன்படுகிறேன் :)

கோல்ஃப் - நானும் இந்த கருமத்த எப்பிடிதான் விளைடுறாங்கன்னு நெனச்சேன். இப்போ அப்பிடி இல்ல. வாங்க ஒரு தபா ஆடுவோம். உங்களுக்கும் பிடிக்கும்.

விடிகாலையில், நடந்தே சென்று விளையாடவேண்டும். 'கார்ட்டில்' சென்று விளையாடுவது - அவசரகுடுக்கைகளுக்கு ஓக்கே!!

பி.கு: பக்கத்தில் இருந்தும் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளமுடியவில்லை (நடந்ததா?). நிறைய நண்பர்களை (அடுத்தமுறை) சந்திக்கும் வாய்ப்புக்காக வெயிட்டிங்!