Tuesday, February 9, 2010

திரு-மணம்-இரு-மனம்.

“கல்யாணம் ஆனவருக்கும் பேச்சிலருக்கும் என்ன வித்தியாசம் ?”

“பேச்சிலர்னா கட்டிலோட எந்தப் பக்கத்து வழியாவும் இறங்கிக்கலாம்”

நண்பனிடம் நகைச்சுவைக்காக சொல்லப்பட்டது என்றாலும் நிறைய அர்த்தங்கள் கொண்ட வரிகள்.

ஆரம்பத்தில் டார்வின் தாண்டி, கூட்டம் கூட்டமாக வாழ்ந்து, வேட்டையாடி, பலம் காட்டி, பெண்ணின் மனம் கவர்ந்து புணர்ந்து திரிந்து கொண்டிருந்த கூட்டம். மிருகங்களில் ஆண்வம்சங்களே அழகு. களிறுக்குத் தான் தந்தம். ஆண்மயிலுக்குத் தான் தோகை பிடறி சிலிர்ப்பும் ஆண் சிங்கம் என. இதனெதிர்த் தன்மை மனித வர்க்கத்திற்கு. ஆதலினால் பெண்ணைக் கவர ஆண்களின் போட்டி அன்று தொடங்கியது இன்னும் முடியவில்லை.

குழு வாழ்வு முறையில் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றமேற்பட்டு, தனிக் குழுவாக, பின் தனிக் குடும்பமாக என பிரிவுகள். அப்படியான ஆரம்பம் தான் ஒருவனுக்கு(?) ஒருத்தி(?).

காதலைக் களவொழுக்கம் எனவும் அதனடுத்த நிலை கற்பொழுக்கம் என்றும் அழைக்கப்பட்ட திருமண நிகழ்வுகள் மிகுந்த லயிப்புடனும் களிப்புடனுமே நடந்தேறி இருக்கின்றன என்பதாகப் படுகிறது. ஆனால் அகப் பாடலிலோ அல்லது திருமண நிகழ்வு குறித்த பிற பாடல்களிலோ தாலி பற்றிய செய்தி இருப்பதாகத் தெரியவில்லை.

இதோ,மங்கள விழாவின் போது யாரெல்லாம் என்னவெல்லாம் செய்து கொண்டு இருந்தார்கள், எப்படி மலர்தூவி வாழ்த்தினார்கள் என்பதை இளங்கோவடிகள் காட்சிப் படுத்தியவிதம் மிகுந்த ஆச்சர்யமாய் இருக்கிறது. இன்றும் இதுவே நடைமுறையில் இருக்கிறது. தாலி தவிர.
..
விரையினர்,மலரினர்,விளங்கு மேனியர்
உரையினர்,பாட்டினர்,ஒசிந்த நோக்கினர்
சாந்தினர்,புகையினர்,தயங்கு கோதையர்,
ஏந்து இள முலையினர், இடித்த சுண்ணத்தர்,
விளக்கினர்,கலத்தினர்,விரிந்த பாலிகை
முளைக்குட நிரையினர், முகிழ்த்த மூரலர்,
போதொடு விரிகூந்தல் பொலன்றுநறுங் கொடி அன்னார்
காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீது அறுக எனஏத்திச்,சின்மலர் கொடுதூவி
அங்கன் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்அமளி ஏற்றினர்;

அற்புதமான திருமணக் காட்சி கோலகலமாக கண்முன் விரிகிறதா?

ராமர்-சீதை திருமண நாள் அன்று காலை முதல் நகரின் பரபரப்பை கம்பர்

முரசு அறைதலும், மான முதியவரும், இளையோரும்,
விரை செறி குழலாரும், விரவினர் விரைகின்றார்;
உரை செறி கிளையோடும், உவகையின் உயர்கின்றார்;
கரை தெரிவு அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார்.

