என்’ணங்கள் 30/9/2010

அயோத்தித்தீ. எப்பொழுதோ பற்ற வைத்தது எரிந்தணைந்திருந்தது. பற்ற வைக்கிறார்கள் இன்று. பார்ப்போம். பார்ப்பது தானே நம் கடன்.


***

வல்லரசாகப் போகிறோம்..சந்திராயன்...என நிறைய பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் காமன்வெல்த் என்ற ஒற்றை வார்த்தை அத்தனை நம்பிக்கையும் ஆட்டம் காணச் செய்துவிட்டது, காமன்வெல்த் போட்டிக்காகக் கட்டப்படும் கட்டடங்கள் போலவே.

இந்தியா, எவ்வளவு பெரிய தேசம்? எவ்வளவு அரசியல் நிகழ்வுகள். எவ்வளவு தொழில்நுட்பங்கள். இருந்தும் இப்பொழுது தலைநகரில் நடந்துகொண்டிருக்கும் கூத்துகள் தேசிய அவமானம்.

தெளிவானத் திட்டமிடல் இல்லை என்றே தெரிகிறது. வரலாறு காணாத மழையைக் கண்டிருக்கிறது டெல்லி என்ற போதிலும், சர்வதேச அரங்கின் முன் காரணங்கள் என்றும் நின்றதில்லை.தோல்வி.


***

பாஸ் என்ற பாஸ்கரன். படத்தின் கலகலப்பிற்கு இருவர் மிக முக்கிய காரணம். ஒருவர் சந்தானம், மற்றொருவர் சந்தானம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசித்துச் சிரித்த படம். ஒரு பேட்டியில் சூர்யா சொன்னது நினைவிற்கு வந்தது. ஆர்யாதான் எனக்குப் போட்டி. ஜோவுக்கு அவரைத்தான் பிடிக்கும்’.ஆர்யாவின் உடைகள் அருமையாக இருந்தது. ஆர்யா,நல்லா இருய்ய்யா.

***

என் உடல்நலம்/மனநலம் குறித்த விசாரணைகள் வந்து கொண்டே இருக்கின்றன. காரணம் சமீபத்திய கவிதைகள். கொஞ்சம் ஓவரத்தான் போய்ட்டமோ என்ற எண்ணம் லேசாக வரத்துவங்கியது. துவங்கியதும்


‘நீங்கள் தொடர்புகொள்ளும்நபர்’

எனும் குரலின் வசீகரம்

காதலியை தொடர்புஎல்லைக்கு

வெளியே நிறுத்திடத் தோன்றுகிறது.


* *


துணிகளைத் துவைக்கும்

ஞாயிறு மதியங்களில்

சுற்றி வழியும்

சோப்பு நுரைகளின் வசீகரிப்பில்

வார இறுதிகள்

வண்ணமயமாகின்றன..


* *


சட்டென காதல் சொன்னாள்

பூ விரிவது போல.

உள்ளோடும் வேதிவினைகள்

வெளித்தெரிவதில்லை

பூவிரிதலிலும்.



* *


அவளுக்குப் பிடிக்காது

என சிகரெட் பிடிப்பதில்லை

அவளுக்குப் பிடிக்காது

என என்னையும்

பிடிக்காமல் போகுமா

எனக்கு?


***

கதைகளின் முடிவில் வரும் சஸ்பென்ஸ் அல்லது வாசகரின் முடிவுக்கே விட்டுவிடுதல் என்பது 1882-ல் ஸ்டாக்டன் எழுதிய ‘லேடி ஆர் தி டைகர்’லிருந்தே இருக்கிறது என்கிறார் சுஜாதா,.

இன்றுவரை இந்தக் கதையின் முடிவு விவாதப்பொருளாகவே இருக்கிறதாம்.



கதை (சுருக்கமாக)


ஏதேனும் தவறு செய்தால் அந்நாட்டின் ராஜா, குற்றவாளியை மைதானத்தில் நிறுத்தி, மூடப்பட்ட இரண்டு குகைகளில் ஒன்றை தேர்வு செய்யச் சொல்வாராம். ஒன்றில் புலி. மற்றொன்றில் அவனுக்கு ஏற்ற அழகான பெண்.


