பதிவர் விதூஷ் இந்தப் பதிவின் மூலம் அழைத்திருந்தார்.
கொஞ்சம் நைஸாகப் பம்மி இருந்தேன்.மறந்திருப்பார் என்று நம்பியும் இருந்தேன்.பரிசல் தொடரைப் போட்டதும்..அப்ப நாங்க எல்லாம் என்ன இதுவா?என ஒரு டெரர்ர்ர் மெயில் அனுப்பி இருந்தார்.‘எழுதி வச்சு இருக்கேன்ங்க’என்ற பொய்யைச் சொல்லிவிட்டு அதை உண்மையாக்கினேன்.
‘பொய்யை உண்மையாக்குவது’ என்ற வாக்கியத்தில் இருக்கும் வியப்பை உணர்கிறீர்களா??(அதுவா வருது!)
தோழி/தங்கை ஸ்ரீமதியின் தொடர் பதிவு இன்னும் சிட்டையில் பாக்கி இருக்கிறது..அதுவும் இந்த வாரத்திற்குள் வரும்...
******
1. A – Available/Single? : Available..அங்க மட்டும்.(வீட்லயும் படிக்கிறாங்கப்பா..மொதக் கேள்வியே..ஹுக்கும்)
2. B – Best friend? : நிறைய்ய்ய்ய்ய.
3. C – Cake or Pie?: இரண்டும் இல்லை.மோர்.அது சியில் ஆரம்பிக்கவில்லை.இரண்டாவது கேள்வியின் பதிலில் இருப்பவர்கள் பக்கத்தில் இருந்தால் அதன் முதல் எழுத்தும், ர்’ம்.
4. D – Drink of choice? : 3ல சொல்லியாச்சு சொல்லியாச்சு.
5. E – Essential item you use every day? : இதயம்
6. F – Favorite color? : கருப்பு.(று?)
7. G – Gummy Bears Or Worms?: ?வாழ்க்கைதான்.
8. H – Hometown? -யாவரும் கேளிர்னா அப்போ யாதும் ஊரே..தானே!
9. I – Indulgence? - ஹிஹி
10. J – January or February? இரண்டாவது.23ம் தேதி அதுல ரொம்ப பிடிக்கும்.
11. K – Kids & their names? :ம்.
12. L – Life is incomplete without? - மரணம் தான் ..ஏன்?
13. M – Marriage date? கேட்டுத்தான் சொல்லணும்.
14. N – Number of siblings? என் இந்திய தேசமிது.யாவரும்.
15. O – Oranges or Apples? இரண்டும் அல்ல.O இந்த வடிவில் இருக்கும் நெல்லிக்காய்.கரகரன்னு பல்லுல வச்சு வட்டமா மாத்துறது ஒரு கலை.உப்போட..நாக்குல எச்சி ஊறி இருக்குமே.
16. P – Phobias/Fears? :தற்போதைக்கு பதிவோ ஃபோபியாதான்.பயமும் இங்கேதான்.
17. Q – Quote for today? : சிம்ப்பிளான வேலையை சிம்ப்பிளாகவே செய்யுங்கள்.
18. R – Reason to smile? :காரணம் இல்லாம சிரிச்சதுக்கு மறுபடியும் சிரிப்பது.
19. S – Season? எல்லா நாட்களிலும் அந்தி நேரங்கள்.
20. T – Tag 4 People? ம்ஹூம்.
21. U – Unknown fact about me? அதான் unknown ஆச்சே.
22. V – Vegetable you don't like? இந்தியச் சுதந்திரம் பறிபோய்விடுமா இதை சொல்லவில்லை என்றால்?
23. W – Worst habit? எந்த ஹேபிட்டுமே ஹேபிட் என்ற அளவிற்கு தொடர்வதே ஒர்ஸ்ட் தானோ?.
24. X – X-rays you've had? : ஏன்..ஏன்..ஏன்ய்ய்யா இப்பூடி
25. Y – Your favorite food? :) பசி நேரத்தில் கிடைக்கும் உணவு.
26. Z – Zodiac sign? சிங்கம் தான்.
ஆசைக்குரியவர்: அப்பா.என்னை அப்படி அழைப்பவரும்,அதற்கு உதவியவரும்.
இலவசமாய் கிடைப்பது: இலவசம் தான்.
ஈதலில் சிறந்தது: ஈதலே மிகச் சிறந்தது தான்.
உலகத்தில் பயப்படுவது: நாமார்க்கும் குடியல்லோம்.
ஊமை கண்ட கனவு: ராஜபக்ஷே
எப்போதும் உடனிருப்பது: உயிர்
ஏன் இந்த பதிவு: வேற வழி???விதூஷின் மிரட்டல்.
ஐஸ்வர்யத்தில் சிறந்தது: அபிசேக்கிடம்தான் கேட்கவேண்டும்!
ஒரு ரகசியம்: இந்த டிசம்பரில்..சரி வேண்டாம்..ரகசியமாக இருக்கட்டும்.