என்று ஆரம்பித்து, அங்கே இளங்கோவடிகள் திருமண பந்தலில் சிந்திய சந்தனத்தை கம்பர் தெருமுழுக்க சிந்த விடுகிறார் இப்படி..

சந்தனம், அகில், நாறும் சாந்தொடு, தெரு எங்கும்
சிந்தினர் திரிவாரும், செழு மலர் சொரிவாரும்,
இந்திரதனு நாண, எரி மணி நிரை மாடத்து,
அந்தம் இல் விலை ஆரக் கோவைகள் அணிவாரும்

மணக்கிறதா? ராமனும் சீதையும் மன்றத்தில் அமர்ந்த நிலை பற்றி

மன்றலின் வந்து, மணத் தவிசு ஏறி,
வென்றி நெடுந் தகை வீரனும், ஆர்வத்து
இன் துணை அன்னமும், எய்தி இருந்தார்;
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்.

இன்றும் நாம் மங்கள நிகழ்வின் போது தூவும் பூவை,

வானவர் பூ மழை, மன்னவர் பொன் பூ,
ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம்,
தான் நகு நாள்மலர், என்று இவை தம்மால்,
மீன் நகு வானின் விளங்கியது, இப் பார்

இதன் பிறகான நம் பயணங்கள் பல் நூற்றாண்டுகள் என்றாலும் திருமணம் எனும் நிகழ்வும் மேற்சொன்ன காட்சிகளும் கிட்டத்தட்ட அப்படியே தான் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.

அவரவர் பொருளாதார சூழலும் கெளரப் பிரச்சனையும் ஒரு புள்ளியில் இணைக்கும் திருமணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

பெண்ணைப் பொறுத்தவரை, வேரோடு ஒரு மரத்தைப் பிடுங்கி அதை வேறோர் இடத்தில் நட்டுவிடும் நிகழ்விற்கு ஒத்த நிகழ்வான திருமணம்,பெண்களின் இருபதுகளில் தொடங்கி இந் நிகழ்வு முடியும் வரை ஒரு முக்கிய பேசு பொருளாகவே இருக்கிறது.

காதலித்து திருமணம்-திருமணத்திற்குப் பின் காதலித்தல் என்ற வார்த்தை விளையாட்டுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு பார்த்தால்,

உடல்மொழி உட்பட குருதியோடு இறுதிவரை கலந்து போகும் துணையைத் தரும் நிகழ்வாகவே திருமண நிகழ்வு பார்க்கப்படுகிறது.

அலுவலகத்திலோ வெளியிலோ ஏதேனும் ஒரு சொல்லிலடங்கா பிரச்சனையை எதிர்கொண்டு, மனதில் பூட்டி வைத்து,வைராக்கியம் காத்தாலும், துணையைக் கண்டவுடன் வெடித்துத் தோள் சாயும் தோழமைதான் துணை.

சரியான துணையைத் தேர்ந்தெடுக்கும் வழிகளில் ஆகச் சிறந்த வழியான காதலைப் பற்றி..அடுத்துப் பார்ப்போம்.


..

42 comments:

சின்ன அம்மிணி said...

நீங்களும் காதலர் தின ஜோதில கலக்க தயாராகீட்டீங்களா :)

நர்சிம் said...

//சின்ன அம்மிணி said...
நீங்களும் காதலர் தின ஜோதில கலக்க தயாராகீட்டீங்களா :)
//

சத்தியமா இல்லை..விடுங்க காதலைப் பற்றிய அந்த இடுகைய 14க்கு அப்புறம் போடுறேன்..;)

Mohan said...

அந்த இடுகையைக் காதலர் தினத்திற்கு முன்பு போட்டால் மட்டுமே,எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் :-)

Aparna said...

//அலுவலகத்திலோ வெளியிலோ ஏதேனும் ஒரு சொல்லிலடங்கா பிரச்சனையை எதிர்கொண்டு, மனதில் பூட்டி வைத்து,வைராக்கியம் காத்தாலும், துணையைக் கண்டவுடன் வெடித்துத் தோள் சாயும் தோழமைதான் துணை.//

wow!excellent

கபீஷ் said...

