எண்ணங்கள் 23/08/10

‘தொல்நிகழ்’ வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்துதான் எழுதினியா?” என்றார் வைத்யா. ‘ஆம்’ என்றேன். அப்ப அது என்ன என்’ணங்கள்னு? வார்த்தை விளையாட்டுன்னு நீயா நினைச்சா சரி என்றார். தவறு.

**
தமிழினி-பாதசாரியின் ‘அன்பின் வழியது உயிர் நிழல்’ நூல்.

‘எளிய சொல்மணிகளை தின்று உயிர்வாழும் என் மனம், எங்கும் எப்போதும் சுதந்திரமாகப் பறக்கும் உருவிலா அதிசயப் பறவை’

இப்படி ஈரடி, முவ்வடிகளில் போகிற போக்கில் அவரின் சொல்மணிகள் மனதில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கின்றன.

காமம் குறித்த இவ்வரிகள்-
‘காரிகை எவரினும் காரியம் யாவினும் சாறு நிறைவு ஒருபோலத்தான்!’-

’வெட்ட வெளியில் வெறுமையை எரித்துவிடும் யத்தனமாகத்தான் இன்னும் இந்தப் புகைப்பழக்கமும் தொடர்கிறது. எதைக்காட்டித்தான் இனி இந்த மனதைப் பயமுறுத்த?’

நான் பட்ட அவஸ்தையை இனி நீங்கள் பெறுவீர்கள் . ஆம் இந்த வரிகள் மனதை விட்டு அகல மறுக்கிறது. உங்களுக்கும் அப்படியே ஆகக்கூடும்/கடவது.

இதுபோன்ற நூல்களை நிறைய வாங்கி வைத்து, அன்பளிப்பாகத் திணிக்கவேண்டும் எதிர்படுபவர்களிடம். அன்பைத் திணிப்பதுதானே முறை. செய்வேன்.

**
வைரமுத்து. எத்தனை முறை எழுதியாகிவிட்டது. என்றாலும் தென்றலாய் மீண்டுமொருமுறை. கலைஞர் டிவியில், சரி, தொலைக்காட்சியில் பாடல் நிகழ்வுகள் குறித்து சொல்லிக்கொண்டிருந்தார்.

அவர் சொல்லாவிட்டாலும் அவர் பாடல்களைக் கேட்கும் பொழுது எனக்கு அந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கும் பொழுது எதிரில் இருப்பவர்களிடம் தன் வரிகளை அவரின் குரலில் எப்படி எல்லாம் பேசி, விட்டு வெளுத்து இருப்பார் என்ற காட்சி ஓடிக்கொண்டுதான் இருக்கும்.

நிகழ்ச்சிக்கு வருவோம்.

‘சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ட்ராங்கா?’

இந்த வரிகளை எழுதியதும்(வைரமுத்து குரலில் படிக்காதீங்கப்பா) ஏ.ஆர்.ரகுமான் கொஞ்சம் யோசித்தாராம். முதல் வரியிலேயே ஆம்ஸ்ட்ராங்க் என்ற வார்த்தை இசையில் அமர மறுக்கும்(மீட்டர் தட்டும்?). ஆங்கிலப் பெயர். அதை கொஞ்சம் மாற்றிக் கொடுங்கள் என்றாராம்.

மறுத்த வைரமுத்து, ஹரிஹரன் ஒருமுறை பாடட்டும். சரியாக வரவில்லை என்றால் மாற்றுகிறேன் என்றாராம்.

ஹரிஹரன் ஆம்ஸ்ட்ரா..ங்..ங்..கா’ என, ங் கில் தனது ட்ரேட்மார்க் சங்கதியை நுழைத்துப் பாடியதும் கடின வார்த்தை குழைந்துவிட்டதாம். பாடலும் ஹிட். டீம் ஒர்க் என்பது இதுதானோ. சுவாரஸ்யம்.

