ரகசியங்கள்

மெதுவாக
வழிந்து கொண்டிருக்கின்றன
மெல்லிசையைப்போல..

உடைந்து
வெடித்துக்கொண்டிருக்கின்றன
நொறுங்கும் கோப்பையினின்று
திரவச் சிதறல்கள்போல..

கசிந்து
ஓழுகிக்கொண்டிருக்கின்றன
பாறைக்கீறல் தாரைகள்போல

சில முத்தங்களின் ஈரத்தையும்
அவளுள்
மடிந்து
உடைந்து
மீண்டு மடியும்
நொடிகளையும்
சேகரித்துக்கொண்டிருக்கிறேன்
மிக ரகசியமாக.

15 comments:

ப்ரியமுடன் வசந்த் September 3, 2010 11:25 AM  

//அவளுள்
மடிந்து
உடைந்து
மீண்டு மடியும்
நொடிகளையும்//

செத்து செத்து பிழைக்கிறேன்னு சொல்லுவாங்களே அதானா இது?

M.G.ரவிக்குமார்™..., September 3, 2010 12:51 PM  

ஏதாவது சொல்லீருவேன்....

வெண் புரவி September 3, 2010 12:54 PM  

ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டும்.
அப்போதான் அது ரகசியம்.
நல்லா இருக்குங்க...

சுசி September 3, 2010 2:39 PM  

'நிஜமா' நல்லா இருக்கு நர்சிம்.

//மெதுவாக
வழிந்து கொண்டிருக்கின்றன
மெல்லிசையைப்போல..//

:)))))))))

அஹமது இர்ஷாத் September 3, 2010 3:27 PM  

ரசித்தேன் ..

வானம்பாடிகள் September 3, 2010 5:11 PM  

:) nice one

வானம்பாடிகள் September 3, 2010 5:11 PM  

:) nice one

நாய்க்குட்டி மனசு September 3, 2010 5:59 PM  

சேகரித்துக்கொண்டிருக்கிறேன்
மிக ரகசியமாக

சிருவாட்டுப் பணம் போல.

rajasundararajan September 3, 2010 7:19 PM  

முத்தங்களின் ஈரம் = அரவணைப்பு; மடிந்து/ உடைந்து/ மீண்டு மடியும் = நிராகரிப்பு.

இசை (இதயம்) மென்மையாய், கோப்பை (மகிழ்வெறி)த் திரவச் சிதறலாய், பாறை (மூளைச்செருக்கு) ஒழுகலாய்...

கைநழுவல்கள் ஊடே பொருளற்றுத் தோன்றும் சேகரம்!

ஒ!

அன்பரசன் September 3, 2010 9:19 PM  

Nice feeling..

Bharathi September 3, 2010 10:46 PM  

//அவளுள்
மடிந்து
உடைந்து
மீண்டு மடியும்
நொடிகளையும்//

Awesomeeeee !!!!!!

வழிப்போக்கன் - யோகேஷ் September 4, 2010 3:40 AM  

நல்லா இருக்கு...

பிரதீபா September 5, 2010 10:31 PM  

சூப்பருங்க. எனக்கு சொல்லத் தெரியல, ஆனா ஒரு விஷயத்தை நச்சுன்னு ரெண்டே விஷயத்தோட ஒப்பிட்டு முடிச்சிருக்கீங்க.. எனக்கு பிடிச்சது அதுதாங்க.

ஒரு சின்ன சந்தேகம்,
//நொறுங்கும் கோப்பையினின்று
திரவச் சிதறல்கள்போல//
//பாறைக்கீறல் தாரைகள்போல//
இதெல்லாம் நிகழ்வுகளின் சரியான உவமைகள் தான்.. ஆனா
//வழிந்து கொண்டிருக்கின்றன
மெல்லிசையைப்போல// வழியும் மெல்லிசையே ஒரு உருவகம் தான், உவமையா எடுத்துக்கலாங்களா?
உவமேயம்->உவமை(உவமேயம்)->உவமை

அப்புறம், இடைவெளி எல்லாம் இல்லீங்க, ஊருக்கு போயிட்டேன். மத்தபடி உங்க தமிழ் ஆளுமைக்கு நான் நல்ல ரசிகை.

இரசிகை September 6, 2010 1:34 AM  

ramyamaave irukku....
vazhthukal nursim sir.....!

d September 8, 2010 11:49 AM  

3 ஆதார குணங்களும் எஸ்ரா ஜெமோ சுந்தரராமசாமி சாரு ஆகியோரும்

http://ramasamydemo.blogspot.com/2010/09/3.html