பதிவர் சந்திப்பு..நன்றாகவே நடந்தது.

ஆம். ஒருவழியாக பதிவர் சந்திப்பு நடந்தது... நன்றாகவே.

பதிவர்கள் யுவகிருஷ்ணா, அதிஷா, முரளிகண்ணன், ஜெட்லி, மோகன், மருத்துவர் புருனோ, அதியமான், கணேஷ், மக்கள் சட்டம் சுந்தர்ராஜன், காவேரி கணேஷ், நரன், மஞ்சள் டீ சர்ட்(ஜெட்லீயின் சகா, பெயர் ப்ளீஸ்) ஆதி, நர்சிம்,கனகு,அப்துல்லா,மிக முக்கியமாக வாசகர் மோகன், (பதிவுகளை படிப்பவர் மட்டுமே என்று பின்னால் அமர்ந்தவரை முரளிகண்ணன் வலுக்கட்டாயமாக நடுவில் அமர வைத்து மரியாதை செய்தார்.)
மற்றும் லேகா.

முடியும் தருவாயில் கேபிள் சங்கரும் வந்து கலந்து கொண்டது மகிழ்ச்சி.

புகைப்படங்களைப் பார்க்க ஆதியின் இந்தப் பதிவு

விருந்தினர்கள் : அனுஜன்யா, வா.மணிகண்டன்.

இந்தப் பதிவைப் பார்த்து, இது குசும்பனின் பதிவோ என்று நினைக்க வேண்டாம். ஆம். கிட்டத்தட்ட அந்த ரேஞ்சில் தான் எல்லோருமே பேசினோம். என் நினைவுகளில் இருந்து எழுதி இருக்கிறேன். பேசிய கருத்துகளை சொல்ல முற்பட்டிருக்கிறேன்.

(வா.மணிகண்டன், சிவராமன் போன்றவர்களிடம் பேசியபிறகு ‘நினைவுகளில் இருந்து என்ற வார்த்தைக்குப் பிறகு, ’நீட்சியாக சில எண்ண உணர்வுகளின் ஆழ் மன ஆளுமை’ போன்ற வார்த்தைகள் என்னையும் அறியாமல் வருகின்றன..என்றாலும் பொதுமக்கள் நலன் கருதி தவிர்க்கிறேன்@**@)

வா. மணிகண்டன். மிகவும் கவனத்திற்குரிய கவிஞர். இனி பேசியதில் இருந்து...

சிவராமன்(பைத்தியக்காரன்) : “கவிதை குறித்த, இலக்கியம் குறித்த உங்கள் பார்வையைச் சொல்லுங்கள் “

வா.மணிகண்டன் : இலக்கியம் என்பதை எப்படிச் சொல்வது? மனதின் மேல் அடுக்குகளை மட்டுமே சொல்வது ஒரு வகை. இதற்கு உதாரணமாக தபு சங்கரின் வரிகளைச் சொல்லலாம். அதையும் தாண்டிய ஒன்றைப் பதிவது இலக்கியமாகப் படுகிறது.

நர்சிம் : அப்போ தபு சங்கரின் கவிதைகள் இலக்கியம் இல்லையா?

வா. மணிகண்டன்: அப்படி அல்ல, என்னளவில் ஒன்றைப் பற்றிய தீவிர தேடல் அல்லது பயணம் இலக்கியமாகப் படுகிறது.

சிவராமன் : புரியவில்லை, கல் பயணப்படாது. அது இலக்கியம் இல்லையா.

வா.மணி : ஸ்துதி பற்றி பேசுகிறீர்கள். கல் என்பது ஸ்துதி. ஒரு தேடல் நோக்கி, நாம் செல்வதில் இலக்கியம் அடங்கி இருக்கிறது...

சிவராமன்: நாம் ஏன் தேடிப் போகவேண்டும்?

நரன் & வா.மணிகண்டன் : நீங்கள் எல்லாவற்றையும் ஒரு தத்துவத்திற்குள் அடக்கப் பார்கிறீர்கள். அது சாத்தியமில்லை.

ஜ்யோவ் சுந்தர் இடைமறித்து : “விட்டா ஏன் சாப்பிடணும் நாமன்னு கேட்பீங்களே?”


நரன் : இலக்கியம் என்பதும் கவிதை என்பதும் உணர்வு சார்ந்தது. உங்கள் அளவில் ஒரு சினிமாப் பாடல் கவிதை போன்று இருந்தால் அது கவிதை, ஆனால் அது கவிதை என்று பிறரையும் சொல்ல வைப்பது திணிப்பு, அது தவறு.

