சென்னையின் மத்தியில் இருந்தது அந்த அப்பார்ட்மெண்ட்.மிகப் பிரம்மாண்ட கட்டிடத்திற்குள் சின்னச் சின்ன பிரம்மாண்டங்களைக் கொண்டிருந்த அப்பார்ட்மெண்ட்கள். மழையின் கைங்கர்யத்தால் பளிச்சென துடைத்து விடப்பட்டது போல் இருந்தது வெளிப்புறம்.
நச நசப்புகளுக்கிடையில் ஆங்காங்கே சிறு கூட்டமாக நின்று பயம் ஆச்சர்யம் பரிதாபம் கோபம் என கலவையான உணர்ச்சிகளை புருவத்தின் இடுக்குகளில் காட்டிக்கொண்டிருந்தார்கள் அங்கே வசிக்கும் வாசிகள்.
மனோ.இன்ஸ்பெக்டர்.இந்தக் கதையின் நாயகன்.எனவே நேர்மையானவன் என்பது அடிப்படை தகுதி.
எதுவும் கேட்காமலே அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன் மனோவிற்கு வழிகாட்டிக் கொண்டு முன்னே நடக்கத் துவங்கினான்.மனோவின் மிடுக்கு அப்படி.
B பிளாக்கை அடைந்து,லிஃப்ட் நோக்கி நடந்து, அதன் வழியே 4 வது மாடியை அடைந்தனர்.அழுகைச் சத்தம்.
V 4 என்று சாக்லேட் நிறத்தில் எழுதப்பட்டிருந்த கதவு லேசாக ஆடிக்கொண்டிருந்த வீட்டின் முன்னும் கொத்துக் கொத்தாக மனிதர்கள்.
பெண்கள் புடவைத் தலைப்பை சின்னப் பந்தாக உருட்டி வாயில் வைத்து துக்கம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
மனோவைப் பார்த்ததும் அங்கே இருந்த கான்ஸ்டபிள் லாவகமாகி, சகஜமானார்.
“என்ன சந்திரன்? எதாவது தட்டுப்பட்டதா?”
கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த மனோவின் பார்வையில் மனோதான் தெரிந்தான்.ஆளுயரக் கண்ணாடி.அதன் அருகில் கோகுல் சாண்டில் கிருஷ்ணர் இலையில் அமர்ந்திருந்தார்.அதற்கு கொஞ்சம் தள்ளி,வடக்குப் பக்கம் தலைவைத்துப் படுத்திருந்தாள்.செத்துப் போயிருந்தாள்.
கைக்கு அடக்கமான பிஸ்டலை இடது கை இறுக்கமாகப் பிடித்திருந்தது.வலது கை கோணலாக அலைந்திருந்தது.
இடுப்பு ஆரம்பிக்கும் இடத்திலேயே முடிந்திருந்த ஸார்ட் சைஸ் டாப்ஸும், தொள தொளப்பான பாட்டமும் கனுக்காலில் டைட்டும் என அப்டேட்டட் ஃபேசனில் மரணித்திருந்தாள்.
ஒருக்களித்து இருந்தவளின் முகத்தை கையுறை அணிந்த டிப்பார்ட்மெண்ட் ஆள் திருப்பிய உடன்,இடது நெற்றிப் பொட்டில் இருந்து இன்னும் கொஞ்சம் ரத்தம் சிந்தியது.
“க்ளியர் சூயிசைடு சார்.பேஸிக்ஸ் ப்ரூவ் பண்ணுது”
சொன்ன சந்திரனை பார்க்காமல் வீட்டைப் பார்த்துக் கொண்டே கேட்டான் மனோ.
“என்ன பேஸிக்ஸ் சந்திரன்?”
“டோர் வாஸ் லாக்ட் இன்சைட் சார். எந்த வழியும் இருக்குற மாதிரி தெரியல.அப்புறம் ரீசன் ஸ்ட்ராங்கா இருக்கு சார்.”
எதுவும் பதில் சொல்லாமல் கிச்சன் பக்கம் வந்திருந்தான் மனோ.பளபள தான் எல்லாமே.கிச்சனின் மரவேலைப்பாடுகள் எல்லாம் ‘கிச்’சென்று இருந்தது.அதை ஒட்டி பால்கனி.அந்தப் பக்கம் வீடு.அங்கேயும் கிச்சன்.கொத்தாக நான்கு பேர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.‘தம்’ பிடித்துத் தாவிவிடலாமோ, என்று யோசித்தவாறே ஒரு சிகரெட்டை உருவினான் அனிச்சையாக.
“கேட்டுட்டுத்தான் இருக்கேன் சந்திரன் சொல்லுங்க..என்ன ரீசன்?அவ்ளோ ஸ்ட்ராங்கா?”
“சார்..”
“ம்”
“பொண்ணு பெரு பூர்ணா.”
அதுக்காகவா சுட்டுக்கிட்டாங்க? அதுவும் இத்தன வருஷம் கழிச்சு?”
“அதில்லை சார்.அவங்களுக்கும் புருஷனுக்கும் ரொம்ப நாளா சண்டை நடந்திட்டு இருக்கு சார்.டைவர்ஸ் அப்ளை பண்ணி இருக்காங்க.இவங்க நடத்தைப் பத்தி அந்தாளு கேவலமா பேசிட்டாராம் கோர்ட்ல?”
