என்’ணங்கள் 26/04/2010

சசி தரூர்.

இவரைப்பற்றிய அறிமுகங்களும், அமைச்சரானதும் தொலைக்காட்சியில் இவர் அளித்த பேட்டிகளையும் பார்த்த பொழுது, மனிதர் ‘துறுதுறு’ என்று இருக்கிறாரே என்ற நினைப்பும், பின்னர் நேரு,மாட்டுக்கொட்டகை என ஆள், இந்தியக் கலாச்சாரங்களை ’டமால்டுமீல்’ என அடி பின்னுகிறாரே என்ற நினைப்பும் இருந்து கொண்டே இருந்தது. ட்விட்டரில் லலித் மோடி சசிதரூரின் தோழிஅப்டேட்ஸால்( கார்க்கி இல்லைப்பா) துறுதுறு, துருவாகவும், டமால்டுமீல் டப்டுப்பாகவும் போய் விட்டது.

லலித் மோடி :

பயங்கர கேடி. இந்திய அரசை எதிர்த்து மிகக் குறைந்த கால அவகாசத்தில் சென்ற வருட ஐபிஎல்லை தென் ஆப்பிரிக்காவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பொழுதே சுதாரித்திருக்க வேண்டும் பிசிசிஐ. தும்பும் வாலும் போன நிலையில் கிரிக்கெட் நிர்வாகம் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. ‘ராஜினாமா எல்லாம் கிடையாது, முடிஞ்சா பார்த்துக்கோங்க’ என்கிறார் லலித் மோடி. சஸ்பெண்ட்டோ டிஸ்மிஸ்ஸோ செய்திருக்க வேண்டும். செய்வார்கள்.

பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். மேட்சுகளையும்,பேச்சுகளையும். களையப்படும் ஊழல் என்ற நம்பிக்கை மட்டுமே கலைந்து போகிறது.

கேதன் தேசாய்:

ஊழல் களையப்படுவது என்ற நினைப்பில் லோடு லோடாக மண்ணைப் போட்டவர் திருவாளர் கேதன் தேசாய்.

1800 கோடி ரூபாய் பறிமுதல் செய்திருக்கிறதாம் சிபிஐ. தவிர, மூட்டை மூட்டையாக தங்கம். இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர்தான் கேதன் தேசாய். அங்கீகாரம் தர கோடிகள், தவிர, ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக 5 சீட்டுகள் என அந்த வழியில் ஆண்டுவருமானம் 200 கோடி. இதில் கொடுமை என்னவென்றால், 2001ம் ஆண்டில் லஞ்சப் புகாரில் சிக்கியவர்தான் இந்த சீமான். இவர் எப்படி தலைவர் ஆனார் என்ற கேள்வி எழும் பொழுதே எவ்வளவு கொடுத்து வாங்கி இருப்பார் இந்தப் பதவியை என்ற பதிலும் எழுகிறது.

மனித உயிர்களோடு தொடர்புடைய மருத்துவத்துறையில் இப்படிப்பட்ட ஊழல்கள் நடந்தால் உயிரை மயிராகக் கூட மதிக்கவில்லை இவர்கள் என்பது மட்டும் புரிகிறது. புரிந்து?

நித்யானந்தரை ஐபிஎல்லும், ஐபிஎல்லை சசிதரூரும், சசி தரூரை லலித் மோடியும், லலித் மோடியை கேதன் தேசாயும் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் தலைப்புச் செய்திகளில். செய்திக்கான காரணம் மட்டும் மாறுவதேயில்லை- ஊழல்.

மீடியாக்களுக்கு தீனி என்றால், குமுதம் மீடியாவே தீனியானதும் சென்ற வாரத்தை ஊழல் வாரம்ம் என்று நிரூபித்துக்கொண்டது. வெயிலிலும் வெயிலிலும்(மழை எங்கய்யா?) அலைந்து, மிகக் குறைந்த சம்பளத்தோடு ஊழல் முதல் சினிமா வரை பத்திரிகைகளுக்கு செய்தி சேகரிக்கும் நிருபர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தானிருந்திருக்கும் குமுதம் எம்.டி, வரதராஜன் மீதான ஊழல் புகார். மீடியா செய்தி என்பதால் அதிகமாக மீடியாவில் வராமல் போனதுதான் தொழில் தர்மம்.