வா.மணி : ‘நடிகர் விவேக் மடக்கி மடக்கி எழுதினா கவிதை’ என்ற வார்த்தையை பிரபலபடுத்தி விட்டார். மிகத் தவறு.. மடக்குவதில் நிறைய அர்த்தங்கள் உள்ளன.

நர்சிம் : ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?

வா.மணி : மலர்கள் விழுந்த
சாலை

என்பதற்கும்,

மலர்கள்
விழுந்த சாலை

என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

(புரிந்தது போலவே தலை ஆட்டினேன், விரிவாக பின்னூட்டத்தில் விளக்குபவர்கள் வாழ்க)

சிவராமன் : எது கட்டுரை எது கவிதை ?

வா.மணி & நரன் : அவரவரின் வாசிப்பு அனுபவத்தைப் பொறுத்தது அது. கவிதை போலத் தோன்றினால் அது கவிதைதான்.

நர்சிம் : அப்போ லேபிள் தேவையில்லையா?

மோகன்குமார் : (வா.மணிகண்டனிடம்) பாஸ், கவிதைன்னாலே ஏன் புரியாத மாதிரியே எழுதுறீங்க? அப்படி ஏதாவது ரூல் இருக்கா?

அனுஜன்யா, இந்தக் கேள்வியைக் கேட்டதும் கோபமாக ஏதோ சொல்ல முற்பட்டு கேள்வி கேட்டவரை எட்டிப் பார்த்தார். மோகன்குமார் XXL சைஸ் டி சர்ட் என்பதால் முறைப்போடு நிறுத்துக் கொண்டார்.இவர் முறைத்தது அந்தப் பக்கம் தெரியாது என்பது தனி.

வா.மணிகண்டன் : அப்படி இல்லை, புரிதல் என்பது, எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை, ஆனால், நிச்சயமாய் தினத்தந்தி,மலர் போன்ற இதழ்களின் கவிதைகளோடு கவிதைகளை ஒப்பிடுவதில் ஆரம்பிக்கிறது புரிதலின் பிரச்சனை

ஜ்யோவ் : வாசிப்பு பயிற்சி மட்டுமே இதற்கு வழி. தொடர் பயிற்சியின் மூலம் புரிய துவங்கி விடும். மையம் என்று சொல்வதற்கும் மய்யம் என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. போலவே, தந்தை, அப்பா.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சிவராமன் : சுரா.வின் மிகப் பெரிய வாசகராக உங்களைப் பார்கிறேன். உங்களின் பல எழுத்துக்களில் உங்களையும் அறியாமலோ அறிந்தோ சுரா ஒரு ‘ஹாய்’ சொல்லி விட்டுப் போவதைப் பார்த்திருக்கிறேன்.

வா. மணி : “ஆம், அவரின் எழுத்துகளை ஆழ்ந்து படித்ததாலும் வந்ததாக இருக்கலாம்’

சிவராமன் : “சுராவின் படைப்புகளை எப்படி கையாள்கிறீர்கள் அல்லது உங்கள் பார்வையில்..”

வா.மணி : என்னை அவரின் எழுத்துச் சூழலில் பொருத்திப் பார்த்துகொள்கிறேன். உதாரணமாக, நாய்கள் குலைப்பதைப் பற்றி அவர் எழுதிய வரிகளில், நான் ஒரு ஆஸ்பெட்டாஸ் சீட்டின் கீழ் குண்டு பல்பு சகிதம் இரவில் இருப்பது போல பொருத்திப் பார்த்துக் கொள்வேன். சூழலுக்குள் புகுந்துவிடலாம்.

ஜ்யோவ் : ஆனால் நாய்கள் குலைப்பது குறித்தான அந்த வரிகளுக்குப் பின்னால் உள்ள அரசியல் பற்றி தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ..

வா.மணி : இல்லை. ஆரம்ப காலத்தில் அந்த அரசியல் தெரியாது. போகப் போகத்தான் புரிந்தது. என்றாலும் அரசியல் ஏதும் தெரியாமல் அந்தச் சூழலுக்குள் புகுந்து படித்ததே நல்ல அனுபவம்.

சிவராமன் : அருமை. உங்களைப் பொருத்திப் பார்த்தது மிகப் பிடித்திருந்தது. கவிதை குறித்து பேசும் பொழுது, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டதாகவே எனக்குப் படுகிறது. உதாரணமாக நகுலன் கவிதைகளைப் பற்றி ஜ்யோவ் சொல்லும் பொழுது ஒவ்வொரு முறையும் வெவ்வேறான பாவனைகளில் ஒரே கவிதை மாறுவதை கவனித்திருக்கிறேன்.

