ஒரு விர்ர்ர் ரீவைண்ட்..

“இப்போ நீங்க 10th Class வந்துட்டீங்க.. இது தான் முக்கியமான வருஷம். இதுவரைக்கும் ஆட்டம் போட்டதெல்லாம் மூட்ட கட்டி வச்சிட்டு பப்ளிக் எக்ஸாம்க்கு எய்ம் பண்ணி படிக்கணும்..”

“இப்போ நீங்க Higher Secndry வந்தாச்சு.. இன்னும் பத்தாவது வரைக்கும் இருந்த விளையாட்டு புத்தியோட இருக்கக்கூடாது.. லைஃபே இந்த ரெண்டு வருசம் தான் ரொம்ப முக்கியம்..”

“இப்ப நீங்க காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்.. இன்னும் ஹையர் செகண்ட்ரி பசங்க மாதிரி விளையாட்டுத்தனமா இருக்கக்கூடாது.. இது தான் உங்க வாழ்க்கையையே தீர்மானிக்கப்போற 3 வருஷம்.. ஒழுங்கா படிங்க..”

இந்த வார்த்தைகள் அந்தந்த வகுப்புகளின் முதல் நாட்களில் முறையே மிஸ்,சார்,லெக்ட்சரர்களால் சொல்லப்பட்ட,பட்டுக்கொண்டிருக்கும் , என்றாலும் அந்தக் கல்லூரி நாட்கள் தான் முக்கிய கட்டமாகப் படுகிறது.

‘எல்லாமே தெரியும், எதுவுமே தெரியாது’இந்த இரண்டும் கலந்த பயணமே கல்லூரி நாட்களாகப்படுகிறது

தயங்கித் தயங்கி கல்லூரியில் அடி எடுத்து வைத்த முதல் நாளில் வகுப்பு கண்டுபிடித்து நுழையும் பொழுது முதல் இரண்டு காலி பெஞ்சில் ஓரமாக உட்கார்ந்து, பக்கத்தில் அமர்ந்து இருக்கும் அரைமணிநேர சீனியரிடம் உதடு பிரிக்காமல் ஒரு புன்னகையை விட்டுப்பார்த்து, ரியாக்ஷன் ஓக்கே என்றால்.. எந்த ஸ்கூல்,எவ்வளவு மார்க்(முதல் சந்திப்பில் பொய்யான மார்க்தான் சொல்லப்படும்) போன்ற அடிப்படைகளை பரிமாறி, நமக்கான பசங்களைக் கொண்ட குழுவில் ஐக்கியமாக ஒரு மாதம் பிடிக்கும்.. பிறகுதான் கல்லூரி பிடிக்கும்..அதன்பிறகு எல்லாமே சிரிப்பாக வெடிக்கும்..

நட்பு என்ற ஒற்றை உறவில் மாப்பிள்ளை, மச்சான், சித்தப்பா, பெரிசு என பல உறவுமுறைகள் சொல்லி அழைக்கப்படும்..

காலையில் வீட்டில் இருந்து தினமும் கிளம்பிவிட்டாலும், வருட கடைசியில் அட்டண்டன்ஸ் லேக் ஆகி ஹால் டிக்கெட் வாங்க lakefee கட்ட வேண்டும். ஏனெனில், தினமும் கல்லூரிக்கு வந்தாலும் க்ளாஸுக்கு(ள்) போவதென்னமோ வெகு குறைவே..

கேண்ட்டீன்,பக்க்தத்து டீக் கடை(வடை ரொம்ப முக்கியம்),பக்கத்தில் இருக்கும் கார் அல்லது டூ வீலர் மெக்கானிக் ஷெட்.. இவைகள் தான் ஜமா கூடும் இடம்.

“மாப்ள இன்னிக்கு first hourr HODடா..”

“ஆமடாப்பா.. அந்தாளு சொல்றெதெல்லாம் புரியுறமாதிரிதான்.. விடு மச்சான்.. முன்னாடி ஒக்காந்து உருட்டி உருட்டி எழுதி வப்பாய்ங்க இல்ல நோட்ஸ.. ஜெராக்ஸ் எடுத்துப்போம்..”

“டீ சொல்லு மாப்ள”

“டீ”

“ஷோக் அடிச்சுட்டாருப்பா தொர, எல்லாரும் சிரிங்கடாப்பா.. கடைல சொல்றா டீ.. காசு இல்லனு உன்ன சொல்லச்சொன்னா..உங்கப்பன் சேர்க்குற பணத்த கொஞ்சம் செலவு பண்ணுடா..”