*******

நகைச்சுவையுணர்வு இருக்கும் இடத்தில்தான் மற்ற உணர்வுகளும்(கோபமும்!) அதிகமாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் விதமாக குசும்பனின் இந்தக் கோபம் மிகப் பிடித்திருந்தது. அந்தப் பதிவில் மருத்துவர் புருனோவின் விளக்கங்களும் அறியப்பட வேண்டியவை. பகிர்விற்கு நன்றி குசும்பன்.

********
ஒரு வழியாக ஐபிஎல் இறுதி ஆட்டம் முடிந்துவிட்டது. நிறைய ஆடிவிட்டார்கள். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும். அத்தனை ஆட்டங்களிலும் எனக்குப் பிடித்தது, சென்னை-ராஜஸ்தான் ரன்ஃபீஸ்ட். 40 ஓவர்களில் 400 ரன்களுக்கும் மேல் குவிக்கப்பட்ட “ஹிட் எவ்ரி பால்” என்ற T-20 சித்தாந்தப் படி நடந்த ஆட்டம் அது.

இறுதி ஆட்டம் சுவாரஸ்யமாக இருந்தது. என்றாலும் நடந்த கூத்துகளைப் பார்த்ததனால், ஆட்டம் முன்பே முடிவு செய்திருப்பார்களோ என்ற தேவையில்லாத சிந்தனை வந்து போகவில்லை, இருந்துகொண்டது.

18 பந்தில் 55 ரன்கள் தேவை என்ற நிலையில் உள்ளே வந்த மும்பையின் போலார்டு,(ம.மா) விட்டார் 5 பந்துகளில் 22 ரன்கள். தோனியின் கண்கள் மெதுவாக ஸ்ரீனிவாசனைத் தேடியது போலவே இருந்தது. அந்தத் தேடலின் பொருள் எனக்கு இப்படிப்பட்டது. “என்னய்யா காசு கொடுத்து வாங்கியாச்சு கப்புன்னு சொன்ன, அடிக்கிறான்”

கேலரியில் இருந்து ஸ்ரீனிவாசன் : “ச்சும்மா உல்லலாய்க்கு. அடுத்த ஓவர்ல அவுட் ஆகிடுவான்”

அப்படித்தான் ஆனது. அரையிறுதியில் விடப்பட்ட கேட்சுகளின் தன்மையைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. அடுத்த வருடம் இதெல்லாம் இல்லாமல் நடக்க வேண்டும். எது எப்படிப் போனாலும் பார்க்கப் போகிறோம். வார்த்தை விளையாட்டுகளோடு இரண்டு வரிகளை எழுதித்தள்ளப் போகிறோம். ‘ரோம் நோக்கி’ என்று சும்மாவா சொன்னார்கள்.

வாழ்த்துகள் சென்னை சூப்பர் கிங்ஸ்.

**********
அங்கே எங்க மதுரை குலுங்கிக்கொண்டிருக்கிறது. இங்கே பொருளீட்டும் நிமித்தம் பொந்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் வெறுப்பைத் தருகிறது. சித்திரைத் திருவிழாவின் பொழுது மதுரையில் இல்லாமல் இருப்பது இருந்தும் இல்லாமல் போவது போலத்தான். எது எப்படிப் போனாலும் 28ம் தேதி போகவேண்டும் ஊருக்கு.

சென்ற வருடம் மதுரை குலுங்கியதைப் பற்றி படிக்க இந்தப் பதிவைப் பார்க்கவும்.

