என்’ணங்கள்

பேராண்மை.ஜனநாதனுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.


படத்தில்,ஒரு மாணவியின் சவுடால் கேள்வி : “எங்க அப்பா மாதிரி பிஸினஸ் ஆளுங்க இன்வெஸ்ட் பண்ணலேன்னா எப்பிடி இந்த கட்டிடங்கள் வரும்?”

பதில்.

“உழைப்பைக் கழித்து விட்டுப் பார்த்தால் இந்த மேஜை நாற்காலி கட்டிடம் எல்லாம் வெறும் மரம்,செங்கல் தான்” என்று ஜெயம் ரவி கூறும் பொழுது தியேட்டரின் மெளனம் வசனத்திற்கான சம்மதம்.

ஆம்.உலகின் உழைக்கும் வர்க்கம், எத்தனை கோடி கொடுத்தாலும் மேஜை செய்யமுடியாது என்று மறுத்து விட்டால் மேஜை கிடையாது.(மேஜை மட்டுமல்ல.அதன் பக்க வாட்டில் அமரும் நாற்காலியும் அதில் அமர்ந்திருப்பவரின் மதிப்பும் என்று இன்னும் கூராக வசனம் சேர்த்திருக்கலாம்)

பொதுவுடமை குறித்தும்,மார்க்ஸ் குறித்தும்,ஆடம் ஸ்மித்(இவரை இதற்கு முன் எத்தனை பேருக்குத் தெரியும்?) அடிப்படைகளை மக்களிடம்/இளைஞர்களிடம்/மாணவர்களிடம் கடத்தும் பணியில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.(வெண்ணிற இரவுகளும் தான்)

“உலகப் பொருளாதாரம் படியுங்கள்,இந்தியச் சந்தை எப்படி உபயோகிக்கப்படுகிறது என்பதை உணருங்கள்”

“எதிரிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்”- ஒரு மாணவி

“இவர்களுக்கு ஏது தாய்நாடு-பற்று? இவர்கள் சர்வதேச கூலிப் படையினர்”

மிகக் கூர்மை.

ஆனால் ஆர்வக் கோளாறில்

“தாய்நாட்டை மலடாக்க நினைப்பது தாயையே மலடாக்க நினைப்பதற்கு சமம்”..என்ன கொடுமை பாஸ்.தாய் ஆனப்புறம் என்ன மலடு?

அப்புறம் மலடு என்ற வார்த்தையை எல்லாம் உங்கள் போன்ற புரட்சிக்காரர்களால் உபயோகிக்கப்படுவதும் தவறு என்றே நினைக்கிறேன்.

காட்டுக்குள் நடக்கும் காட்சிகளும் வசனங்களும் தமிழுக்குப் புதுசு.வாழ்க.

பழங்குடியினைரை ஏற்றிப் பேசுவதாக நினைத்து ஆனால் கிடைக்கும் கேப்பில் தாழ்த்தியே இருக்கிறார்கள்,யதார்த்தம் என்ற போர்வையில்..என்பதில் என் கருத்தும் பதிவர் வே மதிமாறனின் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.

**********

அலுவல் விசயமாக ஒரு இடத்திற்கு,சொன்ன நேரத்தில் போயிருந்தேன்.அங்கே போனதும் என்னை வரவேற்றவர்,எனக்குத் தேவையான விவரங்களை கொடுக்க வேண்டியவரை தொலைபேசியில் அழைத்தார்.அவர் வருவதற்கு 30 நிமிடங்கள் ஆகும் என்றார்.வந்தார்.எனக்கான விவரங்களை 5 நிமிடங்களில் தந்தார்.அதன் பிறகு எனக்கு அதில் ஒரு மணி நேர வேலை இருந்தது.அந்த ஒரு மணிநேரமும் அவர் சும்மாவே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

என்னுடை முதல் 30 நிமிடங்கள்,அவரின் 60 நிமிடங்கள் என்பது மிக முக்கிய நேரங்கள்.விரயம்.

அவர் முதலில் செய்த 30 நிமிட வேலையை எனக்கு விவரங்கள் கொடுத்து விட்டு செய்யச் சென்றிந்தால் அது தான் டைம் மேனேஜ்மெண்ட்.ஒரு விளக்கம் இருக்கு.(தலைநகரத்தில் வடிவேலு கதை சொல்ல ஆரம்பித்ததும் காணமல் போகும் கூட்டம் போல அடுத்த பாராவை ஸ்கிப் செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.)