//மிருகங்களில் ஆண்வம்சங்களே அழகு.
இதனெதிர்த் தன்மை மனித வர்க்கத்திற்கு. //

பத்திக்குப் பொய்யழகு :-):-)

கபீஷ் said...

//அலுவலகத்திலோ வெளியிலோ ஏதேனும் ஒரு சொல்லிலடங்கா பிரச்சனையை எதிர்கொண்டு, மனதில் பூட்டி வைத்து,வைராக்கியம் காத்தாலும், துணையைக் கண்டவுடன் வெடித்துத் தோள் சாயும் தோழமைதான் துணை.//


ரொம்ப நல்லாருக்கு

Sangkavi said...

//பெண்ணைப் பொறுத்தவரை, வேரோடு ஒரு மரத்தைப் பிடுங்கி அதை வேறோர் இடத்தில் நட்டுவிடும் நிகழ்விற்கு ஒத்த நிகழ்வான திருமணம்,பெண்களின் இருபதுகளில் தொடங்கி இந் நிகழ்வு முடியும் வரை ஒரு முக்கிய பேசு பொருளாகவே இருக்கிறது.//

சரியாகச்சொல்லி இருக்கறீர்கள்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

உடல்மொழி உட்பட குருதியோடு இறுதிவரை கலந்து போகும் துணையைத் தரும் நிகழ்வாகவே திருமண நிகழ்வு பார்க்கப்படுகிறது. //

இப்படி பார்க்கும் இந்தக் காலகட்டத்தில் தான் ”முணுக்” கென்றால் விவாகரத்தும் நடக்கிறது.
:(

||| Romeo ||| said...

\\“பேச்சிலர்னா கட்டிலோட எந்தப் பக்கத்து வழியாவும் இறங்கிக்கலாம்”//

குழந்தையும் பொறந்துட்டா எகிறி குதிச்சிதான் வரணும் .. :)))))

கார்ல்ஸ்பெர்க் said...

வழக்கமா கட்டில் ஒரு மூலையில தான இருக்கும்? இது வரைக்கும் நான் கட்டில்ல இருந்து ஒரு வழியாத் தான் இறங்கியிருக்கேன்.. ஆனா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.. :)

பேநா மூடி said...

ஹ்ம்ம்.. ஹம்ம்.., ஆமா இந்த தாலி எப்போ நம்ம கலாசாரமா மாறியது..,

கண்ணகி said...

அம்சம்...அம்சம்....

இப்னு ஹம்துன் said...

திருமணம்ங்கறது என்னங்க?!

இங்கிலீஷ் Bachelor தமிழ் 'பேச்சு இலர்' ஆவறதுதானே :-))))

Vidhoosh said...

புனைவு என்னங்க ஆச்சு..

D.R.Ashok said...

Good - Illango & Kambar :)

அன்புடன் அருணா said...

Blogger இப்னு ஹம்துன் said...
/திருமணம்ங்கறது என்னங்க?!

இங்கிலீஷ் Bachelor தமிழ் 'பேச்சு இலர்' ஆவறதுதானே :-))))/
ஹாஹாஹாஹா! சத்தம் போட்டுச் சிரித்து விட்டேன் விளக்கம் பார்த்து!

ஷங்கர்.. said...

||| Romeo ||| said...

\\“பேச்சிலர்னா கட்டிலோட எந்தப் பக்கத்து வழியாவும் இறங்கிக்கலாம்”//

குழந்தையும் பொறந்துட்டா எகிறி குதிச்சிதான் வரணும் .. :)))))
//

புரியுது ரோமி..:))

பாசகி said...

இன்னும் ஒரு அடி.

கலகலப்ரியா said...

ithu paththi reseach pannittu vanthu solren.. =))

குடந்தை அன்புமணி said...

