நெடுஞ்சாலைப்
புளியமர நிழலோரம்
நிறுத்திக் குதித்தவர்
உதடு பிதுக்கலினூடே
முணுமுணுத்தார்
ப்ரேக் டவுன்’ -
பின்னங்கழுத்துக்
கைக்குட்டைய உருவிக்கொண்டே
பற்ற வைத்த
பீடிப் புகை
வெயிலில் மிதந்தலைந்தது.
‘கவர்மெண்ட்னாலே இப்பிடித்தான்’
'ட்ரெயின்ல போலாம்னா
கேட்டாத்தானே இந்தமனுசன்’
'ஆறுமணிக்கு அங்கிருக்கணும் ஓய்’
'பசிக்குமேப்பா’
புளியமரம் முழுக்க
பேச்சுகள்
கானல்நீர் தேங்கும்
தார்ச்சாலை
தகதகிப்பில்
பேருந்து சக்கர
ஓரத்தில் தோய்ந்திறந்தும்
மின்னிய
வண்ணத்துப் பூச்சியின்
இறகைத்
தொட்டுப் பார்த்தேன்
ஒட்டிக் கொண்டது
மூன்றாவது இருக்கையில்
தன்னந்தனியாய்
அமர்ந்திருப்பவள்
அழுதழித்த மை போல.
Monday, March 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
ஒரு நிகழ்வை ஆரம்பம் முடிவு என்று தேடாமல் பதிவு செய்தது அருமை
ஆஹா!
nice poem
NICE!!!!!!!
:)))
தகதகித்த”.. ரைட்டா சகா? வித்தியாசமா இருக்கு எனக்கு
நல்ல காட்சிப் படிமம். இந்தக் கவிதையில் ஒரு சிறுகதை ஒளிஞ்சிருக்கு. very nice.
நர்சிம், நல்ல கவிதைக்குத் தலைப்பு கொஞ்சம் ஒட்டல. தொகுப்பாக வெளியிடும்போது கொஞ்சம் ரீகன்சிடர் பண்ணுங்க.
நல்ல கவிதைகள் எப்பொழுதுமே கவிதையில் சொல்லாத விசயங்களைப்பற்றி நிறையப்பேசும்.
இந்த கவிதையைப்போல.
வாழ்த்துக்கள்
நர்சிம்,
அனுபவங்களை கவிதையா நல்லா சொல்லி
இருக்கீங்க..
"பின்னங்கழுத்து கைகுட்டை" நல்ல கவனிப்பு..
நம்ம கன்ரக்டரப்பத்தி ஒன்னுமே சொல்லலையே..
கார்க்கி...
அது ஸ்பெல்லிங் மிஸ்டேக் சகா..டேக் இட் ஈஸி...
அது தகதகப்பில் தான்...
தலைப்பு அருமை.
தக+தகித்த சபாஷ். :)
//ஓரத்தில் தோய்ந்திறந்தும்
மின்னிய
வண்ணத்துப் பூச்சி///
//மூன்றாவது இருக்கையில்
தன்னந்தனியாய்
அமர்ந்திருப்பவள்///
நீண்ட நாள் நினைவில் இருந்து படுத்தப் போகும் கவிதைகளில் ஒன்று. வாழ்த்துக்கள். :)
//அது ஸ்பெல்லிங் மிஸ்டேக் சகா..டேக் இட் ஈஸி...//
இல்லை பாஸ்.
தகதகப்பு + தகிப்பு..இரண்டையும் கலந்த புதிய வார்த்தையாக எழுதிப் பார்த்தேன்.
அழகு கவிதை அழகானவரிடம் இருந்து.
நல்லாருக்கு
//தன்னந்தனியாய்
அமர்ந்திருப்பவள்
அழுதழித்த மை போல//
- அழகான உவமை.
கவிதை முடித்த விதம் ரசிக்க வைத்து.
கவிதை தலைப்பு அருமை. கானல் நீர் என்பதால் ஒரு பளபளப்பும் , வெயிலின் கொடுமையால் ஒரு தகிப்பும் சேர்ந்து உணர்த்தும் வார்த்தை "தகதகிப்பில்" நன்றாக இருந்தது.