வா.மணி : ஆம்.

நர்சிம் : படிமம் என்பதற்கும் வார்த்தை என்பதற்கும் உள்ள வேறுபாடு ?

சிவராமன் & மணிகண்டன் : படிமம் என்பது காட்சிகளைக் கொண்ட வரி.

நரன் : பதிவுலகம் பற்றி என் பார்வையில் சில வார்த்தைகள். இங்கே டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் நிறைய வருகின்றன. அது பதிவின் நோக்கத்தை பாதிக்கிறது அல்லது விவாதங்கள் நடப்பதாகவே தெரியவில்லை.

நர்சிம் : அப்படிச் சொல்லிவிட முடியாது ..என்றாலும்

நரன் : சதவீத அடிப்படையில் பார்த்தால் நான் சொல்வது தான் பெரும்பான்மை.

ஜ்யோவ் : ஆம். உண்மைதான். மீ த 27 என்றெல்லாம் வருவது சற்று வருத்தம்தான்.

யுவகிருஷ்ணா : ஆரம்பக் காலக் கட்டத்தில் விவாதங்கள் பெருமளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இப்பொழுதுதான் பின்னூட்டங்களில் விவாதங்கள் நடப்பதில்லை.

கவிதை குறிதான விவாதங்கள் நடைபெறும் பொழுதெல்லாம் ஏதேதோ சொல்ல நினைத்து, உதடுகள் குவித்து, பின் தன் கையை தாடையில் குத்திக் கொண்டே ‘பொழச்சுப் போங்கடா’ என்று விட்டுவிட்டார் கவிஞர் அனுஜன்யா.

‘நீங்கள் எழுதும் பற்றியும் பற்றாமலும் மிக நன்றாக இருக்கிறது’ என முரளிக்கண்ணன் சொன்னது வேறு அனுஜன்யாவுக்கு வருத்தம்.

“நல்லா இருக்குன்னு தானேண்ணா சொல்றாரு”

“அடப் போடா.. மாங்கு மாங்குன்னு கவிதை எழுதறேன்.. பற்றியுமாம் பற்றியும்..பத்தி எரியுது..”

“யே..எந்திருச்சுப் போங்கப்பா” என்று காந்தி தடியை ஆட்டுவது போல ஒரு எண்ணம் வந்ததால் டீ கடைக்குப் புறப்பட்டோம்.

வழக்கமாக நாங்கள் போகும் டீக்கடைப் பையன் எங்களைப் பார்த்ததும் சிரித்தான். எவ்வளவு அர்த்தம் வைத்துச் சிரித்துத் தொலைத்தானோ?!.

58 comments:

எறும்பு November 23, 2009 10:48 AM  

என்னடா ரெண்டு பதிவர் சந்திப்ப மிஸ் பண்ணிட்டமே இதுக்காவது வரலாம்னு நினைச்சேன்... நல்லவேளை... நீட்சியாக சில எண்ண உணர்வுகளின் ஆழ் மன ஆளுமையில் இருந்து சொல்றேன்... நான் தப்பிச்சுட்டேன்
;))))

யுவகிருஷ்ணா November 23, 2009 10:55 AM  

அய்யா மறைவாக ரெக்கார்டர் ஏதாவது வைத்திருந்தீர்களா? :-)

அன்புடன்-மணிகண்டன் November 23, 2009 10:55 AM  

வடை போச்சே...!!

குசும்பன் November 23, 2009 11:04 AM  

//நர்சிம் : அப்போ தபு சங்கரின் கவிதைகள் இலக்கியம் இல்லையா?

நர்சிம் : ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?

நர்சிம் : அப்போ லேபிள் தேவையில்லையா?

நர்சிம் : படிமம் என்பதற்கும் வார்த்தை என்பதற்கும் உள்ள வேறுபாடு ?//

ரொம்ப மெனக்கெட்டு இருக்கீங்க போல! அவரு சிக்காம எஸ்கேப் ஆயிட்டாரே தல:(

குசும்பன் November 23, 2009 11:05 AM  

//குசும்பனின் பதிவோ என்று நினைக்க வேண்டாம். ஆம். கிட்டத்தட்ட அந்த ரேஞ்சில் தான் எல்லோருமே பேசினோம்.//

வஞ்ச புகழ்ச்சி அணியா தல?