காதல் பற்றி கலக்கல் தொடரா? ம்... ம்... நடக்கட்டும்...

கலகலப்ரியா said...

வந்துட்டம்ல வந்துட்டம்ல ..

இலக்கிய உரைநடைச் சுருக்க வரிசை: சிலப்பதிகாரம் / மணிமேகலைப் பிரசுரம்/ விலை ரூபாய் நாற்பது

கண்ணகியின் துயரம்: பூச்சூடாமல், நெற்றியில் திலகம் தீட்டாமல், எந்தவிதமான அணிமணியும் அணியாமல் மங்கல அணியைத் தவிர மற்றெல்லா அணிகளையும் துறந்தவளாய் .. ஆ..!! மங்கல அணின்னு சொல்லிட்டாங்கையா...! இதனால் நான் சொல்லிக்கொ'ல்'வது என்னவென்றால்.. நர்சிம் கொடுத்த பாடலின்படி.. சொல்லாம கொள்ளாம தாலிய கட்டிப்புட்டாய்ங்கையா..!!!

(எஸ்கேப்பு...)

அகநாழிகை said...

நர்சிம், நல்ல பதிவு, முதல் வரிகள் ரசிக்க வைத்தன. முழுமையாகவே நன்றாக இருந்தது.

கார்க்கி said...

ஒர்க் அவுட் ஆவுது என் ஐடியா. பரிசல் நர்சிம்..

இன்னும் ஆதி etc etc.. சீக்கிரம் வாங்கப்பா... :)))

நாய்க்குட்டி மனசு said...

இந்த , ? தானே வேண்டாங்கிறது.
உங்களுக்கு ஏன் நர்சிம் காதல் மேல் இவ்வளவு கோபம்.
தான் உள்ளக் குமுறலுக்கு துணையின் தோள் எத்தனை பேருக்கு கிடைக்கிறது?

Geetha said...

இவ்வரிகள் தாங்கி நிற்கும் வார்த்தையும் அழகு, கருத்தும் மிக அழகு...

" ஒரு சொல்லிலடங்கா பிரச்சனையை எதிர்கொண்டு, மனதில் பூட்டி வைத்து,வைராக்கியம் காத்தாலும், துணையைக் கண்டவுடன் வெடித்துத் தோள் சாயும் தோழமைதான் துணை "

சுசி said...

:))))

தலைப்பு சூப்பர் நர்சிம்.

அன்புடன்-மணிகண்டன் said...

மொத்தத்தில் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நர்சிம்.. ;)

Chitra said...

அருமையான பதிவு. :-)
அடுத்த தொடருக்கு காத்திருக்கிறோம்.

Sundar சுந்தர் said...

//சொல்லிலடங்கா பிரச்சனையை எதிர்கொண்டு, மனதில் பூட்டி வைத்து,வைராக்கியம் காத்தாலும், துணையைக் கண்டவுடன் வெடித்துத் தோள் சாயும் தோழமைதான் துணை.//

:)நச்!

கம்பரும், இளங்கோவும் அழகு வார்த்தைகளில் மிளிர்ந்தாலும், பாதி புரியவில்லை எனக்கு :(

நர்சிம் said...

நன்றி சின்ன அம்மிணி

நன்றி மோகன்

நன்றி அபர்ணா

நன்றி கபீஷ்..எது பொய்?

நன்றி sangkavi

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா.

நன்றி ரோமியோ

நன்றி கார்ல்ஸ்பெர்க்..அதான் கல்யாணம் ஆகலைன்னு சொல்றீங்களே தல,கட்டில் மூலைல கிடந்தா என்ன மொட்டை மாடில கிடந்தா என்ன? ;);)

நன்றி பேநாமூடி..ஆராயணும்.