**

டீம் ஒர்க் என்றதும், நிர்வாக இயலில் புதிதாக வேலைக்குச் சேர்பவர்களுக்கான டீம்பில்டிங் விளையாட்டுகளின் மூலம் தயார்படுத்துதல்(படுத்துதல் தான்) நினைவுக்கு வருகிறது.

மூன்று அணிகள். அணிக்கு நான்கு பேர். சற்று தொலைவில் மூன்று கூடைகள் வைத்து, ஒரு அணிக்கு 20 பந்துகள் வீதம் கொடுத்து, அதிக முறை எந்த அணி கூடைக்குள் பந்துகளை போடுகிறது என்பது போட்டி. வரிசைப்படி வைக்கப்படும் கூடைகளில் முறையே முதல் கூடையில் ஒரு பந்துக்கு 50 பாயிண்ட், இரண்டாவது 100, மூன்றாவது 500 பாயிண்ட்ஸ்.

முதல் ரவுண்டில், சொல்லி வைத்தது போல மூன்று அணிகளும்

1.தன் டீம் நபர்களுக்கு ஆளுக்கு 5 பந்துகளாக பிரித்துக்கொள்வார்கள்.(அவர்களாகவே)
2.சிலர் முதல் மூன்று பந்துகளை முதல் இரண்டு கூடைகளுக்கு முயற்சி செய்து விட்டு, கடைசி இரண்டு பந்துகளை 500க்கும், சிலர் இதையே மாற்றியும் செய்வார்கள்.

போட்டி முடிந்ததும், ட்ரெய்னர், ஏன் 5 பந்துகளை நீங்களாகவே பிரித்துக்கொண்டீர்கள்? அப்படி ஏதும் விதிமுறையைச் சொல்லவில்லையே.. யார் ஓரளவு சரியாக போடுகிறாரோ அவரிடம் கூடுதல் பந்துகள் தந்து இருக்கலாமே? ஏன் ஒரே கூடைக்கு மீண்டும் மீண்டும் (500க்கு) முயற்சிக்கவில்லை? பத்துமுறை தொடர் முயற்சி செய்தால், 4 முறையேனும் விழுந்திருக்கும். நிறைய பாயிண்ட்ஸ் கிடைத்திருக்கும் என ‘அனலைஸ் செஷன்’னை முடித்து விட்டு, மீண்டும் ஒரு முறை இதே போட்டி என்பார்.

1. மூன்று அணிகளும் சொல்லி வைத்தாற்போல அணியில் எவரோனும் ஓரிருவருக்கு அதிக பந்துகள் தருவார்கள்
2. 500க்கே முயற்சிப்பார்கள்.

இப்பொழுது ட்ரெய்னர்:

1.உங்களுக்கு உங்களின் முடிவுகளின் மேல் நம்பிக்கை இல்லை. நான் சொன்னவுடன் பந்துகளை ஒருவரிடமே தள்ளிவிட்டீர்கள். டீம் ஒர்க்கின் மீதும், பகிர்ந்து செயல்படுத்துதலின் மீதும் நம்பிக்கை இல்லை போலத் தெரிகிறதே,

2நான் 500 என்றவுடன் அதிலேயே முயற்சித்தீர்களே ஒழிய, இடையில் இருந்த கூடைக்கு முயற்சித்திருந்தால், படிப்படியான கான்ஸ்ட்ரண்டேஷன்,அணுகுமுறை இலகுவாக டார்கெட் அச்சீவ் செய்திருக்கும் நிலை கிடைத்திருக்குமே என்பார்.

அவர் வாயைப் பார்த்துக்கொண்டே டீயைக் குடித்துவிட்டு வரவேண்டியதுதான்.

மிக எளிய விளையாட்டு என்றாலும் நிறைய உளவியல் உள்ளது போல இருப்பதே ஒரு உளவியல்தானோ?

--

ஜோதிடத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் சம்பந்தம் உண்டா இல்லையா என்பது தெரியாது. ஆனால் ஏதோ ஒரு சேனனில் ஒரு ஜோதிடர் இன்றைய நாள் பலனை லாப்டாப்பைப் பார்த்துக்கொண்டே சொன்னார்.

