Tuesday, December 15, 2009

புளிக்காரக்கா.

அது பேயாகத் தான் இருக்க வேண்டும்.

அந்த இடத்தைப் பற்றி தெரிந்திருந்தும் அங்கே தனியாகப் போனது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை உணர்ந்தான் கேசவன்.

சுற்றிலும் வயல். அறுவடை முடிந்து கால் இன்ச் அடிக்கதிர்கள் காலைக் குத்தும் வயல்வெளி. வரப்புகளுக்கு நடுவில் ஓடும் வாய்க்கால்த் தண்ணீர். களத்து மேடு. புளிய மரம். ஆள் அரவமே இல்லாத இடம். ஒரே ஒரு வயல் மட்டும் கதிர் அறுக்கப் படாமல் இருந்ததால், தனியாக,காற்றின் திசையில் கதிர்கள் மடிந்து எழுந்த பொழுது வந்த சத்தம் புளியமரக் கிளையிலும் தொட்டுச் சென்றது புளியைக் கரைத்தது கேசவனுக்கு. ஒரு நிமிடம் கண்ணை மூடி நினைத்துப் பார்த்தான்.

புளிய மரத்தின் கிளையில் இருந்து கேசவனின் உச்சியில் சொட்டு சொட்டாக இறங்கியது. தடவிப்பார்த்தால் பிசுபிசுப்பாக ரத்தம். பரபரவென்று ஏதோ உடல்முழுவதும் பரவுவது போல உணரும்பொழுதே சர்ர்ரென்று அந்தக் கிளை கீழ் நோக்கி வந்து சட்டென்று அவன் கழுத்தில் சுற்றி நெருக்கத் தொடங்கியது. நாக்கு வெளியேறத் துவங்கியதுமே கால்கள் தரையில் இல்லை என்பதை உணர்ந்தான். பக்க வாட்டில் இருந்து வந்த இன்னொரு கிளை இடுப்பில் இறங்கியது. கத்த முடியாமல் திணறிக் கொண்டு இருந்தான். கால்கள் காற்றில் மிதந்து கொண்டிருந்தன. சட்டென்று இரண்டு கிளைகளும் அவனை சுழற்றி எதிரில் இருந்த அரைப் பாலச் சுவற்றில் அடித்தது. பின் மண்டையில் இருந்து ரத்தம் பீறிட்டது.

நினைத்துப் பார்ப்பதை நிறுத்தி விட்டான் கேசவன். அனிச்சையாகத் தலையைத் தடவிப் பார்த்தான். நின்று கொண்டிருந்தான். பேயாகத் தான் இருக்கும். கொஞ்சமும் கற்பனை செய்ய முடியாத ஒரு உருவம். தோன்றி சட்டென்று மறைந்து போனது.

அனேகமாக அது ஊருக்குள் பலவருடங்களாகப் பேசப்படும் பிரபாப் பேயாகத் தான் இருக்கும் என்று நினைக்கும் பொழுதே அவனுக்குக் கைகால் எல்லாம் உதறத் துவங்கியது.

பிரபா.

எப்பொழுதும் சின்னப் பசங்களுடன் படம் பெயர் சொல்லியோ, சொக்கட்டான் புளியைச் செய்து கொண்டோ இருப்பாள். அவளோடு விளையாடும் பசங்களுக்கு பத்து வயது தான் இருக்கும். இவளுக்கு பத்தொன்பது இருவது இருக்கும். உடம்பு வயதைவிடக் குறைவாகத் தான் இருக்கும். ஆனால் பார்த்தால் பார்க்கலாம் போன்ற வாகு.

“புளி உருண்டை வாங்கி வந்திங்களாடா?”

“இந்தாக்கா”

என்று நீட்டிய முத்துவிடம் வாங்கிய புளி உருண்டையைப் பார்க்கும் பொழுதே எச்சில் சுரக்கத் தொடங்கிவிடும். புளியை நெல்லிக்காய் சைஸுக்கு, உப்பு கொஞ்சம் மிளகு என இன்னும் சில இத்தியாதிகளை போட்டு உருட்டி பள்ளிக் கூட வாசலில் அதை விற்கும் பாண்டியம்மாவை ‘புளிக்காரக்கா’ என்றுதான் அழைப்பார்கள் பொடிசுகள். அந்த புளிக்காரக்காவின் மகள் தான் பிரபா. வீட்டில் புளியுருண்டையைத் தொட விடமாட்டாள் பாண்டியம்மா. அதனாலயே பசங்களை விட்டு வாங்கிவரச் சொல்லுவாள் தினமும்.

