Thursday, March 11, 2010

பதிவர் சந்திப்பில் நித்யானந்தர்

மெரினா..காந்தி சிலை.. பதிவர் சந்திப்பு..பதிவர்கள் வழக்கம் போல பேசத் துவங்க அங்கே திடீரென ஒரு பரபரப்பு..

ஜ்யோவ் : ஹே..நீங்க..நீ..அட ஆமா..நித்யானந்தர் தானே?

நித்தி : “ஆம் குழந்தைகளே..இன்றைய தேதியில் பதிவுலகம் தான் மிகவும் பவர்ஃபுல் மீடியா என்று கேள்விப்பட்டு இங்கே தஞ்சம் புக வந்தேன். என்னைக் காப்பாற்றுவீர்களா?”

பைத்தியக்காரன் : “ஆமாம்மா, நித்திம்மா, நிச்சயமாக. சர்வ நிச்சயமாக..என்று உரையாடிவிட முடியாது. ஆனாலும் உங்களின் மீதான வன்முறை, மீடியா தன்னை போலீஸாக உருவகப் படுத்திக்கொண்ட பொதுப்புத்தியின் நீட்சி”

லக்கி மெல்லிய குரலில் அதிஷாவிடம் : “இவரு ஃபுல்ஸ்டாப் வைக்காம பேசுறத கேட்டு அவராவே சரண்டர் ஆயிடுவாரு போலிஸ்கிட்ட”

பைத்தியக்காரன் : “அடுத்த மாதம் முதல் ஞாயிறு நாம் ஏன் ஒரு பட்டறை நடத்தக் கூடாது தோழமையான நித்யானந்தரே?”

நித்யானந்தர் : “பட்டறை என்றால்? லெளகீக வார்த்தையா?”

ஜ்யோவ் : “அய்யய்யே..அந்த எழவெல்லாம் இல்ல..இது உங்க எழவப்பத்திச் சொல்றாரு”

பைத்தியக்காரன் : “புரியும்படி உரையாடுகிறேன்”

அதிஷா : “ஹுக்கும்”

பைத்தியக்காரன் : “அதாவது தோழமை நித்தி, எப்படி கேமராவின் கழுகுக் கண்களுக்குச் சிக்காமல் உடல்மொழி இன்பம் காண்பது குறித்தான ஒரு பட்டறை..ஸ்லைட் ஷோ நிச்சயமாக இடம்பெற வேண்டும் என்பது என் அவா”

நித்தியானந்தர் : “நீங்க அவாளா?”

ஜ்யோவ் : “நாசமாப் போச்சு..அவரு ஆசையைச் சொல்றாரு”

நித்தி : “என்னதான் கடற்கரை என்றாலும் ஒரு சிறு ஜன்னலும் அதன் கதவுகளைத் திறந்தவுடன் வரும் காற்றின் சுகமும் அலாதி”

நர்சிம் : “நல்ல்ல்லாத் தொறந்ந்ந்தய்ய்ய்யா கதவ”

கார்க்கி : “இங்க சாளரம் இருக்கிறது..ஹிஹி நாந்தான்..ஆமா அந்த சிடியோட டைரக்டர் யாரு?”

நித்தி : “அதை மறக்கத்தானே இங்கு வந்தேன்..ஏன் குழந்தாய்?”

கார்க்கி : “இல்ல..இயக்குனர் பேரு தெரிஞ்சா, அவர் பேரப் போட்டு வாந்தி, பூந்தின்னு பதிவு போட்டு விடத்தான்”

பின்னால் இருந்து ஒரு குரல்..

“நலமா கார்க்கி?”

திரும்பிப் பார்த்தால் அண்ணாச்சி வடகரை வேலன்..அவரைப் பார்த்ததும் வராத போனை எடுத்த கார்க்கி.. “ஹலோ..ஆமா..ஆமா...” என்று நடக்கத் துவங்குகிறார்.

வடகரை : “முதல்ல ஒரு விசயம்ங்க..அந்த சிடில இருக்குறது நீங்கதானா? அந்த பொண்ணு அவங்கதானா? அது சிடி தானா? நம்ம வீட்ல இருந்தது டிவிதானா? அதை ஒளிபரப்பு செஞ்சது சன் நியூஸ் தானா?”