ராஜாவின் மகள் ஒரு ஏழை வீரனை உயிருக்கு உயிராக காதலிப்பது தெரிந்ததும் கோபம் கொண்ட மன்னர், அதே தண்டனையை நிறைவேற்றச் சொல்கிறார்.


காதலியான ராஜாவின் மகளுக்கு எந்தக் குகையில் என்ன இருக்கிறது என்பது தெரியும் என்பதால் காதலன் கண்ணால் அவளிடம் கேட்கிறான். அவளும் யாருக்கும் தெரியாமல் வலது பக்க கதவைக் காட்டுகிறாள்.


சிறிதும் தயக்கமே இல்லாமல் அவள் சொன்ன கதவைத் திறக்கிறான் காதலன்.


கதை இதோடு முடிகிறது. வெளிவந்தது புலி என்றால், தான் உயிருக்கு உயிராக காதலித்தவன், புலி அடித்து இறப்பதை விரும்புவாளா அப்பெண்?


வந்தது பெண் என்றால், தான் மிக விரும்பிய ஆண், அவள் முன்னிலையில் அவன் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்வதை சகித்துக்கொள்ள முடியுமா? பொஸஸிவ்?


என்ன விடை?


**


நண்பர்கள் சிலரிடம் பேசும்பொழுது, மெல்லத்தமிழ் இனி சாகும்னு பாரதியாரே சொல்லிட்டாரு விடு மாப்ள என்பார்கள். எவ்வளவு பெரிய தவறு? இன்று நாளேடுகளும் சில பத்திரிகைகளும் ஒரிரு வார்த்தைகளை வெட்டி வேறு அர்த்தம் வரும் வண்ணம் தலைப்பில் போடுகிறார்களே..அதுபோலத்தான்.

தமிழ் இனிமெல்லச் சாகும் என்று சொன்னவனை பார்த்துக் கோபமாக பாரதி சொன்ன வரிகள்..

கொன்றிடல் போல் ஒரு வார்த்தை – இங்கு
கூறத்தகாதவன் கூறினான் கண்டீர்
புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே- அந்த
மேன்மை கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை-அவை
சொல்லும் திறம் தமிழ்மொழிக்கு இல்லை
மெல்லத்தமிழ் இனி சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்
என்று அந்த பேதை உரைத்தான்-ஆ
இந்த வசை எனக்கு எய்திடலாமோ
சென்றுடுவீர் எட்டு திக்கும்
கலைசெல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்


எதையும் முழுதாக தெரிந்து கொண்டால் அர்த்தங்கள் மாறத்தான் செய்கிறது.

நன்றி

29 comments:

karthik September 30, 2010 at 11:11 AM  

அவளுக்குப் பிடிக்காது

என சிகரெட் பிடிப்பதில்லை

அவளுக்குப் பிடிக்காது

என என்னையும்

பிடிக்காமல் போகுமா

எனக்கு?///நல்லா இருக்கு சார்

Ponkarthik September 30, 2010 at 11:19 AM  

சகா சிகரெட் மேட்டர் சூப்பர்!!!

லேகா September 30, 2010 at 11:49 AM  

//ஆர்யா,நல்லா இருய்ய்யா//

சரி இல்லியே..உங்க எழுத்துல பொறாமை தெரியுதே....:-)))


//எதையும் முழுதாக தெரிந்து கொண்டால் அர்த்தங்கள் மாறத்தான் செய்கிறது.//

உண்மை.

gemini275 September 30, 2010 at 12:01 PM  

completely knowing things definitely gives a new perspective : right perspective....
bharathi is the mahakavi..
tamizhla ezhudathamaiku mannikavum ...
sidharth

ரமேஷ் வைத்யா September 30, 2010 at 12:25 PM  

nice! :-)

பட்டுப்பூச்சி September 30, 2010 at 2:30 PM  

Understood the meaning மெல்லத்தமிழ் இனி சாகும் of only now.. thanks for putting it accross..