“ம்”
கேட்டுக்கொண்டே அந்த டபுள் பெட்ரூம் ப்ளாட்டை சுத்தமாக கண்களுக்குள் போட்டிருந்தான் மனோ.அப்பர் மிடிள் கிளாஸ் வீட்டிற்குண்டான பொருட்கள் அத்தனையும்.மிக ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களுமே.
தற்போதைய தமிழ் படத்தில் இருந்து பழைய ஆர்மர் ஆஃப் காட்,போலிஸ் ஸ்டோரி போன்ற ஆங்கிலப் படங்கள் வரையிலான சிடிக்கள் மிகவும் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
டிவியின் மேல் இருந்த டிவிடி கவரில் உன்னைப் போல் ஒருவன் கையில் துப்பாக்கியோடு கமலும், லால் அங்ங்கிளும்.
“ஹும்ம்..சொல்லுங்க சந்திரன்..எப்போ கோர்ட்ல இவங்கள அசிங்கமா பேசினாராம்?”
“முந்தாநாள் சார்”
”ஓ.குட்.அப்போ ரெண்டு நாளா யோசிச்சுத் தான் செத்திருக்காங்க.ம்.போஸ்ட் மார்ட்டம் சொல்லிடுங்க.யார் மொதல்ல இன்ஃபார்ம் பண்ணது?”
சந்திரன் அழைத்து வந்த நபர் நடுத்தர வயதில் ஸ்லிம்மாக இருந்தார்.காதில் லேசாக கருப்பு அப்பி இருந்தது.சாயம்.
”சொல்லுங்க..மிஸ்ட்டர்“
”என் பேரு ரவி சார். எதிர் பிளாக்ல இருக்கேன்.அங்கே இருந்து பார்த்தா இந்த பால்கனி,ஜன்னல் எல்லாமே நல்லாத் தெரியும் சார்.”
”ம்ம்”
“அழுதிட்டே நின்னுட்டு இருந்தாங்க பால்கனில,திடீர்னு உள்ளப் போனாங்க, கொஞ்ச நேரத்துல ட்டமால்னு சத்தம்.எனக்கு ஒரு மாதிரி இருந்தது.கொஞ்ச நேரம் நின்னுப் பார்த்துட்டே இருந்தேன்.அப்புறம் தான் அவங்க கோர்ட் மேட்டர் ஞாபகம் வந்து ஓடிப்போய்ப் பார்த்தேன்.கதவு பூட்டி இருந்தது.நான் நினைச்ச மாதிரியே ஆகிடுச்சு சார்.”
இவர்கிட்ட ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கிக்கோங்க.
இவங்கல்லாம் யாரு?
“அக்கம் பக்கம் இருக்குறவங்க சார்.என்கொயரிக்கு..”
முதலில் நின்றிந்த பெண் நன்றாக அழுதிருந்தாள்.
“பக்..கத்து வீடு சார்.ரொம்ப நல்லப் பொண்ணு சார்.அந்தப் படுபாவி அபாண்டமா பழிப் போட்டுட்டான் சார்.”அழத் தொடங்கினாள்
“சரி..உங்களுக்கு சத்தம் கேட்டுதா?”
“இல்ல சார் நான் அப்போ மார்க்கெட் போய்ட்டேன்.வந்துப் பார்த்தா ஒரே கூட்டம் சார்”
“யாராவது அடிக்கடி வருவாங்களா?”
“இல்ல சார்.எனக்குத் தெரிஞ்சு யாருமே வரமாட்டாங்க சார்?”
எழுதி வாங்கிக்கோங்க சந்திரன்.
”ம்..நீங்க சார்?”
”சணக்கம் வார்., ஸாரி,என் பேரு வாசு ஸார் . நான் போனவாரம் தான் எதிர் பிளாக்ல இருந்து இங்க மாறினேன்.அங்க ஹவுஸ் ஓனரே வந்துட்டாங்க.இதனால அங்க வந்தேன்.ச்சே,இங்க வந்தேன்.இந்த வீட்ட சொன்னதே பூர்ணா மேடம் தான் ஸார்.ஒரு ’ஹாய்’ அவ்வளவுதான் சொல்லுவாங்க.அதுக்கு மேல ஒரு வார்த்தைக் கூட பேசமாட்டாங்க”
“ம்..”
கிட்டத்தட்ட எல்லோருடைய பதில்களும் பூர்ணா நல்லவள் பாவம் தற்கொலை செய்துகொண்டுவிட்டாள் என்றே இருந்தது.
மனோ,ஸ்டேட்மெண்டுகளை ஒரு பார்வை பார்த்தான்.
முதலில் பார்த்தவன் கே.ரவியில் ஆரம்பித்து எஸ்.சாந்தி,ஆர்.கோதண்டம்,வி.பாசு,என அனைவரும் சொன்னதைச் சரியாக எழுதிக் கொடுத்திருந்தார்கள்.