நித்தியின் முகம் பிரகாசமாகிறது..

நித்தி : “உங்க பேர் சார்?”

வடகரை : வேலன்..வடகரை வேலன்..என்னய நாட்..அதற்குள் குசும்பன் எழுந்து..

குசும்பன் : நித்தி ஸ்வாமிகளே..இந்த சிட்டைல என் பேர எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுங்க..”

நித்தி : “என்ன எழுத வேண்டும்?”

குசும்பன் : “இந்த சிட்டை கொண்டுவரும் நபரிடம் அந்த மேட்டர் பண்ணவும்”

சுரேஷ் கண்ணன் : “அயல் சினிமாக்களில் வந்த விதானங்கள் சில இப்படி இருந்தாலும் இங்கே அடிப்படையே தவறாக இருக்கிறது. சென்ற வாரம் என் பக்கத்துவீட்டு பையன் என்னிடம் சாமியார்னா என்ன அங்கிள் என்று கேட்டபொழுது அவன் மொழிக்குள் புகுந்து, இதெல்லாம் தப்பான மனிதர்களின் கூடாரம்..அதில் சில விசிலடிச்சான் குஞ்சுகள் தம்மின் வாசகப் பரப்பை வேற்று வெளியில் இட்டுச் செல்லும் என்று கூறிய பின் தெளிந்தான்.”

நர்சிம் : “ம்ம்ம்.”

கேபிள் சங்கர் கூட்டத்தில் நோட்டிஸ் பேப்பர்களை விநியோகிக்கிறார் .. அதில்..

நித்திபடம்..ரிவ்யூ

பொதுவாக சினிமா வியாபரத்திற்காக படம் எடுக்கப்படுகிறது. இந்த சிடி படம் எடுத்ததால் வியாபரம் ஆகிவிட்டது. சில கட் ஷாட்கள் ஒண்ட்ர்ஃபுல். சில இடங்களில் வசனங்கள் தெளிவாக இல்லை. அந்த ஆசரமத்தின் ஓனரின் சொந்தக்காரரின் ரஞ்சிதாவின் நித்தியானந்தாவின் சுவரின் ஆங்கிள் சரியாக இல்லை..எடிட்டிங் ஷார்ப்.

நித்தியானந்த சிடி : எ குட் எண்டர்டெய்னர் அண்ட் பியிட்டிஃபுல் சீன்ஸ் வித் ஃப்ரூட்ஸ்.

சுகுமாரன் : சூப்பர்ணா..

கேபிள் : “யோவ் வாய்லயே பின்னூட்டம் போடக்கூடாதுய்ய்யா..”

தண்டோரா : “மிஸ்டர் நித்தி, போறப்ப சைதாப்பேட்டை வழிதானே? நம்ம ஆபிஸ் வாங்க,..”

கார்க்கி : ஒரு நிமிசம் சகா.. நித்தி சகா.. நீங்க கரெக்ட்டாத்தான் இருந்தீங்க..ஆனா சில இலக்கியவாதிங்க உங்கள வேற வழிக்கு கொண்டு போய்ட்டாங்க சாருங்க, ஸாரி பாருங்க.. அதுதான் வினையே”

பைத்தியக்காரன் : “ஏம்மா நித்தி..நீங்க உலக சினிமாக்கள் பார்க்குறதுண்டாம்மா?”

நித்தி : “அதுக்கெல்லாம் நேரமே இல்லையே குழந்தாய்..”

கார்க்கி : “ஆமாமாமா..உங்களுக்கு எப்பிடி நேரம் இருக்கும்?”

தாமிரா @ ஆதி : “இங்க ஒரு விசயம் நான் சொல்லணும்..சொல்லலாமா”

அப்துல்லா : அதான் சொல்லணும்னு சொல்லிட்டே இல்லண்ணே..அப்புறம் என்ன சொல்லலாமா நொல்லலாமா?”

ஆதி : “இல்ல..அந்த சிடி குறித்து தான்..எல்லாமே ஓக்கே..சின்ன வருத்தம்..அதுல திங்கிற ஐட்டம் ஏதாவது காட்டி, குறிப்பா அந்த பெண் செய்த ஒரு பதார்த்தமா இருந்திருந்தா இன்னும் எக்ஸலண்ட்டா இருந்திருக்கும் ரிசல்ட்..பிரபலமா ஆகி இருக்கலாம்..ஹிஹி”

நித்தி : “இதைவிடவா?”

