என்னடா டல்ஹெளசிப் பிரபு என்ன சொல்றான் என்ற அதே துள்ளலில் கேட்டுக் கொண்டே நெருங்கிய சுரேஷ், என்னை இப்படியும் அப்படியும் பார்த்து, ‘இளச்சுட்டியேடா’ என்றான். லைட்டா காய்ச்சல்டா போன வாரம் அதான் என நான் இழுக்க, எரித்துவிடுவது போல முறைத்து, ஏண்டா இப்பிடி பெருத்துப் போயிருக்கியேன்னு லந்தாக் கேட்டா, நெஜம்னு நினைச்சு அதுக்கு இடம்சுட்டிப் பொருள் விளக்குற..அப்ப இதுக்கும் மேல இருந்துருக்க போன வாரம் வரைக்கும்? கொஞ்சமா தின்னுங்கடா.
பிளாஸ்டிக் டப்பாவுக்குள் பால்ரஸ் குண்டுகளைப் போட்டு ஆட்டினால் வரும் சத்தம் போலத்தான் அவன். சத்தம் என்றாலும் ஒரு சுகம்.
டல்ஹெளசிப் பிரபு என்று அவன் சொன்னது அந்தக்காலத்தில் ஹிப்பி வைத்திருந்த குமாரைத்தான். அவ்வப்பொழுது ராபர்ட் கிளைவும் வந்து போவார் அவன் வாய்க்குள்.
நல்லா ப்ப்ப்ளான்ன்ன் பண்ணித்தாண்டா பண்றாய்ங்க.. மொதோ ஒரு லட்சத்தி எழுவதாயிரம் கோடின்னு போட்டு விடுறது. அப்பிடியே வாயப் பொளக்க விட்டு, கொஞ்சம் கொஞ்சமா அறிக்கை..அப்புறம்.. சாமான்ய குடிமகன் வாயாலயே.. “அதெல்லாம் ஒரு லட்சத்தி எழுவதாயிரம் கோடி எல்லாம் இல்லையாம்ப்பா..அது அரசுக்கு நஷ்டமாம்.. ஆனா ஊழல்னு பார்த்தா வெறும் அறுவதாயிரம் கோடிதானாம், பாவம்’
எப்பிடி, அறுவதாயிரம் கோடிய ‘வெறும்’னு சொல்ல விட்டு அப்பிடியே ஒரு பாவத்தையும் வாங்குறானா..அங்க நிக்கிறாய்ங்க சிங்கம்’னு அசால்ட்டாக்கி விட்டுப் போய்ட்டாங்களேடா..
தம்மை இழுத்து, புகையை விட்டுக்கொண்டே அவன் சொன்னதும் சுர்ரென்று உரைக்கவில்லை. உரைச்சுட்டாலும்.
என்னடா உங்க ஊரு ஹோட்டல் எல்லாம் ஆஸ்பத்திரி மாதிரி இருக்கு. வேளச்சேரி அடையார் ஆனந்தபவனைப் பார்த்துச் சொன்னான். அப்படித்தான் இருந்தது. ஆஸ்பத்திரி கேண்ட்டீனைப் பெரிய சைஸில் பார்ப்பது போல. ஆமாடா ஒண்ணு இப்பிடி இருக்கும் இல்லேன்னா ரெயின் ஃபாரஸ்ட்னு சலசலன்னு சத்தத்தோட பாறையக் கொடஞ்சு வச்சு இருப்பாங்க.
சலசலன்னு தண்ணிச் சத்தத்துல சாப்பிட்டா வெளங்கும்டா, கருமம் என அடுத்து சொல்ல வந்தவனைத் தடுத்து வேற டாப்பிக்கை மாற்றினேன்.
அங்க என்னடா விசேசம். அ’னா என்ன சொல்றாரு?’
இடைத்தேர்தல்ல கொடுத்துச் சேர்த்த ஓட்டுகள ஸ்பெக்ட்ரம் சிதறடிச்சுடுமோன்னு கவலைதான். அதுசரி, ஸ்பெக்ட்ரம்னா செதறத்தான செய்யும். ஆமா இங்க எப்பிடி?
பீஸ் போய்த்தான் மாப்ள இருக்கு ஊரு. லைட்டா நார்த் இண்டியன் ஃபேஸ்கட்ல யாரப்பாத்தாலும் பம்முறாய்ங்க.
ஆமாடா, ராடியா கூட பேசுனா ரேடியோவுல பேசுற மாதிரி ஊரே கேட்குறாய்ங்களே மாப்ள அந்த பயம்தான்.
சாப்பிட்டு முடித்து வெளியே வரும்பொழுது வாகனத்தை எடுக்க உதவிய செக்யூரிட்டிக்கு ரொம்ப தேங்க்ஸ் பரத் என்றான்.