ஓரளவு தெரிந்த பாடம் தான்.

உங்களுக்கு முன்,கொஞ்சம் மண்,பெரிய கற்கள்,நீர்,சிறிய கற்கள் என இருக்கிறது.இதை எந்த வரிசையில் பக்கெட்டில் இட்டு நிரப்புவீர்கள்?

இதை வைத்து உங்களின் நேர மேனேஜ்மெண்ட் அதைவிட முக்கியமாய் எதற்கு முதலில் முக்கியத் துவம் கொடுக்க வேண்டும் என்பதை அறியலாம்.தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

***********

சச்சின் டெண்டுல்கர்.இவர் ஒரு அற்புதம்.நேற்றைய போட்டியில் ஜடேஜாவின் மெச்சூரிட்டி இன்மை புரிந்தது.(என் கருத்து மட்டுமே..டீம் தான் முக்கியம்,இந்திய வெற்றிதான் முக்கியம் என்பதை அறிவேன்).

அதாவது டெண்டுல்கர் மிக நல்ல ஃபார்மில் ஒரு அற்புதமான சாதனை நோக்கிய(200ரன்கள்)பயணத்தில்,கூடவே வெற்றியையும் எளிதில் வசமாக்கும் ஒரு கட்டத்தில், ஜடேஜா ‘காஜு’பார்த்துக் கொண்டே இருந்தார்.கடுப்பாக இருந்தது.அவர் அடித்த இரண்டு 4களை டெண்டுல்கரும் அடித்திருப்பார்.அதுவும் நீண்ட நாட்கள் கழித்து ஆஃப் ஸ்பின்னரை இரண்டு அடிகள் ரிதத்தில் தாவி,பந்து விழுந்தவுடன் அள்ளி சைட் ஸ்கீரின் நோக்கி சிக்ஸர் தூக்கிய காட்சிகள் கண்களுக்கு விருந்து.


எதிரில் இருப்பவரின் ஒத்துழைப்புதான் சாதனைகளுக்கும் வெற்றிக்கும் முக்கியம் என்பதை நேற்று உணர்ந்தேன்.அல்லது நேற்றும் உணர்ந்தேன்.

ஸாரி சச்சின்.

*********

நாளை (7/11/09) பதிவர் சந்திப்பு.

சென்ற முறை என்ணங்களில் விழாக்குழுவினரை நல்ல இடத்தில் நடாத்திக் கொடுக்க கோரிக்கை வைத்தது வீண் போகவில்லை(ஜூவி ஃபாளோஅப் ரேஞ்சு).

நாளை மறுநாள்(8/11/09)உலகப் படம்.

சிவராமன் அண்ணா பதிவில்...

'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்' சார்பில் பதிவர்களுக்காக பதிவர்களே இலவசமாக மாதம்தோறும் திரையிடும் உலக சினிமா வரிசையில், வரும் ஞாயிறு ஈரான் / பிரெஞ்சு மொழிப் படம் திரையிடப்படுகிறது.

பெயர்: At Five in the Afternoon
நாடு : ஈரான் / பிரெஞ்சு

இயக்குநர் : Samira Makhmalbaf

வெளி வந்த வருடம் : 2003

பட நேரம் : 105 நிமிடங்கள்

நாள் : 08.11.09, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : மாலை 6 மணி

இடம் : கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை.

உலக சினிமா வரிசையில் முதல் முறையாக பெண் இயக்குநரின் திரைப்படம் திரையிடப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்று இருப்பதை பார்த்து இருப்பீர்கள்.பார்த்து இருந்துவிடாதீர்கள்,வந்துவிடுங்கள்.

இது போன்ற நிகழ்வுகளுக்கு வீட்டில் இருந்து கிளம்பும் பொழுது யாரையாவது தொலைபேசியில் சரியாக 30-40 நிமிடங்களுக்கு முன்னர் அழைத்துப் பாருங்கள்.கிளம்பியாச்சா என்று கேட்க..ம்ஹூம்..ஒருத்தரும் போனை எடுக்க மாட்டார்கள்.(நானும்தான்).