மின்னிய
வண்ணத்துப் பூச்சியின்
இறகைத்
தொட்டுப் பார்த்தேன்
ஒட்டிக் கொண்டது//
வரிகள் மனதில் ஒட்டிக்கொண்டது!!
Nice one. :)
//புளியமரம் முழுக்க
பேச்சுகள்//
நன்றாக இருக்கிறது. 'புளியமரம்' வெயில் பொசுக்கும் நிலத்தோடு தொடர்பு படுத்தவா?
‘வண்ணத்துப் பூச்சி’ கவிஞனுக்கான குறியீடு அல்லவா?
‘மூன்றாவது இருக்கை’ என்றால் என்ன? சம்பந்தப்படாத மூன்றாம் மனுஷியா?
Death of a poet-ஐ மூன்றாம் மனுஷியின் கண்ணீரோடு தொடர்பு படுத்தியிருப்பது ஆகச் சிறப்பு. அப்புறம் poet-ஆவது சாகிறதாவது என்கிற தலைப்பு இன்னும் சிறப்பு.
//தகதகப்பு + தகிப்பு..இரண்டையும் கலந்த புதிய வார்த்தையாக எழுதிப் பார்த்தேன்.//
செம்மொழி மாநாட்டுக்கு கோவை வர்றீங்கள்ல பாஸ்?
எனக்கு ரொம்பப் பிடிச்ச வரி
//புளியமரம் முழுக்க
பேச்சுகள்//
ஏன் கண்ணீர் என்று அடுத்த கவிதையில் வருமா????
Classy Narsim.
:):):)
அடடா.. என்னென்னமோ சொல்லுது கவிதை
ம்.
போதைகள் குறைவதில்லை
நெடுஞ்சாலைப்
டாஸ்மாக் கடையோரம்
நிறுத்திக் குதித்தவர்
உதடு பிதுக்கலினூடே
முணுமுணுத்தார்
இன்னும் கடை தொரக்கல-
பின்னங்கழுத்துக்
கைக்குட்டைய உருவிக்கொண்டே
பற்ற வைத்த
பீடிப் புகை
வெயிலில் மிதந்தலைந்தது.
‘கவர்மெண்ட்னாலே இப்பிடித்தான்’
'ப்ரைவேட் பார் போலாம்னா
கேட்டாத்தானே இந்தமனுசன்’
'அறுநூறு வேணும் ஓய்’
'சைடிஸ் பிரியே’
கடையோரம் முழுக்க
போதைகள்
கானல்நீர் தேங்கும்
தார்ச்சாலை
தகதகிப்பில்
மதுபான விளம்பரபலகை
ஓரத்தில் தோய்ந்திறந்தும்
மின்னிய
வீ.எஸ்.ஒ .பி
படத்தை
தொட்டுப் பார்த்தேன்
ஒட்டிக் கொண்டது
மூன்றாவது ரவுண்டில்
தன்னந்தனியாய்
தண்ணி அடிப்பவனின்
போதை போல.
Labels: கவுஜ
கவுஜை எழுதி ரொம்ப நாள் ஆச்சி... அதான் -:)))
(பிடிக்கலனா டெலிட் மாடிகோங்கோ)
ரொம்ப நல்லாருக்கு நர்சிம்.
நல்லா இருக்கு
அனைவருக்கும் மிக்க நன்றி
குறுகத் தரித்த சிறுகதை!
அருமை... அருமை....
பூங்கொத்து!
I thought you will keep your promise that you won't write puthuk kavithai.
:(
But not bad. Try to give something good.
ஆஹா..ரசனையும், அவதானிப்பும் கலந்த அற்புதம்...ஜி! நீங்க கிரேட்..!
கவிதைலேயும் கலக்க ஆரம்பிச்சாச்சா... சூப்பர்.
பதிவாளர்கள் சந்திப்பில்>>>>> எங்கே போயிற்று?
சிறப்பான கவிதை.
//புளியமரம் முழுக்க
பேச்சுகள்
//
:)
//கானல்நீர் தேங்கும்
தார்ச்சாலை//
!
//அழுதழித்த மை போல//
!!
Post a Comment