வார்த்தைகள் கூட்டிச்செல்லும் உலகம்.

‘காரிகை எவரினும், காரியம் யாவினும் சாறு நிறைத்தல் ஒரு போலத்தான்’- காமம் குறித்து, பாதசாரியின் இவ்வரிகள் மனதில் அமர்ந்துவிட்டது. சில வார்த்தைகளைக் கேட்கும்பொழுது, சட்டென மனம் அதில் இருந்து நூல்பிடித்து எங்கோ நினைவுகளை இட்டுச் சென்றுவிடுகிறது. காரிகை எனும் வார்த்தையைக் கேட்கும்பொழுதே, கை விளக்கும், நைட்டிங்கேல் அம்மையாரும் எலிசபெத் ராணி டீச்சரும் கண்முன் வந்துவிடுவார்கள். எலிசபெத் டீச்சர் என்றதும், அவரின் நேர்த்தியான காட்டன் சேலைக்கட்டும், 'நறு்க்' கொட்டுகளும் பள்ளிக்கூடமும், பள்ளி என்றவுடன் ‘என் சட்ட காயி, காக்கா சட்ட காயாத’ என்று கொன்னைவழித்த முத்துலெட்சுமி, காய்ந்த சோளக்கட்டை எறிப்பந்து என ஒரு வார்த்தை எங்கெல்லாமோ பால்யத்திற்கு இட்டுச் சென்றுவிடுகிறது.

பால்யம் என்ற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் ஊதாநிற சீருடைக் கால்சட்டையோடு தெருவில் விளையாடிய கிட்டிப்பில்லும் ஒன்பிச் கிரிக்கெட்டும். தெரு என்றதும் அவள்களும், அவள்களின் கடைப்பார்வைகளும், செளந்திரபாண்டிக் கடை முகப்பில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தெளித்த சிவப்பு, மஞ்சள் நிற ரோஜாப்பூக்களும் அதே ஈரத்துடன் காதல் பக்கங்களை புரட்டிவிடுகின்றன.

காதல் என்றதும் காதல் மட்டுமே நினைவுக்கு வருகிறது. காதலில் காதல் மட்டும் இருப்பதுதானே காதல். எதேச்சையாக பார்ப்பதற்காக தீட்டிய திட்டங்கள் எல்லாமே எதேச்சைகள் போலத்தான் நடந்தன என்பதே ஒரு எதேச்சைதானோ?. பேருந்துநிலைய டீக்கடை, காதல் என்ற வார்த்தைக்கு பின்னூட்டமாக வந்துவிடும் களம். ஒரு கிளாஸ் டீயின் ஆயுளை எவ்வளவு நீட்டிக்கமுடியும் என்ற ஐன்ஸ்டீன்கள் உருவான தளம். காத்திருந்தது அவளுக்காகவும் பேருந்திற்காகவும் அல்லது அவள் வரும் பேருந்திற்காகவும் என காத்திருத்தல் பிரதானம். வந்த பேருந்து நிலையத்தை ஒரு முழு வட்டம் அடித்து திரும்பும் முன்னரே சரெலென ஓடும் பஸ்ஸில் ஏறாதீரில் ஏறி கரம் சிரம் எல்லாம் அவள் புறம் வைத்து நின்ற நினைவுகள் போக்குவரத்துக் கழக பேருந்துகள் வாழும்வரை வாழும். அமர்ந்திருக்கும் காதலியிடம் நோட்டைக் கொடுத்து,அதில் கவிதை எழுதி அதற்கு மேலும் கீழும் மூடுக்குத் தகுந்த உதடோ,ரோஜாவோ ஆர்ட்டினோ ஆனால் எல்லாம் ஒன்று போலத்தான் இருக்கும்.

கவிதை என்ற வார்த்தை. எதைச் சொல்வது. இந்த வார்த்தையின் பின்னால் வைரமுத்தும் அதைத் தாண்டி நிறைய இருக்கிறது என்று சொன்ன முனியப்பனும் கொஞ்சம் கொஞ்சமாக சங்கத் தமிழ்க் கவிதைகளும் சீதாராமன் அய்யாவும் அவரின் வெற்றிலை குதப்பிய ‘நீ நாஷமாத்தான் போவே’யும் பழந்தமிழ் வார்த்தைப் பிரமாண்டங்களும் வேறோர் உலகோ எனும் வியப்புமாய் வாய்பிளந்து நின்று ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் எதையேனும் தேடித் தொலைந்ததும் இப்பொழுது நினைவுகள்.

வியப்பு எனும் சொல். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வார்த்தைகள் வானத்தில் நின்று உலகைப் பார்த்த பரந்துவிரிந்த மேக்ரோ பார்வை, அதேக் கவிதையில் அடுத்த அடிகளில் ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று வானம்விட்டிறங்கி, உடலுன் செல்லுக்குள் புகுந்து தன்னையேச் சொல்லும் அதிநுட்ப மைக்ரோப் பார்வை. எப்படி இவை சத்தியம் என்ற வியத்தல் இலமே இல்லை. வியத்தல் இன்னும் இருக்கிறது.

