மறவா இரவு எனும் தலைப்பில் விசயம் ஏதும் இல்லாமல் சும்மா ஒரு நாலுவரிகள் எழுதினேன்..
அதை வெண்பூவையும், விசாவையும் முடிக்கச்சொன்னேன். வெண்பூவின் பாணியில் ஒருவிதமாக முடித்திருந்தார்.
பதிவர் விசா வேறு கோணத்தில்(வேறுவேறு கோணத்தில்!)எழுதிய இன்னொரு வெர்ஷன். இருவருக்கும் நன்றிகள்.
இனி விசா..
****
DISC: என்னுடைய கதை கொஞ்சம் நீளம் என்பதால் வழக்கமாக கதை சொல்லும் பாணியில் எழுத முடியவில்லை. நிச்சயம் நீங்கள் எதிர்பாராத ஒரு முடிவை தரவே முயற்சித்திருக்கிறேன். என்னை அழைத்த நர்சிம்முக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
முன் கதை: ப்ரியாவும் குணாவும் ரிசார்ட் கடற்கரையில் ஒரு இளங்காலையில் கொஞ்சி குலாவிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ரூம் பாய் அவர்களை நோக்கி ஓடி வருகிறான். குணாவின் அறையில் ஒரு பிணம் கிடப்பதாய் சொல்கிறான். இருவரும் அறை நோக்கி ஓடுகிறார்கள். அதற்குள் போலீஸ் வந்துவிடுகிறது. இறந்து போனவள் பெயர் ஸ்வேதா என்றும் அவள் தனது மனைவி என்றும் குணா போலிசிடம் தெரிவிப்பதில் முற்று பெற்றது முதல் பாகம். இனி....
"கொலை நடந்தப்போ நீங்க எங்க இருந்தீங்க மிஸ்டர்...."
"குணா...குணசேகரன் அலையாஸ் குணா....சார் நான் தினமும் காலையில வாக்கிங் போறது வழக்கம். இன்னைக்கும் அதே மாதிரி பீச்சுல ஏர்ளி மார்னிங் வாக்கிங் போயிருந்தேன். தனியா போனது தான் சார் தப்பு. (அழுகிறான்) என் ஒயிப் ஸ்வேதாவையும் எழுப்பி கூட்டிட்டு போயிருக்கணும். பாருங்க சார் அந்நியாயமா கொன்னுட்டாங்க....தப்பு தப்பு தப்பு " என்று தலையில் அடித்துக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதான்.
அதற்குள் ரூம் பாய் பதட்டத்தோடு குறுக்கிட்டு...
"சார் இவரு பொய் சொல்றாரு சார். இவரும் இன்னொரு மேடமும் ஒண்ணா பீச்சுல இருந்தாங்க. நான் பாத்தேன். அவங்க பேரு கூட ப்ரியா இங்க சூட் 12 ல தங்கியிருக்காங்க......"
சொல்லி முடிப்பதற்குள் குணா ரூம் பாய் மேல் பாய்ந்தான்.
"யாருடா ப்ரியா? நீ பாத்தியா? எல்லாரும் சேந்து என் பொண்டாட்டிய கொன்னுட்டு இப்போ ப்ரியா அது இதுன்னு நாடகமாடா ஆடுறீங்க."
அதற்குள் மேனேஜர் உள்ளே புகுந்து
"மிஸ்டர் குணா. நீங்க எங்க ப்ரிவிலெஜ்ட் கஸ்டமரா இருக்கலாம். அதுக்காக எங்க ஸ்டாப்ப அக்கியூஸ் பண்றத நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன். பொய் சொல்லாதீங்க. போலீஸ் இருக்காங்க. உண்மையை சொல்லுங்க நீங்க ப்ரியாங்குற பொண்ணோட லூட்டி அடிக்கல. அவங்களோட தானே இன்னைக்கு காலையில வாக் போயிருந்தீங்க. ஏன் மறைக்கிறீங்க.அதோ அங்க இரண்டு பேரும் உக்காந்து இன்ஸ்பெக்டர் சார் அங்க இருக்கவங்கள கூட நீங்க விசாரிச்சு பாருங்க."
