Wednesday, November 11, 2009

மறக்கப்பட்ட மன்னர் மன்னன் - பரதன்

எங்கோ எவரோ எதற்கோ செய்த ஒரு செயலுக்காக,அங்கிங்கு சுற்றி,கடைசியாக நம்மிடம் வந்து, ‘என்ன பாஸ்..சாதிச்சுட்டீங்க போல..நல்லா இருங்க’,எனும் போது,ஏன் எதற்கு என்று தெரியாமலே உயிர் வலி எடுக்கும் அனுபவங்கள் நம்மில் பலருக்கும் ஏற்பட்டே இருக்கிறது.பட்டுக்கொண்டே இருக்கிறது.

ஒருமுறை,நண்பனை அவனது பெரியப்பா திடீரென்று அவரின் ஊருக்கு வரச்சொல்லி அழைத்திருந்தார்.நானும் அவனும் சென்றிருந்தோம்.கதவைத் திறந்த அவன் பெரியம்மா தன் தாடையைக் கொண்டு தோளில் தட்டி,முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டார்.

விசயம் என்னவென்றால்,அவன் பெரியப்பாவிற்கு தெரிந்த நண்பர் ஒருவரின் கம்பெனியில் ஏதோ வேலை காலியாக இருந்திருக்கிறது.அவருக்கு இவன் நினைவு வந்து உடனே சேர்த்துவிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்.

பிரச்சனை என்னவென்றால்,அவருக்கும் ஒரு மகன் இருக்கிறான்.அவனுக்கு ஏன் அதை சொல்லவில்லை என்று அந்த அம்மாவிற்கு கோபம்.நியாயமானதும் கூட.

யாரை,எங்கு பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு பெரியப்பா கிளம்பியவுடன்,நண்பனைப் பார்த்து அவர் மிகக் கடுகடுவென பேச ஆரம்பித்தார்.

“இந்தாப்பா,புது சட்டை வேற எடுத்து வச்சிருக்காரு உங்க பெரிய்ய்ய அப்பா.போட்டுட்டு போ”

“இல்ல பெரியம்மா..வந்து”

“ஆமாப்பா.நீங்களே எல்லாம் பண்ணிக்கோங்க,நாங்க எல்லாம் உங்க வாயப் பார்க்கத்தானே இங்க இருக்கோம்,வேலைன்ன உடனே தாவிக்கிட்டு வரத்தெரியுதே..”

“இல்ல பெரியம்மா,எதுக்குன்னு அவர் சொல்லவே இல்ல.தெரிஞ்சிருந்தா வந்திருக்க மாட்டேன்.ரமேஷ் இருக்கும் போது எனக்கு என்னா அவசரம் பெரியம்மா?,அப்புறம் நான் அங்க ஊர்லயே ஒரு இடத்துல ரெடி பண்ணி வச்சிருக்கேன்.ரமேஷ் பார்த்தா என்ன நான் பார்த்தா என்ன,பெரிப்பா கிட்ட சொல்லிடுங்க,அவனுக்கு இஷ்டம் இல்லியாம்னு”

என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் என்னை அழைத்துக் கொண்டு விடுவிடுவென நடக்கத் தொடங்கி விட்டான்.

அவன் சொன்னபடி,வேலைக்குத் தான் என்று சொல்லி இருந்தால் இவன் நிச்சயம் ரமேஷ் குறித்துக் கேட்டுவிட்டுத்தான் கிளம்பி இருப்பான்.அது தெரியாமல் புலம்பி விட்டதை எண்ணி பெரியம்மா தொலைபேசியில் அழைத்து இப்படிச் சொன்னாராம் பின்னர்.