அதற்குப் பிறகு இதுதானே என எதற்குப் பிறகும் எதுவும் பொருந்தாமல் போனவைகள் ஏராளம். குதிரைக்கு குர்ரம் என்றால் யானைக்கு யர்ரமாடா என கேட்ட ஹைதராபாத் பொக்கைக் கிழவன் நினைப்பும் எதனோடும் ஏதும் பொருந்தா என அவர் சொன்னதும் நிழல்.

பொருந்தா என்ற வார்த்தை வந்துவிழும் முன்னே காமம் என்ற வார்த்தையும் பொருந்தாக் காமம் பொருந்தாக் காதல் என நினைவுகள் பெருந்தீயென மீண்டும் சுற்றித் திரியும் முன்னர்
பாதசாரியின் வரிகள் ஆடுகிறது மீண்டும் நிழலாய்.

‘காரிகை எவரினும் காரியம் யாவினும் சாறுநிறைத்தல் ஒரு போலத்தான்’ .

நன்றி.

31 comments:

vanila August 31, 2010 11:33 AM  

//வியப்பு எனும் சொல். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ..........அடுத்த அடிகளில் ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று வானம்விட்டிறங்கி, உடலுன் செல்லுக்குள் புகுந்து தன்னையேச் சொல்லும் அதிநுட்ப மைக்ரோப் பார்வை. // - வியத்தல் இலமே..

ஆம்பளைங்க ஸ்கூலு'ல, ஏசி ஸ்கூலு யூனிபார்ம், டார்க் பிரவுன்.. சேதுபதி, போலீஸ்காக்கி.. யூ சி ஸ்கூலு - டார்க் ப்ளூ.. St. Marry's -டார்க் பிரவுன், ஊதா ??..

நர்சிம் August 31, 2010 11:36 AM  

அரசு உயர்நிலைப்பள்ளி.

ஆதிமூலகிருஷ்ணன் August 31, 2010 11:55 AM  

லை(ல)வ்லி அட்டம்ட்.!

rajasundararajan August 31, 2010 12:03 PM  

வயசாயிற்றோ? வயசானவங்களுக்குத்தான் வாலைப் பருவ நினைவுகள் வந்துவந்து படமா ஓடும்.

இந்தக் காலத்துல ஒன்னு ரெண்டு இல்லாமலா இருக்கும், இந்தக் காதல்களெ எழுதுங்கப்பு.

(அப்புறம், 'முத்துலட்சுமி' நம்ம ஆளு. 'நாடோடித்தடம்' புத்தகமா வராதுங்கிற துணிச்சல்ல எழுதிக்கிட்டு இருக்கீங்கன்னு நெனைக்கிறேன்).

லேகா August 31, 2010 12:06 PM  

நர்சிம் அருமை.போலவே தலைப்பும்:-)

வித்யா August 31, 2010 12:21 PM  

\\காதலில் காதல் மட்டும் இருப்பதுதானே காதல்\\

க்யூட்.

M.G.ரவிக்குமார்™..., August 31, 2010 12:35 PM  

ஒண்ணும் சொல்றதுக்கில்லீங்க்!......

T.V.ராதாகிருஷ்ணன் August 31, 2010 12:56 PM  

Nice Post ;))

வானம்பாடிகள் August 31, 2010 12:57 PM  

பஞ்சுமிட்டாய்க்காரன் போட்ட ரெண்டு ஸ்பூன் சக்கரை இழை இழையாய் விரவியிருக்க பந்து பந்தாய் சுருட்டிக் கொடுத்த சுவை, பூப்போலே:)

♠ ராஜு ♠ August 31, 2010 12:59 PM  

Y
O
U

A
R
E

R
O
C
K
I
N
G

M
A
N

வி.பாலகுமார் August 31, 2010 1:22 PM  

"வார்த்தைகள் இட்டுச்செல்லும் வட்டம்"

அழகு!

Karthik August 31, 2010 1:27 PM  

அட்டகாசம். :)

தமயந்தி August 31, 2010 2:45 PM  

அற்புத‌மான‌ ப‌கிர்வு.வார்த்தைக‌ளின் அர்த்த‌ங்க‌ளை உர‌க்க‌ சொல்வ‌தில் இத்த‌னை ந‌ளின‌மா?

taaru August 31, 2010 2:59 PM  

//காரிகை எவரினும், காரியம் யாவினும் சாறு நிறைத்தல் ஒரு போலத்தான்’-//
நர்சிம்-மால் எனக்குள்ளும் சப்பணம் போட்டுக் கொண்டாகிவிட்டது...

// வந்த பேருந்து நிலையத்தை ஒரு முழு வட்டம் அடித்து திரும்பும் முன்னரே //
நீங்கள் அடித்திருக்கும் வார்த்தை வட்டம் போலே..!!!

