னகர முதல.

எரிந்துகொண்டிருக்கிறது

எலும்புகள் எழும் எனக் குழைத்து அப்பிய
சாந்து இறுகி விரிகிறது.

உடன் வந்தவர்கள்
தீவுகளாய் நின்று
பழங்கதைகள் தின்று கொண்டிருந்தார்கள்
எல்லாக்கதைகளிலும் எரிபவன் நாயகன்.

முட்செடிகளை ஒடித்துண்டாக்கிய
தற்காலிகப் பாதையில்
திரும்பிக் கொண்டிருந்தன தீவுகள்.

நெஞ்சில் எரியும் சிதையில்
தன் குச்சியைக் கொண்டு கிளறி
நெருப்பின் உக்கிரம் கூட்டியவனின்
அலைபேசி அலறியது.

தன் கல்யாணத் தேதியை
உறுதிபடுத்தி அலையணைத்தவனின்
குச்சி இப்பொழுது தீயைப் பெருந்தீயாக்கியது
குச்சியில் தீயின் தடமேதுமில்லை-
லாகவம்.

எரிந்தடங்கட்டும் என
தள்ளி அமர்ந்து கொண்டு
வெற்றிலையைத் தொடையில்
தேய்க்கத் தொடங்கினான்

மூச்சிறைக்க ஓடிவந்தவன்
இவன் கைக்குச்சியை எடுத்தோடினான்.
முனகி ஈனும் மாட்டின்
பிறப்புறுப்பைத் தளர்த்தி
வழி திறக்க.

35 comments:

Vidhoosh August 27, 2010 at 1:38 PM  

கல்யாணம் = திருமணம்...

(எழுத்திலும் காண்பிக்கிறீரே ஓய்..)

நன்றாக இருக்கு. ஆனால் வார்த்தைகளை சேர்த்து சேர்த்து எழுதுவது அவசியமா.. அதுவே கவிதையை "உடைச்சுடைச்சு" வரிகளை துண்டம் போட்டு தனித் துண்டாய் நிற்கிறது...

mythees August 27, 2010 at 2:03 PM  

:)

taaru August 27, 2010 at 2:31 PM  

மடை திறந்த வெள்ளம் போல் - லாவகம் [வார்த்தையில்]

புருனோ Bruno August 27, 2010 at 2:51 PM  

Good :) :) :)

வானம்பாடிகள் August 27, 2010 at 2:55 PM  

நல்லாருக்கு

vanila August 27, 2010 at 2:55 PM  

Hats off. Really Superb...

vanila August 27, 2010 at 2:59 PM  

நேர்கோட்டில் இறப்பு-இயல்பு-மங்களம்-வலி-பிறப்பு. அருமையான, அதுவும் சிக்கன பா-நடையில்
ஆனால் "னகர" முதல மட்டும் புரியல..

Vidhoosh August 27, 2010 at 3:48 PM  

//"னகர" முதல மட்டும் புரியல..//

வெண்ணிலாவா ... வானிலாவா (எனக்கு இது மட்டும் புரியல)

அதாவதுங்க... வாழ்க்கை ஒரு சக்கரமாமாம் .... சாவையும் பிறப்பையும் ஒரே ஒரு கைகுச்சி மூலம் நேர்கோட்டில் கொண்டு வராரு கவிஞ்சர்..

கவிஞ்சர பஞ்சராக்கமா போயிரலாம்னுதான் முதல் வெட்டோட விட்டுட்டு போனேன்... விளக்கவுரைஎல்லாம் கொடுக்க வச்சுருவீர் போலருக்கே...

மறத்தமிழன் August 27, 2010 at 4:25 PM  

நர்சிம்,

இறப்புல ஆரம்பிச்சு பிறப்பில முடிச்சிருக்கிங்க ..
நல்லாயிருக்கு...
தலைப்புக்கான காரணம்..?

நர்சிம் August 27, 2010 at 4:54 PM  

அ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன

அகரம்
னகரம்

முகிலன் August 27, 2010 at 4:57 PM  

அழகு..

பா.ராஜாராம் August 27, 2010 at 5:11 PM  

அருமையாய் இருக்கு நர்சிம்.

//குச்சியில் தீயின் தடமேதுமில்லை-// பிரமிக்க வைக்கிறது.

ராஜசுந்தரராஜன் அண்ணனை, அண்ணன்னு சொல்ற மாதிரி, விதூசை இனி அக்கான்னு சொல்லலாமுன்னு தோணுது. :-)

வித்யாக்கா, :-))

சுசி August 27, 2010 at 5:49 PM  

நல்லா இருக்கு.

