ஹுக்கும்...
இந்த வார்த்தை, சந்திப்பு என்றவுடன் நினைவுக்கு வருகிறது.மழை.மேகங்கள் அருகருகில் சென்றால் இந்த கற்பனை டயலாக்கும் தோன்றத்தான் செய்கிறது.
மேகம் 1 :“இந்த வாரமும் வச்சுருக்காய்ய்ங்களாமே”
மேகம் 2 :“விட மாட்டாய்ங்களா? ஒரு பிடி பிடிப்போம் இந்த தடவையும்”
இப்படித்தான் தோன்றுகிறது.
போலவே..சந்திப்பு நடக்கும் இடமும் கடல்,பாண்டிச்சேரி ஹவுஸ் என தண்ணீர் சார்ந்த இடமாகவே இருப்பதுவும் ஒரு காரணமோ?
அடாது மழை பெய்தாலும்..என்று எழுத முடியாது. மழை இல்லை என்றால் வந்துவிடுங்கள்.
பதிவர்கள் மட்டும்தான் வரவேண்டுமா என சிலர் தொடர்பு கொண்டு கேட்டார்கள். இல்லை. பதிவர்களை விட, வாசிப்பவர்கள்/வாசிக்க மட்டும் செய்பவர்களால் தான் மிகச் சிறந்த விமர்சனத்தை முன் வைக்க முடியும்.தவறாது பதிவுகளுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் வருக.
புதிய, பழைய என்றில்லாமல் பதிவர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் பதிவர்கள் நமக்குள் நாமே அமைத்து கொள்ளூம் சந்திப்புதான். அனைவரும் அமைப்பாளர்களே..
விருந்தினர் :பேராண்மை புகழ் திரு. சதீஷ்குமார் அவர்கள் தங்களுடய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இசைந்துள்ளார்.
சந்திப்பு நாள் : 14/11/09 சனிக்கிழமை மாலை 5.00 – 7.30
இடம் : Discovery Book Palace
No. 6. Mahaveer Complex
1st Floor, Munusamy salai,
West K.K. Nagar, Chennai-78
Ph; 65157525
Nearest Landmark : பாண்டிச்சேரி ஹவுஸ்
மேலும் விபரங்களுக்கு
பாலபாரதி: 9940203132
கேபிள் சங்கர் :9840332666
தண்டோரா :9340089989
நர்சிம் :9841888663
அகநாழிகை பொன்.வாசுதேவன்:9994541010
முரளிகண்ணன் :9444884964
***
Thursday, November 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
வந்திருறோம்.
Present Sir
//:“விட மாட்டாய்ங்களா? ஒரு பிடி பிடிப்போம் இந்த தடவையும்”//
அதனால்தான் "மழை மே கம்" என்று சொல்கிறார்களா ?
//கடல்,பாண்டிச்சேரி ஹவுஸ் என ***தண்ணீர்*** சார்ந்த இடமாகவே இருப்பதுவும்//
;-)
வர்ரேன்.
மனதோடு பேசுவதாய்
இதயத்துக்கு இதமாய்
நினைவுகளின் சங்கமமாய்
நிஜத்தோடு நெருக்கமாய்
பதிவர் சந்திப்பு நிகழ வாழ்த்துக்கள்.
அய்யோ தல , போன வாரம் அங்க இருந்தேன் ... சந்திப்புக்கு வரலாம்னு பார்த்தா மழை கொட்டித் தள்ளிரிச்சு..( வேற வழியில்லாம மழையோட மழையா நாலஞ்சு புத்தகம் மட்டும் வாங்கிட்டு வந்தேன் ;-( )
//விருந்தினர் :பேராண்மை புகழ் திரு. சதீஷ்குமார் அவர்கள் தங்களுடய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இசைந்துள்ளார். //
சமீபத்துல எனக்கு ரொம்ப பிடித்த ஒளிப்பதிவாளர் ... என்னோட வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள் !!