புளியங் கொட்டைகளை ஒரு பக்கமாகத் தேய்த்து வெள்ளைப் பல்லாக செய்து விளையாடுவது என, புளியும் புளி சார்ந்த விளையாட்டுக்களுமே சிறுவயது முதல் பிரபாவிற்கு வாய்த்தது புளிக்காரக்காவினால்.

அதே புளிய ரூபத்தில் தான் பிரபாவிற்குப் பிரச்சனையும் வந்தது.

புளியம் பழத்தை சேகரிப்பது என்பது செடியில் இருந்து பூ பறிப்பது போல அத்தனை எளிதான வேலை அல்ல. கொஞ்சம் வாட்ட சாட்டமான ஆம்பிளையாக இருக்க வேண்டும். எந்தக் கிளையில் இருந்து தொடங்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். வலது காலை முட்டுக் கொடுத்து உடம்பின் பாரம் முழுதும் அதில் பொதித்து ஒரு உலுக்கு உலுக்க வேண்டும். பழங்கள் பொலபொலவென உதிரத் தொடங்கும். அடுத்தது மறு கிளை. இப்படி உலுக்குவதற்கு நேக்குகள் தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி உலுக்கித் தருவதில் கில்லாடி தான் பூவலிங்கம். புளிக்காரக்காவின் புளியமரம் அவன் உலுக்கலுக்குக் கட்டுப்படும். பிரபாவின் வயதையும் உலுக்கி விட்டான் ஒரு மதியப் பொழுதில்.

“என்ன பிரிபா, புளிக்காரக்கா இல்லியா?”

“பிரிபான்னு கூப்புடாத பூவு, பிரபாண்டு சொல்லு, அம்மா பள்ளியோடம் போயிருக்கு, வரும்”

“உலுக்கணும்டுச்சு, போயிருச்சா,? எப்ப வாரது நான் எப்ப போறது?”

“நாங்க இருந்தா உலுக்க மாட்டீகளோ மைனரு, உலுக்கப் போற, விழுகுறத பொறக்கிப் போடணும், நொட்டச் சொல்லு சொல்லாம ஏறு”

“ஏறவா?”

“ஏ, இந்த சாடப் பேச்செல்லாம் வேணாம், அம்புட்டுதான்,”

வாய் சொன்னாலும் அவனின் குறும்பை ரசித்தவாறே கூடைகளை அடுக்கி வைத்துத் தயாரானாள்.

“சென்மம் பூரா உலுக்கிட்டுத் தான கெடக்கேன். செத்த பொறுத்தா என்ன, கூடயத் தூக்குறவ.”

இப்படியான பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக அவளையும் அவனையும் நெருக்கியது. மனதால். பேசிக்கொண்டே இருந்தான். கேட்டுக் கொண்டே இருந்தாள். பொழுது போனது தெரியவில்லை. புளிக்காரக்கா வரும் நேரம் நெருங்கியதும் கிளம்பி விட்டான். மறுநாள் கிளம்பி வந்து விட்டான்.

கொஞ்சம் காதலையும் நிறைய காமத்தையும் கலந்து தான் பேசுவான் பூவலிங்கம். புளி உலுக்குபவனுக்கு பூ உலுக்கச் சொல்லியாத் தரவேண்டும்?. மெதுவாக உலுக்கினான். வேகமாக உதிர்ந்தாள்.

பசங்களோடு பேசுவது நின்று போனது. பம்புச் செட்டுக் குளியல், வீடு, அம்மா போனதும் பூவலிங்கத்தின் வரவிற்கு காத்திருப்பது என அன்றாடம் மாறிப் போனது. அவனுடன் கூடுவது கொஞ்சம் கொஞ்சமாக நிறைய ஆரம்பித்தது. ஒவ்வொரு முறை முடிந்ததும் அவன் விநோதமாய் குதித்துக் குதித்து நடந்து போவதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பாள்.