“குணத்துல நீ எல்லாரையும் விட உசத்திடா கண்ணா.தெரியாம சொல்லிட்டேன்”

இப்படித்தான் பரதனை ராமனின் தாய் கெளசல்யா தவறாக நினைத்து பேசியவுடன்,பொருமையாக பரதன் தனக்கு கைகேயின் சூழ்ச்சி தெரியாது என்றும்,ராமன் நிலை குறித்து எதுவும் தெரியாத நிலையில் ஆட்சி அமைக்கத் தான் வரச்சொன்னார்கள் என்று கூட தெரியாது என்பதையும் விளக்கிய பின்,

கெளசல்யாவின் பார்வையில் கம்பரின் இந்த வரிகள்,மிகச் சிறந்த வரிகளாக பரதன் குறித்து எழுதப்பட்டவை.மன்னர்மன்னா என்று பரதனை கம்பர் அழைக்கக் காரணம் இருக்கிறது.குணத்தில் பரதன் மன்னர்மன்னன் தான்.

ஆம்,ஒரு சந்தர்ப்பமும் வாய்க்கப் பெறாமல் இருக்கும் போது ஒழுக்கமாகவும்,எளிமையாகவும்,நேர்மையாகவும் இருப்பது ஒன்றும் பெரிதல்ல.எல்லா வாய்ப்புகள் இருந்தும் அதை தவிர்த்து,எளிமையாகவும் நேர்மையாகவும் இருப்பது என்பது கடினமான,போற்றுதலுக்குரிய ஒரு அரிய குணம் என்பதால் தான் அந்த ‘ஸ்பெஷல் மன்னர்மன்னா’வார்த்தை.

‘முன்னை நும்குல முதலுளோர் கள்தாம்
நின்னை யாவரே நிகர்க்கு நீர்மையார்?
மன்னர் மன்னவா’,என்று வாழ்த்தினாள்
உன்ன உன்னநைந் துருகி விம்முவாள்’


“உனக்கு முன்னோர்கள் அரசர்களாக பெரும்புகழ் பெற்றிருப்பினும்,உனக்கு ஈடாக எவரும் இல்லை,(ஆட்சியே வேண்டாம் என்று சொன்னது யாரும் இல்லை என்ற பொருளில்)மன்னர்மன்னா”என்று வாழ்த்தியுருகி அழுதாள் கோசலை.

மன்னர்மன்னா என்ற சொல்லே இதில் சிறப்பு.ராமனைக் கூட எங்கும் கம்பர் அப்படி விளித்ததாக தெரியவில்லை.

பரதனின் குணங்கள் பற்றிய பாடல்கள் போற்றுதலுக்குரியவை.

இன்னுமோர் இரக்கப்பட வேண்டிய,மறக்கப்பட்ட கதாபாத்திரம் லெட்சுமணனின் மனைவி.அடுத்துப் பார்ப்போம் அவரைப் பற்றி.

..

50 comments:

இரும்புத்திரை அரவிந்த் said...

super thala

பிரியமுடன்...வசந்த் said...

//“என் பிள்ளைய விட நீ உசத்திடா கண்ணா.தெரியாம சொல்லிட்டேன்”//

இது அந்த நிமிட உணர்வில் சொல்லப்பட்டதா? இல்லை சமாளிப்ஸ்க்காக சொல்வதா?

மன ஆறுதலுக்கு கூறியதாயினும்

கொட்டிய வார்த்தைகளை அள்ளியெடுக்க முடியாதே..

----------------------------------

பதிவுலக கார்ப்பரேட் கம்பர் வாழ்க..

KVR said...

கம்பனின் பாடல்கள் ஒரு சுகம்ன்னா அதை நீங்க தற்கால சூழ்நிலைக்கு ஒப்பிட்டு எழுதுவதைப் படிக்கிறது இன்னுமொரு சுகம். வழக்கம் போலவே கலக்கல்.

//இன்னுமோர் இரக்கப்பட வேண்டிய,மறக்கப்பட்ட கதாபாத்திரம் லெட்சுமணனின் மனைவி.அடுத்துப் பார்ப்போம் அவரைப் பற்றி.//

ஊர்மிளாவுக்காக வெயிட்டிங்.