ஓசையில் பிடித்தது: குழந்தை தூங்கும் பொழுது அதனிலிருந்து வரும் மென்..மிகமென் சத்தம்.
ஔவை மொழி ஒன்று: தமிழ் மொழி தானே அவங்களும்.
(அ)ஃறிணையில் பிடித்தது:அனைத்துமே. மனிதர்கள்.மனிதமற்ற,நேர்மையற்ற மனிதர்களுக்கு முன்னர்.
..
(இதை அழைத்த பதிவர் விதூஷ், ‘நர்சிம்மை ஏன் தொடர யாருமே அழைப்பதில்லை’ என்று கேட்டிருந்தார்...இப்போது தெரிந்திருக்கும் பதில் ’ஹுக்கும் அழைச்சிட்டாலும்’ என்று)
Tuesday, November 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
haiiii
adichathu paru lucky price
I first!!!
antha sl no 15 sappittitu jillinu thanniyai madak madaka kudicha oru thithippu irukke !!! ada ada ada athai vittuteengale boss
//ஹுக்கும் அழைச்சிட்டாலும்// ஆறு மாசம் கழிச்சும், இப்பூடி ஒரு மொக்கையை எழுதி, C (See!), புடிச்ச drinks-ஸ வேற பேசுற பெருமைய என்னான்னு சொல்ல!!!
நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
:))
//siblings - என் இந்திய தேசமிது.யாவரும்.// அப்ப என் பெண்ணுக்கு மாமன் சீரு உங்க வீட்லேந்துதான்...
-வித்யா
இந்த மொக்கைகளை எழுதற கையோட அந்த மாறவர்மனையும் கொஞ்சம் கனலே காட்டலாமே?
ரசனையான பதில்கள்.
அதென்ன கேள்விகளை பிரிப்பேர் செய்தது யாராவது பீட்டரா? பூரா அவுங்க சமாச்சாரமா இருக்குது..
நரசிம், உங்களை ஒரு தொடர் பதிவுக்கு ஒருவருடம் முன்னாடி நான் கூப்பிட்டேனே ?
//ஐஸ்வர்யத்தில் சிறந்தது: அபிசேக்கிடம்தான் கேட்கவேண்டும்!///
;;)))
ஐஸ்வர்யத்தில் சிறந்தது: அபிசேக்கிடம்தான் கேட்கவேண்டும்
:)))))))
லேபில் அதி பயங்கரம்.
H – Hometown? -யாவரும் கேளிர்னா அப்போ யாதும் ஊரே..தானே!
சர் தான்பா, ஊருக்கு வருவல்ல, அப்ப பாத்துகிறேன்.
K – Kids & their names?
ம்.
கேட்டா கரெக்டா பதில் சொல்லவேண்டியதுதானே, ரொம்வே யூத்துனு நினைப்பு.
–கரகரன்னு பல்லுல ச்சு வட்டமா மாத்துறது ஒரு கலை.உப்போட..நாக்குல எச்சி ஊறி இருக்குமே.
நர்சிம் டச்.
ஓசையில் பிடித்தது: குழந்தை தூங்கும் பொழுது அதனிலிருந்து வரும் மென்..மிகமென் சத்தம்.
வாவ்
//இலவசமாய் கிடைப்பது: இலவசம் தான்.
ஈதலில் சிறந்தது: ஈதலே மிகச் சிறந்தது தான்.//
எனக்கென்னமோ இனிமேல் யாரும் தொடர் பதிவுக்குக் கூப்பிட வேண்டாம் என்று சொல்லாமல் சொல்கிற பதில் போலத் தெரியுது நரசிம்
//ஓசையில் பிடித்தது: குழந்தை தூங்கும் பொழுது அதனிலிருந்து வரும் மென்..மிகமென் சத்தம்.//
FANTASTIC!.......
ரைட்டு
Double ரைட்டு
//ஜெஸ்வந்தி said...
//இலவசமாய் கிடைப்பது: இலவசம் தான்.
ஈதலில் சிறந்தது: ஈதலே மிகச் சிறந்தது தான்.//
எனக்கென்னமோ இனிமேல் யாரும் தொடர் பதிவுக்குக் கூப்பிட வேண்டாம் என்று சொல்லாமல் சொல்கிற பதில் போலத் தெரியுது நரசிம்
//
சர்வ நிச்சயமாய் இல்லை ஜெஸ்வந்தி.
இலவசம் மேட்டர விடுங்க..
ஈதல் என்பது மிக அற்புதமான ஒன்று.அதில் எது சிறந்தது என்று சீர்தூக்கிப் பார்ப்பது தவறு,என்னளவில்.
நானே ரசித்த பதில் இதயம்.ஆம் அதை தினமும் உபயோகிக்கிறேனா என்பது ஐயமே,ஏனெனில் இங்கு மூளை முன் நின்று விடுகிறது
******
எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு..ஏங்க இப்பிடி போட்டு விடுறீங்க?