அதற்குள் குணா ஆவேசத்தில் மேனேஜர் மீது பாய போலீஸ் அவனை மடக்கி நிறுத்தியது.
"இல்ல சார். எல்லாரும் சேந்து பொய் சொல்றாங்க சார். எனக்கு ப்ரியான்னு யாரையும் தெரியாது. சார் என்ன நம்புங்க சார். ஸ்வேதா என்னோட ஒயிப். இவங்க சொல்ற ப்ரியா யாருன்னே எனக்கு தெரியாது சார். நானும் என் ஒயிப்பும் மட்டும் தான் சார் இங்க ரூம்ல தங்கியிருக்கோம். வேணுமுன்னே பொய் சொல்லி தப்பிக்கலாமுன்னு பாக்குறாங்க. இவங்கள்ள யாரோ தான் சார் கொலை பண்ணியிருக்காங்க" என்று அழுதபடி மீண்டும் ஸ்வேதாவின் பிணத்தின் மேல் விழப்போனான். போலீஸ் அவனை மீண்டும் கைப்பற்றி வேனில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு போனது.
பிறகு இன்ஸ்பெக்டர் கூட்டததை பார்த்து "ப்ரியான்னு சொல்றீங்களே அந்த பொண்ணு எங்கே?" என்றார்.
எல்லோரும் அங்கும் இங்கும் தேடினார்கள். ப்ரியாவை காணவில்லை. ப்ரியா அந்த இடத்தை விட்டு தப்பித்துவிட்டாள். போலீஸ் நுழைவாயிலை பூட்டி ரிசார்ட் முழுக்க் சல்லடை போட்டு தேடுகிறது. ப்ரியாவின் சூட் நம்பர் 12ல் மேனேஜரும் இன்ஸ்பெக்டரும் நுழைந்தார்கள். எல்லா பொருட்களும் வைத்தபடி இருந்தன. ப்ரியாவின் செல் போன் கட்டிலின் மையத்தில் கிடந்தது. அதில் இரண்டு மிஸ்ட் கால்கள் இருந்தன. அப்போது மேனேஜர் இன்ஸ்பெக்டரிடம் தெளிவாக விளக்கினார்.
"இன்னைக்கு சன்டே. பிரைடே காலையில ஒன்பது மணிக்கு குணாவும் ஸ்வேதாவும் ரிசார்ட்டுக்கு வந்து ரூம் எடுத்தாங்க. அன்னைக்கு மத்தியானம் ப்ரியாங்குறவங்க இதே ரிசார்ட்டுல ரூம் கேட்டு வந்தாங்க. சூட் 12 அலாட் பண்ணினோம். அன்னைக்கு ஈவனிங் எங்களோட பார்ல ப்ரியாவும் குணாவும் ஒண்ணா குடிச்சிட்டு இருந்தத பாத்தோம். அப்பவே எங்களுக்கு சந்தேகம் இருந்தது. கட்டின பொண்டாட்டிய விட்டுட்டு இன்னொரு பொண்ணோட இங்க கூத்தடிச்சிட்டு இருக்குறது ஸ்டேரஞ்சா பட்டுது. அப்போ குணாவோட ரூம்ல ஸ்வேதா மட்டும் தனியா இருந்தாங்க. ஆக்சுவலா ஸ்வேதாவுக்கு, குணா ப்ரியாவோட இருக்குறது தெரியாது. ஏதோ கான்பரன்ஸ்ன்னு பொய் சொல்லிட்டு இங்க ப்ரியாவோட குடிச்சிட்டு இருந்தாரு. கட்டின பொண்டாட்டி கண்ணு முன்னால அவளுக்கு தெரியாம இன்னொருத்தியோட பலே கில்லாடி சார் அவரு.....இன்னைக்கு மார்னிங் பீச்சுக்கு முதல்ல ப்ரியா போனாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு குணா பின்னாடியே போனாரு. ரெண்டு பேரும் பீச்சுல நடத்தின சல்லாபத்த இங்கேருந்து நாங்களும் பாத்துட்டு தான் இருந்தோம். சரி இது தெரியாம இவங்க ஒயிப் ரூம்ல என்ன தான் பண்றாங்கன்னு பாக்க ரூம் பாய அனுப்பினேன். அப்போ தான் கொலை கொலை ன்னு சொல்லிட்டு ஓடி வந்தான்."