துணிகளைத் துவைக்கும்

ஞாயிறு மதியங்களில்

சுற்றி வழியும்

சோப்பு நுரைகளின் வசீகரிப்பில்

வார இறுதிகள்

வண்ணமயமாகின்றன..


Very nice.. It was my state prior to getting the washing machine.. A very nice one..
Did u wash clothes any time before??? How did u get it??

தமிழரசி September 30, 2010 at 3:03 PM  

அவளுக்குப் பிடிக்காது

என சிகரெட் பிடிப்பதில்லை

அவளுக்குப் பிடிக்காது

என என்னையும்

பிடிக்காமல் போகுமா

எனக்கு?


இது பிடிச்சிருக்குங்க....

rajasundararajan September 30, 2010 at 3:20 PM  

இந்த நான்கு கவிதைகளையும் எழுதியது யாரென்று போடவில்லையே?

என்றால், நம்பமுடியவில்லை. இவ்வளவு எளிமை கூடிவருவதற்குப் புலனிலும் தெளிவு; மொழியிலும் செருக்கின்மை வேண்டும். புனிறாக (fresh-ஆக) இருக்கிறது. விடலைத்தனமாகவும்.

நர்சிம் September 30, 2010 at 3:38 PM  

நன்றி கார்த்திக்,பொன் கார்த்திக்.

நன்றி லேகா, பொறாமை என்பது தவறு. அதையும் தாண்டி ;)

நன்றி சித்தார்த்

நன்றி ரமேஷ்ண்ணா,

நன்றி பட்டுப்பூச்சி. ஒரு வழியா கமெண்ட் போட்டுட்டீங்க ;)
//Did u wash clothes any time before??? How did u get it??//

நிறைய தடவை என பொய் சொல்ல விரும்பவில்லை என்றாலும் பல தடவை ஊரில் இருக்கும்பொழுது. நுரைக்காகவே.

நன்றி தமிழரசி.

ராஜசுந்தர்ராஜன் ஸார். நான் எழுதியவைதான். மன்னிக்க வேண்டுகிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் September 30, 2010 at 4:15 PM  

//எதையும் முழுதாக தெரிந்து கொண்டால் அர்த்தங்கள் மாறத்தான் செய்கிறது.//

எதையும் முழுவதுமாய் தெரிந்துக் கொள்ளாவிட்டால்..அர்த்தங்கள் மாறத்தான் செய்கிறது..
இதுதானே சரி

புருனோ Bruno September 30, 2010 at 4:42 PM  

Ignorance is Bliss !?

Ye distant spires, ye antique towers
That crown the watery glade,
Where grateful Science still adores
Her Henry's holy shade;
And ye, that from the stately brow
Of Windsor's heights th' expanse below
Of grove, of lawn, of mead survey,
Whose turf, whose shade, whose flowers among
Wanders the hoary Thames along
His silver-winding way:

Ah, happy hills! ah, pleasing shade!
Ah, fields belov'd in vain!
Where once my careless childhood stray'd,
A stranger yet to pain!
I feel the gales that from ye blow
A momentary bliss bestow,
As waving fresh their gladsome wing,
My weary soul they seem to soothe,
And, redolent of joy and youth,
To breathe a second spring.

Say, Father Thames, for thou hast seen
Full many a sprightly race
Disporting on thy margin green
The paths of pleasure trace—
Who foremost now delight to cleave
With pliant arm, thy glassy wave?
The captive linnet which enthral?
What idle progeny succeed
To chase the rolling circle's speed
Or urge the flying ball?
Ye distant spires, ye antique towers
That crown the watery glade,
Where grateful Science still adores
Her Henry's holy shade;
And ye, that from the stately brow
Of Windsor's heights th' expanse below
Of grove, of lawn, of mead survey,
Whose turf, whose shade, whose flowers among
Wanders the hoary Thames along
His silver-winding way:

Ah, happy hills! ah, pleasing shade!
Ah, fields belov'd in vain!
Where once my careless childhood stray'd,
A stranger yet to pain!
I feel the gales that from ye blow
A momentary bliss bestow,
As waving fresh their gladsome wing,
My weary soul they seem to soothe,
And, redolent of joy and youth,
To breathe a second spring.