KVR August 31, 2010 3:09 PM  

ஆதியந்த அந்தாதி :-)

karthik August 31, 2010 4:08 PM  

//ஒரு கிளாஸ் டீயின் ஆயுளை எவ்வளவு நீட்டிக்கமுடியும் என்ற
ஐன்ஸ்டீன்கள் உருவான தளம்//
நன்றாக உள்ளது நர்சிம் சார்

கையேடு August 31, 2010 4:43 PM  

குவிந்து விரியும் இந்த விளையாட்டில்,
உலகமும் வார்த்தையும் மற்றையதைக் கூட்டிக்கொண்டே போகிறது. இல்லையா

சுசி August 31, 2010 4:52 PM  

எங்களை நர்சிம்மின்
//வார்த்தைகள் கூட்டிச் செல்லும் உலகம்."//
எப்போதும் புதுமையானதாகவே இருக்கும்.

//காதலில் காதல் மட்டும் இருப்பதுதானே காதல்//
:))))))))))))

பரிசல்காரன் August 31, 2010 8:18 PM  

மீண்டும் வியக்க வைக்கும் உங்கள் நடையில் ஓர் அற்புதமான பதிவு!

பாண்டியன் புதல்வி August 31, 2010 9:01 PM  

Excellent Bro!

அன்பரசன் August 31, 2010 9:02 PM  

உங்க எழுத்து நடை பிரமாதம் போங்க..

அன்புடன்-மணிகண்டன் September 1, 2010 9:12 AM  

தலைப்பைப் போலவே பதிவும்...
:)

நர்சிம் September 1, 2010 11:27 AM  

நன்றி vanila,தல உங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கிறேன். ;)

நன்றி ஆதி.

நன்றி ராஜசுந்தர்ராஜன் சார். எழுதலாம்தான்.. காதல் திகட்டுவதில்லை. எழுதுவேன்.

இது ரெட்டச்சட முத்துலெட்சுமி சார். ;)

நன்றி லேகா.. இலக்கியவாதிகள் எல்லோருமே ‘போலவே’ உபயோகிக்கிறீர்களே ஏன்?

நன்றி வித்யா, ரவிக்குமார்..சும்மா ஏதாச்சும் சொல்லுங்க பாஸ், ;)

நன்றி டிவிஆர் சார்.

நன்றி வானம்பாடிகள். ரசித்தேன் உங்கள் உவமையை.

T
H
A
N
K
S
R
A
J
U

நன்றி பாலகுமார்,கார்திக்,தமயந்தி,taaru,கேவிஆர்,கார்த்திக்,

நன்றி கையேடு, சுசி.

நன்றி பரிசல், பாண்டியன்புதல்வி(மதுரையா?)

நன்றி அன்பரசன்

நன்றி மணிகண்டன். அன்புடன்.

Vidhoosh September 1, 2010 12:41 PM  

paragraphing style & content simply superb. :) keep rocking.

Geetha September 1, 2010 7:59 PM  

//வியப்பு எனும் சொல். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ..........அடுத்த அடிகளில் ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று வானம்விட்டிறங்கி, உடலுன் செல்லுக்குள் புகுந்து தன்னையேச் சொல்லும் அதிநுட்ப மைக்ரோப் பார்வை. //

அழகு !

Geetha September 1, 2010 7:59 PM  

//வியப்பு எனும் சொல். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ..........அடுத்த அடிகளில் ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று வானம்விட்டிறங்கி, உடலுன் செல்லுக்குள் புகுந்து தன்னையேச் சொல்லும் அதிநுட்ப மைக்ரோப் பார்வை. //

அழகு !

வழிப்போக்கன் - யோகேஷ் September 2, 2010 8:33 AM  

அழகிய நடை......... நல்ல பகிர்வு...........

பிரதீபா September 3, 2010 12:34 AM  

உங்களுக்கான இந்த தனி நடை தான் மிக அழகு.. மிக ஆச்சர்யப்படுவேன், எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா !! தலைப்பு டாப்பு..

நர்சிம் September 4, 2010 3:51 PM  

நன்றி விதூஷ், கீதா

நன்றி வழிப்போக்கன் யோகேஷ்

நன்றி பிரதீபா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு!.

இரசிகை September 6, 2010 1:49 AM  

hiyo....remba pidichchurukkunga nursim sir......
oru puthumaiyaana pathivunu laam sollath thonala....yellaarukkullaiyume intha nikazhvu irukkum.but,ithai iththanai azhaka korththu thoduththu poochcharam pola koduththa vithamthaan remba remba pidichchurukku.....!!

//வியப்பு எனும் சொல். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ..........அடுத்த அடிகளில் ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று வானம்விட்டிறங்கி, உடலுன் செல்லுக்குள் புகுந்து தன்னையேச் சொல்லும் அதிநுட்ப மைக்ரோப் பார்வை. //

!!

vazhththukal nursim sir........

Anonymous November 29, 2010 1:50 AM  

Superb blog post, I have book marked this internet site so ideally I’ll see much more on this subject in the foreseeable future!