காரணம்..பொய்ய்யி தான்.

வீட்டில் ஏதாவது ஒரு அதிமுக்கிய வேலையச் சொல்லி வைத்திருப்போம்.போன் எடுத்தால் ’கிளம்பிட்டேன் தலைவரே’ என்ற நமது பதிலில் இருந்து ஒரு நூறு கேள்விகள் எழத் தொடங்கிவிடும்.அதனால் தான் சைலைண்ட்டாக, சைலண்ட் ஆக்கிவிட்டு..தெரு தாண்டியதும் சுற்றும் முற்றும் பார்த்து,அழைத்தவரை அழைத்து..ஹேஹயேய்..கிளம்பிட்டேன்..நீங்க’வை சொல்ல முடிகிறது..(அங்கும் முதலில் சைலண்ட்டாக்கித் தான் எடுக்கப்படும்!

ஹுக்கும்.

***********

மாறவர்மன் ரெடியாகிக் கொண்டிருக்கிறான்.

********

பதிவர் பின்னோக்கியின் இந்த மூன்று வரிகள் மனதிற்கு மிக நெருக்கமாக உணர்த்தியது.

டோரா புஜ்ஜியை நிறுத்தலாம்
மின்னஞ்சல் படிக்கலாம
தூங்கிவிட்டான் மகன்

******

42 comments:

யாசவி November 6, 2009 at 2:22 PM  

//(மேஜை மட்டுமல்ல.அதன் பக்க வாட்டில் அமரும் நாற்காலியும் அதில் அமர்ந்திருப்பவரின் மதிப்பும் என்று இன்னும் கூராக வசனம் சேர்த்திருக்கலாம்)//

add more value

:)

Gatz November 6, 2009 at 2:25 PM  

//மேஜை மட்டுமல்ல.அதன் பக்க வாட்டில் அமரும் நாற்காலியும் அதில் அமர்ந்திருப்பவரின் மதிப்பும் என்று இன்னும் கூராக வசனம் சேர்த்திருக்கலாம்//

typical narsim touch :)

சுடுதண்ணி November 6, 2009 at 2:33 PM  

1. பெரிய கற்கள்
2. சிறிய கற்கள்
3. மண்
4. நீர்

செ.சரவணக்குமார் November 6, 2009 at 2:40 PM  

அன்புள்ள நர்சிம்

என்ணங்கள் வழக்கம்போல அருமை. பேராண்மை பற்றிய உங்களின் பார்வை மிகச்சரியானதே.

தராசு November 6, 2009 at 2:57 PM  

பெரிய கற்கள்,
சிறிய கற்கள்,
மணல்,
நீர்.

இதைப் பத்தி ஒரு பதிவு சீக்கிரமா வருது தல.

பாலராஜன்கீதா November 6, 2009 at 2:57 PM  

//எனக்குத் தேவையான விவரங்களை கொடுக்க வேண்டியவரை தொலைபேசியில் அழைத்தார்.அவர் வருவதற்கு 30 நிமிடங்கள் ஆகும் என்றார்.வந்தார்.எனக்கான விவரங்களை 5 நிமிடங்களில் தந்தார்.//
உங்களுக்கு என்ன விவரங்கள் தேவை / எப்போது அவர்களைச் சந்திப்பீர்கள் என்பதை முதலாமவருக்கு இரண்டாமவருக்கோ நீங்கள் முன்பே தெரிவித்திருந்தீர்களா ?

இரும்புத்திரை அரவிந்த் November 6, 2009 at 3:03 PM  

சச்சினுக்கு(நர்சிம்முக்கு) முன்னால் ஜடேஜாவின்(அரவிந்தின்) மெச்சூரிட்டி இன்மை கம்மி என்பது உண்மை தான்.


அடித்த பவுண்டரி ஒண்ணு



அடித்த பவுண்டரி ரெண்டு


ஆனால் நேற்றைய ஆட்டத்தின் முடிவு..அது மாதிரி தான் பேராண்மையும்..எனக்கு தொடக்கம் பிடித்து இருந்தது..படம் பிடிக்கவில்லை.. இந்த பேராண்மை என்னை விடவே விடாது போல..