அவசியம் வருகிறேன்.. :)
mmmm
சந்திப்பு நடக்கும் இடமும் கடல்,பாண்டிச்சேரி ஹவுஸ் என தண்ணீர் சார்ந்த இடமாகவே
//
:))
வர்ணபகவானுக்கு வேண்டுதல் வச்சாச்சு...
சந்திப்பு நல்லபடியா நடக்கட்டும்....
பதிவர்கள்,அதைப் படிப்பவர்கள் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்...
இந்த முறை எந்தத் தடங்கலும் இல்லாமல் சந்திப்பு நடக்க வாழ்த்துக்கள்!
உங்க அட்டகாசமான அழைப்பு மேலே திருஷ்டியாகித்தான் மழை கொட்டிடுச்சு போலே போனவாரம்:))!
முன்னல்லாம், மழை வரக் கூடாதுன்னா அன்னிக்கு வானிலை மையத்துல இருந்து இன்னிக்கி மழை வரும் அறிவிப்பு விடச் செய்வாங்கள்லாம்...உடனே வர்ற மழையும் நின்னுருமாம்....
இப்ப மழை வேணும்னா, உடனே பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணச் சொல்றாங்களாம்.....எப்படியோ பதிவர்களின் சமுதாயப் பணி எந்தெந்த விதத்துலியோ நடக்குது....
வாழ்க அவர்கள் தொண்டு.....
நரேஷ்
www.nareshin.wordpress.com
//வாசிக்க மட்டும் செய்பவர்களால் தான் மிகச் சிறந்த விமர்சனத்தை முன் வைக்க முடியும்//
சரிதான்.
பதிவர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்.
வந்து விடுகிறேன்(மழை??)
வந்துடுவோம்.
பாண்டிச்சேரி,கடல் டைமிங் கலக்கல்.
அடுத்து ஏதாவது சஹாரான்னு ஆரம்பிக்கிற இடத்துல வைக்க வேண்டியதுதான்
/.( வேற வழியில்லாம மழையோட மழையா நாலஞ்சு புத்தகம் மட்டும் வாங்கிட்டு வந்தேன் ;-( )//
நீங்க தானா அது.. ? சொன்னாரு கடைக்காரர்..
My Hearty Wishes
visit my blog http://surakovai.blogspot.com
// பதிவர்களை விட, வாசிப்பவர்கள்/வாசிக்க மட்டும் செய்பவர்களால் தான் மிகச் சிறந்த விமர்சனத்தை முன் வைக்க முடியும்.தவறாது பதிவுகளுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் வருக. //
இதுவல்லவோ.. என்னைப் போன்றவர்களுக்கு உண்மையான அழைப்பிதழ். எப்படியாவது கலந்துக்கனும் என்பதற்காக.. என்னை பதிவு எழுத விடாம தடுத்து எனது நேரத்தை மிச்சப்படுத்திருக்கீங்க.
நன்றி.
:-)
பதிவர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்.
இந்த முறையாவாது மழையில்லாமல் நடக்க வாழ்த்துக்கள். (இந்தப்பதிவுக்கு கூட மைனஸ் ஓட்டு விழுந்துருக்கு)
வாழ்த்துக்கள்...
வந்திருறோம்.
//Cable Sankar said...
/.( வேற வழியில்லாம மழையோட மழையா நாலஞ்சு புத்தகம் மட்டும் வாங்கிட்டு வந்தேன் ;-( )//
நீங்க தானா அது.. ? சொன்னாரு கடைக்காரர்..//
நானே தாண்ணே , ;-) !!
அடுத்தமுறை எப்படியாவது சந்திப்போம்..
நிகழ்வு நல்லமுறையில் நடக்க வாழ்த்துக்கள் !
நன்று.
சிறப்பாக அமைய வாழ்த்துகின்றேன்.
Inimey ella santhippaukkum vasagar varalama?
நர்சிம்,
அழைப்பிற்கு நன்றி..
வந்திருவோம்....
அன்புடன்,
மறத்தமிழன்.
Post a Comment