நன்றி கண்ணகி

நன்றி இப்னு

நன்றி விதூஷ்..கூடியவிரைவில்..;)

நன்றி அசோக்..அவங்ககிட்ட சொல்லிவிடுகிறேன்.;)

நன்றி அருணா

நன்றி ஷங்கர்

நன்றி பாசகி..புரியல தல.

நன்றி கலகலப்ரியா..புரியவில்லை..என்றாலும் கண்ணகி வாழ்க்கை சரியாக அமையவில்லைனு சொல்ல வர்ரீங்களா..ஏதேனும் ஏரோப்ளேன் க்ராஷ் ஆனா,இனி விமானமே வேணாம்னு நடந்தா வருவீங்க அங்கிருந்து? அது போலத்தான் விபத்துகள் ஜகஜம்.;)

நன்றி குடந்தை அன்புமணி

நன்றி அகநாழிகை.

நன்றி சகா

நன்றி நாய்குட்டி மனசு.அதானே.

நன்றி கீதா.

நன்றி சுசி..தலைப்பு மட்டும் நல்லா வச்சு இருக்கீங்கன்னு சொல்றீங்களா..;)

நன்றி அன்புடன் மணிகண்டன்.

நன்றி சித்ரா.

நன்றி சுந்தர்.

selvanambi said...

அருமை.ஆதலினால் காதல் செய்வீர்

பேநா மூடி said...
This post has been removed by the author.
பேநா மூடி said...

ஆராய்ச்சி பண்ணிட்டு சொல்லுங்கோ

பரிசல்காரன் said...

//நர்சிம் said...

//சின்ன அம்மிணி said...
நீங்களும் காதலர் தின ஜோதில கலக்க தயாராகீட்டீங்களா :)
//

சத்தியமா இல்லை../

ஏன் அவ்ளோ பயமா? இல்லை...

பின்னோக்கி said...

அருமை. அனைத்தையும் தொகுத்து புத்தகமாக வெளியிடுங்கள்.

பாசகி said...

//நன்றி பாசகி..புரியல தல.//

எனக்கும் தான் பாட்டு புரியல நான் எதாவது சொன்னனா, போங்க பாஸ் :)

அது என்னன்னு அப்புறம் சொல்லறேன்.

மறத்தமிழன் said...

நர்சிம்,

திருமண பந்தத்தைப்பற்றி உங்களுக்கே உரிய பாணியில் நல்லா சொல்லியிருக்கீங்க‌ !

காதலைப் பற்றி அறிய அவா...

henry J said...

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

Arunkumar Selvam said...

Nice one narsim!.

Thanks,
Arun

கலகலப்ரியா said...

oh.. wot a pity..! ennoda research ellam ipdi aagi poche..! you dun get me.. i dun get you.. =))..

neway.. just ignore that comment bro..:)

நர்சிம் said...

//கலகலப்ரியா said...
oh.. wot a pity..! ennoda research ellam ipdi aagi poche..! you dun get me.. i dun get you.. =))..

neway.. just ignore that comment bro..:)
//

Nope.. plz explain so that we discuss on that. நான் தவறாக புரிந்து கொண்டேன் என்று நினைக்கிறேன். சரியாக புரிய வைக்கவும்.

Muruganantham Durairaj said...

Nice post.

நர்சிம் in this post you have said like "//அகப் பாடலிலோ அல்லது திருமண நிகழ்வு குறித்த பிற பாடல்களிலோ தாலி பற்றிய செய்தி இருப்பதாகத் தெரியவில்லை//

In comments, கலகலப்ரியா quoted from "சிலப்பதிகாரம்-மணிமேகலைப் பிரசுரம்" as //கண்ணகியின் துயரம்: பூச்சூடாமல், நெற்றியில் திலகம் தீட்டாமல், எந்தவிதமான அணிமணியும் அணியாமல் "மங்கல அணியைத்" தவிர மற்றெல்லா அணிகளையும் துறந்தவளாய்//

So, கலகலப்ரியா's point about "மங்கல அணி" is to be noted. If possible check about this..