நாடோடி இலக்கியன் August 27, 2010 at 7:06 PM  

அருமை.

//எல்லாக்கதைகளிலும் எரிபவன் நாயகன்.//

//திரும்பிக் கொண்டிருந்தன தீவுகள்.//

//குச்சியில் தீயின் தடமேதுமில்லை-//

ந‌ர்சிம்.

நாய்க்குட்டி மனசு August 27, 2010 at 9:29 PM  

தன் கல்யாணத் தேதியை
உறுதிபடுத்தி அலையணைத்தவனின்//

ராஜ நடை, சிம்மக் குரல் போல இந்த 'கல்யாணத் தேதியில்' ஒரு அழகு இருக்கிறது.
'அ'கரம் முதல் 'ன'கரம் வரை அறிவோம், இந்த 'ன'கரம் முதல் எங்கு முடியுமோ யாம் அறியோம் பராபரமே!

rajasundararajan August 27, 2010 at 10:59 PM  

||எழுத்து எனப்படுப அகரம் முதல னகரம் இறுவாய் முப்பஃது என்ப; சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே|| என்பது தொல்காப்பியம். ஆனால் நர்சிம் கணக்குக்கு பதினெட்டு மெய்யும் ஓர் உயிருமாக மொத்தம் பத்தொன்பதுதாம்!? (மெய் பல; உயிர் ஒன்று என்பது ‘அத்வைத’மோ?)

பிணம் எரிக்கிற வேலை ஒரு புலைத்தொழில்; பேறுகாலம் பார்த்தலும் கூட அப்படித்தான் (என்று inception-இக்கப்பட்டு இருக்கிறோம்). ஒன்றில் நெருப்பு, மற்றதில் நீர் இவைதாம், வாஸ்தவத்தில், அந்தந்த வேலையைச் செய்கின்றன. கர்மம் பூதங்களால் ஆக, காவலுக்கு ஒருவனைப் புலையன் என்கிறோம் (புலையன் என்றால் புரோகிதன் என்றும் பொருள்). புலையர் ஆகையாற் போலும் அவர்களுக்கு னகரம் அகரம் சகரம் எல்லாம் ஒருபோலவே தெரிகின்றன.

தள்ளி அமர்ந்துகொண்டு வெற்றிலையைத் தொடையில் தேய்க்கிறான். (வெற்றிலை = timepass, தொடை = pillor). இன்னும் முட்செடி, தற்காலிகப் பாதை, தீவு, நெஞ்சில் எரியும் சிதை இதுகளுக்கெல்லாம் பொருள்கற்பிக்கப் புகுந்தால், நர்சிம் இன்னொரு நேசமித்ரன் ஆகிவிடுவார் என்று அஞ்சி

ஒதுங்கிக்கொள்கிறேன்.

தர்ஷன் August 27, 2010 at 11:14 PM  

மிகவும் அருமை நர்சிம்,
ஏகப்பட்ட வர்ணனைகளோடு நீட்டி முழக்கக்கூடிய சிறுகதையை கச்சிதமாய் சுருக்கிக் கவிதையாக்கியிருப்பதாய் தோன்றுகிறது.


// உடன் வந்தவர்கள்
தீவுகளாய் நின்று
பழங்கதைகள் தின்று கொண்டிருந்தார்கள்
எல்லாக்கதைகளிலும் எரிபவன் நாயகன்.//

ஒரு மரண வீட்டை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறீர்கள்

//மூச்சிறைக்க ஓடிவந்தவன்
இவன் கைக்குச்சியை எடுத்தோடினான்.
முனகி ஈனும் மாட்டின்
பிறப்புறுப்பைத் தளர்த்தி
வழி திறக்க.//

இந்த இடத்தில்தான் புரிந்தது தலைப்புக்கான காரணம்

விஜய்வீரப்பன் சுவாமிநாதன் August 28, 2010 at 6:11 AM  

நல்ல கவிதை. மாறுபட்ட சிந்தனை.
தொடரட்டும்.

கலாநேசன் August 28, 2010 at 7:05 AM  

நல்லா இருக்கு... அதென்னங்க லாகவம்?

பட்டுப்பூச்சி August 28, 2010 at 10:40 AM  

தன் கல்யாணத் தேதியை
உறுதிபடுத்தி அலையணைத்தவனின்

- புரியவில்லை!!