அமுதா கிருஷ்ணா November 6, 2009 at 3:12 PM  

பெரிய கற்கள்,சிறிய கற்கள்,மண், தண்ணீர்...போன் எடுக்காததன் காரணம் நல்லாயிருக்கு...

வவ்வால் November 6, 2009 at 3:12 PM  

//ஆடம் ஸ்மித்(இவரை இதற்கு முன் எத்தனை பேருக்குத் தெரியும்?) //

+2வில் வணிகவியல் என்று பாடப்பிரிவி எடுத்து படித்தவர்கள் அனைவருக்கும், பிகாம், பிஏ.எக்னாமிக்,பி.பி.ஏ என்று படித்த மாணவர்கள் அனைவருக்கும் இந்த பெயர் தெரியும்,பி.எஸ்.சி அக்ரி படித்தவர்களுக்கும் இவரை தெரியும், பாடத்தில் உள்ள , இவரைப்பற்றி தெரியாத தத்திகள் என்றுப்பார்த்தால் இந்த மென்பொருள் வல்லுனர்கள் தான்!

உங்களுக்கும் இதெல்லாம் எத்தன பேருக்கு தெரியும் என்னை விட்டா என்ற சிண்ட்ரோம் இருக்கும் போல.:-))

Vidhoosh November 6, 2009 at 3:15 PM  

//பழங்குடியினைரை ஏற்றிப் பேசுவதாக நினைத்து ஆனால் கிடைக்கும் கேப்பில் தாழ்த்தியே இருக்கிறார்கள்//

இது மட்டும் இல்லை, சமூகத்தை முன்னிறுத்தி பேசும் யாருமே அந்த சமூகத்தை தாழ்த்தியே பேசுகிறார்கள். ஏனோ தெரியவில்லை? :(

===============

பெரிய கற்கள்,
சிறிய கற்கள்
கொஞ்சம் மண்,
நீர்,


நேரத்தை மட்டும் இல்லை, நட்பையும் manage செய்யும் ஓய்!

:))

---வித்யா

ஜெனோவா November 6, 2009 at 3:20 PM  

எண்ணங்கள் அருமை பாஸ்!
பேராண்மை - முதல் 20-30 படத்தில் கொஞ்சம் எரிச்சல் வந்தது ( மாணவிகளின் செயல்களை படமாக்கிய விதத்தில் )

எனக்கு ரொம்ப பிடித்த வசனம் -
" கிராமத்தில பொண்ணுங்களுக்கு முந்தானையை சரிசெஞ்சே நேரம் போச்சு - நகரத்து பொண்ணுங்களுக்கு முன்னால் விழும் முடிய ஒதுக்கியே நேரம் போகுது "

Time Management:
பெரிய கற்கள்
சிறிய கற்கள்
மண்
நீர்
( training la சொன்னாங்கோ )

நர்சிம் November 6, 2009 at 3:25 PM  

//உங்களுக்கும் இதெல்லாம் எத்தன பேருக்கு தெரியும் என்னை விட்டா என்ற சிண்ட்ரோம் இருக்கும் போல.:-))//

அப்படி தோன்றும் படி எழுதி இருந்தால் மன்னிக்க.

ஆனால் ஒரு நாளும் அப்படி நினைத்ததில்லை.ஆடம் ஸ்மித் பற்றி எனக்கும் படம் பார்க்கும்பொழுதுதான் தெரிந்தது என்பதை குறிக்கும் வார்த்தைகள் அவை.

வணிகவியல் படிக்கவில்லை நான்.நான் குறிப்பிட்டது கூட படம் பார்த்த மற்றவர்களையும் என்னையும் சேர்த்து.

கருத்திற்கு நன்றி

கதிர் - ஈரோடு November 6, 2009 at 3:28 PM  

நல்ல எண்ணங்கள் நர்சிம்

டைம் மேனேஜ்மெண்ட், நீங்கள் சொன்னதை அப்படியே ஏற்கிறேன்

நாகா November 6, 2009 at 3:29 PM  

ச்சே, நவம்பர் 25க்குப் பின்னாடி எதுவுமே நடக்காதா? எல்லா சந்திப்பும் 7, 8.. ஹூம் எல்லா சென்னை பதிவர்களையும் ஒண்ணா பாக்கலாம்னா முடியாது போலிருக்கு

இரும்புத்திரை அரவிந்த் November 6, 2009 at 3:32 PM  

அந்த படத்தில் வசனமே அப்படி தான் இருக்கும் வவ்வால் - ஆடம் ஸ்மித் அவருக்கு பிறகு காரல் மார்க்ஸ் வந்த பிறகு தான் ஒரு தீர்வு கிடைத்தது.