என்ன படம்டா பார்த்த?
கொஞ்சம் யோசித்தேன். சரி மதுரை வரையா பரவி இருக்கப் போகிறது என்ற தைரியத்தில்.. செம படம் மாப்ள, நந்தலாலா..
அது ஏதோ யுவான் சுவாங் மேட்டராம்லடா?
ரைட்டு விடு.
ஆனாலும் நல்லா எடுத்தப் படத்த இந்த வாங்கு வாங்கி காத்து வாங்க விட்டாய்ங்க மச்சான்
ம்ம். விடு. ஆமா இது என்ன புது மேட்டர் ?
ஆட்டோ ஃபிக்ஷன் மச்சான் சொல்லிக்கொண்டே சூர்யக்கதிர் இதழின் 21ம் பக்கத்தை படிக்க ஆரம்பித்திருந்தேன்.
அதேதான்.
Posted by
நர்சிம்
Tuesday, December 21, 2010
20 comments:
//அது ஏதோ யுவான் சுவாங் மேட்டராம்லடா? //
சிரிச்சுட்டே இருக்கேன் நர்சிம்.
//ஆனா ஊழல்னு பார்த்தா வெறும் அறுவதாயிரம் கோடிதானாம், //
மதுரைக் கிண்டல்.. :)
//ஆட்டோ ஃபிக்ஷன் //
அப்படின்னா என்ன தல?
//ராடியா கூட பேசுனா ரேடியோவுல பேசுற மாதிரி ஊரே கேட்குறாய்ங்களே//
:-)
அப்படியே மதுரைக்குள்ளே, கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்த மாதிரி இருந்தது!
Your story in surya kathir?
Your story in surya kathir?
//சலசலன்னு தண்ணிச் சத்தத்துல சாப்பிட்டா வெளங்கும்டா, கருமம் என அடுத்து சொல்ல வந்தவனைத் தடுத்து வேற டாப்பிக்கை மாற்றினேன்.//
15:13 க்கு சிரிக்க ஆரம்பிச்சவன்...இன்னும் ஹா ஹா ஹா ஹா ஹா...ரிச்சுட்டே!!! இருக்கேன்...
// என். உலகநாதன் said...
//அது ஏதோ யுவான் சுவாங் மேட்டராம்லடா? //
சிரிச்சுட்டே இருக்கேன் நர்சிம்.//
அடடே ஏற்கனவே ஒருத்தவங்க சிரிச்சுட்டே இருக்காங்களா? நான் அப்போ ரெண்டாவது.... சரி...
:)))
:)). யப்பா சாமி. முடியல:))
நர்சிம்,
அதேதானா அருமை...
அப்புறம் என்ன தான் வெறும் அறுபதாயிரம் கோடின்னு சப்பக்கட்டு கட்டினாலும்
கிராமம் வரைக்கும் இந்த ஊழல் விவ்காரம் ரீச் ஆயிருச்சு..
இதுவரைக்கும் நடந்த ஊழல்லயே மாபாதக ஊழல் இதுதான்னு தென்மாவட்ட கிராமங்கல்ல பேசிக்கிராய்ங்க..
அடையாரு ஆனந்தபவன்...நல்ல ஒப்பீடல்..
நந்தலாலா மேட்டரை செம லந்தா சொல்லியிருக்கிங்க..
மதுரைனா மதுரைதான்
http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/
கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!
நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்
சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
நாள்: 26.12.2010
நேரம்: மாலை 5 மணி
இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
அனைவரும் வருக !
‘இளச்சுட்டியேடா’ என்றான்//
நிஜமாத்தான் நர்சிம், இளைச்சிட்ட மாதிரி தான் இருக்குது. ஜிம்முக்கு போறீங்களா?
//ஸ்பெக்ட்ரம்னா செதறத்தான செய்யும்.// இன்னும் ஃபிசிக்ஸ் எல்லாம் மறக்கல போல ! :)
//லைட்டா காய்ச்சல்டா போன வாரம் அதான்//
அச்சச்சோ.. அடிக்கடி காய்ச்சல் வருதோ??
கலக்கல்
செம காமெடி
//ராடியா கூட பேசுனா ரேடியோவுல பேசுற மாதிரி ஊரே கேட்குறாய்ங்களே//
super..! chancea illa !
//
ராடியா கூட பேசுனா ரேடியோவுல பேசுற மாதிரி ஊரே கேட்குறாய்ங்களே
//
ha ha ha ..........
இப்போ என்ன, இந்தக் கதையை உங்களோட ‘ஆட்டோஃபிக்ஷன்’னு சொல்றீங்களா நர்சிம்? ஜிஸ்ட் புரியலையே. விளக்கவும்??
Post a Comment