“பிரபா, நாளைக்கு விடியக் காலம் கொஞ்சம் வெள்ளன எந்திருச்சு வேலயப் பாத்து, பள்ளியோடத்துல போய் வித்துட்டு வாம்மா, பிள்ளைங்க முகம் வாடிப் போகும் புளியுருண்ட இல்லேன்னா, எனக்கு கொஞ்சம் வேல இருக்கு”

பாண்டியம்மா மாதத்தில் நான்கைந்து நாள் இப்படிச் சொல்லிவிட்டு பிரபாவை அனுப்புவது வழக்கம்.

“அக்கா ஏங்க்கா இப்பல்லாம் வெளயாட வரமாட்டேங்குற” முத்துக் கேட்டதும் சிரித்தாள்.

“அக்காவுக்கு வயசாகிடுச்சுடா முத்து. இந்த ரெண்டு புளியுருண்ட, சாப்புடு, மூக்கொழுகி எங்கடா?”

“அவனுக்கு மேலுக்குச் சொகமில்லக்கா இன்னிக்கு லீவு விட்டான்”

வயிறு சுர் சுர் என்று இழுத்து வலிப்பது போல் இருந்தது.அனிச்சையாக விரல் கொண்டு எண்ணினாள். இல்லையே என்று நினைத்துக் கொண்டவள் அதற்கு மேல் அமரமுடியாது என்று தீர்மானித்தவாறே முத்துவை அழைத்தாள்.

“டேலே முத்து, அக்கா வீடு வரைக்கும் போயிட்டு ஓடியாந்துர்றேன். செத்தவடம் பார்த்துக்கடா புளியுருண்டக் கூடய”

“எனக்கு நாலு உருண்ட தரணும்”

“செரிடா” என்றவள் கொஞ்சம் அசெளகர்யமாய் நடந்து வீட்டை அடைந்தவள் கண்களை அவளால் நம்பவே முடியவில்லை.

பின்பக்க வழியாக பூவலிங்கம் குதித்துக் குதித்து நடந்து போய்க் கொண்டிருந்தான். எதேச்சையாக வெளியே வந்த புளிக்காரக்கா இவளைப் பார்த்ததும் அதிர்ந்து தயங்கி சகஜமாகி ஏதேதோ பேசினாள். அன்று இரவு ஊருக்கு வெளியே இருந்த புளியமரத்தில் பிரபா தொங்கிவிட்டாள்.

டுங்கிய வாறே கொஞ்சம் வேகமாக நடக்கத் துவங்கி, பின்னால் ஏதோ வருவது போன்ற பிரமையால் முதுகைக் குறுக்கி இன்னமும் வேகமாக ஓடத்துவங்கினான் கேசவன். ஒரு அலுமினியத் தூக்குவாளி காற்றில் நகர்ந்து கல்லில் பட்ட சத்தம் அவன் ஓட்டத்தை அதிகப் படுத்தியது.

திரும்பிப் பார்க்காமல் ஓடியவன் பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்ச டீக்கடையை அடைந்ததும் கொஞ்சம் மூச்சை விட்டு, இழுத்து, மெதுவாக விட்டுக் கொண்டே சகஜமானான்.

“அது யார்ரா கேசவனா?”

கடைக்குள் குனிந்து பார்த்த கேசவன்

“ஆமாத்தா, என்ன வேணும்?”

“உங்க அப்பன் பூவலிங்கத்த வீட்டப் பக்கம் வரச் சொல்லுடா, நாளைக்கி”

“சரி புளிக்காரக் கெழவி”

..

62 comments:

ராஜகோபால் (எறும்பு) said...

நல்லாருக்கு. எதுக்கும் இன்னொரு தடவை படிச்சிட்டு வரேன்

நையாண்டி நைனா said...

ghost story took me in "Roller Coaster"

வித்யா said...

அருமையான ப்ளோ. முடிவும் நல்லாருக்கு.

செம்பட்டைக் கிழவியில் மாடு கட்டுவதைப் பற்றி. அய்யனார் கம்மாவில் லாடம் அடிப்பதை பற்றி. இதில் புளியம்பழம் உலுக்குவதைப் பற்றி. பக்கா வில்லேஜர்.

shortfilmindia.com said...