முதலில் பார்த்ததாகச் சொன்ன ரவியிடம் ஏதோ பொய் இருப்பதாக மனோவுக்குத் தோன்றியதும் அவரோடு அந்த எதிர் பிளாக்கான ’V’ஐ அடைந்து அவன் காட்டிய இடத்தில் இருந்து பார்த்தான்.
உண்மை தான். நன்றாகத் தெரிந்தது.சத்தமும் கேட்கும். வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“உங்கள்ல யாருக்காவது அவங்களோட பழக்கமா?”
மொத்தமாக இல்லை என்ற திசையில் தலை ஆட்டினார்கள்.ஒரு பெண் தவிர.
“என்னோட பேசுவாங்க சார். நானும் டிவோர்ஸ் ஆனவள்ன்றதால அதைப் பத்தின டீட்டெய்ல்ஸ்,கேஸ் எப்பிடி மூவ் பண்றதுன்னு கேட்க ஆரம்பிச்சு ஓரளவு நல்லா பேச ஆரம்பிச்சாங்க.எங்க பக்கத்து வீட்ல இருந்த வாசுவுக்கு வீடு வேணும்னு சொன்னதும் உடனே அந்த பிளாக் காலியா இருக்குன்னு முடிச்சுக் கொடுத்தாங்க. ரொம்ப நல்ல டைப் சார்.”
“அவங்க ஹஸ்பெண்ட் பத்தி ஏதாவது சொல்லி இருக்காங்களா?”
“ரொம்ப சொல்ல மாட்டாங்க..ஆனா அந்தாளு வேற ஒரு பொண்ணோட இருக்கிறதுனால மீச்சுவல் அண்டர்ஸ்டேங்கிங்ல பிரியறதா முடிவு பண்ணி இருந்தாங்க.கோர்ட்ல அவர் தப்பா சொன்னதெல்லாம் ஒரு காரணம்தான்னு ஈஸியாத் தான் சொன்னாங்க,ப்ச்”
”அந்த வீடு யார் பேர்ல இருக்கு?”
“வாடகை வீடு தான் ஸார்,”
“ஹும்..அவங்க சாவுல யாருக்கும் லாபம் இல்லைன்னு சொல்றீங்க?”
“ப்ச்”
“என்னை மாதிரி போல்ட் ஆன ஆளா அவங்க இல்லாதது தான் ஸார் தப்பாப் போச்சு.என்கிட்ட யாராவது வால் ஆட்டினா அவ்வளவுதான்.ஓரளவு நான் தான் அவங்களுக்கு தைரியம் சொல்லி வச்சிருந்தேன்.இது ரொம்ப கஷ்டமா இருக்கு ஸார்”
“ஆமா..மிஸ்டர் ரவி எப்பிடி?” கொஞ்சம் ஹஸ்கி வாய்ஸில் கேட்டான் மனோ.
தோள்கைளைக் குலுக்கிச் சொன்னால்.சிம்ப்பிள் அண்ட் குட்.தட்ஸ் இட் ஸார்.ஏன்?”
”கேட்டேன். இங்கே இருந்து போனாரே..மிஸ்டர் ”
“வாசுவா?”
“ம்ம்..வாசு..அவர் எப்பிடி?எத்தன நாளாத் தெரியும்?”
”அவர் என் எக்ஸ் ஹஸ்பெண்டோட ஃப்ரெண்ட்.லிமிட்ல இருப்பாரு.நான் க்ளியரா இருப்பேன் சார்.எனக்கும் ஹஸ்பெண்ட்டுக்கும் ஒத்து வரலைன்னு தெரிஞ்சதுமே கட் பண்ணிக்கிட்டேன்.அவ்ளோ பிரச்சனை பண்ண என் ஹஸ்பண்டையே நான் சமாளிச்சேன்.இவ ஏன் இப்பிடி பண்ணிக்கிட்டானுதான் ஸார் வருத்தமா இருக்கு.
லிஃப்டில் இறங்கும் பொழுது மனோவிற்கு ரவி சொன்னதில் ஏதோ இன்னமும் பொய் இருப்பதாகவேப் பட்டது.காதுச் சாயம் அவனோடதா அல்லது அவளோடதா?.
வாசு பேசும்போதே உளறுகிறான்.ஆனால் விசாரித்தவரையில் அவனுக்கும் பூர்ணாவிற்கும் எள்ளவும் எள்ளுத் தண்ணியளவும் எந்த விதத்திலும் தொடர்பில்லை.
எதிர் பிளாக் பெண் உதவி தான் செய்திருக்கிறாள்.
பூர்ணா பெயரில் சொத்தும் இல்லை.
கணவன் தான் கொன்றிருக்க வேண்டும்.அல்லது தற்கொலைதான்.
பல யோசனைகள் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது மனோவிற்கு.
மதியம் தன் அலுவகலத்தில், ரிப்போர்ட்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் மனோ.
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மிக அருகாமையில் சுடப்பட்டதையும் நேரத்தையும் உறுதிப் படுத்தியது.குண்டு மிக அதிநவீன பிஸ்டலினுடையது.சைலன்ஸர் இல்லாமலா இருக்கும்? என்ற முதல் கேள்வி அதைப் படிக்கும் போதே தொக்கி நின்றது மனோவிற்கு.