என்று போகும் முதல் வருடம்.

இரண்டாவது வருடம் தான் கல்லூரி வாழ்க்கையின் உச்சம்.

முதல் வருடத்தில் பாதிநாட்கள் பயத்திலும், குழப்பத்திலும் போய்விடும் என்றால் மூன்றாம் வருடம் பொறுப்புணர்ச்சி வந்து தொலைத்து விடும்.. ஆக, இரண்டாம் வருடம் தான்..

இரண்டாம் வருடம் எண்ட்ரி ஆனவுடன், கையில் ஒரே ஒரு நோட்.. எந்த சப்ஜெக்ட் என்றாலும் அதில் தான்.. அதுவும் லேமினேட் செய்யப்பட்ட டெண்டுல்கர், கொஞ்சம் விசயம் தெரிந்தவன் என்றால் மார்க் வாவோ, ப்ரைய்ன் லாராவோ.. அந்த நோட்டை சுருட்டி பிடிப்பதில் இருக்கும் லாவகத்தில் தெரியும் அந்தந்த மாணவர்களின் தெம்பு.

புரொஃபசர்களிடமும் சற்று தைரியமாக பேச வைக்கும். கலாய்ப்புகள் அரங்கேறுவதும் இரண்டாம் வருடம் தான்..

“ நீங்க தெய்வம் சார்..”

“ அப்படியெல்லாம் இல்லப்பா.. எங்க கடமய செய்யிறோம்..”

“அது இல்ல சார்.. தெய்வம் தான் நின்று கொல்லும்”

“ நினைச்சேன்ய்யா.. நீ எல்லாம் எங்க உருப்பட போற..இந்த ஹவர் உனக்கு ஆப்செண்ட்..”

இது இப்படி என்றால் இன்னொரு லெக்சரரிடம்,

“சார் ஒன்னும் தெரியல.. இன்னும் கொஞ்சம் மேல எழுதுங்க சார்”

“இது ஓக்கேயாய்யா?”

“இல்ல சார் தெரியல.. இன்னும் கொஞ்சம் மேல..”

யோவ்.. நான் குட்டைனு எனக்குத் தெரியும்யா.. இதுக்கு மேல எழுத முடியாது” என சாக்பீஸை கொண்டு எறி(ரி)வார்.

இப்படி ஆசிரியர்களை கலாய்ப்பதோடு நின்று விடாமல் நன்றாக படிக்கும் மாணவர்களை அழுக விடுவதும் அப்பொழுதுதான்..

“ டேய் சங்கர், உன்னோட டெஸிகேட்டர் உடைஞ்சு போச்சுடா..”

“ இல்ல பாஸ்.. இதோ இருக்கே என்னோடது.. உன்னோடது தானே இப்ப உடைஞ்சது”

“ ஆனா உன் பேர்ல இல்லடி எடுத்தேன்”

அதாவது, Labல் இருந்து உபகரணங்களை எடுக்கும்பொழுது வேண்டும் என்றே அடுத்தவன் ரோல் நம்பரை கொடுத்து எடுப்பார்கள்.. உடைந்து விட்டால் fine அவன் தலையில்.

ப்ராக்டிக்கல் வகுப்புகளில் இப்படிப்பட்ட கலாய்ப்புகள் நடந்து கொண்டே இருக்கும்.. அதுவும் நல்லா படிப்பவர்கள் பொசுக் பொசுக் என்று answer கண்டுபிடித்துவிடுவார்கள்.. அதோடு நிறுத்திக் கொள்ளாமல் labக்குள் ஒரு நகர்வலம் வேறு வருவார்கள்.. யார் தப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள் என போட்டு கொடுப்பதற்கு..அதனால்தான் அந்த டெஸிகேட்டர் உடைப்பு பழிவாங்கல்..

‘ப்ராக்ஸி’.. இது ஒரு தேசியகீதம்.. அதாவது வகுப்புக்கு வராத நண்பனுக்காக “எஸ் சார்” என அட்டண்டெண்ஸ் குடுப்பது.. அவ்வளவு ஈஸியான மேட்டர் இல்லை இது.. ‘டைமிங்’ ரொம்ப முக்கியம்.. அவனுடைய ஒரிஜினல் நம்பரை சார் சொல்லும் பொழுது வேறு ஒரு டோனில் “எஸ் சார்” என்று சொல்ல வேண்டும்.. நண்பனின் ரோல் நம்பர் வரும் பொழுது சந்தேகம் வராமல் “ப்ரசண்ட் ஸார்” என்று சொல்ல வேண்டும்.. நம்ம நேரத்திற்கு என்று நிமிர்ந்து பார்த்தார் என்றால் அவ்வளவு தான் .. முதல் பெஞ்ச் ‘படிப்பிஸ்ட்டுகள்’ வேண்டும் என்றே திரும்பிப் பார்த்து மாட்டி விடுவார்கள்..

