மிகப்பழக்கமான கண்களை
எப்பொழுதாவது பார்க்க நேரிடுகிறது
உடல் ஒடுங்கி,கன்னங்கள் இடுங்கி
யாசகம் கேட்கும் முதிய முகத்திலோ
அமர இருக்கையை விட்டுத்தந்த
நிறைமாதக் கர்பிணியிடத்தோ
நேரெதிர் வந்து சட்டென விலகிப் போகும்
கல்லூரிப் பெண்ணிடமோ
கதை கேட்டு
உறங்கத் துவங்கும் குழந்தையின்
பாதி இமையிலோ
எங்கோ எப்பொழுதோ தொலைத்த
அந்தக் கண்களை
சந்திக்க நேரிடுகிறது
கண்களின் பரிச்சயம் பொருட்டு
புருவ நெளிப்பிலோ
உதடுபிளவிலோ
கவனம் ஈர்க்கத் தோன்றி
எதுவோ ஒன்று தடுத்து விடுகிறது
சரி பரிச்சயமான கண்கள்தானே
பார்த்துக்கொள்ளலாம்
என...
தவறவிடும் ஏதோ ஒன்றுகள்
Posted by
நர்சிம்
Monday, November 1, 2010
Labels: கவிதை
15 comments:
வணக்கம் சார்:)
:) kavithai kavithai (guna modulation)
//
கண்களின் பரிச்சயம் பொருட்டு
புருவ நெளிப்பிலோ
உதடுபிளவிலோ
கவனம் ஈர்க்கத் தோன்றி
எதுவோ ஒன்று தடுத்து விடுகிறது
//
சிலநேரங்களில், இவை கவனத்தைக் கவர முயற்சித்து, கடந்து போவதை, உணரக் கூட முடிவதில்லை.
ஆகட்டும் பார்க்கலாமில் இழப்பது எத்தனை ?!
தவற விடுவதும், தவிர்த்து போவதும் சில நேரம்..
:)
http://ponkarthiktamil.blogspot.com/
// மிகப்பழக்கமான கண்களை
எப்பொழுதாவது பார்க்க நேரிடுகிறது//
இவ்ளோ அழகான ஆரம்பத்தை தாண்டி மீதியை படிக்க மனசு வரல நர்சிம்.
//நேரெதிர் வந்து சட்டென விலகிப் போகும்
கல்லூரிப் பெண்ணிடமோ//
அழகா இருந்தா இப்டித்தான் ஆகுமாம் :))))
//எங்கோ எப்பொழுதோ தொலைத்த
அந்தக் கண்களை
சந்திக்க நேரிடுகிறது//
:((((
//"தவறவிடும் ஏதோ ஒன்றுகள்"//
இதன் பெயரும் முரணா??
:))
azhahu...!
உறுப்புகளிலேயே அதிக அழகானவை கண்கள் தான். அதிலும், தன் விருப்ப உணவான மீனைக் கண்டதும் கரு விழியே கண்களாக விரிய பார்க்கும் பூனையின் கண்கள் என்னை பரவசப் படுத்துபவை. அந்தக் கண்களை பற்றிய கவிதை superb
present
நல்லா வந்திருக்கு நர்சிம்.. கடைசியில மட்டும் எப்படி முடிக்கிறதுன்னு தெரியாம முடிச்ச மாதிரி இருக்கு தல..
நடைமுறையில் நடக்கும் இயல்பான மனப்போரட்டம்
அழகான கவிதைண்ணா!!
//எங்கோ எப்பொழுதோ தொலைத்த
அந்தக் கண்களை
சந்திக்க நேரிடுகிறது//
nice! :)
நர்சிம்,
கவிதை அனுபவப்பூர்வமாக நல்லாயிருக்குங்க...
Post a Comment