***

கேபிள் சங்கரின் ‘சினிமா வியாபாரம்’ நூல் அறிமுக விழா சனிக்கிழமை மாலை மிகச் சிறப்பாக நடந்தது. கொஞ்சம் தாமதமாகச் சென்றதனால் மெதுவாகப் போய் பின்னால் அமர்ந்துகொண்டேன். நா.முத்துகுமார் சிறப்பாக வாழ்த்தினார். பத்ரி, இந்தப் புத்தகம் அல்ரெடி சக்ஸஸ் ஆகி, விற்றுக்கொண்டிருக்கிறது/தீர்ந்துகொண்டிருக்கிறது. இது ஒரு ஃபார்மாலிட்டி அறிமுகம்தான் என்றும், திரைப்படங்கள் மீது நிறைய ஆர்வம் இருக்கிறது, ஆனால் அந்த அளவிற்கு புத்தகங்கள் வரவில்லை. இங்கு இருக்கும் எல்லோரும் நம்மிடம் ஒரு கேமரா இருந்தால் இவர்களை விட நாம் மிகச்சிறந்த படத்தை எடுத்துவிடுவோம் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கிறோம்’ என்றதும் மொத்தப் பதிவர்களும் ஆதியைப் பார்த்தார்கள். அவர் யாரையும் பார்க்காமல் இருப்பது போலவே இருந்தார்.

விழா முடிந்ததும் பதிவர்களை நீண்ட(!) இடைவெளிக்குப் பின்னர் சந்தித்தது மகிழ்ச்சி. என்னைப்பார்க்க வந்த மறத்தமிழனோடு பேசிக்கொண்டிருந்தது மிக்க மகிழ்ச்சி.

வாழ்த்துகள் கேபிள்.

**

டிபிசிடி, கவி_RT, அதிஷா,லக்கி.. ட்விட்டரில் அடி பின்னுகிறார்கள். யார் கவி_RT? கிளப்புகிறார் மனிதர்.

அறுக்கமாட்டாதவன் கைக்கு அம்பத்தெட்டு அறுவா கதைதான் எனக்கு என்பதால், ட்விட்டுகளைப் படிப்பதோடு சரி.

**

இன்றைய காலத்தில், காதலனோடு மனதாரப் பேசிவிட்டு, அவனைப்பிரிந்து வீட்டிற்குச் செல்லும் நேரம் வந்ததும் ஏன்தான் இந்த டைம் வருதோ? என சிணுங்கும் காதலிகளுக்கு இந்தக் குறள் பொருந்தும்.

மாலையோ அல்லை; மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ; வாழி பொழுது.

தலைவனைப் பிரிந்ததால், மாலைப்பொழுதைக் கடிந்தும், தனக்கு துன்பம் தராத பகல் பொழுதை வாழ்க என்றும் சொல்கிறாள் தலைவி.. ரைட்ட்ட்டு.

..

32 comments:

Cable Sankar August 23, 2010 9:36 AM  

என்ணங்கள் எண்ணங்கள் ஆனதற்கு சரியான காரணம். பாராட்டுக்கு நன்றி.. உங்களிடமிருந்து ஒரு புத்தக விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன் நண்பரே..

Muthukumar August 23, 2010 9:45 AM  

ennangal nandru...

விஜய்வீரப்பன் சுவாமிநாதன் August 23, 2010 9:52 AM  

வணக்கம். உங்கள் எண்ணங்கள் நன்றாக இருக்கின்றன. உங்கள் தமிழ் என்னை ஈர்க்கிறது.

காவேரி கணேஷ் August 23, 2010 10:22 AM  

எண்ணங்கள்--- வண்ணங்கள்

கார்க்கி August 23, 2010 10:23 AM  

//ஒரு புத்தக விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன் நண்பரே./

நான் கூட எழுதணும் சார். ஆனா உஙக்ளிடமிருந்து ஒரு புத்தகம் எதிர்பார்க்கிறேன் :)))

ரவிச்சந்திரன் August 23, 2010 10:25 AM  

Good...