******

நெஞ்சொடு கிளத்தல் :

பிரிவு பற்றி நிறைய பாடல்கள் பார்த்திருக்கிறோம். ‘உன்ன இப்பவே பார்க்கணும் போல இருக்கு’ குறுஞ்செய்திகளும் நிறைய்ய என்றாலும் இந்தக் குறள்.. அவ்வளவு அற்புதப் பொருளோடு எக்காலமும் பொருந்திப் போகிறது.

காதலன் பிரிவால் வாடும் காதலி, தன் நெஞ்சிடம் சொல்கிறாள் இப்படி.. “நெஞ்சமே, நீ அவரிடம் போகும்பொழுது, இக் கண்களையும் அழைத்துப் போவாயாக, அவரைக் காணவேண்டும் என இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.”

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காண லுற்று.


‘சூப்பர்’ என்று உச்சரிக்கத் தோன்றுகிறதா?. தொலைவில் உள்ள காதலனை நிச்சயம் நெஞ்சம் தேடிச் செல்லும்..எனும் நிகழ்வில், கண்களை உடன் அழைத்துச்செல் என்ற சிந்தனையை என்னவென்று சொல்வது..வள்ளுவரின் காதல் மீதான காதல் மீது காதல் ஏற்படுகிறது.

******

35 comments:

கே.ஆர்.பி.செந்தில் April 26, 2010 at 8:35 AM  

?/என்னய்யா காசு கொடுத்து வாங்கியாச்சு கப்புன்னு சொன்ன, அடிக்கிறான்”

கேலரியில் இருந்து ஸ்ரீனிவாசன் : “ச்சும்மா உல்லலாய்க்கு. அடுத்த ஓவர்ல அவுட் ஆகிடுவான்”//

mee too narsim

முகிலன் April 26, 2010 at 9:41 AM  

ஐ.பி.எல்-போட்டிகளில் மேட்ச் ஃபிக்ஸிங் இருக்கலாம் என்ற சந்தேகம் உங்களைப் போலவே எனக்கும் இருக்கிறது. ஆனால் அதற்கு உதாரணங்களாக நீங்கள் சொல்பவை சிரிப்பூட்டுபவையாக இருக்கின்றனவே தவிர வீரர்களின் திறமையை கேலி செய்பவையாகவே உள்ளன...

1. நீங்கள் பஞ்சாபுக்கு எதிராக கடைசி ஓவரில் 26 ரன் அடித்து ஜெயித்ததைச் சொல்லி இருக்கலாம்.
2. போலார்டை வெறும் மூன்று ஓவர் இருக்கும்போது இறக்கிவிட்டதைச் சொல்லியிருக்கலாம்.
3. திவாரி, ராயுடு போன்ற இளம் வீரர்கள் கலக்கிக் கொண்டிருக்கும்போது ஹர்பஜனை இறக்கி விட்டதைச் சொல்லியிருக்கலாம்.

இதெல்லாம் இருக்க,
//18 பந்தில் 55 ரன்கள் தேவை என்ற நிலையில் உள்ளே வந்த மும்பையின் போலார்டு,(ம.மா) விட்டார் 5 பந்துகளில் 22 ரன்கள். தோனியின் கண்கள் மெதுவாக ஸ்ரீனிவாசனைத் தேடியது போலவே இருந்தது. அந்தத் தேடலின் பொருள் எனக்கு இப்படிப்பட்டது. “என்னய்யா காசு கொடுத்து வாங்கியாச்சு கப்புன்னு சொன்ன, அடிக்கிறான்”

கேலரியில் இருந்து ஸ்ரீனிவாசன் : “ச்சும்மா உல்லலாய்க்கு. அடுத்த ஓவர்ல அவுட் ஆகிடுவான்”
//

அன்-ஆர்த்தடாக்ஸாக மிட்-ஆஃபை பவுலருக்கு கிட்டத்தட்ட பின்னால் நிறுத்திய தோனியின் கேப்டன்சியை மெச்சாமல் கேலி செய்தது உங்கள் கிரிக்கெட் அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஏற்கனவே சச்சின் சென்னை வெயில் தாங்காமல் வெளியே போனதைக் கேலி செய்தீர்கள். இப்போது இது.