//எங்கோ எவரோ எதற்கோ செய்த ஒரு செயலுக்காக,அங்கிங்கு சுற்றி,கடைசியாக நம்மிடம் வந்து, ‘என்ன பாஸ்..சாதிச்சுட்டீங்க போல..நல்லா இருங்க’,எனும் போது,ஏன் எதற்கு என்று தெரியாமலே உயிர் வலி எடுக்கும் அனுபவங்கள் நம்மில் பலருக்கும் ஏற்பட்டே இருக்கிறது.பட்டுக்கொண்டே இருக்கிறது.//

100% உண்மை.

KaveriGanesh said...

எல்லா வாய்ப்புகள் இருந்தும் அதை தவிர்த்து,எளிமையாகவும் நேர்மையாகவும் இருப்பது என்பது கடினமான,போற்றுதலுக்குரிய ஒரு அரிய குணம்

great.

பட்டிக்காட்டான்.. said...

அருமையான விளக்கம் பாஸ்..

சாம்ராஜ்ய ப்ரியன் said...

ஒரு தாய் மைந்தர்களான லக்ஷ்மணனும், சத்ருகணனும் ராமன் மற்றும் பரதனுக்கு முறையே நிழலாக இருந்தனர். லஷ்மணன் போல் சத்ருகணனை பற்றி பொதுவில் பரவலாக பேசப்படவில்லை. இரக்கப்பட வேண்டியவர் இல்லை எனினும் அவரும் மறக்கப் பட்டவராக தான் தோன்றுகிறது.

அவரையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள் அண்ணா.

சுந்தரா said...

அருமை!

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க.

No said...

அன்பான நண்பர் திரு நர்சிம்,

பிளேடு பதிவர்கள் பலர் பந்தாவாக பம்மாத்து காட்டும் வலைத்தளங்களில் நடுவே உங்களின் தெளிவும் அது தரும் தரமான இது போன்ற படைப்பும் அருமை அருமை!

//ஆம்,ஒரு சந்தர்ப்பமும் வாய்க்கப் பெறாமல் இருக்கும் போது ஒழுக்கமாகவும்,எளிமையாகவும்,நேர்மையாகவும் இருப்பது ஒன்றும் பெரிதல்ல.எல்லா வாய்ப்புகள் இருந்தும் அதை தவிர்த்து,எளிமையாகவும் நேர்மையாகவும் இருப்பது என்பது கடினமான,போற்றுதலுக்குரிய ஒரு அரிய குணம் என்பதால் தான் அந்த ‘ஸ்பெஷல் மன்னர்மன்னா’வார்த்தை//.

நீங்கள் மேலே கூறிய விடயத்தின் சாராம்சம், ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் " Chastity should not be the lack of opportunity, rather an ingrained quality that doesnt waver with the comming of opportunity"!

On the spot Narsim on the spot!!!!

கம்பன் காவியத்தில் அன்றே சொன்னான்
நண்பன் நர்சிம் அதை easy ஆக்கி இன்று சொன்னான்

கீப் இட் அப்!!!!!!

லட்சுமணனின் மனைவியைப்பற்றிய உங்களின் பார்வையை காண காத்திருக்கிறேன்!

நன்றி
நோ

சஹானா beautiful raga said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க.
வெயிட்டிங் 4 ஊர்மிளா

D.R.Ashok said...

nice one narsim

கதிர் - ஈரோடு said...

கம்பனின் வரிகளை மிக எளிமைப்படுத்தி கொடுத்த விதம் மிகவும் அழகு. ரசித்தேன் நர்சிம்

பின்னோக்கி said...

நல்லாயிருக்கு. வாய்பிருந்தும் அதை பயன்படுத்தாதவன் மன்னர்மன்னன். அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

கும்க்கி said...

தம்பிக்காக மாநிலத்தை விட்டுக்கொடுத்த அண்ணன் அ.நெ.கூட நினைவில் வந்து போகிறார்...ஹூம்.

அப்புறம்,
நன்றி
நோ.

thiru said...

Excellent!! Beautifully written, Waiting for Urmila!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

அழகு.!

Cable Sankar said...

//தம்பிக்காக மாநிலத்தை விட்டுக்கொடுத்த அண்ணன் அ.நெ.கூட நினைவில் வந்து போகிறார்...ஹூம்.//

கும்க்கி அண்ணே.. உங்களூக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல..??