Palay King August 23, 2010 10:34 AM  

Expect some more on நிர்வாக இயல்..

Mohan August 23, 2010 10:53 AM  

மிகவும் அருமையாக இருந்தது இந்த வார எண்ணங்கள்!

M.G.ரவிக்குமார்™..., August 23, 2010 10:56 AM  

எ(ன்)ணங்கள் - இப்படி எழுதினா சரியா?.........

Jana August 23, 2010 11:01 AM  

எண்ணங்கள் சிறகடித்து பறப்பதுபோல ஒரு உணர்வு. டோண்டுவை கேட்டதாக சொல்லுங்கள் நர்சிம்..ஹா..ஹா..

வானம்பாடிகள் August 23, 2010 11:20 AM  

எண்ணங்கள் வண்ணங்கள்:)

மோகன் குமார் August 23, 2010 11:34 AM  

சுவாரஸ்யம்

rajasundararajan August 23, 2010 12:21 PM  

And power i' th' truth o' th' cause.

"என் எண்ணங்கள்" என்பதினைத்தான் "என்'ண்ணங்கள்" என்று இடைக்குறைத்து இருந்தீர்கள் என்கிற புரிதலுடன் இருந்தேன்.

வரம்பில்லாமல் ஷேக்ஸ்பியர் செய்த ஒன்றை நாம் செய்யக் கூடாதா என்ன? போகட்டும், பெரியவர்களது சொற்கேட்டு நடப்பதில் தவறில்லை.

இந்த இடுகையில் இடம்பெற்றுள்ள 'பாதசாரி', வாழ்வு குறித்த தர்சனங்களினாலும் எழுத்தின் நுண்ணணுகலினாலும், என் நெஞ்சுக்கு நெருக்கமானவர் . என்றால் மற்றவர்கள் என் நெஞ்சுக்குத் தொலைவானவர்கள் என்று பொருள் அல்ல. பாதசாரியின் பரிமாணத்துக்கு ஏற்ற அளவில் இந்த இடுகை முறைசெய்யவில்லை; இதற்கு முன் ராஜசுந்தரராஜன் தன் தகுதிக்கு மிகுதியான அறிமுகம் பெற்றிருந்தார்.

நர்சிம் August 23, 2010 12:26 PM  

// rajasundararajan said...

And power i' th' truth o' th' cause.

"என் எண்ணங்கள்" என்பதினைத்தான் "என்'ண்ணங்கள்" என்று இடைக்குறைத்து இருந்தீர்கள் என்கிற புரிதலுடன் இருந்தேன்.//

அதே கருத்தில்தான் என்’ணங்கள் என்று வைத்திருந்தேன் சார்.
**

//பாதசாரியின் பரிமாணத்துக்கு ஏற்ற அளவில் இந்த இடுகை முறைசெய்யவில்லை; இதற்கு முன் ராஜசுந்தரராஜன் தன் தகுதிக்கு மிகுதியான அறிமுகம் பெற்றிருந்தார்.//

இல்லவே இல்லை சார். இது எண்ணங்கள் பதிவு என்பதால் ஒரு பத்தி மட்டுமே எழுதினேன்.

முகவீதி குறித்த என் முழு இடுகை அது.

அதைப்போலவே அன்பின் வழியது உயிர்நிழல் குறித்தும் தனியாகப் பதிவேன் சார்.