இந்த இரு ச் சம்பவங்களும் அவற்றுக்கு எதிர் பின்னூட்டங்கள் வரும்போது பதில் சொல்லாமல் நழுவுவதும் உங்கள் மீது எனக்கிருக்கும் நல்லெண்ணத்தைக் குறைக்கின்றது நர்சிம்

முகிலன் April 26, 2010 at 9:50 AM  

சசி தரூர் - கேட்டில் க்ளாஸ் என்று அழைத்த போதே இந்தாள் மேல் எனக்கு இருந்த அத்தனை விதமான எண்ணங்களும் அடிபட்டுப்போனது

லலித் மோடி - இந்தாளை முதல் ஐ.பி.எல்-லின் போது பார்த்தபோதே பிடிக்கவில்லை.

கேகன் தேசாய் - இந்தாள் லஞ்சம் வாங்கிக் கொண்டு போட்ட அப்பாயின்மெண்டுகள் அத்தனையயும் ஆராய வேண்டும். எத்தனை போலிகள் திரிகிறார்களோ பயமாயிருக்கிறது

இரசிகை April 26, 2010 at 9:53 AM  

//
நித்யானந்தரை ஐபிஎல்லும், ஐபிஎல்லை சசிதரூரும், சசி தரூரை லலித் மோடியும், லலித் மோடியை கேதன் தேசாயும் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் தலைப்புச் செய்திகளில். செய்திக்கான காரணம் மட்டும் மாறுவதேயில்லை- ஊழல்.
//


:(

naanum ithey polaththaan nonthukonden..kaduduppaanen..verenna seiyamudiyum:(

வடகரை வேலன் April 26, 2010 at 10:04 AM  

//கேலரியில் இருந்து ஸ்ரீனிவாசன் : “ச்சும்மா உல்லலாய்க்கு. அடுத்த ஓவர்ல அவுட் ஆகிடுவான்”//

ட்விட்டரிலும் இதுதான் ஹாட் டாபிக்

இனியாள் April 26, 2010 at 10:05 AM  

குறளும் விழக்கமும் அருமை.

Maduraimalli April 26, 2010 at 10:05 AM  

Madurai'la engae narsim?

மங்குனி அமைச்சர் April 26, 2010 at 10:21 AM  

//1800 கோடி ரூபாய் பறிமுதல் செய்திருக்கிறதாம் சிபிஐ. தவிர, மூட்டை மூட்டையாக தங்கம்///


1800 கோடிக்கு எத்துன சைபர் சார் வரும்

நர்சிம் April 26, 2010 at 10:28 AM  

//இந்த இரு ச் சம்பவங்களும் அவற்றுக்கு எதிர் பின்னூட்டங்கள் வரும்போது பதில் சொல்லாமல் நழுவுவதும் உங்கள் மீது எனக்கிருக்கும் நல்லெண்ணத்தைக் குறைக்கின்றது நர்சிம்//

என்ன ஆச்சு முகிலன்? நான் பதில் சொல்வதை விட நிகழ்வுகள் பதில்களாக நடந்தேறிக்கொண்டிருக்கின்றனவே.

கிரிக்கெட் பற்றி எனக்கு அறிவு இருப்பதாக ஒருபோதும் சொல்லிக்கொண்டதில்லை..

டெண்டுல்கர் விவகாரம்: மோடியின் கட்டாயத்தில் தான் வெளியேறினார் என்று செய்திகள் நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும், வந்த செய்திகளும் கோடிகளில் புரண்ட வாக்கியங்களும் உறுதிபடுத்துகின்றனவா இல்லையா.. கீழே இருந்த சென்னை கப் வாங்கி இருக்கிறது எனும் பொழுது எங்கு எப்பொழுது யார் தீர்மானித்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லையா?