அப்துல்லா :ஏண்ணே நித்தி..ஒத்த சாமியார்தானா இல்ல ரெட்டச்சாமியார் ஸ்கீம் ஏதும் இருக்காண்ணே?”

நித்தி : “வேண்டாம் அன்பரே.. இருக்கும் இடத்திலயே கதவைத் திறந்து காற்றை வாங்கிக்கொண்டிருங்கள்..இங்கே புயல் அல்லவா வீசுகிறது..”

நர்சிம் : நிகழ்காலத்தில் நீங்கள் அப்படிக் கூடியதைத் தான் சங்க காலத்தில் உடன்போக்கு என்று குறிப்பிட்டார்கள்.. அதாவது

முத்துகள உதிர்க்கும் அவன அடிங்கடா என சில குரல்கள்..என்கவுண்ட்டர் செய்துவிடும் ரேஞ்சிற்கு ஒழிக்கிறது. நமனை அஞ்சோம் பார்ட்டி பம்முகிறது.

எங்கிருந்தோ வந்த வெண்பூ..ஸாரி கொஞ்சம் லேட் ஆ.”என்று சொல்ல வந்தவர்..நித்தியானந்தரைப் பார்த்ததும் தனக்கும் பதிவர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாதவர் போல நடையைக் கட்டுகிறார். ஹலோ வெண்பூ..என குரல்கள் கேட்கக் கேட்க..நடையின் வேகம் அதிகரித்து மறைகிறார்.

கேவிஆர் ராஜா : “ஸ்வாமி..உங்களுக்கு BuZZன்னா என்னான்னு தெரியுமா?”

நித்தி : “வாழ்க்கையே பஸ் பயணம் தானே குழந்தாய்”

கேவிஆர் : “அப்ப வாங்க அங்க கும்முவோம், பை த வே..நீங்க பிரபல சாமியார் ஆக சில வழிகள் இருக்கு சொல்லவா?”

நித்தி : “அய்யா ராசா..பிரபலமானதை எப்படி மறக்கடிக்க ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க, ஆமாம் யார் இந்தக் குழந்தை? என்னை விட தேஜஸாகவும், இளமையாகவும் இருக்கிறாரே”

அனுஜன்யா : “அனுஜன்யா என் நாமம்..ஏய்..ச்சே..என் பேரு அனுஜன்யாம்மா,”

நித்தி : “பெயரைப் பார்த்தால் பெரிய கவிஞர் போலத் தெரிகிறதே..ம்ம்”


உடனே அனுஜன்யா நர்சிம்மிடம் மெதுவான குரலில், “ஏய் பெரிய ஞானி மாதிரி இருக்கேப்பா இவர் சொல்றது..கரெக்ட்டா பெரிய கவிஞர்னு சொல்லிட்டார்மா..சரி சரி விட்றா மொறைக்காதே”

அனுஜன்யா நித்யானந்திரிடம்..

பட்டாம்பூச்சி ஒரு முறை
சுற்றியும் சுற்றா ஒற்றை உலகின்
ஆதிப்ரதாப சேர்க்கையின்
சில் வண்டுகள் செவ்வந்தியூடான
பிளாஸ்டிக் புன்னகைகள்
கொண்டவளின் கைங்கர்ய
யாதோருவனோவளோ
என்றாகின பொழுதுகள்

கையை வான் நோக்கி உயர்த்தி, சாஸ்டாங்கமாக காலில் விழுகிறார் நித்தி..

பதறி ஒதுங்கிய அனுஜன்யா.. “இன்னும் ரெண்டு வரி இருக்கும்மா..ச்சே..சரி விடு.இட்ஸ்.. ஓக்கே..”

முரளி கண்ணன் : விடுங்க அனுஜன்யா, 1975ல சில படங்கள்ல்ல இந்த மாதிரி காட்சிகள் அதுக்கு அப்புறம் 80கள்ல படுக்கையறை காட்சிகள் அதிகம் வந்தாலும் இது போலத்தான் லைட்டை அமத்துவது போல..அப்புறம் கிராமத்து சைடுல இருந்து வந்த இயக்குனர்கள் 90கள்ல இது மாதிரி காட்சிகள் எடுத்து இருக்காங்க, இருந்தாலும் 2010 லக்கி ப்ரைஸ்ஸ்ஸ்.