ரவியின் கண்களும் மூளைக்குள் ஃப்ளாஸ் அடித்துப் போனது.
“ஸார் ஒன் மோர் பேட் நியூஸ்”
“சொல்லுங்க”
“அந்தப் பொண்ணோட ஹஸ்பெண்ட்..அங்க வந்துப் பார்த்துட்டு அழுதுட்டே எல்லார் முன்னாடி அந்த மாடில இருந்து குதிச்சு ஸ்பாட் அவுட் சார்”
“ஷிட்..”
“ஆமா சார்.புலம்பி இருந்திருக்காரு.தப்பு என் மேல தான்.நான் என்ன சொன்னாலும் கேட்டா.”அப்பிடின்னு சொல்லிட்டே செத்து இருக்கான்.
”சந்திரன்”
“ஸார்”
“சொல்லிட்டே வர்றேன்..கேளுங்க”
”எஸ் ஸார்”
“புருஷன் பொண்டாட்டி சண்டை.ஆனா மீச்சுவல் அண்டர்ஸ்டேங்.ஆனாலும் கோர்ட்ல தப்பா சொன்னத நினைச்சு வருத்தப்பட்டு இருக்காங்க பூர்ணா”
“எஸ் ஸார்”
“அழுதுட்டு இருந்திருக்காங்க..அத ரவி எதிர் ப்ளாக்ல இருந்து பார்த்திருக்காரு.உள்ள போயி கதவ சாத்திட்டு சுட்டுகிட்டு செத்திருக்காங்க.சத்தம் கேட்டு இவரு போய் பார்திருக்காரு”
“ஆமா ஸார்.ஆனா ஸ்டேட்மெண்ட்ல கதவ மூடின மாதிரி சொல்லல ஸார்”
“யோவ் அதெல்லாம் அண்டர்ஸ்டுட் பண்ணிக்கனும்யா”
“எஸ் ஸார்”
அப்புறம் பக்கத்துவீட்டு லேடி மார்கெட் போய்ட்டு வந்து பார்த்திருக்காங்க.அவங்களும் இவங்கள நல்லவங்கன்னு சொல்றாங்க.
அப்புறம் கோதண்ட ராமனா என்ன பேரு?”
“இந்தாங்க ஸார் ஸ்டேட்மெண்ட்”
“ம்,அப்புறம் பாசு”
“வாசு ஸார்”
“ம்ம்..இதுல பாசுன்னு இருக்கு..சரி..இவங்க எல்லாருமே பூர்ணா ரொம்ப நல்லப் பொண்ணுந்தான் சொல்றாங்க.ஸோ அந்த வார்த்தைகள் தாங்காம தற்கொலைப் பண்ணிக்கிட்டாங்க”
“ஆமா சார்”
“பிஸ்டல் டீடெய்ல்ஸ்?”
“அது இன்னும் தெரியல ஸார்,அப்புறம் யார் யார் அன்னிக்கு எண்ட்ரி ஆகி இருக்காங்கன்னு லிஸ்ட் கேட்டீங்களே ஸார்”
“குட், வந்துடுச்சா?”
“புதுசா யாரும் இல்லை ஸார்.இவங்க இருக்குற பிளாக்குக்கு ’புருஷோத்தமன்’அப்பிடின்றவர் மட்டும் முதல் தடவையா வந்திருக்காரு.ஆனா அவர் வாசுவுக்கு தெரிஞ்சவராம்.அவர பார்த்திட்டுப் போனதா வாசுவே கன்ஃபார்ம் பண்ணிட்டாரு.”
“அப்போ யாரும் சந்தேகப்படும்படி புதுசா அன்னிக்குப் போகலை”
“ஆமா ஸார்.”
“ஒரு குடும்பம் தற்கொலை பண்ணிக்கொண்டதுன்னு கேஸத் தூக்கிப் போடுங்க.”
“டன் சார்”
மனோ ஒரு காஃபியை அடிவரை சுவைத்துக் குடித்தான்.எழுந்தான்.காஃபியின் காரணமாக சுரந்த அமிலங்கள் அவசரப்படுத்தியது அவனை.
“சந்திரன்”
“சொல்லுங்க ஸார்”
“வாசுவை தூக்கிட்டு வாங்க.ஹி இஸ் த மேன் வி ஆர் லுக்கிங் ஃபார்.”
“சார்..அவனுக்கு பூர்ணாவுக்கும் எந்தவிதத்துலயும் தொடர்பே இல்லை சார்,நல்லாத் துளாவிப் பார்த்துட்டேன் ஸார்”
“அது எனக்கும் தெரியும்..அவனுக்கு ஒரு வியாதி இருக்கு.,தெளியவைப்போம்,”
“புரியல சார்”
“கூட்டிட்டு வாங்க சந்திரன்.ஸ்பூன் ஃபீடிங்கா பண்ணச் சொல்றீங்க என்னை”
என்ற மனோ புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடலை விசிலில் பாடிக்கொண்டே சிரித்தான்.
********
கொலையை யார் பண்ணினார்கள் என்பதையும் கூடவே காரணம் யூகிக்க முடிகிறதா என்பதும்,கூடவே இதில் வேறு என்ன காரணங்கள் அல்லது கோணங்கள் இருக்கலாம் என்பதும் தான் கேள்வி.