போலீஸ் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக்கொண்டுவிட்டு ஸ்டேஷனுக்கு விரைந்தது. ஸ்வேதாவின் பிரேதம் ஆம்புலன்ஸில் போஸ்ட் மார்ட்டமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ப்ரியாவை தேட தனிப்படை அமைக்கப்பட்டது.
காவல் நிலையத்தில் குணாவிடம் அன்பாக நேர்மையாக பிறகு அந்நியாயமாக எப்படி எப்படியோ விசாரித்து பார்த்துவிட்டார்கள். ப்ரியா என்ற பெண்ணை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றே சொல்லிக்கொண்டிருந்தான். ரிசார்ட்டுக்கு தானும் தன் மனைவி ஸ்வேதாவும் மட்டுமே வந்ததாகவும் காலையில் தான் மட்டும் தனியாக பீச்சில் நடை பயிற்சியில் ஈடுபட்டதாகவும் அந்நேரம் பார்த்து யாரோ வந்து ஸ்வேதாவை கொன்றுவிட்டதாகவும் சொன்னான். போலீஸ் எவ்வளவோ முயன்றும் அவனிடமிருந்து உண்மையை கொண்டுவர முடியவில்லை.
வேறு வழியில்லாமல் குணாவை ரிமாண்டில் சிறையில் அடைத்தார்கள்.
ஸ்வேதாவின் இறுதி சடங்குகள் முடிந்தன.
ப்ரியா இன்னும் கிடைக்கவில்லை. அவளை தீவிரமாக போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது.
-------------------------------
ப்ரியாவை தேடும் முயற்சியில் போலீசுக்கு ப்ரியாவை பற்றிய தகவல்கள் கிடைக்கிறது. ப்ரியா ஒரு சைக்கியாட்ரிஸ்ட். படிப்பை முடித்துவிட்டு ப்ரியா சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையில் சைக்கியாட்ரிஸ்டாக பணியாற்றிக்கொண்டிருந்தாள் என்பதை போலீஸ் கண்டுபிடிக்கிறது. அவர்கள் மூலம் ப்ரியா தங்கியிருக்கும் வீட்டை கண்டுபிடித்து அங்கு சோதனை மேற்கொள்கிறது. ப்ரியா ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வருகிறாள். சம்பவம் நடந்த பிறகு ப்ரியா வீட்டுக்கும் வரவில்லை.
அந்த அப்பார்ட்மென்ட்டின் வாட்ச்மேனிடம் குணாவின் புகைப்படத்தை காட்டி விசாரித்ததில் குணா ப்ரியாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதை வாட்ச்மேன் உறுதி செய்கிறான். மேலும் அக்கம்பக்கத்திலும் அதையே சொல்கிறார்கள். குணா அடிக்கடி ப்ரியாவின் வீட்டுக்கு வருவதும் இருவரும் வெகு நேரம் தனிமையில் இருப்பதையும் அவர்கள் பல முறை பார்த்ததாக சொல்கிறார்கள்.