புருனோ : “இன்னும் எத்தன ஆயிரம் சிடி இந்த மாதிரி வந்தாலும் மிஸ்டர் நித்யா, நீங்க ஏர் ஆர் ரகுமான் மாதிரியோ டெண்டுல்கர் மாதிரியோ புகழ் பெற முடியாது..புரிஞ்சிட்டா?”

பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நித்தி..பார்வையை கூராக்குகிறார்.. அங்கே யாரோ ஒரு பெண் நடைபயிற்சி செய்து கொண்டு இருக்கிறார்.

நித்தி : “பாவம் அந்தப் பெண்ணிற்கு ஏதோ பிரச்சனை நான் யோகா சொல்லிக்கொடுத்தால் உடனே சரியாகிவிடும்...”

அவன அடிங்கடாஆஆஆஆ...


பரிசல் : “நான் ஏதாவது கருத்து சொல்லலாம்ணு வர்ரங்காட்டியும் எல்லாமே முடிஞ்சுருதுங்கண்ணா.”
..

62 comments:

பைத்தியக்காரன் said...

:) கொலை வெறி... தப்புத் தப்பு நித்தியா வெறி :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

லேகா said...

Narsim....

Chanceless!!! U Rock Man!! :-)))))

Haa haa!! Had a hearty laugh !!

பிள்ளையாண்டான் said...

அண்ணே, நல்லா கலக்குனீங்க போங்க!

D.R.Ashok said...

இந்த பதிவர் சந்திப்பிலும் என் பெயரை குறிப்பிடாமல் விட்டது நர்சிமின் சூழ்ச்சிதான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ரொம்ப நாள் கழிச்சு இதுமாதிரி ... சூப்பர்.. கேபிள் பார்ட்ட இன்னும் அதிகம் பண்ணியிருக்கலாம்... :)))

மணிகண்டன் said...

Cool.

குரு said...

கேபிள் : “யோவ் வாய்லயே பின்னூட்டம் போடக்கூடாதுய்ய்யா..”

Very nice :)

கார்க்கி said...

பாவம்ண்ணே எங்க தல அனுஜன்யா.. அவர மட்டுமாவது விட்டுருக்கலாம் :))

ராம்ஜி_யாஹூ said...

ரஞ்சிதா கலந்து கொள்ளும் பதிவர் சந்திப்பை நாங்க ஈரோட்ல டோண்டு சார் தலைமையில், வால்பையன் முன்னிலையில் நடத்திக்கிறோம்.

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

:)

:(

( neengalum maaa!!??)

ஆதிமூலகிருஷ்ணன் said...

kalakkal. Cable, Paithyakaran, Parisal, Venpu parts are class. :-))

அதிஷா said...

உங்களையெல்லாம் ஆயிரம் நித்தியானந்தர் வந்தாலும் திருத்த முடியாது ஒரே பப்பி ஷேம்! ச்சே

Mohan said...

'நித்யா'னந்தர்க்கு அவருடைய பெயரே ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன். ரொம்ப நல்லா இருந்தது நர்சிம்!

padma said...

nice

மன்னார்குடி said...

மரண மொக்கை.

சங்கர் said...

கடைசியா சாருவும் வந்திருந்தாருனா நிறைவா இருந்திருக்கும் :)

தண்டோரா ...... said...

வடை போச்சே

அதிஷா said...

வடை போச்சே///

@தண்டோரா

நடுவில் ஓட்டையுள்ள ஆமைவடையா அல்லது பருப்புவடையா என்பதை தெளிவுபடுத்தவும்

Bharathi said...

ROFL :):)

வானம்பாடிகள் said...

:)). aniyayam:))

வால்பையன் said...

//ராம்ஜி_யாஹூ said...

ரஞ்சிதா கலந்து கொள்ளும் பதிவர் சந்திப்பை நாங்க ஈரோட்ல டோண்டு சார் தலைமையில், வால்பையன் முன்னிலையில் நடத்திக்கிறோம்.//

நடத்திருவோம்!