பல முறை படித்த பின்னரே கவிதை புரிந்தது..மிக அருமை..

நர்சிம் August 28, 2010 at 10:52 AM  

நன்றி விதூஷ். எங்குமே காட்டியதில்லை என்பது தெரிந்தும்...ரைட்ட்டு.

நன்ரி mythees,taaru, Buruno,வானம்பட்டிகள்,vanila.(பின்னூட்டங்கள்ல தலைப்புக்கு ராஜசுந்தர்ராஜன் சார் பதில் கொடுத்திருக்காரு.)

நன்றி மறத்தமிழன், முகிலன்,பா.ரா.

நன்றி சுசி,நாடோடி இலக்கியன், நாய்குட்டி மனசு.

நன்றி ராஜசுந்தர்ராஜன் சார். பயம் வேண்டாம்..நேசமித்ரனாக என்னால் முடியவே முடியாது சார். ;)

நன்றி தர்ஷன், விஜய்வீரப்பன் சுவாமிநாதன், கலாநேசன்.

நன்றி பட்டுப்பூச்சி..அது,சுடுகாட்டில் வேலைசெய்பவனின் திருமணத் தேதி.

நன்றி.

ரமேஷ் வைத்யா August 28, 2010 at 11:05 AM  

வித்யாக்காவை விமர்சகராக வரித்துக்கொள்ளலாம் நீ நர்சிம்! போனில் அழையுங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் August 28, 2010 at 12:34 PM  

அருமை..

rajasundararajan August 28, 2010 at 7:06 PM  

//(பின்னூட்டங்கள்ல தலைப்புக்கு ராஜசுந்தர்ராஜன் சார் பதில் கொடுத்திருக்காரு.)//

நாய்க்குட்டி மனசு said...

//'அ'கரம் முதல் 'ன'கரம் வரை அறிவோம், இந்த 'ன'கரம் முதல் எங்கு முடியுமோ யாம் அறியோம் பராபரமே!//

இது இட்டுச் செல்லும் இடம், ராஜசுந்தரராஜன் பதில் (அது பதிலொன்றும் இல்லை ஒரு வாசிப்புமுறை) சுட்டுவதை விடச் சிறப்பாக இருக்கிறது.

இரசிகை August 29, 2010 at 12:23 PM  

nallaayirukku......

வழிப்போக்கன் - யோகேஷ் August 29, 2010 at 9:29 PM  

நல்லா இருக்கு நர்சிம்............

Tech Shankar August 29, 2010 at 11:16 PM  

congratulations for participating Neeya Nana in Vijay TV.

I watched it just now..

by

TS

Tech Shankar August 29, 2010 at 11:18 PM  

விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் உங்கள் பங்களிப்பு குறித்து மிகுந்த மகிழ்வடைகிறேன்

by
TS

கிருத்திகன் August 30, 2010 at 4:03 AM  

நீயா நானாவில் அந்த ஆதாம் ஏவாள் சட்டை comment பிடித்திருந்தது :))

sivakasi maappillai August 30, 2010 at 11:04 AM  

கிடைக்கும் சிறு வாய்ப்பில் தனது கருத்தை தெளிவாக முன் வைத்த விதம் அருமையாக இருந்தது.... விஜய் டிவியில்...

அஹமது இர்ஷாத் August 30, 2010 at 12:26 PM  

நல்லாயிருக்கு..

ஆதிமூலகிருஷ்ணன் August 31, 2010 at 12:51 AM  

லாகவமா? லாவகமா?

ரவிச்சந்திரன் September 1, 2010 at 11:15 AM  

அருமை... அட்டகாசம்!

Vidhoosh September 1, 2010 at 12:37 PM  

//நன்றி விதூஷ். எங்குமே காட்டியதில்லை என்பது தெரிந்தும்...ரைட்ட்டு. //

:)) சும்மா கிண்டலுக்குத்தான் சகோ. no offenses.

பிரதீபா September 5, 2010 at 11:12 PM  

//லாகவம்// பிழையில்லையே?
//ஒடித்துண்டாக்கிய // அழகு வார்த்தை.
//எல்லாக்கதைகளிலும் எரிபவன் நாயகன்// இது இது தான் உங்க டச் !! அட்டகாசம் !

பிறப்பு பின்னர் இறப்பு சொல்வது usual . ஆனால் இறப்புக்கு பின்னர், அதன் சம்மந்தம் பிறப்பிற்கும் உண்டு என்றது அற்புதமான கவிதை.