இது ஒரு புது முயற்சி.சாதாரணமான க்ளூ கொடுக்காதீர்கள் என்று எல்லோருமே சொன்னதால் இந்தக் கதை.
ஒரு வேளை நிறைய பேர் சொல்லிவிடலாம்.அல்லது சுத்தமாக லாஜிக்கே இல்லை இதெல்லாம் க்ளூவா,கதையா,காரணமா என்றும் கேள்விகள் எழலாம்.
என்றாலும்..மழை நேரத்தில் மூளைக்கு வேலை.
நீங்கள் சரியாக விடையைச் சொல்ல வில்லை என்றால் தோற்றது நான் தான்.ஆம் சரியாக சொல்லத் தெரியாதது கூட முக்கிய காரணமாக இருக்கலாம்.
சரியான விடைகள் கடைசியில் ரிலீஸ் செய்யப்படும்.
******
Monday, November 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
51 comments:
இடக்கை பிஸ்டலும், இடது நெற்றிப்பொட்டு ரத்த சிந்தலும், வி.பாசுவும்... ஹி ஹி..
--வித்யா
வ.பாசு ஒரு ஸ்திரீ லோலன் (நிலைக் கண்டியில் உள்ள பவுடர் டப்பா கிருஷ்ணனும், புல்லாங்குழல் விசில் பாட்டும்). //போல்ட் ஆன ஆளா அவங்க இல்லாதது தான் ஸார் தப்பாப் போச்சு.என்கிட்ட யாராவது வால் ஆட்டினா அவ்வளவுதான்.ஓரளவு நான் தான் அவங்களுக்கு தைரியம் சொல்லி வச்சிருந்தேன்.இது ரொம்ப கஷ்டமா இருக்கு ஸார்”///
பல கோணங்களில் யோசிச்சு பார்த்துட்டேன்.... எனக்கென்னமோ அந்த divorce ஆன பெண் மீது தான் சந்தேகம் வருகிறது... result-க்காக வெயிட் பண்றேன்...
பல கோணங்களில் யோசிச்சு பார்த்துட்டேன்.... எனக்கென்னமோ அந்த divorce ஆன பெண் மீது தான் சந்தேகம் வருகிறது... result-க்காக வெயிட் பண்றேன்...
//பிளாக்குக்கு ’புருஷோத்தமன்’அப்பிடின்றவர் மட்டும் முதல் தடவையா வந்திருக்காரு//
//புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே//
result-க்காக வெயிட் பண்றேன்...
வாசுவுக்கு Vல் தொடங்கும் ப்ளாக் அல்லது ஃப்ளாட்டில் தங்கும் வியாதி இருக்கு. இதுக்கு முன்னர் V ப்ளாக்ல தங்கி இருந்ததால பிரச்சனை இல்லை. இப்போ B ப்ளாக்ல V4ஐப் பார்த்ததும் V 4 VASUக்காக ஒரு கொலையைப் பண்ணிட்டான். ரைட்???
மூளை வேலை செய்யலை
///சணக்கம் வார்., ஸாரி,என் பேரு வாசு ஸார் . நான் போனவாரம் தான் எதிர் பிளாக்ல இருந்து இங்க மாறினேன்.அங்க ஹவுஸ் ஓனரே வந்துட்டாங்க.இதனால அங்க வந்தேன்.ச்சே,இங்க வந்தேன்.இந்த வீட்ட சொன்னதே பூர்ணா மேடம் தான் ஸார்.ஒரு ’ஹாய்’ அவ்வளவுதான் சொல்லுவாங்க.அதுக்கு மேல ஒரு வார்த்தைக் கூட பேசமாட்டாங்க”///
பக்கத்து வீட்டு பெண் சொன்னது.
///எங்க பக்கத்து வீட்ல இருந்த வாசுவுக்கு வீடு வேணும்னு சொன்னதும் உடனே அந்த பிளாக் காலியா இருக்குன்னு முடிச்சுக் கொடுத்தாங்க. ரொம்ப நல்ல டைப் சார்.”///
வாசுவும் பூர்ணாவும் பழகி இருக்கிறார்கள்.ஆனால் வாசு ஹாய் என்கிற அளவிலே பழக்கம் என்று சொல்லி இருக்கார்.
மேலும் பக்கத்துக்கு வீட்டு பெண் வாசுவை பற்றி பின்வருமாறு சொல்லி இருக்காங்க.
///அவர் என் எக்ஸ் ஹஸ்பெண்டோட ஃப்ரெண்ட்.லிமிட்ல இருப்பாரு.நான் க்ளியரா இருப்பேன் சார்.எனக்கும் ஹஸ்பெண்ட்டுக்கும் ஒத்து வரலைன்னு தெரிஞ்சதுமே கட் பண்ணிக்கிட்டேன்.அவ்ளோ பிரச்சனை பண்ண என் ஹஸ்பண்டையே நான் சமாளிச்சேன்.இவ ஏன் இப்பிடி பண்ணிக்கிட்டானுதான் ஸார் வருத்தமா இருக்கு.///
இதில் மறைமுகமா வாசுவின் சபல புத்தியை பற்றி கூறி இருக்காங்க
அப்பறம் புருஷோத்தமன் மேட்டர்.