பிரேமா மகள் said...

ha ha ah ah

அனுஜன்யா said...

இந்த இடுகையில் கண்ட கவிதை ரொம்ப நல்லா இருக்கே. ஒரு பெரிய கவிஞரின் தாக்கம் தெரிகிறது.

ஒருத்தன் உண்மையிலேயே இளமையாகவும், தேஜசாகவும், கூடவே பெரிய கவிஞனாகவும் இருந்தா.....இந்த உலகம் எவ்வளவு பொறாமைப் படுகிறது.

Good one Narsim. I liked Siva, velan and parisal's part.

அனுஜன்யா

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ம்.. குசும்பன் டயலாக் அக்மார்க் குசும்பனேதான்..!

அறிவன்#11802717200764379909 said...

குசும்பன்,அதிஷா,லக்கி,அனுஜன்யா பகுதிகள் கலக்கல்.

நல்ல ஃப்ளோ..

உங்க போர்ஷனை இன்னும் கொஞ்சம் கூர்மைப்படுத்தி இருக்கலாம்..

chance less post & timely one.

குசும்பன் said...

பைத்தியக்காரன் அண்ணாச்சி டோட்டல் டேமேஜ்.

செம கலக்கல்:)

குசும்பன் said...

//“பட்டறை என்றால்? //

இப்படி பப்ளிக்கா கேட்டா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றனவே:))))

குசும்பன் said...

//ஒருத்தன் உண்மையிலேயே இளமையாகவும், தேஜசாகவும், கூடவே பெரிய கவிஞனாகவும் இருந்தா.....இந்த உலகம் எவ்வளவு பொறாமைப் படுகிறது.//

யாரை சொல்றாரு இவரு? நித்தியை போய் இப்படி பிகரை வர்ணிப்பது போல இப்படி பேசுறாரு... கவிஞரே ஆர் யூ ஓக்கே?:))))

செல்வேந்திரன் said...

Joyful reading!

காவேரி கணேஷ் said...

நித்தியின் நெஞ்சாங்கூட்டு காதலி ரஞ்சிதாவை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள அழைப்பு அளிக்காத நர்சிமை கண்டிக்கிறேன்.

♠ ராஜு ♠ said...

கேபிளின் “வியாபரம்” ரசித்தேன்.
செம்ம்ம ஷார்ப்புண்ணே நீங்க..!

Mahesh said...

ஏண்ணே சாநியைக் கூப்படலையா சந்திப்புக்கு? வெத்திலை பாக்கு வெச்சு கூப்டாத்தான் வருவேன்னதெல்லாம் அப்ப.... இப்ப முக்குக்கு முக்கு மூலைக்கு மூலை நின்னு புலம்புதாரு :")))

//அனுஜன்யா said...

இந்த இடுகையில் கண்ட கவிதை ரொம்ப நல்லா இருக்கே. ஒரு பெரிய கவிஞரின் தாக்கம் தெரிகிறது.

ஒருத்தன் உண்மையிலேயே இளமையாகவும், தேஜசாகவும், கூடவே பெரிய கவிஞனாகவும் இருந்தா.....இந்த உலகம் எவ்வளவு பொறாமைப் படுகிறது. //

க்க்க்கங்ண்ணே.....

ஜெட்லி said...

வடகரை வேலன் அண்ணே பாவம்....

தியாவின் பேனா said...

cool.....cool

yogesh said...

நல்ல நகைச்சுவை பதிவு நர்ஸிம்.

பதிவுலக நண்பர்கள் கடற்கரை மணலில் உரையாடுகிற காட்சி, என் கண்முன் நிழலாடுகிறது.

அன்புடன்,
யோகேஸ்வரன்.

* சுந்தரராஜன் * said...

:)

வால்பையன் said...

//ஏண்ணே சாநியைக் கூப்படலையா சந்திப்புக்கு? //

ரசினியை கூப்பிடிங்களான்னு கேக்குறதுக்கா!?

Subbaraman said...

சூப்பர்..

நாய்க்குட்டி மனசு said...