கார்க்கி said...

நர்சிம், ட்ரீட் எப்ப?

எதுக்கா? நோ பின்னூட்டம் பார்த்திங்க இல்ல?

//கம்பன் காவியத்தில் அன்றே சொன்னான்
நண்பன் நர்சிம் அதை easy ஆக்கி இன்று சொன்னான் //

சாமீ.. லட்சிய திமுகவில் ஏதாவ்து பதவி வாங்கி தாங்க சகா இவருக்கு..

அண்ணன் நோ

வாழ்க வாழ்க

அண்ணன் நோ

வாழ்க வாழ்க

அண்ணன் நோ

வாழ்க வாழ்க

அண்ணன் நோ

வாழ்க வாழ்க
அண்ணன் நோ

வாழ்க வாழ்க.. ழ்க..க..

அறிவன்#11802717200764379909 said...

சுமத்திரை மட்டுமல்ல,இராமனின் புகழ் பாடிய அடியவர்கள் அனைவராலும் இராமனிலும் புகழப்பட்டவன் பரதன்.

நாவாய் வேட்டுவன்;நாயடியேன் என்று இராமனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட குகன் முதலில் பரதனைத் தூரத்தில் கண்டு வெகுண்டு நிற்கிறான்,இராமனைத் துரத்திக் கொண்டு வருகிறானோ என்று எண்ணயதால்!

அருகில் வந்த பரதனின் தவநிலை கண்டு குழம்பி,என்னப்பா இந்தப் பக்கம்? என்கிறான்.(தாமரைச் செங்கணானை ‘எழுவினும் உயர்ந்த தோளாய்! எய்தியது என்னை? ‘என்ன,).

பரதனின் பதில் அழகென்றால் அதற்கு குகனின் மறுமொழி அதனினும் அழகு.

பரதன் சொல்கிறான்,எங்கப்பா ஒரு குற்றவாளி,தவறு செய்து விட்டான்,நான் அதை சரி செய்ய வந்தேன்..(‘முழுது உலகு அளித்த தந்தை முந்தையோர் முறையில் நின்றும் வழுவினன், அதனை நீக்க மன்னனைக் கொணர்வான் ‘என்றான்.)

நெகிழ்ந்த குகனின் பதில்..

நீ மனுஷன்டா,ஆயிரம் இராமர்கள் உனக்கு நிகராக மாட்டார்கள்..


(தாய் உரை கொண்டு, தாதை
உதவிய தரணி தன்னைத்
தீ வினை என்ன நீத்துச்
சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்ற போழ்து,
புகழினோய்! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ்
ஆவரோ? தெரியின் அம்மா!)

அதுவும் எப்படி பரதன் அரசுரிமையை மறுதலித்தானாம்..தீவினை என்று நீத்து'என்கிறார் கம்பர்.

முறையற்ற,தனக்கு உரிமையற்ற ஒன்று நமக்குக் கிடைத்தால் அதைத் தீவினை என்று ஒதுக்க வேண்டும் என்பது வாக்கு...

ஹீம்..நாட்டுல நடக்குறதெல்லாம் பாத்தா.?????

நல்ல பதிவு..தொடர்க...

கும்க்கி said...

ப்ரதர் ....இதுதான் போட்டு வாங்குறது என்பதா...?
பாவம் நர்சிம்.

முரளிகண்ணன் said...

அருமை நர்சிம். என்னிடம் வார்த்தைகள் இல்லை

நர்சிம் said...

நன்றி அறிவன்.ஆம்.அற்புதப் பாடல் அது.அதுகுறித்த பதிவு

http://www.narsim.in/2009/07/blog-post_4290.html

கருத்திற்கும் அருமையான விளக்கத்திற்கும் நன்றி அறிவன்.

நர்சிம் said...