காரல் மார்க்ஸ் வணிகவியல் படிக்காதவர்களுக்கும் தெரியும்..அவரை தெரியவில்லை..படம் பார்த்து தெரிந்து கொண்டோம்.

இப்படிக்கு வணிகவியல் படிக்காத ஒருத்தன்

ஜீவன் November 6, 2009 at 3:48 PM  

//எதிரில் இருப்பவரின் ஒத்துழைப்புதான் சாதனைகளுக்கும் வெற்றிக்கும் முக்கியம் என்பதை நேற்று உணர்ந்தேன்.அல்லது நேற்றும் உணர்ந்தேன்.//

உண்மைதான் நேற்று மட்டும் ஜடேஜா கொஞ்சம் ஒத்துழைத்து இருந்திருந்தால்
சச்சின் 200 அடிக்க வாய்ப்பு அமைந்து இருக்கும்.

இதேபோல ஒரு உலக கோப்பையில் கங்குலி 200 ரன் அடிக்கும் வாய்ப்பை கெடுத்ததும்
ஜடேஜா தான் பழைய ஜடேஜா.!;;)

வெண்பூ November 6, 2009 at 4:02 PM  

எனக்கும் பேராண்மை பிடிக்கவில்லை நர்சிம்.. ஓவர் கம்யூனிசம் கலெக்ஷ‌னுக்கு உதவாது.. :(

டைரக்டர் தன்னை புரட்சியாளனா காட்டிக்கிற முனைப்புதான் படம் முழுக்கத் தெரியுது. அதுக்காக பழங்குடிகள் படிக்கிறதைப் பாத்தாலே மத்தவங்களுக்கு பத்திகிட்டு வருதுன்ற ரேஞ்சுக்கு இருக்குற காட்சிகள் கடுப்படிக்குது. :(

ரொம்ப இன்டலிஜென்டலி வவ்வால்,

படம் பாத்தப்புறமும் எனக்கு ஆடம் ஸ்மித் பத்தி தெரியல.. ரொம்ப தத்தி மென்பொருள் வல்லுனன் ஆயிட்டேனோ என்னவோ.. நீங்க படிச்ச ஏரியாவுல இருக்குற ஒருத்தனப் பத்தி வேற துறையில இருக்குற ஒருத்தனுக்கு தெரியலைன்னா அவன் தத்தியா? நீங்க எல்லா ஃபீல்ட் பத்தியும் தெரிஞ்ச என்சைக்ளோபீடியாவோ? போங்க சார், போய் புள்ள குட்டிங்கள படிங்க வைங்க.. வந்துட்டானுங்க சொம்ப தூக்கிட்டு..

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் November 6, 2009 at 4:04 PM  

சச்சின் ஏரியா சரியா புரியல...

இது பார்க்க...
http://www.youtube.com/watch?v=0HsE_Gr_Z70

எம்.எம்.அப்துல்லா November 6, 2009 at 4:10 PM  

//தாய் ஆனப்புறம் என்ன மலடு?

//

குழந்தை பெற்றால்தான் தாய் என்று யார் சொன்னது?? பெண்ணாய் பிறந்து விட்டாலே அவள் தாய்தான்.

பா.ராஜாராம் November 6, 2009 at 4:24 PM  

:-)) நர்சிம்!

அச்சுக்கவிதை பின்னோக்கி!

KaveriGanesh November 6, 2009 at 4:30 PM  

எம்.எம்.அப்துல்லா said...

தாய் ஆனப்புறம் என்ன மலடு?

//

குழந்தை பெற்றால்தான் தாய் என்று யார் சொன்னது?? பெண்ணாய் பிறந்து விட்டாலே அவள் தாய்தான்.


சூப்பர் தம்பி,

நேரடியாக பார்த்தால் விளக்கம் தருகிறேன்.