அதனால வாசுதான் கொலையை செய்து இருக்க வேண்டும்.
அட போங்கப்பா. நன் கொஸ்டீனை பாஸ் செய்கிறேன். நீங்க ஃபெயில் ஆயிட்டீங்க...
///நீங்கள் சரியாக விடையைச் சொல்ல வில்லை என்றால் தோற்றது நான் தான்./// :))
-வித்யா
ஈரம் கதையை உல்டா பண்ணின மாதிரி இருக்கு!
வாசு கொலை செய்யவில்லை, ஆனால் ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருக்கலாம்.
சில க்ளூஸ் வாசு சபல புத்திக்காரன் என்று சொல்கிறது. ஆனா காரணம் தான் ஒன்னும் வெளங்கல.. :)
அண்ணன் இந்த ஏரியாவில் வீக் என்பதால் ரிஸல்ட் பார்ப்பதற்காக இந்த பின்னூட்டம்.
சீக்கிரம் ரிலீஸ் பண்ணிவிடுங்க பாஸ்.!
வாசு + டிவோர்ஸ் லேடியின் ப்ளான் ஆக இருக்குமோ ?
எங்க பக்கத்து வீட்ல இருந்த வாசுவுக்கு வீடு வேணும்னு சொன்னதும் உடனே அந்த பிளாக் காலியா இருக்குன்னு முடிச்சுக் கொடுத்தாங்க.
+
”அவர் என் எக்ஸ் ஹஸ்பெண்டோட ஃப்ரெண்ட்.லிமிட்ல இருப்பாரு.நான் க்ளியரா இருப்பேன் சார்.
இந்த ஸ்டேட்மெண்ட்தான் கொஞ்சம் நெருடலை உண்டு செய்கிறது.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் "புருஷோத்தமன்" புகழ் பாடுங்களேன்.
:-)
//”அவர் என் எக்ஸ் ஹஸ்பெண்டோட ஃப்ரெண்ட்.லிமிட்ல இருப்பாரு.நான் க்ளியரா இருப்பேன் சார்.எனக்கும் ஹஸ்பெண்ட்டுக்கும் ஒத்து வரலைன்னு தெரிஞ்சதுமே கட் பண்ணிக்கிட்டேன்.அவ்ளோ பிரச்சனை பண்ண என் ஹஸ்பண்டையே நான் சமாளிச்சேன்.இவ ஏன் இப்பிடி பண்ணிக்கிட்டானுதான் ஸார் வருத்தமா இருக்கு.//
வாசுவுக்கும் சாட்சி சொல்லும் இந்த அம்மாவுக்கும் கள்ளத் தொடர்பு உண்டு. முழுதாக காட்டிக் கொடுக்க போதிய ஆதரம் அவளிடம் இல்லை. பக்கத்துவீட்டில் குடிவந்த வாசு கொலை செய்துவிட்டு பின் பால்கனி வழியாக தப்பிவிட்டான் என்பதை பின் பால்கனி தாவி குதித்து போகும் தொலைவில் இருப்பதாக எழுதி இருப்பதில் இருந்து தெரிகிறது. மோடிவ் ? சபலம்
பின்னூட்டங்களையும் விடையையும் மின்னஞ்சலில் பெற... :)))
என்ன தோன்றுகிறதோ சொல்லுங்கள்.எல்லோருமே கிட்டத்தட்ட சரியாக சொல்வதால் பின்னூட்டப்பெட்டி திறந்தே இருக்கட்டும்.
கொலையாளி யார் என்பது இறுதி வரிகளில் கிட்டத் தட்ட சொல்லியாகிவிட்டது.
ஏன்?காரணம்..வேறு கோணம் இப்படி யோசிக்க முடிகிறதா?
//ஏன்?காரணம்..வேறு கோணம் இப்படி யோசிக்க முடிகிறதா?//
எங்க ஸ்கூல் வாத்தியாரு கூட இவ்ளோ கஷ்டப்படுத்தினது கிடையாது... :)
//ஏன்?காரணம்..வேறு கோணம் இப்படி யோசிக்க முடிகிறதா?//
இல்லயே... :(((
//புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடலை விசிலில் பாடிக்கொண்டே சிரித்தான்//
இதுக்கு ரெண்டு அர்த்தம் தெரியுது...
1. துப்பாக்கிய குடுத்தது புருசோத்தமன்.
2. புருசோத்தமனுக்கும், வாசுவுக்கும் கள்ளத்தொடர்பு.
\\2. புருசோத்தமனுக்கும், வாசுவுக்கும் கள்ளத்தொடர்பு.\\
அவ்வ்வ்வ்..அவரா நீங்க..?
//2. புருசோத்தமனுக்கும், வாசுவுக்கும் கள்ளத்தொடர்பு.//
ஆஆஆஆஆ
என்ன கொடுமை !
:)
// ♠ ராஜு ♠ said...
அவ்வ்வ்வ்..அவரா நீங்க..?//
அப்றம் என்ன ராஜூ, நேரம் ஆக ஆக என்னல்லாமோ தோனுது.