குசும்பன் November 23, 2009 11:06 AM  

//கவிதை குறிதான விவாதங்கள் நடைபெறும் பொழுதெல்லாம் ஏதேதோ சொல்ல நினைத்து, உதடுகள் குவித்து, பின் தன் கையை தாடையில் குத்திக் கொண்டே //

அங்கிள் அனுஜன்யா ஓவர் பில்டப் உடம்புக்கு ஆவாது! சொல்லிப்புட்டேன்! நீங்க எங்க குத்திக்கிட்டாலும் நாங்க கவிஞரா அக்ஸப்ட் செய்யமாட்டோம்!

பைத்தியக்காரன் November 23, 2009 11:18 AM  

நினைவுகளில் இருந்ததை நினைவுப்படுத்தி இருக்கிறீர்கள். அதனாலேயே வாசித்ததும் நினைவில் தங்குகிறது.

பொதுவாகவே அனைத்து வித எழுத்துக்களையும் மொழிக் கூட்டமாக, கம்யூனிகேஷனுக்கான வடிகாலாக பார்ப்பதால், அது தொடர்பான வினாக்கள் வந்து விழுந்தன.

பதிவுகளை விட, உரையாடியதை விட, சுந்தர ராமசாமியின் 'நாய்கள்' குறித்து வா.மணிகண்டன் விவரித்திருந்தது ரொம்பவே பிடித்திருந்தது. ஏனெனில் அதில், சுரா கரைந்துவிட்டார். அந்த வார்த்தைகளை, மொழியை தனது மொழியாக்கி வா.மணிகண்டன் கம்யூனிகேட் செய்தது கிரேட்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஆதிமூலகிருஷ்ணன் November 23, 2009 11:27 AM  

அப்ப நா இல்லாதப்பவும் அவுங்க மூணு பேரு மட்டும்தான் பேசிக்கினுருந்தாங்களா? சர்தான்.!

ஜ்யோவ்ராம் சுந்தர் November 23, 2009 11:30 AM  

இந்தப் பதிவர் சந்திப்பு ரொம்ப உபயோகமாக இருந்தது.

ஸ்ரீமதி November 23, 2009 11:36 AM  

//ஆதிமூலகிருஷ்ணன் said...
அப்ப நா இல்லாதப்பவும் அவுங்க மூணு பேரு மட்டும்தான் பேசிக்கினுருந்தாங்களா? சர்தான்.!//

ஹா ஹா ஹா :)))

@ நர்சிம்

நல்ல ஞாபக சக்தி அண்ணா உங்களுக்கு :))

Mohan Kumar November 23, 2009 12:31 PM  

என்னை XXL- ன்னு சொல்லி இமேஜை உடைச்சுட்டீங்க. இருங்க. ஆட்டோ அனுபுறேன்:)

பதிவர் சந்திப்பு பற்றி நானும் ஒரு சின்ன பதிவு போடறேன்... இன்றைக்குள்..

கார்க்கி November 23, 2009 12:31 PM  

ஒரு முக்கிய வேலையாகவும், திருமண நிகழ்வுக்காகவும் சென்றுவிட்டேன். அழைத்து சொல்லியிருக்கலாம் தான் :(((

மீ த 27 வருவது நல்லதல்ல. ஆனால் எந்தப் பதிவுக்கு என்றும் பார்க்க வேண்டுமல்லவா? நல்ல பதிவுகள் மட்டுமே எழுத வேண்டுமென்றால் 95% வலைப்பூக்கள் காணாமல் போய்விடும். எழுதும் ஆர்வத்தையும், வாசிக்கம் ஆர்வத்தையும் அறவே இல்லாதவர்களிடம் ஏற்படுத்த நான் எழுதும் மொக்கை போன்றவை பயன்படும். அதில் மீ த 27 தவறா?

சுந்தர்ஜி, எனக்கு நீங்கள் சொல்வது புரிகிறது. இருந்தாலும் வலையை வெளிநாட்டில் தனியாக வாழும் பலர் ஒரு நல்ல பொழுதுபோக்காக பார்க்கிறார்கள்.அவர்களை நாம் அனுஜன்யா, பைத்தியக்காரன் என்று படிக்க சொல்ல முடியாது. மொழி, இலக்கியம் என்பதை தாண்டி வலை பலவிதங்களில் பயன்படுகிறது. தமிழில்தான் இலக்கிய புத்தகங்களும் வருகிறது. தினத்தந்தியும் வருகிறது. சரோஜாதேவியும் வருகிறது/ இதற்கெல்லாமா தமிழை பயன்படுத்துவது என்று சொல்கிறோமா? அது போலத்தான் வலையும் அவரவர்க்கு வேண்டியதௌ படித்து சென்றுவிடுவார்கள். அனுஜன்யா கவிதையில் மித 27 போடுவது தவறு என்று நீங்கள் சொன்னதாக எடுத்துக் கொண்டு ஒரு சோடா குடித்து முடிக்கிறேன்

கார்க்கி November 23, 2009 12:31 PM  

// Mohan Kumar said...
என்னை XXL- ன்னு சொல்லி இமேஜை உடைச்சுட்டீங்க. இருங்க. ஆட்டோ அனுபுறேன்:)
/

என்ன பாஸ்? நீங்களேஎ XXLன்னா எதுக்கு ஆட்டோ?