இதனால் ப்ரியா இருவர் மேலும் போலீசுக்கு சந்தேகம் வலுக்கிறது. ப்ரியா எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறாள் என்று போலீஸ் தீவிரமாக தேடியும் பயனில்லை. மேலும் ப்ரியா ஒரு அனாதை எனவும் அவருக்கு சொந்த பந்தம் யாரும் இல்லை எனவும் தெரியவருகிறது. இதனால் ப்ரியாவை கண்டுபிடிப்பதில் சிக்கல் நிலவுகிறது. அதே நேரம் ப்ரியா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் அல்லது யாராவது அவளை கொன்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸ் விசாரித்து தோற்றுவிட்டது.
குணாவை ஜாமீனில் எடுக்க நடந்த முயற்சிகளை போலீஸ் முறியடிக்கிறது. குணா இதுவரை ப்ரியாவை தனக்கு தெரியும் என்று ஒப்புக்கொள்ளவும் இல்லை.
ஸ்வேதாவின் உடலில் குத்தியிருந்த கத்தியில் யாருடைய ரேகையும் பதிவாகவில்லை என்பது போலீசுக்கு மேலும் சிக்கலாய் போனது.ப்ரியாவை கண்டுபிடித்தால் மட்டுமே இந்த வழக்கில் தீர்வு வரும் என்பதால் போலீஸ் ப்ரியாவை பல வழிகளில் தேடுகிறது. ப்ரியா கிடைத்தபாடில்லை.
---------------------
குணா சிறையில் இருக்கிறான். அப்போது அவனுடைய மனைவி ஸ்வேதாவின் அண்ணன் சிட்டியில் பெரிய கை. அவனுக்கு குணாவின் மேல் மிக வலுவான சந்தேகம். ப்ரியாவுடனான கள்ளதொடர்பில் தன் தங்கையை கொன்றுவிட்டு நாடகம் ஆடுகிறான் என்று ஸ்வேதாவின் அண்ணனுக்கு புரிகிறது. இதனால் அவனை சிறையிலேயே கொன்றுவிட திட்டம் தீட்டுகிறான். அதற்காக சிறையிலிருக்கும் தன்னுடைய ஆட்களை ஏவி விட்டு குணாவை கொல்ல முடிவெடுக்கிறான். ஆனால் குணா அந்த தாக்குதலில் சிறு காயங்களோடு தப்பிக்கிறான். அவனை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். இந்த தாக்குதல் சம்பவம் அடுத்த நாள் செய்தித்தாள்களில் வருகிறது. இதை ப்ரியா படிக்கிறாள். குணாவை கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில் அன்று மாலையே கோர்ட்டில் சரண் அடைகிறாள். இனி ப்ரியாவின் மொழியிலேயே நாம் மிச்ச கதையை தொடரலாம்.
--------------------------
என் பேரு ப்ரியா. நான் சிட்டியில இருக்குற ஒரு பெரிய ஹாஸ்பிட்டல்ல சைக்காட்ரிஸ்டா பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன். டூ இயர்ஸா.
நான் ஒரு அனாதை சார். சின்ன வயசுலையே எங்க அப்பா அம்மா இறந்துட்டாங்க. எங்க மாமா பையன் கார்த்திக் என் மேல இரக்கப்பட்டு அவங்க வீட்டுல போராடி என்ன படிக்க வச்சான். நான் நல்லா படிப்பேன் சார். அப்படி படிச்சு மெடிக்கல் காலேஜ்ல சேந்தேன். அவன் என் படிப்புக்காக அவனோட படிப்ப விட்டுட்டு வேலைக்கு போனான். நானும் அவனும் சின்ன வயசுலேருந்து ஒருத்தருக்கொருத்தர் லவ் பண்ணினோம். நானும் படிச்சு வேலைக்கு சேந்தேன். இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க வீட்டுல சம்மதிச்சுட்டாங்க. அப்போ தான் 2008 நவம்பர் 13 சென்னையில ஒரு ஆக்சிடன்ட் நடந்துது. அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டீங்க.