அரையிறுதியில் கல்லியில் ஹேடைன் அடித்த பந்த காட்ச் பிடிக்க தவறவிட்டாலும் பரவாயில்லை..தட்டி விடப்பட்டது பாஸ். முதல் இரண்டு ஓவரில் மூன்று கேட்சுகள் தவற/தட்டி விடப்பட்டவை.

டெண்டுல்கரை எனக்கும் பிடிக்கும்.ஆனால் வந்த பின்னூட்டங்கள் வேறு திசையில் சென்றதால், செய்தித்தாள்களில் பதில் சொல்லும் என்று விட்டுவிட்டேன்.

அப்புறம்..போலார்டு அவுட் ஆனது..ஆம் ஆகச் சிறந்த கேப்டன்ஷிப். அந்த இடத்தில் ஃபீல்டரை நிறுத்தியதில்லை. நல்ல கேப்டன் தோனி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

அது சட்டயருக்கு எழுதியது. சட்டயர் என்று புரியும்படி எழுத இன்னும் என் மொழி பயிற்சி பெறவில்லை என்பதையே காட்டுகிறது. பயில்வேன்.

நர்சிம் April 26, 2010 at 10:34 AM  

@முகிலன் : csk முதல் ஆட்டம் முதல் இறுதி வரையிலான ஒரு பயணம் குறித்து எழுதுங்கள் தல..நான் எழுதலாம் என்று இருக்கிறேன். (ஊழல் தவிர்த்து, மைதானத்தில் நடந்தவைகளை மட்டும் வைத்து)

ஈரோடு கதிர் April 26, 2010 at 10:43 AM  

//அடுத்த வருடம் இதெல்லாம் இல்லாமல் நடக்க வேண்டும்.//

அய்ய்ய்ய்யோ.... அய்யோ!!!!

மாதேவி April 26, 2010 at 10:45 AM  

"சென்ற வருடம் மதுரை"
நேரிடையாகப் பார்த்தது போன்ற உணர்வு.

T.V.ராதாகிருஷ்ணன் April 26, 2010 at 11:08 AM  

வழக்கம்போல அருமை

ஆதிமூலகிருஷ்ணன் April 26, 2010 at 11:13 AM  

சிறப்பான பார்வை. ஊழல் ஊழல்னும் சொல்லிப்பீங்க.. மேட்சும் தவறாம பாத்துப்பீங்கல்ல..

ஊழல்னால இல்ல.. எனக்கு சும்மாவே கிரிக்கெட்னாலே கடுப்பாவுது.

அன்புடன்-மணிகண்டன் April 26, 2010 at 11:35 AM  

//
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காண லுற்று.
//
DOUBLE சூப்பர்..

அன்புடன்-மணிகண்டன் April 26, 2010 at 11:36 AM  

//
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காண லுற்று.
//

DOUBLE சூப்பர்..

ர‌கு April 26, 2010 at 12:12 PM  

கிரிக்கெட்ல‌ மேட்ச்ஃபிக்ஸிங் என்ப‌து பாய‌ச‌ம் மாதிரி. ஒவ்வொரு நாளும் (மேட்சிலும்) இருக்காது. ஆனா முக்கிய‌மான‌ நாளில் (மேட்சில்) க‌ண்டிப்பாக‌ இருக்கும். இது தெரிஞ்சும் பார்க்க‌த்தானே செய்றோம்.

முகில‌ன் சொன்ன‌துபோல் இந்த‌ மேட்ச்ஃபிக்ஸிங் கார‌ண‌த்தால், ஒருவ‌ர் ந‌ன்றாக‌ ஆடினால் கூட‌ ச‌ந்தேக‌க் க‌ண்ணோட்ட‌த்துட‌ன் பார்ப்ப‌து வேண்டாமே ந‌ர்சிம். KXIPக்கு எதிரான‌ மேட்ச் த‌விர்த்து, பேட்டிங்கில் சொத‌ப்பினாலும் கேப்ட‌ன்ஸியில் தோனி இன்னும் அச‌த்திக்கொண்டுதான் இருக்கிறார்.