கார்க்கி November 23, 2009 12:32 PM  

//யுவகிருஷ்ணா said...
அய்யா மறைவாக ரெக்கார்டர் ஏதாவது வைத்திருந்தீர்களா?
//

நர்சிம்மை ராமதாசோடு ஒப்பிடும் இந்த பின்னூட்ட அரசியலை நான் கண்டிக்கிறேன்.

மண்குதிரை November 23, 2009 12:57 PM  

பகிர்வுக்கு நன்றி.

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

மிக்க நன்றி.

ஈரோடு கதிர் November 23, 2009 1:03 PM  

நல்ல பகிர்வுக்கு நன்றி நர்சிம்

பா.ராஜாராம் November 23, 2009 1:09 PM  

உண்மையில் உங்கள் ஞாபக திறனுக்கு ஒரு ஜே நர்சிம்!

அப்புறம் எப்பவும் தரும் குசும்புக்கும்!

//“யே..எந்திருச்சுப் போங்கப்பா” என்று காந்தி தடியை ஆட்டுவது போல ஒரு எண்ணம் வந்ததால் டீ கடைக்குப் புறப்பட்டோம்.

வழக்கமாக நாங்கள் போகும் டீக்கடைப் பையன் எங்களைப் பார்த்ததும் சிரித்தான். எவ்வளவு அர்த்தம் வைத்துச் சிரித்துத் தொலைத்தானோ?!.//

இங்க வரையில்...

:-)))

வானம்பாடிகள் November 23, 2009 1:10 PM  

வியாசர்பாடி வெள்ளத்தில நீந்த முடியல பாஸ். உங்க இடுகை நேர்ல பார்த்த உணர்வைத் தருது. நன்றி.

D.R.Ashok November 23, 2009 1:32 PM  

நேராக டீக்கடை ச்ந்திப்புக்கு வந்துவிட்டதனால் அதற்கு முன் நடந்த ‘உறையாடலை’ கொடுத்தர்க்கு :)

KVR November 23, 2009 1:33 PM  

இப்படி ரெண்டு ட்ரான்ஸ்க்ரிப்ஷன் போட்டாலே போதும், வர நினைக்கிற பதிவர் கூட்டமும் எஸ்கேப் ஆகிடும் ;-)

Mahesh November 23, 2009 1:46 PM  

அட்டகாசம்....

//கவிதை குறிதான விவாதங்கள் நடைபெறும் பொழுதெல்லாம் ஏதேதோ சொல்ல நினைத்து, உதடுகள் குவித்து, பின் தன் கையை தாடையில் குத்திக் கொண்டே ‘பொழச்சுப் போங்கடா’ என்று விட்டுவிட்டார் கவிஞர் அனுஜன்யா.
//

அனுஜன்யா நல்லா மாட்டிக்கிட்டாருய்யா... பதிவுக்கு பதிவு, இடுகைக்கு இடுகை அவர் இல்லாம இல்லை... நல்ல விசிபிலிட்டி... :)))))))))

செல்வேந்திரன் November 23, 2009 1:51 PM  

Pleasure reading :):)

அமிர்தவர்ஷினி அம்மா November 23, 2009 1:59 PM  

அனுஜன்யா, இந்தக் கேள்வியைக் கேட்டதும் கோபமாக ஏதோ சொல்ல முற்பட்டு கேள்வி கேட்டவரை எட்டிப் பார்த்தார். மோகன்குமார் XXL சைஸ் டி சர்ட் என்பதால் முறைப்போடு நிறுத்துக் கொண்டார்.இவர் முறைத்தது அந்தப் பக்கம் தெரியாது என்பது தனி.

;)))))))

இதுக்கா ஜெனிவால இருந்து ரிட்டர்ன் ஆனாரு :)

ஜெட்லி November 23, 2009 2:18 PM  

//அய்யா மறைவாக ரெக்கார்டர் ஏதாவது வைத்திருந்தீர்களா?
//

ரீப்பீட்டே....

அப்படியே புட்டு புட்டு வைக்கிறிங்க....