தியாவின் பேனா November 6, 2009 at 4:50 PM  

//
எதிரில் இருப்பவரின் ஒத்துழைப்புதான் சாதனைகளுக்கும் வெற்றிக்கும் முக்கியம் என்பதை நேற்று உணர்ந்தேன்.அல்லது நேற்றும் உணர்ந்தேன்.
//

இது 100% உண்மை

ஆதிமூலகிருஷ்ணன் November 6, 2009 at 5:34 PM  

நல்லென்'ணெங்கள்.!

Karthikeyan G November 6, 2009 at 5:57 PM  

//இவரைப்பற்றி தெரியாத தத்திகள் என்றுப்பார்த்தால் இந்த மென்பொருள் வல்லுனர்கள் தான்!//

99% true..

D.R.Ashok November 6, 2009 at 6:17 PM  

ஆடம் ஸ்மித்துன்னா கிரிக்கட்டு ப்ளேயர்தானே.. இப்ப அவரு அடறதில்லயே!

D.R.Ashok November 6, 2009 at 6:18 PM  

ஹிஹி அது ஆ...

முரளிகண்ணன் November 6, 2009 at 6:43 PM  

Very nice thoughts.

ரவிபிரகாஷ் November 6, 2009 at 6:50 PM  

\\ஆனால் ஆர்வக் கோளாறில்

“தாய்நாட்டை மலடாக்க நினைப்பது தாயையே மலடாக்க நினைப்பதற்கு சமம்”..என்ன கொடுமை பாஸ்.தாய் ஆனப்புறம் என்ன மலடு?

அப்புறம் மலடு என்ற வார்த்தையை எல்லாம் உங்கள் போன்ற புரட்சிக்காரர்களால் உபயோகிக்கப்படுவதும் தவறு என்றே நினைக்கிறேன்.//

கூர்ந்து கவனித்து மிகச் சரியாக எழுதியிருக்கிறீர்கள்! சபாஷ்!

ஆரூரன் விசுவநாதன் November 6, 2009 at 7:01 PM  

நல்ல அலசல்........கடைசி வரிகள் சூப்பர்

ரமேஷ் வைத்யா November 6, 2009 at 7:13 PM  

neer
maN
sinna kal
periya kal

நாய்க்குட்டி மனசு November 6, 2009 at 7:44 PM  

//“தாய்நாட்டை மலடாக்க நினைப்பது தாயையே மலடாக்க நினைப்பதற்கு சமம்”..என்ன கொடுமை பாஸ்.தாய் ஆனப்புறம் என்ன மலடு?//

இந்த வாக்கியம் தேவை இல்லைன்னு எனக்கும் தோணுச்சு. ஆனாலும் அர்த்தம் இல்லாத பாடல் ஆடல்கள் சண்டைகள் இல்லாம படம் எனக்கு பிடிச்சு இருந்தது. சில நிஜ characters deal பண்ணி இருக்காங்க. அடுத்தவரின் உழைப்பை அபகரிக்கும் அதிகாரி பொன்வண்ணன் போல.
பின்னாடி இருந்த இளைஞர்களின் comment. "இதையே 5 பையன்களை போட்டு எடுத்திருந்தா சூப்பரா இருந்திருக்கும். 5 பொம்பள பிள்ளைகளை போட்டு காமெடி பீஸ் ஆக்கிடாங்களே "
வசனங்களில் ஏகப்பட்ட கட்.
அதை முதலிலேயே சரியாய் எடுத்திருக்கலாம். அவரவர்க்கு தோணின படி அசிங்கமா அர்த்த படுத்தாம தடுத்திருக்கலாம்.

பின்னோக்கி November 6, 2009 at 10:21 PM  

கடைசிவரை ஆடம் ஸ்மித் என்ன சொன்னாருன்னு நீங்களும் சொல்லலை. வவ்வாலும் சொல்லலை. யாராவது சொல்லுங்க.

பின்னோக்கி November 6, 2009 at 10:22 PM  

நன்றி நான் எழுதிய ஹைக்கூவை ரசித்ததற்கு.

அன்புடன்-மணிகண்டன் November 6, 2009 at 11:08 PM  

//இரண்டு அடிகள் ரிதத்தில் தாவி,பந்து விழுந்தவுடன் அள்ளி சைட் ஸ்கீரின் நோக்கி சிக்ஸர் தூக்கி//
இது அருமை..