“லைட்டா டவுட் ஆகிப் பார்த்தான் மாப்ள.. தெளிவா நோட்ட கீழ போட்டு குனிஞ்சிட்டேன்.. நாங்கள்ளாம் எப்ப்பிடி..” இதில் ‘பார்த்தான்’ , அவரைத்தான்.

“நம்ம செட்ல எல்லாப்பயளும் நாளைக்கு வேட்டி கட்டி வந்து அசத்துவம் மாப்ள”

“சூப்பர்டா.. காலேஜே தெறிக்க விடுவோம்.. வெள்ள சட்டையா மாப்ள?”

“ சட்ட எதுனாலும் ஓக்கே தான் மச்சி.. வேட்டில சும்மா நச்சுனு வருவோம்”

ஒரே ஒருவனை குறிவைத்து இந்த வலைவிரிப்பு நடக்கும். மற்றவர்கள் எப்பொழுதும் வரும் உடையில் தான் வருவார்கள்.

மறுநாள்,அந்த டார்கெட் செய்யப்பட்ட,கொஞ்சம் ஒல்லியாய் இருப்பவன் மட்டும் வேட்டியை கட்டிக்கொண்டு அது இடுப்பிலும் நிக்காமல் குச்சிக் கால்கள் என திருஷ்டி பொம்மையே அசிங்கமாய் இருப்பது போல வருவான்.. முதலிலேயே பேசி வைத்த மற்றவர்கள் சிரிப்பாய் சிரிப்பார்கள்..

“இதுக்குத்தாண்ட உங்க பேச்ச கேட்டக்கூடாதுன்றது.. இனி உங்க சங்காத்தமே வேணாம்.. சரியான இளிச்சவாயனாக்கிவிட்டீங்களேடா..ச்சே.. வர்ற வழியில எத்தன பேரு அசிங்கமா பார்த்தாங்க தெரியுமா..”

என புலம்புவனை.. “விடு மாப்ள.. இதுக்கு பேருதுதான் மட்டையகட்டி இறக்குறது.. வா ஒரு பீர போடுவோம்..”

குரூப்பாக எங்கு சென்றாலும் தெனாவட்டும் கூடவே செல்லும்.. செட்டு அப்படி..

“எல்லாருக்கும் இட்லிதானப்பா”

“என்னய்யா மெனுகார்டுல இட்லி இம்புட்டு வெல போட்டு இருக்கீங்க..”
“ நம்ம ஹோட்டல் சுத்தம் அப்பிடி தம்பி”

“உங்க ஹோட்டல்ல மட்டும் இட்லி மாவ என்ன ‘ரெய்மாண்ட்ஸ்’ துணிலயா வேக வக்கிறீங்க.. அதே பழைய வேட்டித்துணிதானய்யா..”

இப்படியான எகத்தாளம் எங்கும் பறக்கும்.

இப்படி சலனமில்லா நட்பின் குதூகுலத்திற்கு குறுக்கே வந்து விழும் கல்..காதல்..செட்டில் எவனுக்காவது,எவள் மேலாவது..

“மூங்கில் காட்டில் தீ விழும் பொழுது, மூங்கில் காடென்று ஆயினள் மாது...

வைரமுத்து,வைரமுத்து தாண்டா. என்னமா எழுதி இருக்காரு பாத்தியா?”

“செர்ர்ர்ரி.. என்ன இப்ப அதுக்கு”

“ஒரு பொண்ணோட ஃபீலிங் உங்களுக்கு எங்கடா தெரிய போகுது. மூங்கில்தான் ரொம்ப வேகமா தீப்பிடிக்கும் தெரியுமா..ச்சே என்னா வரிகள்”

“அய்யா ஆள விடு.. ராஜபாண்டிப்பயலுக்கு இன்னிக்கி பிறந்த நாள்.. சரக்கு பார்ட்டி வர்றியா?”

“அப்பா காச இப்பிடி செலவழிக்கிறது நல்லாவா இருக்கு மச்சி?”

“அந்தப் பிள்ள சொல்லிச்சா? வர்றோம் மாப்ள..உடம்ப பார்த்துக்க”

ஒன்னுமண்ணா இருந்தவர்களை இப்படி மாற்றி விடும் காதல். அவர்கள் கிளம்பியதும்..