Rishi November 23, 2009 2:26 PM  

i missed this. thanks for sharing Jee

shortfilmindia.com November 23, 2009 2:29 PM  

அன்னைக்கு நான் உங்க கிட்ட கேட்ட கேள்விய.. இன்னைக்கு என் பதிவுல கேட்ட்ருக்கேன்..பார்த்தீங்களா..?

மணிகண்டன் November 23, 2009 2:34 PM  

me the 27th

டம்பி மேவீ November 23, 2009 2:52 PM  
This comment has been removed by the author.
பைத்தியக்காரன் November 23, 2009 2:53 PM  

400க்கு வாழ்த்துகள்னு பின்னூட்டம் போடணும்னு காத்துகிட்டே இருக்கேன்... அது 399லயே நிக்குதே ஏன்?

சரி அட்வான்ஸ் வாழ்த்துகள் நர்சிம் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சங்கர் November 23, 2009 2:54 PM  

//மஞ்சள் டீ சர்ட்(ஜெட்லீயின் சகா, பெயர் ப்ளீஸ்) //

எல்லாத்தையும் ஞாபகம் வச்சிக்கிட்டு என் பெயரை மட்டும் மறந்துட்டீங்களே, ஞாயமா?

டம்பி மேவீ November 23, 2009 2:58 PM  

அனுஜன்யா கவிதைகள் எனக்கு நன்றாக புரியும் ..... ஒவ்வொரு தடவை வசிக்கும் பொழுதிலும் பல்வேறு விளக்கங்கள் அது எனக்கு தரும்....

(இந்த மாதிரியான சீரியஸ் பதிவுக்கு எல்லாம் பின்னோட்டம் போட்டு எனக்கு பழக்கம் இல்லை..... அதனால் தான் என்ன சொல்வது என்று தெரியாமல் ஏதோ மனசுக்கு தோன்றியதை சொன்னேன்.)

முரளிகண்ணன் November 23, 2009 3:03 PM  

யுவகிருஷ்ணாவின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.


நல்ல மேட்ச் முழுசாகப் பார்த்திருந்தாலும் ராத்திரி திரும்ப ஹைலைட்ஸ் பார்க்கும் போது ஒரு சந்தோஷம் வருமே.

அதுமாதிரி சந்தோஷம் இந்தப் பதிவு

ஜெஸ்வந்தி November 23, 2009 3:05 PM  

விரிவான தகவலுக்கு நன்றி நரசிம். ஞாபக சக்தி அதிகம் என்று தெரிகிறது.

டம்பி மேவீ November 23, 2009 3:11 PM  

"பைத்தியக்காரன் said...

400க்கு வாழ்த்துகள்னு பின்னூட்டம் போடணும்னு காத்துகிட்டே இருக்கேன்... அது 399லயே நிக்குதே ஏன்?

சரி அட்வான்ஸ் வாழ்த்துகள் நர்சிம் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்"

கவலை வேண்டாம். நானும் நரசிம் வலையை பின் தொடர்கிறேன்...... 400 க்கு இப்பொழுது வந்து வாழ்த்துக்கள் சொல்லுங்க

அதே தோழமையுடன்

மேவி

KaveriGanesh November 23, 2009 3:11 PM  

புரிந்தது போலவே தலை ஆட்டினேன், விரிவாக பின்னூட்டத்தில் விளக்குபவர்கள் வாழ்க.

ரொம்ப‌ புரிஞ்ச‌ மாதிரி த‌லையாட்டிவிட்டு, கேள்விய‌ல்லாம் கேட்டு க‌ல‌க்கிவிட்டு , புரிய‌ல‌ சொல்றியே த‌ல‌.

KaveriGanesh November 23, 2009 3:13 PM  

உங்க‌ ஞபாக‌ ச‌க்திக்கு த‌லைவ‌ணங்குகிறேன், ந‌ண்பா.

பைத்தியக்காரன் November 23, 2009 3:16 PM  

//400 க்கு இப்பொழுது வந்து வாழ்த்துக்கள் சொல்லுங்க //

வாழ்த்துகள் டம்பீ மேவி :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Mohan Kumar November 23, 2009 3:35 PM  

கார்க்கி: எல்லா வேலையும் நம்மளே பண்ணிட்டா ஆட்டோ நண்பர்கள் பிழைப்பு எப்படி நடக்கும்? அதோட நரசிம்மே கொஞ்சம் நம்ம அளவுக்கு (XL) தான் இருக்கார். (என்ன கொஞ்சம் smart-ஆ இருக்கார்)

சந்திப்பு குறித்த என் பதிவு இங்கே: http://veeduthirumbal.blogspot.com/

புருனோ Bruno November 23, 2009 4:54 PM  

//அல்லது விவாதங்கள் நடப்பதாகவே தெரியவில்லை.//

அட !! நாங்களெல்லாம் இருக்கும் போதே இப்படி பெயரா :) :)