நன்றி இரும்புத்திரை அரவிந்த்

நன்றி ப்ரியமுடன் வசந்த்

நன்றி கேவிஆர்

நன்றி காவேரி கணேஷ்

நன்றி பட்டிக்காட்டான்

நன்றி சாம்ராஜ்யப்ரியன்(என்ன ஒரு வேற்றுமை.சாம்ராஜ்யமே வேண்டாம் என்ற பரதனையும் சத்ருகணனையும் வாழ்த்தும் சாம்ராஜ்யப்ரியன்..ஹஹஹ..)

ஆழமான கருத்து சாம்ராஜ்யப்ரியன்.ஆம்..சத்ருகணன் குறித்தும் எழுதவேண்டும்.

நன்றி சுந்தரா.

நன்றி திரு.நோ.

நன்றி சஹானா,பியூட்டிஃபுல் ராகா.

நன்றி அசோக்

நன்றி கதிர்.

நன்றி பின்னோக்கி

நன்றி கும்க்கி

நன்றி திரு

நன்றி ஆதி

நன்றி கேபிள்

நன்றி சகா!

நன்றி அறிவன்

நன்றி கும்க்கி..ஆமா தல.

நன்றி முரளிகண்ணன்.

அன்புடன்-மணிகண்டன் said...

// No Said.. பிளேடு பதிவர்கள் பலர் பந்தாவாக பம்மாத்து காட்டும் வலைத்தளங்களில் நடுவே உங்களின் தெளிவும் அது தரும் தரமான இது போன்ற படைப்பும் அருமை அருமை!//

நானும் ப்ளேடு catergory'ல் வரக்கூடும் என்கிற முறையில்...

Superb Narsim!!!!

அறிவன்#11802717200764379909 said...

\\http://www.narsim.in/2009/07/blog-post_4290.html

கருத்திற்கும் அருமையான விளக்கத்திற்கும் நன்றி அறிவன்\\

அந்தப் பாடல் பற்றிய பதிவை இப்போதுதான்-சுட்டியதால்-பார்த்தேன்..

நன்று..மீண்டும் பாராட்டுக்கள்..

உங்களைத் தொடர்வதால் சாதாரணமாக எல்லாப் பதிவுகளையுமே படிப்புதுண்டு,எல்லாவற்றிற்கும் பின்னூட்டா விட்டாலும் :)..

எப்படி தப்பியது என்று தெரியவில்லை...

நாய்க்குட்டி மனசு said...

எந்த பாவமும் அறியாத ஊர்மிளா என்னும் பெண் பரிதாபமாக 14 ஆண்டுகள் கணவனைப் பிரிந்தது எந்த வகையில் நியாயம் என்பது இன்று வரை எனக்கு விளங்கியதில்லை. அதைக் கொஞ்சம் விளக்குங்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையா உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கீங்க தல.. நல்லாயிருக்கு..

(இந்த வாரமும் வழக்கம் போலவே அல்வா கொடுத்துட்டீங்களே.. அவ்வவ்)

sriram said...

அழகா சொல்லியிருக்கீங்க நர்சிம்..
வேற சொல்ல தெரியல..
அப்புறம், இது மூன்றாவது தடவை - பதிவை படிக்கும்போது என்ன பின்னூட்டம் போடணும்னு நெனச்சேனோ, அதயே ஆதி போட்டிருப்பது (நர்சிம் பதிவில் இது இரண்டாவது முறை மற்றும் பரிசலின் பதிவில் ஒரு முறை) எனவே இனிமேல் என் பின்னூட்டம் வரும் வரை ஆதியின் பின்னூட்டத்தை ரிலீஸ் பண்ணவேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்..
(Aathi - I really wonder how this can happen more than once.. )

சாம்ராஜ்ய ப்ரியன் said...

எனது வேண்டுகோளை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதிற்கு ரொம்ப நன்றி. அதே போல்.. நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கும் பதிலளித்து மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்குங்களேன்:-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

சிம்பிள் ஸ்ரீராம், ஒத்த ரசனை.! என்னோடது உங்களுக்குப் பிடிக்குமானால் அனுஜன்யா, துக்ளக் மகேஷ் ஆகியோரடதும் உங்களுக்குப்பிடிக்கலாம். இவ்வளவுக்கும் 'அழகு' என்ற ஒற்றை வார்த்தைதானே போட்டேன்.! ஹிஹி..