முரளிகண்ணன் August 23, 2010 12:28 PM  

Nice thalaivaree

ரமேஷ் வைத்யா August 23, 2010 2:17 PM  

எப்போதும் சரியாக மட்டும்தான் எழுதுவேன் என்று பிய்த்து உதறுகிறார் அன்புத் தம்பி ராஜ சுந்தரராஜன்! அவரது விமரிசனங்கள் உங்களுக்கு உறு துணை. நினைவில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எம்.எம்.அப்துல்லா August 23, 2010 2:33 PM  

என்னமோ தெரியலை, பின்னூட்டம் போடணும்னு தோணுச்சு :)

முகிலன் August 23, 2010 4:04 PM  

எண்ணங்கள் என்பது நன்றாக இருந்தாலும் என்'ணங்கள் என்பது சுஜாதவை நினைவு படுத்திக் கொண்டிருந்தது. மாற்றி விட்டீர்கள். ம்ம்

மறத்தமிழன் August 23, 2010 4:12 PM  

நர்சிம்,

நீண்ட இடைவேளைக்கு பின்னர்
சந்தித்ததில் மகிழ்ச்சி.

எண்ணங்கள்..

பாதசாரி..அடுத்தமுறை சந்திக்கும் போது
அந்த புக்கை குடுத்திருங்க ...படிக்க அவா.

வைரமுத்து‍..டீம் ஒர்க்...நல்ல எளிய விளக்கம்.

புத்தக வெளியீட்டு விழா..
ஆதியை வாரிட்டங்களே..
நீங்க சொன்னாலும் சொல்லலைனாலும்
ஆதிக்குள் ஒரு ஒளிஓவியர்,இயக்குனர் மற்றும் ஒரு கதாசிரியர் ஒளிந்து கொண்டிருக்கின்றனர் :))

"அறுக்கமாட்டாதவன் கைக்கு அம்பெத்தெட்டு அறுவா"....அப்படி
போடு அறுவாள...

காதலன்‍...காதலி...திருகுறள்...ரைட்ட்டு...

தொடர்ந்து எழுதுங்கள்...வாசிக்க‌
காத்திருக்கிறோம்.

அன்புடன்,
மறத்தமிழன்.

சுசி August 23, 2010 4:25 PM  

//அன்பளிப்பாகத் திணிக்கவேண்டும் எதிர்படுபவர்களிடம். அன்பைத் திணிப்பதுதானே முறை. செய்வேன். //



//அன்பளிப்பாகத் திணிக்கவேண்டும் எதிர்படுபவர்களிடம். அன்பைத் திணிப்பதுதானே முறை. செய்வேன். //

எனக்காகவும் ஒண்ணு வச்சுக்கோங்க.. என்னிக்காவது ஒரு நாள் எழுத்தாளர் நர்சிம் கிட்ட ஆடோகிராஃப் வாங்க வருவேன்.. :)))))

Jey August 23, 2010 4:56 PM  

ம்ஹூம்..அட்ரஸ் மாறி வந்துட்டேன்னு நினைக்கிறேன்..., அப்பீட்டாகிக்கிறேன்..

பா.ராஜாராம் August 23, 2010 6:06 PM  

//இங்கு இருக்கும் எல்லோரும் நம்மிடம் ஒரு கேமரா இருந்தால் இவர்களை விட நாம் மிகச்சிறந்த படத்தை எடுத்துவிடுவோம் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கிறோம்’ என்றதும் மொத்தப் பதிவர்களும் ஆதியைப் பார்த்தார்கள். அவர் யாரையும் பார்க்காமல் இருப்பது போலவே இருந்தார்.//

நர்சிம்! :-))

இரசிகை August 23, 2010 6:17 PM  

//

கார்க்கி said...
//ஒரு புத்தக விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன் நண்பரே./

நான் கூட எழுதணும் சார். ஆனா உஙக்ளிடமிருந்து ஒரு புத்தகம் எதிர்பார்க்கிறேன் :)))

//

intha pinoottam paarththu remba remba sirichcha naan....,

//rajasundararajan said...


இந்த இடுகையில் இடம்பெற்றுள்ள 'பாதசாரி', வாழ்வு குறித்த தர்சனங்களினாலும் எழுத்தின் நுண்ணணுகலினாலும், என் நெஞ்சுக்கு நெருக்கமானவர் . என்றால் மற்றவர்கள் என் நெஞ்சுக்குத் தொலைவானவர்கள் என்று பொருள் அல்ல. பாதசாரியின் பரிமாணத்துக்கு ஏற்ற அளவில் இந்த இடுகை முறைசெய்யவில்லை; இதற்கு முன் ராஜசுந்தரராஜன் தன் தகுதிக்கு மிகுதியான அறிமுகம் பெற்றிருந்தார்.