புருனோ Bruno November 23, 2009 4:57 PM  

//யுவகிருஷ்ணா : ஆரம்பக் காலக் கட்டத்தில் விவாதங்கள் பெருமளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இப்பொழுதுதான் பின்னூட்டங்களில் விவாதங்கள் நடப்பதில்லை.//

சமீபத்தில் நடந்த ஒரு விவாதம் !!! :) :) . புரிந்தவர்கள் புரிந்து கொள்ளட்டும் :) :) :

http://www.luckylookonline.com/2009/11/blog-post_21.html ல்

//.............//

சீச்சி... இந்த பழம் புளிக்கும்

இது எந்த வரிக்கான மறுமொழி என்று உங்களுக்கே தெரியும் :) :)

---

புளிச்சிப்போன பழத்தை யாரும் சீண்டுவதில்லை - இது எந்த பின்னூட்டத்துக்கான மறுமொழி என்று எல்லாருக்குமே தெரியும் :-)

---

//புளிச்சிப்போன பழத்தை யாரும் சீண்டுவதில்லை //

ஹாலிவுட் இயக்குனர்களின் கொள்கையை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் !! நன்றி :) :)

அதிஷா November 23, 2009 4:59 PM  

மீ த 40!

சுசி November 23, 2009 6:26 PM  

அப்டியே சந்திப்பில கலந்துக்கிட்டா மாதிரி ஒரு ஃபீலிங்...

அவ்ளோ ஞாபகமா, அருமையா எழுதி இருக்கீங்க.

நல்ல பகிர்வு....

சுசி November 23, 2009 6:30 PM  

//மலர்கள் விழுந்த
சாலை
என்பதற்கும்,
மலர்கள்
விழுந்த சாலை
என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
(புரிந்தது போலவே தலை ஆட்டினேன், விரிவாக பின்னூட்டத்தில் விளக்குபவர்கள் வாழ்க)//

யாருக்குமே வாழ ஆசை இல்லையா... :((

எனக்கும் புரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு.... :))

அ.மு.செய்யது November 23, 2009 6:32 PM  

சந்திப்பை வீடியோ ஆடியோ இல்லாம கண்முன் கொண்டு வந்ததற்கு நன்றி நர்சிம் !!!!

பயனுள்ள இடுகை.ஓரளவு புரிதலை தந்தது.

வா.மணிகண்டன் November 23, 2009 6:35 PM  

நன்றி நர்சிம்.விரிவாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் அவ்வப்பொழுது கலாய்த்ததை சொல்லவில்லையா? ;)

இலக்கியம் என்பதை எப்படிச் சொல்வது?

இந்த கேள்விக்கு என் மனதில் இருப்பதை எழுதிவிடுகிறேன்.

மனம் படுகைகளால் ஆகி இருக்கிறது. இந்தப் படுகைகளின் மேல் மட்டமாக நம் சாதாரண தனிமனித உணர்வுகள் இருக்கின்றன. கோபம், எதிர்பாலின அல்லது தன் பாலின ஈர்ப்பு, காதல் என்ற பெரும்பான்மையான உணர்வுகள் இங்கு இருப்பதாக உணர்கிறேன்.

தபூ சங்கரை நான் குறிப்பிடக் காரணம், அவரது கவிதைகளும் இன்ன பிற பலரது கவிதைகளும், இந்த மேல்மட்ட உணர்வுகளை சொற்களால் சீண்டிவிடுவதன் மூலமாக வாசகனின் உணர்வுகளுக்கு கவிதை நெருக்கமாகி விடுவதான பாவனையை உருவாக்கி விடுகிறார்கள்.

அவை உண்மைத் தன்மையற்றவை. உணர்ச்சிகளின் உண்மைத் தன்மையை புரிந்து கொள்ள மனதின் ஆழ்மனதை நோக்கிய பயணம் அவசியம். இந்த ஆழ்மனதை நோக்கிய பயணத்தில் புதிர் மிகுந்த பாதைகளில் சிறு வெளிச்சத்தை பாய்ச்சக் கூடிய சொற்களும் வரிகளும் என்னைப் பொறுத்த வரைக்கும் இலக்கியம்.

நன்றி.

யாத்ரா November 23, 2009 7:31 PM  

ரொம்ப நல்ல சந்திப்பு, ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க, என்னால் தான் வர இயலாமல் போயிற்று.