“உயிர்ர்ரேரேரே.. உ..யி..ரே.. வந்ந்ந்ந்ந்துது என்ன்னோடுடு கலழந்து விடுடு..”

என அச்சு அசல் ஹரிஹரன் போலவே பாடுவதாக நினைத்து கர்ணகொடுரமாக கத்திக்கொண்டிருக்க வைத்துவிடும் காதல்.திடீரென்று நன்றாக படிக்கும் முதல் பெஞ்ச் கோஷ்டியுடன் (குறிப்பாக வாட்சை உள்புறமாக திருப்பிக்கட்டும் பசங்களுடன்) சேர்ந்து சுற்றுவார்கள். பொறுப்பாம்.

மதிய வகுப்பே பார்த்திராதவர்கள், சாயந்திரம் கல்லூரி முடிந்து,குப்பையை கூட்டி சுத்தப்படுத்தும் நேரம் வந்தாலும் லேசில் கிளம்ப மாட்டார்கள்.. பக்கத்துக் கல்லூரியில் படிக்கும் காதலி ஸ்பெஷல் கிளாஸ் முடித்து கிளம்பும் வரை இங்கே காத்திருப்பார்கள்.. ஒரே பஸ்ஸில் போகணுமா இல்லையா?

இப்படி ஓரிருவர் செட்டை விட்டு காதல் வயப்பட்டு அகல, செட்டில் கலகலப்பு குறைந்து விடும். ஒரு முக்கா லிட்டர் விளக்கெண்ணெயை குடித்தது மாதிரியே நடந்து கொண்டிருந்த காதலிஸ்டு ஒரு சுபவேளையில் எப்பொழுதும் அமரும் டீக்கடைக்கு வருவான்.

“மாப்ள சரக்கடிப்பமா?”

“என்னடா ஆச்சு அந்த பிள்ளைக்கு நீ பண்ணிக்கொடுத்த சத்தியம்?”

“வெறுப்பேத்தாத மாப்ள, அவங்க அப்பனுக்கு மேட்டர் தெரிஞ்சு, நெஞ்ச பிடிச்சுட்டானாம்.. இவ பயந்து போய் “இது சரிப்பட்டு வராது”னு அசால்ட்டா சொல்றா”

“காசு வச்சுருக்கியா?”

“ம்”

“அப்ப வா.. இத விடக்கூடாது.. தண்ணியடிச்சாத்தான் மனசு தாங்கும்.. வாங்கடா வாங்கடா..”

என பழைய ஜமா சேர்ந்து விடும்.. மீண்டும் செட் மீண்டுவிடும்..(சில துரதிருஷ்டசாலிகள் கடைசி வரி தொங்கி,ரிஜிஸ்டரில் சிக்கிக்கொள்வார்கள்..அலைபாயுதே போல் அலை பாயாது..அடிக்கும்)

கல்லூரி ஆண்டுவிழாவில் இரண்டாம் வருட மாணவர்கள் பங்கு நன்றாக இருக்கும்.. சீனியர்கள் சோக கீதம் பாடுவார்கள்.. இரண்டாம் வருட செட் அனைத்து மேட்டர்களிலும் பெயரைக் கொடுத்து விட்டு விழா நடக்கும் நாள் முழுதும் ஒரு கெத்தாகவே நடப்பார்கள்.. கவிதைகள் பறக்கும்..

“உனக்காகவே என் இதய ரோஜா..முட்கள் இல்லாமல்” போன்றவைகள் நிச்சயம்.. ஒன்றிரண்டு மாணவர்கள்.. “புரட்சி வெடிக்க வேண்டும்..குமரிமுனையின் குருதியும் இமயத்தின் இதயமும்..” என்ற ரேஞ்சில் வைரமுத்துத்தனங்களை அள்ளி விடுவார்கள்..

“அரியர் இல்லா மனிதன் அரை மனிதன்” என்ற தத்துவம் சொல்லும் சாக்ரடீஸ்கள் கொஞ்சம் பம்மி,

“ஏன் மாப்ள அடுத்த வருஷத்துல எல்லா அரியரையும் கிளியர் பண்ணிரலாம்ல?”

“ஈஸி பூசி மாப்ள.. அடுத்த வருஷம் ஒழுங்கா பட்டறையப் போட்டு படிப்போம்டா.. ஆமா உனக்கு எத்தன?”