//

inatha pinnoottam paarththathum kapchup nu adangeeten...

intha yelimayaana yennnam innum pidichchurukku..........!!

raju iya ku vanakkangal..
narsim sir ku vazhthukal...!

appuram....,
ovvoru vaarththaikal kondu sila paththikalai mudiththa vitham remba azhaku..!!

ஆதிமூலகிருஷ்ணன் August 23, 2010 6:47 PM  

அவர் வாயைப் பார்த்துக்கொண்டே டீயைக் குடித்துவிட்டு வரவேண்டியதுதான். //

என்ன கோ-இன்சிடெண்ட். இன்னிக்குதான்.. இப்போதான் ஒருத்தர் வாயைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு வந்து பொட்டியைத் திறக்கிறேன். என்ன.. பந்துக்கு பதிலாக கோலி. கூடைக்குப் பதிலாக குழாய். :-))

ஆதிமூலகிருஷ்ணன் August 23, 2010 6:59 PM  

அப்புறம் இந்தக் குறும்படப் பிரச்சினை. :-))

நூறாவது முறையாக நானும் சொல்லிக்கொள்கிறேன். பிளாக் என்பது எழுத மட்டுமே செய்வதற்கு பத்திரிகை அல்ல. ஆடியோ அல்லது விடியோ இடுகைகளையும் இட நமக்கு டெக்னிகலி சவுண்டான தளம் கிடைத்திருக்கிறது. அனுபவப் பகிர்வு, கவிதை, கதை, ஓவியம், போட்டோஸ் என்பதைத் தொடர்ந்து ஒரு முயற்சிதான் விடியோப் பதிவுகள். அதை எப்படி அழைப்பது எனத் தெரியாமல் ஒரு கிண்டலுக்காக 'குறும்படம்' என்று அழைக்கிறேன். இதற்கே நிஜமான அர்ப்பணிப்புடன் கூடிய குறும்பட மேக்கர்ஸ் மன்னிக்கவேண்டும். மேலும் இந்த லிஸ்ட்டிலிருந்தே அறிந்து கொள்ளலாம் தன் தளம் எதுவென்பதை முடிவு செய்திருக்காத ஒருவனின் ஆர்வகுட்டியான செயலின் அடுத்த படிதான் அது என.

இவ்வாறான சூழலில் யாரும் சினிமாப் பற்றி பேசுகையில் மற்றவர்கள் என்னைப் பார்க்கவேண்டிய அவசியமேயில்லை. அப்படியே நண்பர்கள் பார்த்தாலும் அது சும்மா கிச்சுகிச்சுக்காகவே. எனக்கு சினிமா குறித்த எந்த விதமான அடிப்படை அறிவும் கிடையாது என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

ஆனாலும் குறும்படக் கொடுமைகள் தொடரும் எனவும் இங்கே எச்சரிக்க கடமைப்பட்டிருக்கிறேன். ஹிஹி.!

நாய்க்குட்டி மனசு August 23, 2010 8:00 PM  

மாலையோ அல்லை; மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ; வாழி பொழுது.//
'வேளை நீ வாழி பொழுது '
சரின்னு நினைக்கிறேன். எது சரின்னு சொல்லுங்க.
என்'ணங்கள் ல இருந்த ஒரு ரசிப்பு எண்ணங்கள் ல missing

பரிசல்காரன் August 23, 2010 11:52 PM  

வாக்கியத்தில் ஒரு வார்த்தையை மாற்றிப் போட்டு விளையாடுபவர் என்று உங்களுக்கு தமிழுலகில் ஒரு பெயருண்டு. அதற்குப் பொருத்தமாய் முந்தைய பெயர் - என்’ணங்கள் - இருந்தது. மாற்றம் அவசியமா என்று தெரியவில்லை. ஆனால் அதுவே மனதில் தங்கிவிட்டது.