ஒரு குடிகார பன்னி பி.எம்.டபிள்யூ காருல பிரண்ட்ஸோட குடிச்சிட்டே வண்டி ஓட்டி கன்ட்ரோல் இல்லாம தாறுமாறா மோதி பிளாட்பாரத்துல முட்டிட்டு நின்னுதே. அதுல ரோட்டுல போயிட்டு இருந்தவங்க பிளாட்பாரத்துல தூங்கிட்டு இருந்தவங்கன்னு பத்து பேரு செத்து போனாங்க. அந்த பத்து பேருல ஒருத்தன் வேற யாரும் இல்ல என்னோட கார்த்திக். அந்த கார ஓட்டிட்டு வந்த குடிகார பன்னி வேற யாரும் இல்ல ஜெயில்ல இருக்கானே குணா.
என் கார்த்திக் என்னவிட்டு போயிட்டான்னப்போ நான் ரொம்ப துடிச்சு போனேன் சார். என்னால வாழ்க்கையை நெனச்சு பாக்கவே முடியல தற்கொலை பண்ணிக்கலாமான்னு கூட நெனச்சேன். ஆனா குணா கார் கேஸ்ல ஒரு வாரத்துல வெளிய வந்துட்டான். எனக்கு வெறி. பணக்காரன் நெனச்சா பணம் இருந்தா எந்த பெரிய தப்பையும் செஞ்சிட்டு சுலபமா தப்பிச்சிடலாம் இல்லையா. அப்போ தான் கோர்ட்டுலேருந்து ஒரு சூப்பரான ஆர்டர் வாங்கினான் குணா. அதாவது அவனோட அடிக்ஷன்....குடிப்பழக்கத்துக்கு சைக்கியாட்ரிஸ்ட் டிரீட்மென்ட் வேணுமுன்னு சொல்லி நான் பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்த ஹாஸ்பிட்டல்ல வந்து சேந்தான். அப்போ அவனோட பெர்ஸ்னல் டாக்டர் நான்.
எனக்கு ஹிப்நாட்டிசம் மெஸ்மெரிஸம் இதுல ரொம்ப ஆர்வம் உண்டு. ஹிப்நாட்டிசம் மூலமா ஒருத்தரோட பெர்ஸ்னாலிட்டிய ஸ்ப்லிட் பண்ண முடியும். ஒருத்தரோட தன்னிலைக்குள்ள புகுந்து அவரோட மூளைக்குள்ள இன்னொரு பெர்ஸ்னாலிட்டிய உக்காரவச்சிட்டா ஹீ வில் பிகம் எ ஸ்பிலிட். இப்போ ரெண்டு சிம் கார்ட் வச்ச செல் போன் மாதிரி. தினமும் குணவோட மூணு மணி நேரம் ஓர்க் பண்ணினேன். கொஞ்சம் கொஞ்சமா இறந்து போன என் காதலன் கார்த்திக்கோட பெர்ஸ்னாலிட்டிய அவனுக்குள்ள இறக்கினேன்.
ஒரு மாசத்துல ஹீ இஸ் அ பெர்பெக்ட் ஸ்பிலிட். அவன் என்ன பாத்தா கார்த்திக்கா மாறிடுவான். என்ன லவ் பண்ண ஆரம்பிச்சிடுவான். என்ன ஹக் பண்ணுவான் கிஸ் பண்ணுவான். கார்த்திக் எப்படியெல்லாம் நடந்துப்பானோ அப்படியெல்லாம் செய்வான். நான் ஒரு இரண்டு நிமிஷம் மறஞ்சிட்டேன்னா அவன் மூளைக்குள்ள மறுபடியும் ஸ்ப்லிட் குணாவா மாறிடுவான். இப்படி எனக்கு தேவைப்படும்போதெல்லாம் குணா கிட்ட நான் செலுத்தி வச்சிருந்த கார்த்திக்க எழுப்புவேன். என் கூட கார்த்திக் இருக்குற மாதிரி நான் உணருவேன். என்னால கார்த்திக்க மறக்க முடியல. குணா ரூபத்துல கார்த்திக் எப்பவும் என் கூட இருக்குற மாதிரி இருந்திச்சு.