பதிவுகளைவிடவும் சுவாரசியமான பின்னூட்டமிடும் பலரின் ரசிகன் நான்.!

kanagu said...

romba nalla irundhudunga.... :) arumai...

immathiri padhivugal padhivulagil arithaaga ullana :(

No said...

கார்கி அண்ணனும் வந்தார் இங்கு சத்தத்தோடு
பிளேடு என்று அவரைத்தான் சொன்னேனோ என்ற சந்தேகத்தோடு

கொட்டி தீர்த்தார் அவர்தம் காண்டை ஒரு வித பித்தத்தோடு
கிண்டலாக பின்னூட்டம் இடுவதில் அவர் இன்னும் ஒரு பட்டிக்காடு

உங்களின் எழுத்துக்களின் கழுத்தினை திருகியதால் வந்த கோபமோ
அல்லது அனானி கூட என்னை அடிக்கிறானே என்ற சோகமோ

காண்டுக்கனைகளை கிண்டல்கனையாக்கினால் துளியும் குத்தாது
கிண்டலாக காமெடி செய்ய உமக்கு வயதும் பத்தாது

ஆதலால், நண்பனே இன்று போய் நாளைவா
உன்னால் முடிந்தால் நல்ல படைப்பொன்றைத்தா

நன்றி

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல அருமையான பதிவு

அண்ணன் நோ அவர்கள் வாயாலே நல்லாருக்கு என்று சொல்ல வைத்த பதிவு

அக்பர் said...

அழகாக விளக்கியுள்ளீர்கள்.

vanila said...

நரசிம் ஜி..

இது மீழ் பதிவா.. உங்கள் வலைப்பூவிலோ, இல்லை பத்திரிக்கையிலோ படித்த ஞாபகம்..

sriram said...

'' ஆதிமூலகிருஷ்ணன் said...
சிம்பிள் ஸ்ரீராம், ஒத்த ரசனை.! //

ஆகா என்னோட ரசனை கூட பெரிய ஆளுங்களோட ரசனையோட ஒத்து போகுதா?

பிரபல பதிவர்கள் மாதிரி எழுதத்தான் முடியல, யோசிக்கவாவது முடிவது குறித்து மகிழ்ச்சியே...

அப்புறம் ஆதி, உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கணுமே...
ரெண்டு பொண்டாட்டி கட்டிக்கறவங்க பத்தி என்னா நெனைக்கிறீங்க?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்...

சுசி said...

ரொம்ப நல்லா இருக்கு.

உயிரோடை said...

ப‌திவு அருமை.

ப‌டித்துக்கொண்டே வ‌ரும் போது ஊர்மிளை ப‌ற்றி எழுங்க‌ளேன் என்றே பின்னூட்ட‌ம் இட‌ எண்ணி இருந்தேன். எழுதுங்க‌ள் ஊர்மிளைக்காக‌ வ‌ட‌ இந்தியாவின் ஊர்மிளை புல‌ம்ப‌ல்க‌ள் என்று ஒரு காவிய‌மே இருக்கின்ற‌து.

ஆதிமூலகிருஷ்ணன் said...

Sriram : அப்புறம் ஆதி, உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கணுமே...
ரெண்டு பொண்டாட்டி கட்டிக்கறவங்க பத்தி என்னா நெனைக்கிறீங்க?//

நர்சிம் ஒரு அழகான பதிவு போட்டிருக்கார், அது பற்றி பேசாமல் அவர் பதிவில் வைத்து, அதுவும் ஒரு பொது இடத்தில் வைத்து..

நல்லா கேக்குறாய்ங்கய்யா கேள்வி.. என் சிப்ஸு.!!

அனுஜன்யா said...

சந்தர்ப்பம் கிடைக்காததால் நல்லவர்களாக இருக்கும் நம்மில் பலருக்கும், சந்தர்ப்பம் இருந்தும் யோக்கியனாக (யோக்கியதையில் பரதனுக்கு நிகர் யாருமேயில்லை என்று ஏதோ ஒரு ராமாயண version இல் படித்த நினைவு) திகழ்ந்த பரதன் மேல் இவ்வளவு மரியாதை இருப்பது ஆச்சரியமில்லை.