/புளி உலுக்குபவனுக்கு பூ உலுக்கச் சொல்லியாத் தரவேண்டும்?. மெதுவாக உலுக்கினான். வேகமாக உதிர்ந்தாள்.
//

எழுத்தாளர் ஆகிட்டீங்க.. :)

கேபிள் சங்கர்

நாடோடி இலக்கியன் said...

அருமையான நடை.

பாரதிராஜா இயக்கின பாலசந்தர் ஸ்கிரிப்ட் மாதிரி இருக்கு.


புளி உலுக்குவதை தத்ருபமாக சொல்லியிருக்கின்றீர்கள்.புளி உலுக்குதல் அறிந்தவன் என்பதால் ரொம்பவே ரசித்தேன்.

சின்ன அம்மிணி said...

நல்ல நடை. புளிக்காரக்கா, பூவலிங்கம்னு பேர் நல்லா தேர்ந்தெடுத்திருக்கீங்க

அனுஜன்யா said...

அ.க.வுக்கு முன். அ.க.வுக்குப் பின். என்று இரண்டு காலப் பிரிவுகள்.

நல்லா வந்திருக்கு நர்சிம். இதுக்கு மேல் எல்லாம் புகழ முடியாது. பின்னாடி, இதே கதையை விமர்சனம் பண்ணணும்ல :)

அனுஜன்யா

நாடோடி இலக்கியன் said...

//புளி உலுக்குபவனுக்கு பூ உலுக்கச் சொல்லியாத் தரவேண்டும்?. மெதுவாக உலுக்கினான். வேகமாக உதிர்ந்தாள்.
//

எப்படிங்க இப்படி.கலக்கல்.

வானம்பாடிகள் said...

பிரமாதம் நர்சிம்.

நாடோடி இலக்கியன் said...

//“உங்க அப்பன் பூவலிங்கத்த வீட்டப் பக்கம் வரச் சொல்லுடா, நாளைக்கி”//

:)))))))))))))))

Vidhoosh said...

!!!!
நிறையா இடத்தில் "எழுத்தாளர் நர்சிம்" தெரிகிறார் நர்சிம்.

"பாணி"க்ரஹனம் பண்ணிக்கொண்டு விடாதீங்கோ.....
--வித்யா

Cable Sankar said...

அருமையான ப்ளோ தலைவரே..

Mrs.Dev said...

/புளி உலுக்குபவனுக்கு பூ உலுக்கச் சொல்லியாத் தரவேண்டும்?. மெதுவாக உலுக்கினான். வேகமாக உதிர்ந்தாள்.
//

எழுத்தாளர் ஆகிட்டீங்க.. :)

அதே...அதே...
:)
கதை ரொம்ப நல்லா இருக்கு .வார்த்தைகள் வந்து விழும் லாவகம் கிளாசிக் , நேர்த்தி அது ரொம்ப முக்கியம் ,புரியுது.

KVR said...

ஒரு திகில் கதை படிக்கிற த்ரில் இதில் குறைவா இருந்தாலும் சொன்ன மேட்டர் சூப்பர் :-)

butterfly Surya said...

அருமை நர்சிம். கேரக்டர்களின் பெயர்களும் சொல்லாடல்களும் சூப்பர்.

அய்யனார் கம்மா Part II எப்போன்னு ..?? உங்க ஊர் காரம்மா கேக்குறாங்க..

அமிர்தவர்ஷினி அம்மா said...

முடிவில் ஒரு திக் திக் உணர்வு இயல்பாக எழுகிறது.
புளியமரத்துல புளி எடுக்கறதுல கூட இவ்வளோ விஷயம் இருக்கா?

RVC said...

அருமையான நடை. ரொம்ப நல்லாருக்கு. புளிக்காரக்கா- பூவலிங்கம் தொடர்பு ட்ரமாட்டிக்கா இருந்தாலும் கதையின் எல்லா சாத்தியங்களையும் உணர்த்துது.அத நல்ல 'டிவிஸ்ட்'னு சொல்ல மாட்டேன் - மிஷ்கின் பேசினத நீங்க ரசிச்சு கேட்டத நான் பார்த்தேன் :)

rajan RADHAMANALAN said...

நான் அப்பிடியே ஷாக் ! ஆயிட்டேன்

ஸ்ரீமதி said...