இதுல ஆச்சரியம் என்னான்னா என் கூட கார்த்திக்கா பழகிட்டு இருந்தப்போ தான் குணாவுக்கு கல்யாணம் ஆச்சு. ஸ்வேதாவோட. கல்யாணம் முடிஞ்சு முதல் இராத்திரி எல்லாம் நல்ல தான் நடந்தது. அடுத்த நாள் காலையில அவன் ஆபீஸ்லேருந்து போன் பண்ணி வர சொன்னேன். வந்தான் என்ன பாத்தவுடனே மறுபடியும் கார்த்திக்கா மாறிட்டான். யூ நோ அங்க ஆபீஸ் ரூம்ல தான் எங்களோட பஸ்ட் பகல்.
இப்படி இருந்தப்போ ஒரு கட்டத்துல எனக்கு கார்த்திக் முழுசா வேணுமுன்னு தோணிச்சு. அதனால குணாவும் ஸ்வேதாவும் ரிசார்ட்டுக்கு வெக்கேஷன் போனாங்க. என்னால குணா ரூபத்துல இருக்குற என் கார்த்திக்க பிரிஞ்சு இருக்க முடியல..
நாங்க பார்ல குடிச்சோம். அப்போ அவன் கார்த்திக்கா என்னோட இருந்தான். என் கூட ரூம்ல கொஞ்ச நேரம் ஒண்ணா இருந்தான். பட் ஸ்வேதாவுக்கு தெரிஞ்சிட கூடாதுன்னு அவன மாத்தி ரூமுக்கு அனுப்பி வச்சேன்.
எனக்கு கார்த்திக் மேல இருந்த லவ் மேலோங்கி குணா எப்பவும் கார்த்திக்கா இருக்கணுமுன்னு யோசிச்சேன்.. ஸ்வேதாங்குற கதாபாத்திரம் இருந்தா தானே குணா குணாவா இருக்கணும். இல்லேன்னா அவன் எப்பவும் கார்த்திக்காவே இருந்திடலாமேன்னு சொல்லி ஸ்வேதாவ கொலை பண்ண திட்டம் போட்டேன்.
சம்பவம் நடந்த அன்னைக்கு காலையில அஞ்சு மணிக்கு குணாவோட ரூமுக்கு போனேன். குணா தூக்கத்துல கதவ திறந்தான். நான் உள்ள போய் கதவ சாத்திட்டு ஐ ஜஸ்ட் மேட் ஹிம் ஸ்ப்லிட் பிட்வீன் குணா அன்ட் கார்த்திக். ரூம்ல குணாவோட ஆதிக்கம் அதிகமாகி நான் சொல்ல சொல்ல ஸ்வேதாவ கத்தியால குத்தி கொலை பண்ணிட்டான்.
கொலை பண்ணினப்புறம் என்ன பண்றதுன்னு தெரியல குணா மயக்கமாயிட்டான். அவன எழுப்பி மெதுவா பீச்சுக்கு கூட்டிட்டு போனேன். அங்க போனப்புறம் அவனுக்கு கொலை பண்ணினது நினைவிலேயே இல்ல. அப்புறம் போலீஸ் வந்ததுல பயத்துல தப்பிச்சு ஓடிட்டேன். இதுக்கெல்லாம் காரணம் நான் தான். குணா இல்ல. ஹீ இஸ் ஜஸ்ட் எ டெஸ்ட் எலெமென்ட்.
இதுல தண்டிக்க பட வேண்டியது நான் தான்.......
என்று ப்ரியா பேசிக்கொண்டே போனாள்.