Say, Father Thames, for thou hast seen
Full many a sprightly race
Disporting on thy margin green
The paths of pleasure trace—
Who foremost now delight to cleave
With pliant arm, thy glassy wave?
The captive linnet which enthral?
What idle progeny succeed
To chase the rolling circle's speed
Or urge the flying ball?

புருனோ Bruno September 30, 2010 at 4:42 PM  

While some on earnest business bent
Their murmuring labours ply
'Gainst graver hours that bring constraint
To sweet liberty:
Some bold adventurers disdain
The limits of their little reign
And unknown regions dare descry:
Still as they run they look behind,
They hear a voice in every wind,
And snatch a fearful joy.

Gay hope is theirs by fancy fed,
Less pleasing when possest;
The tear forgot as soon as shed,
The sunshine of the breast:
Theirs buxom health, of rosy hue,
Wild wit, invention ever new,
And lively cheer, of vigour born;
The thoughtless day, the easy night,
The spirits pure, the slumbers light
That fly th' approach of morn.

Alas! regardless of their doom,
The little victims play;
No sense have they of ills to come,
Nor care beyond to-day:
Yet see how all around 'em wait
The ministers of human fate
A nd black Misfortune's baleful train!
Ah, show them where in ambush stand,
To seize their prey, the murderous band!
Ah, tell them they are men!

புருனோ Bruno September 30, 2010 at 4:43 PM  

These shall the fury Passions tear,
The vultures of the mind,
Disdainful Anger, pallid Fear,
And Shame that skulks behind;
Or pining Love shall waste their youth,
Or Jealousy with rankling tooth
That inly gnaws the secret heart,
And Envy wan, and faded Care,
Grim-visaged comfortless Despair,
And Sorrow's piercing dart.

Ambition this shall tempt to rise,
Then whirl the wretch from high
To bitter Scorn a sacrifice
And grinning Infamy.
The stings of Falsehood those shall try,
And hard Unkindness' alter'd eye,
That mocks the tear it forced to flow;
And keen Remorse with blood defil'd,
And moody Madness laughing wild
Amid severest woe.

Lo, in the vale of years beneath
A griesly troop are seen,
The painful family of Death,
More hideous than their queen:
This racks the joints, this fires the veins,
That every labouring sinew strains,
Those in the deeper vitals rage;
Lo! Poverty, to fill the band
That numbs the soul with icy hand,
And slow-consuming Age.

To each his sufferings: all are men,
Condemn'd alike to groan—
The tender for another's pain,
Th' unfeeling for his own.
Yet, ah! why should they know their fate,
Since sorrow never comes too late,
And happiness too swiftly flies?
Thought would destroy their Paradise.
No more;—where ignorance is bliss,
'Tis folly to be wise.

சுசி September 30, 2010 at 4:43 PM  

அழகிய தமிழ் மகனே ஆர்யாவை பார்த்து பொறாமையையும் தாண்டலாமா??

பூ விரிந்தது எல்லாவற்றிலும் அழகா இருக்கு.

இங்கேயும் சொல்லிட்ட்ட்டே இருக்காங்க.. //தமிழ் இனிமெல்லச் சாகும் என்று //

என்னை கேட்டா புலி இருக்கிற குகைன்னு தான் சொல்வேன்.

நாய்க்குட்டி மனசு September 30, 2010 at 8:41 PM  

கதை, கவிதை, எண்ணங்கள் எல்லாம் கலந்து கட்டி எழுதியது எனக்கு அவ்வளவா பிடிக்கல.
காதலியை நன்கு புரிந்தவனானால் சரியான கூண்டில் நுழைந்திருப்பான். முடிவை சொல்லுங்க, புலி வந்ததா?