அருமையான நடை அண்ணா.

ஈரோடு கதிர் said...

அடடா... அருமையான நடை

ஆதிமூலகிருஷ்ணன் said...

பல வரிகள் எடுத்துக்காட்டும் படி சிறப்பாக அமைந்திருக்கின்றன. கதை நிகழும்காலத்தை ஒற்றை பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் சொல்லியிருக்கிறீர்கள். ஃபிளாஷ்பேக்கிலிருக்கும் பிரதான கதை வேறு தளத்திலும், நிகழும் திகில் கிளைக்கதை வேறு தளத்திலும் இருந்தது சிறப்பு.

கேசவனின் கற்பனைதான் கதையுடன் ஒட்டாமல் தமிழ்சினிமா கிராஃபிக்ஸ் காட்சி போல தனித்து நிற்கிறது. ஹிஹி.

பொறாமை தூண்டும் ஆகச்சிறப்பான படைப்பு. அடுத்த தொகுப்புக்கான முதல் கதை ரெடியாகிவிட்டது. வாழ்த்துகள்.

கார்க்கி said...

//பக்கா வில்லேஜர்.//

:))))

***************

அப்புறம் எப்போ சகா? சரி சரி.வந்துடறேன்

vanila said...

//புளி உலுக்குபவனுக்கு பூ உலுக்கச் சொல்லியாத் தரவேண்டும்?. மெதுவாக உலுக்கினான். வேகமாக உதிர்ந்தாள்.//.. Good one, Keep Going.. Ji..

Bala Aramvalarthaan said...

நன்றாக இருக்கிறது நர்சிம்!!!
தன் மகள் இறந்ததற்கு காரணம் பூவலிங்கம் தான் என்பது புளிக்காரக்காவிற்கு கடைசி வரை தெரியவில்லை என்பதை புரிந்துகொண்டபோது ஆச்சர்யமாக இருந்தது (எழுத்தில் உங்களது கிடுகிடு வளர்ச்சியைப் பார்த்தும் :-))

--ப்ரியமுடன் பாலா

லேகா said...

நல்லா இருக்கு நர்சிம்.கிராமத்து மொழி நடையில் சுலுவாய் எழுத வருகின்றது உங்களுக்கு.

இன்னும் கொஞ்சம் அமானுஷ்யம் கூடுதலாய் இருந்திருக்கலாம் என தோன்றியது.
புதுமைப்பித்தனின் "காஞ்சனை " மற்றும் சாருவின் "ரங்கையன் கோட்டை" ஆகிய சிறுகதைகள் அத்தகைய அனுபவத்தை தரவல்லவை.

நேசன்..., said...

உங்களுக்கு 'வர்ணணைத் திலகம்'னு பட்டம் தரலாம்!.....மிக அருமை!......

பைத்தியக்காரன் said...

சபாஷ்...

ஒரே பாணியில் கதை எழுதி சிக்கிவிடுவீர்களோ என பயந்தேன். 'போடா வெண்ணெய்' என என் முகத்தில் அறைந்துவிட்டீர்கள். சுகமான வலி :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அன்புடன்-மணிகண்டன் said...

இனி பெட்ரோமாக்ஸ் லைட்ட பார்த்தால், கவுண்டமணி செந்தில் கூட நீங்களும் புளிக்காரக்காவும் நினைவுக்கு வருவீர்கள் நர்சிம்...

நாய்க்குட்டி மனசு said...

கதைத் தலைப்பு "புளிக்காரக்க" வா இருக்கு, கதை 'பிரிபா' பத்தி போகுதேன்னு பட்ஷி சொல்லுச்சு. கதை சூப்பரா இருக்கு. தான் நினைப்பதை வாசகர்களின் கண் முன் கொண்டு நிறுத்தும் திறமை இருக்கு. அடுத்த கட்டமா திரைக்கதை எழுதறதை எதிர்பார்க்கிறேன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

interesting to read!

RaGhaV said...

அருமையான நடை.. :-))
Centric..!!

taaru said...

//திரும்பிப் பார்க்காமல் ஓடியவன் பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்ச டீக்கடையை அடைந்ததும் கொஞ்சம் மூச்சை விட்டு, இழுத்து, மெதுவாக விட்டுக் கொண்டே சகஜமானான்//

இன்னும் எத்தன செயல் ஒரே வரியாய்?!!!

