
தோட்டத்தில் அமர்ந்திருக்கும்
என்னை நோக்கி வருகிறாளொருத்தி.
வெள்ளையுடை இல்லையென்றாலும்
தேவதையாய் இருப்பதற்கான
சாத்தியங்கள் நிறைய.
சிறகுகளை கைகளில் மடித்திருந்தாள்
காற்றில் விரிந்தலையும் கூந்தல்
மிக அருகில் வந்துவிட்டாள்.
கண்கள் பார்த்தேன்
ரோஜாமலர்கள் இருந்தன.
வியந்தும் பயந்தும் எழுந்தேன்.
கையமர்த்தி அமரச்செய்தவளின்
கைகளில் அடர்சிவப்பு ஆப்பிள்.
30பாகையில் தலைசாய்த்துப் பார்த்தவளின்
உதடுகள் பிரிந்தன வார்த்தைகள் உதிர்ந்தன
“என்னை ஆள்,இனி நான் உன்னவள்”
சொல்லிச்சிரித்தவள் ரோஜாக்கண்களில்
ஒன்றை உருவிக்கொடுத்துவிட்டு
அருகில் இருக்கும் மேட்டில்
அமர்ந்து கொண்டாள்
என்னைப்போலவே.
இது கனவொன்றும் இல்லை,
கையிலிருக்கிறது ரோஜா.
தோற்றங்களும்,
மறைவுகளும்,
தோட்டங்களும்
காதல்களும்.
முடிவுற்ற இடமொன்றில்...
Labels: கவிதை
இடைவிடா...
உதடுகள் உடைத்து உயிர் சுகித்தபின்
கேட்கிறாள் கண்கள் நோக்கி,
கன்னம்,காது கதுப்புகள் கடந்து அடையாதோ
உதடுகளை உதடுகள்?
நேர்நிறுத்தி அவள் தாடையுயர்த்திச் சொன்னேன்
‘நிலம் மீது பொழியும் மழை மொழிகிறாய்
என் முத்தங்கள் சிலநேரம்
கடல் மீது மழை’
‘ம்’ என்றவளின் கண்கள்
‘இன்னும்’ என்றன
கடல்மேல் நிலா.
Labels: கவிதை