******
\\ரசனையான பதில்கள்.
அதென்ன கேள்விகளை பிரிப்பேர் செய்தது யாராவது பீட்டரா? பூரா அவுங்க சமாச்சாரமா இருக்குது\\
ஆதிக்கு ஒரு பெரிய ரிப்பீட்டு
//கரகரன்னு பல்லுல வச்சு வட்டமா மாத்துறது ஒரு கலை.உப்போட..நாக்குல எச்சி ஊறி இருக்குமே.//
அட ஆமாங்க.
//ஈதலில் சிறந்தது: ஈதலே மிகச் சிறந்தது தான்.//
நச் வரிகள்.
//இதயம் //
Kidney-a vittutteenga..:p
//ஒரு ரகசியம்: இந்த டிசம்பரில்..சரி வேண்டாம்..ரகசியமாக இருக்கட்டும்.//
சொல்லவேயில்ல!?
நல்ல அதிவேகத் தொடர்பதிவு!!! ஹி!! ஹி!!
கலக்கல் பதில்கள்...
ரசனை...வேகம்...விவேகம்.
கொஞ்சம்தான் புரிந்தது.
// ஓசையில் பிடித்தது: குழந்தை தூங்கும் பொழுது அதனிலிருந்து வரும் மென்..மிகமென் சத்தம். //
:D அருமை. ரசனைகளின் உச்சம்.
// 14. N – Number of siblings? என் இந்திய தேசமிது.யாவரும். //
"//siblings - என் இந்திய தேசமிது.யாவரும்.// அப்ப என் பெண்ணுக்கு மாமன் சீரு உங்க வீட்லேந்துதான்..."
உங்க மகளுக்கும் அவர் சகோதரன் முறையே!! உங்க மகளின் மகன்/மகளுக்கும் சகோதரன் முறையிலியே இருப்பார். என்றும் 16 மார்கண்டேயன் போல் :-)
நல்லபதிவு
//
ஒரு ரகசியம்: இந்த டிசம்பரில்..சரி வேண்டாம்..ரகசியமாக இருக்கட்டும்.
//
என்னான்னு சொல்லுங்க நர்சிம்:)
கேள்விகளும் நல்லா இருக்கு, பதில்களும் நல்லா இருக்கு :)
:-)) சூப்பர் பதில்கள்
நன்றி நாய்குட்டி மனசு.ஆம்..தேவாம்ரதமாக இருக்கும்
நன்றி விதூஷ்
நன்றி இரவுப்பறவை..அப்ப அதுவும் மொக்கைன்னு சொல்றீங்களா பாஸ்..நீங்க ஒரு ஆள் தான் அதுக்கு மானசீக ரசிகர்னு நம்ம்பி இருந்தேனே தல.
அதே தான் ஆதி.
மணி..நன்றி..ஏன் ஏன்..நல்லாத்தான போய்ட்டு இருந்துச்சு?
நன்றி ஜீவன்
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா
வாங்க காவேரி கணேஷ்..நம்ம ஊரு தான் எல்லாருக்கும் தெரியுமே தல.அப்புறம் குழந்தை பேரு,சேட்டைகள் எல்லாம் பொதுவில் வைப்பதில்லை பாஸ்.
நல்லா இருங்க ஜெஸ்வந்தி..பதில் சொல்லிட்டேன்.
நன்றி நேசன்..ரசனைக்கு.
நன்றி சகா.
டபுள் நன்றி நேசமித்ரன்
நன்றி முரளி
நன்றி கல்யானி சுரேஷ்
நன்றி கலகலப்ரியா..கலக்கல்.
அண்ணாச்சி என்னாச்சி?
நன்றி டாக்டர் சார்.
நன்றி சுசி.
நன்றி கும்க்கி..ரசனை சரி..வேகமா? ரைட்டு.
நன்றி சாம்ராஜ்யப்ரியன்..கோவம்னா திட்டுங்க பாஸ்..ஏன் இப்பிடி?ஹிஹி
நன்றி தியாவின் பேனா
நன்றி ரம்யா..சும்மா ஒரு சுவாரஸ்யத்துக்குப் போட்டதுங்க.
நன்றி அமுதா.
:)))
(கமெண்ட் எதாவது போடலாம்ன்னு நினைச்சேன்.. பட் நீங்க எல்லாருக்கும் பதில் சொன்னப்பறம் வந்திருக்கேன். எனக்கு பதில் சொல்லிட்டாலும்.. ;))))
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீமதி
பரவால்லியே......!!!
//அதென்ன கேள்விகளை பிரிப்பேர் செய்தது யாராவது பீட்டரா? //
ரசித்.
நான் உங்களைக் கிண்டல் செய்யக் கேட்ட கேள்வி மிகவும் கலக்கி விட்டது என்று நம்புகிறேன். மன்னிக்க வேண்டும் நரசிம். I didn't mean it.
Post a Comment