ஈரம் மாதிரி இது புளிய"மரம்"... அண்ணே உலுக்கி எடுத்துட்டீக...

JudePr. said...

அருமை. நல்ல Flow. வட்டார வழக்கு உங்களுக்கு நல்லா கை வருது. எழுத்தாளர் ஆஹிட்டீங்க. அடுத்து என்ன? கதை வசனம் Direction-ஆ?

-Jude

அத்திரி said...

நல்லாயிருக்கு சகா

தமிழ்ப்பறவை said...

மிக ரசித்’தேன்’...
(பின்னூட்டம் ஓல்டு ஸ்டைல்தான்.. இருந்தாலும் உங்க பதிவுன்னா இப்படித்தான் விளையாடணும்)
வட்டாரவழக்கு அருமை.. பள்ளியோடம் நல்லாஇருந்தது...
//பிரபாண்டு சொல்லு//
அப்படிப் பேசிக் கேள்விப்பட்டதில்லை..

சம்பத் said...

////அவனுடன் கூடுவது கொஞ்சம் கொஞ்சமாக நிறைய ஆரம்பித்தது.////

சான்சே இல்ல பாசு...பின்னிட்டீங்க...

சம்பத் said...

////“உங்க அப்பன் பூவலிங்கத்த வீட்டப் பக்கம் வரச் சொல்லுடா, நாளைக்கி”////

;-)

S e l v a.. said...

இந்தப் பேய் சமாச்சாரத்தை விட்டுட்டா, இந்தக் கரு ஒரு குறு நாவலுக்கு ஏற்றது. என்ன நரசிம், இப்படி சிறு கதைக்குள் சிறை வச்சிட்டீங்க? எங்களது புளியந் தோப்பில் தொரட்டி வச்சு, புளியம்பழம் உலுப்பியது நினைவில் வந்தது. நல்ல கதை....நிறைய எழுதுங்க. இன்டர்நெட்டில் இந்த மாதிரி கிராமத்து கதைகள் நிறைய வரணும். நல்ல நடை....நதியா நடை தோத்தது போங்க!

செல்வா..

புருனோ Bruno said...

//மெதுவாக உலுக்கினான். வேகமாக உதிர்ந்தாள்.//

சூப்பர்

சூப்பர்

//ஒரே பாணியில் கதை எழுதி சிக்கிவிடுவீர்களோ என பயந்தேன். 'போடா வெண்ணெய்' என என் முகத்தில் அறைந்துவிட்டீர்கள். சுகமான வலி :)
//

வழிமொழிகிறேன்

புருனோ Bruno said...

//shortfilmindia.com said...
/புளி உலுக்குபவனுக்கு பூ உலுக்கச் சொல்லியாத் தரவேண்டும்?. மெதுவாக உலுக்கினான். வேகமாக உதிர்ந்தாள்.
//

எழுத்தாளர் ஆகிட்டீங்க.. :)

கேபிள் சங்கர்
//

இப்படி ஒரு ஐடியில (உங்கள் பெயர் அல்லாத கணக்கில்) லாக்கின் ஆகி கீழே உங்கள் பெயரை போடும் இரண்டாவது நபர் (எனக்கு தெரிந்து) கேபிளார் தான் :) :)

தெரிந்தவர்கள், புரிந்தால் சிரித்துக்கொள்ளவும்

thuvarakan said...

//ஒரே ஒரு வயல் மட்டும் கதிர் அறுக்கப் படாமல் இருந்ததால், தனியாக,காற்றின் திசையில் கதிர்கள் மடிந்து எழுந்த பொழுது வந்த சத்தம் புளியமரக் கிளையிலும் தொட்டுச் சென்றது புளியைக் கரைத்தது//

சிறந்த கற்பனை அருமையான கதை. உங்கள் கதைகள் அனைத்தும் சூப்பரோ சூப்பர்.

selvanambi said...

இதுதான் ஈடுபாடு என்பது.எந்த பாத்திரத்தைப் பற்றீ எழுதுகிரோமோ அதாகவே ஆகிவிடுவது.நல்லாருக்கு

பின்னோக்கி said...