வவ்வால் November 6, 2009 at 11:27 PM  

நர்சிம்,

//ஆனால் ஒரு நாளும் அப்படி நினைத்ததில்லை.ஆடம் ஸ்மித் பற்றி எனக்கும் படம் பார்க்கும்பொழுதுதான் தெரிந்தது என்பதை குறிக்கும் வார்த்தைகள் அவை.//

//பிடிக்காத பதிவர் :இதில் கள் விகுதி இருக்க வேண்டும்- நேர்மையற்றவர்கள்(அனானி/வேறுபெயர் என.).அரைவேக்காடுகள் என நிறைய.(ஒரு விசயம் குறித்தான அடிப்படை தேடலோ உழைப்போ இல்லாமல் ஹிட் அண்ட் ரன் மாதிரி எழுதிப் போவது சங்கடமாக இருக்கிறது)
நானும் இந்தக் கூட்டத்தில் ஒருவன். எனவே எழுத்திற்கான அடிப்படை உழைப்பை செலுத்தி எழுதுவதென்பதே தற்பொழுதைய முடிவு.//

"குறைந்த பட்ச அடிப்படை உழைப்பை" செலுத்தும் ஒரு பதிவரான நீங்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருந்தீப்பீர்கள்,(தெரியவில்லை என்றாலும் உழைபை செலுத்தி தெரிந்துக்கொண்ட பின்னர் தானே நீங்கள் பதிவே போடுவிங்க) எனவே தான் ஜனா நாதன் சொன்னது எனக்கு புரிந்தது இங்கே எத்தனைப்பேருக்கு தெரியும்னு தைரியமாக உங்களை சொல்ல தூண்டி இருக்கும் என நினைத்து விட்டேன்.

நான் அப்படிக்கூறியது உங்களை சங்கடப்படுத்த அல்ல, அப்படி இருப்பின் மன்னிக்கவும்.

-----------------------------

அரவிந்த்,

//அந்த படத்தில் வசனமே அப்படி தான் இருக்கும் வவ்வால் - //

வசனத்தினை நான் எதுவும் சொல்லவில்லை, எத்தனைப்பேருக்கு தெரியும் இதெல்லாம் என்று கேட்கும் கேள்வியில் இருக்கும் தொனி குறித்தான கருத்தே நான் சொன்னது.

தாய் ஆனப்பின் மலடு ஆவது எப்படினு புத்திசாலித்தனமாக நர்சிம் யோசிப்பது போல(ஒரு குழந்தை பிறந்த பின் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்ட தாயின் அந்த ஒரு குழந்தையும் இடையில் இறந்து விட்டால், அந்த தாய் மலடா இல்லையா?சுனாமியின் போது இப்படி ஆனவர்களுக்கு மீண்டும் குழந்தை பிறக்க வைக்க ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளது)) இதுவும் சப்டெக்ஸ்ட் ஆக தோன்றிய கருத்தே!

மற்றப்படி கலை அறிவியல் கல்லூரிகளில் படித்தவர்கள் அதிக அளவில் தமிழ் நாட்டில் இருப்பதால் கண்டிப்பாக அந்த பெயர் அநேகருக்கு தெரிந்திருக்கும் என்பதே எனது எண்ணம், பொறியியலில் ஒரு பொருளாதாரப்பாடம் இருக்கிறது ஆனால் அதனை அத்தனை சரியாக கவனிப்பதில்லை போல தெரிகிறது.
(MG1452 ENGINEERING ECONOMICS AND COST ANALYSIS 3 0 0 100
(Common to Mechanical, Production, Automobile)(Metallurgy, Mechatronics - VIII Semester Elective))

எனவே எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம், அல்லது தெரியாமலே கூட இருந்திருக்கலாம், யாருக்கு இதெல்லாம் தெரியும் என்று கேட்கும் போது ,தெரியாது என்றுமுடிவுகட்டியதாக தோன்றியது!

---------------------------

வெண்பூ,

சொல்வதற்கு ஒன்றுமில்லை, உங்கள் சொம்பை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்!