“11”

சொல்லும் பொழுதே அடி வயிறைப் பிடிக்கும் அரியர்களோடும் அதை வென்று விடும் நம்பிக்கையோடும் மூன்றாம் வருட ஆரம்பம் மனதை வருடும்..

ஆட்டோகிராஃப் படத்தில் சேரன்,ஸ்நேகாவிடம் பேசுவாரே..

“சக்கர டப்பா எங்கடா திவ்யா..

அப்படில்லாம் இல்லப்பா..”

அதுபோல அநியாயத்துக்கு நெகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர் அவ்வப்பொழுது பேச வைக்கும் பருவம் இறுதி வருடம்.

எதிர்காலம் பற்றிய பயமும், ஏதாவது செய்துவிடவேண்டும் என்ற துடிப்பும் சற்று மேலெழும் வருடம்.


‘குரூப் ஸ்டெடி’.. என்ற ஒன்றை எவன் கண்டுபிடித்தானோ அவன் வாழ்க. செட்டில் எவனாவது ஒருவன் வீட்டில் இரவு கூடுவது. ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை பஸ்ஸ்டாண்டிற்கோ, பாய் கடைக்கோ டீ சாப்பிட.. அதில், நல்லா சாப்பிடக்கூடிய கோஷ்டி மீந்து போன பூரி,வடை என எதுவாக இருந்தாலும் எடுத்து ‘அட்டியலை’போடுவார்கள்.

அக்கம் பக்கத்தில் ஏதாவது ஒருவீட்டில் திடீரென லைட் எறிந்து அணைந்தால் பசங்க முகம் பிரகாசமாகி,புருவ உயர்த்துதல்கள்,புன்முறுவல்கள் நடக்கும்.

இப்படி, ஒருமணிக்கொரு டீ, பெண்களைப் பற்றிய பேச்சு என எல்லாம் நடக்கும் குரூப்பாக.. படிப்பதைத் தவிர..

மறுநாள் காலையில் பரபரப்பாக வீட்டிற்கு கிளம்பும் போது, “மாப்ள இன்னிக்கி நைட்டு எப்படியும் பேசாம முடிக்கப் பார்க்கணும்டா” என சொல்லிவிட்டு கிளம்புவார்கள்... தினமும்.

அதுவரை ‘அப்பன்’ என்றும் ‘பெரிசு’ என்று அழைக்கப்பட்டவர் ‘அப்பா பாவம்டா’ என்ற ஃபீலிங் வர எத்தனிக்கும் தருணங்களில் புத்தகங்கள் கைஏறும்..



தினமும் ஏதாவது பொய் சொல்லி அம்மாவிடம் காசு வாங்கி வந்த நாட்களுக்கு பிராயச்சித்தமாக, ‘எப்படியும் வேலைக்குப் போய் சம்பாதிச்சுக் கொட்டணும் மாப்ள’ என்ற வெறி,வேலைக்குச் செல்லவேண்டிய திரி கிள்ளும்.

‘எப்பொழுதும்’ சேர்ந்தே இருந்த நட்பு வட்டம் இனி ‘எப்பொழுதோ’ தான் கூடும் என்ற எண்ணம் வரும்.. அப்பொழுது தெரியாது ‘எப்பொழுதுமே’ இனி இது போல கூடப்போவதில்லை என்பது.

இப்படி அத்தனை விதமான சேரன் மேட்டர்கள் நடந்தாலும் அதை எல்லாம் தாண்டி,சீனியர் என்ற கித்தாப்பில் வேறு டிப்பார்ட்மெண்ட்களுடன் சண்டையும்,சத்தாய்ப்புகளும் நடந்துகொண்டுதான் இருக்கும்.

WELCOME PARTY.. அதாவது முதல்வருட பசங்களுக்கு மூன்றாம் வருட மாணவர்கள் வைக்க வேண்டும்..

இது ‘பாலையா’ ஒரு படத்தில் ‘வரகுணா’என்று சொல்வாரே.. அதாவது ஏதாவது ஒன்று வேண்டும் என்றால் அதற்கு முன் போடப்படும் பிட்.. இந்த வெல்கம் பார்ட்டி ‘வரகுணா’, வேறெதற்கும் அல்ல.. நல்ல செழுமையான ஃபேர்வெல் பார்ட்டிக்கு.. அதை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நடத்த வேண்டும்..

கூத்தும் ஊத்தும் தான்.. 52வது தடவையாக “ஹம் ஆப்க்கே ஹெய்ன் ஹெளன்” படத்திற்கு.. அத்தனை பாடல்களுக்கும் ஆல்கஹால் விசில் பறக்கும்..