முதல் நான்கு வரிகளில் காட்சி வர்ணனைக்கு போகாமல், படிப்பவர்களை இழுத்துவிட்டு, பின் வர்ணனைக்கு போன விதம் அருமை.

கேசவனையும் பிரபாவையும் இணைக்கும் புள்ளி எது என்று கடைசி வரை யோசிக்க வைத்தீர்கள்.

நாக்கு தள்ளிய பிறகு, ஒருவனுக்கு நினைவு இருக்குமா ?.

அதி பிரதாபன் said...

கடேசில நச்சுக்கான்னு இருக்கு.

எம்.எம்.அப்துல்லா said...

//தெரிந்தவர்கள், புரிந்தால் சிரித்துக்கொள்ளவும்

//

:))))

நர்சிம் said...

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

அகநாழிகை said...

கதை அருமை நர்சிம்.
Keep it up.

- பொன்.வாசுதேவன்

rajasundararajan said...

பேயையும் பிழைப்பையும் அந்தப் புளிய மரத்தோடு இணைத்திருப்பது உங்கள் செய்நேர்த்தி. பேய்ச் சாச்சாரம்தான் கதையைக் கலையாக்குகிறது என்று கருதுகிறேன். தான் குற்றவாளி அல்ல என்றாலும் தன் முன்னோர் புரிந்ததின் குற்ற உணர்வு அவனை...

அப்புறமும்,

“உங்க அப்பன் பூவலிங்கத்த வீட்டப் பக்கம் வரச் சொல்லுடா, நாளைக்கி”

“சரி புளிக்காரக் கெழவி”

என்னா இயல்பு!

- ராஜசுந்தரராஜன்

பைத்தியக்காரன் said...

@ அன்பின் ராஜசுந்தர்ராஜன்,

என்றும் என்னை வசீகரிக்கும் அன்புக் கவிஞர்தான் இந்தப் பின்னூட்டத்தை அளித்தவர் என்றால்,

நர்சிம் கைய கொடுங்க. இழுத்து வச்சு கன்னத்துல ஒரு அழுத்தமான உம்மா. புத்தகக் கண்காட்சில இவரோட கவிதைத் தொகுப்பை 'தமிழினி'ல வாங்கி படிச்சுப் பாருங்க. அப்பத்தான் அவரோட பின்னூட்டத்துக்கான வலிமை உங்களுக்கு தெரியும்.

ஒருவேளை இவர், வேறு ராஜசுந்தர்ராஜனாக இருந்தாலும் பிரச்னையில்லை. நல்ல கதைக்கு நல்ல பாராட்டு.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அதே உயிர் மீட்சி ராஜசுந்தர் ராஜன் என்றே நினைக்கிறேன். வாழ்த்துகள் நர்சிம்!

" உழவன் " " Uzhavan " said...

பூபூபூவு... ம்ம்.. மனுசன் வாழ்ந்திருக்கான்யா

பின்னோக்கி said...

இன்று வந்த ஆனந்த விகடனில் உங்கள் கவிதை. வாழ்த்துக்கள் இன்னொருமுறை.

KaveriGanesh said...

அன்பின் நர்சிம்,

பள்ளியோடம் போயிருக்கு.

இந்த பள்ளியோடம் வார்த்தை பிரவாகம் என்னை பிரமிக்கவைக்கிறது.

என்கென்னமோ கூடல் நகரின் இன்னொரு பிரதான எழுத்தாளராக அறியப்படுவீர்கள் போலிருக்கிறது.

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

காவேரி கணேஷ்

பா.ராஜாராம் said...

ஆம் நர்சிம்!

காவேரி கணேஷை அப்படியே வழிமொழிகிறேன்.உங்கள் தொகுப்பு வேணும் மக்கா.முகவரி..

b.rajaram,
p.o.2331,
al-khobar-31952.
K.S.A.

கையெழுத்திட்டு அனுப்பி தாங்க மக்கா.காசு?

கைதவறி ஒரு மினி பீர் பாட்டில் ஒடைஞ்சு போச்சுன்னு நினைச்சுக்கோங்க.

கருவேலநிழலை காசுகொடுத்து வாங்கி படிங்க.

கைதவறி ஒரு பெரிய பீர்பாட்டில் ஓடையாதா என்ன?