மற்றபடி உங்கள் எழுத்தை வியக்கும் தூரத்தில்தான் நான்.. விமர்சிக்கும் தகுதி வந்தபின் பார்க்கலாம்...!

நர்சிம் August 24, 2010 1:07 PM  

அனைவருக்கும் நன்றி.

@ஆதி.. எதிர்பார்க்கிறோம்.


@ பரிசல் : //மற்றபடி உங்கள் எழுத்தை வியக்கும் தூரத்தில்தான் நான்.. விமர்சிக்கும் தகுதி வந்தபின் பார்க்கலாம்...!//

இதுக்கு நீங்க அமாவாசைன்னே சொல்லி இருக்கலாம்

***

வைத்யாவிடம் அப்ரூவல் வாங்கிவிட்டு என்’ணங்கள் என்றே வரும்.

நர்சிம் August 25, 2010 6:39 PM  

//'வேளை நீ வாழி பொழுது '
சரின்னு நினைக்கிறேன். எது சரின்னு சொல்லுங்க.//

வேலை தாங்க சரி. நீங்கள் சொல்லும் வேளை இங்கே பொழுது என்ற வார்த்தையில் இருக்கிறது.

ராசராசசோழன் August 25, 2010 7:10 PM  

ரசித்தேன் பதிவை...அதிகம் எழுத தோன்றவில்லை...நிறைவான பதிவு...

ப்ரியமுடன் வசந்த் August 26, 2010 2:29 AM  

என்`ண்ணங்கள் அதுவே பிடித்திருந்தது..

இது என்`ண்ணம் மட்டுமே...

ட்விட்டர் நீங்க சொல்ற ஆளுக சில சமயம் டாப்கியர்ல போறாங்க சில சமயம் கும்மியடிக்கிறாங்க என்னத்த சொல்ல பதிலுக்கு பதில் பேசிக்கிறதுக்கு சாட் பாக்ஸ் யூஸ் பண்ணலாமே அங்கயும் இலக்கியவாதிகள் வந்து கும்முவது சரியாவா இருக்கு?
ட்விட்டர்ல நீங்க எப்பிடின்னு தெரியல? பார்க்கலாம்!

ட்விட்டர்ல அளவா எழுதினாலும் நச்சுன்னு எழுதுறது கார்க்கியும் பரிசலும்தான் ...

ராஜசுந்தர் ராஜன் சார்
//இதற்கு முன் ராஜசுந்தரராஜன் தன் தகுதிக்கு மிகுதியான அறிமுகம் பெற்றிருந்தார்.//
அப்படில்லாம் இல்லைங்க சார் சரியாத்தான் அறிமுகம் சொல்லியிருந்தார் உங்களைப்பற்றி அது மட்டுமில்ல அடிக்கடி சாட் ஸ்டேட்டஸ்ல கூட உங்க கவிதைகள் இருக்கும் அதெல்லாம் பார்த்துதான் நான் நியூ புக் லேண்ட் போய் தேடிக்கண்டுபிடிச்சு வாங்குனேன் முக வீதியை...

உங்க முகவீதியில
மிகை எனும் தலைப்பில்

கேட்பதற்க்குத் துளைகள் போதும்
என்றாலும் செவி மடல்கள்
(அறுத்து விடலாமா?)

மானத்துக்கு ஆடை
அதில் ஆயிரத்தெட்டு வேலைப்பாடு.

கருக்கொண்ட பின்பும்
புணர்ச்சி

உண்டமட்டில் உயிர் தாங்காதோ
வீணையும் இசைக்கிறது...

இந்த வரிகள் காது உள்ளமட்டும் மறக்கவே மறக்காது...

Anonymous November 28, 2010 11:27 PM  

"Hi there, I discovered your blog via Yahoo while searching for 1st assist for a heart attack and your post appears very intriguing for me."

--------------------------------------------
纽约移民
Also welcome you!