‘எனக்கே எனக்காய்
ஒரு கவிதை எழுது’
என்று சிணுங்கியவளை
ஊடுருவிச் சொன்னேன்
‘உனக்கான கவிதைகளனைத்தும்
என்னிரு கண்களினுள்
விரிந்து கிடக்கின்றன
மீட்டெடு’
மறுத்து அடம்பிடித்தவளின்
கரம்பற்றிச் சொன்னேன்
‘இப்பொழுதெல்லாம் காதல் கவிதைகள்
எழுதுவதில்லையே நான்’
சட்டென பதில் வந்ததவளிடமிருந்து
‘நானொன்றும் உங்கள் காதலி இல்லையே’
உண்மைதான்.
உறங்கும் குழந்தையின்
நகங்கள் களையும்
மென்மையை
ஒத்தது அவள் கரம்பற்றும்
கணங்கள் அத்தனையும்.
இதுவரையிலான என்
திறக்காத சில பக்கங்களை
எளிதாய் திறந்து அதில் புதிதாய்
அழகாய் ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கிறாள்
எவளென்றே தெரியாத இவள்
எழுதிச் செல்லும்
வார்த்தைகளின் வசீகரம்
என்னை ஏகதேசம்
திறந்தழைத்துச் செல்கிறது
எதிர்பாரா தருணத்தில் கிடைக்கும்
முத்தத்தின் ஈரம் போல.
என்றேனும் ஓர் இரவு
அவள் எழுதிய பக்கங்களை
அவளே கிழித்தெடுத்துச் செல்லக்கூடும்
கிழிக்கும் சத்தத்தில் என்
சுந்தரந்தரங்க வனாந்திரம் அதிரக்கூடும்
யோசனையையும் என்னையும்
உலுக்கியவள் மீண்டும் கேட்டாள்
தனக்கான கவிதை தயாராவென
’உனக்கான கவிதைகள்
என்னிரு கண்களினுள்
விரிந்து கிடக்கின்றன
மீட்டெடு’
இம்முறை மறுக்கவில்லையவள்
இதோ
கரம் பற்றியென் கண்கள்
பார்த்துக் கொண்டிருக்கிறாள்
அவளுக்கான கவிதையும்
நான் புதைத்த சில மெளனங்களையும்
என்னுள்ளிருக்கும் தாயையும்
மீட்டெடுக்கும்
அவளின் கண்கள்.
**
முன்பே பதிவிட்டது. மீண்டுமொறுமுறை.
அவளுக்காகவேயான...
Posted by
நர்சிம்
Tuesday, September 21, 2010
Labels: கவிதை
14 comments:
உறங்கும் குழந்தையின்
நகங்கள் களையும்
மென்மையை
ஒத்தது அவள் கரம்பற்றும்
கணங்கள் அத்தனையும்///அருமை நர்சிம் சார்
நர்சிம்,
"எவளென்றே தெரியாத இவள்
எழுதிச் செல்லும்
வார்த்தைகளின் வசீகரம்
என்னை ஏகதேசம்
திறந்தழைத்துச் செல்கிறது
எதிர்பாரா தருணத்தில் கிடைக்கும்
முத்தத்தின் ஈரம் போல".
"என்றேனும் ஓர் இரவு
அவள் எழுதிய பக்கங்களை
அவளே கிழித்தெடுத்துச் செல்லக்கூடும்
கிழிக்கும் சத்தத்தில் என்
சுந்தரந்தரங்க வனாந்திரம் அதிரக்கூடும்"
"அவளுக்கான கவிதையும்
நான் புதைத்த சில மெளனங்களையும்
என்னுள்ளிருக்கும் "தாயையும்"
மீட்டெடுக்கும்
அவளின் கண்கள்".
சபாஷ் !
உறங்கும் குழந்தையின்
நகங்கள் களையும்
மென்மையை
ஒத்தது அவள் கரம்பற்றும்
கணங்கள் அத்தனையும்.
-----------
wah wah.... u've got vairamuthu touch too..... well done......
கவிதை புரியும்போதே தெரிந்தது-இது மீள்பதிவாகத்தான் இருக்குமென்று:-)
கவிதை மிகவும் நன்றாக இருந்தது!
வழக்கம் போல அருமை அண்ணா :)
நல்ல கவிதைகள் அச்சுக் கோர்த்தது போல் ஆழமாய் மனதில் அமர்ந்து கொள்ளும். இது அது போல் ஒன்று தான்.
கவிஞனிடம் காதலைத் தூண்டி கவிதை வளர்த்தவள் வாழ்க.
மறுபடியும் கவிதையா? சரி
ம்ம். முன்னாடி படிக்கலை. கொள்ளையழகு.
மீண்டும் பதிவிட்டமைக்கு நன்றி
கவிதை அழகு
அன்புடன்,
அருட்புதல்வன்
மீண்டும் எத்தனை முறையும் பதிவிடலாம் நர்சிம்..
உண்மைதான்.
உறங்கும் குழந்தையின்
நகங்கள் களையும்
மென்மையை
ஒத்தது அவள் கரம்பற்றும்
கணங்கள் அத்தனையும்.
அருமை வரிகள் அனைத்தும்
வாழ்த்துக்கள் நர்சிம்!!!
nice...
நன்று.
அழகிய வரிகள்
அருமையான எழுத்துக்கள்
அருமை நண்பரே..
Post a Comment