உண்மையில் அவ்வளவு சந்தோசம்,இந்த சிறுகதையில்!

Mohan Kumar said...

//மெதுவாக உலுக்கினான். வேகமாக உதிர்ந்தாள்//

அருமை.

முடிவு பல விதமா யோசிக்க வைக்குது.

எனக்கு ரொம்ப சந்தோசம் என்னன்னா யார் மாதிரியும் இல்லாம உங்களுக்குன்னு ஒரு ஸ்டைல் எழுத்தில் உருவாகி வருது. கலக்குங்க

நர்சிம் said...

அனைவரின் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

ராஜசுந்தர்ராஜன் ஸார். என்ன சொல்வதென்று தெரியவில்லை பைத்தியக்காரன் & சுந்தர் அவர்களின் பின்னூட்டத்தைப் பார்த்தபிறகு. நன்றி என்ற ஒரு வார்த்தையைத் தவிர. மிக்க நன்றி

நன்றி சிவராமன்ணா.

பா.ராஜாராம்.. அனுப்புகிறேன். அன்பிற்கு நன்றி. உங்க புக் வாங்கியாச்சு ஸார்.

அனைவருக்கும் மிக்க நன்றி

பட்டாம்பூச்சி said...

நல்லா இருக்கு நர்சிம் அண்ணா :)

பாலராஜன்கீதா said...

//ஊருக்கு வெளியே இருந்த புளியமரத்தில் பிரபா தொங்கிவிட்டாள்//
சில மனிதர்கள் சில நேரங்களில்
:-)

rajasundararajan said...

வாழ்க! முதலில் ஆர்.பி. ராஜநாயஹம் அந்தக் கவிஞன் நாந்தான் என்று கண்டுபிடித்தார். இப்போது சிவராமனும் சுந்தரும். மறக்கப்பட வேண்டிய ஆளில்லையோ நான். எல்லாருக்கும் வணக்கம். நர்சிம், என்னைப் பார்த்திருக்கிறீர்கள். சாரு புத்தக வெளியீட்டு விழாவிற்குப் பின் நீங்கள் கொடுத்த விருந்தில் ஷாஜிக்கு வலனில் எஸ்.ரா.வுக்கு எதிரில் அமர்ந்து 'தண்ணி' அடித்த கிழடு நான்தான்.

அந்த நன்றிக்காகவெல்லாம் உங்களை நான் பாராட்டவில்லை. உங்கள் மொழிநடையும் செய்நேர்த்தியும் சிறப்பாக வந்துள்ளன. நான் கூறிக்காட்டி இருப்பதுபோல் ஒரு பொருட்பார்வையும் கிட்டுகிறது. மேலும் மேலும் எழுதுங்கள். திறமை நிறையவே இருக்கிறது.

- ராஜசுந்தரராஜன்

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

கதை நன்றாக இருக்கிறது. புளியம்பழமும், வெயில்கால பள்ளிகூடமும், வாசலில் அமர்ந்து புளி உருண்டை விற்க்கும் அக்காக்களும் கதைளில் படிக்கும்போது கூட கிராமத்து நாட்களை நினைவூட்டுகிறார்கள். கதையின் போக்கும், சம்பவ அமைப்பும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. நல்ல மொழி நடை கைவருகிறது...

நர்சிம் said...

மிக்க நன்றி ராஜசுந்தர்ராஜன் சார். என்ன சொல்வதென்று தெரியவில்லை. பொறுப்பைக் கூட்டிவிட்டது உங்கள் வார்த்தைகள். மிக்க நன்றி.

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முத்துக்குமார்.

நன்றி பாலராஜன்கீதா


அனைவருக்கும் மிக்க நன்றி

அ.மு.செய்யது said...

பொறுமையாக நிதானித்து படிக்க வேண்டும் என்று தோன்றியதால் சற்றே. தாமதம் ஏற்பட்டு விட்டது.மன்னிக்கவும்.

ஆதி சொன்னது போல மேற்கோள் காட்ட வேண்டிய வரிகள் நிறைய.குறிப்பாக "வேகமாக உதிர்ந்தாள்"
பெரிதும் கவர்ந்தது.

பதிவுலகிலிருந்து எழுத்துலகிற்கு ஒரு Quick Transition பிடிச்சிருக்கு !!!