குசும்பன் April 26, 2010 at 12:13 PM  

லலித் மோடி பற்றி-- எப்படி பாஸ் தனி ஜெட் வெச்சிருப்பது,கப்பல் வெச்சிருப்பது எல்லாம் இப்பதான் எல்லாம் மீடியாவுக்கு தெரியுது.

சரத்&ஜெட்லி விவகாரம் சூடுபிடித்ததும்,டெலிபோன் ஒட்டுகேட்பு விவகாரம் வந்துட்டு, எனக்கு என்னமோ IPL ஊழலை அமுக்கவே இந்த ஸ்டெண்ட் என்று தோன்றுகிறது.
***************
//இடத்தில்தான் மற்ற உணர்வுகளும்(கோபமும்!) //

நல்லவேளை அடைப்புகுறிக்குள் குறிப்பிட்டீர்கள் :)))

க.பாலாசி April 26, 2010 at 12:36 PM  

//களையப்படும் ஊழல் என்ற நம்பிக்கை மட்டுமே கலைந்து போகிறது.//

ம்ம்ம்.... :-(

காவேரி கணேஷ் April 26, 2010 at 12:46 PM  

இங்கே பொருளீட்டும் நிமித்தம் பொந்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் வெறுப்பைத் தருகிறது.

எனக்கும் அதே வெறுமை தான்.

அதுவும் உச்சி வெயில்ல , மண்டைக்குள்ளே புகுந்து போகும் வெப்பத்தில் சாமிய பார்க்க போகும் பொழுது கள்ளழகரின் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தான்னு சொல்லி தண்ணீரை பீச்சி அடிக்கும் பொழுது உடலில் சிலிர்ப்பு, குளுமை பரவுமே அது பரவசம்.

யுவகிருஷ்ணா April 26, 2010 at 12:50 PM  

நல்ல பதிவு. நன்றி பத்ரி.

நாய்க்குட்டி மனசு April 26, 2010 at 1:21 PM  

நித்யானந்தரை ஐபிஎல்லும், ஐபிஎல்லை சசிதரூரும், சசி தரூரை லலித் மோடியும், லலித் மோடியை கேதன் தேசாயும் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் தலைப்புச் செய்திகளில். செய்திக்கான காரணம் மட்டும் மாறுவதேயில்லை- ஊழல்.//

இந்தியாவின் மாற்ற முடியாத தலை எழுத்து இது. ஒரு பட்டினி கிடக்கும் இந்தியன் இந்த 1800 கோடி ஊழலைப் பார்க்கும் போது என்ன செய்வான். ஒரு தீவிரவாதியாக மாறுவான். இது வரை எந்த ஊழல் கதையாது தண்டனையோடு முடிந்திருக்கிறதா?

நேசன்..., April 26, 2010 at 2:49 PM  

ஆமா சகா!....வசந்த் டிவியில நேரலை பாக்கும்போது மதுரைக்குப் போகணும் போலத் தான் இருக்கு!......என்ன பண்ண?.....ஒரே கூட்டம்ப்பா...பயங்கர வெயில் வேற!..ன்னு சொல்லி லேசா சமாதானப்படுத்திக்கிறேன்!...

செ.சரவணக்குமார் April 26, 2010 at 3:09 PM  

சிக்ஸர் நர்சிம்.

மோகன் குமார் April 26, 2010 at 4:12 PM  

நல்லா கிளப்புரீங்கயா பீதியை

KVR April 26, 2010 at 4:44 PM  

// கீழே இருந்த சென்னை கப் வாங்கி இருக்கிறது எனும் பொழுது எங்கு எப்பொழுது யார் தீர்மானித்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லையா?//