அன்று ஹாஸ்டல் மாணவர்கள் அலப்பறை இன்னும் அதிகமாக இருக்கும்.. வண்டி வைத்திருக்கும் மாணவர்கள் அங்குதான் டேரா.. கடை கன்னிக்கு போய் ஹெல்ப் பண்ணுவார்கள்.. நாக்கை தொங்கப்போட்டு...

“கோழி என்ன விலைண்ணே..”

அவர் என்ன விலை சொன்னாலும் ஜூனியர் மாணவன் முன்னர் தம் பெருமையை நிலைநாட்ட.. “ என்னண்ணே கோழிய கேட்டா யானைய சொல்ற.. செரி செரி..பார்த்து அறுத்து வை.. காலைல மட்டன் ஃப்ரெஷ்ஷா இருக்கணும் ஆமா”

இங்கிலீஷ் தவ்வும்..நம்மாளுக்கு செத்தா எல்லாமே ‘மட்டன்’ தான்..

பார்ட்டி நடக்கும் இரவு.. போதையின் உச்சத்தில்.. மூன்று வருடம் வாங்கிய திட்டுக்கள் மொத்தமும் திரட்டி,அறிவுறையாக மாற்றி.. அகப்பட்ட ஜூனியர்களிடம்.. அரிஸ்டாட்டில் ரேஞ்சில்.. அவில்த்து விடுவார்கள்..

“என்னா.. அண்ணே சொல்றது புரிஞ்சிச்சா... எதுனாலும் நம்ம காலேஜ்தான்..
எதுன்னாலும்...”

“......”

“சொல்லுங்கடா.. எதுன்னாலும்..”

“ நம்ம காலேஜ்தாண்ணே”

“ஜாரிகள பார்த்தமா, சைன போட்டமா,டைவா குடுத்தமான்னு இருக்கணும்..லவ் பண்ணி அசிங்கப்படுத்தக்கூடாது.. லவ் ப..ண்..ணி..”

“அசிங்கப் படுத்துக் கூடாது..”

“அதேதான்.. எதாவது உங்களுக்கு பிரச்சனைன்னு வெய்யி.. ஒரு குரல்..ஒரே குரல்தான் அண்ணே எங்க இருந்தாலும் வருவேன் உங்களுக்கு.. டேய் பிடிங்கடா..பிடிங்கடா..” என போதையில் வீரவசனம் பேசிக்கொண்டே விழுந்து விடுவார்கள் அண்ணன்கள்..

இரண்டாம் வருட ஜூனியர்களும் மூன்றாம் வருடம் அடி எடுத்து வைக்கப்போகும் எண்ணத்தில் மிகவும் அன்பாக இருப்பது போல் பொறுத்துக்கொள்வார்கள்..

அவ்வளவுதான் அந்த பார்ட்டி முடிந்துவிட்டதுமே பிரிவு எண்ணமும் அதற்கு அடுத்த கட்டங்களும்.. தானாக நடந்தேறிவிடும்.. கொஞ்சம் அதிக பொறுப்பும் அதிர்ஷ்டமும் உள்ள மாணவர்கள் பாஸாகி, போன ஜென்மத்தில் பாவம் செய்திருந்தால் உயர்கல்விக்கும் அதிக பாவம் செய்திருந்தால் வேலைக்கும்,பாவம் மட்டுமே செய்திருந்தால் திருமணமும்..இப்படி ஏதாவது ஒன்றில் ஐக்கியமாகி,

மூன்று வருடங்கள் எப்பொழுதும் கூடவே இருந்த நண்பனை எப்பொழுதாவது எங்காவது பார்க்க நேர்ந்தால்.. “அடையாளமே தெரியலைங்களே.. வெயிட் போட்டீங்க.. ” என்ற ரீதியில்..

ச்சே..அட போங்கப்பா..

36 comments:

பொன்கார்த்திக் November 29, 2010 at 4:43 PM  

itho varen

பார்வையாளன் November 29, 2010 at 5:06 PM  

இரண்டாவது வருடம் தான் கல்லூரி வாழ்க்கையின் உச்சம்."

intha padhivin highlight vari ithuthaan...

கிறுக்கன் November 29, 2010 at 5:17 PM  

அது ஒரு கனாகாலம்....

கலக்கிட்டீங்க பாஸ்....

கிறுக்கன்

இராமசாமி கண்ணண் November 29, 2010 at 5:36 PM  

நர்சிம் ! எல்லாத்தயும் கிளப்பி விட்ருச்சி உங்க எழுத்து :)

வானம்பாடிகள் November 29, 2010 at 5:39 PM  

ஹூம்.