அருள் September 30, 2010 at 8:44 PM  

அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் "இராமர் பிறந்த இடம்" என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.

கார்க்கி September 30, 2010 at 11:45 PM  

அதோட நில்லுங்க.. ந்ம்ம எல்லைக்குள் வர்ற மாதிரி தெரியுதே

இரசிகை October 1, 2010 at 6:51 PM  

kavithaikal...simply superb:)

vaazhthukal nursim sir!

ஆதிமூலகிருஷ்ணன் October 1, 2010 at 11:04 PM  

பகுதிகள் அனைத்தும் சுவாரசியம். கவிதைகளும்.

நர்சிம் October 2, 2010 at 11:40 AM  

//எதையும் முழுவதுமாய் தெரிந்துக் கொள்ளாவிட்டால்..அர்த்தங்கள் மாறத்தான் செய்கிறது..
இதுதானே சரி//

அதுவும் சரிதான் டிவிஆர் ஸார். நான் சொல்ல வந்தது, ஒரு விசயத்தைப் பற்றியோ ஒரு மனிதரைப் பற்றியோ முழுதும் தெரியாமல் தவறான அர்த்தம் கொண்டுவிட்டு, தெரிந்து கொண்டபின் அந்த அர்த்தம் மாறுகிறது என்பதாக.

பகிர்விற்கு நன்றி புருனோ. கலக்கல்.

//என்னை கேட்டா புலி இருக்கிற குகைன்னு தான் சொல்வேன்.//

ரைட்ட்ட்டு. நன்றி சுசி.
//முடிவை சொல்லுங்க, புலி வந்ததா?//

நன்றி நாய்குட்டி மனசு.

பகிற்விற்கு நன்றி அருள்.

சகா. இன்னும் நிறைய இருக்கு. ஹும்ம். சரி நிறுத்திக்கிறேன்.

நன்றி ரசிகை மேடம்.

நன்றி இயக்குனரே.

அப்பாதுரை October 2, 2010 at 5:07 PM  

சுவையான சிந்தனைத் துளிகள்...

Ramarajan October 3, 2010 at 3:47 AM  

During 1994 this story was in one of of the english first paper/seconnd paper. I wrote an end to this story and Got sema Beat from my english master.

=======
The princess showed the door of the room that has the Girl. She sacrificed her love. For her nothing is important than her Lover's life.

But our hero walked to the other door. For him It's better to die than living/marrying another girl.

Lovers would die But love never dies!!!

===============

It took two weeks to heal from injuries of my english masters attack. ;=)

கனாக்காதலன் October 3, 2010 at 11:37 PM  

Thanks for your explanation about Bharathi's Song !

I wish you all the best :)

சுரேகா.. October 5, 2010 at 1:23 AM  

இதாஞ்சரி! :)

Vidhoosh October 5, 2010 at 4:57 PM  

///எதையும் முழுதாக தெரிந்து கொண்டால் அர்த்தங்கள் மாறத்தான் செய்கிறது. //

VERY NICE. :)

A Simple Man October 7, 2010 at 2:49 PM  

நம்ம தமிழ் பட ஹீரோவா இருந்தா புலிகூட சண்டை போட்டு அடக்கி இளவரசிய கைபிடிச்சிருப்பாரு :-)

? October 11, 2010 at 11:38 AM  

http://senkodi.wordpress.com/2010/10/03/bhapar-ram

-pls read that article

ரோஸ்விக் October 15, 2010 at 9:51 AM  

முதல் மூன்று கவிதைகளும் ரொம்ப நல்லாயிருக்கு...
எப்போதாவது இந்தப்பக்கம் வருவதுண்டு... வந்த நிறைய... மனசு நிறைய படிச்சிட்டு போயிடுறது வழக்கம். :-)
இப்போ, பின்னூட்டமும் போடலாமேன்னு...

Anonymous December 31, 2010 at 1:16 PM  

Keep posting stuff like this i really like it