எல்லாரும் ஓரளவு அறிந்த விஷயத்தை இவ்வளவு சுவாரஸ்யமாகச் சொல்லும் கலை வெகு சிலருக்கு மட்டுமே வருகிறது. You are certainly one of the few. Continue the good show.

அனுஜன்யா

Btw, ஆதி, என்ன வெச்சு காமெடி.....

ஸ்ரீமதி said...

//இன்னுமோர் இரக்கப்பட வேண்டிய,மறக்கப்பட்ட கதாபாத்திரம் லெட்சுமணனின் மனைவி.அடுத்துப் பார்ப்போம் அவரைப் பற்றி.//

ஆவலுடன் காத்திருக்கிறேன் அண்ணா.. கேட்க நினைத்ததும்..

ஸ்ரீமதி said...

ஆதே போல 'வாலியின் அவதார புருஷனில்' லக்ஷ்மணன் குறித்து ஊர்மிளை(ளா)விற்கு கோபம் இருந்தது போலவும், அவரும் இவள் நிலை அறியாதவராய் நடந்துகொண்டது போலவும் எழுதியிருப்பார்.. அதையும் முடிந்தால்(அடுத்த இதே போன்ற பதிவில் இயன்றால்) விளக்குங்களேன்.. ப்ளீஸ்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்

Karthik said...

ரொம்ப நல்லா இருந்தது. :)

நர்சிம் said...

நன்றி மணிகண்டன்,அதே அன்புடன்.

நன்றி அறிவன்.

நன்றி நாய்குட்டி மனசு.

நன்றி கார்த்திகைபாண்டியன்..ஊருக்கு வரலை நண்பா.இந்த முறை வரும்போது சந்திப்பு நிச்சயம்.

நன்றி ஸ்ரீராம்.நோட் பண்ணியாச்சு.

நன்றி சாம்ராஜ்ப்ரியன்.நிச்சயமாக.

நன்றி ஆதி.

நன்றி கனகு

நன்றி நோ.

நன்றி ஸ்டார்ஜான்

நன்றி அக்பர்

நன்றி vanilaஜி.குகன்,பரதன் சந்திப்பு குறித்து நான் ஏற்கனவே எழுதிய பதிவும் இது போன்றே இருக்கும்.இது மீள் பதிவு அல்ல.

நன்றி சுசி.

நன்றி உயிரோடை

நன்றி அனுஜன்யா

நன்றி ஸ்ரீமதி

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

நன்றி கார்த்திக்.

நன்றி.

விக்னேஷ்வரி said...

தமிழாசிரியரின் பாடத்தை விட நல்ல விளக்கம்.

மங்களூர் சிவா said...

சூப்பர் நர்சிம், அருமையான விளக்கம்.

மணிகண்டன் said...

கலக்கல் நரசிம். நீங்க எழுதும் விதம் சூப்பர்.

புதுகைத் தென்றல் said...

இன்னுமோர் இரக்கப்பட வேண்டிய,மறக்கப்பட்ட கதாபாத்திரம் லெட்சுமணனின் மனைவி/

எனக்கும் இந்த எண்ணம் உண்டு. 14 வருடம் கணவனை விட்டு பிரியாத சீதையின் பதிபக்தியை விட தம்பியாக தன் கடமையைச் செய்யச் சென்ற கணவனை 14 வருடம் பிரிந்திருந்த ஊர்மிளையின் பதிபக்திதான் சிறந்தது.

Kirukkan said...

புராணம் புரியாதவர்களையும் புரியவைக்கும் பதிவு
பாராட்டுக்கள் கலிகால் கம்பரே!!!



(NOT having) (not using) (not being)

இல்லாமல் இல்லாமல் இல்லாமல்-இருந்தும்

இல்லாமல் இருப்பதே எளிமையாம்.

-
கிறுக்கன்

Kirukkan said...
This post has been removed by the author.