அமுதா கிருஷ்ணா November 29, 2010 at 5:42 PM  

நல்லாயிருக்கு நர்சிம்.பெண்கள் காலெஜில் என்னவெல்லாம் நடந்தது என்று எண்ண வைத்தது.

பிரியமுடன் ரமேஷ் November 29, 2010 at 5:43 PM  

செம மூனு வருசத்தையும் 20 நிமிசத்துல ஓட்டி காமிச்சிட்டீங்க அழகா... கலக்கல்..

♠ ராஜு ♠ November 29, 2010 at 5:45 PM  

வாட்சை உள்புறமாக திருப்பிக்கட்டுதல், குரூப் ஸ்டடி பக்கத்து வீட்டு லைட் எரிந்து அணைதல்...

நின் அவதானிப்பு வாழிய..வாழிய.. வாழியவே!
:-)

மணியன் November 29, 2010 at 5:48 PM  

அருமையான பதிவு
that was a Beautiful Moon Period (he he..)
அது ஒரு அழகிய நிலா காலம்

நாய்க்குட்டி மனசு November 29, 2010 at 6:25 PM  

மதுரை அக்குரும்பு அங்கங்கே தலை காட்டுது.
காதல் இல்லாத கல்லூரி வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?
கொஞ்சம் கூச்சப்படாம அதையும் கொஞ்சம் எடுத்து விடுங்க

HVL November 29, 2010 at 6:30 PM  

ஒரு ஐந்து நிமிடத்தில் என் காலேஜ் வாழ்க்கை முழுவதும் கண்முன் Re-Wind ஆயிடுச்சு, நர்சிம்.

பொன்கார்த்திக் November 29, 2010 at 6:33 PM  

சகா நான் இத படிச்சுட்டு பசங்க எல்லாரையும் அழைத்து பேசுனேன் சகா நன்றி!!

taaru November 29, 2010 at 7:16 PM  

பிச்.....!!!!!! என்னாத்தச்சொல்ல....!!! போச்சே.. போச்சே... அந்த நாலு வருஷம் [இன்ஜினியரிங்] போச்சே... பாசு ஒயின்ஸ் மாடியில...ஓசிக்குடி குடிச்சதெல்லாம்...இப்ப நினச்சாலும் கிறுகிறுன்னு இருக்கே...!! இத மூணாப்பிரிச்சு முழுசா எழுதுவீகளா[ஒன்னு விடாம] அண்ணே?!!!?????

கனாக்காதலன் November 29, 2010 at 8:00 PM  

பாஸ்.. ஒரே நாஸ்டால்ஜிக் ஃபிலிங்கஸ் பாஸ்.. பின்னீட்டீங்க..அது எப்படி எல்லாரோட கல்லூரி வாழ்க்கையும் ஒரே மாதிரியிருக்கு :) - அடுத்தவனுக்கு ப்ராக்சி போட்டு அட்டண்டன்ஸ் இழந்தவர்கள் சங்கம்.

கனாக்காதலன் November 29, 2010 at 8:03 PM  

ஃபிசிக்ஸ் புக்குக்கு தனியா 200 ரூபாயும் இயற்பியல் புக்குக்கு தனியா ஒரு 200 ரூபாயும் வீட்டுல வாங்குனதெல்லாம் ஞாபகம் வருதே !

ஸ்ரீனிவாசன் November 29, 2010 at 9:38 PM  

chanceless...awesome !!!!

ILA(@)இளா November 29, 2010 at 11:37 PM  

அட ஒரே மாதிரிதான் எழுதியிருக்கோம் போல

sriram November 30, 2010 at 12:01 AM  

செம செம செம கொசுவத்தி பாஸ், அட்டகாசம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வழிப்போக்கன் - யோகேஷ் November 30, 2010 at 12:41 AM  

//
பாவம் செய்திருந்தால் உயர்கல்விக்கும் அதிக பாவம் செய்திருந்தால் வேலைக்கும்,பாவம் மட்டுமே செய்திருந்தால் திருமணமும்
//
enjoyed these lines.......

சுசி November 30, 2010 at 2:09 AM  

//ச்சே..அட போங்கப்பா..//

கைல பட்டம் ஒண்ணுதான் கிடைக்கலை.. காலேஜ் படிப்பு இப்போதான் முடிச்சா மாதிரி இருக்கு நர்சிம் :))

கலகலப்ரியா November 30, 2010 at 2:42 AM  

ஏதேதோ ஞாபகம்ம்ம்..