எல்லாம் சரி தான், பதிவர் சந்திப்பு போட்டோ ஒண்ணு போட்டு இருக்கலாமே, தடி யோட இருக்கிற காந்தி சிலை பக்கத்தில. அவரு ரெண்டு போட்டு இருப்பாரு "நித்தி"க்கும் உங்களுக்கும்.
அதை வேற ஏதாவது லின்க்ல பார்க்கணுமா?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கலக்கல் தலைவரே...

தர்ஷன் said...

// குசும்பன் : “இந்த சிட்டை கொண்டுவரும் நபரிடம் அந்த மேட்டர் பண்ணவும்”//

இது குசும்பனே எழுதியது போல இருக்கு

//முத்துகள உதிர்க்கும் அவன அடிங்கடா என சில குரல்கள்..என்கவுண்ட்டர் செய்துவிடும் ரேஞ்சிற்கு ஒழிக்கிறது//

அங்கே நீங்கள் இதற்கு பதில் சொல்லவே இல்லையே

பா.ராஜாராம் said...

குசும்பனை,வாசித்ததும் வாய் விட்டு சிரித்தேன்.

வித்யா said...

ROTFL:))

வெண்பூ said...

கலக்கலோ கலக்கல்... அதிலும் குசும்பன், அனுஜன்யா மேட்டரும், கடைசியில் பரிசலும் சூப்பர்.. செம டைமிங் பதிவு நர்சிம்.. ரசிச்சி சிரிச்சேன்..

அத்திரி said...

//அண்ணாச்சி வடகரை வேலன்..அவரைப் பார்த்ததும் வராத போனை எடுத்த கார்க்கி.. “ஹலோ..ஆமா..ஆமா...” என்று நடக்கத் துவங்குகிறார்.
//

ஹைய்யோ ஹைய்யோ.............சக அடிச்சி பட்டய கிளப்பிட்டீங்க

Vidhoosh said...

ROFL :))

ரிஷி said...

very nice...

மோகன் குமார் said...

குசும்பன் பார்ட் கலக்கல்!! என்னை ஏன் ஆட்டத்துக்கு சேத்துக்களை?

Rajeswari said...

நடத்துங்க..நடத்துங்க..

ராஜன் said...

சூப்பர்ங்க ! அழகான சொற்ப பிரயோகங்கள் ! கடைசி வரிகளில் நீர் முட்டியது ..... கண்களில்


அற்புதமான கவிதை விகடனுக்கு அனுப்பிருங்க

DHAYANITHY MALAYALAM said...

Narsim,

the post is very funny..
I enjoyed through out all the dialogues.

another Nice one..

Thanks

அமுதா கிருஷ்ணா said...

எல்லாம் காத்து படுத்துற பாடு...

பரிதி நிலவன் said...

நித்யானந்தரிடம் சாருவின் புலம்பல்கள்

http://vanakkamnanbaa.blogspot.com/2010/03/blog-post_11.html

GHOST said...

கலக்கல் ஹா.ஹா.ஹா.

vanila said...

அருமையான புனைவு.. எப்படி இப்படியெல்லாம் ...

"உழவன்" "Uzhavan" said...

அட்டகாசம் வழமைபோல்.. :-)

BALA said...

//கேபிள் : “யோவ் வாய்லயே பின்னூட்டம் போடக்கூடாதுய்ய்யா..”

Very nice :)//

Repeatu...

Sundar சுந்தர் said...

:)

KVR said...

//திரும்பிப் பார்த்தால் அண்ணாச்சி வடகரை வேலன்..அவரைப் பார்த்ததும் வராத போனை எடுத்த கார்க்கி.. “ஹலோ..ஆமா..ஆமா...” என்று நடக்கத் துவங்குகிறார்.//

:-)))))))))))))))

கும்க்கி said...

:--))

Mugilan said...

//பட்டாம்பூச்சி ஒரு முறை
சுற்றியும் சுற்றா ஒற்றை உலகின்
ஆதிப்ரதாப சேர்க்கையின்
சில் வண்டுகள் செவ்வந்தியூடான
பிளாஸ்டிக் புன்னகைகள்
கொண்டவளின் கைங்கர்ய
யாதோருவனோவளோ
என்றாகின பொழுதுகள்//

:-))))

முரளிகண்ணன் said...

இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்

kuppai Thoti said...

நல்ல பதிவு. சிரித்து சிரித்து படித்து மகிழ்தேன்.