நான் அவன் இல்லை.
வாசுவுக்கு எப்போவும் தப்புத் தப்பாப் பண்றது பேசுறது ஒரு வியாதி!டிவோர்ஸ் ஆன அந்த பெண் மீது வாசுவுக்கு சபலம்.சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல் தப்பாக அவன் பூர்ணாவின் வீட்டில் வாசு செல்ல,அவளிடம் தவறாக நடக்க முயல பின் வாசு அவளைக் கொன்று விடுகிறான்!....சரியா?....
அருமையான எழுத்து நடை...! நீங்களே மீதியையும் சொல்லிடுங்க..!
&&2. புருசோத்தமனுக்கும், வாசுவுக்கும் கள்ளத்தொடர்பு^^^
தொடர்பு என்று இருந்தால் பத்தாதா ? அவ்வ். வயுறு குலுங்க சிரிக்கவெச்சிட்டீங்க.
ரெண்டு பாகமா பிரிச்சு போட்டு பீதியை கிளம்பியிருக்கலாமோ ?
ஓட்டுக்களை போட்டுட்டேன்.
டைவர்ஸ் லேடிக்கும் வாசுவுக்கும் லிங்க். அவளை கொண்ணுட்டு, அதை கண்டுபிடிச்ச அவ புருசனையும் மாடியில இருந்து தள்ளிவிட்டுட்டாங்க. பெண்.
//Blogger எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...//
கள்ளதொடர்பு என்று படிச்சதும் சிரிப்பை அடக்கவே முடிலீங்க... ஹா ஹா ஹா ஹா ....
நர்சிம் ... இந்த கதைய முடிக்கிறேன்னு யாரு நெகடிவ் வோட் போட்டு உங்க கதைய முடிக்கிறது...
:))
இன்னைக்கு அவுட் ஆப் ஆர்டர். முடியல.
விடை அறியும் ஆவலில்!
//2. புருசோத்தமனுக்கும், வாசுவுக்கும் கள்ளத்தொடர்பு.
//
:-)))))))))))))))))))))
Any Correlation between Vasu's behaviour of interchanging the words with 'V' and 'B'? Did he killed Poorna instead of Killing the other divorced lady because of interchanging 'V' Block and 'B' Block??
புருஷோத்தமன் - பூர்ணாவின் கணவன், வாசுவின் நண்பன். வாசு டைவர்ஸ் அல்லது அந்த மாதிரியான பெண்களை விரும்புவதால், புருஷோத்தமன், தன் மனைவியை வாசுவிடம் பழகவைத்து பணம் கறக்கும் டைப். அதனால் தான் பூர்ணாவின் கணவன் இறப்பதற்கு முன் “நான் சொன்னதையெல்லாம் செய்தாள்” என்று சொல்லிவிட்டு செத்திருக்கிறான்.
வாசு தான் கொன்றிருக்கிறான். வாசு கொலையாளி.
மெகா சீரியல் எழுதுற அளவுக்கு குறுக்கு புத்தியோட எல்லாரையும் யோசிக்க வெச்சுட்டீங்க. வடைக்காக சாரி விடைக்காக காத்திருக்கிறோம்
/“ஆமா சார்.புலம்பி இருந்திருக்காரு.தப்பு என் மேல தான்.நான் என்ன சொன்னாலும் கேட்டா.”அப்பிடின்னு சொல்லிட்டே செத்து இருக்கான்./
கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு இந்த பதிலில்தான் பிரச்னை அப்பிடீன்னு நான் சொல்றேன் ரைட்டா?
அன்பின் நர்சிம்
இந்திய “தினத்தில்” நெறய பேர் மண்ட காஞ்சிட்டாங்க..
அமெரிக்க “தினத்தில்” நாங்களும் காயணுமா??
விடையை ரிலீஸ் பண்ணுங்க பாஸ்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
Unga blog'a ivvalavu refresh pannunadhu innaikku dhan first!!! But still no answers :(
புருசோத்தமன் தான் கொலைகாரன். அவன் ஒரு வாடகைக் கொலையாளி. ஆனால் அவன் கொலை செய்ய நினைத்தது V ப்ளாக்கில் B4 ல் வசிக்கும் டிவோர்சியை. புருஷோத்தமனிடம் சொல்லும்போது B block V4 என்று வழக்கம்போல வாய் குழறி சொல்லிவிட்டான்.வாசுவுக்கும் பூர்ணாவுக்கும் சம்மந்தம் எதுவுமில்லை என்பது தெளிவாகத் தெரிவதாக கூறியிருக்கிறார்.
இந்தக் கதைக்கு இது ஒரு முடிவாக இருந்தாலும் லாஜிக்கலாக இடிக்கிறது. B block ல் எதற்காக V4 என்று டோர் நம்பர் வருகிறது?
கார்ல்ஸ்பெர்க் / mukilan congrats-
s. vat that v-4 on B block ?