கடைசில சொன்னதுதான்.. ச்சே..

Anonymous November 30, 2010 at 6:06 AM  

Just out of this world for few minutes... Could have been more in engineering colleges 4 year. Like last year in-plant training days, project submission, etc.,

From
US..

Balaji saravana November 30, 2010 at 6:31 AM  

தல செம!
நீங்க விர்ர்ர் ரீவைண்ட். னு சொல்லிட்டுப் போய்டீங்க இன்னும் எவ்ளோ நாள் எனக்குள்ள சுத்தப் போகுதோ ;)

சகாதேவன் November 30, 2010 at 6:55 AM  

கல்லூரியில் நீங்கள் பண்ணிய சேட்டையெல்லாம் சொன்னீங்க. ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பண்ணி இப்போ ஆபீஸில்/வீட்டில் செய்யும் சேட்டைகளையும் சொல்லுங்க.

சகாதேவன்

மோகன் குமார் November 30, 2010 at 7:38 AM  

நாங்கள் படித்தது ஐந்தாண்டு படிப்பு; எங்கள் நண்பர்களுக்கு மூன்றாம் ஆண்டு தான் ரொம்ப ஸ்பெஷல்; பழைய நினைவுகளை கிளறி விட்டது உங்கள் எழுத்து

shortfilmindia.com November 30, 2010 at 9:17 AM  

nallaarukku..

Maduraimalli November 30, 2010 at 9:21 AM  

“அடையாளமே தெரியலைங்களே.. வெயிட் போட்டீங்க..

//Sombu romba adee vaangi irukkae

மோகன் குமார் November 30, 2010 at 10:08 AM  

மீண்டும் வாசித்தேன். வரிக்கு வரி ரசிக்க கூடிய பதிவு. இந்த வருடத்தின் சிறந்த பதிவுகளுள் ஒன்று

காவேரி கணேஷ் November 30, 2010 at 10:12 AM  

அருமை ஜி

90 களை ஞாபகம் படுத்துகிறீர்கள்

நர்சிம் November 30, 2010 at 12:16 PM  

அனைவருக்கும் மிக்க நன்றி

மதுரைமல்லி.. மிக ரசித்தேன்..அதேதான் தலைவா...

பாலாஜி சங்கர் November 30, 2010 at 12:49 PM  

மிக ரசித்தேன் அருமை

Prasanna November 30, 2010 at 6:05 PM  

"‘எப்பொழுதும்’ சேர்ந்தே இருந்த நட்பு வட்டம் இனி ‘எப்பொழுதோ’ தான் கூடும் என்ற எண்ணம் வரும்.. அப்பொழுது தெரியாது ‘எப்பொழுதுமே’ இனி இது போல கூடப்போவதில்லை என்பது."

நர்சிம், வலிக்கும் வரிகள்.

"மூன்று வருடங்கள் எப்பொழுதும் கூடவே இருந்த நண்பனை எப்பொழுதாவது எங்காவது பார்க்க நேர்ந்தால்.. “அடையாளமே தெரியலைங்களே.. வெயிட் போட்டீங்க.. ” "

இதை படிக்கும்போது இதயத்தில் ஒரு சொன்னவொன்னாத உணர்ச்சி, நண்பர்களை, நட்பை நினைத்து.

பிரதீபா November 30, 2010 at 7:09 PM  

நிறைய இடங்கள் மிக மிக எதார்த்தம். மீள் நினைவுகள் :) இதை ஏன் நீங்க ஒரு தொடர் பதிவா ஆரம்பிக்கக் கூடாது? நிறைய பேரோட சுவையான பதிவுகள் கிடைக்குமே !

Bharath December 2, 2010 at 3:09 PM  

"ஜாரிகள பார்த்தமா, சைன போட்டமா,டைவா குடுத்தமான்னு இருக்கணும்..லவ் பண்ணி அசிங்கப்படுத்தக்கூடாது.. லவ் ப..ண்..ணி"

பின்னிட்டீங்க தலைவா!!

Ibrahim A , December 3, 2010 at 10:14 PM  

மிக அருமையான கட்டுரை!!!
ஒவ்வொரு வரியிலும் pause & rewind பண்ணி என் பிளாஷ் பேக் கு போய்விட்டேன்.
நன்றி!!!

முகிலன் December 21, 2010 at 11:58 PM  

வாவ்... காலேஜ் காலத்துக்குக் கூட்டிட்டுப் போயிட்டிங்க