(இந்த கதையை மீண்டும் பின்னாலிருந்து யோசித்து பார்த்தால் சில லாஜிக் இடிபாடுகள் வரலாம். அவை எளிதாக விடை அளிக்கக்கூடியதாகவே இருக்கும் என்று நம்புகிறேன். பெரிய லாஜிக் பிளா இருந்தால் தெரிவிக்கவும். அல்பத்தனமாக லாஜில் ப்ளா கண்டுபுடிப்பவர்கள் உடனடியாக ஒரு கதை எழுத அழைக்கப்படுவீர்கள் ஜாக்கிரதை:) )
மறவா இரவு- பதிவர் விசா எழுதிய முடிவு.
Posted by
நர்சிம்
Thursday, August 26, 2010
14 comments:
me the first
ரொம்ப பெரிய ஸ்டோரி-அ இருக்கு அதன் முதலயே கமெண்ட்.
haiyo haiyo!
//*ரூம்ல குணாவோட ஆதிக்கம் அதிகமாகி நான் சொல்ல சொல்ல ஸ்வேதாவ கத்தியால குத்தி கொலை பண்ணிட்டான்**/
குணாவோட ஆதிக்கம் அதிகமானதாலா அல்லது கார்த்திக்கின் ஆதிக்கம் அதிகமானதாலா?
//*ரூம்ல குணாவோட ஆதிக்கம் அதிகமாகி நான் சொல்ல சொல்ல ஸ்வேதாவ கத்தியால குத்தி கொலை பண்ணிட்டான்**/
குணாவோட ஆதிக்கம் அதிகமானதாலா அல்லது கார்த்திக்கின் ஆதிக்கம் அதிகமானதாலா?//
செந்தில்மோகன் கூறியதை வழிமொழிகிறேன்
எனக்கு பிடிக்கல.. :)
அது ஒண்ணும் பெரிய விஷயமல்ல
(நன்றி சுந்தர்ஜி)
கார்த்திக்கோட ஆதிக்கம் அதிகமானாலும்... அந்த பெர்ஸ்னாலிடிக்கும் ஒரு 'மோடிவ்' வேணுமில்லையா குணாவோட மனைவியை கொலை செய்ய? எதைச்சொல்லி ப்ரியா அவனை 'கன்வின்ஸ்' செய்திருப்பாள்?
நன்றி நர்சிம்.
இனி உங்கள் பகுதிக்காக வெயிட்டிங்கே.....ய்
விசா.. கட்டிப்போட்டு பாடச்சொன்ன குயில் பாடியது போல இருந்தது இந்தக் கதை. உங்கள் வழக்கமான நடை இதிலே மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸிங்.
:)
விசா சார்
--
வித்தியாசமான முடிவிற்கு பாராட்டுக்கள்
ஆனால்
கதை என்னவோ பத்தாம் வகுப்பு தமிழ் உரைநடை புத்தக நடையில் இருந்ததாக எனக்கு தோன்றியது
--
வெண்பூ, நர்சிம் ஆகியோருடன் ஒப்பிட்டு பாருங்கள்
நான் கூறுவது தவறென்றால் மன்னிக்கவும்
//
கார்க்கி சைட்...
எனக்கு பிடிக்கல.. :)
அது ஒண்ணும் பெரிய விஷயமல்ல
(நன்றி சுந்தர்ஜி)
//
ஏன் :)......
//நான் கூறுவது தவறென்றால் மன்னிக்கவும்//
நூறு சதம் சரி. அதை உணர்ந்து டிஸ்கியிலேயே சொல்லிவிட்டேன். வாசித்தமைக்கு நன்றி.
முடிவு பயங்கர டுபாகூரா இருந்தது ஒரு புறமிருக்கட்டும். ஏற்கனவே டாக்டரும், முகிலனும் சொல்லிவிட்டாலும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.. ஸாரி.!
'காக்கா வடை சுட்டுச்சு, ஆயா வந்தாங்க, வடையை தூக்கினு போயிட்டாங்க, மரத்துமேல ஏறிட்டாங்க, நரி வந்துச்சு..' அவ்வ்வ்..
Post a Comment