புருசோத்தமன் தான் கொலைகாரன். அவன் ஒரு வாடகைக் கொலையாளி. அவனை ஹயர் செய்தது வாசு. வாசு கொலை செய்ய நினைத்தது V ப்ளாக்கில் B4 ல் வசிக்கும் டிவோர்சியை. புருஷோத்தமனிடம் சொல்லும்போது B block V4 என்று வழக்கம்போல வாய் குழறி சொல்லிவிட்டான்.வாசுவுக்கும் பூர்ணாவுக்கும் சம்மந்தம் எதுவுமில்லை என்பது தெளிவாகத் தெரிவதாக கூறியிருக்கிறார்.
இந்தக் கதைக்கு இது ஒரு முடிவாக இருந்தாலும் லாஜிக்கலாக இடிக்கிறது. B block ல் எதற்காக V4 என்று டோர் நம்பர் வருகிறது?
சூப்பர் கார்ல்ஸ்பெர்க் & முகிலன்.
ஆம் அதுதான் மிகச் சரியான விடை.
மற்றவர்கள் எல்லோருமே ஓரளவிற்கு நெருங்கி வந்தார்கள்.
(ஒவ்வொரு பிளாக்கிலும் A1 A2..இருப்பது போல ‘B' ப்ளாக்கில் v வரிசையில் 4வது வீடு.(பிரம்மாண்ட அப்பார்ட்மெண்ட் என ஆரம்பத்தில் குறித்தது இதற்காகத்தான்)
வாசுவிற்கு இருந்தது ‘ஸ்பூனரிசம்’ என்ற ஒன்று.முதல் எழுத்தை மாற்றிப் பேசும்/எழுதும் ஒரு பழக்கம்.
*******
கார்ல்ஸ்பெர்க் & முகிலன்..சூப்பர்.
மற்றவர்களுக்கு ஸ்பெசல் சூப்பர்.ஏனெனில் இவ்வளவு தூரம் உடைத்து இலக்கை அடைய வைத்ததற்காக.
மொத்தத்தில் ஒரு வித்தியாசமான முயற்சி..
நன்றி.
நான் எழுதி வைத்திருந்த இறுதி பத்தியை நாளை இடுகிறேன்.
பாசுவின் மூக்கு வாலம்..ஸாரி வாசுவின் வாக்குமூலம்.
நன்றி
‘ஸ்பூனரிசம்’
so this is spoon feeding-aa.
here after we should google
after reading your stories and
articles.
congrats.
i ll try to talk to you on phone
tuesday
அப்பாடி வடை கிடைச்சுடுச்சு.
பாராட்டுக்கள் முகிலனுக்கு.
சே ! அறியாப் பொண்ணு பூர்ணா மேல அபாண்டமா பழி போட்டுட்டேனே :(
நன்றி, நன்றி, நன்றி.. உங்கள் ஸ்டைலில் முடிவினை எதிர்பார்க்கிறேன்.
Spoonerism பற்றி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். இதை நாடக வசனகர்த்தாக்கள் வேண்டுமென்றே (நகைச்சுவைக்காக) பயன்படுத்துவார்கள்.
உ.தா. என்னோட பிரதர். கோ.பரதன் உங்க குவாரில தான் வேல பாக்குறார்.
அப்பிடியா. அவர நாளக்கே ஆபிசர் ஆக்கிடுறேன். ஆமா, உங்க கோ.பிரதர் என்னவா இருக்கார்?
ஆப்பம் ஓட்டையா . . . ஹி ஹி ஹி
//.. புருசோத்தமன் தான் கொலைகாரன். அவன் ஒரு வாடகைக் கொலையாளி. ..//
எனக்கென்னமோ, "புருசோத்தமன்" எதிர் பிளாக் பெண்ணின் கணவனோனு தோணுது..
//நேசன்..., said...
வாசுவுக்கு எப்போவும் தப்புத் தப்பாப் பண்றது பேசுறது ஒரு வியாதி!//
மிக்க நன்றி ரவி குமார்(நேசன்)..
நீங்க குடுத்த Lead'ல தான் என்னால கண்டுபிடிக்க முடிஞ்சுது..
Thanks AK..
நன்றி நர்சிம் அண்ணா.. ஆபீஸ்'ல Google Indic அடிக்கடி Block ஆயிடுது..
Arun Karthik
wow. super..
-vidhya
ஓஹோ, இப்படியெல்லாம் யோசிக்கனுமா.. ம்ம்...
சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க... அது என்ன வியாதின்னு தெரிஞ்சுக்கனும்...
கதை படித்த சுவாரஸ்யத்தில் கொலைகாரனைப்பற்றி எங்கே யோசிக்க முடிந்தது....நடை வெகு சுவாரஸ்யம்.
எப்படியோ அடிக்கடி கொலைகள் நடந்தால் சரி..
பின்னூட்ட கலாட்டாக்களில்.,
எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...
2. புருசோத்தமனுக்கும், வாசுவுக்கும் கள்ளத்தொடர்பு.
November 9, 2009 3:27 PM
Blogger ♠ ராஜு ♠ said...
\\2. புருசோத்தமனுக்கும், வாசுவுக்கும் கள்ளத்தொடர்பு.\\
அவ்வ்வ்வ்..அவரா நீங்க..?
இரண்டு நிமிட இடைவெளிகளில் வந்த இரண்டு கமெண்ட்டும் சிரித்து முடியவில்லை...
Post a Comment