சென்னை புள்ளிகள் கணக்கில் கீழே இருந்தபோதும் நெட் ரன்ரேட்டில் ஒரு கண்ணை வைத்துக்கொண்டே தான் இருந்தது. சென்னை இவ்வளவு தூரம் வந்தமைக்குக் காரணம் தோனியின் கூல் கேப்டன்ஸி என்பதை யாருமே மறக்க முடியாது. டெண்டுல்கருக்கு சப்போர்ட்டாக நின்று ஆட வேண்டிய நேரத்தில் ஹர்பஜனை இறக்கி, அவரும் ஒரு ரன்னுடன் அவுட் ஆகி டெண்டுல்கரின் டென்ஷனை அதிகப்படுத்தியதோடு ஒப்பிடும்போது பொல்லார்டு சுத்திச் சுத்தி அடித்தபோதும் கூல்மேனாக களத்தில் நின்று மார்க்கல்லின் வீக்பாயிண்ட்டான ஃபுல்லர்லெந்த் பாலையே ஆயுதமாகப் பயன்படுத்தி விக்கெட் எடுத்த தோனி பாராட்டப்பட வேண்டியவர். சச்சினின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் chennai deserve the victory

KVR April 26, 2010 at 4:45 PM  

// யுவகிருஷ்ணா said...
நல்ல பதிவு. நன்றி பத்ரி//

weekend hangover???

"உழவன்" "Uzhavan" April 26, 2010 at 4:54 PM  

//1800 கோடி ரூபாய் பறிமுதல் செய்திருக்கிறதாம் சிபிஐ//

ஸ்விஸ் பேங்குக்கெல்லாம் அப்புறம் போங்க.. இங்க அத விட அதிகமாவே தேரும்போல

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ April 26, 2010 at 5:07 PM  

////1800 கோடி ரூபாய் பறிமுதல் செய்திருக்கிறதாம் சிபிஐ. தவிர, மூட்டை மூட்டையாக தங்கம்/////


இந்திய பாவம் ஏழை நாடு . எங்கோ ஒரு பிரபல ஆங்கில பத்திரிக்கையின் தலைப்பு செய்தி .

முகிலன் April 26, 2010 at 7:16 PM  

//அது சட்டயருக்கு எழுதியது. சட்டயர் என்று புரியும்படி எழுத இன்னும் என் மொழி பயிற்சி பெறவில்லை என்பதையே காட்டுகிறது. பயில்வேன்//

நர்சிம், நீங்கள் எழுதியது சட்டயராகத்தான் இருந்தது. ஆனால் மாற்றுத்திறனாளனைக் கேலி செய்யும் சட்டயர் போல இருந்தது.

சென்னை’ஸ் ரோட் டு ஃபைனல் என்று ஒரு பதிவு போடுகிறேன் - விளையாட்டை மட்டும் வைத்து.

Vidhoosh(விதூஷ்) April 27, 2010 at 3:16 PM  

//1. நீங்கள் பஞ்சாபுக்கு எதிராக கடைசி ஓவரில் 26 ரன் அடித்து ஜெயித்ததைச் சொல்லி இருக்கலாம்.///

வாட்? நர்சிம் - ஐ.பி.எல். நீங்க பஞ்சாபுக்கு எதிரா விளையாடி ஜெயிச்சீங்களா? அப்டியா...

டிஸ்கி: எனக்கு கிரிக்கெட் அவ்ளோதாங்க தெரியும்.... ஒரு match கூட பார்கிறதில்லை. ஜூ ஜூ வந்தால் பார்ப்பேன் அவ்ளோதான்.

A Simple Man April 28, 2010 at 11:30 AM  

//மும்பையின் போலார்டு,(ம.மா)//
what is ம.மா ???

நர்சிம் April 28, 2010 at 1:53 PM  

//A Simple Man said...
//மும்பையின் போலார்டு,(ம.மா)//
what is ம.மா ???
//
‘மல(லை)மாடு’ தல..

A Simple Man April 28, 2010 at 6:28 PM  

Thank you for the clarification :-)

மதுரை சரவணன் June 5, 2010 at 11:13 PM  

மருத்துவத்துறை ஊழல் அலறச் செய்கிறது. வாழ்த்துக்கள்