கும்க்கி November 23, 2009 7:43 PM  

நல்லது..

sriram November 23, 2009 8:09 PM  

நர்சிம்
மணிகண்டனிடமும், சாருவிடமும் கேட்டு சிறுகதை மற்றும் கவிதைக்கு ஒரு Definition போடுங்கள், அதற்குள் வந்தால் மட்டுமே சிறுகதை / கவிதை என்று ஏற்றுக்கொள்ளப்படும்னு சொல்லிவிடுங்கள்..
இந்த செந்தழல் ரவி / கேபிள் செய்யும் கூத்துக்கு அளவே இல்லாம போயிடுச்சு. சில வாக்கியங்கள எழுதிட்டு கதை / கவிதைன்னு தலைப்பு வெச்சிடறாங்க.. :):)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

நாய்க்குட்டி மனசு November 23, 2009 8:29 PM  

ஹலோ,
எல்லோரும் tape பண்ணி எழுதினதா கேட்கிறாங்க. எனக்கென்னவோ உங்களுக்கு mind ல short hand notes எடுக்கிற திறமை இருக்குன்னு தோணுது. நேர்ல பார்த்தமாதிரி உணர்வு வந்தது. ஒரு meeting எங்க ஊரில போடலாமே. jolly trip வந்த மாதிரி இருக்கும்.

Karthik Viswanathan November 23, 2009 9:04 PM  

//மலர்கள்
விழுந்த சாலை

என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

(புரிந்தது போலவே தலை ஆட்டினேன், விரிவாக பின்னூட்டத்தில் விளக்குபவர்கள் வாழ்க)//
நரசிம்... உங்களுக்கு தெரியாதா?
விளக்கினா... நாங்களும் கத்துப்போம்.
இல்லாட்டி...

'ஒரு டீ ஸ்டாலே
பணியாரம்
சாப்பிடுகிறதே!'

போன்ற எனது கவிதைகளை நீங்கள் படிக்க நேரிடும் எச்சரிக்கிறேன். :)

எம்.எம்.அப்துல்லா November 23, 2009 9:29 PM  

400 க்கு வாழ்த்துகள் :)

செந்தில் நாதன் November 24, 2009 7:08 AM  

400-க்கு வாழ்த்துக்கள்!! நல்ல பதிவு நரசிம்..

எனக்கு கவிதை இலக்கியம் எல்லாம் தெரியாது...

அதனால பின்னோட்டங்கள் பற்றி என்னோட கருத்து: கார்க்கி சொன்ன மாதிரி நாங்க நெறைய பேர் பதிவுலகம் மூலமா தான் தமிழகத்த பார்க்குறோம்!! இது தாங்க எங்க "டி கட பெஞ்சு". அதனால சில சமயம் அமாம் சாமி போடுறோம்...சில சமயம் வந்துடு போன்னேன்-னு சொல்றோம்..யாருக்கு புடிக்கலியோ, அடுத்த பின்னுட்டத்துல சொல்லி புட்டா அப்புறம் அவங்க வலைல பண்ண மாட்டோம் சாமி... புடிக்காதவங்க தெளிவா சொல்லிபுட்டா மத்தவங்க அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்குவாங்க-ல?

என்ன நா சொல்றது?

தியாவின் பேனா November 24, 2009 10:03 AM  

பகிர்வுக்கு நன்றி.

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

மிக்க நன்றி

" உழவன் " " Uzhavan " November 24, 2009 4:31 PM  

அழகான கலந்துரையாடல்.
சனிக்கிழமையும் நமக்கு ஆபீசு உண்டு. அதனால்தான் வரமுடியல. இனிமேல் கூடுமானவரைக்கும் சன்டேல வைக்க முயற்சி பண்ணுனா நல்லாருக்கும் :-)

D.R.Ashok November 24, 2009 10:09 PM  

எனது பெயரை குறிப்பிடாதது மிகுந்த வருத்தமே

AK November 24, 2009 10:10 PM  

me the 400

ஊர்சுற்றி November 29, 2009 12:25 AM  

//எவ்வளவு அர்த்தம் வைத்துச் சிரித்துத் தொலைத்தானோ?!// :))))

பெயர் சொல்ல விருப்பமில்லை November 29, 2009 3:46 PM  

//(புரிந்தது போலவே தலை ஆட்டினேன், விரிவாக பின்னூட்டத்தில் விளக்குபவர்கள் வாழ்க)//
இதில் புரிவதற்கு என்ன இருக்கிறது?
மலர்கள்
விழுந்த
சாலை
என்பதற்கும்
மலர்கள் விழுந்த சாலை
என்பதற்கும் என்ன வித்தியாசமோ, அதே வித்தியாசம் தான், இதற்கும்.