நர்சிம் November 7, 2009 at 10:54 AM  

//குறைந்த பட்ச அடிப்படை உழைப்பை" செலுத்தும் ஒரு பதிவரான நீங்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருந்தீப்பீர்கள்,(தெரியவில்லை என்றாலும் உழைபை செலுத்தி தெரிந்துக்கொண்ட பின்னர் தானே நீங்கள் பதிவே போடுவிங்க)//

ஒன்றும் சொல்வதற்கில்லை.

உங்கள் போன்ற ஆழ்ந்த கல்வியறிவும்,அனுபவமும்,எழுத்தும் இருப்பவர்கள் இருக்குமிடத்தில் என் போன்றவர்கள் ஒரு கருத்தைச் சொல்லும் பொழுது நிறைய்ய்ய்ய்ய யோசிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

இனி நான் என்ன எழுதினாலும் ‘அடிப்படை உழைப்பு’ என்ற வார்த்தையிலேயே வந்து நிறுத்தப்படும்.

ஏனெனில் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத இந்த ஒற்றை வரிக்கு அடிப்படை உழைப்பை இழுக்கிறீர்கள்.என்ன சொல்வதென்று தெரியவில்லை.

ஆடம் ஸ்மித் குறித்த அனைவருக்குமே தெரிந்திருக்க சாத்தியமில்லாத ஒரு நிலையில் இது போன்ற படங்களின் மூலம் அவர் பெயரை மக்களுக்கு கடத்துவது ஒரு நல்ல முயற்சி என்ற கருத்தில் ஆடம் ஸ்மித்,எத்தனை பேருக்கு தெரியும் என்று எழுதியதில் என்ன தவறு இருக்கிறது அல்லது இப்படி எழுதுவதற்கு அடிப்படை உழைப்பான சர்வே எடுத்து யார் யாருக்கு ஆடம் ஸ்மித்தை தெரியும் என்று கணக்கு கேட்டிருக்க வேண்டும் என்பது உங்கள் கருத்தாக இருக்கும் பட்சத்தில், இந்த பதிலின் முதல் வார்த்தைகள் தான் இங்கே.
********

நேர்மையான கருத்திற்கு நன்றி வவ்வால்.

நர்சிம் November 7, 2009 at 11:17 AM  

//எம்.எம்.அப்துல்லா said...
//தாய் ஆனப்புறம் என்ன மலடு?

//

குழந்தை பெற்றால்தான் தாய் என்று யார் சொன்னது?? பெண்ணாய் பிறந்து விட்டாலே அவள் தாய்தான்.
//

அண்ணே..நேத்து 4:10க்கு போட்டீங்க..இப்ப வரைக்கும் கேட்டுக்கிட்டே இருக்கு...

S.A.ராஜ்குமார் உங்க பக்கத்துல இருக்காரா?????

கார்க்கி November 7, 2009 at 11:58 AM  

saga, en purithal sariyaanu theriyala.. muthalalikal illaavittalum atho gathithaan. enna, avargal aattam athigamaga irukka koodathu. uzaippu illaavital chair illaithaan. aanaal muthalali illaavittal uzaippaliyee illaiyee..

both are like two sides of coin. the matter is everyone should get their rights.

கல்யாணி சுரேஷ் November 7, 2009 at 12:04 PM  

அருமையான பதிவு நர்சிம்.

பெரிய கற்கள்
சிறிய கற்கள்
மண்
நீர்.
எப்புடி எங்க time management ?

எம்.எம்.அப்துல்லா November 7, 2009 at 3:57 PM  

//அண்ணே..நேத்து 4:10க்கு போட்டீங்க..இப்ப வரைக்கும் கேட்டுக்கிட்டே இருக்கு...

S.A.ராஜ்குமார் உங்க பக்கத்துல இருக்காரா?????

//

ஹா..ஹா,.,.ஹா...

நீங்க இப்படி சொல்றது எத்தனை பேருக்கு புரியும்னு தெரியல. இரசித்துச் சிரித்தேன்:)

இரவுப்பறவை November 9, 2009 at 12:04 PM  

//மாறவர்மன் ரெடியாகிக் கொண்டிருக்கிறான்.//...

அட போங்க.. :-)

Mohan Kumar November 24, 2009 at 6:41 PM  

அட நீங்களும் வீட்டுலே டூப் விட்டுட்டு மீட்டிங் வர ஆள் தானா? Same pinch.